செவ்வாய், ஜூன் 12, 2007

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்.....

ஒரு நாள் காலை:

காவலாளியின் குழந்தை ராகம் இழுத்து அழுதுக் கொண்டே இருந்தது. அந்த பெரிய பையன் சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தான். வடியும் மூக்கைத் துடைக்கிறான். டெக்கான் குரோனிக்கிளும், இந்துவும் வாங்கிக் கொண்டு பக்கத்துக் கடையில் காய்கறி. பாகற்காய், தக்காளி, வாழைப்பழம் வாங்கினேன். கற்பூர வாழை நன்கு பழுத்து சில பழங்கள் அழுகும் நிலைக்குப் போயிருந்தன.

திரும்பவும் வீட்டு வளாகத்துக்குள் நுழையும் போது அந்தப் பெரிய பையன் கையில் பால் கவருடன் வந்து கொண்டிருந்தான். குழந்தையின் ராகம் இழுப்பு இன்னும் நின்றிருக்கவில்லை. பையன் குழந்தையை கைகாட்டி அழைக்க ஓடி வந்தது, பால் பொதியைக் கொடுத்த வுடன் ஆவலுடன் கையை நீட்டி விட்டு, அது சாப்பிடக் கூடியது என்றதும் உடனேயே கோபத்துடன் தட்டி விட்டது. மூக்கு மீண்டும் ஒழுகிக் கொண்டிருந்தது.

'ஏம்மா பசிக்குதா, வாழைப்பழம் சாப்பிடுறியா' என்று கேட்க, 'போய் வாங்கிக்க' என்று சொல்ல, வந்து இரண்டு கையிலும், இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டது. அவ்வளவு நேரமும் பசியில்தான் அழுதுக் கொண்டிருந்திருக்கிறது. அப்புறம் சத்தமே இல்லை. மீண்டும் ஒரு பெரிய பாரமும் உறுதியும் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டது. என்ன அவலம் இது!

டெக்கான் குரோனிக்கிளில் எம் ஜே அக்பர், மன்மோகனாமிக்சைத் தாக்கி கிண்டலடித்திருந்தார. (The 2.5% rate of Growth) 'பெரிய பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்குவோம். அவர்களது செல்வத்தில் ஒரு பகுதி ஒழுகி வழிந்து ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தும்' என்ற மன்மோகன்/சிதம்பரம் பொருளாதாரக் கொள்கைகள், பிஜேபியின் கொள்கைகளை விட எந்த விதத்திலும் உயர்ந்தது இல்லை. ஏதோ கத்துகிறார்களே என்று வேண்டா வெறுப்பாக தேசிய வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவற்றில் செலவளிப்பதோடு சரி. அரசின் முழுக் கவனமும் வேறு எங்கோதான் இருக்கிறது' என்று சாடியிருந்தார்.

மதியம் வலைப்பூக்களை மேயும் போது ராமச்சந்திரன் உஷாவின் பதிவு மூலம், கல்வெட்டின் பதிவில் இருந்து செய்தித் தகவல். மாதம் நான்கு நாட்களுக்குப் பயன்படுத்த சுகாதாரமான துணிகள் கூட இல்லாமல் இருக்கும் மக்களிடம் பேசிக் கொண்டிருந்த கட்டுரையாசிரியர் தாம் அணிந்திருந்த ஆடைகளைக் குறித்து வெட்கம் அடைந்ததாக எழுதியிருந்தார்.

'என் பணம், என் உழைப்பு, நான் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்வேன், ஏழைகளாக இருப்பது அவர்களது தலைவிதி, சோம்பேறித்தனத்தின் விளைவு, நான் இரண்டு பாசந்தி சாப்பிட்டால் அவனுக்கு என்ன கேடு' என்று உல்லாச வாழ்க்கை வாழும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பெட்டியில் வைத்துப் பூட்டும் ஒவ்வொரு தேவையில்லாத புடவையும், சட்டையும் பீகாரிலும், தமிழகக் கிராமங்களிலும் வசிக்கும் ஏழைப் பெண்களின் மாதவிடாய்க்குப் பயன்படுத்தப் போகக் கூடிய துணிகளைத் தட்டிப் பறிப்பது போன்றது.

வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகு, வெறும் நாக்குச் சுவைக்காக இனிப்புகளைச் சாப்பிடுவது, கட்டிடத் தொழிலாளியின் குழந்தைகளுக்கு வயிற்றைக் காயப்போடும் திருட்டுக்கு ஒப்பானது. நமது தேவைக்கு அதிகமான நுகர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான் கடவுளுக்கு செய்யும் முதல் வழிபாடு.

ஆடம்பரம் என்ற ஆள்கொல்லி - இந்து நாளிதழில் சாயிராமின் கட்டுரை

45 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் மா.சி,

தொலைந்து போய் மீண்டும் வந்ததும் உங்கள் பதிவுகளைத்தான் தேடினேன், ஆனால் இன்று தான் இணைப்புக்கொடுக்கப்பெற்ற இணையத்தொடர்பு ஊஞ்சல் போல் ஊசல் ஆடி விரக்தியின் எல்லைக்கே என்னைக்கொண்டுபோய் நிறுத்திவிட்டது!

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் சமூக கண்ணோட்டம் மிகுந்து, படிப்போரின் மனதில் கேள்விகளை விதைக்கிறது! பாராட்டப்பட வேண்டிய ஒன்று!

//இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டது. அவ்வளவு நேரமும் பசியில்தான் அழுதுக் கொண்டிருந்திருக்கிறது. அப்புறம் சத்தமே இல்லை//

நிதர்சனம் என் செவிளில் ஓங்கி அறைந்தது!

சில நாட்களுக்கு முன்னர் வேலூர் பக்கம் செங்கல் சூலையில் வேலை செய்வோர் தங்களின் சிறு குழந்தைக்கும் , சிறு குழந்தை என்றால் ஆறு மாத சிசுகள் உட்பட மது பானம் வாங்கி புகட்டி பசி மறக்க செய்வதாக பத்திரிக்கைகளில் படித்தேன்!

என்ன கொடுமை சார் இது! இப்படிக்கேட்க மட்டுமே என்னை போன்ற சாமன்யர்களுக்கு சாத்தியம்.(பசிக்கிறது என்று கேட்டால் ஏமாற்று நபராக இருந்தாலும் நிலமைக்கு தக்க உதவி செய்வது உண்டு) ஆனால் இதற்கெல்லாம் என்ன தீர்வு இந்தியா 2020 இல் வல்லரசாக மாற கனவு காண சொல்கிறார்கள்!.

"கனவு காணும் வாழ்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் ..துடுப்பு கூட பாரமாகும் என கரையை தேடும் ஓடங்கள்!"

பெயரில்லா சொன்னது…

//இதற்கெல்லாம் என்ன தீர்வு இந்தியா 2020 இல் வல்லரசாக மாற கனவு காண சொல்கிறார்கள்!//
அப்படி சொல்லுபவனெல்லாம் சரியான மொள்ளமாரி என்பதில் சந்தேகமில்லை.

சரி விஷியத்துக்கு வருவோம். எங்க எகனாமிக்ஸ் புரொபஸர் அடிக்கடி 'அமெரிக்காவுல வருஷத்துக்கு 1 மில்லியன் டாலருக்கு லிப்ஸ்டிக் வாங்கராங்க' அது மிகப்பெரிய ஆடம்பரம் என்று சாடுவார். ஆனால் அவர்கள் பிள்ளைகளோ அமெரிக்கவில் படிக்கவைப்பது, மகன்கள் ரூ.2000 லீவைஸ் ஜீன்ஸ் பேன்ட் போடுவது ரூ.3000 நைகி ஷுஸ் போடுவது , அவர் செல்வதற்கு எ.சி யுன்டாய் கார், சமோசா பப்ஸ் சாப்பிட மினிமம் மெக்ரென்னட் பேக்கரி. இப்படி இவர்கள் செய்வது எல்லாத்துலையும் ஆடம்பரம் இருக்கும்.
் ஆனால் அமெரிக்கவில் இருப்பவன் லிப்ஸ்டிக் வாங்ககூடாதாம், என்ன கொடுமை சார் இது.

இப்படி ஆடம்பரம் ஆள்கொள்ளி என்று சொல்லி திரிபவர்கள் அவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாவது தானம், நன்கொடை செய்கிறார்களா என்ன?? ஆடம்பரத்தை சாடுபவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா??

அருள் குமார் சொன்னது…

இப்படியெல்லாம்தான் வெகு காலத்திற்கு முன் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது இந்த கருத்துகக்ளை ஏற்க முடியவில்லை. இது பற்றி பேச ஆரம்பித்தால் பெரிய விவாதமாகும். இருப்பினும் சட்டென மனதில் தோன்றும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

//வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகு, வெறும் நாக்குச் சுவைக்காக இனிப்புகளைச் சாப்பிடுவது, கட்டிடத் தொழிலாளியின் குழந்தைகளுக்கு வயிற்றைக் காயப்போடும் திருட்டுக்கு ஒப்பானது.//

வெறும் நாக்குச் சுவைக்காக சாப்பிடாமல், ஒரு இரண்டு நாளைக்கு, உணவில்லாத கட்டிடத்தொழிலாளியின் குடும்பத்திற்குக் கொடுத்துப்பாருங்கள்.
மூன்றாம் நாள் அவர்களின் அடிப்படைத் தேவை மாறிப்போகும்!

