- மேற்கத்திய கல்வி கற்று சோவியத் புரட்சியால் கவரப்பட்டிருந்த நேருவுக்கு காந்தியின் பல கருத்துக்கள் முட்டாள்தனமாகப் பட்டாலும் அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஏன்? - 'இவர் வருணாசிரம தருமத்தைத் தாங்கிப் பிடிக்கத்தான் முயல்கிறார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் அநியாயம் செய்கிறார்' என்று தனித்தலைமை உருவாக்கிய அம்பேத்கார் காந்தியின் மீது பெரு மதிப்பும், அவரது உடல் நலனில் அக்கறையும் வைத்திருந்தார்.
'கிழவன் செத்தால் சாகிறான்' என்று விட்டு விட்டுப் போக முடியவில்லை.
ஏன்? - 'இந்திய இளைஞர்களின் துடிப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருக்கிறார்' என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி விரும்பவில்லை என்றதும் காங்கிரஸ் தலைமைப் பதவியைத் தூக்கி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். காந்தியின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.
இளைஞர்களின் பெருவாரியான ஆதரவு இருந்தாலும் நேதாஜியின் முடிவு காந்திக்கு வழி விடுவதாகவே இருக்கிறது.
ஏன்? - 'முதலில் கோயிலுக்குள் வரணும் என்பாங்கள், அப்புறம் நம்ம வீட்டுக்கே வந்து விடுவார்கள்' என்று இறுக்கத்துடன் இருந்த வர்ணாசிரமவாதிகள் காந்தியின் உயிருக்குப் பயந்து கத்தியின்றி ரத்தமின்றி இந்துக்கள் அனைவருக்கும் கோயில்களைத் திறந்து விடச் சம்மதிக்கிறார்கள்.
ஏன்? - 'இந்தியாவில் முஸ்லீம்கள் மதிப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ முடியாது' என்ற பாகிஸ்தான் உருவாக்கத்துக்குப் பிறகும் பல கோடி முஸ்லீம் மக்கள் தமது பிறந்த மண்ணில் இருந்து விடத் தீர்மானித்து மதச் சார்பற்ற இந்தியக் குடியரசை உருவாக்குவதில் பங்கேற்கின்றனர்.
ஏன்?
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
ஞாயிறு, ஜூன் 24, 2007
காந்தி - சில கேள்விகள்
காந்தியின் கொள்கைகளை, சமூகக் கருத்துகளை, மத நம்பிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்தவர்களும் அவரை புறக்கணிக்க முடியவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
13 கருத்துகள்:
நல்ல கேள்விகள்.
காந்திய கொள்கைகளில் பற்றும் ஆழ்ந்த அறிவும் உள்ளவர் என்ற முறையில் உங்களுடைய கேள்விகள் ஒரு நல்ல விவாத்ததை தொடக்கி வைக்க உதவும் என்ற எண்ணத்தில்... எனது சில உப-கேள்விகள்.
நேரு காந்தியை மதித்தார் என்பது தெள்ளத் தெளிவு. அவருடைய ஆதர்ச சீடரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காந்திய தேசப் பிதா ஆக்கியதோடு நேருவும், காங்கிரசும் கை கழுவி விட்டது என்பதுதான் உண்மை. பிரிவினைக்கு முன் காந்திய கருத்துக்கள் மிகப் பெரும் எழுச்சியை உண்டு பண்ணியது. ஆனால் பிரிவினைக்கு இந்திய / பாகிஸ்தானிய அரசாங்க்கங்களின் அஜெண்டா மாறி விட்டது. ஒரு இசுலாமிய அரசை நிறுவுவதற்க்கும், மதச்சார்பற்ற அரசை கட்டி காப்பதிற்க்கும் காந்தியிசம் அவர்களுக்கு இடையூறாகத்தான் இருந்தது.
இன்றும் காந்திகிரியை சினிமாவில் மட்டுமே பார்த்து நாம் புளகாங்கிதம் அடைகிறோமே அது ஏன்ன்?
அன்றைய காலத்தில் காந்தி மிகப் பெரும் மக்கள் தலைவராக விளங்கினார். அதனால் பெருவாரியான தலைவர்களுக்கு (ஜின்னா உட்பட) அவர் மீது மதிப்பும் அக்கறையும் இருக்கத்தான் செய்தன.
அம்பேத்கரோ, சுபாஷ் சந்திர போஸோ
ஏன் நேரு போல் காந்தியை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை?
