வியாழன், ஜூலை 29, 2010

கேள்விக்குப் பதில் கிடைக்குமா? - 4

1996ல் திரு உமாசங்கர் உயர் மட்ட ஊழல்களைப் பற்றி விசாரிக்க கூட்டுக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.

1. சௌத் இந்தியா ஷிப்பிங் கார்பொரே ஷன் பங்கு வினியோக ஊழல் - ரூபாய் 200 கோடிகள் இழப்பு

2. கிரானைட் குவாரி குத்தகை ஊழல் - ரூபாய் 1000 கோடிகள் இழப்பு

3. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனை மற்றும் வீடுகள் போலி பெயர்களில் வழங்கப்பட்டது. (இழப்பு மதிப்பிடப்படவில்லை)

4. விதிமுறைகளுக்கு மாறாக தேவையை கணக்கிடாமல் 45000 தொலைக்காட்சி ஆன்டெனா மற்றும் பூஸ்டர்கள் வாங்கியது

5. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியின் 20 ஏக்கர் நிலத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் என்ற பெயரில் நட்சத்திர விடுதி போன்றவற்றுக்கு குத்தகைக்கு விட்டது

6. மதுரை / தேனி மாவட்டங்களில் உள்ள மேகமலை காட்டுப் பகுதியில் 7106 ஏக்கர் நிலத்துக்கான பட்டா ஒரே குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

போன்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உயர் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எந்த அதிகாரி மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கண்காணிப்பு ஆணையரின் இந்த அறிக்கைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

14 கருத்துகள்:

KARTHIK சொன்னது…

இப்படியே கேட்டுகிட்டு இருந்தா களி தாண்ணா கிடைக்கும்.
இன்னும் ஒரு 10 பேர் இவரப்போல சகாயம்,உதய்சந்திரன் போல வந்தாங்கன்னா வேனா ஒரு மாறுதல் வரும்.

மா சிவகுமார் சொன்னது…

கார்த்திக்,

களி எல்லாம் கிடைக்காது என்று லக்கிலுக்கே சொல்லி விட்டார் :-)

"உமாசங்கர் பதவி ஏற்றது முதலே நடைமுறைக்கு மாறான, ஒழுங்கற்ற, அநியாயமான முறையில் செயல்பட்டு வருகிறார்"
என்று மர்மமான தொலைநகலி எண்ணிலிருந்து செய்தித் தாள்களுக்கு வந்த தகவல் தெரிவித்ததாம்.

நீங்கள் சொன்ன உமாசங்கர், சகாயம், உதய் சந்திரன் போன்ற அதிகாரிகளுக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி ஒதுக்கி வைக்கத்தான் முயற்சிப்பார்கள்.

எல்லோரும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதில் வெற்றி அடையவும் செய்வார்கள் :-(

மா சிவகுமார்

உண்மைத்தமிழன் சொன்னது…

மா.சி. ஒண்ணுமே செய்ய முடியாது..!

தினம்தோறும் மாறும் கால நிலை போல அரசியல் பதவி வெறி இப்போதைய ஆட்சியாளர்களை பிடித்துக் கொண்டுவிட்டது..

இதற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..!

எல்லாம் பணம் படுத்தும் பாடு..!

மா சிவகுமார் சொன்னது…

உண்மை,

இப்போதைய ஆட்சியாளர்கள் மட்டுமில்லை, இவர்களுக்கு மாற்றாக எதிரில் நிற்பவர்களும் இதே கலாச்சாரத்தை வளர்ப்பவர்கள்தான். இந்த இடுகையில் கொடுத்த ஊழல்கள் அனைத்தும் 1996க்கு முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்தவை.

