செவ்வாய், ஏப்ரல் 24, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 6

முதலில் வந்தது 'இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு'. நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் தொடங்கி நகரைச் சுற்றி ஊர்வலமாக வந்து நாகராஜா கோவில் திடலில் பொதுக் கூட்டம். அடுத்த மூன்று நாட்களுக்கு மாநாடு. இந்துக் கல்லூரி, நாகராஜா கோவில் எல்லாம் இதற்காகவே ஏற்படுத்தப்பட்டது போலத் தோன்றியது.

ஊர்வலத்தில் இடப்பட்ட முழக்கங்களை திருப்பி எழுதுவது கூடப் பாவம். நானும் அந்த ஊர்வலத்தில் நடந்தேன். சுற்றிலும் ஆட்டம் போட்டுக் கொண்டு கோஷம் போட்டுக் கொண்டு இளைஞர்கள் கூட்டம்.

பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்து பெரிய பெரிய சொற்களில் பேச்சு. உணவுப் பொட்டலங்கள் தானமாக வழங்குபவர்கள், தண்ணீர்ப் பந்தல் வைத்து தண்ணீர் கொடுப்பவர்கள் என்றெல்லாம் அமர்க்களமாக இருந்தது. இந்துக்கள் எழுச்சி பெற்று விட்டார்கள் என்று ஒரே பரபரப்பு.

அடுத்த மாதங்களில் மாவட்டமெங்கும் கலவரம். சொல்லி வைத்தது போல பல ஊர்களில் கலவரத் தீ பல உயிர்களைக் குடித்தது. இது பற்றிய விபரங்கள் எனக்கு நினைவில்லை. ஆனால் எங்கள் பள்ளியிலும், வீட்டுப் பகுதியிலும் நிலவிய கலக்கச் சூழல் மன நிலை நினைவில் இருக்கிறது.

எங்க வீட்டிற்கு எதிரில் இருப்பது கிருத்துவ குடும்பம். கிறிஸ்துமசுக்கு அவர்கள் கேக் அனுப்புவார்கள், அச்சு முறுக்கு தருவார்கள், தீபாவளிக்கு நாங்கள் முறுக்கும் அதிரசமும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.

எங்கள் பள்ளியில் அம்மாவுடன், கூட வேலை பார்ப்பவர்களில் பலர் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் புதிய சூழலில் எப்படிப் பழக வேண்டும்? தொடர்ந்து இயல்பாகவே பழகிக் கொண்டிருந்தோம். ஆனால் காதில் விழும் செய்திகள் கலக்கத்தைக் கொடுத்தன.

ராமன் புதூரில் இருக்கும் கார்மல் பள்ளியில்தான் படித்தார்கள் எனது நண்பர்களில் பலர். ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது.

நானும் எனது விளையாட்டுத் தோழனும் புன்னைக்காட்டு விளை என்ற பகுதிக்குப் போனோம். திரும்பி வரும் போது, 'இந்த சர்ச்சு வழியாகப் புகுந்து பின் வாசலில் வெளியேறினால் குறுக்கு வழி. ஆனால் நீ நெற்றியில் இருக்கும் திருநீறை அழித்து விட வேண்டும், இல்லா விட்டால் யாராவது அடித்து விடுவார்கள்' என்று அவன் சொல்ல, நான் அவசர அவசரமாக அழித்து விட்டேன். உடனே அவன் சிரித்து விட்டு, 'ஏண்டா, இவ்வளவுதான் உன் வீரமா' என்று கிண்டலடித்தான்.

இதுதான் அப்போதைய நிலவரம். மக்கள் மனதில் பயமும், பக்கத்து வீட்டாரைக் குறித்த சந்தேகமும் விதைக்கப்பட்டன. இதற்குப் பலியாகாமல் உறுதியாக இருந்தவர்கள் பெருந்திரளான மக்கள். ஆனால், என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் இரு பக்கமும் இருந்திருப்பார்கள். அதுதான் இந்துத்துவா தீவிரவாதிகளின் வெற்றி.

அந்தக் காலகட்டத்துக்குப் பிறகு எனது பதினேழாவது வயது வரை நான் அதே நாகர்கோவிலில்தான் படித்தேன். பள்ளியில் என்சிசி தேசிய ஒற்றுமை முகாமுக்காக மேற்கு வங்கம் போன போது எனது மூட்டையைத் தூக்கி நடக்க முடியாத நேரங்களில் எனது தோழன் ஜோசப்தான் எடுத்துக் கொண்டு வந்தான். அம்மாவின் கூட வேலை பார்க்கும் ஆசிரியையின் வீட்டுக்கு கிருஸ்துமஸ் விருந்துக்குப் போயிருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே பயமாக உணர்ந்ததில்லை. ஆனால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி/பிரச்சாரம் மனதைக் கலக்கியிருந்தது.

