செவ்வாய், ஏப்ரல் 17, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 3

ஊருக்குப் போயிருந்த போது நூறு ஆண்டுகளாக நடந்து வரும் திருவிழாவில் கட்டப்பட்டிருந்த துணிகளில் ஆர்எஸ்எஸ் சிவசேனையின் பெயர்கள். 'நாம் எல்லோரும் விழிப்பாக இல்லாவிட்டால், இந்தத் திருவிழாக்களைக் கூட நடத்த முடியாத நிலை உருவாகி விடும்' என்ற மிரட்டல்தான் அவர்கள் நடுநிலை மக்களுக்கு முன் வைக்கும் அடிப்படை வாதம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருத்துவ மதம் வேகமாகப் பரவி பெருவாரியான மக்கள் அம்மதத்தைத் தழுவினார்கள். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், சமூக ஆதரவு அமைப்புகள் என்று ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவும், சேவையும் அளிப்பதன் மூலம் அவர்களது மனதை வென்று மதம் மாற்றும் முறையில்தான் இவை நடந்தன.

இந்து இயக்கங்களின் மொழியில் அது இப்படி உருவெடுத்தது. 'பால் பொடியைக் காட்டி மதம் மாற்றுகிறார்கள். பெண்ணைக் காட்டி மயக்கி மதம் மாறினால்தான் பெண் தருவேன் என்று மிரட்டி மதம் மாற்றுகிறார்கள்' என்று விஷத்தைத் தூவுவார்கள்.

'ஒரு ஊரில் ஒரு சிலர் மதம் மாறி விட்டால், அப்புறம் மாறாமல் இருப்பவர்களைத் துன்புறுத்த ஆரம்பிப்பார்கள். ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது கல்லெறிந்தார்கள். அவன் கண் தெறித்து கீழே விழுந்தது. அதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தார்கள்' என்று நான் படித்த ஒரு துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தது.

இன்றைக்கு உத்தரப் பிரதேசத்தில் வெளியாகியிருக்கும் குறுந்தகட்டில் இருக்கும் பிரச்சாரங்களும் கிட்டத்தட்ட இதே போலத்தான். மக்களின் பயம், குழப்பம், நிச்சயமின்மையை தூண்டி விடும்படி ஏற்கனவே வேறு தளத்தில் இருக்கும் குறைகளை, சமூக வேறுபாடுகளை நிறம் பூசி மாற்றி பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் கிருத்துவ மதத்துக்கு பதிலாக இவர்களும் போட்டி போட்டு மருத்துவமனைகள், பள்ளிகள் ஆரம்பித்து சமூக சேவை செய்திருந்தால் அது சமூகத்துக்கு நன்மையாக முடிந்திருக்கும். கோயில்கள், நிலத்தகராறு, பொது இடங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் என்று ஒவ்வொன்றுக்கும் காவி சாயம் பூசி, மக்களின் அடிப்படை பயங்களைத் தூண்டி விட்டுத் தமது நோக்கத்துக்குப் பயன்படுத்துவதுதான் இந்துத்துவா பயங்கரவாதம்.

மண்டைக்காடு என்று ஒரு ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில். விடிவதற்குள் வா என்ற கதையில் இந்த மதக்கலவரம் எப்படி உருவானது என்று சுஜாதா அழகாக எழுதியிருப்பார். அந்தக் கதை வெளி வந்த போது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி, சுஜாதா இந்துக்களைக் குறை சொல்லி எழுதி விட்டாராமே என்று பேசிக் கொண்டோம். ஆனால் அதில் அவர் சொன்னதுதான் உண்மை நிலவரம்.

ஒரு பெண் காணாமல் போய் விட அதை கலவரமாகத் தூண்டி விட்டு ஆதாயம் கண்டவர்கள் இந்து இயக்கங்கள். மண்டைக்காட்டில் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. ஆண்டு தோறும் அங்கு திருவிழா நடைபெறும். அந்த ஊரின் மீனவ சமூகத்தினர் கிருத்துவ மதத்துக்கு மாறிய பிறகு பிரச்சனை ஆரம்பித்தது.

'கடலில் குளிக்கப் போன இந்துப் பெண்களை மானபங்கம் செய்தார்கள். மீன் தூண்டிலால் விரட்டி அடித்தார்கள்' என்று மாவட்டமெங்கும் பரபரப்பு. வதந்திக்குக் கால் முளைக்க கைவிரலில் எண்ணி விடக் கூடிய பயிற்சி அளிக்கப்பட்ட நபர்கள் அங்கங்கு இருந்தால் போதும். அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் முட்டாள்தனமாகப் பிடிபட்டு விடும் குற்றச்சாட்டுகள் அது மாதிரி பயம், குழப்பம் நிலவும் நேரங்களில் பெரும்பூதங்களாகத் தென்படும். மனிதனின் மூளை கலங்கியதும் எப்படி வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம்.

