புதன், பிப்ரவரி 06, 2008

பொதுவுடமை உருவாகும் பாதை

'இந்தியாவில் இயங்கும் கம்யூனிச இயக்கங்கள் செய்யும் பெரிய தவறு வர்க்கங்களுக்கிடையேயான முரண்பாட்டை விட மிதமிஞ்சி நிற்கும் சாதிகளுக்கிடையேயான முரண்பாட்டை கையில் எடுக்காமல் வர்க்கப் போராட்டத்தையே பேசுவதுதான்' என்று நண்பர் செல்லாவுடன் பேசும் போது ஒரு முறை சொன்னார்.

சீனப் புரட்சியாளர் சேர்மன் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதே கருத்தைத்தான் சொல்கிறார்.

'உலகமே முரண்பாடுகளில் குவியல்தான். ஒரு சமூகத்தில் ஒரே நேரத்தில் பல முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றில் ஏதாவது ஒன்று மற்ற எல்லாவற்றையும் விட ஓங்கி நிற்கும். அதைத் தீர்த்த பிறகுதான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்' என்கிறார்.

ஜப்பானிய ஆதிக்கவாதிகளுக்கும், சீன மக்களுக்குமான முரண்பாடுகள் முனைப்பானதும், அது வரை தாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த குவமின்தாங் என்ற தேசியக் கட்சியுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, குவமின்தாங்-கம்யூனிச இயக்கத்துக்கிடையேயான முரண்பாடுகளை தற்காலிகமாக மறந்து ஜப்பானியர்களை சேர்ந்து எதிர்க்கும் பணியில் இறங்கச் சொல்கிறார்.

'வெளிப்புறக் காரணிகளே போராட்டத்தைத் தீர்மானிக்கின்றன' என்று தோழர்கள் வாதாடுவதற்கு நேர்மாறாக, 'அப்படி வெளிப்புறக் காரணிகளை காரணமாகக் காட்டுவது மெடாபிசிக்ஸ் எனப்படும் கருத்து முதல் வாதம், ஒரு சமூகத்தின் மாற்றங்கள், போராட்டங்கள் உள்ளே ஏற்படும் மாறுதல்களினாலேயே வர வேண்டும்' என்று விளக்குகிறார் மாவோ.

எனக்குப் புரிந்த வரை கார்ல் மார்க்ஸ் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் பொருளாதார இழுபறியைக் குறித்து ஆராய்ந்திருக்கிறார். 'தனித்தனியாக உறவாடும் போது முதலாளியின் கைதான் எப்போதும் ஓங்கியிருக்கும். தொழிலாளர்கள் ஒன்று பட்டு முதலாளிகளை எதிர் கொள்வதால் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆதாயம் அதிகமாவது நிச்சயம் நடக்கும்'

கார்ல் மார்க்சு சொன்ன பரிணாம வளர்ச்சியைப் பின்பற்றாமல், விவாசாயப் பொருளாதார நிலையிலிருந்து முதலாளித்துவ நிலையைத் தாண்டிக் குதித்து நேரடியாக பொதுவுடமை சமூகத்தை அடைந்து விடும் சூழல் சீனாவில் இருப்பதாக கருதுகிறார் மாவோ. அடுத்து எழுபது ஆண்டுகளில் நடந்து நிகழ்ச்சிகளைக் கொண்டு பார்க்கையில் அது தவறு என்று புரிகிறது. செயற்கையாக ஆயுதம் கொண்டு 'தாம் பொதுவுடமை சமூகம் என்று கருதும் அமைப்பை' ஏற்படுத்த சீனக் கம்யூனிஸ்டு கட்சி முயன்றாலும், 1980களிலிருந்து அந்தத் தளையிலிருந்து விடுபட்டு இயற்கையான பொருளாதார பரிணாம மாற்றத்தில்தான் சீன சமூகமும் சேர்ந்து கொண்டுள்ளது.

அது முற்றி பொதுவுடமை மலரும். அதற்கு முன்பு அமெரிக்காவில் பொதுவுடமை சமூகம் முதலில் உருவாகும்.

மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 1
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 2
(மார்க்சு கம்யூனிசம் பேசவில்லை, முதலாளித்துவத்தைத்தான் ஆராய்ந்தார்!)
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 3
(சந்தைப் பொருளாதார முறையின் வீணாக்கல்கள். இப்போதைய நிலையைத் தாண்ட வேண்டும், முடியும்)
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 4
(சந்தைப் பொருளாதாரம்் பல இடங்களில் சொதப்புகிறது)

45 கருத்துகள்:

இரா.சுகுமாரன் சொன்னது…

//'இந்தியாவில் இயங்கும் கம்யூனிச இயக்கங்கள் செய்யும் பெரிய தவறு வர்க்கங்களுக்கிடையேயான முரண்பாட்டை விட மிதமிஞ்சி நிற்கும் சாதிகளுக்கிடையேயான முரண்பாட்டை கையில் எடுக்காமல் வர்க்கப் போராட்டத்தையே பேசுவதுதான்' என்று நண்பர் செல்லாவுடன் பேசும் போது ஒரு முறை சொன்னார்.
//

வணக்கம், நீங்கள் சொல்வது உண்மை தான் பொதுவாக பொதுவுடமை இயக்கம் என்றால் C.P.I- M, C.P.I என்ற இரு இயக்கங்களை மட்டுமே குறிப்பிட்டு எழுதுகிறார்கள். ஆனால்,இந்த இரு கட்சிகள் இல்லாமல் வேறு சில பொதுவுடமை இயக்கங்கள் சாதி ஒழிப்பை ஒரு முக்கிய திட்டமாக முன்வைத்து போராடுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வால்பையன் சொன்னது…

//'உலகமே முரண்பாடுகளில் குவியல்தான்.//

உண்மை தான், ஆனால் இந்த முரண்பாடுகள் வளர்ச்சியில் இவர்கள் காட்டும் முனைப்பில் இல்லையே! மேலே ஏற முயற்சிக்கும் நண்டின் எந்த காலை பிடித்து இழுப்பது, அதையும் யார் இழுப்பது என்ற போட்டி முரண்பாடல்லவா நடக்கிறது,

வேளாண்மையில் புரட்சி செய்யாத எந்த நாடும் அண்டை நாட்டின் கையை நம்பி தான் இருக்க வேண்டும்

வால்பையன்

பெயரில்லா சொன்னது…

You are correct.
16 out of 33 cabinet ministers in West Bengal are Brahmins, who account for mere 3.5% population. They, strangely, campaign for castesless and classless society. 69% percent ministers of that state belong to three castes---Brahmin, Kayasth and Baidya---who account for 6.5% population

வவ்வால் சொன்னது…

மா.சி.
இப்ப்பதிவு கம்யூனிசமும் அதன் தாக்கமும் இந்திய சூழலில் என்பதை புரிந்துக்கொள்ளாமை என்றே நினைக்கிறேன்.

கம்யூனிசம் , என்பது இந்தியாவில் தோன்றாத ஒன்று, ரஷ்யாவில் சாதியம் என்பதை விட வர்க்க ,இன ரீதியான வேறுபாடுகளே அதிகம், அதை களையத்தான் கம்யூனிசம் தோன்றியது.

இந்தியாவில் வர்க்கமும், சாதியமும் ஒருங்கே இணைந்து காணப்படுவது,பின்னர் இனச்சூழல்.ஆனால் ரஷ்யாவிலோ ,சீனாவிலோ அப்படி அல்ல, எனவே ரஷ்ய நிலையை விட இங்கே சிக்கல் அதிகம், ஆனால் கம்யூனிசம் ஆரம்பத்தில் இருந்து ரஷ்ய மாடலுக்கு வடிமைக்கப்பட்டது.

இங்கே வர்க்கத்தை எதிர்த்தால் அதில் 99.9% ஆதிக்க சாதியத்தையும் எதிர்த்து விடலாம் என்பதை மறந்து விடக்கூடாது!

உதாரணமாக வெள்ளைக்காரர் ஒருவர் இந்துமதக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வெளிநாட்டில் ஒரு ஆஸ்ரமம் அமைத்தால் அது வைணவ ஆஸ்ரமாக இருக்குமா, இல்லை சைவ ஆஸ்ரமமாக இருக்குமா, அவர் பொதுவாக ஒரு இந்து என்ற சொல்லை வைத்து தான் ஆரம்பிப்பார்.அதேக்கதை தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் நிலையும்.

அதே போல இந்தியாவில் ரஷ்ய கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அமைத்தவர்களும் அவர்களின் ஆதிமூலத்தினைக்கொண்டே வர்க்க போராளிகளாக அமைத்துக்கொண்டார்கள்.

இந்தியாவில் கம்யூனிசம் என்பது இரவல் கொள்கை அடிப்படையில் என்பதால் அடிப்படை சிந்தாந்தத்தில் வர்க்க போராட்டம் மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்திய தன்மைக்கு ஏற்ப ஆங்காங்கு உள்ள சாதிய கொடுமைகளையும் அக்காலத்தில் எதிர்த்தது கம்யூனிஸ்ட்களே.