இரண்டு பேரும் சொல்லி வைத்துக் கொண்டு, 'நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு' என்று ஊழல் விசாரணை எல்லாம் நடத்திக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

தீவிரமாக விசாரணைகள் நடத்தி நடவடிக்கை எடுத்தால் இரண்டு தரப்பிலும் பெருந்தலைகளில் பலர் பல ஆண்டுகள் சிறைக்குப் போக வேண்டியிருந்திருக்கும். ஊழல்களுக்கு உடந்தையாக அல்லது காரணமாக இருந்த அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கல்வெட்டு சொன்னது…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கலாமே சிவா?

*

அப்படியே முன் ஜாமீன் எடுத்துவிடவும். 2001 ஆம் ஆண்டில் நீங்கள் திருவல்லிக்கேணியில் இருந்து பாரிமுனை செல்லும் பஸ்ஸில் "சரியான சில்லரை கொடுக்கவும்" என்று எழுதியிருந்ததையும் மீறி , முழு பத்து ரூபாய் நோட்டாக நீட்டி நீங்கள் டிக்கெட் எடுக்க முயற்சித்தது இன்று வழக்ககாக மாற வாய்ப்புள்ளது.

அப்படியே நீங்கள் நடத்துனரை அடிக்க முயற்சித்தாக சொல்லி கிரிமினல் வழக்காகவும் மாற வாய்ப்புள்ளது.

மனு போட்டாலும் களி நீங்கள்தான் சாப்பிட வேண்டும்.

அடிமைச் சமுதாயம் உங்களைக் கண்டு கொள்ளாது.

*


நான் முன்பு ஒருமுறை சொன்னது போல மக்கள் சரியில்லை சிவா (நான் உட்பட) சகித்துக் கொள்ளும் சமுதாயத்தில் புரட்சிகள் வராது.

அரிசோனா மாநிலத்தில் புதிய சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் மக்கள் தெருவிற்கு வந்து போராடுகிறார்கள். உங்கள் நினைவில் இருந்து தமிழகத்தில் கட்சி தாண்டிய மக்கள் போராட்டம் ஒன்றைக் கூறுங்கள்?


பேசாமல் காட்டிற்குள் சென்று வாழலாம் என்று தோன்றுகிறது.

:-(((

*

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

//தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கலாமே சிவா?//

அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.

//அப்படியே நீங்கள் நடத்துனரை அடிக்க முயற்சித்தாக சொல்லி கிரிமினல் வழக்காகவும் மாற வாய்ப்புள்ளது.//

இந்த பயத்தை மக்கள் மனதில் விதைத்து விட்டது இன்றைய அரசியல்வியாதிகளின் வெற்றி.

திரு உமாசங்கர், 'ஏதாவது கிளறி நம்முடைய சாதி சான்றிதழைப் பற்றி வழக்கு போட்டு விடுவார்கள், என் மனைவி வேலை பார்ப்பதை வீண் விவகாரமாக வழக்கு போடுவார்கள்' என்று நினைத்து அதிகாரத் தரகர்களின் செயல்பாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது தானும் அதில் சேர்ந்திருக்க வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை.

அப்படி நமக்கும் பல தொந்தரவு தரும் புள்ளிகள் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது. 'அப்படி நடக்காது' என்று நம்பி, 'நடந்தாலும் எதிர் கொள்வோம்' என்று துணிந்து செய்ய வேண்டியதை செய்ய வேண்டியதுதான்.

அன்புடன்,
சிவகுமார்

Ravichandran Somu சொன்னது…

மா.சி,

நீங்க பாட்டுக்கு கேட்டுகிட்டே இருங்க... யாரும் பதில் சொல்ல போறதில்லே!

//களி எல்லாம் கிடைக்காது என்று லக்கிலுக்கே சொல்லி விட்டார் :-)
//

லக்கி சொல்லறத நம்பி தொடர்ந்து கேட்டுக்கிட்டேயிருந்திங்கன்னா... அப்புறம் உண்மையிலேயே ஆட்டோ வந்துடும்:)

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Ravichandran Somu சொன்னது…

//இரண்டு பேரும் சொல்லி வைத்துக் கொண்டு, 'நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு' என்று ஊழல் விசாரணை எல்லாம் நடத்திக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. //

முற்றிலும் உண்மை...