அடுத்தக் கட்டமாக இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு என்று ஒரு அரசியல் அணிதிரட்டலில் இறங்கினார்கள். இந்துக் கோயில்கள் எல்லாம் இந்து இயக்கங்களுக்கு விளைநிலமாக மாறி விட்டன. யாரும் எதிர்த்துப் பேசினால் நாட்டுத் துரோகி என்று அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள்.

அரசியலும், மதமும் கலப்பதில் வெட்கமே இல்லாத இயக்கத்தினர் இவர்கள். நாகராஜா கோவிலில் கூடும் பெண்களையும், சிறுவர்களையும், ஆண் பக்தர்களையும் பயிற்றுவிக்க காவி உடை உடுத்த இந்து முன்னணி, விஷ்வ இந்த பரிஷத் தொண்டர்கள் எந்தத் தடையுமின்று ஒலிவாங்கிக்கு வர முடிந்திருந்தது.

மதம் என்பது வாழ்வோடு பின்னிப் பிணைந்தது நம் நாட்டில். அதற்கு ஆபத்து என்று தூண்டி விடப்பட்டால் எந்த நிலைக்கும் போகத் துணிந்து விடுவார்கள் மனிதர்கள். இந்த உணர்வுகளில் மிதந்து அதிகாரத்தைப் பிடித்து விட வேண்டும் என்பது இந்துத்துவா இயக்கங்களின் கனவு.

21 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

// அந்த ஊரின் மீனவ சமூகத்தினர் கிருத்துவ மதத்துக்கு மாறிய பிறகு பிரச்சனை ஆரம்பித்தது.//

சிவகுமார்ர்
மண்டைக்காடு அருகிலுள்ள அந்த மீனவ கிராமம் புதூர் .அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன . ஆனாலும் மண்டைக்காடு கலவரம் 1982-ல் வருவதற்கு முன்பு வரை அந்த மக்கள் மண்டைக்காடு பஹவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை விருந்தினர்கள் போல உபசரித்தே வந்தனர் .அது போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு புதூரில் கடலுக்கு சென்று நீராடி விட்டு அருகிலுள்ள மேரி மாதா குருசடிக்கும் சென்று வணங்குவது வழக்கம் .இன்னும் சொல்லப் போனால் மண்டைக்காடு பகவதி அம்மனும் மாதாவும் சகோதரிகளாக சாதாரண மக்கள் மனதில் பதிந்திருந்தார்கள் .பின்னர் யார் வன்மத்தை வளர்த்தார்கள் என்பது பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை .

வஜ்ரா சொன்னது…

//
இந்த உணர்வுகளில் மிதந்து அதிகாரத்தைப் பிடித்து விட வேண்டும் என்பது இந்துத்துவா இயக்கங்களின் கனவு.
//

மதம் என்பது நம் வாழ்வில் கலந்துவிட்ட விஷயம் என்றவரை சரி. இந்துத்வா இயக்கங்கள் என்ன கனவு காண்கின்றன என்று அவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ நீங்கள் சொல்கிறீர்கள். அது ஏன் என்று தெரியவில்லை.

//
மதம் என்பது வாழ்வோடு பின்னிப் பிணைந்தது நம் நாட்டில். அதற்கு ஆபத்து என்று தூண்டி விடப்பட்டால் எந்த நிலைக்கும் போகத் துணிந்து விடுவார்கள் மனிதர்கள்.
//

அதற்கு ஆபத்து இல்லை என்று நிராகரிப்பது பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டது என்று நினைத்துக் கொள்ளுவதற்குச் சமம்.

There is a danger for the secular fabric of bharatam due to the expansionist Abrahamic faiths. Denying that is like ostrich burying its head inside the sand.

ஹிந்துத்வா இயக்கங்களின் எதிர்க்கும் முறை தவறானவையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கண்டுபிடித்து எடுத்துரைக்கும் பிரச்சனை உண்மையானது.

அதற்கு உங்களைப் போன்றவர்கள் ஒன்றும் செய்யாமல் பிரச்சனையையும் பார்க்காமல் நிராகரிப்பதில் தான் அவர்கள் வளர்ச்சி உள்ளது என்பதை மறவாதீர்.