ஒரு ஆண்டு போனது. இரண்டாவது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு என்று மீண்டும் ஏற்பாடு செய்தார்கள். போன ஆண்டு நடந்த மாநாட்டுக்குப் பிறகு மாவட்டமே ரத்தக் களறியானது. உப்பு போட்டுத் தின்னும் எந்த மாவட்ட நிர்வாகமும் மாநாட்டை அனுமதித்திருக்கக் கூடாது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அனுமதி கொடுத்து விட்டார்கள். மாநாடு அறிவிக்கப்பட்டிருந்த நாளுக்கு சற்று முன்பு அனுமதியை ரத்து செய்து விட்டார்கள்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது. அந்த நேரம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவிருந்தது. அதனால்தான் எம்ஜிஆர் அரசியல் செய்து விட்டார் என்று பேசிக் கொண்டோம்.

20 கருத்துகள்:

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

மண்டைக்காடு சம்பவத்துக்கு முன்னால் இந்துக்கள் மீதும் இந்து வழிபாட்டு தலங்கள் மீதும் கிறிஸ்தவ வெறியர்கள் நடத்திய தாக்குதல் இங்கே இருக்கிறது. பதில் சொல்வீர்களா சிவகுமார்? http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_1238.html
இந்து எழுச்சி ஊர்வலம் குறித்து இத்தனை பேசுகிற மா.சிவகுமாருக்கு முதல் இந்து எழுச்சி ஊர்வலம் நடந்திட விதையூன்றிய 'ஐக்கிய கிறிஸ்துவ ஊர்வலம்' (25-12-1981) நடந்ததும் அதில் 'விக்கிரத்தை வணங்குகிற அஞ்ஞானிக்கு ஐயோகேடு' என்று கோசம் போட்டு போனதும் அதில் காங்கிரஸ் எம்பி டென்னிஸ் கலந்துகொண்டதும்,அந்த ஊர்வலம் வருகிற வழியில் அய்யப்ப சாமிகள் தாக்கப்பட்டதும் மறந்து போன மாயம் என்ன? இப்படி வாய்கூசாமல் ஒரு பக்க உண்மைகளை மறைத்து முழுப் பொய்களை பேசுவதற்கு ஏன் ஐயா காந்தியை இழுத்து அசிங்கப்படுத்துகிறீர்.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி- கிளியே வாய் சொல்லில் வீரரடி
...
சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
எனும் பாரதி வார்த்தைகளுக்கு பிரத்தியட்ச உதாரணம் மா.சிவகுமார். பிஜி தீவில் வாடும் இந்து மாதுகளின் கொடுமைகளுக்காக கண்ணீர் வடித்தார் பாரதி. ஆனால் கன்னியாகுமரி மாவட்ட இந்துக்கள் ஒடுக்கப்பட்டால் சென்னை இந்துவுக்கு என்ன வந்தது என கேட்கிறார் மா.சிவகுமார். பங்களாதேஷில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் எனக்கென்ன என்னிடம் பேசுகிற பங்களாதேஷி நன்றாக கோல்கேட் ஸ்மைல் செய்கிறான் அது போதாதா என்கிறார் சிவகுமார். ஹும்...அய்யா வைகுண்டரும் குரு தேஜ்பகதூரும் மா.சிவகுமார் போல நினைத்திருந்தால் எல்லோரும் முஸ்லீமாகவோகிறிஸ்தவர்களாகவோ மாறி இந்த நாட்டை இரண்டு ராட்சச மதங்களுக்கிடையே பங்கு போட்டு தொலைத்திருக்கலாம். அப்பாவி இந்துக்களுக்கு அது தெரியவில்லையே.

