உண்மைத்தமிழன், ரோசாவசந்த், நான் மூவரும் அதிகாலை 4.30 மணிக்கு நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அறுசுவை பாபு வந்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
ஆறு மணி அளவில் , அதே வடக்கு மட விளாகத்தில் வசிக்கும் நாகை சிவா வந்து சேர்ந்து கொள்ள, அவர்கள் நண்பர் மரைன் எஞ்சினீயராக வேலை பார்க்கும் சுபாஷ் உடன், நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளைக் கரைக்குக் கொண்டு வந்து மீன்களை இறக்கும் இடத்துக்குப் போனோம்.
அந்த இரண்டு மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் மீன்பிடித் தொழிலின் பிரும்மாண்டத்தையும், முக்கியத்துவத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
பாபு வீட்டில் காலை உணவு, ஒரு சிறிய இளைப்பாறலுக்குப் பிறகு, சிதம்பரத்திலிருந்து நண்பர்கள் சரண், கார்த்திகேயன் மற்றும் பைக்குகளில் வந்து சேர, மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார் நாகை சிவா. அங்கு கரையோரமாக நின்றிருந்த ஃபைபர் போட் எனப்படும் சிறிய படகு உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் பேசினோம்.
இழுவைப் படகு உரிமையாளர்கள் சிலர் தொழிலில் சந்திக்கும் சவால்கள், இலங்கைப் பகுதிக்கு மீன் பிடிக்கப் போவது குறித்த நிலவரங்கள், இலங்கை கடற்படை தாக்குவதைக் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பாபு வீட்டில் பலமான மதிய உணவுக்குப் பிறகு, ஓய்வு எடுப்பவர்கள் ஒரு புறமும் விவாதங்களைத் தொடர்பவர்கள் இன்னொரு புறமுமாக ஓரிரு மணி நேரம் கழிந்தது.
டுவிட்டர் தகவல்களை இணையத்தில் பார்த்த காரைக்காலில் வசிக்கும் வசந்த் ஆதிமூலம் என்ற நண்பர் தொலைபேசி தன்னால் முடிந்த அளவு பங்களிக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் காரைக்காலைச் சேர்ந்த மீனவ பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவ்ர்களுடன் பேசி தகவல்கள் பெற்றுக் கொண்டதாக மாலையில் தெரிவித்தார்.
மாலையில் நாகூர் மீனவர் குடியிருப்புக்குப் போய் சில மீனவர்களைச் சந்தித்தோம். அவர்கள் இலங்கைக் கடற்படையினர் மூலம் சந்திக்கும் அச்சுறுத்தல்களை விவரித்தார்கள்.
இன்று (சனிக்கிழமை, மார்ச் 5) வேதாரண்யம் நோக்கி போய் புஷ்பவனம் கிராமம் மற்றும் சில கிராமங்களுக்குப் போய் விட்டு மதியத்துக்குப் பிறகு ஜெகதா பட்டணம் / அம்மா பட்டணம் பகுதிகளுக்குப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறோம்.
மங்களூரிலிருந்து பிரேம் ஆனந்த் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும், காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்து கொள்வதாகவும் தொலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்.
பார்த்ததும் கேட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் பயண முடிவிற்குப் பிறகு விளக்கமான பதிவுகளாகவும், தொகுக்கப்பட்ட காணொளிகளாகவும் வெளியிடப்படும்.

- கரையோரம் நெடுக நிறுத்தப் பட்டிருந்த படகுகள்
- மீன்கள் இறக்கப் படுதல்
- ஒரு படகுக்குள் இருக்கும் கட்டமைப்புகள், கருவிகள்,
- மீன்களை விற்பனை செய்யும் ஏல முறை,
- பல வகையான மீன்கள்
என்று விபரங்கள் மனதை நிறைத்தன
பாபு வீட்டில் காலை உணவு, ஒரு சிறிய இளைப்பாறலுக்குப் பிறகு, சிதம்பரத்திலிருந்து நண்பர்கள் சரண், கார்த்திகேயன் மற்றும் பைக்குகளில் வந்து சேர, மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார் நாகை சிவா. அங்கு கரையோரமாக நின்றிருந்த ஃபைபர் போட் எனப்படும் சிறிய படகு உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் பேசினோம்.
இழுவைப் படகு உரிமையாளர்கள் சிலர் தொழிலில் சந்திக்கும் சவால்கள், இலங்கைப் பகுதிக்கு மீன் பிடிக்கப் போவது குறித்த நிலவரங்கள், இலங்கை கடற்படை தாக்குவதைக் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பாபு வீட்டில் பலமான மதிய உணவுக்குப் பிறகு, ஓய்வு எடுப்பவர்கள் ஒரு புறமும் விவாதங்களைத் தொடர்பவர்கள் இன்னொரு புறமுமாக ஓரிரு மணி நேரம் கழிந்தது.