The denial of an obvious problem by the "intellectual class" is the root cause of the growth of a hindu backlash.

நமதடா இந்நாடு சொன்னது…

இதைப் போன்றே சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தளவாய்பட்டி என்கிற ஊ¡¢ல் வருடந்தோறும் தை அமாவாசை அன்று அங்குள்ள சன்னாசி மடத்தில் திருவிழா ஒரு வாரம் நடைபெறும்.

­இது பல ஆண்டுகளாக நடைபெறு­கிறது. ­இந்த மடத்தையொட்டி முருகன் கோவில், வினாயகர் கோவில் உள்ளது. ­
இந்த ஆண்டு முதல் ­இங்கு கிருஷ்ணருக்கும் ஆலயம் ஒன்று ஹரே கிருஷ்ணா ஹரே ராமா அமைப்பினரால் புதிதாக உருவாக்கப்பட்டு ­இவர்களின் வெளியீடுகளை மக்களிடையே விற்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் ­இது போன்ற பழமையான கிராம கோயில்களை நோக்கி ­இந்துத்துவ வெறியர்கள் பார்வை திரும்பியுள்ளது.

சில ஆண்டுகள் கழித்து ­இவர்கள் ­இந்த கிருஷ்ணர் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என நமக்கே கதை சொல்வார்கள்.

அசுரன் சொன்னது…

//சில ஆண்டுகள் கழித்து ­இவர்கள் ­இந்த கிருஷ்ணர் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என நமக்கே கதை சொல்வார்கள். //

அது எமது நம்பிக்கை, அதனை சந்தேகப்படுபவர் இந்து தேசியத்தின் விரோதியாக கருதப்படுவார். :-))


******************************
மாசி மீண்டும் எனது முந்தைய கட்டுரைகளின் பின்னூட்டங்களை படித்துப் பார்த்து நிதானமாக பரிசீலிக்க வேண்டுகிறேன். குறைந்த பட்சம் எனது சந்தேகங்களக்கு விளக்கமாவது கொடுங்கள்.

அசுரன்

ஜடாயு சொன்னது…

// சேவையும் அளிப்பதன் மூலம் அவர்களது மனதை வென்று மதம் மாற்றும் முறையில்தான் இவை நடந்தன. //

// இந்து இயக்கங்களின் மொழியில் அது இப்படி உருவெடுத்தது. 'பால் பொடியைக் காட்டி மதம் மாற்றுகிறார்கள். பெண்ணைக் காட்டி மயக்கி மதம் மாறினால்தான் பெண் தருவேன் என்று மிரட்டி மதம் மாற்றுகிறார்கள்' என்று விஷத்தைத் தூவுவார்கள். //

சிவகுமார் அவர்களே, எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? கிறித்தவ மிஷநரிகள் சமூக சேவை என்ற பெயரில் நடத்திய, நடத்திவரும் அப்பட்டமான, கீழ்த்தரமான ஏமாற்று வேலைகளையும், கலாசார அழிப்புக்களையும் இன்று உலகம் முழுதும் அறிந்துள்ளது. அதைக் கேள்வி கேட்டும் வருகிறது.

இந்து இயக்கங்களுக்கு முன்பாகவே மகாத்மா காந்திஜி மதமாற்றங்களைப் பற்றி என்ன சொன்னார் என்பதை நீங்கள் படித்துப் பார்ப்பது உத்தமம்.

எனது இந்தப் பதிவில் சில மேற்கோள்கள் தந்துள்ளேன் -
http://jataayu.blogspot.com/2007/04/blog-post_12.html

// இவர்களும் போட்டி போட்டு மருத்துவமனைகள், பள்ளிகள் ஆரம்பித்து சமூக சேவை செய்திருந்தால் அது சமூகத்துக்கு நன்மையாக முடிந்திருக்கும் //

போட்டிக்காக அல்ல, தார்மீக உணர்வோடேயே இந்து இயக்கங்கள் நாடு முழுவதும் சமூக சேவை செய்து வருகின்றன. இன்று இந்தியாவின் மிகப் பெரிய கல்வித்துறை என்.ஜி.ஓ எது? வித்யா பாரதி. மிகப் பெரிய வனவாசி மறுவாழ்வு இயக்கம் எது? வனவாசி கல்யாண் மற்றும் ஏகல் வித்யாலயா!
உண்மைகளைப் படித்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள் ஐயா.