அய்யா சிவகுமாரே முதலில் நீர் சோத்தில் உப்பை போட்டு சாப்பிடுகிறவராக இருந்திருந்தால், மண்டைக்காட்டில் அம்மணமாக கிறிஸ்தவ வெறியர்களால் ஓட ஓட துரத்தப்பட்ட எம் சகோதரிகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்புறம் பேசுமையா....அப்படி அன்றைக்கு ஐயா தாணுலிங்க நாடாரோ அல்லது ராம.கோபாலனோ என்ன பேசிவிட்டார்கள். கிறிஸ்தவ மிசிநரிகள் எங்கள் தெய்வங்களை பேசாத பேச்சா? அய்யா வைகுண்டர் ஒழுக்கம் கெட்டவர் என புத்தகம் போட்டு வித்தானே கிறிஸ்தவ மிசிநரி அது எப்போது? டயோசிசன் பிரஸ் அய்யா வைகுண்டரை குறித்து அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டது 200 வருசங்களாக...இடைவிடாமல் அதுவும் 1980, 1981 இல் கூட. உங்கள் தந்தையை குறித்து ஊர் பூராவும் ஒழுக்கம் கெட்டவர் என்று பிரச்சார புத்தகம் போட்டுவிற்றால் நீர் சும்மா இருப்பீராக இருக்கலாம். ஆனால் பாருங்கள் நாங்கள் உப்பு போட்டு சாப்பிடுகிறோம். உங்களை போல காந்தியம் பேசுகிற சாதி இல்லை ஆனால் ஒழுக்கம் உடைய குடும்பத்தில் பிறந்தவர்கள். எனவே நாங்கள் திரும்பக் கேட்கத்தான் செய்வோம். அன்றைக்கு அய்யா வைகுண்டர் மேல் செய்யப்பட்ட அவதூறு பிரச்சாரத்தால் எத்தனை மனம் நொந்து போய் இரண்டு ஹார்ட் அட்டாக்குகளுக்கு பிறகு புத்தளம் முருகேசன் என்கிற முதியவர் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு இவனுங்க இப்படி எழுதி எங்க இளப்பசங்க கிட்ட கொடுக்கிறாங்க என்னாவவது செய்யணும் சார் என்னாவாது செய்யணும் என்று கண்ணீர் விட்டபடி அய்யா தாணுலிங்க நாடாரிடம் பேசியது இன்னமும் என் கண்முன் நிற்கிறது. உமது தந்தையின் ஒழுக்கத்தை குறித்து அவதூறான துண்டு பிரசுரத்தை உம் சகோதரனிடம் கொடுத்து அப்போது உமது தாயார் எப்படி உணர்கிறார் என பார்த்து விட்டு இந்து எழுச்சி மாநாட்டில் நடந்த விசயங்களை குறித்து பேசுவது நல்லது மா.சி. நாங்கள் அதற்காக டயோசிசன் ஆஃபீசை போய் நொறுக்கவில்லை. அல்லது அந்த நூலை தடை செய்ய கூட கோரவில்லை. அதற்கு அதே பாணியில் பதிலடி கொடுத்தோம். விளைவு இரண்டாம் பதிப்புடன் அந்த அவதூறு நூல் நின்றது. மண்டக்காடு கலவரத்துக்கு முன்னால் வெளியிடப்பட்ட அந்த நூல் சரியாக மண்டக்காடு கலவரத்துக்கு பிறகு பிரசுரிக்கப்படாமல் (குறைந்தது வெளிப்படையாக) நின்றது. இனிமேலாவது தின்று செமிக்காத புளித்த ஏப்பத்தை விடாமல் விசயங்களை புரிந்து கொண்டு பேச முயற்சி செய்யும். (இப்படி உம்மை போன்ற போலி-காந்திய பச்சோந்தியை கேட்பது தவறு என்று எனக்கு தெரியும் என்றாலும்.)

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

மாசிவகுமாரின் பொய்களை தெரிந்து கொள்ளுங்கள்
மண்டைக்காடு கலவரத்துக்கு முன்னதாக கிறிஸ்தவ டயோசிசன் அய்யா வைகுண்டரை குறித்து வெளியிட்ட அவதூறு பிரச்சார நூல் குறித்து இங்கே காணவும்:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_18.html
மண்டைக்காடு கலவரத்துக்கு முன்னதாக கிறிஸ்தவ வெறியர்கள் நடத்திய வெறுப்பியல் தாக்குதல் புள்ளிவிவரங்களை இங்கே காணவும்:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_1238.html
மண்டைக்காடு கலவரம் குறித்து விசாரித்த விசாரணைக்கமிசனுக்கு தலைமை தாங்கிய முன்னாள் நீதியரசர் (ஓய்வு) முனைவர் வேணுகோபால் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே காணவும்:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_21.html

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டில் நடந்த முட்டாள்தனங்களுக்கு சமாதானம் பிறர் செய்த முட்டாள்தனங்களா? ராமகோபாலனின் கீழ்த்தரமான பேச்சுக்கள் வேறு சிலரின் பேச்சுக்களை மேற்கோள் காட்டுவதால் சரியாகி விடுமா?

//கன்னியாகுமரி மாவட்ட இந்துக்கள் ஒடுக்கப்பட்டால் சென்னை இந்துவுக்கு என்ன வந்தது என கேட்கிறார் மா.சிவகுமார்.//

இல்லை, 'கன்னியாகுமரி மாவட்ட இந்துக்கள் ஒடுக்கப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளால் சென்னைவாசிகள் உணர்ச்சிவசப் படக் கூடாது' என்கிறேன்.

'உங்கள் பக்கத்து வீட்டில், நட்பு வட்டத்தில் வேலை பார்க்கும் இடத்தில் உணர்ந்த மனித நேயம்தான் எல்லா இடங்களிலும் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடுங்கோலர்களாக சித்தரிக்கும் பிரச்சார உத்திகள் வெறும் வதந்தி' என்று சுட்டிக் காட்டுவதுதான் என்னுடைய நோக்கம்.