டுவிட்டர் தகவல்களை இணையத்தில் பார்த்த காரைக்காலில் வசிக்கும் வசந்த் ஆதிமூலம் என்ற நண்பர் தொலைபேசி தன்னால் முடிந்த அளவு பங்களிக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் காரைக்காலைச் சேர்ந்த மீனவ பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவ்ர்களுடன் பேசி தகவல்கள் பெற்றுக் கொண்டதாக மாலையில் தெரிவித்தார்.
மாலையில் நாகூர் மீனவர் குடியிருப்புக்குப் போய் சில மீனவர்களைச் சந்தித்தோம். அவர்கள் இலங்கைக் கடற்படையினர் மூலம் சந்திக்கும் அச்சுறுத்தல்களை விவரித்தார்கள்.
இன்று (சனிக்கிழமை, மார்ச் 5) வேதாரண்யம் நோக்கி போய் புஷ்பவனம் கிராமம் மற்றும் சில கிராமங்களுக்குப் போய் விட்டு மதியத்துக்குப் பிறகு ஜெகதா பட்டணம் / அம்மா பட்டணம் பகுதிகளுக்குப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறோம்.
மங்களூரிலிருந்து பிரேம் ஆனந்த் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும், காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்து கொள்வதாகவும் தொலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்.
பார்த்ததும் கேட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் பயண முடிவிற்குப் பிறகு விளக்கமான பதிவுகளாகவும், தொகுக்கப்பட்ட காணொளிகளாகவும் வெளியிடப்படும்.
5 கருத்துகள்:
Waiting for your valuable post.
Great job. Hearty wishes..
மனதார பாராட்டப்படவேண்டிய நிகழ்வு. என்னுடைய பங்களிப்பை செய்ய இயலாமல் போனதில் வருத்தமே.
ஆவணப்படுத்தும் முயற்சிகளில், என்னால் இயன்ற உதவிகளை செய்ய தயாராயிருக்கிறேன்!
நன்றி butterfly Surya. இந்த பயணத்தில் சந்திப்புகளில் தெரிந்து கொண்டவை நிறைய. இன்று ஊருக்குத் திரும்பி இனி வரும் நாட்களில் எனது எண்ணங்களை எழுதுகிறேன்.
புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகளையும் தொகுத்து இணையத்தில் வெளியிடுகிறோம்.
சாந்தப்பன்,
நீங்கள் வருவதாக நினைத்தது மன அளவில் எங்களுக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது.
அவசர பணி காரணமாக போக வேண்டியிருந்ததால் நீங்கள் கலந்து கொள்ள முடியா விட்டாலும். இனி வரும் ஆவணப்படுத்தும் முயற்சிகளில் நீங்களும் ஈடுபடுவது உதவியாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
திரு. சிவகுமார், இந்தப் பணி மிகவும் உருப்படியானது. பயணத்திற்கு பிறகு வெளியிடப்படும் கட்டுரைகள், பதிவுகள் ஆங்கிலத்திலும், முடிந்தால் இந்தியிலும் மொழிபெயர்த்து தனியாகப் பதிவிட வேண்டுகிறேன். மீனவர்களின் அவலம் அனைத்திந்திய மிடையங்களின் கவனத்தைப் பெற இது முக்கியம்.
//பயணத்திற்கு பிறகு வெளியிடப்படும் கட்டுரைகள், பதிவுகள் ஆங்கிலத்திலும், முடிந்தால் இந்தியிலும் மொழிபெயர்த்து தனியாகப் பதிவிட வேண்டுகிறேன். மீனவர்களின் அவலம் அனைத்திந்திய மிடையங்களின் கவனத்தைப் பெற இது முக்கியம்.//
உண்மை Indian. ஒலி/ஒளி பதி
வுகள், புகைப்படங்கள் நிறைய எடுக்கப்பட்டிருக்கின்றன. மீனவர் பகுதிகளுக்குப் போனவர்களின் எழுத்துப் பதிவுகளும் வெளிவரும்.
தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே கூட தொடர்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் தேவை. தொடர்ந்து, நீங்கள் சொல்வது போல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தேசிய, பன்னாட்டு ஊடகங்களுக்கும் போய்ச் சேரும்படி வெளியிட வேண்டும்.
நன்றி.
மா சிவகுமார்
கருத்துரையிடுக