கன்னியாகுமாரி மாவட்டம் மற்றுமே இந்தியா அல்ல, உலகமும் அல்ல.

ஜடாயு சொன்னது…

சிவகுமார்,
கிறித்தவ மதமாற்றம் பற்றிய காந்திஜியின் இன்னும் சில கருத்துக்களைப் பாருங்கள் -

I hold that proselytizing under the cloak of humanitarian work is unhealthy to say the least. It is most resented by people here. Religion after all is a deeply personal thing. It touches the heart. Why should I change my religion because a doctor who professes Christianity as his religion has cured me of some disease, or why should the doctor expect such a change whilst I am under his influence? (source: Young India: April 23, 1931).

Christianity in India has been inextricably mixed up for the last one hundred and fifty years with British rule. It appears to us as synonymous with materialistic civilization and imperialistic exploitation by the stronger white races of the weaker races of the world. Its contribution to India has been therefore, largely negative. (source: Young India: March 21, 1929).

நன்றி: http://hinduwisdom.info/Conversion.htm#Converting%20Mahatma%20Gandhi

மா சிவகுமார் சொன்னது…

ஜோ,

//மண்டைக்காடு அருகிலுள்ள அந்த மீனவ கிராமம் புதூர் .அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன//

நீங்கள் சொன்னது நான் இதுவரை அறியாதது. இதைக் கொண்டு பார்த்தால் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கும் கொள்கை இன்னும் தெளிவாகிறது.

வஜ்ரா,

//இந்துத்வா இயக்கங்கள் என்ன கனவு காண்கின்றன என்று அவர்கள் சொல்கிறார்களோ//

இந்தியாவின் அரசமைப்பை மாற்றி விட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்சின் கொள்கை இல்லை என்று சொல்கிறீர்களா?

//ஹிந்துத்வா இயக்கங்களின் எதிர்க்கும் முறை தவறானவையாக இருக்கலாம்.//

அதைத்தான் நானும் சொல்கிறேன். இரண்டு தவறுகள் ஒன்றை ஒன்று ரத்து செய்து விட முடியாது. நமக்குத் தவறு என்று பட்டால் அதற்கான காரணங்களைக் கண்டு பிடித்து நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு வன்முறை அரசியல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதுதானே!

//The denial of an obvious problem by the "intellectual class" is the root cause of the growth of a hindu backlash.//

இந்தியாவில் சாதி பேதங்கள் ஒழிந்து விட்டன, சாதி முறை இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நமதடா இந்நாடு,

நன்றி.

அசுரன்,

உங்கள் சந்தேகங்களுக்கு என்னால் முடிந்த வரை விடை கொடுக்கிறேன். எதையும் மறைக்க வேண்டும், அல்லது யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டால் மகிழ்வேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ஜடாயு,

மதமாற்றம் குறித்த காந்தியின் கருத்துக்கள் மிக பிரசித்தி பெற்றவை. நீங்கள் மேற்கோளிட்டவற்றை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கிருத்துவ மத போதகர்களின் சேவைப் பணிகள் மிகச் சிறந்தவை என்பதில் எனக்கு சந்தேகமில்லை, அவர்களில் சிலர் மனதைப் புண்படுத்தும் வகையில் செயல்படுவதும் தெரியும்.

ஆனால், மத மாற்றத்துக்கு முழு முதல் காரணம், இந்து மதத்தின் குறைபாடுகளே (சாதி முறை சமூக அமைப்பு). அதைக் களையாமல் வன்முறையிலும், அவதூறு பேசுவதிலும் இறங்கியிருக்கும் இந்துத்துவா இயக்கங்கள்தான் இந்து மதத்தின் எதிரிகள் என்று நினைக்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் என்ன தொடர்பு என்று சங்க நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள். குஜராத்தில் கலவரங்களும், உத்தர பிரதேச தேர்தல் நேர வெறுப்பு பிரச்சாரங்களும் நாகர்கோவிலில் நடந்தததை அப்படியே பிரதிபலிப்பது எப்படி என்று விசாரித்துக் கொள்ளுங்கள்.

செய்தித் தாளில் குஜராத்தையும், உபியையும் பற்றிப் படிக்கும் போது எனக்கு நாகர்கோவிலில் நேரடியாக எதிர்கொண்ட அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் கன்னியாகுமரி மாவட்ட சோதனையைத்தான் விரிவுபடுத்துகிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
ஆனால், மத மாற்றத்துக்கு முழு முதல் காரணம், இந்து மதத்தின் குறைபாடுகளே (சாதி முறை சமூக அமைப்பு).
//

இல்லை.