பல கோடி முஸ்லீம்கள் பிரிவினைக்கு அப்புறமும் இந்தியாவிலேயே தங்கிவிட்டதற்கு காந்தி காரணம் என்றால், பாகிஸ்தானில் இன்றும் தங்கியிருக்கும் இந்துக்களுக்கு என்ன முஷாரப் காரணமா?
அவருடைய மிகப் பெரும் அரிய குணங்கள் - பொது வாழ்வில் எளிமை, சுத்தம், தனி மனித ஒழுக்கம், வாழ்க்கையை திறந்த புத்தகமாக மற்றவர் போற்றும் வகையில் வாழ்ந்தது, அடக்குமுறைக்கு எதிராக அஹிம்சையை ஆயுதமாக பயன்படுத்தியது... (Ahimsa as a weapon).
இதில் ஒன்று கூட இன்றைய இந்தியாவில் பெருமளவு போற்றப்படும் குணமாக எங்கும் தெரியவில்லையே ஏன்?
ஒரு வேளை அவர் முதல் கவர்னர் ஜெனரலாகவோ, பிரதம மந்திரியாகவோ வந்து காங்கிரஸ் இயக்கத்தை முறைமை படுத்தியிருந்தால் விளைவுகள் இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும். அவர் ஏன் அதை செய்யவில்லை?
வணக்கம் மா.சி,
நேரு,அம்பேத்கர், போஸ் இவர்கள் காந்தியுடன் கருத்தொற்றுமை இல்லாது இருந்தாலும் மதித்தார்கள், எனில் அது அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது,
மேலும், காந்தி சுயனலம் இல்லாது இருந்தார் காந்தியின் இடத்தில் வேறு ஒருவரைக்கொண்டு வந்தால் அவர் எப்படி செயல்ப்படுவார், எனத்தெரியாது, தெரியாத பிசாசை விட தெரிந்த பிசாசே மேல் அல்லவா!
சில காரணங்களுக்காக காந்தி பதவி ஆசைக் கொண்டு இருக்கவில்லை, அது நேருவிற்கு வசதியாகி போனது, நேருவின் மனதில் அப்பொழுதே பிரதமர் பதவியை அடைய ஆசை உண்டு காந்தியின் தயவில் எதிர்ப்பின்றி பதவியை அடையலாம் என்ற சுயனலம்.
சர்தார் வல்லபாய் படேல் தான் பிரதமர் ஆக வரவேண்டும் என்று காங்கிரசில் பெரும் பாலோனோர் விரும்பினார்கள் ஆனால் காந்தி என்ற ஒரு பெரிய துறுப்பு சீட்டை வைத்தே நேரு பதவிக்கு வந்தார். இது வரலாறு.
தற்போதைய காலகட்டத்தில் பி.ஜே.பி க்கு எப்படி வாஜ்பாய் முகம் தேவைப்பட்டதோ அப்படி காந்தியின் முகம் காங்கிரஸுக்கு தேவைப்பட்டது, எனவே மற்ற தலைவர்கள் அவரை ஆதரித்தனர், அப்படி இருக்கையில் அம்பேத்கரோ, போஸோ, காந்தியின் விருப்பத்திற்கு மாறாக அங்கே பதவியில் இருக்க முடியாது எனவே விலகி இருந்தார்கள்.
காந்தியின் விருப்பத்தின் பேரால் கோவில்கதவுகளை வருணாசிரமவாதிகல் திறந்தர்கள் என்பது ஏற்றுக்கொள்ளவியலாத ஒரு கட்டுக்கதையே!
அப்படி நடந்து இருக்குமானால் அம்பேத்கர் பல்லாயிரம் மக்கலோடு புத்த மதத்திற்கு மாறி இருக்க மாட்டார், பெரியார் திராவிடர் இயக்கம் ஆரம்பித்து இருக்க மாட்டார், போராடி இருக்க மாட்டார்.காந்தியை பொருத்தவரை காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்ற நன்னம்பிக்கைவாதி, எனவே பொறுமையாக இருங்கள் என்று சொல்லியே காலம் கடந்தினார் என்பதே உண்மை!
பலகோடி முஸ்லிம்கள் இந்தியாவில் தங்க யார் காரணம் என்பதற்கு வெங்கட் அருமையாக கேள்வி கேட்டுள்ளார்.