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

இந்து முன்னணி செய்தது ஒரு பதிலடி. அதனால்தான் கிறிஸ்தவ வெறுப்பியல் பிரச்சாரம் நின்றது. நான் உங்கள் தந்தையாரின் அல்லது தாயாரின் ஒழுக்கத்தை குறித்து உங்கள் சகோதரரிடம் பிரச்சாரம் செய்து அதனை உங்கள் சகோதரர் நம்பும் நிலையில் அந்த பிரச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அதே நிலையில் தான் அன்றைய இந்துக்கள் இருந்தனர். இதோ 1982 இல் நடைபெற்ற இந்து எழுச்சி மாநாட்டை குறித்து பேசிய நீர் உண்மையில் நேர்மையானவர் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? 25-12-1981 இல் நடந்த ஐக்கிய கிறிஸ்தவ மாநாட்டிலும் ஊர்வலத்திலும் நடைபெற்ற பேச்சுக்களையும் அப்போது அந்த ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட துவேச கோசங்களையும் குறித்து எழுதியிருக்க வேண்டும். அப்பட்டமான ஒரு மதவாத ஊர்வலத்தில் ஒரு மதச்சார்பற்ற கட்சியின் எம்பி எப்படி கலந்துகொண்டான் என்பதைக்குறித்து பேசியிருக்க வேண்டும். அதை குறித்து உங்களூக்கு நினைவு இல்லை என கதைவிடாதீர்கள். ஏனெனில் 1982 இந்து எழுச்சி மாநாட்டு பேச்சு மேடையில் எத்தனை முறை அந்த ஐக்கிய கிறிஸ்தவ ஊர்வலத்தின் பேச்சுக்களை குறிப்பிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு அவை நன்றாகவே ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளன. கமிசன் அறிக்கையில் ஊர்வல விசயங்களில் முதலில் கிறிஸ்தவ ஐக்கிய ஊர்வலமும் பிறகு அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து எழுச்சி ஊர்வலம் நடத்தப்பட்டதும் தெளிவாக கூறப்பட்டிருக்கும். உண்மை இப்படி இருக்க எப்படி உங்களால் இப்படி ஆத்மார்த்தமாக புளுக முடிகிறது...
சகோதர அன்புடன் (உஙகளுடைய பசப்புத்தனமில்லாத உண்மையான அன்புடன்)
அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டில் நடந்த முட்டாள்தனங்களுக்கு சமாதானம் பிறர் செய்த முட்டாள்தனங்களா? //
அய்யா வைகுண்டரை குறித்து தூசனையாக டயோசிசன் புத்தகம் இறக்கி அதனை அய்யாவழி இளைஞர்களிடம் விநியோகித்தது முட்டாள்தனமா அயோக்கியத்தனமா? இப்படிப்பட்ட பிரச்சாரங்களை தடுக்க வேண்டும் என ஒரு வார்த்தை சொல்லமுடியாத உமக்கு இந்துக்களின் எதிர்வினை குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவன் திருப்பெயரால் துவங்குகிறேன்.

அன்பு சகோதரர் சிவகுமார் அவர்களே!
சங்பரிவார தீவிரவாத கும்பல்களின் கோர முகத்தின் உண்மை பிரதிபலிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தும் தங்களது சேவையை, சமூக நல்லிணக்கம் மக்களிடையே தழைத்தோங்க வேண்டும் என்ற ஆவலுடைய எல்லேரும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். பாராட்டுகள் சகோதரரே!

மக்களிடையே துவேஷத்தை பரப்பி, பிளவை உண்டுபண்ணி, அந்த பிளவின் காரணமாக தனது சுயவாழ்வை வளப்படுத்த நினைக்கும் வஞ்சகர்கள் சமுதாயத்தில் அடையாளம் காணப்பட வேண்டும்.

//முஸ்லீம் நாடுகளில் இசுலாமிய தீவிரவாதிகள் இப்படிச் செயல்படலாம். அமெரிக்காவில் கிருத்துவ மத அடிப்படைவாதிகள் அரசியல் செய்வதும் இதே அடிப்படையில்தான். ஆனால் நமது நாட்டில் தீவிரமாக இருப்பது இந்து மத வெறிதான்.//
எல்லா சமுதாயத்திலும் சில விஷமிகள், மனிதகுல விரோதிகள் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. அந்த சில விஷமிகளுக்காக ஒட்டு மொத்த சமுதாயமும் குற்றச்சாட்டப்பட்டு நசுக்கப்பட்டால் அதுவும் தீவிரவாதம் தானே?

//'ஒரு வீட்டின் நன்மைக்காக ஒரு தனி மனிதனையும், ஒரு கிராமத்தின் நன்மைக்காக ஒரு குடும்பத்தையும், ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு கிராமத்தையும் பலி கொடுப்பது தவறில்லை' என்று நம்பும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.

'இந்தியா என்பது ஒரே நாடு, அதன் மொழி ஒரே மொழி, அதன் மக்கள் ஒரே இனத்தினர், அதன் பண்பாடு ஒரே பண்பாடு, அதன் மதம் ஒரே மதம்' என்று பேரின வாதத்தின் அடிப்படையில் இயங்குவது ஆர்எஸ்எஸ்.

கோயில்கள், நிலத்தகராறு, பொது இடங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் என்று ஒவ்வொன்றுக்கும் காவி சாயம் பூசி, மக்களின் அடிப்படை பயங்களைத் தூண்டி விட்டுத் தமது நோக்கத்துக்குப் பயன்படுத்துவதுதான் இந்துத்துவா பயங்கரவாதம்.