மதமாற்றத்திற்கு காரணம் இந்து தர்மத்தை புரிந்துக் கொள்ளாத அறிவாளிகள் தான்.

சாதி முறை அமைப்பு இந்து தர்மத்தினுடயது அல்ல என்பதற்கு கிறுத்தவத்திலும் இஸ்லாத்திலும் சாதி முறை இருப்பதிலேயே தெரிந்துவிடுகின்றது.

Your understanding of the issues are pretty vague. If i were you i would have refrained from making such a statement.

For your kind information.

Please look for JOSHUA PROJECT.

You will understand better the concept of proselytization instead of singing the old songs and blaming Hindu religion for everything under the sun.

வஜ்ரா சொன்னது…

//
இந்தியாவில் சாதி பேதங்கள் ஒழிந்து விட்டன, சாதி முறை இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? :-)
//

சாதி முறை இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கும் சாதிகள் ஒழிந்துவிட்டன என்று சொல்வதற்கும் இமாலய வேறுபாடு உள்ளது.


நான் சாதிமுறை இடஒதுக்கீட்டினைத்தான் எதிர்க்கிறேன்.

சாதிமுறை வேறுபாடுகள் இல்லை என்று நான் சொல்லவில்லை.

நீங்கள் தான் மதமாற்றத்திற்குக் காரணம் இந்துக்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் மதமாற்றத்தை ஷ்ரத்தையுடன் ஒரு கடமையாக செய்து கலாச்சார சுத்திகரிப்பு செய்யும் மிஷனரி குள்ளநரித்தனம் இருப்பதையே மறுக்கிறீர்கள்.

வஜ்ரா சொன்னது…

//
உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு வன்முறை அரசியல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதுதானே!
//

இசுலாமியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு "வன்முறை" அரசியல் செய்யும் காங்கிரஸ் காரர்களையோ, கேரளத்து LDF கம்யூனிஸ்டுகளையோ நீங்கள் இதே போல் திட்டியதாக இதுவரை பார்க்கவில்லை.

You must have a same scale for both the sides if you want to express statements in that tone.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

I never thought Ma.Sivakumar is such a downright liar. i have all the relevant documents about how Madaikadu kalavaram happened. i have written about it in Thinnai also. it was a slow process. Ma.Si says Hindus did not attempt social service. What a naked lie...Cash starved, temples in the hands of Government still Hindus created a college as early as 1950s. Hindus ran many dispensaries in villages. Gandhian Thiyagi Sivan Pillai from Vellala caste started living in Dalit areas and breathed his last there. How much pain this pious Gandhian suffered that he joined Hindu Munnani...My own grandfather brought up a Dalit boy in his house and amidst village protests he stood firm. Not just individuals but collective Hindu conscious people worked day and night in the places of down trodden. In fact these services by Hindus have been spoken of as hurdles in Missionary reports. And Madaikadu... i will come to that and expose this pseudo-Gandhian liar in my blog.

ஜடாயு சொன்னது…

// கன்னியாகுமாரி மாவட்டம் மற்றுமே இந்தியா அல்ல, உலகமும் அல்ல.//

சிவகுமார், இது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

சங்க சேவைப் பணிகள் கன்னியாகுமரியில் போதிய அளவி இல்லை என்று நீங்கள் சொல்லவந்ததாக எண்ணிக் கொண்டு அவசரத்தில் எழுதியது அது.

அது கூடத் தவறு என்றே உணர்கிறேன். அரவிந்தன் குறிப்பிட்டது போன்று இந்து இயக்கங்கள் பெருமளவில் வளர்வதற்கு முன்பே இந்து உணர்வு குமரி மாவட்டத்தில் தேசிய உணர்வாகப் பரிணமிக்க ஆரம்பித்து விட்டது. அதன் அடையாளம் தான் மக்கள் தாங்களாவே முயன்று மிஷநரி முயற்சிகளுக்கு சவால் விடுவது போன்று உருவாக்கிய இந்துக் கல்லூரி. எண்ணற்ற இன்னல்களுக்கிடையிலும் பல சாதி இந்துக்களும் ஒன்றிணைந்து இதை உருவாக்கினர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதே காலகட்டத்தில் தான் காந்தீய சிந்தனையாளர்கள் பலரால் நாடு முழுவதும் Hindu, National என்ற பெயர்களுடன் பல சுதேசி கல்வி நிறுவனங்கள் உருவாயின, காசி இந்துப் பல்கலைக் கழகம் உட்பட.