முன்பெல்லாம் பொதுவாக அடிப்படை அளவில் சாதிய வேறு பாடுகள் , அதன் அடக்கு முறைகள் குறித்தான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் முன்னில் நிற்ப்பார்கள், இதெல்லாம் , தலித் அரசியல் கட்சிகள் வரும் முன்னர், இப்போது அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

தற்போது ஒடுக்கப்பட்ட சாதியினருக்காக பல தனிப்பட்ட கட்சிகள் உருவாகிவிட்ட நிலையில், கொள்கை அளவில் அப்படி எதுவும் முடிவு எடுக்காத கம்யூனிஸ்ட்களின் பங்கு எதுவும் இல்லாது இருக்கிறது.

இப்போது பல தலித் அரசியல் கட்சிகள் தோன்றி இருப்பதற்கு விதை போட்டதே கம்யூனிஸ்ட் இயங்கங்களின் செயல்ப்பாடுகள் என்றால் மிகை அல்ல!

அதாவது எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அடக்கு முறைக்கு அஞ்சக்கூடாது என்பது போன்றவை அங்கிருந்தே இங்கு வந்தது.

//அதற்கு முன்பு அமெரிக்காவில் பொதுவுடமை சமூகம் முதலில் உருவாகும்.//

நல்ல நகைச்சுவை! :-))

K.R.அதியமான் சொன்னது…

Chella has no depth or real understanding of market economics, etc. it is ludicurous to say that
market will die..

can it ever ?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சுகுமாரன்,

//சில பொதுவுடமை இயக்கங்கள் சாதி ஒழிப்பை ஒரு முக்கிய திட்டமாக முன்வைத்து போராடுகின்றன//

தகவலுக்கு நன்றி. அப்படிப் போராடுகின்றன என்றால் அவர்களுக்கு சாதி ஒழிப்பு இயக்கம் என்றுதானே பேர் இருக்கும்! :-)

வால்பையன்,

உங்கள் கருத்து புரியவில்லை :-(

அனானி,
குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்டதாலே சாதி ஒழிப்பைக் குறித்து ஒருவர் பேசக் கூடாது என்பது வருணாசிரமவாதிகளின் வாதம் போல அல்லவா இருக்கிறது.

பிறப்பினால் எவரையும் பாகுபடுத்தி ஒதுக்கி வைக்கக் கூடாது என்ற கொள்கை எல்லோருக்கும் பொருந்த வேண்டுமல்லவா! ஒருவர் நடந்து கொள்வதைப் பொறுத்து அவரை எதிர்கொள்ள வேண்டும். அவரது பிறப்பைப் பொறுத்து அன்று.

//இப்போது பல தலித் அரசியல் கட்சிகள் தோன்றி இருப்பதற்கு விதை போட்டதே கம்யூனிஸ்ட் இயங்கங்களின் செயல்ப்பாடுகள் என்றால் மிகை அல்ல!//

உண்மைதான் வவ்வால். வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி வருணாசிரம ஒழிப்பு என்பதற்கும் முக்கிய நோக்கமே வருணாசிரம ஒழிப்பு என்பதற்கும் அடிப்படையில் ேறுபாடுகள் உண்டு. நடைமுறையில் செயல்பாடுகள் ஒரே போல இருந்தாலும் விளைவுகள் அடிப்படை நோக்கத்தைப் பொருத்துதான் இருக்கும்.

முன்னதில், 'தொழிலாளராக இருக்கும் ஒரு வருணாசிரமவாதிக்கு இயக்கம் ஆதரவு அளிக்கும். முதலாளியாகி விட்ட சமத்துவ வாதியை எதிர்ப்போம்' என்ற நிலைப்பாடு ஏற்படாதா!

//நல்ல நகைச்சுவை! :-))//

சந்தைப் பொருளாதாரத்தின் முரண்பாடுகள் முற்றிப் போய்த்தான் சமத்துவ சமூகம் உருவாகும் என்ற மார்க்சின் கொள்கைப்படி சந்தைப் பொருளாதார பரிணாம வளர்ச்சியை முடுக்கி விட்டுள்ள சமூகங்கள்தான் முதலில் சமத்துவம் ஏற்படும் என்பதில் என்ன நகைச்சுவை!

//it is ludicrous to say that
market will die..//

It is ludicrous to you, because you do not grasp the concept of evolution of market economy. How do you pass judgment on others' understanding!

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்டதாலே சாதி ஒழிப்பைக் குறித்து ஒருவர் பேசக் கூடாது என்பது வருணாசிரமவாதிகளின் வாதம் போல அல்லவா இருக்கிறது.
//

What i mean to say is that they are not ready to distribute the power to oppressed classes.

வவ்வால் சொன்னது…

//சந்தைப் பொருளாதாரத்தின் முரண்பாடுகள் முற்றிப் போய்த்தான் சமத்துவ சமூகம் உருவாகும் என்ற மார்க்சின் கொள்கைப்படி சந்தைப் பொருளாதார பரிணாம வளர்ச்சியை முடுக்கி விட்டுள்ள சமூகங்கள்தான் முதலில் சமத்துவம் ஏற்படும் என்பதில் என்ன நகைச்சுவை!//

மா.சி,

புற விசை ஒன்று செயல்படாத வரையில் நேர்க்கோட்டு இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் அதன் இயக்கத்திலேயே இருக்கும் , இப்படி நியுட்டன் விதி அமெரிக்காவில் பொதுவுடைமை சமூகம் மலரும் என்பதற்கும் பொருந்தும், எப்படி எனில், பொதுவுடமை சமூகம் என்பது தானாக இயல்பாக நடப்பதல்ல,

ஒரு பூ காய் ஆகி கனி ஆவது போல சந்தைப்பொருளாதார முரண்ப்பாடுகள் முற்றியதும் பொதுவுடமை ஆகும் என்பது இயற்கை நியதி அல்லவே.

அதை யாரோ ஒருவர் அமெரிக்காவில் போய் செய்ய வேண்டும். ஆனால் அமெரிக்கா என்பது ஒரு "controlled environment for market economy" எனவே அங்கே புதிதாக தானாக பொதுவுடமை வராது.

யார் போய் செய்வது, அப்படி செய்ய அமெரிக்க அரசோ, அங்கிருக்கும் சந்தை பொருளாதாரமோ இடம் தராதே!

இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவிற்கு bpo பணி செய்யும் இந்திய நிறுவனங்களில் கூட தொழிலாளர் யூனியன் வைக்க முடியாது. இந்திய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அப்படி ஒரு தொழிற்சங்கம் இருக்கா?

அப்புறம் எங்கே இருந்து அமெரிக்காவில் போய் பொதுவுடமைக்கு விதை போடுறது. இதெல்லாம் தானாக நடக்கிற காரியம் அல்ல!

எனவே நீங்கள் சொல்வது கற்பனையின் உச்சக்கட்டம் , நகைச்சுவை தானே!

மா சிவகுமார் சொன்னது…

//What i mean to say is that they are not ready to distribute the power to oppressed classes.//

makes sense anony!

வவ்வால்,

//புற விசை ஒன்று செயல்படாத வரையில் நேர்க்கோட்டு இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் அதன் இயக்கத்திலேயே இருக்கும் , இப்படி நியுட்டன் விதி அமெரிக்காவில் பொதுவுடைமை சமூகம் மலரும் என்பதற்கும் பொருந்தும், எப்படி எனில், பொதுவுடமை சமூகம் என்பது தானாக இயல்பாக நடப்பதல்ல,//

ஒரு சமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் தனது விசையை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார். இதைத் தவிர வெளிப் புறக் காரணிகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதனால் விசைகள் இல்லை என்று சொல்ல முடியாது.

//ஒரு பூ காய் ஆகி கனி ஆவது போல சந்தைப்பொருளாதார முரண்ப்பாடுகள் முற்றியதும் பொதுவுடமை ஆகும் என்பது இயற்கை நியதி அல்லவே.//
அதுதான் இயற்கை நியதி என்பது மார்க்சிசம். தானாகப் பழுப்பதைத் தல்லிப் பழுக்க வைத்து விடலாம் என்று முயல்பவர்கள் கட்சிகள்.

//யார் போய் செய்வது, அப்படி செய்ய அமெரிக்க அரசோ, அங்கிருக்கும் சந்தை பொருளாதாரமோ இடம் தராதே!//
யாரும் போக வேண்டாம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றுவதற்கு யாரும் போராடவில்லை. பரிணாமம் எப்படி நடந்தது? அப்படி பரிணாம வளர்ச்சியில் பொதுவுடமை மலரும் என்பது மார்க்சிசம்.

//ன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவிற்கு bpo பணி செய்யும் இந்திய நிறுவனங்களில் கூட தொழிலாளர் யூனியன் வைக்க முடியாது. இந்திய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அப்படி ஒரு தொழிற்சங்கம் இருக்கா?//

தொழிற்சங்கத்துக்கும் பொதுவுடமைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அன்புடன்,
மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மா.சி,

//பரிணாமம் எப்படி நடந்தது? அப்படி பரிணாம வளர்ச்சியில் பொதுவுடமை மலரும் என்பது மார்க்சிசம்.//

நீங்கள் ரஷ்யாவில் பொதுவுடைமை எப்படி மலர்ந்தது என்பதை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்! அல்லது சீனாவில் என்ன நடந்தது என்பதை மறந்து விட்டீர்கள் , இரண்டு இடத்திலும் எதுவும் தானாகவே நடைப்பெறவில்லை.