உண்மைக்காரணம் தங்கள் உடமைகளை ,சொத்துக்களை விட்டு செல்ல மனம் இல்லாமை, எல்லாவற்றையும் விட்டு விட்டு அங்கே போய் பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கேள்வி எனவே இங்கேயே தங்கிவிட்டார்கள் முஸ்லிம்கள் அதே போல் இந்துக்கள் பலரும் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
சிவா,
காந்தியின் பிரமச்சார்ய சோதனைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தனது சோதனைகளை மனைவி தவிர மற்ற பெண்களுடன் நடத்திய இவருக்கும் , தனது ஆண்மைத் திமிரைக் காட்ட பல பெண்களைச் சீரழிக்கும் ஒருவருக்கும் "பாலியல் விருப்பங்கள்/கட்டுப்பாடுகள்" என்னும் நிலையில் என்ன வேறுபாடு உள்ளது?
முக்கியம்:
நான் இங்கே காந்தியின் அகிம்சை பற்றியோ அல்லது அவரின் அரசியல் பற்றியோ பேசவில்லை.தனது கட்டுப்பாடுகளைச் சோதிக்க, மருத்துவ ஆய்வுகளில் பயன்படும் எலிக் குட்டிகள் போல் பெண்களின் உணர்வை அறியாமல் தனது காமத்தூண்டல் கட்டுப்பாட்டுச் சோதனைக்காக இவர் செய்த "பாலியல் விருப்பங்கள்/கட்டுப்பாடுகள்" சோதனைகள் மீதானது மட்டுமே.
அ.மார்க்ஸின் "காமம் வென்றது காந்தி தோற்றார்"
http://www.kumudam.com/magazine/Theranadi/2007-02-01/pg5.php
-ல் இருந்து சில வரிகள்........
// இப்போது அவரது சோதனைகளில் பங்கு பெற்றவர்கள் இருபது வயதுக்கும் குறைந்த மனுஷம் ஆபாவும். இந்தச் சோதனையில் ‘‘வெப்பம் (தபஸ்) உச்சமாக இருக்கும்’’ என்றார். மனு தன்னருகில் முற்றிலும் நிர்வாணமாக உறங்குவதாக பியாரே லாலுக்கு கடிதம் எழுதினார். ஒருவேளை இப்போதுதான் முதல்முறையாக முழு நிர்வாணத்துடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது போலும். ‘சோதனையில் வரம்புகள் கடக்கப்படுவது’’ பற்றிய குறிப்பின் பொருள் இதுவாக இருக்கலாம்.
பேத்தி மனுவின் மீது அவருக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருந்தது. தனது சோதனையில் பங்கு பெறுவதற்கான முழுத் தகுதி தான் மட்டுமின்றி, பங்கு பெறுபவரும் இச்சைக்கு ஆட்படாதிருப்பது என்று கருதிய காந்தி எத்தகைய திறனுடையவராக 19 வயதுள்ள தன் பேத்தி மனுவை அவர் மதித்தார்.
இத்தகைய சோதனைகளில் சோதனையாளிகளின் விருப்பு குறித்த காந்தியின் கருத்து என்னவாக இருந்தது? அவர்களது உணர்வுகளைப் பற்றி காந்தி எந்த அளவு யோசித்தார்! தமது மருந்துச் சோதனைகளை ‘அவுட்சோர்சிங்’ செய்கிற பன்னாட்டு நிறுவனங்களைப் போல சோதனையாளிகளின் பிரச்னை குறித்து அவரும் கவலைகொள்ளவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதிலளிப்பது சிக்கலே. விருப்பபூர்வமான இசைவு முக்கியம் என்றே அவர் கூறினார். அவருடைய உடலியல் அருகாமைக்குப் பலரும் போட்டியிடவே செய்தனர். பியாரேலால் உட்பட. மனுவைத் திருமணம் செய்ய விரும்பியவராக அவர் இருந்தபோதும் காந்தியின் அருகாமைக்கான அவரது ஆவலை ஒரு பால் வேட்கையுடன் ஒப்பிடத் தயங்கமாட்டார் கத்ரீன் டிட்ரிக்.
எனினும் இந்தச் சோதனைகளில் ஆபாவின் கணவர் கனுகாந்திக்கும் மனுவின் தந்தை ஜெய்சுக்லாலுக்கும் ஒப்புதலில்லாததைக் காந்தி பொருட்படுத்தவில்லை. ஜெயசுக்லால் இதை வெளிப்படையாக முன் வைத்தபோது, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தவும் காந்தி தயங்கவில்லை.//
வெங்கட், வவ்வால்!
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் சொன்னது போல கேள்விகளை எழுப்புவதுதான் இந்தப் பதிவின் நோக்கம். சரியான விடை என்று எதுவும் இல்லைதான்.
கடைசிக் கருத்தை எழுதும் போதே தயங்கினேன். வவ்வால் சொல்லும் காரணம்தான் சரி. அதில் காந்தியின் அரசியலுக்குப் பெரிய அளவில் பங்கு இல்லைதான்.