மண்டைக் காடு கலவரத்தின் பின்னணி பற்றிய பச்சைப் பொய்களை நீங்கள் எழுதியிருப்பதை இப்போது தான் பார்த்தேன். நான் என்ன சொல்வது? போய் உங்கள் பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் சொல்லுவார்கள் உண்மைகளை.

1960களில் விவேகானந்தர் பாறையை கிறித்தவர்கள் ஆக்கிரமிக்கப் பார்த்த பச்சை தேசவிரோதச் செயலையும் உங்கள் பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

இந்து இயக்கங்கள் மற்றும் ஒன்றுபட்ட இந்து சக்தியினால் தான் தான் இன்று அங்கு கம்பீரமாக அந்த நினைவகம் நின்று கொண்டிருக்கிறது, இல்லையென்றால் அந்த பாறையிலும் சிலுவையை அறைந்திருப்பார்கள்.

Thamizhan சொன்னது…

மதம் வந்துவிட்டால் மனிதர்களுக்கு மதம் பிடித்துவிடுகிறது.
எந்த மதம் மிகவும் கெடுதல் செய்துள்ளது என்பதிலேதான் தற்போது போட்டி.எவ்வளவு சண்டைகள் எவ்வள்வு இறப்புகள்,இழப்புகள்.
கடவுளை மற!மனிதனை நினை.
பெற்ற தாயை பரிதவிக்க விடுபவனே பெரிய தர்மகர்த்தா ஆகிவிடுகிறான்.
எந்த மதத்தில் மனித நேயத்துடன் மதத்தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள்?தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.பக்தர்கள்தான் பரிதாபமாகச் சாகிறார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

proselytization என்பது கிருத்துவ மதத்தின் அடிப்படை என்பது சரிதான். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு மதம் மாறுபவர்கள் ஏன் மாறுகிறார்கள்? முகலாயர் காலத்தில் இருந்தது போல யாரும் துப்பாக்கையைக் காட்டி மதம் மாற்றவில்லை. தமது சுயநினைவுடன் சுதந்திரமாகத்தான் மதம் மாறுகிறார்கள். அதற்குக் காரணம் இந்து மதத்தின் அருமையை உணர வைக்க முடியாத நமது சமூக அமைப்புதான்.

கோயில்களில் மந்திரம் சொல்வது கூட பெரும்பான்மை மக்களுக்குப் புரியாத மொழியில் இருக்கும் போது அந்தப் பெரும்பான்மை மக்களுக்கு அதிகாரமும் வலிமையும் பெற இந்து மத சாதி அமைப்பில் எங்கு வழி இருக்கிறது?

சாதி முறை அழிய என்ன வழி முறை என்ற இந்துத்துவா இயக்கங்கள் சொல்கின்றன, கடைப்பிடிக்கின்றன? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு, அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்? சாதி எப்படி அழியும், எப்படி எல்லோரும் உரிமைகளைப் பெற முடியும்? சாதி முறைதான் மத மாற்றத்துக்கு அடிப்படை காரணம் என்று உறுதியாக நம்புகிறேன்.

'நமது சமூக அமைப்பு அப்படியேதான் இருக்கும். நீங்கள் அதே நுகத்தடியின் கீழ்தான் உழல வேண்டும், வேறு யாராவது வந்து மாற்று வழியைக் காட்டினால் அதை மட்டும் எதிர்ப்போம்' என்பதுதான் இந்துத்துவா இயக்கங்களின் கொள்கையா?

நமது குறைகளைச் சுட்டிக் காட்டினால், ஏன் அடுத்தவர்களைப் பார்க்கிறீர்கள். காங்கிரஸ் காரர்களையும், LDF காரர்களையும் அந்தந்த இடத்தில் குறை சொல்லிக் கொள்ளலாம். இப்போது பேசுவது இந்துத்துவா இயக்கங்களைக் குறித்து.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க அரவிந்தன்,

//i have all the relevant documents about how Madaikadu kalavaram happened. i have written about it in Thinnai also. it was a slow process.//

நாம் ஏற்கனவே பேசியது போல ஒரே நிகழ்ச்சிகளை நாம் இருவரும் எதிரெதிர் கோணங்களில் புரிந்து கொண்டுள்ளோம். ஆவணங்கள் இரண்டு பக்கங்களும் ஏராளம் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்முறைக் கலவரங்களைத் தூண்டி விட்டது இந்துத்துவா இயக்கங்களே என்பது எனது அனுபவம்.

