ஞாயிறு, ஜூலை 18, 2010

தமிழக அரசியல் அசிங்கம்!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!

1. திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் போது மாவட்ட நிர்வாகப் பணிகளில் கணினி மயமாக்கம் ஆரம்பித்து இந்தியாவிலேயே (ஏன், உலகிலேயே) அரசுப் பணிகளில் கணினி பயன்படுத்தலுக்கு முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மாற்றினார்.

இது நடந்தது முந்தைய 1990களின் இறுதியில் முந்தைய திமுக ஆட்சியின் போது.

2. ஆட்சி மாறி அதிமுக பதவிக்கு வந்த போது இலாகா இல்லாத அதிகாரியாக மாற்றப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்.

3. மீண்டும் ஆட்சி மாறிய பிறகு, எல்காட் நிறுவனத்தின் செயலராக இருந்த போது பள்ளிகளுக்கு கணினிகளை திறவூற்று மென்பொருட்களுடன் வினியோகித்தார். தமிழ்நாட்டில் திறவூற்று மென்பொருட்களை பரவலாக்க பல முயற்சிகளை எடுத்தார்.

குறைந்த விலையில் மடிக்கணினிகளை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்தினார்.

4. ஏதோ அரசியலினால் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு அரசு கேபிள் திட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

அந்தத் திட்டத்தையும் சிறப்பாக செய்து முடித்திருப்பார், இந்த குடும்ப அரசியல் காய் நகர்த்தல்களில் மாட்டிக் கொண்டு மீண்டும் ஒரு திறமையான அதிகாரி, செய்து காட்டும் முனைப்புடைய அதிகாரி, சமூக பொறுப்புணர்வு கொண்ட அதிகாரி பணி முடக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் சாபக் கேடு இது.

6 கருத்துகள்:

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//தமிழ்நாட்டின் சாபக் கேடு//

ம் எப்ப‌த்தான் மாறுமோ??

KARTHIK சொன்னது…

நல்ல ஆட்களை எல்லாம் இப்படி பந்தாடுராங்க :-((

இரவிசங்கரின் சொன்னது…

இது மக்களாட்சியின் சாபக்கேடு....

உண்மைத்தமிழன் சொன்னது…

மஞ்சள் துண்டுவின் குடும்ப அரசியலுக்கு பலிகடா ஆக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி..!

வாழ்க திராவிடம்..!

மா சிவகுமார் சொன்னது…

இரவிசங்கரின்,

மன்னராட்சியில் மன்னரின் தரத்தில்தான் ஆட்சியும் இருக்கும் என்றால் மக்களாட்சியில் மக்களின் தரத்தில்தான் அரசு அமையும்.

மக்களிடையே விழிப்புணர்வும் தட்டிக் கேட்கும் போக்கும் உருவானால் இந்த சாபக்கேடு மாறும், நிலைமையும் மாறும்.

நன்றி கரிசல்காரம், கார்த்திக், உண்மைத் தமிழன்.

பெயரில்லா சொன்னது…

//மஞ்சள் துண்டுவின் குடும்ப அரசியலுக்கு பலிகடா ஆக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி..!

வாழ்க திராவிடம்..!

Tue Jul 20, 11:54:00 PM IS//

அட கிறுக்கா..இதுக்கும் திராவிடத்துக்கும் என்னடா சம்பந்தம்?