//நாம் பெட்டியில் வைத்துப் பூட்டும் ஒவ்வொரு தேவையில்லாத புடவையும், சட்டையும்// எது யாரின் தேவை என நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள் சிவகுமார்? மேற்சொன்னது சரி எனில், நீங்கள் தேவையில்லாமல் என்னென்ன வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் எடுத்துப்பாருங்கள். அவசியம் தேவையானது எது என்றும் ஒரு பட்டியல் எடுங்கள். அதில் குறைந்தபட்சம் 80% சதவிகிதம் உங்களுக்குத் தேவையில்லாதது என நான் நிரூபிக்கிறேன் :)

உண்மைத்தமிழன் சொன்னது…

அச்சச்சோ.. அருள்குமார் ஸார்.. மா.சி. ஸார் இத்தனை நாள் நானும், நீங்களும் யோசிக்காத ஒரு விஷயத்தை யோசித்துச் சொல்லியிருக்கிறார். அதற்கேன் அவரையே பலிகடா ஆக்குகிறீர்கள்? அவர் எளிமையான மனிதர்தான். அளவோடுதான் பேசுகிறார். எழுதுகிறார். அதையேதான் பின்பற்றுகிறார். இப்படி ஒவ்வொரு பதிவரிடமும் நீ மொதல்ல யோக்கியமான்னு கேட்க ஆரம்பிச்சா நீங்கள்கூட தப்ப முடியாது.. இது தேவையில்லாத விஷயம்..

மா.சி.யைப் பொறுத்தமட்டில் அவருடைய எண்ணங்களை பாருங்கள்.. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு சமாதானப்படுத்தக்கூட முடியாத அளவுக்கு அதனுடைய பெற்றோரின் வேலைகளையும், பணிகளையும் யோசித்துப் பாருங்கள்.. அதைத்தான் குழந்தைக்கு பசி என்ற உணர்வை நீக்கக் கூட நேரமில்லையே என்று ஆதங்கப்படுகிறார். உண்மைதானே..

நாம் கொடுத்து வைத்தவர்கள். இந்த அளவிற்காகவாவது பாசத்துடன் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள் நமது பெற்றோர்கள்.. இந்த பாச உணர்வை எழுப்ப வைத்த மா.சி.ஸாருக்கு நன்றிகள் பல..

அருள் குமார் சொன்னது…

உண்மைத்தமிழன்,
//குழந்தைக்கு பசி என்ற உணர்வை நீக்கக் கூட நேரமில்லையே என்று ஆதங்கப்படுகிறார்.//

நாம் எல்லோருமே இப்படி ஆதங்கப்படுபவர்கள்தான். உதவுபவர்கள் தான். ஆனால் எல்லா சூழலிலும் எல்லோருக்கும் உதவ முடியாது. அப்படி செய்யாமல் போவது திருட்டுக்குச் சமம் என்பதை என்னால் ஏற்கவே முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் நம்மிடமிருந்து உணர்ந்தால்தான் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிரவன் நான். அதனால் தான் அவரை பட்டியலிடச்சொன்னேன்!

மற்றபடி, நான் அவரை ஏதோ திட்டுவது போல் உங்களுக்கு எனது பின்னூட்டம் தோன்றியிருந்தான் மன்னியுங்கள். நாங்கள் நேரில் சந்திக்கும்போது கூட இப்படிப்பட்ட விவாதங்கள் நிறைய செய்வோம்.

நான் எந்த நோக்கில் சொன்னேன் எபது நிச்சயம் மா. சி அவர்களுக்கு புரியும்.

எனினும், உங்கள் மனதில் தோன்றியதை உடனே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி உண்மைத்தமிழன்.

TBR. JOSPEH சொன்னது…

மாசியின் இந்த பதிவு அவருடைய பார்வைகளை மட்டுமே காட்டுவதாக பொருள் கொள்ள வேண்டும். அவர் உபதேசிப்பதுபோல கருதி அதற்கு மறுப்பு கூறுவதில் பொருளில்லை.

அவருடைய பார்வையின் யதார்த்தம், அதனால் ஏற்பட்ட ஆதங்கம் ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதாக மட்டுமே இப்பதிவை படிப்பது நல்லது என கருதுகிறேன்..

படங்களில்லாத ஒரு குறும்படம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்...

வாழ்த்துக்கள் மாசி...

நம்முடைய அன்றாட அலுவல்களுக்கிடையிலும் இத்தகைய மனிதாபிமான சிந்தனைகள் எழுவது அபூர்வம். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

துளசி கோபால் சொன்னது…

என்ன சொல்றதுன்னே தெரியலை.

அரசாங்கத்தை நோகறதா?
அரசியல்வாதிகளையா?
குழந்தைகளின் தேவைக்குச்
செலவு செய்ய முடியாத குடும்பமா?
இல்லை பணக்காரரையா? (-:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

அதீத நுகர்வியம் (excessive consumarism)தனிமனித உடல்நலத்திற்கு மட்டுமன்றி
சமூக நலனுக்கும் புறம்பானது.......
சகோதரத்துவம் என்பது கனவாகி வருகின்றது.இதுவும் உலகமயமாக்கலின் விளைவோ?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்......."ப்ச் பழங்கதையோ?

பெயரில்லா சொன்னது…

//அச்சச்சோ.. அருள்குமார் ஸார்.. மா.சி. ஸார் இத்தனை நாள் நானும், நீங்களும் யோசிக்காத ஒரு விஷயத்தை யோசித்துச் சொல்லியிருக்கிறார். அதற்கேன் அவரையே பலிகடா ஆக்குகிறீர்கள்? \\

இந்த உண்மை தமிழன் எங்கே போனாலும்
பத்த வச்சுருவாரே.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க வவ்வால்!

//நிதர்சனம் என் செவிளில் ஓங்கி அறைந்தது!//

அந்தப் பசியின் காரணம் பெற்றோரின் வறுமை என்பது வெளிப்படவில்லை பதிவில், நீங்கள் புரிந்து கொண்டது நல்லது.

'தனி ஒருவனுக்கு உணவில்லையேல்....'

என்று குமுறிய பாரதி வாழ்ந்த நம் சமூகத்தில் இன்னும் இந்த நிலை :-(

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இப்படி ஆடம்பரம் ஆள்கொள்ளி என்று சொல்லி திரிபவர்கள் அவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாவது தானம், நன்கொடை செய்கிறார்களா என்ன??//

அனானி எதிராளியை ஒரு விரல் சுட்டினால் மூன்று விரல்கள் நம்மைச் சுட்டுகின்றன இல்லையா! ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//வெறும் நாக்குச் சுவைக்காக சாப்பிடாமல், ஒரு இரண்டு நாளைக்கு, உணவில்லாத கட்டிடத்தொழிலாளியின் குடும்பத்திற்குக் கொடுத்துப்பாருங்கள்.
மூன்றாம் நாள் அவர்களின் அடிப்படைத் தேவை மாறிப்போகும்!//

அதனால் என்ன கேடு அருள்?

//அதில் குறைந்தபட்சம் 80% சதவிகிதம் உங்களுக்குத் தேவையில்லாதது என நான் நிரூபிக்கிறேன் :)//

அது உண்மை என்று எனக்கே தெரிகிறது, அருள்! அப்படி பட்டியல் போடும் உணர்வாவது வேண்டும். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்ற நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது அல்லவா!

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//குழந்தையின் அழுகுரலைக் கேட்டு சமாதானப்படுத்தக்கூட முடியாத அளவுக்கு அதனுடைய பெற்றோரின் வேலைகளையும், பணிகளையும் யோசித்துப் பாருங்கள்..//

வறுமை உண்மைத் தமிழன். அதற்கு சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்பது என் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அப்படி செய்யாமல் போவது திருட்டுக்குச் சமம் என்பதை என்னால் ஏற்கவே முடியாது. //

====அதீத நுகர்வியம் (excessive consumarism)தனிமனித உடல்நலத்திற்கு மட்டுமன்றி
சமூக நலனுக்கும் புறம்பானது.......===

அருள், சிவஞானம்ஜி ஐயா சுருங்கச் சொன்னதைப் பாருங்கள். அதீத நுகர்வியம் == திருட்டு, அவ்வளவுதான்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//படங்களில்லாத ஒரு குறும்படம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்...//

நன்றி ஜோசப் சார்!

நான் முகம் காட்டும் கண்ணாடி என்று நினைத்து வைத்திருந்தேன். அதில் தெரிந்த என் முகம் சீர்படுத்த வேண்டிய ஒன்று!

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் துளசி அக்கா!

//அரசாங்கத்தை நோகறதா? அரசியல்வாதிகளையா?//

அரசியல்வாதிகள்தானே அரசு நடத்துகிறார்கள்

//குழந்தைகளின் தேவைக்குச் செலவு செய்ய முடியாத குடும்பமா?//

ஆமா :-(

//இல்லை பணக்காரரையா? (-://

இருப்பது கொஞ்சம். எல்லோரது தேவைக்குப் போதும். ஒருவரது பேராசைக்கு, ஆடம்பரத்துக்குக் கூடப் போதாது. அதுதான், பொருளாதாரப் பாடம், சிஜி ஐயா சொல்றது போல.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அதீத நுகர்வியம் (excessive consumarism)தனிமனித உடல்நலத்திற்கு மட்டுமன்றி
சமூக நலனுக்கும் புறம்பானது.......
சகோதரத்துவம் என்பது கனவாகி வருகின்றது.இதுவும் உலகமயமாக்கலின் விளைவோ?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்......."ப்ச் பழங்கதையோ?//

சுருக்கமாக வடித்துக் கொடுத்து விட்டீர்கள், நன்றி ஐயா!

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இந்த உண்மை தமிழன் எங்கே போனாலும்
பத்த வச்சுருவாரே.//

எத்தனை வகை தமிழர்கள். ஏங்க உண்மைத் தமிழனைப் படுத்துறீங்க!