பொதுவுடைமை என்பது யாராவது தொடர்ந்து செயல்ப்படுத்த வேண்டும் அதைக்கட்டிக்காப்பாற்ற வேண்டும் , அதை சரியாக செய்யவில்லை எனில் தானே அழிந்து விடும், உ.ம் .ரஷ்யாவில் கம்யுனீசம்.

அதே சமயம் சந்தையியல் என்பது தன்னை தானே வளர்த்துக்கொண்டு முன்னெடுத்து செல்லும் சக்தி. ஏன் எனில் ஊருக்காக செய்வதை விட தனக்காக தன் குடும்பத்திற்காக என்று வரும் போது மனிதன் அதிகம் உழைப்பான். அப்படி அவன் மென்மேலும் உழைத்து தன்னை முன்னேற்றிக்கொள்வதை சந்தையை தானாகவே வளர்க்கும்.

இயல்பானது சந்தையியல் வாழ்க்கை பொருளாதாரம் தான்.

//தொழிற்சங்கத்துக்கும் பொதுவுடமைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.//

உலகத்தொழிளாலர்களே ஒன்று கூடுங்கள் என்று ஏங்கல்ஸ் அழைத்தது ஏனோ? வெறுமனே உலக மக்களே ஒன்று கூடுங்கள் என்று சொல்லி இருக்கலாமே.

தொழிற்சங்கம் இல்லாமலே கூட அமெரிக்காவில் பொதுவுடைமை கட்சியை நிலை நிறுத்தலாம் ஆனால் அது முழுமை பெறாது.

உற்பத்தியின் லாபத்தில் ஒரு பங்கினை தொழிலாளிகள் பெருவதும் ஒரு பொதுவுடைமை சித்தாந்தம் என்று நினைக்கிறேன், அதை அடைய அப்படி ஒரு சங்கம் தேவை அல்லவா?

பொதுவுடைமை என்பது உழைக்கும் வர்க்கம் அவர்கள் சார்ந்து தான் செயல் பட முடியும், அதற்கு தொழிற்சங்கங்கள் ஒரு காரணி!

தொழிற்சங்கம் என்பதும் கட்சியின் ஒரு செயல் அங்கம் தானே.இன்றைக்கும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெம்பாக செயல்படுகிறதென்றால் அவர்றின் தொழிற்சங்க பலம் அத்தகையது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி , சேவை இரண்டும் சார்ந்த தொழில்களில் தான் தொழிளாலர்கள் அதிகம் , அவர்களை ஒன்றிணைக்காமல் அங்கே யாரிடம் போய் பொதுவுடமை தத்துவம் பேசுவீர்கள்,அவர்களை ஒருங்கிணைக்க ,அவர்கள் நலன்சார்ந்து குரல் கொடுக்க ஒரு தொழிற்சங்கம் தேவையல்லவா?

தொழிளாலர்கள் இல்லாமல் பொதுவுடமையை ஸ்தாபிக்க இயலாதே.

போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், பில்கேட்ஸ் எல்லாம் தானாகவே பொது உடைமைவாதிகளா மாறிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? :-))

நீங்கள் பேசுவதை வைத்துப்பார்த்தால் பொதுவுடைமைக்குறித்தான தவறான புரிதல்களோடு அதைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.

மா சிவகுமார் சொன்னது…

//நீங்கள் ரஷ்யாவில் பொதுவுடைமை எப்படி மலர்ந்தது என்பதை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்! அல்லது சீனாவில் என்ன நடந்தது என்பதை மறந்து விட்டீர்கள் ,//

நான் மறக்கவில்லை, மறுக்கிறேன் :-). ரஷ்யாவிலும் சீனாவிலும் மலர்ந்தது ஒரு சர்வாதிகார ஆட்சி. பொதுவுடமை சமூகம் அங்கு மலரவில்லை என்பது என் கருத்து.

இங்குதான் நாம் இருவரும் அடிப்படையில் வேறுபடுகிறோம். நீங்கள் பொதுவுடமை சமூகம் கம்யூனிச கட்சிகளின் புரட்சிப் பாதையில் சாத்தியமாகும் என்ற அடிப்படையில் பேசுகிறீர்கள். நான் பொதுவுடமை சமூகம், கார்ல் மார்க்ஸ் ஆராய்ந்து வெளிப்படுத்திய பரிணாம மாற்றம் மூலம் உருவாகும் என்ற அடிப்படையில் பேசுகிறேன்.

//அதே சமயம் சந்தையியல் என்பது தன்னை தானே வளர்த்துக்கொண்டு முன்னெடுத்து செல்லும் சக்தி. ஏன் எனில் ஊருக்காக செய்வதை விட தனக்காக தன் குடும்பத்திற்காக என்று வரும் போது மனிதன் அதிகம் உழைப்பான். அப்படி அவன் மென்மேலும் உழைத்து தன்னை முன்னேற்றிக்கொள்வதை சந்தையை தானாகவே வளர்க்கும்.//

அதன் முரண்பாடுகள் முற்றி, வெடிக்கும் போது பொதுவுடமை சமூகம் உருவாகும்.

//தொழிற்சங்கம் இல்லாமலே கூட அமெரிக்காவில் பொதுவுடைமை கட்சியை நிலை நிறுத்தலாம் ஆனால் அது முழுமை பெறாது.//

கட்சிக்கும் பொதுவுடமைக்கும் தொடர்பு இல்லை என்பது என் புரிதல்.

//போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், பில்கேட்ஸ் எல்லாம் தானாகவே பொது உடைமைவாதிகளா மாறிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?//

ஆம். தம்மை அறியாமலேயே, சந்தைப் பொருளாதாரத்தின் இழுபறிகள், முரண்பாடுகள் முற்ற முற்ற மார்கன் ஸ்டான்லியும், ஐபிஎம்மும் பொதுவுடமை சமுகத்தின் விளை நிலங்களாக இருக்க நேரிடலாம். அதற்கு உரமாக இந்த அமைப்புகளின் சிதைவுகள் செயல்படலாம்.

//பொதுவுடைமைக்குறித்தான தவறான புரிதல்களோடு அதைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.//
வெவ்வேறு ஆரம்பப் புள்ளிகளிலிருந்து நாம் இந்தக் கேள்வியை அணுகுவதுதான் காரணம் என்று தோன்றுகிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மாசி,

//நான் பொதுவுடமை சமூகம், கார்ல் மார்க்ஸ் ஆராய்ந்து வெளிப்படுத்திய பரிணாம மாற்றம் மூலம் உருவாகும் என்ற அடிப்படையில் பேசுகிறேன்.//

மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சிப்பெற்றதை பொதுவுடைமைக்கு ஒப்பாக சொல்கிறீர்கள். மனித பரிணாமம் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பொதுவுடைமை பரிணாமம் அப்படி இயற்கையா நடக்கூடியது அல்ல.

இயற்கையாக நடந்த பரிணாமத்தில் ஏன் எல்லா குரங்குகளும் மனிதர்களாக மாறிவிடவில்லை, இன்னமும் குரங்குகள் பெருமளவில் இருப்பதேன்?

அதிலும் ஏதோ ஒரு செயல் சரியாக நடைக்கவில்லை என்று கூறலாம் தானே.

இயற்கைக்கே அப்படி எனில் மனிதனால் முன்வைக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் எப்படி காலப்போக்கில் ஒரு மாற்றத்தை எத்தகைய புறத்தூண்டலும் இல்லாமல் நடைப்பெற முடியும்.

//ஆம். தம்மை அறியாமலேயே, சந்தைப் பொருளாதாரத்தின் இழுபறிகள், முரண்பாடுகள் முற்ற முற்ற மார்கன் ஸ்டான்லியும், ஐபிஎம்மும் பொதுவுடமை சமுகத்தின் விளை நிலங்களாக இருக்க நேரிடலாம். அதற்கு உரமாக இந்த அமைப்புகளின் சிதைவுகள் செயல்படலாம்.//

அப்படியே சிதைவுற்றலும், ஒரு பெரிய சந்தை ஏகாதிபத்தியம் போய் பல சிறிய சந்தைகள் உருவாக தான் வாய்ப்புள்ளதே தவிர ...அது நேரடியாக பொதுவுடைமைக்கு இட்டு செல்லும் என்பதற்கு என்ன உத்திரவாதம்.


ஏன் ரஷ்யாவில் கம்யூனிசம் (அது சர்வாதிகாரம் என்றாலும்) சிதைந்த பின்னர் ஒரு ஜனநாயக கம்யூனிசம் தலை தூக்கவில்லை.

பொதுவுடைமையாக இருந்தாலும் அதிலும் ஒரு உச்ச ஆதிக்க சக்தி அனைத்தையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே நிற்கும், அது பலவீனப்படும் போது தானாகவே கம்யூனிசம் என்பது நீர்த்து , சந்தையியலுக்கு திரும்பி விடும்.