ஒரு பெண் காணாமல் போய் விட அதை கலவரமாகத் தூண்டி விட்டு ஆதாயம் கண்டவர்கள் இந்து இயக்கங்கள்//
RSSன் முகமூடியை கிளித்தெறிந்து உண்மையை மக்களுக்கு தெளிவாக வெளிகாட்டியுள்ளீர்கள் சகோதரரே! நன்றி

//'நம் சகோதர்கள் பங்களாதேசத்தில் இருக்கலாம். ஆனால் உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பம் உங்களுக்கு இன்னும் நெருங்கியது. அவர்கள் மதத்தாலோ சாதியாலோ வேறுபட்டிருக்கலாம். அவர்களுடன் நட்பு பூண்டு நல்வாழ்வு வாழத் தெரியாத உங்களுக்கு பங்களாதேசம் பற்றிக் கவலைப்பட என்ன அருகதை இருக்கிறது?'//
உங்களது பதிவின் வைரவரிகள் சகோதரரே!

மக்களுக்கு இடையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் தழைத்தோங்கவும், "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது இந்தியாவின் வெறும் கோஷம் அல்ல, அது இந்தியாவின் கொள்கை என்பதை நடைமுறைபடுத்த, பொது மக்கள் மனிதகுல விரோதிகளை இனம் காண வேண்டும். அதற்கு உங்களுடைய இந்த பதிவுகள் நிச்சயமாக உரமிடும் என்று நம்புகிறேன் சகோதரரே!.

மனித நேயம் தழைத்தோங்கட்டும் என்னும் விருப்பதுடன் விடைபெறும்
உங்கள் அன்பு சகோதரன்
நெய்னா முஹம்மது

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

சகோதார அன்பு எத்தகைய சொல்லாடல்களை உருவாக்குகிறது என்பதைப் பார்த்து வியப்பு ஏற்படுகிறது :-)

எப்படியிருந்தாலும் உங்கள் அன்பை என்றும் வரவேற்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அன்பின் சகோதரர் நெய்னாவுக்கு,

வணக்கம். கடவுள் என்ற பெயரால் சக மனிதன் மீது கையை ஓங்கும் நிலை ஏற்பட்டால் அந்த மத உணர்வைக் குறித்து மறு பரீசிலனை செய்வது ஒவ்வொருவருக்கும் நல்லது. அங்கு கடவுள் நிச்சயமாக இல்லை.

மதங்கள் மனிதர்களை இணைக்கப் பிறந்தவை. அவற்றை சாக்காக வைத்து தம் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் கும்பல்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் அவசியம்தான்.

உங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் நன்றிகள்.

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//சகோதார அன்பு எத்தகைய சொல்லாடல்களை உருவாக்குகிறது என்பதைப் பார்த்து வியப்பு ஏற்படுகிறது :-) //
எல்லாம் ஒரு 'சகோதர' உரிமைதான். பாரத மக்கள் அனைவரையும் நேசித்த பாரதி சில தடம் தடுமாறிப்போன பாரதியர்களை 'நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு' என சொல்லவில்லையா. அதுபோல :)

ஜடாயு சொன்னது…

இந்த கலவரங்களின் பின்னணியை நீங்கள் திட்டமிட்டோ (அல்லது உங்களது இயல்பான திம்மித்தனத்தாலோ) மறைக்கிறீர்கள் சிவகுமார்.

நீங்கள் அடுக்கும் ஒவ்வொரு செவிவழி பொய்யையும் சுட்டெரிக்கும் ஆவணப் படுத்தப்பட்ட உண்மைகளை அரவிந்தன் தந்தபடி இருக்கிறார். இதுவரை அவர் சொன்ன எந்த தகவல்களையும் மறுப்பதாகத் தெரியவில்லை. சப்பைக் கட்டு தான் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு நடுநிலைவாதியாகவே உங்கள் எண்ண ஓட்டம் எவ்வளவு பாரபட்சமானது என்று உணர முடியும்:

// இதற்குப் பலியாகாமல் உறுதியாக இருந்தவர்கள் பெருந்திரளான மக்கள். ஆனால், என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் இரு பக்கமும் இருந்திருப்பார்கள். அதுதான் இந்துத்துவா தீவிரவாதிகளின் வெற்றி. //

இங்கே "இரு பக்கத்து மதத்தீவிரவாதிகளின் வெற்றி" என்று எழுதக்கூடத் தோன்றாத அளவு நடுநிலை உணர்ச்சியற்றுப் போயிருக்கிறீர்கள் இல்லையா? ஏதோ அமைதியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த கிறித்தவர்களை இந்துத் தீவிரவாதிகள் சென்று கொலை செய்தார்கள் என்று அடுத்த பதிவு போட்டாலும் போடுவீர் நீர்!