அன்புடன்,

மா சிவகுமார்

ஓகை சொன்னது…

//'என் பணம், என் உழைப்பு, நான் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்வேன், ஏழைகளாக இருப்பது அவர்களது தலைவிதி, சோம்பேறித்தனத்தின் விளைவு, நான் இரண்டு பாசந்தி சாப்பிட்டால் அவனுக்கு என்ன கேடு' என்று உல்லாச வாழ்க்கை வாழும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.//

மாசி, திருமண வீடுகளில் போடப்படும் எச்சில் இலைக்காக காத்திருக்கும் கூட்டமும், ஒவ்வொரு கோயிலின் முன்னாலும் நூற்றுக்கணக்கில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும், காலில் செருப்பணியாமலும் மேல்சட்டையில்லாமல் பள்ளிக்கு வரும் பிள்ளைகளும் குறைந்து வருவதற்கு காரணம் தயாளகுணம் பெருகியதாலா அல்லது தன்முனைப்பு பெருகியதாலா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

//ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.//

ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய விஷியம் அவர்களின் தனி விருப்பமாக இருக்கும், அதில் ஏன் வீனாக மற்றவர் தலையிட வேண்டும், தலையிட உரிமைதான் உள்ளதா. அப்படி இருக்கையில் திருடன்/திருடி என்று சொல்வது நியாயமா?.

சிவஞானம்ஜி அய்யா
//அதீத நுகர்வியம் (excessive consumarism)தனிமனித உடல்நலத்திற்கு மட்டுமன்றி
சமூக நலனுக்கும் புறம்பானத//

இதயேதான் எங்க எகானிமிக்ஸ் புரொபஸரும் சொல்லுவார் ஆனா அவர் செய்யர வேலையெல்லாம் பாத்தா ஆடம்பரம் தலைவிரித்து ஆடும்.

ஆனால் உலகத்திலியே மிக கொடுரமான ஆடம்பர செலவு எது தெரியுமா?
அரசும் அரசியல்வாதிகளும் மக்கள் பணத்தை வீண் செலவு செய்வது. உதாரணத்துக்கு
1. கோயில் கட்டுவது/பராமரிப்பது.
2. சினிமா படம் எடுப்பது.
3. மகனுக்கு கின்னஸ் ரெக்கார்டு அளவுக்கு செலவு செய்து கலியாணம் பன்னுவது.
4. பேரன் பேத்திகளை உலகியே பெரிய பணக்காரன் ஆக்குவது.
5. ஆடம்பர பங்களாக்கள் கட்டுவது, வெளிநாட்டில் ஹோட்டல் வாங்குவது.
6. மகனுக்கு டி.வி சேனல் வாங்கி கொடுப்பது.
7. அமைச்சரகள்் சதாமிடமிருந்து கச்சா எண்ணை லஞ்சம் வாங்குவது.
8. ஐ.ஏ.எஸ் ஆபிசர்கள், அரசு ஊழியர்கள் கோடி கணக்கில் லஞ்சம் வாங்குவது.

இதெல்லாம் ஏழை நாடான இந்தியாவுக்கு தேவைதானா??

வரி கட்டும் மக்கள் பெரும்பாலனோர் எழைகள்தான், இப்படி இருக்கையில் மக்கள் வரி பணத்தைகொண்டு தனக்கு விழாக்கள் கொண்டாடும் தலைவர்கள்/தலைவிகள் பார்த்துதான் மா.சிவகுமார் 'திருடர்கள/திருடிகள்'்் என சொல்லலாம் மற்றபடி தான் உழைத்து சம்பாதித்த காசில் எந்த செலவு செய்தாலும் அவரை திருடன் என சொல்லமுடியாது.

மா சிவகுமார் சொன்னது…

ஓகை,

//குறைந்து வருவதற்கு காரணம்//

குறைந்து வருகிறதா என்பது முதல் கேள்வி. எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது, நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போவோம் என்பது சரியில்லை என்பது என் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//அதில் ஏன் வீனாக மற்றவர் தலையிட வேண்டும், தலையிட உரிமைதான் உள்ளதா.//

அவரவர் தம்மை சீர் தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டியது என்றுதான் நான் நினைக்கிறேன்

//அப்படி இருக்கையில் திருடன்/திருடி என்று சொல்வது நியாயமா?.//

யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. என்னை நானே இடித்துக் கொண்டேன். பிறருக்கும் பதிந்தால் நல்லது.

அன்புடன்,

மா சிவகுமார்

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

சிவகுமார் - நாம் எல்லாரும் தேவை இல்லாததை வாங்குவதை நிறுத்தி விட்டால் ஏழைகளுக்குத் தேவையானவை எப்படி கிடைக்கும் என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை. உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, இது குறித்த economic theories, equations குறித்து விளக்கினால் நன்றாக இருக்கும்

ஐரோப்பிய நாடுகளிலும் தான் தேவை இல்லாத அளவு வாங்கிக் குவிக்கிறார்கள். ஆனால், அதே வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழைகளைக் காண இயல்வதில்லை. சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரச் சமச்சீர் நிலை இவை எல்லாவற்றையும் பெற நுகர்வுப் புறக்கணிப்பு தான் வழி என்று தோன்றவில்லை. நல்ல அரசு, பொருளாதாரக் கொள்கைகளாலேயே இவற்றை சாதிக்க முடியும்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, உனக்கும் கீழே இருப்பவர் கோடி போன்ற தத்துவங்களால் நமக்கும் கீழே இருப்பவர்கள் எப்படி முன்னேறுவார்கள்? மாறாக, அது நம்மை முடக்கவும் புதுப் பணப் பெருக்கச் சூழலால் வரும் குற்ற உணர்வைக் குறைக்கவும் வேண்டுமானால் உதவலாம்.

மா சிவகுமார் சொன்னது…

//இது குறித்த economic theories, equations குறித்து விளக்கினால் நன்றாக இருக்கும்//

கேள்விக்கு நன்றி.

அமெரிக்காவில் voting with your dollars என்பார்கள். சமூகத்தின் வழங்களை எந்தத் திசையில் செலுத்துவது என்பதைத் தீர்மானிப்பது நாம் செலவழிக்கும் பணம் போகும் திசையைப் பொறுத்ததுதான்.

இரண்டு எளிதான உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்:

1. மின்சாரம்
உச்சப் பயன்பாட்டு நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பற்றாக்குறையாக இருந்தால், மும்பையில் இருக்கும் multiplexக்கு மின்சாரம் வழங்க விதர்பாவில் இருக்கும் கிராமத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்து நாளிதழில் சாயிராமின் கட்டுரை

2. ஆப்பிரிக்காவில் ஆள்கொல்லியாக இருக்கும் மலேரியா காய்ச்சலுக்குத் தீர்வு காணத் தேவைப்படும் நிதி. சிகப்பழகு கிரீம் உருவாக்கத் திருப்பி விடப்படலாம்.

3. உபரியாக நம்மிடம் சேரும் செல்வத்தை, வைரம் வாங்க செலவழித்தால் அந்தப் பணம் பன்னாட்டு வைர
வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்து இன்னும் வைரங்கள் உற்பத்திக்கு அதிகமான வளங்கள் போய்ச் சேர வழி வகுக்கும். அதையே தொழிலில் முதலீடு செய்தால் வேலை வாய்ப்புகள் பெருகலாம்.

சுருக்கமாக, நீங்கள் செலவழிக்கும் பணம் சமூகத்தின் வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று சந்தைக்குச் சைகை காட்டுவதால் ஆடம்பரங்கனில் செலவழிப்பது பொறுப்பில்லாத செயல்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//ஆப்பிரிக்காவில் ஆள்கொல்லியாக இருக்கும் மலேரியா காய்ச்சலுக்குத் தீர்வு காணத் தேவைப்படும் நிதி. சிகப்பழகு கிரீம் உருவாக்கத் திருப்பி விடப்படலாம்.//

சிகப்பழகு கிரீம் தயாரிக்காமல் இருந்தால் அந்த நிதி மலேரியா காய்ச்சலுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தபடும் என்பது என்ன நிச்சியம் !!.

ஆப்பிரிக்காவில் பெரும்பாலும எல்லா நாடுகளிலும்் dicatarship மற்றும் military ஆட்சியே. இந்த கொடுங்கோல் ஆட்சி நடத்துபவர்கள் தங்கள் மக்களை கவனிக்கவில்லை என்றால் நம்மால் என்ன செய்ய முடியும். உடனே நிதி உதவி (foreign-aid) அளிக்கலாம் என்பீர்கள், அது இருக்கும் பிரச்சனையை பெரிதாக்கும்.
இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நோய் ஒழிக்க கொடுக்கபடும் நிதிகளை கையகபடுத்தி தங்களை பலபடுத்திக்கொண்டு, கொடுங்கோல் ஆட்சியை நீட்டிக்கின்றனர். இப்படி கொடுங்கோல் ஆட்சியாளரிடம் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக லிப்-ஸிடிக்கே தயாரிக்கலாம், இந்த விசியத்தில் சந்தை சைகையை சரியாகவே காட்டியுள்ளது போலும்.

அப்ரிக்க நாடுகள் ஜனநாயக முறையிலும் மற்றும் accountable அரசுகளாக மாறினால் மட்டுமே மலேரியா போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

சரி அப்ரிக்கா இருக்கட்டும் இந்தியாவில் போலியோ நோய் இன்னும் முழுமையாக களையப்படவில்லையாமே, அதற்கு ஃபேர் அன்ட் லவ்லி தயாரிப்பதை நிறுத்தினால் தீர்ந்துவிடுமோ?

//உபரியாக நம்மிடம் சேரும் செல்வத்தை, வைரம் வாங்க செலவழித்தால் அந்தப் பணம் பன்னாட்டு வைர
வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்து இன்னும் வைரங்கள் உற்பத்திக்கு அதிகமான வளங்கள் போய்ச் சேர வழி வகுக்கும். அதையே தொழிலில் முதலீடு செய்தால் வேலை வாய்ப்புகள் பெருகலாம்.//

சிகப்பழகு கிரீம் உருவாக்குவது, மென்பொருள் தயாரிப்பது, வைரம் விற்பது எல்லாமும் தொழில்தானே? இதிலும் வேலை வாய்ப்புகள் பெருகும்தானே, சமுகத்திற்கு நல்லதுதான்.