கல்வெட்டு,
இந்தப் பதிவில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி அலசப்பட வேண்டிய ஒன்றா என்று முதலில் தோன்றியது. எனது கேள்விகளின் மூலம் காந்தியை எல்லாம் கடந்த புனிதராகக் காட்ட முயல்வதாக எண்ணி, அதற்கு எதிர் வினையாக இதை நீங்கள் எழுதியதாக எடுத்துக் கொள்கிறேன்.
இந்த இடுகையின் மூலம் என்னுடைய புரிதல்களை அதிகமாக்கிக் கொள்வதே என் நோக்கம்.
காந்தி இது தொடர்பாகச் செய்ததாகச் சொல்லப்படுபவை பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு எனக்குத் தெளிவில்லை. (குமுதம் கட்டுரை படிக்கவில்லை. அ மார்க்ஸ் கனமான பொருட்கள் குறித்து எழுதுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது புதிது)
நீங்கள் கேட்ட பிறகு எனக்குத் தோன்றிய கேள்விகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
1. நம் நாட்டில், பாலியல் ஒழுக்கங்கள் மற்ற சாதனைகளைக் கேள்விக் குறியாக்கும் விவாதப் பொருளாக அமைந்து விடுவது ஏன்?
கம்ப ராமாயணத்தை விமரிசிக்க வேண்டும் என்றால் கம்ப ரசம் எழுதினார்கள். பெரியாரை விமரிசிக்க அவரது முதிய வயது திருமணம் கிடைத்து விடுகிறது.
2. வயது வந்த ஆணும் பெண்ணும் முழுப் புரிதலோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவில் தலையிட யார் யாருக்கு உரிமை உள்ளது?
அன்புடன்,
மா சிவகுமார்
சிவா,
//எனது கேள்விகளின் மூலம் காந்தியை எல்லாம் கடந்த புனிதராகக் காட்ட முயல்வதாக எண்ணி, அதற்கு எதிர் வினையாக இதை நீங்கள் எழுதியதாக எடுத்துக் கொள்கிறேன். //
புனிதராக இருப்பதற்கு எல்லா உணர்வுகளையும் (காமம்) கடக்கவேண்டிய அவசியம் இல்லை.பார்த்தல்,உணர்தல்,இரசித்தல்,கேட்டல்...போன்ற உணர்வுகள் போல்... ஏன் அதனிலும் மேலான இயற்கையான உணர்வு காமம்.
மனிதன் மனிதத்துடன் இருந்தாலே போதும். இந்த உலகில் ஒருவன் குறைந்தபட்ச மனிதத்துடன் இருந்தால் ஒன்று கோமாளியாக்கப்படுவான் அல்லது புனிதராக்கப் படுவான்.
காந்தியை ஏன் புனிதராக்க வேண்டும்? அவர் சாதாரண மனிதர்தான். காந்தி என்றாலே அகிம்சை,புனிதம்,மாகாத்மா என்று கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூக அமைப்பில் காந்தி ஒரு மனிதர் என்று சொல்லவே நான் இங்கே இதைப் பதிந்தேன்.
நீங்கள் மேற்சொன்ன 5 ஏன் - விசயங்களும் காந்தி புனிதர்/நல்லவர் என்பதால் மட்டும் நடந்தவைகளாக இருக்கமுடியாது,அவற்றிற்கும் வரலாற்றில் சொல்லப்படாத பரிணாமங்கள் இருக்கலாம்.
*******
// இந்தப் பதிவில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி அலசப்பட வேண்டிய ஒன்றா என்று முதலில் தோன்றியது. //
நிச்சயம் அலசப்பட வேண்டியது இல்லை.ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று."மனுவின் தந்தை ஜெயசுக்லால் இதை வெளிப்படையாக முன் வைத்தபோது, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தவும் காந்தி தயங்கவில்லை" என்று அந்தக் கட்டுரை சொல்கிறது. மதுரை செரீனா மீது கஞ்சா வழக்குப் போட்ட அதே அரசியல்வாதிகளின் முகம்தான் இங்கும் தெரிகிறது.
// காந்தி இது தொடர்பாகச் செய்ததாகச் சொல்லப்படுபவை பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு எனக்குத் தெளிவில்லை.//
:-)) எனக்கு மட்டும் தெளிவா இருக்கிறது ?