பெயரில்லா சொன்னது…

//
ஏதோ அமைதியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த கிறித்தவர்களை இந்துத் தீவிரவாதிகள் சென்று கொலை செய்தார்கள் என்று அடுத்த பதிவு போட்டாலும் போடுவீர் நீர்!
//

ஆமா ஆமா அதைத்தான் செய்தார்கள். சும்மா ஜிஸஸ் ஜிஸஸ் னு போன கிருத்தவன் ("சிவனே"ன்னு எல்லாம் போமாட்டான் ! :D) அவனை ஹிந்து தீவிரவாதிகள் அதுவும் ஆர் எஸ் எஸ் காரர்கள் தான் வெட்டினார்கள், அதனால் தான் கிருத்தவர்கள் எல்லாம் போய் இந்துக் கடவுளை திட்டினார்கள். மாநாடு நடத்தி மைக் போட்டு திட்டினார்கள். ஏன் திட்ட மாட்டார்கள், அந்தத் திட்டெல்லாம் ஞாயம்னு சொல்லத்தான் கம்யூனிஸ்டு திம்மிகள் இருக்காங்களே.

பெயரில்லா சொன்னது…

சிவகுமார், அரவிந்தன், இரண்டு பேரின் பதிவுகளையும் முன்முடிவுகள் இல்லாமல் படிக்கும் என்னுடைய புரிதல் இது:

ஐக்கிய கிறித்துவக் கூட்டம் என்ற ஒன்று 1981இல் நடைபெற்றது. இந்து நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்கிய அந்த ஊர்வலத்துக்குப் பதிலடியாக, 1982வில் கிறித்துவ மத நம்பிக்கைகளைக் கேலிசெய்ய ஒரு ஒருங்கிணைந்த இந்து எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியான சம்பவங்கள் என்னவென்று இரு பதிவர்களும் எழுதுவதைக் காண ஆவலாக இருக்கிறேன்..

மற்றபடி, பிற கிளைப் புரிதல்கள்:

1. அகிம்சையும், அன்பையும் வலியுறுத்தும் கிறித்தவ மதம், இந்து தெய்வங்களைத் திட்டியிருக்கத் தேவையில்லை.

2. கிறித்துவ மதத்தை விட அதிகமான அன்பாளர்களாகவும், மனித சமுதாயத்தைக் காப்பாற்ற வந்தவர்களாகவும் சொல்லிக் கொள்ளும் இந்து இயக்கங்கள், அடுத்த மதத்தைத் திட்டித் தான், தனது உயர்வைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. தன் மதங்களில் உள்ள நல்ல கதைகளையும், புராணங்களையும், அன்பு வழியில் இந்து மக்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். மாற்று மதத்துக்காரன் மீது நம்பிக்கை இல்லாமல் நடந்து தான் அன்பே சிவம் என்பதை நிரூபிக்கத் தேவையே இல்லை.

3. ஐக்கிய கிறித்துவ ஊர்வலத்தின் முட்டாள்தனங்களாக சொல்லப்படுபவற்றை, வலையில் உள்ள கிறித்துவர்கள் வாய்மூடி தலைகவிழ்த்து அமைதியாக ஒப்புக் கொண்டு, இது போன்றதொரு செய்கையைத்(அந்த ஊர்வலத்தில் தாக்குதல்கள் உண்மையிலேயே நடந்திருந்தால்..) தவிர்த்திருக்கலாம் என்று நினைப்பதாகத் தான் தெரிகிறது. ஆனால், இந்து எழுச்சியை வலியுறுத்துபவர்கள் மட்டும், கலவரங்களைத் தவிர்த்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், முதல் கல்லெறிந்தவர்கள் யாரோ என்பதால், தன்னைச் சுற்றி உள்ள ஊர்கள் எரிந்ததும், பல உயிர்கள் அழிந்ததும் நியாயம் தான் என்றும் நிரூபித்தே தீர முயற்சிப்பதாகத் தெரிகிறது.

மேலும் மேலும், இருபக்கத்து உண்மைகளையும் அறியும் ஆர்வத்துடன் சம்பவ நேரத்தில் பிறந்தே இராத,