//உச்சப் பயன்பாட்டு நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பற்றாக்குறையாக இருந்தால், மும்பையில் இருக்கும் multiplexக்கு மின்சாரம் வழங்க விதர்பாவில் இருக்கும் கிராமத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.//

தேசியமயமாக்கபட்ட கம்பேனிகள் இப்படி மின்சாரத்தை துண்டிப்பது இயல்பே். அவர்களால் இதற்குமேல் செய்ய இயலாது.
ஆனால்,
இந்த மாதிறி மின்சாரம் துண்டிக்கும் விளையாட்டெல்லாம் சுதந்திர சந்தையில் முடியாது. அப்படி செய்தால் பல கொடி கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டியிருக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//சரி அப்ரிக்கா இருக்கட்டும் இந்தியாவில் போலியோ நோய் இன்னும் முழுமையாக களையப்படவில்லையாமே, அதற்கு ஃபேர் அன்ட் லவ்லி தயாரிப்பதை நிறுத்தினால் தீர்ந்துவிடுமோ?//

ஆமா, தீர்ந்து விடும்.

//சிகப்பழகு கிரீம் உருவாக்குவது, மென்பொருள் தயாரிப்பது, வைரம் விற்பது எல்லாமும் தொழில்தானே? இதிலும் வேலை வாய்ப்புகள் பெருகும்தானே//

அடிப்படை உண்மை, இருப்பது அளவோடுதான் என்பது. ஒரு பொருளைச் செய்ய திருப்பப்படும் வளங்கள் மற்றதற்கு இல்லாமல் போகிறது (opportunity cost) என்பது எப்படி சுற்றிச் சுற்றி வாதித்தாலும் மாற்ற முடியாதது.

எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகளுக்கு ஏராளம் இருக்கிறது. ஒருவரின் பேராசைக்குக் கூட இருப்பது எல்லாம் பத்தாது.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

என்ன சிவா உங்க பதில பாத்தா கோவம்வந்துட்டா மாதிறி இருக்கு. சரி அத விடுங்க, முதல்ல உங்களுக்கும் எனக்கு உள்ள ஒற்றுமை என்னனு சொல்லிடறேன்.
நான் நேர்மையுடன் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க நினைக்கின்றேன். நீங்களும் நேர்மையானவர் என்று நம்புகிறேன, அது சரிதனே?. ஆக நமக்கு எதை அடைய வேண்டும் என்பதில் ஐயமில்லை அதை செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான்...........

[[//சரி அப்ரிக்கா இருக்கட்டும் இந்தியாவில் போலியோ நோய் இன்னும் முழுமையாக களையப்படவில்லையாமே, அதற்கு ஃபேர் அன்ட் லவ்லி தயாரிப்பதை நிறுத்தினால் தீர்ந்துவிடுமோ?//

ஆமா, தீர்ந்து விடும்.]]

நீங்க சொல்றத பாத்தா எல்லா பிரச்சனைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் தீர்த்துவிடலாம் என்பது போல தெரிகிறது. அப்படி பணத்தை வைத்து எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என்றால், இந்த உலகில் எப்பவோ வறுமையை ஒழித்திருக்கலாம், அது ஏன் இன்னும் முடியவில்லை?

Throwing money at the problem:

நீங்கள் அதிகம் பணம் வேண்டும் என்று சொல்வது சராசரியான இடதுசாறியின் வாக்குவதமே. Spending more money on a broken system will not fix the problem, it will make it bigger.

இப்போது அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் பல ஓட்டைகள் இருக்கின்றன அதைனை சீர்திருத்தம் செய்யாமல், மேலும் மேலும் பணத்தை செலவழிப்பது வீண் என்றே சொல்லமுடியும். ஆடம்பர செலவு செய்வது போல இப்படி அரசு வீணடிப்பதும் ஒரு criminal wasteதான்.

மேலும் போலியோ, மலேரியா போன்ற நோய்களால் மக்கள் இறப்பது, வறுமையின் காரணத்தாலே. அண்ணன் ரவிசங்கர் சொல்வதுபோல இவை அரசு, பொருளாதார கொள்கை பொருத்தே அது அமையும். செல்வத்தை உருவாக்குவத்ர்க்கும் தொழில் முனைவதர்க்கும் வசதியாக அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும், ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.

[[//சிகப்பழகு கிரீம் உருவாக்குவது, மென்பொருள் தயாரிப்பது, வைரம் விற்பது எல்லாமும் தொழில்தானே? இதிலும் வேலை வாய்ப்புகள் பெருகும்தானே//

அடிப்படை உண்மை, இருப்பது அளவோடுதான் என்பது. ஒரு பொருளைச் செய்ய திருப்பப்படும் வளங்கள் மற்றதற்கு இல்லாமல் போகிறது (opportunity cost) என்பது எப்படி சுற்றிச் சுற்றி வாதித்தாலும் மாற்ற முடியாதது.]]


நீங்க சொல்றது சரியா புரியல சிவா. நீங்க சொல்ல வர்றது இதுதான் நினைக்கிறேன், அதாவது ஃபேர் அன்ட் லவ்லி தயாரிப்பவன் அதை நிறுத்திவிட்டு மலேரியா மருந்து தயாரிக்கனும்/கண்டுபிடிக்கனும்ன்னு சொல்றீங்களா?, இல்லனா அரசு அவன் சொத்தை கையகபடுத்தி அதை மலெரியா மருந்து வாங்க பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறீங்களா?.
இவை இரண்டில் எது என்று தெளிவுபடுத்தவும்.

நீங்க oppurtunity cost பத்தி சொல்லிடீங்க, அதில் மறைமுகமான செலவுகளும், மறைமுகமான நஷ்டங்களும் அடங்கியிருக்கும் என்பதை மறக்ககூடாது.
மேலும் வெவ்வேறு oppurtunity costகளை ஒப்பிட்டு பார்த்தல் கடினம். மலேரியாவால் 1 லட்சம் பேர் சாகாலம் ஆனால் ஃபேர் அன்ட் லவ்லியால் (ஃபேர் அன்ட் லவ்லி விளம்பரம் மாதிறி)5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்குதுன்னு வெச்சிப்போம் அப்ப அந்த இரண்டு oppurtunity costகளை எப்படி ஒப்பிட்டு பாப்பிங்க?? ஒப்பிடுவது ரொம்ப கஷ்டம், முக்கியமாக மெக்ரொ பொருளாதாரத்தில் oppurtunity cost வைத்து பேசுவது குழப்பத்தை உண்டாக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

//என்ன சிவா உங்க பதில பாத்தா கோவம்வந்துட்டா மாதிறி இருக்கு.//

கோபம் இல்லை அனானி, சரிதானே! :-)

//நீங்கள் அதிகம் பணம் வேண்டும் என்று சொல்வது சராசரியான இடதுசாறியின் வாக்குவதமே. Spending more money on a broken system will not fix the problem, it will make it bigger.//

நான் பணம் என்று சொல்லவில்லை, வளம் என்றுதான் சொல்கிறேன். நாம் செலவழிக்கும் பணம் போகும் திசை, வளத்தை வழிப் படுத்துகின்றன என்று விளக்கியது தெளிவாக இல்லை போலிருக்கிறது!

//அதாவது ஃபேர் அன்ட் லவ்லி தயாரிப்பவன் அதை நிறுத்திவிட்டு மலேரியா மருந்து தயாரிக்கனும்/கண்டுபிடிக்கனும்ன்னு சொல்றீங்களா?, இல்லனா அரசு அவன் சொத்தை கையகபடுத்தி அதை மலெரியா மருந்து வாங்க பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறீங்களா?.//

இரண்டும் இல்லை. ஃபேர் அன்ட் லவ்லி வாங்குவதை எல்லோரும் நிறுத்தி விட்டால், அதற்காக இயங்கும் தொழில் மூடப்பட்டு அங்கு வேலை பார்த்த அறிவியலார் விவசாய ஆராய்ச்சிக்குத் திரும்பலாம் என்கிறேன். அரசாங்கத்தின் கட்டாயம் தீர்வு இல்லை என்று நானும் நம்புகிறேன்.

//முக்கியமாக மெக்ரொ பொருளாதாரத்தில் oppurtunity cost வைத்து பேசுவது குழப்பத்தை உண்டாக்கும்.//

ஏன்? வசதிக்காக மேக்ரோ, மைக்ரோ என்று பிரித்துக் கொண்டாலும் தத்துவங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பொருளாதாரப் புத்தகத்தின் முதல் பாடத்தில் வெண்ணைக்கும் துப்பாக்கிக்கும் production possibility curve போட்டிருப்பார்கள், பார்த்திருக்கிறீர்கள்தானே. ஏதாவது அமெரிக்கப் புத்தகத்தைப் பாருங்கள்.

அல்லது
இங்கு பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//கோபம் இல்லை அனானி//
நன்றி! சிவா. இப்ப நிம்மதி.

//ஃபேர் அன்ட் லவ்லி வாங்குவதை எல்லோரும் நிறுத்தி விட்டால், அதற்காக இயங்கும் தொழில் மூடப்பட்டு அங்கு வேலை பார்த்த அறிவியலார் விவசாய ஆராய்ச்சிக்குத் திரும்பலாம் என்கிறேன்.//

அது எப்படி அவர்கள் சொல்லிவெச்சா மாதிறி அறிவியலார் விவசாய ஆராய்ச்சிக்கு திரும்புவார்கள், அதற்கான ்கான ஊக்கம் என்ன?

அதே அளவு சம்பளம் கிடைக்குமா? நிச்சயம் இருக்காது, ஏனென்றால் ஒருவன் புதிதாக கண்டுபிடித்தாலும் அதை அவன் நினைத்த விலை விற்க முடியாது, அப்படி விலை கட்டுபடுத்தும் சட்டங்கள் இந்தியாவில் உள்ளது.
இப்படிபட்ட சட்டங்கள் இருப்பதால் விவசாய ஆராய்ச்சி, மருந்து ஆராய்ச்சி செய்வதற்கான ஊக்கம் தகர்க்கபடுகின்றது.