நாம் அனைவரும் புத்தகங்களில் ,கட்டுரைகளில் படித்ததின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களைத்தான் காந்தி என்றும் நேரு என்றும் நினைத்துக் கொண்டு உள்ளோம்.இது போல் மாற்றுக் கருத்துகளைப் படிக்கும்போது முதலில் அதிர்ச்சியும் பின்னர் ஆச்சர்யமாயும் கடைசியில் அவரும் ஒரு மனிதர்தானே என்ற அளவுக்கு நீர்த்துப் போகிறது.
காந்தி பற்றிய கேள்வியில் இதையும் பதிந்து வைப்போமே என்பதால் இதை இங்கே போட்டேன்.
// 1. நம் நாட்டில், பாலியல் ஒழுக்கங்கள் மற்ற சாதனைகளைக் கேள்விக் குறியாக்கும் விவாதப் பொருளாக அமைந்து விடுவது ஏன்?//
பாலியல் ஒழுக்கம் என்றால் என்ன?
திருமண பந்தத்தில் உள்ளவர்கள் சட்டப்படி அந்த பந்தத்தை தாண்டி வெளியில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.பிடிக்கவிலையா மணமுறிவு பெற்றுக் கொள்ளலாம்.தவறே இல்லை.
திருமணம் ஆகதா அல்லது மணமுறிவு ஆனவர்கள் வேறு எந்தத் துணையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.திருமணம் செய்யாமல்கேட வாழலாம். அது அவரவர் விருப்பம்.
Cheating என்பது மட்டும் எந்த உறவுக்குள்ளும் இல்லாமல் இருந்தால் அதுவே என்னளவில் பாலியல் ஒழுக்கம்.
******
நான் உங்களின் பதிவில் ஏற்கனவே சொன்னது போல், இந்தியாவில் ஒருவன் எல்லாவிதமான கேடுகளையும் செய்துவிட்டு குடிக்காமல்,சிகரெட் பிடிக்காமல் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் அவன் நல்லவன்.இவர்கள் செய்ய்யும் மற்ற அநியாயங்கள் எடுபடாது. உதாரணம்: வரி ஏய்ப்பு/civis sense பற்றிய சொரணையின்மை/சொந்த வீட்டில் மாநகர விதிமுறைகளை மீறி கட்டடம் எழுப்புதல்....
இந்திய மக்கள் புனிதமாகப் பார்ப்பது பாலியல் ஒழுங்கு மட்டுமே. அதில் உண்டாகும் அதிர்வே அதிகமானது என்பதால் பெரும்பாலும் அதுவே எழுப்பப்படுகிறது.
ஒருவன் / ஒருத்தி அபீஸில் இலஞ்சம் வாங்கினாலோ அல்லது பொறம்போக்கு நிலத்தை அபகரித்தலோ அவர்களுக்கு சமுதாயத்தில் எந்த எதிர்வினையும் வரப்போவது இல்லை.
அப்பா இலஞ்சம் வாங்குகிறார் என்பதானால் எந்த மகனும் அவரை வெறுப்பதில்லை.அவருக்கு பிள்ளையாக இருப்பதில் வெட்கப்படுவதும் இல்லை. அதே அவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் செய்தி வந்தால் ..வீட்டை விட்டு வெளியில் போகவே கூசுவதாக... பேட்டி கொடுக்கிறார்கள்.
ஊரை அடித்து உலையில் போட்டு சம்பாதிக்கும் எந்த அரசியல்வாதி அல்லது அதிகாரிகள் அவர்கலின் செயல்களுக்கு வெட்கப் பட்டது உண்டா? அவர்களுக்கும்தான் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
தனது தந்தை இலஞ்சம் வாங்கும் அரசியல்வாதி என்பதற்காக எந்த மகன்/மகளாவது வெட்கப்பட்டது உண்டா?
பாலியல் அதிர்வை உண்டக்கினால் மட்டுமே சிறிது நிமிர்ந்து பார்க்கிறார்கள்.பகத்சிங்கை காப்பற்ற காந்தி ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னால் காந்தியின் செல்வாக்கு குறையப்போவது இல்லை. அதே சமயம் அவரின் மீது பாலியில் குற்றச்சாட்டு வைத்தால் நாம் தேசத்துரோகி ஆகிவிடுவோம்.
அதனாலேயே இந்தியாவில் பாலியல் ஒழுக்கங்கள் மற்ற சாதனைகளைக் கேள்விக் குறியாக்கும் விவாதப் பொருளாக அமைந்து விடுகிறது.
பாலியல் குற்றங்களில் விவாதிக்கப்பட்ட கிளிடணுக்கு அவரின் மனைவியும்,மகள்களும் அந்த சமயத்தில் ஆதரவாகவே இருந்தனர்.அவருடன் சேர்ந்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கவும் வெட்கப்படவில்லை. ஏன் ?
