செவ்வாய், மே 19, 2009

யார் பயங்கரவாதி!

செய்தித் தளங்களில் எல்லாம் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள். ரீடிஃப் டாட் காமில் போட்டிருந்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு சாதாரண குடும்பத் தலைவர், அப்பாவி இளைஞர் என்றுதான் முகங்களைக் காட்டியது. தந்தை, தாய், மனைவி, மகன், மகள் என்று வில்லன் சித்திரிப்புக்கு உட்பட்டு விட முடியாத படங்கள். உண்மையில் வயிறு கலங்கியது. இப்படி ஒரு கொக்கரிப்பா!

யாசர் அராஃபத்தை இசுரேல் கடைசி நாட்களில் துன்புறுத்தியது, சதாம் உசைனை அமெரிக்கா அவமானப்படுத்தியது போன்று இவரையும் பொதுமக்கள் பார்வையில் இழிவுபடுத்துவதாக இறங்கியிருக்கிறார்கள்.

செய்திகள் பொய்யானவை என்று பல பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள். பார்க்கப் போனால் பயங்கரவாதம் என்ற பெயரில் பொதுமக்களையும், எந்த பாவமும் அறியாதவர்களையும் கொன்று குவிப்பதை விடுதலைப் புலிகள் செய்ததே இல்லை என்றுதான் தெரிகிறது. வன்முறையும் பயங்கரவாதமும் கண்டிக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள ராணுவத்தின் இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு மிகப் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளின் உயிர்க் கொலைகள் வரும். அவர்களால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் ஆயுதம் ஏந்திய சிங்கள ராணுவத்தினர், தமக்கு எதிராக செயல்படுவதாக அவர்கள் நினைத்த அரசியல் தலைவர்கள். பொது இடங்களில் குண்டு வைத்து கண்மண் தெரியாமல் கொன்று குவிப்பது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைத்திருந்த ஆயுத வசதிகளைப் பயன்படுத்தி தென் இலங்கையில் பல பயங்கரவாதச் செயல்களை நிறைவேற்றியிருக்கலாம். தமது விமானத்தில் பறந்து போய் கூட இலங்கை அரசின் விமானப்படைத் தளத்தைத்தான் தாக்கினார்களே தவிர பொதுக் கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்க முனையவில்லை. மனித நெறிகளும், மக்களபிமானமும் இது வரை இருந்த எந்த சிங்களத் தலைமையையும் விட புலிகளிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது.

இதை எல்லாம் வசதியாக மூடி மறந்து விட்டு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஊடகங்களும், 'எங்க அப்பாவைக் கொண்ணவங்க' என்று புலம்பிக் கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி வாரிசுகளும். காலம் பதில் சொல்லட்டும்.

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//கடந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைத்திருந்த ஆயுத வசதிகளைப் பயன்படுத்தி தென் இலங்கையில் பல பயங்கரவாதச் செயல்களை நிறைவேற்றியிருக்கலாம். தமது விமானத்தில் பறந்து போய் கூட இலங்கை அரசின் விமானப்படைத் தளத்தைத்தான் தாக்கினார்களே தவிர பொதுக் கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்க முனையவில்லை. மனித நெறிகளும், மக்களபிமானமும் இது வரை இருந்த எந்த சிங்களத் தலைமையையும் விட புலிகளிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது.
// True.

-/சுடலை மாடன்/- சொன்னது…

//வன்முறையும் பயங்கரவாதமும் கண்டிக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள ராணுவத்தின் இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு மிகப் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளின் உயிர்க் கொலைகள் வரும்.//

இராஜீவும் (என்ன காந்தி மயிறு வாழுது, இந்த ஓநாயின் பெயருக்குப் பின்னால்), அவன் குடும்பத்தினரும், அவனுடைய சீக்கிய மக்களுக்கெதிரான, ஈழத்தமிழ் மக்களுக்கெதிரான பயங்கரவாதத்தை இன்றும் ஆதரித்தெழுதும் ஓநாய்களுமே பயங்கரவாதிகள்.

//'எங்க அப்பாவைக் கொண்ணவங்க' என்று புலம்பிக் கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி வாரிசுகளும். //

இவங்க அப்பனைக் கொன்றதற்கு இத்தனையாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது நியாயம் என்றால் இவங்க அப்பனைக் கொன்றதும் நியாயம்தான். இதைத்தான் கொளத்தூர் மணி சொன்னார். அவனுக்குக் கொடுக்கப் பட்டது மரணதண்டனையென்று. கொளத்தூர் மணி சொன்னது போல் இராஜீவைக் கொன்றது தவறு என்று நம்மவர் மழுப்பாமல் அவனுக்கு அளிக்கப் பட்டது மரணதண்டனையே என்று திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தால் இந்த வாரிசு நாய்கள் வாலாட்டாமல் இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

Sir,

Don't try to re-write the history. This is a partial list of people LTTE killed

1. PLOT and TELO leaders were hunted and killed, some of them in India
2. One Indian former prime minister
3. One Srilankan president
4. A number of Srilankan ministers
5. A number of LTTE leaders who voiced any dissent
6. A lot of tamils and singala civilians as collateral damage with LTTEs despicable suicide bombings

This is not to say that Srilankan military and IPKF were angels. The bottom line is LTTE is a xenophobic organization and they are largely responsible for their own end.

It is sad that LTTE made sure that no other organization can voice for tamils.

If the srilankan govt wants long term peace they have to address Tamil issues now.

Peace

VSK சொன்னது…

வாய்மையே வெல்லும்!
சுதந்திர தாகம் இன்னும் கொழுந்து விட்டெரியத்தான் இவையெல்லாம்!