மா சிவகுமார் சொன்னது…

ரவிச்சந்திரன்,

இன்னும் தொடர்ந்து கேட்கணும் என்றுதானே சொல்றீங்க, கொஞ்சம் விபங்களையும் குறிப்பிட்டுக் கேட்கப் பார்க்கிறேன்.

யார் படிப்பார்கள், யார் பதில் சொல்வார்கள் என்றுதான் கேள்வி!

PRABHU RAJADURAI சொன்னது…

http://indiankanoon.org/doc/895481/

PRABHU RAJADURAI சொன்னது…

"Where, on the other hand, having regard to its structure, as it has evolved over the years, a caste may consist not only of persons professing Hinduism but also persons professing some other religion as well, conversion from Hinduism to that other religion may not involve loss of caste, because, even persons professing that other religion ca be members of the caste. This might happen where caste is based on economic or occupational characteristics and not on religious identity, or the cohesion of the caste as a social group is so strong that conversion into another religion does not operate to snap the bond between the convert and the social group. This is indeed not an infrequent phenomenon in South India, where, in some of the castes, even after conversion to Christianity, a person is regarded as continuing to belong to the caste"

Supreme Court in CM Arumugam's case
http://indiankanoon.org/doc/853334/

PRABHU RAJADURAI சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மா சிவகுமார் சொன்னது…

//http://indiankanoon.org/doc/895481/

படித்ததில் புரிந்தது:

ஆதிதிராவிடர் பெற்றோர் கிருத்துவ மதத்துக்கு மாறிய பிறகு பிறந்த மகன் பட்டம் பெற்று, கல்லூரியில் இடம் கிடைக்காததால், இந்துவாக மதம் மாறி, பழங்குடியினர் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தது குறித்த வழக்கு.

இந்தத் தீர்ப்பின்படி அப்படி திரும்பி மதம் மாறியவருக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்க வேண்டும். மதம் மாறிய பிறகு குறிப்பிட்ட சாதியினர், அவரை சாதியில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் பேசப்படுகிறது.

//http://indiankanoon.org/doc/853334/

இதிலும் மேலே சொன்ன அதே வாதங்கள் சொல்லப்படுகின்றன. நீங்கள் மேற்கோளிட்ட பகுதியின் படி, ஒருவர் மதம் மாறினாலும், அவரை அந்த சாதி சமூகத்தினர், தம்மைச் சேர்ந்தவராகவே கருதினால் அவருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.

PRABHU RAJADURAI சொன்னது…

உங்களது புரிதல் சரிதான். ஆனால் நான் வலியுறுத்த விரும்பியது 1976ம் ஆண்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள். கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்ததால், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொடுமைகள், குறிப்பாக தென்னிந்தியாவில் இல்லாமல் போகவில்லை என்ற கருத்துதான் அது.

இதனை கருத்தில் கொண்டே, உமாசங்கரைப் போன்று பல்வேறு வழக்குகளில் நமது உயர்நீதிமன்றம் மதம் மாறி ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்பு கூறியுள்ளது, நான் சமீபத்தில் நடத்திய ஒரு வழக்கு உட்பட.

அவரது பெற்றோர் அல்லது சகோதர சகோதரிகள் எப்படியிருப்பினும், சம்பந்தப்பட்டவர் ஒரு இந்துவாக வாழ வேண்டும். அவ்வளவுதான்.

திருநெல்வேலிப் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி மதம் மாறியவர்கள்தான். மற்றொரு முக்கிய உதாரணம் மறைந்த நீதிபதி அசோக் குமார்.

எனவே உமாசங்கர் மீது வேறு ஏதாவது குற்றம் சாட்டட்டும்...இது தேவையற்றது!