மனிதனின் தனக்கான ஆசையே அவனை போராடி வாழ வைக்கிறது. அதுவே சந்தையியல், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் உருவாக்கம் எனவும் சொல்லலாம்.

தன் மகன்/மகள் ஆபத்தில் சிக்கினால் ஒரு தாய்/தகப்பன் அதிகம் முயற்சி எடுப்பார்கள், ஏன் தங்கள் உயிரை தந்தும் காக்க வருவார்கள், அதுவே பக்கத்து வீட்டுக்காரர் மகனுக்கு எனில் முடிந்த வரைக்குமே உதவப்பார்ப்பார்கள்.

இதுவே பொதுவுடைமை சிதைவுக்கும், முதலாளித்துவ சிதைவுக்கும் உள்ள வித்தியாசம்.

முதலாளித்துவம் சிதைந்தாலும் அது அடுத்த முதலாளி கையில் போய் நிக்குமே ஒழிய பொதுவுடைமையாக உருமாற்றம் பெறாது.

உதாரணமாக இப்போது ஜாகுவார் என்ற கார் தொழிற்சாலை நட்டத்தில் ஓடுகிறது , உடனே அது சிதைவுற்றது என்பதால் அங்கே பொதுவுடை ஏற்படவில்லை, டாடா போன்ற அடுத்த முதலாளி வாங்கப்பார்க்கிறார்.

இந்தியாவில் கூட ஒரு பொதுத்துறை நிறுவனம் நலிவடைந்து விட்டால் அதனை விற்க முயன்றால் ஒரு தனியார் முதலாளி தான் வாங்க முன் வர்ருகிறான், எந்த தொழிலாளியும் அதனை வாங்கி நடத்துவதில்லை. எனவே பெரிய உற்பத்தியாளரின் சிதைவு எப்படி பொதுவுடைக்கு மட்டுமே போகும் என்கிறீர்கள்.

புரட்சியற்ற முறையில் அப்படி மாறிய முன்னுதாரணங்கள் இருக்கா? அப்படி சிதைவில் இருந்து பரிணாம மாற்றம் பெற எத்தனை காலம் பிடிக்கும்?

கற்பனையாக இதில் இருந்து இது வரும் என சொல்லலாம், ஆனால் உண்மையில் வருமா?

சந்தையியல் ,முதலாலித்துவ செயல் பாடுகளில் வரையறுக்கப்பட்ட ஒரு மையம் இருக்கும்(nucleus), அதற்கென செலுத்தும் சக்தியாக சுய நலனும் இருக்கும். இவை மிக நன்றாக அவற்றை முன்னெடுத்து செல்லும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஆனால் பொதுவுடையில் இவை எல்லாம் இருப்பதில்லை, பொதுவாக சிந்தாந்தம் மட்டுமே செலுத்து விசையாக காகிதத்தில் விரிவாக பேசப்படும்! செயல் முறையில் சாதிக்க முடியாது.

உண்மைத்தமிழன் சொன்னது…

மா.சி. இந்தியாவில் கம்யூனிஸ இயக்கங்கள் இன்றளவும் இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக அனைத்து மாநிலங்களிலும் வளராமை அல்லது வளர முடியாமைக்குக் காரணம் அவர்களின் வர்க்கப் புரட்சி காதல் மட்டுமே..

எங்கெல்லாம் இனங்களுக்குள் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் வர்க்கம் உயிர்ப்பிப்பதில்லை.. இன விரோதங்களை கண்டு கொள்ளாமல் வர்க்கத்தை மட்டுமே தூக்கிப் பிடிப்பதால்தான் கம்யூனிஸம் பெருவாரியான வீடுகளின் அடுக்களைக்குள் புக முடியாமல் இருக்கிறது..

தொழிலாளர் வர்க்கம் மட்டுமே செங்கொடியைத் தூக்கினால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களைத் தவிர மற்ற மக்களைப் பற்றிய எண்ணவோட்டத்தைப் பற்றி அவர்கள் அதிகம் நினைப்பதில்லை.

ரஷ்யாவில் நாம் அனைவருமே தொழிலாளர்கள்.. நாம் அனைவருமே தோழர்கள். அதனால் ஒருவரே என்ற கோட்பாட்டை கம்யூனிஸத்தால் விதிவசப்படுத்த முயன்றார்கள். அந்த நாட்டிற்கு சரி.. ஆனால் நமக்கு..

ஊருக்கு ஒரு ஜாதி.. அந்த ஜாதிகளுக்குள் 40 பிரிவுகள் என்றிருக்கும் நம் சமூகத்திற்கு ஏற்றால் போல் கம்யூனிஸம் வளைந்து கொடுக்க முன் வரவில்லை.

தோழர் என்கின்ற வார்த்தையே இன்றைக்கு அந்நியப்பட்டு போய் நிற்பதாக எனக்குத் தெரிகிறது.

K.R.அதியமான் சொன்னது…

////It is ludicrous to you, because you do not grasp the concept of evolution of market economy. How do you pass judgment on others' understanding!///

ok. pls explain what will replace a market (for any product or service anywhere at anytime).
market has existed for thousands of years in various forms (incl barter system). even in former commuist nations, some form of informal markets existed in a small level. it was found impossibe to replace or eliminate.

ok. can you explain what will replace the market in future ?
virtual reality or magical realism or ... ? :))))))))))

பெயரில்லா சொன்னது…

//
கம்யூனிசம் , என்பது இந்தியாவில் தோன்றாத ஒன்று, ரஷ்யாவில் சாதியம் என்பதை விட வர்க்க ,இன ரீதியான வேறுபாடுகளே அதிகம், அதை களையத்தான் கம்யூனிசம் தோன்றியது.
//

வவ்வால், கம்யூனிசம் தோன்றியது இன்றய ஜெர்மனியில்.


ரஷ்யாவில் கம்யூனிசம் தோன்றவில்லை, தோற்றது என்பது தான் உண்மை.

பெயரில்லா சொன்னது…

மாநிலத்திர்க்கு மாநிலம் மாறுபடும்
கம்யூனிஸ்டுகளின் கொள்கை
முரண்பாடுகளை நீக்கிவிட்டு
வர்க்கப் போராட்டத்தை
பேசுவதுதான் முதல் தேவை.....!!

வவ்வால் சொன்னது…

யார்ப்பா இது நாய் வால், நரிவால்னு பேரு வச்சா மட்டும் போதுமா ....சொல்றதையும் பொருந்த சொல்லனும்,

//வவ்வால், கம்யூனிசம் தோன்றியது இன்றய ஜெர்மனியில்.


ரஷ்யாவில் கம்யூனிசம் தோன்றவில்லை, தோற்றது என்பது தான் உண்மை.//

கம்யூனிச கொள்கையை உருவாக்கியது யார் அவர் எந்த நாட்டில் இருந்தார் அந்த கொள்கையை வெளியிட்டப்போதுனு சொல்ல முடியுமா? அவர் ஜெர்மன் நாட்டில் பிறக்கவும் , அங்கே படிக்க மட்டுமே செய்தார் , வாழவில்லை,பிறந்தது பிரஷ்யா,கம்யூனிச கொள்கைகளில் ஈடுப்பட்டது பிரான்சில், கம்யூனிஸ்ட் மெனிபெஸ்டோ வெளியிட்டது பெல்ஜியத்தில், தாஸ் கேப்பிட்டல் முடித்தது இங்கிலாந்தில், போய் இதை எல்லாம் சரிப்பார்த்துட்டு வந்து எந்த நாட்டில் கம்யூனிசம் பிறந்தது என்பதை பேச வாங்க வால்!

முதல் கம்யூனிச நாடு எதுனாவது தெரியுமா, அது தெரியாம அங்கே தோன்றவில்லை அழிந்ததுனு பேச வந்தாச்சு!

கம்யூனிச புத்தகங்கள் வைத்தே அங்கே உருவாச்சு என்று சொல்லாமல் அதை செயல்ப்படுத்திய நாட்டை வைத்து நான் உருவான இடம் என்று சொல்லி இருக்கிறேன்.

தெரியவில்லை எனில் வேடிக்கை பார்க்கவும், அல்லது தெரிந்துக்கொண்டு வந்து என்னிடம் கேள்விக்கேட்கவும்!

இனிமேல் என்னிடம் இருந்து பதில் வேண்டும் எனில் உஷாராக வரவும் :-))

பெயரில்லா சொன்னது…

வவ்வால்,


உங்கள் மம்யூனிச பாசம் தெரிந்து தான் சொன்னேன்.

பேசுவது பைசா பிரயோசனம் இல்லாத கொள்கை, ஆனால், கோபம் மட்டும் மூக்குக்கு மேல் வந்து ultrahigh frequency ல் கத்துகிறீர் வவ்வால் ஹி ஹி ஹி...


சோவியத் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் என்று ஒரு நாடு இல்லை என்பதை நன்கு மண்டையில் ஏற்றிக் கொள்ளவும்.