//பொருளாதாரப் புத்தகத்தின் முதல் பாடத்தில் வெண்ணைக்கும் துப்பாக்கிக்கும் production possibility curve போட்டிருப்பார்கள், பார்த்திருக்கிறீர்கள்தானே. ஏதாவது அமெரிக்கப் புத்தகத்தைப் பாருங்கள்.//

புத்தகத்தில் வருவது எல்லாமே் உண்மை வாழ்கையின் நிகழ்வுகளை பிரதிபலிக்காது. அப்படி கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் நமது புரிதலுக்காகவே. இவை hypothetical examples.

மேலும் பல விசயங்களை நீங்கள் zero-sum gameஆகவே பாவிக்கிறீர்கள்.
ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு ஒரு கேக்'கை் வெட்டி கொடுப்பது zero-sum game. ஆனால் உண்மை வாழ்கை பொருளாதாரம் அப்ப்டியல்ல.
எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் zero-sum gameஆக இருக்கவேண்டிய அவசியம் இல்லை பெரும்பாலும் அவை non-zero sum gameஆகவே இருக்கின்றன.

வளம் உருவாக்குவது ஒரு non-zero sum gameதான்.

நீங்கள் சொல்வது போல சிகப்பழகு கிரீம் தயாரிப்பதால் வளங்கள் மற்ற ஆராய்ச்சிக்கு இல்லாமல் போவதில்லை.

மா சிவகுமார் சொன்னது…

//இப்ப நிம்மதி.//

அனானியாக எழுதும் போதே இவ்வளவு பதற்றமா! :-)

//அது எப்படி அவர்கள் சொல்லிவெச்சா மாதிறி அறிவியலார் விவசாய ஆராய்ச்சிக்கு திரும்புவார்கள், //

எல்லோருமே அடிப்படைத் தேவைகளை மட்டும் நாடினால் வேறு எங்குதான் போவார்கள்? அடிப்படை தீர்வுகளுக்குத்தானே உழைப்பார்கள்?

//புத்தகத்தில் வருவது எல்லாமே் உண்மை வாழ்கையின் நிகழ்வுகளை பிரதிபலிக்காது. //

சரிதான். ஆனால் கோட்பாட்டளவில் புரிந்து கொண்டு
நடைமுறையில் பயன்படுத்த உதவுகின்றன அல்லவா? opportunity cost எப்படி சமூகத்துக்கும் பொருந்தும் என்று சுட்டிக் காட்டத்தான் அதைக் குறிப்பிட்டேன்.

// ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு ஒரு கேக்'கை் வெட்டி கொடுப்பது zero-sum game. //

இது வாழ்க்கைப் பொருளாதாரம் இல்லை என்றால் வேறு எதுதான் பொருளாதாரக் கேள்வி!

//வளம் உருவாக்குவது ஒரு non-zero sum gameதான்.

நீங்கள் சொல்வது போல சிகப்பழகு கிரீம் தயாரிப்பதால் வளங்கள் மற்ற ஆராய்ச்சிக்கு இல்லாமல் போவதில்லை.//

இங்குதான் நாம் மாறுபடுகிறோம் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//அனானியாக எழுதும் போதே இவ்வளவு பதற்றமா! :-)//

ஆமா, ஆட்டோ வந்தா அதிரும்முல்ல, அதான்.

//எல்லோருமே அடிப்படைத் தேவைகளை மட்டும் நாடினால் வேறு எங்குதான் போவார்கள்? அடிப்படை தீர்வுகளுக்குத்தானே உழைப்பார்கள்?//

எனக்கு புரியல!. எப்படி அவுங்க விவசாய ஆராய்ச்சிக்கு போவாங்க? அதற்கான ஊக்கம் என்ன?

// // ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு ஒரு கேக்'கை் வெட்டி கொடுப்பது zero-sum game. //
இது வாழ்க்கைப் பொருளாதாரம் இல்லை என்றால் வேறு எதுதான் பொருளாதாரக் கேள்வி!//

தாய் குழந்தைகளுக்கு உணவளிப்பது அன்பு, பொருளாதாரம் அல்ல. மிஞ்சிபோனால், அதை வீட்டு பொருளாதாரம் - home economics எனலாம்.
நாம் நாட்டு பொருளாதாரம் பற்றிதானே பேசுகிறோம்.

வளம் உருவாக்குவது non-zero sum game.

நமது defence budget நமது மொத்த பட்ஜெட்டில் 50%. 89000 கோடி (என்பத்தி ஒன்பது்து ஆயிரம் கோடி). இது போன்ற அரசு செலவுகளை கட்டுபடுத்தினாலே சமுக தேவைகள் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
அதை விடுபுட்டு தனிமனித சுதந்திரத்தையும்்ந்திரத்தையும் அவன் பொருளாதார சுதந்திரத்தையும்்ந்திரத்தையும் நீங்கள் தாக்குவது சரியல்ல.

ஆடம்பர செலவுகளை நினைத்து நீங்களே உங்களை நொந்துகொள்ள வேண்டாம். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் எந்த செலவு செய்தாலும் தவறில்லை.
மற்றவர்களின் இல்லாமைக்கு நீங்கள் காரணம் அல்ல.

பெயரில்லா சொன்னது…

Zero-Sum Economics and the Political Left

The economic left in more or less all cases has a belief (or fear or suspicion) that economics is fundamentally a zero-sum game. In contrast to a positive-sum game where everybody can benefit at the same time or where the overall winnings outweigh the losses, a zero-sum game requires that every winner produce a loser. This means that rich people, in effect, take a 'bigger slice of the pie' and must necessarily take their excess by leaving others with less. This is the foundational perspective for most ideologues of redistributive economics, not the much better-marketed 'helping the disadvantaged' line they like to give. It's the source of hatred for the rich; if the rich didn't take more than their share, there would be more for the poor.

But the flip-side of a zero-sum game is that it is also not a negative-sum game. A negative-sum game means that the losses outweigh the winnings. Both positive- and negative-sum games are often referred to as non-zero-sum games. The opposition of a zero-sum game, which many economic leftists believe in, is a non-zero-sum game - whether it's a positive- or negative-sum game.

Think of it like the first law of thermodynamics (conservation of energy); the total energy going into a system must equal the total energy coming out of it, and cannot be created or destroyed. Energy is not destroyed but transferred. (Physics geeks, ignore entropy and the second law of thermodynamics for these purposes).

So for economics, while the zero-sum people think that a positive-sum economy is false because the gains of the rich hurt the poor, they also think that a negative-sum economy is false because money will simply be reallocated. I'll give an example, and for these purposes I'll shorthand 'leftist' meaning someone who consciously or subconsciously believes in a zero-sum economy.

Our leftist despises the rich because every dollar they have is a dollar the poor don't have. A positive-sum game is beyond his one-dimensional, authoritarian mindset. At the same time, a negative-sum economy doesn't even occur to him as a possible consequence of his redistributive schemes. In 'fixing' asset inequality by giving poor individuals and poor businesses more goods and assets, our leftist could be disproving the zero-sum economy with a negative-sum result.

The rich individuals and businesses lose immediately from the redistribution. But the economy overall (recalling that 'economy' is a metaphor for market transactions within a given universe or space) could lose if the redistribution results in lost productivity or jobs. The bad businesses have been saved in order to protect their employees, but now the bad businesses have a greater share of the economy and are behaving less competently than would better businesses. Their bad decisions could result in lower growth or stagnation, lessened innovation and general inefficiency. After all, without bankruptcy acting as a recycling function on the economy, the resources of inept businessmen are never sold off to adept businessmen.

In other words, the leftist believes in a zero-sum game, so tries to 'correct' a positive-sum game, but also because he believes in a zero-sum game, he doesn't see the threat posed by a negative-sum game.

While many real-world leftists are not so obtuse or philosophical about zero-sum economics, they still make many assumptions based on some perspective that money is not created by the rich nor is it squandered by socialist budgets. The same viewpoint that discounts creation of wealth also discounts destruction of it.

The more practical problem is that people stuck in a zero-sum view of economics are grossly incompetent at diagnosing economic problems or at prescribing economic solutions. Yet because of their warped perspective, they're forever drawn to making policy recommendations. And why not? They see constant problems as the rich take more than 'their fair share' and see few problems with their wealth-squandering policy proposals.

We all need to acknowledge several things, starting at the basic level, that taken together prove we operate in a fundamentally non-zero-sum economy.

1) If A buys a widget from B, then both are better off or they wouldn't undertake the trade. This is exemplified every day when customers visit restaurants, stores and other establishments that don't charge more than the product is worth (by definition, or again, the customers would leave) and yet are able to stay in business or even turn a profit. If the zero-sum view were correct, then either B is selling the product for too little or too much, and between A and B one MUST be a loser and one MUST be a winner. That is not the case.

2) If C redistributes money from expertly-run company D to disastrously-run company E, then in all likelihood the money will not be used as efficiently. Company E will likely produce products lower in quantity or quality (or both) than Company D. Company D and consumers are worse off, and the benefits garnered by Company E are lower than the benefits that would have been garnered by Company D had C not redistributed anything. Since this is a hypothetical, we can assume that E is as embarrassingly inept as D is astonishingly adept. If the zero-sum view were correct, then no matter how incompetent Company E might be, the scenario would have to result in the same net benefits and wealth. That is also not the case.

3) Even if a situation does arise where the winnings and losses balance out, that does not prove that the economy is a zero-sum game, since it would be hypothetically possible to find such a situation within a non-zero-sum universe.

Accepting the premise that the economy operates on non-zero-sum rules, we can come to several conclusions. First, wealth can be created by individual effort, because wealth can be created. Second, the possession of greater-than-average wealth does not take away wealth from others, because there need not be a loser to match every winner. Third, bad government policies can be net-negative, because wealth can be destroyed. With this knowledge, we can understand that wealth does not deserve jealousy and that government intervention against the market can easily do more harm than good.

Proving not just that government intervention can but usually does cause more harm than good is another topic altogether.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

நீங்க யாராயிருக்கும் என்று ஊகித்துக் கொண்டே இருக்கிறேன் :-)

//எனக்கு புரியல!. எப்படி அவுங்க விவசாய ஆராய்ச்சிக்கு போவாங்க? அதற்கான ஊக்கம் என்ன?//

வேறு என்ன செய்வாங்க? சும்மாவே இருப்பாங்களா?