//Ma.Si says Hindus did not attempt social service. What a naked lie...Cash starved, temples in the hands of Government still Hindus created a college as early as 1950s. Hindus ran many dispensaries in villages. Gandhian Thiyagi Sivan Pillai from Vellala caste started living in Dalit areas and breathed his last there//

இன்னும் அதிகமாகச் செய்யுங்கள். தலித் ஏரியா என்று ஏன் இன்னும் இருக்கின்றன? இன்னும் தமிழகத்தில் இரட்டை தம்ளர் முறை இருப்பது ஏன்? பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் ஏன் தலித் என்றால் தரையில்தான் உட்கார வேண்டும்? இதற்கெல்லாம் ஆர்எஸ்எஸ் எத்தனை போராட்டம் நடத்தியது?

//. How much pain this pious Gandhian suffered that he joined Hindu Munnani...My own grandfather brought up a Dalit boy in his house and amidst village protests he stood firm. Not just individuals but collective Hindu conscious people worked day and night in the places of down trodden. In fact these services by Hindus have been spoken of as hurdles in Missionary reports.//

நான் சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். இந்து இயக்கங்கள் சமூக சேவை செய்தால் மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தலாம். ஏன் சூலாயுதமும், படை திரட்டலும்?

//And Madaikadu... i will come to that and expose this pseudo-Gandhian liar in my blog.//

கருத்துக்கள் மோத இந்தத் திருநாட்டில் என்றைக்கும் இடம் உண்டு. சூலாயுதங்களுக்கு நிச்சயமாக இடம் இல்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//மண்டைக் காடு கலவரத்தின் பின்னணி//
// 1960களில் விவேகானந்தர் பாறையை//

ஜடாயு,

உங்களுக்கு எந்த ஊர்? நீங்களும் நாகர்கோவிலா? அல்லது மண்டைக்காடேவா?

எனக்குத் தெரிந்த வரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவர சூழலை உருவாக்கியது இந்துத்துவா இயக்கங்களே, அதை நேரடியாகப் பார்த்த அனுபவம் எனக்கு இருக்கிறது.

நான் இந்து மதத்துக்கு விரோதி இல்லை. இந்துத்துவா அரசியல் வழிமுறைகளைதான் எதிர்க்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

தமிழன்,

மதம் வீட்டின் பூஜை அறைக்குள், கோயிலின்/தேவாலயத்தின்/மசூதியின் சுவர்களுக்குள் இருக்க வேண்டும். அது தெருவிலும், அரசியல் தளத்திலும் வந்து விட்டால் இழப்புகள்தான்

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
சாதி முறை அழிய என்ன வழி முறை என்ற இந்துத்துவா இயக்கங்கள் சொல்கின்றன, கடைப்பிடிக்கின்றன? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு, அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்? சாதி எப்படி அழியும், எப்படி எல்லோரும் உரிமைகளைப் பெற முடியும்? சாதி முறைதான் மத மாற்றத்துக்கு அடிப்படை காரணம் என்று உறுதியாக நம்புகிறேன்.

'நமது சமூக அமைப்பு அப்படியேதான் இருக்கும். நீங்கள் அதே நுகத்தடியின் கீழ்தான் உழல வேண்டும், வேறு யாராவது வந்து மாற்று வழியைக் காட்டினால் அதை மட்டும் எதிர்ப்போம்' என்பதுதான் இந்துத்துவா இயக்கங்களின் கொள்கையா?
//

சாதி முறை அழிய என்ன வழி ?

இப்போது தான் பேசுகிறீர்கள்.

சாதி முறை என்பது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு social order. Just because hindu religion acknowledges its existence and gives recognition in its scriptures you cannot say that its hindu religion that brings caste discrimination.

அதை ஒழிப்பது என்பது 50-100 ஆண்டுகளில் நடக்குமா என்பது சந்தேகமே. ஆனால் உண்மையாக எப்படி பின் தங்கியோர்களை முன்னேற்றுவது என்பதை யோசிக்காமல் எடுத்ததெற்கெல்லாம் இட ஒதுக்கீடு என்று செய்வதனால் தான் எதிர்ப்பு வருகிறது.

வேலை, promotion என்று எல்லா இடத்திலும் இட ஒதுக்கீட்டினால் முன்னேற்றம் அடய முடியவில்லை என்பது நிதர்சன உண்மை. அதை மறுப்பது முட்டாள் தனம்.

