செவ்வாய், மார்ச் 22, 2011

குண்டடிபட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவருடன் உரையாடல்

குண்டடிபட்ட ராமேசுவரம் மீனவர்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் சந்தித்த மீனவர்.  மூன்று ஆண்டுகள் முன்பு குண்டடிபட்டு பிழைத்தவர். அன்று முதல் கடலுக்குப் போவதையே நிறுத்தி விட்டார். அவரது தம்பி, மகன் தொழில் செய்கிறார்கள்.

அவரது தோள்பட்டைக்கு அருகில் குண்டு துளைத்த காயத் தழும்பு இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் குண்டை எடுத்திருக்கிறார்கள்.

'இந்திய நேவி நம்ம எல்லையை விட்டு தாண்டாது. அவங்க நம்ம எல்லைக்குள் வருவாங்க.'

'13 வயதில் தொழிலுக்குப் போக ஆரம்பித்தேன். 35 ஆண்டுகளாக தொழிலில் இருக்கிறேன். நிறைய அடி வாங்கியிருப்பேன். ஏன் அடிக்கிறே, எதுக்கு அடிக்கிறே என்றெல்லாம் கேட்க முடியாது. எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்ல முடியாது.'

'நம்ம எல்லையும் அவங்க எல்லையும் அடுத்தடுத்து இருக்கிறது. ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் குறைஞ்சது 100 கிலோமீட்டராவது இருக்கும். இங்க இருப்பதே 20 கிலோமீட்டர்தான் இருக்கும். இதில எல்லை எங்க போடுறது. இடம் இல்லை. இரண்டு நாடும் அடுத்தடுத்து இருக்கின்றன.' 

2 கருத்துகள்:

bala சொன்னது…

Sivakumar,

I really appreciate you and rosa vasanth effort. I want to help the affected fisherman

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் பாலா,

எப்படி உதவ விரும்புகிறீர்கள்? மீனவர்கள் தமது தொழிலைச் செய்ய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதுதான் அவர்கள் மதிப்புடன் வாழ நாம் செய்யக்கூடிய உதவி.

மீனவர்களின் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை நமது நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்துவது தேவை.

அன்புடன்,
மா சிவகுமார்