கம்யூனிசம் ஒரு தோற்றுப் போன கொள்கை என்பதும் அப்படியே மூளையில் (இருக்குமாயின்) ஏற்றிக் கொள்ளவும்.


கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள நான் விக்கிபீடியாவையே படித்துக் கொள்கிறேன், உங்களைப் போன்ற நம்பிக்கையாளர்களிடமிருந்து கிடைப்பதெல்லாம் கம்யூனிசம் பற்றிய அறிவு அல்ல, கம்யூனிசம் என்ற மதப் போதனை தான்.

பொதுவுடமை உருவாகும் பாதை = நரகத்திற்குச் செல்லும் வழி

மா சிவகுமார் சொன்னது…

ஊசி மற்றும் கோணி ஊசி ஆகியோரின் பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன.

எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பொறுமையாக பதிலளிக்க எனக்கு விருப்பமும் ஆர்வமும் உண்டு.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
மாநிலத்திர்க்கு மாநிலம் மாறுபடும்
கம்யூனிஸ்டுகளின் கொள்கை
முரண்பாடுகளை நீக்கிவிட்டு
வர்க்கப் போராட்டத்தை
பேசுவதுதான் முதல் தேவை.....!!
//

மாநிலத்துக்கும் மத்தியில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்குமே முரண்பாடுகள் உள்ளன !

மாநிலத்தில் புத்ததேவ் அமேரிக்கர்களை வா வா என்றால் மத்தியில் ஆதரவு கொடுத்துக் காப்பாற்றும் காங்கிரஸ் அரசு அதே வேலையைச் செய்ய விடாமல் தடுப்பார் காம்ரேடு காரட்.


முரணான கருத்துக்களை சாகடித்துவிட்டு மேலே வரும் கம்யூனிசத்திற்குள் இவ்வளவு முரண்பாடுகள்.


இவர்கள் ஒன்று கூடி பொதுவுடமைச் சமுதாயத்தை உருவாக்கினால் இந்தியாவிற்கு என்ன இலாபம். இலாபம் எல்லாம் சீனாவுக்குத் தான் போகும்.


1992 வரை இவர்கள் உருவாக்கிய பொதுவுடமைச் சமுதாயத்தைத்தானே நாம் பார்த்தோம். வளங்களை கட்சிக்குள் பங்குபோட்டுக் கொண்டு, ஏழ்மையை கட்சிக்கு வெளியில் பங்கு போட்டார்கள் மாபாதகர்கள்.


ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி அனைவரும் ஓடப்பர் ஆவோம், பொதுவுடமைச் சமுதாயமே வருக, ஏழ்மையை அனைவருக்கும் வரமாகத் தருக.

வஜ்ரா சொன்னது…

இந்தப் புத்தகத்தை இங்கே கம்யூனிசம் பேசி வாழ்க்கையைத் தொலைப்போருக்காக பரிந்துரைக்கிறேன்.

Nobody saw more clearly than the great political thinker de Tocqueville that democracy stands in an irreconcilable conflict with socialism: "Democracy extends the sphere of individual freedom," he said. "Democracy attaches all possible value to each man," he said in 1848, "while socialism makes each man a mere agent, a mere number. Democracy and socialism have nothing in common but one word: equality. But notice the difference: while democracy seeks equality in liberty, socialism seeks equality in restraint and servitude."

பெயரில்லா சொன்னது…

//
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல்
//

தளபதி படத்தில் வரும் சாருஹாசன் பேசும் வசனம் ஸ்டைலில் படிக்கவும்.


செல்லா யாரு ?


அவன் படிப்பு என்ன ?


மார்க்கெட்டில் அவனுக்கு எத்தனை ஆண்டுகள் அனுபவம் ?

மா சிவகுமார் சொன்னது…

//இயற்கைக்கே அப்படி எனில் மனிதனால் முன்வைக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் எப்படி காலப்போக்கில் ஒரு மாற்றத்தை எத்தகைய புறத்தூண்டலும் இல்லாமல் நடைப்பெற முடியும்.//

அந்தப் புறத் தூண்டுதல் எது என்பதில்தான் கருத்து வேறுபாடு. முதலாளித்துவத்தின், சந்தைகளின் கருவிகள் மேலும் மேலும் நுண்மைப் படுத்தப்பட, முரண்பாடுகள் முற்றுவதுதான் அந்த தூண்டுதல் என்பது ஒரு கருத்து (காரல் மார்க்ஸ்).

தொழிலாளர்கள் ஆயுதம் எடுத்துப் போராடி முதலாளிகளை எல்லாம் ஒழித்து விடுவதுதான் அந்த தூண்டுதல் (சோவியத், சீன, இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்கள்)

//அப்படியே சிதைவுற்றலும், ஒரு பெரிய சந்தை ஏகாதிபத்தியம் போய் பல சிறிய சந்தைகள் உருவாக தான் வாய்ப்புள்ளதே தவிர ...அது நேரடியாக பொதுவுடைமைக்கு இட்டு செல்லும் என்பதற்கு என்ன உத்திரவாதம்.//

'அது நேரடியாக பொதுவுடைமைக்கு இட்டு செல்லும்' என்பதை தனது நுண்ணறிவாலும், ஆழ்ந்த அலசலாலும் தஸ் காபிடலில் நிரூபிக்கிறார் கார்ல் மார்க்ஸ்.

//ஏன் ரஷ்யாவில் கம்யூனிசம் (அது சர்வாதிகாரம் என்றாலும்) சிதைந்த பின்னர் ஒரு ஜனநாயக கம்யூனிசம் தலை தூக்கவில்லை.//

ரஷ்யாவில் உண்மையான கம்யூனிசம் நிலவேவில்லை என்பதுதான் என் புரிதல்.

//தன் மகன்/மகள் ஆபத்தில் சிக்கினால் ஒரு தாய்/தகப்பன் அதிகம் முயற்சி எடுப்பார்கள், ஏன் தங்கள் உயிரை தந்தும் காக்க வருவார்கள், அதுவே பக்கத்து வீட்டுக்காரர் மகனுக்கு எனில் முடிந்த வரைக்குமே உதவப்பார்ப்பார்கள்.//

இந்த மனித அடிப்படையை அரசாங்கம் (உச்சபட்ச சக்தி) சட்டம் போட்டு மாற்றி விட முடியும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா!

//புரட்சியற்ற முறையில் அப்படி மாறிய முன்னுதாரணங்கள் இருக்கா? அப்படி சிதைவில் இருந்து பரிணாம மாற்றம் பெற எத்தனை காலம் பிடிக்கும்?//

இதுவரை அப்படி முன்னுதாரணம் எதுவும் இல்லை. புரட்சி முறையில் பொதுவுடமை உருவானதாக சரித்திரமும் இல்லை.

அந்தப் பரிணாம மாற்றத்தை துரிதப்படுத்த ஒவ்வொருவரும் முயற்சிக்கிறார்கள். புரட்சி ஒரு வழி. சந்தையின் முரண்பாடுகள் ஒரு வழி. தனிமனித மேம்பாடு ஒரு வழியாக இருக்கலாம்!

//பொதுவுடையில் இவை எல்லாம் இருப்பதில்லை, பொதுவாக சிந்தாந்தம் மட்டுமே செலுத்து விசையாக காகிதத்தில் விரிவாக பேசப்படும்! செயல் முறையில் சாதிக்க முடியாது.//

உண்மை, முற்றிலும் உண்மை. சோவியத்தில் ஏன் மத்திய பொலிட்பீரோ தேவைப்பட்டது? சீனாவில் ஏன் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய அதிகாரம் தேவைப்படுகிறது. ஏனென்றால், அவை சித்தாந்தத்தால் செலுத்த முடியாத போலி பொதுவுடமை நடைமுறைகள்.

உண்மையான பொதுவுடமை சமூகத்தில் மத்திய அமைப்புகள் தேவைப்படாது.

உண்மைத்தமிழன்,

//ஊருக்கு ஒரு ஜாதி.. அந்த ஜாதிகளுக்குள் 40 பிரிவுகள் என்றிருக்கும் நம் சமூகத்திற்கு ஏற்றால் போல் கம்யூனிஸம் வளைந்து கொடுக்க முன் வரவில்லை.//

கம்யூனிசம் என்றாலே தொழிலாளர் மற்றவர்களை எதிர்த்து நிற்கும் புரட்சி என்பது என்ன வரையறை என்று எனக்கும் புரியவில்லை!

அதியமான்,

//ok. can you explain what will replace the market in future ?//

சந்தைக் கலாச்சாரம் நிலவ அடிப்படைத் தேவை பற்றாக்குறை மற்றும் பேராசை. ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த ஆகக் கூடிய உழைப்பை மகிழ்ச்சியாக செய்து, தமக்குத் தேவையானவற்றை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் சமூகத்தில் சந்தை இருக்காது.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் (சோவியத், சீன பரிசோதனைகளை கொஞ்சம் மறந்து விட்டு)!