இங்கே அப்படி நடக்காது.
***
நான் இங்கே காந்தியின் அரசியல் சாதனைகளை விவாதிக்க அல்லது கேள்வி கேட்க வரவில்லை. ஏன் ஏன் என்று நீங்கள் 5 ஏன்-கள் போட்டபோது, காந்தி நல்லவர் அல்லது புனிதர் என்பதால் எல்லாம் நடந்தது என்று யாரும் எண்ணிவிடக்கூடாது, அந்தக் காலத்திலும் பொய் வழக்குகள் போன்றவை காந்தியாலேயே அரங்கேற்றப்படுள்ளது என்பதைத் தெரிவிக்கவே .
மேலும் காந்தி பிரமச்சார்யம் என்பதை "விந்து வெளிப்படாமை" என்ற அளவிலேயே எண்ணி அதற்காக பல பெண்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கவே.
மனிதனின் காமம் உணர்வு சம்பந்தப்பட்டது. மற்ற விலங்குகள் போல் உடல் மட்டும் சம்ந்தப்பட்டது இல்லை.தனது சோதனைகளுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் இருப்பது ஏதோ மருத்துவ சோதனை போல்தான் உள்ளது.
புகழின் உச்சியில் இருக்கும்போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.காந்தி இதையும் செய்தார். தற்போது இருக்கும் வாஜ்பேயி,கலாம் போன்ற பிரமச்சாரிகள் இதே சோதனைகளைச் செய்தால் என்ன செய்வீர்கள்? பிரமச்சார்யம் என்ற ஒன்றுக்கு தவறான அர்த்தம் கற்பித்துள்ளார் காந்தி.
காந்தி பற்றிய உங்களின் கேள்விகளில் இதனையும் கேட்டு உங்களின் கருத்தை அறியலால் என்றே இது இடப்பட்டது. நிச்சயம் தெரிந்து கொள்ளும் ஆவல் தான் தவிர "அதிர்வை" உண்டாக்க மட்டும் கேட்டதல்ல.
பி.கு:
மேற்சொன்னவை அனைத்தும் மார்க்ஸ் ன் கட்டுரையை ஆதாரமாக வைத்து எழுப்பப்பட்ட கேள்விகள்
// கம்ப ராமாயணத்தை விமரிசிக்க வேண்டும் என்றால் கம்ப ரசம் எழுதினார்கள். பெரியாரை விமரிசிக்க அவரது முதிய வயது திருமணம் கிடைத்து விடுகிறது.//
:-)))
evilbible -என்றுகூடத்தான் உள்ளது.( www.evilbible.com - A web-site which preaches Atheism by exposing the many evil crimes in the Bible committed by God and his followers.)
கடவுள் பற்றிய நம்பிக்கை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அதற்கு ஒரு எதிர்வினையும் இருக்கும். இது நம் நாடு மட்டும் விலக்கல்ல.கம்பராமயணத்தில் 1000 பொண்டாட்டி என்று சொன்னால் அதை விமர்சிப்பார்கள். அதுவே பூமி தட்டையானது என்று சொல்லியிருந்தால் அதை விமர்சித்து இருப்பார்கள். எது விலை போகுமோ அதுவே முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கப்படும். :-))
***
பெரியார் செய்தது தவறே அல்ல.பெரியாரின் முதிய வயது திருமணத்தை கேள்விகேட்ட அதே கட்சியில் இருந்து கொண்டேதான் ஜெமினி கணேசனின் தள்ளாத வயது திருமணத்தை அங்கீகரித்தார் கலைஞர் கருணாநிதி.
**
மனைவி இருக்கும் போதே மற்ற ஒரு திருமணம் செய்வதும்,அல்லது திருமணம் செய்யாமல் மற்றொரு பெண்/ஆண் துணை வைத்துக் கொள்வதும்தான் பாலியல் ஒழுக்கம் சம்பந்தமான பிரச்சனைகள்.
// 2. வயது வந்த ஆணும் பெண்ணும் முழுப் புரிதலோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவில் தலையிட யார் யாருக்கு உரிமை உள்ளது? //
யாருக்கும் உரிமை இல்லை.
//பகத்சிங்கை காப்பற்ற காந்தி ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னால் காந்தியின் செல்வாக்கு குறையப்போவது இல்லை. அதே சமயம் அவரின் மீது பாலியில் குற்றச்சாட்டு வைத்தால் நாம் தேசத்துரோகி ஆகிவிடுவோம்.