ஒரு உதாரணம் பாருங்கள், சாதி அடிப்படை வேலைகள் இபோது நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதால் கொஞ்சம் importance குறைந்துள்ளது. இதே போல் சாதிகளுக்கு முக்கியத்துவம் குறைந்து வந்தாலே சாதிகளினால் உயர்வு தாழ்வு சொல்லுதல் அழிந்துவிடும்.

உதாரணமாக நாட்டார்கள் மிகவும் கீழ் நிலையில் இருந்து மேலெழுந்து இப்போது கிட்டத்தட்ட மேல் சாதி நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அதே போல் அனைத்து சாதிகள் மேலே வருவதனால் சாதி வேறுபாடு பாராமை தோன்றும். அது தான் நடக்கக் கூடிய விஷயம்.

அதற்கு மதம் மாற்றம் உபாயம் இல்லை என்பது மதம் மாறுபவர்களே சொல்வார்கள். அதை தயவு செய்து மறுக்காதீர்கள்.

இன்றும் தேவர் கிருத்தவர்கள், நாட்டார் கிருத்தவர்களுக்குள் திருமண உறவு எல்லாம் நடப்பது இல்லை. அது மட்டுமல்ல, கிருத்தவத்திலேயே இருக்கும் உட்பிரிவுகளில் சாதி என்ற உட்பிரிவும் வந்து சேர்ந்துகொண்டு மக்களை இன்னும் பிரிக்கிறது. அதே தான் இஸ்லாத்திலும்.

//
proselytization என்பது கிருத்துவ மதத்தின் அடிப்படை என்பது சரிதான். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு மதம் மாறுபவர்கள் ஏன் மாறுகிறார்கள்?
//


Organized conversion என்பதைச் சொல்லத்தான் அந்த தொடுப்பைக் கொடுத்தேன்.

organized conversion என்றால் மொத்தமாக ஊரையே மதம் மாற்றுவது. நம் மக்கள் தான் சாதி சாதியாக பிரிந்து கிடக்கிறார்களே. சாதி சாதி யாக மதம் மாற்றுகிறார்கள். அவர்கள் எண்ணம் சாதி ஒழிப்பு அல்ல. ஆன்மா அறுவடை. அதற்காகத்தான் புத்தியுள்ளவர்கள் எதிர்க்கிறார்கள்.

தானாக மனம் மாறி மதம் மாறுபவனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இன்று மதம் மாறுபவர்கள் 100 க்கு 90 பேர் வசதிக்காகவும், பணத்துக்காகவும் மாறுகிறார்கள்.

பணம், சாப்பாடு காட்டி மதம் மாற்றுவது சரியா ?

இன்னிக்கு உங்க வீட்டுல சாப்பாடு கிடைக்கல்லங்குறதுக்காக பக்கத்துவூட்டுக் காரனை அப்பான்னு சொல்லச் சொல்லி சோறு கொடுப்பதற்குச் சமம்.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

//வேலை, promotion என்று எல்லா இடத்திலும் இட ஒதுக்கீட்டினால் முன்னேற்றம் அடய முடியவில்லை என்பது நிதர்சன உண்மை.//

இது உண்மை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை வஜ்ரா. இட ஒதுக்கீடு பலன் அளிக்கிறது என்று நான் நம்புகிறேன்.

நாட்டார்கள் குறித்து எழுதுவது ஒரு சாக்காகப் போய் விட்டது. 'இருப்பது இப்படித்தான் இருக்கும், நீங்கள் முடிந்தால் முன்னேறிக் கொள்ளுங்கள்' என்பதுதான் பதிலா?

//அதற்கு மதம் மாற்றம் உபாயம் இல்லை என்பது மதம் மாறுபவர்களே சொல்வார்கள்.//

நான் ஏற்கனவே சொன்னது போல மதம் மாறுபவர்களுக்கு அதுதான் உபாயம் என்று படுவதால் மாறுகிறார்கள். இருக்கும் மதத்தில் நசுக்கப்பட்டுக் கொன்டிருக்கும் போது '(பணம், சாப்பாடு,) வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் கிடைத்தால் மதம் மாறுவதில் என்ன தவறு' என்று சொல்லுங்கள்!

இந்து மதத்தைக் காக்க வேண்டுமானால் ஏற்றத் தாழ்வுகளுக்கான நியாயப்படுத்தல்கள் ஒழிய வேண்டும், எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும் (வாழ்க்கையில் முன்னேற சம வாய்ப்பு) உருவாக வேண்டும். அது நடக்க 100 ஆண்டுகள் ஆகும் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா!


அன்புடன்,

மா சிவகுமார்