நாய்வால்,
தெரிந்து கொள்ளும் அல்லது விளக்கும் நோக்கத்தில் மட்டும் கருத்துக்களை எழுதினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கம்யூனிஸ்டுகளை உயிருடன் கொளுத்துவோர் சங்கம்,

களைத்துப் போன வாதங்கள். இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்கள் ஆற்றிய சமூகப் பணிகளைப் புரிந்து கொள்ள முடியாமல் வெறுப்பை உமிழ்வதால் என்ன கிடைத்து விடுகிறது, உங்களுக்கு!

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

//Democracy extends the sphere of individual freedom," he said. "Democracy attaches all possible value to each man,"//
மக்களாட்சியின் இறுதி வடிவம்தான் பொதுவுடமை சமூகம்.

சுப்புலெக்ஷ்மி,

செல்லா பல ஆண்டுகளாக உலக சிந்தனையாளர்களின் ஆக்கங்களை படித்து தெளிந்தவர். தனது கருத்துக்களை எளிதில் புரியும்படி எழுதுபவர். ஒவ்வொரு நாளும் மார்க்கெட்டுகளில் நடப்பவற்றை கவனித்து வருபவர்.

தளபதி சாருஹாசன் பாத்திரத்தை விடவும், சுப்புலெக்ஷ்மியை விடவும் மனிதர்களை மதிக்க வேண்டியதன் தேவையை நன்கு உணர்ந்தவர்.

அன்புடன்,
மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மா.சி,
//இதுவரை அப்படி முன்னுதாரணம் எதுவும் இல்லை. புரட்சி முறையில் பொதுவுடமை உருவானதாக சரித்திரமும் இல்லை.//

என்ன பேசுகிறீர்கள் என்பது தெரிந்து தானே பேசுகிறீர்கள், எனக்கு சந்தேகமாக இருக்கு :-))

ஒரு கம்யூனிஸ்ட் இதைக்கேட்டால் , அதன் பின்னர் உங்களிடம் கம்யூனிசம் குறித்து எதுவுமே பேச மாட்டான்:-))

மோகன் கந்தசாமி சொன்னது…

//வேறு சில பொதுவுடமை இயக்கங்கள் சாதி ஒழிப்பை ஒரு முக்கிய திட்டமாக முன்வைத்து போராடுகின்றன//
இந்த லிஸ்டில் உள்ள (http://www.broadleft.org/in.htm) இடது சாரி கட்சிகளில் ஆல் இந்தியா பார்வேட் ப்ளாக் முத்துராமலிங்க தேவர் தலைமையில் சாதியை ஒழிக்க அரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பாடு பட்டது எனக்கு சற்று தெரியும். மற்ற கட்சிகளில் எவை சாதியொழிப்பை முன்னேடுத்தன என அறிந்து கொள்ள விருப்பம். குறைந்த பட்சம் ஒரு முப்பது பேருக்குமேல் உறுப்பினர்களை கொண்ட கட்சிகளை பற்றி அறிந்தாலே போதும்.

உண்மைத்தமிழன் சொன்னது…

///மா.சி,
//இதுவரை அப்படி முன்னுதாரணம் எதுவும் இல்லை. புரட்சி முறையில் பொதுவுடமை உருவானதாக சரித்திரமும் இல்லை.//
என்ன பேசுகிறீர்கள் என்பது தெரிந்து தானே பேசுகிறீர்கள், எனக்கு சந்தேகமாக இருக்கு :-))
ஒரு கம்யூனிஸ்ட் இதைக்கேட்டால் , அதன் பின்னர் உங்களிடம் கம்யூனிசம் குறித்து எதுவுமே பேச மாட்டான்:-))///

அதானே.. வவ்வால்ஜி சொல்வது நூற்றுக்கு நூறு சரிதானே..

மா.சி. புரட்சியே வெடிக்காமல்தான் பொதுவுடமை உலகில் பரவியது என்கிறீர்களா..? அது எப்படி ஸார்..?

சீனாவிலும், ரஷ்யாவிலும், கியூபாவிலும் வெடித்தது எதுவாம்..?

அவைகள் புரட்சி இல்லையெனில் புரட்சிக்கு என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் மா.சி.யின் சொல் அதிகாரத்தில்..?

வஜ்ரா சொன்னது…

//
மக்களாட்சியின் இறுதி வடிவம்தான் பொதுவுடமை சமூகம்.
//

தவறு


மக்களாட்சி X பொதுவுடமைச் சமூகம்


என்பது தான் டீ டாக்வில் சொன்னது.

K.R.அதியமான் சொன்னது…

the enterprising nature and drive found in entrepreuners like Jamshedji Tata, Bill Gates, Azim Premji, Hari NAnada (Escorts), Edison, Ford, etc are enabled and allowed to flourish to create wealth, capital, innovation and employment only in free marker capitalistic, democratic societies.
In a planned and collectivised economy like former USSR or pseudo-socialitic set up like India until 1991, such intiatives are neither possible nor permitted and these people are viewd as 'exploiting bourgeouise and class enimies of the workers.

Why couldn't such entrepreneuers like Azim Premzi, NArayanamurthy, Ambani, etc couldn't come up or flourish during Nehru's period and Indira's regin ? only old groups like Tatas and Birlas, etc alone were flourishing with no competition to their 'protected'
industries from both local and foreign companies !!

There is an important book called
'capitalism and freedom' by M.Friedman ; it describes the incompatibiltiy if socialism with basic democracy. In Chile, which was under the dictator Pinochet, the socilistic set up was diamanteled and the economic dynamics unleashed a new middle and entrepreuneral class which ultimately underminded the Pinochet's dictatoship and ulitmately ushered in democracy. Friedman was critised then for adiviing the Pinochet regime in economic matters. but his advice and directions helped Chile recover from terrible hyper-inflation and stagfaltion of the 60s and early 70s. now there is a vibrant democracy and economy there with no talk about 'revolutions' and US hegomony (as it was the norm in the 60s).

Economic freedom is as important as political and civil rights. they are all incompatible with socialisitc ideas. remeber the infamous MISA emergency by Indira Gandhi in 1975. She used the excuse of socialism to abolish basic rights and free speech, while the Russian communists supported her in the name of anti-capitalism. all mere mask..

Economic freedom leads to political freedom in the long run as proved by many nations like Chile and Indian experiance.
Now there is relatively more freedom here when compared to the heydays of socialistic raaj of Indira Gandhi regime, when crony caapitalism ruled, with the cronies and Congress leaders ganged up to prevent competition and threaten opposition and those who supported opposition. (like the oppression of industrialists and others who supported Rajaji's Swathanthra PArty in the 60s) .
The mere threat of cancellation of industrial license was enough to cow down industrialists. Selective Income tax raids and MRTP ACts were misuded to suppress opponents.
Pls read
Kuldip Nayyar's : India, the critical years ;
Rajinder Puri's 'Crisis of Conscience' ;

K.R.அதியமான் சொன்னது…

the enterprising nature and drive found in entrepreuners like Jamshedji Tata, Bill Gates, Azim Premji, Hari NAnada (Escorts), Edison, Ford, etc are enabled and allowed to flourish to create wealth, capital, innovation and employment only in free marker capitalistic, democratic societies.
In a planned and collectivised economy like former USSR or pseudo-socialitic set up like India until 1991, such intiatives are neither possible nor permitted and these people are viewd as 'exploiting bourgeouise and class enimies of the workers.

Why couldn't such entrepreneuers like Azim Premzi, NArayanamurthy, Ambani, etc couldn't come up or flourish during Nehru's period and Indira's regin ? only old groups like Tatas and Birlas, etc alone were flourishing with no competition to their 'protected'
industries from both local and foreign companies !!

There is an important book called
'capitalism and freedom' by M.Friedman ; it describes the incompatibiltiy if socialism with basic democracy. In Chile, which was under the dictator Pinochet, the socilistic set up was diamanteled and the economic dynamics unleashed a new middle and entrepreuneral class which ultimately underminded the Pinochet's dictatoship and ulitmately ushered in democracy. Friedman was critised then for adiviing the Pinochet regime in economic matters. but his advice and directions helped Chile recover from terrible hyper-inflation and stagfaltion of the 60s and early 70s. now there is a vibrant democracy and economy there with no talk about 'revolutions' and US hegomony (as it was the norm in the 60s).

Economic freedom is as important as political and civil rights. they are all incompatible with socialisitc ideas. remeber the infamous MISA emergency by Indira Gandhi in 1975. She used the excuse of socialism to abolish basic rights and free speech, while the Russian communists supported her in the name of anti-capitalism. all mere mask..