பெயரில்லா சொன்னது…

மாசி-க்கு என்ன ஆசையோ இப்படியெல்லாம் எழுதி பேர் வாங்க வேண்டுமென்று.

ஒரு அரசியல் தலைவரைக் கொன்றார்களாம். அது பெரிய குற்றமில்லையாம். அந்தத் தலைவரோடு சேர்த்து செத்துப் போன அப்பாவிகள் எத்தனை பேர்? பத்மநாபா போன்ற சக போராளிகள் எத்தனை பேர்? எத்தனை புலிகள் துரோகி பட்டம் கட்டப்பட்டடு விசாரனையின்றி இறந்தார்கள்?

தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்றால் எதற்கு இராணுவத் தலைவரை, அதிபரை எல்லாம் போட்டுத் தள்ள வேண்டும்? மரண தண்டனையா? இப்பொழுது அவர்கள் கொடுப்பதும் மரண தண்டனைதானே.

உண்மையிலேயே நீங்கள் முன்னர் சில நல்ல இடுகைகள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால்... இப்பொழுது நம்பவே முடியவில்லை.

மா சிவகுமார் சொன்னது…

அனானிகளே,

1. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அவர்களுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு எதிராக படை எடுத்து இந்தியத் தலைமையும், தமிழ் மக்களின் மீது அடக்கு முறையை அவிழ்த்து விட்ட சிங்கள பேரின வாதிகளும் அதை விடப் பெரிய பயங்கரவாதிகள்.

2. குற்றத்தில் சின்னக் குற்றம் பெரிய குற்றம் என்று எதுவுமில்லை.

தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்கள தீவிரவாதிகள் எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்தது?

(தில்லியில் சீக்கியர்களைக் கொன்ற காங்கிரசாருக்கும், குஜராத்தில் முஸ்லீம்களை கொன்ற பாஜகவினருக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது).

3. இவர்களுடன் ஒப்பிடும் போது மனிதாபிமானத்தோடு செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள். சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அடைபட்ட ஆயிரத்துக்கும் அதிகமான சிங்கள படையினரை பாதுகாப்பாக வெளியில் விட வழி கொடுத்த இயக்கத்தினர்.

எது எப்படியானாலும், வன்முறையின் போரின் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும் என்று வலியுடன் பதிந்து விட்டது. அமைதிப்படை என்று அனுப்பிய ராஜீவானாலும் சரி, ஈழப் போர் என்று போராடிய விடுதலைப் புலிகளானாலும் சரி, தமது ஆதிக்கத்தை நிறுவப் பார்க்கும் சிங்களர்களானாலும் சரி, (பாலஸ்தீனர்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் என்று யாராயிருந்தாலும்) ஆயுதம் எடுத்தால் பாதிக்கப்படுவது சுற்றி இருக்கும் எல்லோரும்தான்.

குழந்தைகள், அப்பாவிகள், முதியவர்கள் எல்லோரையும் வருத்தி எரித்துப் போட்டு விடுகிறது இந்த ஆயுதப் போராட்டங்கள். நம்முடைய வாழ்க்கையை ஈடுபடுத்திக் கொள்ளாத வரை அப்படிப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பது நேர்மையற்ற செயலாகவே இருக்கும்.

வருத்தத்துடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//நம்முடைய வாழ்க்கையை ஈடுபடுத்திக் கொள்ளாத வரை அப்படிப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பது நேர்மையற்ற செயலாகவே இருக்கும்.//

உங்களுக்கு இன்னமும் ஒரு ‘மயக்கம்’ இருப்பதாகவே தெரிகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் இரு தலைமுறை இளைஞர்களை சயனைடு குப்பி முனையில் ஈடுபடுத்துவது விடுதலைப் போராகாது.

சோழ மன்னர்கள் ஈழத்தில் படையெடுத்து ஜெயித்தார்கள் என்று படிக்கும்போது ‘வீரம் செறிந்த பரம்ப்ரை’ என்று கிக்காக இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் தேவை அரசியல் தீர்வே.

குஜராத்தில் கொன்று குவித்தது இந்துக்கள் மட்டுமா? முஸ்லீம்களும்தான் கோத்ராவில் கொன்றார்கள். கசாப், அப்சல் குரு போன்றோர்களையும் பாதுகாத்துதான் வருகிறோம்.

சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் அனுதாபிகளை மட்டுமல்ல, இந்திராவைக் கொன்ற சீக்கியரையுமே 15 வருடங்கள் கழித்து உரிய முறையில் வழக்குகள் நடத்தி பின்னர்தான் தூக்கிலிட்டார்கள்.

ஹிட்லர், சதாம், ஸ்டாலின், போலோபாட் ஏன் சேகுவாரா கூடத்தான் போர் மற்றும் அடக்குமுறை என்ற பேரில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றிருக்கிறார்கள். வரலாற்றில் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கிறது.

மாற்றுத்தீர்வுகள் இருக்கும்போதும் ஆயுதப் போரை தொடர்ந்து செய்தது நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பயங்கரவாதம்தான்.

டண்டணக்கா சொன்னது…

/*
1. PLOT and TELO leaders were hunted and killed, some of them in India
2. One Indian former prime minister
3. One Srilankan president
4. A number of Srilankan ministers
*/

Can't people understand the difference between "Political Assassinations" and "Terrorist Attacks".

My question is....

1) How many mass attacks/bombings LTTE done on "civilians as primary target" (including Sinhalese) ?

2) Have they killed brutally the captured SLA Soldiers?

3) How many aerial raids they had done on civilian targets.

Answer to these will clearly classify them as freedom fighters, who used weapons for their cause.

Ask right questions and answer with facts.