//
இந்த கேள்வியை நானும் கேட்க நினைத்தேன். ஆனால் அதை முழுமையாக படித்ததில்லை என்பதால் கேட்கவில்லை.
யாரையும் அப்பழுக்கற்ற புனிதர் என்று சொல்ல முடியுமா என்ன? இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
நான் முதலில் படித்து, வியந்து, ஆதர்ச குருவாக எண்ணிய மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர். பிற்பாடு அவர் ஓரிண சேர்க்கை பிரியமுள்ளவர் என்று ஒரு புத்தகம் குறிப்பிடுவதாக அதை தடை செய்தார்கள். என்னில் அந்த செய்தி எந்தவித தவறான தாக்கமும் ஏற்படுத்தவில்லை. மாறாக இன்னும் சில சன்னல்களை திறந்து மேலும் பல புரிதல்களை ஏற்படுத்தியது.
மனிதத் தன்மையுடன் இருப்பதுதான் புனிதம் என்றால், மிருகங்களை நாம் இழிவு படுத்துவது போல்தான். சுயநலமாக இருப்பதும் இயற்கையே.
அவரவர் நியாயம் அவரவர்கு. இதில் புனிதம், அதர்மம் என்பதெல்லாம் very very subjective.
வெங்கட்,
பல இடங்களில் உங்களின் கருத்துக்களுடன் எனது கருத்துக்களும் ஒத்துப்போவதைப் பார்த்து இருக்கிறேன்.உங்களின் விமர்சனங்களுக்கு நன்றி.
//மனிதத் தன்மையுடன் இருப்பதுதான் புனிதம் என்றால், மிருகங்களை நாம் இழிவு படுத்துவது போல்தான். சுயநலமாக இருப்பதும் இயற்கையே.//
இதை நான் ஒத்துக் கொள்கிறேன்.
சுயநலம் குறித்து...
கூடி வாழும் மனித அமைப்பில் சுயநலம் மட்டும் ஓங்கினால் அந்த அமைப்பு நன்றாகச் செயல்படாது.
சுயநலமாக இருப்பது எவ்வளவு இயற்கையோ அது போல் இரக்கப்படுவது,உதவுவது ...போன்ற குணங்களும்.
கடலில் தத்தளித்தவ்ர்களை கரை சேர்த்த டால்பின்களும் உண்டு , கரையில் இருப்பவரை இழுத்துப்போன முதலைகளும் உண்டு.
விலங்குகள் உணவுக்கே அன்றி பெரும்பாலும் இயற்கையை அழிப்பதோ கொலை,கொள்ளைகளில் ஈடுபடுவதோ கிடையாது.
<< பெண் இணையை அடைவதற்கு அங்கும் பல சண்டைகள் ,கொலைகள் உண்டு இருந்தாலும் மனிதன் அளவுக்கு அல்ல :-)) >>
வேகமாகப் போவது சுயநலம்(விருப்பம்) என்றால் வேகக்கட்டுப்பாட்டுக்குள் செல்வது பொது நலம். கூடி வாழும் அமைப்பில் கூட்டொழுக்க விதிகள் மதிக்கப்பட வேண்டும்.
சுயநலமாக இருப்பது தவறே இல்லை அது பொது நலத்தை பாதிக்காத வரையில்.
//அவரவர் நியாயம் அவரவர்கு. இதில் புனிதம், அதர்மம் என்பதெல்லாம் very very subjective.//
உண்மை.
நான் பல இடங்களில் சொன்னது. பனிப்பிரதேசத்தில் பச்சை மாமிசம் சாப்பிட்டே வாழும் ஒருவனுக்கு காய்கறி சாப்பிடுவது மட்டுமே ஆச்சாரம் என்று புலால் உண்ணாமையை போதித்தால் அவன் என்ன செய்வான்?
பாலை நில வாழ்க்கை சார்ந்த அளவுகோல்கள் பனி நிலத்துக்கு உதவாது.
//குருவாக எண்ணிய மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் ....என்னில் அந்த செய்தி எந்தவித தவறான தாக்கமும் ஏற்படுத்தவில்லை. மாறாக இன்னும் சில சன்னல்களை திறந்து மேலும் பல புரிதல்களை ஏற்படுத்தியது.//
கருத்துக்களை மட்டுமே காதலிப்பவர்களுக்கு பிம்பங்கள் உடையும் போது அதிர்வு ஏற்படாது.பிம்பங்களின் இரசிகர்களாய் மாறி கருத்துக்களை கடாசிவிட்டவர்கள், தான் வணங்கிய பிம்பங்கள் உடையும்போது ஏற்றுக் கொள்ள மாட்டர்கள்.