Economic freedom leads to political freedom in the long run as proved by many nations like Chile and Indian experiance.
Now there is relatively more freedom here when compared to the heydays of socialistic raaj of Indira Gandhi regime, when crony caapitalism ruled, with the cronies and Congress leaders ganged up to prevent competition and threaten opposition and those who supported opposition. (like the oppression of industrialists and others who supported Rajaji's Swathanthra PArty in the 60s) .
The mere threat of cancellation of industrial license was enough to cow down industrialists. Selective Income tax raids and MRTP ACts were misuded to suppress opponents.
Pls read
Kuldip Nayyar's : India, the critical years ;
Rajinder Puri's 'Crisis of Conscience' ;

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

//என்ன பேசுகிறீர்கள் என்பது தெரிந்து தானே பேசுகிறீர்கள், எனக்கு சந்தேகமாக இருக்கு :-))

ஒரு கம்யூனிஸ்ட் இதைக்கேட்டால் , அதன் பின்னர் உங்களிடம் கம்யூனிசம் குறித்து எதுவுமே பேச மாட்டான்:-))//

அதான் முதலிலிருந்தே நான் சொல்லுகிறேன். நீங்கள் கம்யூனிசம் என்று எதை சொல்கிறீர்களோ, அதற்கும் கம்யூனிசத்துக்கும் தொடர்பு இல்லை என்பது என் கருத்து. அது தெளிவாகும் வரை நாம் இரண்டு பேரும் வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டியதுதான் :-)

உண்மைத்தமிழன்,

//மா.சி. புரட்சியே வெடிக்காமல்தான் பொதுவுடமை உலகில் பரவியது என்கிறீர்களா..?//

"புரட்சி" வெடித்தது. அதற்குப் பின்பு ஏற்பட்டது பொதுவுடமை இல்லை என்றுதான் பேச்சு!

வஜ்ரா,

//மக்களாட்சி X பொதுவுடமைச் சமூகம் //

பொதுவுடமை என்பதை தனியாக கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வெளி கருத்துக்களை கொஞ்ச நேரம் விட்டு விட்டு. தனிமனித மாட்சியின் உச்சக்கட்டம்தான் பொதுவுடமை.

அதியமான் சார்,

ஆங்கில பின்னூட்டங்களுக்கு ஒரு pass!

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
தனிமனித மாட்சியின் உச்சக்கட்டம்தான் பொதுவுடமை.
//

தனி ஒரு மனிதனின் மாட்சி (ஆட்சி) தான் பொதுவுடமை என்று மாற்றிக் கொள்ளலாம். இதுவரை, பொதுவுடமையை நோக்கி நடந்த சமூகம் அடைந்த இலக்கு அது தான்.


Socialism is indeed the high road to serfdom. பொதுவுடமையே நம்மை அடிமைகளாக்கும் பாதை என்பதில் எந்தவிட ஐயமும் எனக்கில்லை. எப்படி யோசித்தாலும், பொதுவுடமை என்ற வைரஸ் மீதான என் அலர்ஜி தீராத வியாதி.


நான் அதியமான் போல், free market economy தான் எல்லாம் என்றெல்லாம் சொல்லும் ஆளில்லை. ஆனால், பொதுவுடமை என்று சொல்லும் ஆட்களை, ஆட்கள் கூட்டத்தை, அதுக்காகக் கொடிபிடிக்குக் அறிவாளிகளைக் கண்டால் அதீத கோபம் கொள்வது என் இயல்பாகிவிட்டது.

வவ்வால் சொன்னது…

மாசி,

//அதான் முதலிலிருந்தே நான் சொல்லுகிறேன். நீங்கள் கம்யூனிசம் என்று எதை சொல்கிறீர்களோ, அதற்கும் கம்யூனிசத்துக்கும் தொடர்பு இல்லை என்பது என் கருத்து. அது தெளிவாகும் வரை நாம் இரண்டு பேரும் வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டியதுதான் :-)//

ஹெ..ஹே இதை நான் உங்களைப்பார்த்து சொல்லனும், ஏன் எனில் நீங்கள் கம்யூனிசம் என்பதை அப்படி புரிந்து வைத்திருக்கிங்க. இதற்கு மேல் பேசினால் அது எப்படி போகும் என்பது எனக்கு புரிகிறது.

குழப்புவது என்று முடிவோடு இப்பதிவை போட ஆரம்பித்து இருக்கிங்க என்பது மட்டும் புரிகிறது.

உண்மை தமிழனுக்கு நீங்கள் சொன்னப்பதிலை பாருங்க,

//உண்மைத்தமிழன்,

//மா.சி. புரட்சியே வெடிக்காமல்தான் பொதுவுடமை உலகில் பரவியது என்கிறீர்களா..?//

"புரட்சி" வெடித்தது. அதற்குப் பின்பு ஏற்பட்டது பொதுவுடமை இல்லை என்றுதான் பேச்சு!//

முதலில் கம்யூனிசம் ஏற்பட புரட்சி தேவையே இல்லை , தானாக ஒரு காய் பழம் ஆவது போல ஒரு நாட்டில் கம்யூனிசம் வந்துவிடும் என்றீர்கள், ஆனால் அப்புறம் புரட்சி ஏற்பட்டது அங்கே கம்யூனிசம் ஏற்படவில்லை என்கிறீர்கள்.

நீங்கள் சொன்னதிலேயே எவ்வளவு முரண்பாடுகள்!

ஏன் எனில் அந்த புரட்சி கம்யூனிசத்தின் பேரால் ஏற்பட்டது , அப்படி எனில் புரட்சி என்பது கம்யூனிசத்திற்கு தேவை, கம்யூனிச சித்தாந்தம் தொடர்ந்து நிலைக்க நிர்வாகம் தான் தேவை.

உங்கள் அடுத்த ஸ்டேட்மெண்ட் என்ன வாக இருக்கும் என்பதை நானே சொல்லிடுறேன்...

புரட்சி ஏற்பட்டு கம்யூனிசம் அங்கே வந்தது, ஆனால் சிறிது காலத்திலேயே தோல்வி அடைந்தது என்று சொல்விங்க சரியா :-))

K.R.அதியமான் சொன்னது…

Vajra,

The middle ground between socialism and free markets is only mixed economy as we followed until 80s, with disastrous results. so shall we return to that mixed economy model ?

Sweden, Norway follow free markets with little govt intervention. it seems working for the best...

வஜ்ரா சொன்னது…

அதியமான்,


i am for as little government intervention as possible in any field. The job of the government is to govern and not produce.

Companies play an important specialized role in our complex societies: that of creating wealth in terms of the goods and services they produce. That is what they are good at doing, and the market takes care of weeding out those that are unable to meet that goal. They are required to play by the rules that are made by the other very critical institution of our society: the government. There is a natural division of labour between the two. Companies serve the greater good by efficient production, by following the rules.

http://www.deeshaa.org/2008/02/15/profits-are-corporations-social-responsibility/

வஜ்ரா சொன்னது…

சொல்ல மறந்துவிட்டேன்...

ஹிந்திப் பழமொழி Raja bane vyapari, praja bane bhikari (people become paupers when the rulers handle business).


பொதுவுடமை என்பது, வியாபாரத்தை அரசுடமையாக்கும் பாதை. வியாபாரம் அரச சொத்து ஆனால், மக்கள் எல்லாம் ஓட்டாண்டி ஆகவேண்டியது தான்.

PRABHU RAJADURAI சொன்னது…

"தளபதி சாருஹாசன் பாத்திரத்தை விடவும், சுப்புலெக்ஷ்மியை விடவும் மனிதர்களை மதிக்க வேண்டியதன் தேவையை நன்கு உணர்ந்தவர்"

எனக்கு இங்கு நடக்கும் விவாதம் பெரிய அளவில் புரியவில்லையெனினும், இந்த பதிலின் துணிவிற்கு உங்களை பாராட்ட தோன்றியது. நன்றி!

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

//பொதுவுடமை என்று சொல்லும் ஆட்களை, ஆட்கள் கூட்டத்தை, அதுக்காகக் கொடிபிடிக்குக் அறிவாளிகளைக் கண்டால் அதீத கோபம் கொள்வது என் இயல்பாகிவிட்டது.//

உங்கள் கோபம் பொதுவுடமைக்காக கொடிபிடிப்பவர்கள் மீதுதானே! பொதுவுடமை என்பது என்ன என்று புரிந்து கொண்டால், பொதுவுடமை மீதே வெறுப்பை விட்டு விடுவீர்கள். சோவியத்திலும், சீனாவிலும் நடந்த முயற்சிகளுக்கும் பொதுவுடமைக்கும் தொடர்பு இல்லை.

//முதலில் கம்யூனிசம் ஏற்பட புரட்சி தேவையே இல்லை , தானாக ஒரு காய் பழம் ஆவது போல ஒரு நாட்டில் கம்யூனிசம் வந்துவிடும் என்றீர்கள், ஆனால் அப்புறம் புரட்சி ஏற்பட்டது அங்கே கம்யூனிசம் ஏற்படவில்லை என்கிறீர்கள்.//

அய்யா, அய்யா! :-)

அதான் புரட்சியை மேற்கோள் குறிக்குள் போட்டேன். முதலாளித்துவ முறை, சந்தைப் பொருளாதாரம் முற்றிதான் பொதுவுடமை மலரும் என்றுதான் நினைக்கிறேன். (அது தானாக வருவதில்லை, பரிணாம வளர்ச்சியில் வரும். பரிணாம வளர்ச்சிக்கு பல காரணிகள் தேவை).

//புரட்சி ஏற்பட்டு கம்யூனிசம் அங்கே வந்தது,//
வரவே இல்லை என்றுதான் சொல்கிறேன். புரட்சி ஏற்பட்டால் கம்யூனிசம் வரும் என்று ஒரு கருதுகோள், அது நடக்காமல் தவறு என்று ஆகி விட்டது.