- ஒரு நடுநிலைவாத இளைஞன்

புதுவை சரவணன் சொன்னது…

அன்புள்ள மா.சிவக்குமார் அவர்களுக்கு,
ஆர்.எஸ்.எஸ் என்ற அபாயம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதி வருவதை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆர்.எஸ்.எஸ் பற்றி விமர்சனம் வருவது ஒன்றும் புதிதல்ல. உலகத்திலேயே அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்ஸாக மட்டுமே இருக்கும். ஆனால் நீங்கள் ஏதோ ஆர். எஸ். எஸ் பற்றி எல்லாம் தெரிந்தவரைப்போல அந்த இயக்கத்தில் பல ஆண்டுகள் இருந்தவரைப்போல ஒரு மாயையை ஏற்படுத்தி கதை அளந்து வருகிறீர்கள். உங்கள் அடுக்கடுக்கான அவதூறுகளுக்கு நண்பர் அரவிந்தன் நீலகண்டன் தக்க ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார்.
ஆனால் அவரின் பதிலடிக்கு உரிய பதில் அளிக்காமல் நழுவுவதோடு புதிது புதிதாக அவதூறுகளை அள்ளி விடுகிறீர்கள்.
அரவிந்தன் நீலகண்டனின் பதிலடிக்கு எந்த இடத்திலும் உங்களால் பதில் கூற முடியாதது உங்களிடம் நேர்மை இல்லை என்பதையே காட்டுகிறது. நான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஆனால் கன்னியாகுமரிக்கும் அந்த மாவட்டத்தின் பல இடங்களுக்கும் பலமுறை வந்திருக்கிறேன். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீங்கள் குறிப்பிடும் அந்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி இயக்கங்களில் இருந்து பணியாற்றிய இராம.கோபாலன், இல.கணேசன், சுப்பாராவ், வீரபாகு, ஸ்தாணுமாலையன், ஷ்ரீகணேசன், சுந்தர.லட்சுமணன், ராம.ராஜசேகர், கேசவவிநாயகன், ராமன், இளங்குமார் சம்பத் போன்றவர்களிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்து இயக்கங்களின் போராட்ட வரலாறு பற்றி பலமுறை பல மணி நேரங்கள் பேசியிருக்கிறேன்.
சென்ற ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் திரு. இராம.கோபாலன் ஒய்வில் இருந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த இந்து எழுச்சி மாநாடுகள் பற்றி பல மணி நேரங்கள் பேசி அதை குறிப்பெடுத்து வைத்துள்ளேன். அதை பற்றி நான் தனி பதிவில்தான் எழுத வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சித்தால் தேச விரோத கும்பல்களிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். பாராட்டோடு வேறு சிலவும் கிடைக்கலாம். அதற்காக எழுதி வரும் சுயநலக் கூட்டத்திற்கு பதிலளிப்பதற்காக அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

புதுவை சரவணன்

மா சிவகுமார் சொன்னது…

ஜடாயு,

நான் உணர்ந்த, அனுபவித்தவற்றை மட்டும்தான் எழுதுகிறேன். அதுதான் முழு உண்மை என்று சொல்லவில்லை. படிப்பவர்கள் மறுபக்கத்தையும் பார்த்து தீர்மானித்துக் கொள்வார்கள்.

ஒரிஜினல் நெய் மிட்டாய்,

வருகைக்கு நன்றி.

நடுநிலைவாத இளைஞன்,

நடந்தவற்றின் பல பக்கங்களைத் தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் முடிவு செய்து கொள்கிறோம். அந்த வழியைப் பின்பற்றும் வரையில் இந்த உலகில் மனிதம் தளைத்திருக்கும் :-)

புதுவை சரவணன்,

நான் எந்த மாயையும் உருவாக்கவில்லை. என்னுடைய சொந்த அனுபவங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். படிப்பவர்களுக்கு அதில் எனது நெருக்கம் என்ன என்பது புரியும் படியாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பெரிய தலைவர்களிடம் தொடர்புள்ள உங்களுக்கு இன்னும் விபரங்கள் தெரிந்திருக்கத்தான் செய்யும். நான் எழுதுவதால் நீங்களோ, நீங்கள் எழுதுவதால் நானோ கருத்துக்களை தலைகீழாக மாற்றிக் கொள்ளப் போவதாக நம்பிக்கை இல்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//நான் உணர்ந்த, அனுபவித்தவற்றை மட்டும்தான் எழுதுகிறேன். அதுதான் முழு உண்மை என்று சொல்லவில்லை//

???? If you dont know truth why you are blaming RSS ?
I am not a FAN of RSS but they never supported Emergency only communists supported it .

//"இரு பக்கத்து மதத்தீவிரவாதிகளின் வெற்றி//
I agree to above .

-a reader .

மா சிவகுமார் சொன்னது…

வாசகரே,

எனக்குத் தெரிந்து உண்மைகளின்படி/அனுபவத்தின்படி ஆர்எஸ்எஸ் மற்றும் சகோதர இந்துத்துவா இயக்கங்கள் இந்தக் கலவரங்களுக்கு வித்திடுகின்றன. ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள், நோக்கங்கள், வழிமுறைகள் இந்தியாவின் அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்று அஞ்சுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//வாசகரே,

எனக்குத் தெரிந்து உண்மைகளின்படி/அனுபவத்தின்படி ஆர்எஸ்எஸ் மற்றும் சகோதர இந்துத்துவா இயக்கங்கள் இந்தக் கலவரங்களுக்கு வித்திடுகின்றன. ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள், நோக்கங்கள், வழிமுறைகள் இந்தியாவின் அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்று அஞ்சுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார் //

I belive in God as well as belive in reservation will establish social justice . but when we point fingers to RSS we intentionly supporting others . if you have refered christian missioneries work i would buy your words .

check this out and see TM blogs about religious blogs . Now there is no loud speakers all are using media to outreach to spread

http://guide.gospelcom.net/resources/india.php
http://guide.gospelcom.net/resources/appeal.txt

I never seen any blogs aganist SIMI or christian missineries at the same length against RSS .