//தாய் குழந்தைகளுக்கு உணவளிப்பது அன்பு, பொருளாதாரம் அல்ல. மிஞ்சிபோனால், அதை வீட்டு பொருளாதாரம் - home economics எனலாம்.
நாம் நாட்டு பொருளாதாரம் பற்றிதானே பேசுகிறோம்.//

வீட்டுப் பொருளாதாரம் எல்லாம் சேர்ந்தால்தான் நாட்டுப் பொருளாதாரம். பல இடங்களில் பாகங்களின் தொகுப்பு எதிரிடையாக இருந்தாலும் opportunity cost என்பது இரண்டுக்கும் பொருந்தும். அது zero sum game தான்.

//இது போன்ற அரசு செலவுகளை கட்டுபடுத்தினாலே சமுக தேவைகள் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
அதை விடுபுட்டு தனிமனித சுதந்திரத்தையும்்ந்திரத்தையும் அவன் பொருளாதார சுதந்திரத்தையும்்ந்திரத்தையும் நீங்கள் தாக்குவது சரியல்ல.//

அரசையும் அரசியல் வாதியையும் குறை சொல்வது ஒரு வசதியான தப்பித்தல், தட்டிக் கழித்தல். நம்மால் முடிந்த அளவு நாம் மாறா விட்டால் அரசை மாற வைக்க நமக்க என்ன உரிமை அல்லது தகுதி இருக்கிறது!

//ஆடம்பர செலவுகளை நினைத்து நீங்களே உங்களை நொந்துகொள்ள வேண்டாம். //

நொந்து கொள்ள நேரும் செலவுகளைத் தவிர்த்து விட்டால் நொந்து கொள்ள வேண்டாம்தான்.

//தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் எந்த செலவு செய்தாலும் தவறில்லை. //

தான் உழைத்த பணத்தில் பெரும் பகுதி, சமூக அமைப்பு, அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அமைப்பினால் வந்தவை. அந்த அமைப்பில் நாம் ஆதாயமான இடத்தில் பிறந்து விட்டதால் அது நம் கையில் வந்தது. அதைப் பொறுப்போடு செலவு செய்வது நமது கடமை.

//மற்றவர்களின் இல்லாமைக்கு நீங்கள் காரணம் அல்ல.//

இந்த சமூக அமைப்பும், சட்ட அமைப்பும் காரணம். அதன் உறுப்பினனாக நானும் காரணம்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//நீங்க யாராயிருக்கும் என்று ஊகித்துக் கொண்டே இருக்கிறேன் :-)//

உங்களுக்கு அது எப்பவோ தெரிந்திருக்கும் ஊகிக்க வேண்டாம். நான்தான் அனானி என்று என் பெயரை எழுதியிருக்கேனே ;-)

//வேறு என்ன செய்வாங்க? சும்மாவே இருப்பாங்களா?//

வெளிநாட்டுக்கு போயிட்டா என்ன பன்னுவீங்க.

//அரசை மாற வைக்க நமக்க என்ன உரிமை அல்லது தகுதி இருக்கிறது!//

நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சிவா, அரசு மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கபட்டது. அரசுதான் மக்களுக்கு வேலைக்காரன். மக்கள் அரசுக்கு வேலைகாரர்கள் அல்ல.

//தான் உழைத்த பணத்தில் பெரும் பகுதி, சமூக அமைப்பு, அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அமைப்பினால் வந்தவை. //

அதற்குத்தான் கத்திமுனையிலும், துப்பாக்கிமுனையிலும் நமது வருமானத்தில் 35% மேல், வரி என்ற பெயரில் புடுங்கி கொள்கிறார்களே. பிறகு என்ன?

//அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அமைப்பினால் வந்தவை//

அப்ப ஒருவர் வருமானத்தில சொந்த ் உழைப்பு சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லை என்கிறீர்களா?. இப்படி சொல்லாதிங்க சிவா நாட்டுல இருக்கிற எல்லா உழைப்பாளிகளும் அழுதுடுவாங்க.

//இந்த சமூக அமைப்பும், சட்ட அமைப்பும் காரணம். அதன் உறுப்பினனாக நானும் காரணம்.//

சமூக அமைப்பைவிட சட்ட அமைப்பே அதிக காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சட்ட அமைப்பிற்கும் நீங்கள் காரணம் அல்ல சிவா, அதற்கு அரசும், சட்ட மன்ற உறுப்பினர்களும்தான் பொறுப்பு.

வவ்வால் சொன்னது…

மேற்கொண்டு இந்தபதிவில் தொடரும் உறையாடலில் பங்கு பெறவில்லை எனினும் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

ஒரு சுத்தம் சுயம்பிரகாச அனானி அன்பர் பொருளாதாரப் பிலி போல நிறைய சொல்கிறார் ஆனால் அவரின் அவதனிப்புகள் எத்தனை தவறானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தரவே இப்பின்னூட்டம்,

//நமது defence budget நமது மொத்த பட்ஜெட்டில் 50%. 89000 கோடி (என்பத்தி ஒன்பது்து ஆயிரம் கோடி). இது போன்ற அரசு செலவுகளை கட்டுபடுத்தினாலே சமுக தேவைகள் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.//

இந்தியாவின் நிதியறிக்கை ௨007 இன் மொத்த மதிப்பு 6,80,521 கோடிகள், அதில் ராணுவத்திற்கு திருத்தியமைக்கப்பட்ட ஒதுக்கீடு 96,000 கோடிகள்(பழைய மதிப்பு 89,000 கோடி)

இதில் ராணுவ கட்டுமான ஒதுக்கீடும் சேர்த்தால் 1,12,695.8 கோடிகள் வரும் , ராணுவக்கட்டுமான நிதி என்பது தனிப்பட்ட ஒன்று என்பதால் அதனை கணக்கில் எடுத்துகொள்வது வழக்கம் இல்லை.

அப்படி எனில் ,96,000 கோடி ராணுவத்திற்கு இது மொத்த புட்ஜெட்டில் எத்தனை விழுக்காடு 14.11 சதவிதம் , மொத்த உள்னாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 2.10 சதவீதம்.அப்படி இருக்கையில் எப்படி 50 சதவிதம் என்கிறார் இந்த பொருளாதாரப்புலி.?
(எப்படி தவராக அப்படி புரிந்துகொண்டார் என்பதையும் நான் அறிவேன், ஆங்கில வார்த்தையின் பதத்தை தவறாக புரிந்து கொண்டதன் விளைவே)

சாதாரணமாக இந்த விவரத்தையே இப்படி உள்வாங்கிக்கொள்கிறார் என்றால் இவரின் மற்றக்கருத்துகளின் நம்பகத்தண்மை எத்தகையதாக இருக்கும்!

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//வெளிநாட்டுக்கு போயிட்டா என்ன பன்னுவீங்க.//

அவ்வளவு தூரம் யோசித்து 'நம்ம வாழ்வில் எதுவும் மாற வேண்டாம். எல்லாம் அடுத்தவர்/அரசாங்கத்தின் பொறுப்புதான்' என்று விளக்குகிறீர்களே, இதற்கு

"விவசாய ஆராய்ச்சியில் இறங்கி விட்டால் என்ன பண்ணுவீங்க" என்று நான் கேட்கிறேன்!

//நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சிவா, அரசு மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கபட்டது. அரசுதான் மக்களுக்கு வேலைக்காரன். மக்கள் அரசுக்கு வேலைகாரர்கள் அல்ல.//

அரசை உருவாக்கியது யார்? நடத்துவது யார்? அதில் உங்களுக்கும் எனக்கும் என்ன பொறுப்பு?

//இப்படி சொல்லாதிங்க சிவா நாட்டுல இருக்கிற எல்லா உழைப்பாளிகளும் அழுதுடுவாங்க.//

அழுதாலும் சிரித்தாலும் உண்மை உண்மைதான். சட்டங்கள் கொடுத்துள்ள சொத்துரிமை, அதற்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு, நிறுவனம் அமைத்துக் கொள்ளும் முறைகள் போன்றவை இல்லா விட்டால் உழைப்பாளிகள் எல்லாம் இரவெல்லாம் ஆயுதத்தோடு காட்டில் வேட்டை ஆடிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

//சட்ட அமைப்பிற்கும் நீங்கள் காரணம் அல்ல சிவா, அதற்கு அரசும், சட்ட மன்ற உறுப்பினர்களும்தான் பொறுப்பு.//

அவங்க எல்லாம் வெளி உலகிலிருந்து வந்து இறங்கியிருக்காங்களா என்ன? 'அரசும் அமைப்பும் தரும் வசதிகளும், சுகங்களும் மட்டும் வேண்டும், பொறுப்புகளும், வேலைகளும் கற்றுக் கொள்ள மாட்டோம்' என்றால் அது என்ன நியாயம்?

பிகு:
நான் கணக்குப் போடுவதில் உங்களைப் போலவே கொஞ்சம் தடுமாற்றம் :-). அதான் புள்ளி விபரங்களை அள்ளி வீசக் கொஞ்சம் யோசிப்பேன்.

நீங்க, வவ்வாலுக்கு பதில் சொல்லுங்க இப்போ! :-)

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//அவரின் அவதனிப்புகள் எத்தனை தவறானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தரவே இப்பின்னூட்டம், //
சூப்பர்.

சரியான விவரங்களுக்கு நன்றி வவ்வால், தவறு நடந்துவிட்டது. எனது பழய புரெபஸர் சொன்னதை கவனிக்காமல் அப்படியே போட்டுவிட்டேன். அவர் கூறியது இப்படிகூட இருந்திருக்கலாம் அதாவது பட்ஜேட்டின் (social sector expenditure)சமூக செலவில் 50% டிபென்ஸ் செலவு. அதையும் செக் பண்ணிக்கொள்ளவும்.