சிறுவயதில் காந்தி போன்ற புனித பிம்பங்கள் என்னுள்ளும் கட்டுவிக்கப்பட்டது அனைவரையும் போல். இப்போது பிம்பங்களைத் தாண்டி சில புரிதல்கள் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
*******
சிவா ,
பதிவின் விசயம்/விவாதம் கடத்தப்பட்டுவிடது என்று நினைத்தால் மன்னிக்க :-(((
ஒரு நல்ல தேடலின் பொருட்டு துவக்கப்பட்ட ஒரு அருமையான பதிவு. இப்பதிவில் எழுந்த வாதங்களில் ஒரு சில பதிவிற்கு சம்பந்த மில்லாவிடினும், பல நல்ல பயனுள்ள தகவல்கள் மற்றும் சிறந்த பகிர்தலைக் காண முடிந்தது. ஆனால் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலேயே இருக்கிறது.
இப்பதிவை இன்னும் நான் திசை திருப்பிடக் கூடாதே என்று நான் ஒரு தனிப் பதிவிட்டிருக்கிறேன்.
http://nandhakumaran.blogspot.com/2007/06/blog-post_26.html
கடத்தப்பட்டதோ, இல்லையோ, விவாதம் நன்றாக இருக்கிறது.. :) தொடருங்க..
காந்தியைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு அவரை புனிதபிம்பமாகவும் பார்த்ததில்லை, விமர்சிக்கும் அளவுக்கு அதிகம் படித்ததுமில்லை.. அதனால் வேடிக்கை பார்ப்பவர் கூட்டத்தில் துண்டு போட்டு அமர்ந்துவிட்டேன் ;)
நல்ல தரமான விவாதத்துக்கு நன்றி வெங்கட், கல்வெட்டு, நந்தா. புதிதாகக் கற்றுக் கொள்ள முடிந்தது.
நந்தாவின் இடுகை வழக்கம்போல விபரமான நேர்ததியான தொகுப்பு.
அன்புடன்,
மா சிவகுமார்
பொன்ஸ்,
நான் என் பதிலை எழுதி முடித்து விட்டுப் பார்த்தால் உங்கள் பின்னூட்டம்.
//துண்டு போட்டு அமர்ந்துவிட்டேன் ;)//
அப்பப்போ கைத்தட்டுங்க. :-)
அன்புடன்,
மா சிவகுமார்
//பல இடங்களில் உங்களின் கருத்துக்களுடன் எனது கருத்துக்களும் ஒத்துப்போவதைப் பார்த்து இருக்கிறேன்.//
கல்வெட்டு அவர்களே,
உங்களின் பல விவாதங்களை படித்ததில் நான் என்னை வளர்த்துக் கொண்டதுதான் உண்மை :-)).
உங்களின் எழுத்து என்னுள் தோன்றும் பல எண்ணங்களை பூர்த்தி (complementing my thoughts) செய்தது போல் இருந்ததும் உண்மை.
//இப்போது பிம்பங்களைத் தாண்டி சில புரிதல்கள் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
//
கட்டுடைத்தல் தொடர்ந்து கொண்டுதானே இருக்கும் :-)). ஒன்று கட்டுடையும்போது இன்னொன்று கட்டப்படுகிறது அல்லவா?
ஒன்று மட்டும் உறுதி. காந்தி போன்றவரின் வாழ்க்கையையோ, கருத்தையோ அளக்க முற்படும்போது நமது அளவுகோல்களை நாம் சரிபார்த்து கொள்கிறோம்.
ஹே ராம் என்றொரு திரைப்படம். அதில் கடைசி காட்சியில் காந்தியின் படம் மிகப் பெரிதாக தீட்டப் பட்டிருக்கும் சுவரில், ஒவ்வொரு ஜன்னலாக திறப்பார் சாகேத் ராமின் பேரன். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்ட பின்னர் அந்த சுவரில் படம் இருக்காது. முழு வெளிச்சம் மட்டுமே.
நல்லதொரு விவாதக் களம் அமைத்துக் கொடுத்த சிவக்குமாருக்கு மிக்க நன்றி.
//காந்தியைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு அவரை புனிதபிம்பமாகவும் பார்த்ததில்லை, விமர்சிக்கும் அளவுக்கு அதிகம் படித்ததுமில்லை.. //
பொன்ஸ்,
இப்படி சொல்லிட்டு அங்கிட்டு போய் உக்காந்தா? நானெல்லாம் படிச்சிட்டா எழுதறேன்?
இந்தா மைக்க புடிங்க...புடிங்க...
கருத்துரையிடுக