அதியமான்,

//Sweden, Norway follow free markets with little govt intervention.//

ஸ்வீடன், நார்வே நாடுகள் உலகத்திலேயே அதிக அளவில் அரசாங்க நலத்திட்டங்களை செயல்படும் அரசாங்களில் இரண்டு என்று படித்திருக்கிறேன். free markets with little govt intervention என்பது ஒரு புரட்டு. அப்படிப்பட்ட நாட்டில் காட்டு ஆட்சிதான் நடக்கும்.

வஜ்ரா,

அரசாங்கத்தின் மேற்பார்வை இல்லாமல் அவிழ்த்து விட்டால் என்ன மிஞ்சும் என்பதற்கு தென்னமெரிக்க பனானா நாடுகளையும், பல ஆப்பிரிக்க நாடுகளையும் பார்க்கலாம்.

பிரபு ராஜதுரை,

//இந்த பதிலின் துணிவிற்கு உங்களை பாராட்ட தோன்றியது//
முதலில் பாராட்டை வாங்கிப் போட்டுக் கொள்கிறேன், நன்றி. :-)

ஆமா இதைச் சொல்ல என்ன துணிவு தேவை? (உண்மையிலேயே புரியவில்லை)

அன்புடன்,
மா சிவகுமார்

PRABHU RAJADURAI சொன்னது…

ஒரு சக பதிவரை சற்று தரமற்ற வகையில் குற்றம்சாட்டியதற்கு, உணர்ச்சிவசப்படாமல் ஆனால் மனதில் பதியும் வண்ணம் பதில் அளித்து இருந்த விதமும்,

வேறு ஒருவரைப் பற்றி கூறப்பட்டிருந்ததுதானே என்று ஒதுங்கிப் போகாமல் பதில் அளித்ததும்,

மற்றவருக்கு பரிந்து பேச பின்னர் நம்மீதே தரமற்ற தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்ற பயமின்மையையும் துணிவு என்று குறிப்பிட்டேன் (மூன்றாவது ரக பயம் எனக்கு இங்கு அதிகம் உண்டு)

தமிழ்மணி சொன்னது…

பொதுவுடமை என்பதே தவறான கொள்கை. அது பற்றிய நீண்டவிவாதம் நண்பர்கள் அசுரன், தியாகு, அரசு பால்ராஜ், ஸ்டாலின் ஆகியோருடன் நடந்ததை என் பதிவில் பதிந்து வைத்திருக்கிறேன்.

பொதுவுடமை இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. மார்க்ஸின் கற்பனையில் தோன்றிய யுடோபியா. எல்லா உடோபியாக்களை போலவே அதுவும் ஒரு அடிப்படை இல்லாத வக்கிரமான உடோபியா.

அவ்வாறு இல்லை நீங்கள் என்று கருதினால், அது தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

வஜ்ரா சொன்னது…

//

உங்கள் கோபம் பொதுவுடமைக்காக கொடிபிடிப்பவர்கள் மீதுதானே! பொதுவுடமை என்பது என்ன என்று புரிந்து கொண்டால், பொதுவுடமை மீதே வெறுப்பை விட்டு விடுவீர்கள். சோவியத்திலும், சீனாவிலும் நடந்த முயற்சிகளுக்கும் பொதுவுடமைக்கும் தொடர்பு இல்லை.

//


இஸ்லாத்துக்கும் தீவிரவாதத்துக்கு தொடர்பு இல்லை.


கிருத்தவத்திற்கும் சிலுவைப் போர்களுக்கும் தொடர்பு இல்லை.


கிழக்குக்கும் சூரியனுக்கும் தொடர்பு இல்லை.


என்ற வரிசையில் இதுவும் வரும். சரியா ?





jokes apart, பொதுவுடமை என்றால் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிவிட்டுத் தான் நீங்கள் இதெல்லாம் சொல்லவேண்டும். இன்று உங்கள் கணினி முன் அமர்ந்து கொண்டு அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் உங்களைப் போன்ற ஆட்கள் தான் அன்று பொதுவுடமையை நோக்கி ரஷ்யா, சீனா சென்று வெற்றிவாகை சூடுகிறதென்றெல்லாம் கொண்டாடினார்கள்.


You owned it yesterday, you own it today as well. பொதுவுடமையை இப்படி disown செய்வதன் மூலம் காப்பாற்றலாம் என்று எண்ணவேண்டாம். அது அதன் கடைசி காலத்தை நெறுங்கிவிட்டது. அதன் மரணம் இயற்கையான ஒன்றாக இருக்கும்.

வஜ்ரா சொன்னது…

//
அரசாங்கத்தின் மேற்பார்வை இல்லாமல் அவிழ்த்து விட்டால் என்ன மிஞ்சும் என்பதற்கு தென்னமெரிக்க பனானா நாடுகளையும், பல ஆப்பிரிக்க நாடுகளையும் பார்க்கலாம்.
//

தென் அமேரிக்க நாடுகள் பல சோசியலிச பித்தில் தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கின்றன. சிலி, அர்ஜெண்டினா, பொலிவியா போன்ற நாடுகளில் சே குவேரா தான் இன்னும் ஹீரோ.

ஆப்பிரிக்காவிலும் சோஷியலிசம் எப்படி பலப்பல கொடுங்கோல் dictator களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதயும் பார்க்கிறோம்.

உடனே, அதெல்லாம் சோசியலிசமே அல்ல என்று உடனே ஒரு பெரிய போடாகப் போடுவார் சிவகுமார். சரியா ?


அரசாங்கம் என்பது ஒரு necessary evil என்ற அளவுக்கு இருந்தால் தான் அது நன்மை பயக்கும். எல்லாமே அரசாங்கம் தான். தந்தை, தாய், அரசு என்று இருந்தால் நாடு விளங்காது என்பது மட்டும் திண்ணம்.


சோசியலிசம் என்பது அரசாங்கம் தான் எல்லாம் என்று மாற்றும் ஒரு வியாதி.

K.R.அதியமான் சொன்னது…

///தென் அமேரிக்க நாடுகள் பல சோசியலிச பித்தில் தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கின்றன. சிலி, அர்ஜெண்டினா, பொலிவியா போன்ற நாடுகளில் சே குவேரா தான் இன்னும் ஹீரோ. ////

No Vajra. All this is in the past.
All have abandoned planning. Pls see :

http://en.wikipedia.org/wiki/Miracle_of_Chile

and no nation is willing to reverse these economic reforms incl
Coloumbia. welfare economics is different.

வஜ்ரா சொன்னது…

//
ஸ்வீடன், நார்வே நாடுகள் உலகத்திலேயே அதிக அளவில் அரசாங்க நலத்திட்டங்களை செயல்படும் அரசாங்களில் இரண்டு என்று படித்திருக்கிறேன். free markets with little govt intervention என்பது ஒரு புரட்டு. அப்படிப்பட்ட நாட்டில் காட்டு ஆட்சிதான் நடக்கும்.
//

ஸ்வீடன், மற்றும் நார்வே நாடுகளின் அரசுகள் தத்தம் பங்கு வணிகத்தில் அதிக முதல் போட்டுள்ள அரசாங்கங்கள். அரசாங்க நலத்திட்டங்கள் கடன் வாங்கி செயல்படுத்த முடியாது, லாபத்தில் ஓடும் அரசினால் தான் செயல்படுத்த முடியும்.


First you generate capital before you plan to redistribute it. Sweden and norway are precisely doing that.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பிரபு ராஜதுரை.

வணக்கம் தமிழ்மணி,

//பொதுவுடமை என்பதே தவறான கொள்கை.
பொதுவுடமை இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை.//

பொதுவுடமை என்பது சரியான கொள்கைதான். அது மனித நாகரீகத்தின் முதிர்ச்சியின் ஒரு நிலையாக உருவாகும்.

//அவ்வாறு இல்லை நீங்கள் என்று கருதினால், அது தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.//

அவ்வாறு இல்லை என்றே நான் கருதுகிறேன். இது பற்றி விவாதிக்க ஒரு தனி இடுகையை போட்டு விட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

//பொதுவுடமை என்றால் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிவிட்டுத் தான் நீங்கள் இதெல்லாம் சொல்லவேண்டும்//

செய்கிறேன் வஜ்ரா. இன்றைய பசி, பட்டினி, வறுமை, அவலங்கள்தான் ஒரே வழி என்று இல்லை. இதையும் விட சிறந்த வாழ்க்கை நெறிகள் உண்டு என்று எனக்கு எட்டிய வரை விளக்கி எழுத முயற்சிக்கிறேன். அதில் தமிழ்மணியும் கேள்விகள் கேட்பார் என்று நினைக்கிறேன்.

//அரசாங்கம் என்பது ஒரு necessary evil என்ற அளவுக்கு இருந்தால் தான் அது நன்மை பயக்கும்.//

அரசாங்கம் என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. வரையறைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தெளிவுபடுத்திக் கொண்டு பேசினால் பலனுள்ளதாக இருக்கும்.

அன்புடன்,
மா சிவகுமார்