மேலும் நான் எதை சொன்னாலும் நம்ப வேண்டும் என்று வற்புறுத்தவில்லை, உங்களுக்கு அந்த அவசியமும் இல்லை.
புத்தர், பெரியார் சொன்னா மாதிறி 'நான் சொல்லுவதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே'. அதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்.

//சாதாரணமாக இந்த விவரத்தையே இப்படி உள்வாங்கிக்கொள்கிறார் என்றால் இவரின் மற்றக்கருத்துகளின் நம்பகத்தண்மை எத்தகையதாக இருக்கும்!//

மற்ற கருத்துகளில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.

பெயரில்லா சொன்னது…

//"விவசாய ஆராய்ச்சியில் இறங்கி விட்டால் என்ன பண்ணுவீங்க" என்று நான் கேட்கிறேன்!//

அதான் முதலில் இருந்தே அதற்க்கான ஊக்கம் என்ன என்று கேட்டுகொண்டிருக்கிறேன். நீங்கள் அதற்கு பதிலளிக்கவில்லை.

//சட்டங்கள் கொடுத்துள்ள சொத்துரிமை, அதற்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு, நிறுவனம் அமைத்துக் கொள்ளும் முறைகள....்//

இவையேல்லாம் அரசின் கடமைகள். இதை செய்வதற்க்காகவே மக்களால் உருவாக்கப்பட்டது அரசு.

//..... காட்டில் வேட்டை ஆடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். //

இதுதான் உங்களுக்கு பிடித்த வாக்கியம் போல இருக்கிறது :-))))

//அவங்க எல்லாம் வெளி உலகிலிருந்து வந்து இறங்கியிருக்காங்களா என்ன?//

அவங்கள தேர்ந்தேடுக்கும் வரைதான் நம் பொறுப்பு, அதற்குபின் அவர்களின்
நடவடிக்கைகளை நம்மால் ஓரளவுக்குமேல ஏதுவும் செய்ய முடியாது.

//நான் கணக்குப் போடுவதில் உங்களைப் போலவே கொஞ்சம் தடுமாற்றம் :-).//

பாருங்க நான் சொன்ன மாதிறி நமக்குள்ள நிறைய ஒற்றுமை இருக்கு ;-)

வவ்வால் சொன்னது…

இந்தியாவின் மொத்த வெளினாட்டு கடன் 142.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள், பொருளாதாரத்தின் அளவு ஒரு டிரிலியன் அமெரிக்க டாலர்கள், அப்படி எனில் நம்மால் ஒரே ஆண்டில் மொத்த கடனையும் திருப்பி செலுத்த முடியவேண்டும் தானே. ஆனால் முடியாது ஏன் எனில் இதர செலவீனங்களும் இருக்கிறது. அந்த செலவீனங்கள் எல்லாம் தவிர்த்துவிட்டால் , இல்லை செலவிடுவதன் பாதையை மாற்றிவிட்டால் கடன் அடைந்து விடும் அல்லவா?

ஆனால் அப்படி நடக்குமா? நடக்காது அது போலத்தான் ராணுவ செலவீனத்தை வேறு பகுதிக்கு மாற்றினாலும் , அதற்கு வேறு செலவுகள் வருமே அன்றி உடனே மக்கள் எல்லாம் சுபிட்சம் ஆகி விட மாட்டார்கள்.

உங்களுக்கு பிடித்த அமெரிக்க உதாரணம் ஒன்று தருகிறேன் !

அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பு 13.5 டிரிலியன் டாலர்கள், நம்மை போல 13 மடங்கு ஆனால் அவர்களுக்கும் அயல்னாட்டு கடன் உள்ளது 8.5 டிரிலியன் டாலர்கள், கடன் மற்றும் மொத்த உற்பத்தி விகிதாச்சாரம் படி பார்த்தால் நம்மை விட அவர்கள் நிலை பரிதாபம். ஆனாலும் அமெரிக்க ராணுவ செலவீனங்கள் தான் உலகிலேயே அதிகம். இத்தனைக்கும் அமெரிக்க மீது இது வரை எந்த நாடும் படை எடுத்தது இல்லை, அதற்கான பயமும் இல்லை பின்னர் ஏன் இத்தனை செலவு? ஏன் அமெரிக்க நிபுணர்கள் உங்களை போல் சிந்திக்கவில்லை?
*(1000 million= 1 billion,1000 billion=1 trillion)

ஏதோ இந்த அளவிற்கு ராணுவத்திற்கு செலவு செய்வதால் தான் கார்கில் போன்ற யுத்தத்தில் இந்தியாவின் இறையாண்மையை காக்க முடிகிறது இல்லை எனில் விரல் சூப்ப வேண்டியது தான்.

போதாக்குறைக்கு இந்த பக்கம் வேறு சீனா அருனாச்சலம் எங்களுக்கு தான் என நாக்கை சப்பு கொட்டுகிறது.இப்படி பட்ட சூழலில் ராணுவத்தின் செலவை குறைப்பதாக நினைத்தால் நம் தலையில் நாமே கொள்ளிவைத்துக்கொள்வதாக தான் முடியும்.

அசோகர் மிகப்பெரும் சக்கரவர்த்தி போர் மீது கொண்ட வெறுப்பால ராணுவத்தைக்கலைத்தார் விளைவு அவர் மகன் காலத்தில் மகத பேரரசு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

இயற்பியலில் உராய்வு ஒரு தவிர்க்க முடியாத தேவையான கெடுதல்(friction is an essential evil) என்பார்கள், அதே போல் தான் ராணுவமும் அதன் செலவுகளும் தேவையான தவிர்க்க முடியாத ஒன்று!

பெயரில்லா சொன்னது…

//ராணுவ செலவீனத்தை வேறு பகுதிக்கு மாற்றினாலும் , அதற்கு வேறு செலவுகள் வருமே அன்றி உடனே மக்கள் எல்லாம் சுபிட்சம் ஆகி விட மாட்டார்கள்.//

அதான் ரானுவ செலவீனத்தை சமூக செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறேன், இதை தவிற வேறு என்ன செலவுகள் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள், வவ்வால்.

அதை் மக்கள் அடிப்படை வசதி பெருவதற்காக செய்யலாம். சுபிட்சம் அடையவதற்கு செலவுகளை குறைப்பது முதல் படி.

//உங்களுக்கு பிடித்த அமெரிக்க உதாரணம் ஒன்று தருகிறேன் ...............நம்மை விட அவர்கள் நிலை பரிதாபம்.!//

அமெரிக்கா எக்கேடு கெட்டாவது ஒழியட்டும் அதை பற்றி என்க்கு கவலையில்லை. மேலும் அமெரிக்கா வளர்ச்சியடைந்த நாடு அது செய்யும் ஆடம்பரத்தையும. இவ்வளவு எழைகளை வைத்துக்கொண்டு நமது அரசு செய்யும் ஆடம்பரத்தையும் ஒப்பிடுதல் நியாயமில்லை.

//இத்தனைக்கும் அமெரிக்க மீது இது வரை எந்த நாடும் படை எடுத்தது இல்லை, அதற்கான பயமும் இல்லை பின்னர் ஏன் இத்தனை செலவு? //

அவர்கள் கொலைவெறியில் அலைகின்றனர் அதான் அவர்களின் செலவுக்கு காரணம்.
ஜார்ஜ் புஷ் 9/11னை அமெரிக்கவின் மீதான் போர் என்றே சொல்லுகிறார்.
பயம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நீங்கள் பனிப்போர் பற்றி அறிந்தவர்தானே. அப்போது சொவியத் யுனியன் கியுபாவில் அனு அயுதங்களை அமெரிக்கா நொக்கி தயாராக வைத்திருந்தது.

//ஏன் அமெரிக்க நிபுணர்கள் உங்களை போல் சிந்திக்கவில்லை?//
அதனால்தான் தங்கள் போர் வீரர்களின் பினங்களை தினம் தினம் இராக்கிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்.

//ஏதோ இந்த அளவிற்கு ராணுவத்திற்கு செலவு செய்வதால் தான் கார்கில் போன்ற யுத்தத்தில் இந்தியாவின் இறையாண்மையை காக்க முடிகிறது இல்லை எனில் விரல் சூப்ப வேண்டியது தான்.//

இன்னும் பாதி காஷ்மீர் நம்மிடம் இல்லை. 1962 சீன போர் தொல்வி, IPKF இலங்கையில் செய்தது.
அவை விரல் சூப்பும் விசயம் இல்லியா?

//இப்படி பட்ட சூழலில் ராணுவத்தின் செலவை குறைப்பதாக நினைத்தால் நம் தலையில் நாமே கொள்ளிவைத்துக்கொள்வதாக தான் முடியும்.//

நான் ரானுவமே வேண்டாம் என்று சொல்லவில்லை, வவ்வால். எங்கெல்லாம் வீண் செலவுகள் இருக்கின்றதோ அதை கட்டுபடுத்த வேண்டும்.

சரி, அரசின் மத்த செலவுகளிலும் வேஸ்டேஜ் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?, வவ்வால்.

வவ்வால் சொன்னது…

ஒரு அரசு இதற செலவீனங்களை குறைத்து சிக்கனமாக செயல்படும் என்று எதிர்ப்பார்ப்பது உடோபியன் நம்பிக்கை! அப்படி நம்பிகை வைப்பதும் தவறு இல்லை, ஆனால் இங்கே நாம் பேசும் போது அப்படியே பேசினால் காரியம் ஆகிவிடுமா சொல்லுங்கள், நானும் அப்படியே பேசிவிடுகிறேன், யதார்த்தம் மற்றும் நிகழ்வியலின் அடிப்படையில் தானே பேச வேண்டும்.