I agree RSS /BJP/Siva sena are bad but we have to bring up good group like MS udayamoorthy with clear view
- a Reader from NJ

மா சிவகுமார் சொன்னது…

அன்புள்ள வாசகருக்கு,

நானும் என்னளவில் கடவுளை நம்புகிறேன். இந்து மதத்தின் உண்மைகளை நேசிக்கிறேன். இந்த இடுகைகளின் இறுதிப் பகுதியைப் பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//கோவில் அர்ச்சனையை பொறுத்தவரையில் சமஸ்கிருதம் இந்த தேசம் முழுமைக்கும் சொந்தமான மொழி. எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ இனமோ பிராந்தியமோ சாதியோ சொந்தம் கொண்டாடாத தேசம் முழுமைக்கும் சொந்தமான ஒரு மொழி உண்டென்றால் அது சமஸ்கிருதம்.//

ஏன் நீலகண்டன் சார். ஐரோப்பாவில் அனைத்து நாடுகளிலும் லத்தீனில்தான் தேவாலயப் பிரார்த்தனை நடக்கிறதா? நடந்திருக்கலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் போலந்து போன்ற முழுக் கத்தோலிக்க நாடுகளில் கூட தேவாலயப் பிரார்த்தனைகள் போலிஷ்ஷில்தான் நிகழ்த்தப்படுகின்றன. ஆங்கிலம் பேசும் அமெரிக்காவில் வந்து குடியேறும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு ஸ்பானிஷிலேயே பிரசங்கம் நிகழ்த்தும் தேவாலயங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் பெரும்பான்மைக்குப் புரியாத சமஸ்கிருதத்தில் பூசாரி மந்திரம் சொன்னால்தான் சாமிக்கு இனிக்குமோ?

ஆனால், இந்தியா என்றால் மட்டும், தேவ பாஷை சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை நடக்கவேண்டும். பலே, இந்து ஒற்றுமை வேண்டும், இந்துக்களெல்லாம் கோயிலுக்குப் போகவேண்டும், ஆனால் அர்ச்சனை மட்டும் எவனுக்கும் புரியாத சமஸ்கிருதத்தில் நடக்க வேண்டும். அது தேவ பாஷை என்று நீங்கள் உருகி ஆனந்த பாஷ்பம் பெருக்கினால் என்ன ஓய்? தமிழ்மணம் அறிவிப்புகளே புரியவில்லை, இடியாப்பச் சிக்கல் மொழியில் எழுதக்கூடாது என்று பாசிசம் பருப்பு ரசம் என்று பக்கம் பக்கமாக எழுதுகிறீர், எவனுக்கும் புரியாத சம்ஸ்கிருதத்தில் பூசாரி அர்ச்சனை செய்வதை மட்டும் கடவுளைப் பார்க்க வந்த இந்து வாயைப் பிளந்துகொண்டு பார்க்க வேண்டுமோ? ஏன் இந்த இரட்டை நாக்கு?

முஸ்லிம் அரபியில் செய்கிறானா துருக்கி மொழியில் செய்கிறானா என்பதை விடும் - உமது பார்வைப்படி, அது இந்திய தரும வழி வந்த மதம் என்பதால் அதைத் தற்போதைக்கு ஒதுக்கி வைக்கலாம். பெரும்பான்மை மதமாகிய இந்து மதத்தின் மூல வழிபாடுகள், பெரும்பான்மை சமுதாயத்துக்குப் புரியாத மொழியில் செய்யப்படவேண்டும், ஆனால் மதத்திலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறுகிறார்கள் என்பது மட்டும் உமக்குக் கசக்கிறது. உம்மை மாதிரி வெறிபிடித்த அரைவேக்காட்டு இந்துக்கள் தயிர்சாதமும் புளியோதரையும் தின்ற அடியாள் மாதிரி இப்படி உளறிக்கொண்டிருந்தால் சாமானிய இந்து என்ன செய்வான் பாவம். கோயிலுக்குள் போவதற்கே போராடவேண்டியிருந்தது, இப்போது அரவிந்தன் நீலகண்டன் கூட ஹானரரி அந்தணர் பட்டம் வாங்கினாலும் கருவறைக்குள் போகமுடியாது, இது அனைத்துக்கும் மேலாக வழிபாட்டில் என்ன சொல்லப்படுகிறது என்றும் பக்தனுக்குத் தெரியாது. இதில் ஜல்லி அடிக்க வரும் ஒரு மனுதாங்கிக் கூட்டம் ஒன்று, கோவிலுக்குப் போனா சைலண்ட்டா கும்பிட்டுட்டு வரத்தானே போறே, பூசாரி என்ன சொன்னா என்ன என்று வக்காலத்து வாங்கும். கலக்குங்கள் நீலகண்டன் சார். பெரும்பான்மை இந்துக்களும் என்னை மாதிரித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரமை பிடித்து அலையும் உங்களை மாதிரி ஆட்களால்தான் இந்திய மத நம்பிக்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படும் - ஆபிரகாமிய மதத்தினரால் அல்ல.