//இன்னும் பாதி காஷ்மீர் நம்மிடம் இல்லை. 1962 சீன போர் தொல்வி, IPKF இலங்கையில் செய்தது.
அவை விரல் சூப்பும் விசயம் இல்லியா?//

1962 இல் இப்படி நமது ராணுவம் சரியான வளர்ச்சியின்றி இருந்தது என்பதால் தான் அதற்கு பின்னர் நிறைய நிதி ஒதுக்கி நவீனப்படுத்தியுள்ளார்கள், மேலும் நிறைய நவீனமயமாக்கல் செய்ய வேண்டியுள்ளது. பணம் தான் இல்லை.இன்னும் சொல்லப்போனால் நமது ராணுவத்தின் அளவை(12.5 மில்லியன் ராணுவத்தினர் உள்ளனர்,4வது பெரிய ராணுவம்) ஒப்பிடுகையில் நிதிகுறைவாக தான் ஒதுக்குகிறோம். மீண்டும் ஒரு முறை விரல் சூப்பிட கூடாது என தான் தற்போது செலவிடப்படுகிறது.

இலங்கையில் நமது ராணுவத்திற்கு சரிவு ஏற்பட்டது , காரணம் அது ஒரு நேரடி யுத்தம் அல்ல , கொரில்ல வகை, அன்னிய இடம் என பல காரணங்கள் அதனை இதனுடன் ஒப்பிட கூடது ,அமெரிக்கா வியட்னாமில் வாங்கி கட்டிக்கொள்ளவில்லைய?

பிரான்ஸ் போன்ற நாடுகளில் , அனைவருக்கும் வேலை என்ற உத்திரவாதம் தரப்படுகிறது அரசால், அதனை நிறைவேற்ற ராணுவத்தில் தான் வேலை அளிக்கிறார்கள். அதே போல் அனைவரும் 1 ஆண்டு கட்டாயம் ராணுவத்தில் வேலை செய்ய வேண்டும் , விரும்பினால் தொடரலாம் , இல்லை எனில் வெளியில் வரலாம் , இதன் மூலம் சொல்லவருவது ராணுவ செலவீனங்கள் கூட சமூக செலவீனங்களாக மாறும் சமயத்தில்.

இந்தியாவில் 12.5 மில்லியன் பெருக்கு ராணுவம் வேலை அளிப்பதால் அவர்களது சம்பளம் அவர்களது குடும்பத்தின் சமூக செலவுகளுக்கு தானே பயன் படுகிறது. எனவே இதுவும் அரசின் ஒருவகையான சமூக மேம்பாடு செலவாகவே கருதலாம் அல்லவா?

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்ற இன்றைய உலகில் படை பலம் தேவை என்பது உண்மை என்றாலும், அதுதாம் தலைவிதி என்று இருந்து விடாமல் அந்த நிலைமையை மாற்ற முயற்சிக்க வேண்டும். அது இன்னொரு விவாதத்துக்கான பொருள்.

//இந்தியாவில் 12.5 மில்லியன் பெருக்கு ராணுவம் வேலை அளிப்பதால் அவர்களது சம்பளம் அவர்களது குடும்பத்தின் சமூக செலவுகளுக்கு தானே பயன் படுகிறது.//

உலகம் அமைதிப் பூங்காவாக மாறி விட்டால் (உடோபியா) இந்த 12.5 மில்லியன் பேரையும் ஆக்க பூர்வமான பணியில் ஈடுபடுத்தி அதே சம்பளத்தை கொடுக்க முடியும் அல்லவா?

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மா.சி

//உலகம் அமைதிப் பூங்காவாக மாறி விட்டால் (உடோபியா) இந்த 12.5 மில்லியன் பேரையும் ஆக்க பூர்வமான பணியில் ஈடுபடுத்தி அதே சம்பளத்தை கொடுக்க முடியும் அல்லவா?//

உங்களுக்கு மிக அருமையாக காமெடி வருகிறது!

அப்படி ஒரு நிலை வருமெனில் வலைப்பதிவர் பாடு தான் திண்டாட்டம் , இப்படி எல்லாம் பதிவு போட முடியாது!

ராணுவம் ,ஆயுதம் ,யுத்தம் , இல்லாத அமைதி நிலவும், சுபிட்சம் நிலவும் (உடோபிய)உலகம் தான் அனைவருக்கும் ஆசை, ஆனால் என்ன செய்ய இருக்கும் நிலைக்கு என்ன செய்யலாம் என்பதே நாம் செய்ய வேண்டியது!

ராணுவம் என்பது வெறும் யுத்ததிற்கு என்று மட்டும் இல்லை அவர்கள் பல விதங்களிலும் பயன்படுகிறார்கள்,

நில நடுக்கம் , பெரு வெள்ளம், விபத்து, இன்னும் பிற அவசரகால பேரிடர் கால மீட்பு பணிகளில் பயன்படுகிறார்கள்.இமய மலைப்போன்ற மலைப்பாங்கான இடங்களில் சாலை, தொலைதொடர்பு, போன்ற வசதிகளை சாதாரண கட்டுமான பொறியாளர்களால் செய்ய முடியாது அவற்றை ராணுவ பொறியாளர்கள் தான் செயல்படுத்துகிறார்கள்.

இதுவும் கூட சமுக பங்களிப்பு தானே!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் அமைதியாக இருப்பது என்பது எதிராளியின் அமைதியை பொறுத்தே அமையும். அதனால் தான் அன்டை நாடுகள் ஆயுதம் வாங்கும் போது ஆயுத பந்தயத்தில்(arm race) இரு நாடுகளும் ஈடுப்பட்டுள்ளது என்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

//ஒரு அரசு இதற செலவீனங்களை குறைத்து சிக்கனமாக செயல்படும் என்று எதிர்ப்பார்ப்பது உடோபியன் நம்பிக்கை! //

பெரும்பாலும் ஏழை மக்களின் வரி பணத்தில் இயங்கும் அரசு சிக்கனமாக செயல்படவில்லை என்றால் அது ஏழை மக்களுக்கு செய்யும் துரோகம். இது ஏழை மக்களின் நம்பிக்ககை, உடோபிய நம்பிக்கை அல்ல.

//பிரான்ஸ் போன்ற நாடுகளில் , அனைவருக்கும் வேலை என்ற உத்திரவாதம் தரப்படுகிறது அரசால்அதனை நிறைவேற்ற ராணுவத்தில் தான் வேலை அளிக்கிறார்கள். அதே போல் அனைவரும் 1 ஆண்டு கட்டாயம் ராணுவத்தில் வேலை செய்ய வேண்டும் //

பிரான்ஸிலும் ஆப்ரிக்க சிறுபான்மையினரிடம் மிக அதிக அளவில் வேலையின்மை இருக்கிறது. கட்டாய ரானுவ பயிற்சி, மனித உரிமை மீறல் என்பது வேறு ஒரு விசயம்.

மா சிவா said ...... //உலகம் அமைதிப் பூங்காவாக மாறி விட்டால் (உடோபியா) இந்த 12.5 மில்லியன் பேரையும் ஆக்க பூர்வமான பணியில் ஈடுபடுத்தி அதே சம்பளத்தை கொடுக்க முடியும் அல்லவா?//

இம்முறை நான் சிவாவுடன் ஒத்துபோகிறேன். இந்த உலகத்தை அமைதி பூங்காவாக மாற்றுவதற்கு பண்ணாட்டு வணிகம் உதவி புரியும் என்று நம்புகிறேன். நாம் காய்கறி வாங்குபவனிடம் போரிட போட போவதில்லை. அதே போல நாம் நிறைய வணிகம் செய்யும் நாடுடன் சண்டை போட மாட்டோம்.
உலக அமைதிக்கு பண்ணாட்டு வணிகம் மற்றும் பரி வணிகம் துனைபுரியும்.

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

//நில நடுக்கம் , பெரு வெள்ளம், விபத்து, இன்னும் பிற அவசரகால பேரிடர் கால மீட்பு பணிகளில் பயன்படுகிறார்கள்.இமய மலைப்போன்ற மலைப்பாங்கான இடங்களில் சாலை, தொலைதொடர்பு, போன்ற வசதிகளை சாதாரண கட்டுமான பொறியாளர்களால் செய்ய முடியாது அவற்றை ராணுவ பொறியாளர்கள் தான் செயல்படுத்துகிறார்கள்.

இதுவும் கூட சமுக பங்களிப்பு தானே!//

அந்த வகையில் சரிதான் என்றாலும், தீயணைப்புத் துறை போல இருந்தாலும் இந்தப் பங்களிப்புகள் இருக்கும்தானே! கொலைக் கலையைப் பயில்வது தேவையான தீங்கு என்று சொல்லுங்கள். அதை நியாயப்படுத்த வேண்டுமா!

//இன்றைய காலக்கட்டத்தில் நாம் அமைதியாக இருப்பது என்பது எதிராளியின் அமைதியை பொறுத்தே அமையும். அதனால் தான் அன்டை நாடுகள் ஆயுதம் வாங்கும் போது ஆயுத பந்தயத்தில்(arm race) இரு நாடுகளும் ஈடுப்பட்டுள்ளது என்கிறார்கள்.//

அண்டை நாட்டிலும் இதையே சொல்கிறார்கள். மாட்டைக் கண்டு மனிதனுக்குப் பயம், மனிதனைக் கண்டு மாட்டுக்குப் பயம். இந்த அழிவுச் சங்கிலியை உடைத்து வெளியே வர வேண்டியது தேவையான ஒன்று.

அனானி,

//பெரும்பாலும் ஏழை மக்களின் வரி பணத்தில் இயங்கும் அரசு சிக்கனமாக செயல்படவில்லை என்றால் அது ஏழை மக்களுக்கு செய்யும் துரோகம். இது ஏழை மக்களின் நம்பிக்ககை, உடோபிய நம்பிக்கை அல்ல.//

அரசைப் போலவே தனி மனிதர்களையும் பொருத்திப் பாருங்கள் :-)

//உலக அமைதிக்கு பண்ணாட்டு வணிகம் மற்றும் பரி வணிகம் துனைபுரியும்.//

மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் போர் ஒழிந்து விடும். அத்தகைய புரிதலுக்கு ஒரு வழி பன்னாட்டு வணிகம்.

அன்புடன்,

மா சிவகுமார்