தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை -
நவம்பர் 19, 2006 அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் கூட்டத்தில் வாசித்தளித்த கட்டுரை.
முதலில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த சிலருக்கு தெரியாமல் இருக்கக் கூடிய விபரங்கள்:
தனிக் கணினிகள் கணக்கிடுதலைத் துரிதப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு பின்னர் பல பயன்பாடுகளுக்குப் பயன்படும் வண்ணம் வளர்க்கப்ப்பட்டன. இந்தக் கணினிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கணினி வலைகள் உருவாயின. இந்த வலைப்பின்னல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து உலகளாவிய ஒரு கணினி இணையம் உருவானது எண்பதுகளின் பிற்பகுதியில்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் குறிப்பிட்ட தேவைக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலகப் போர் மூண்டு கணினிக் கட்டமைப்பின் ஒரு பகுதி அழிந்து விட்டாலும், மற்ற பகுதிகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். இன்றைக்கும் இணையத்தில் எந்தக் கணினியும் மையக் கணினி கிடையாது. ஒன்று போனால் இன்னொன்று அதன் பணியை எடுத்துக் கொள்ளும்.
அந்த அடிப்படையில் உருவான தொழில்நுட்ப கட்டமைப்பைப் பயன்படுத்தி பயன்பாடுகள் பல உருவாயின. அவற்றில் புகழ் பெற்ற இரண்டு மின்னஞ்சல்களும் வைய விரிவு வலையும். அடுத்த பத்து ஆண்டுகளில் மின்னஞ்சல்கள் மூலை முடுக்கெல்லாம் பரவி உலகெங்கும் உள்ள தொழில்களுக்கும் தனி நபருக்கும் தகவல் தொடர்பு கருவியாக வளர்ந்து விட்டன.
வையவிரிவுவலை கோடிக் கணக்கான வலைப் பக்கங்களை இணைக்கும் ஊடகமாக உருவானதும் அதைப் பயன்படுத்தி நடைமுறை கருவிகளை உருவாக்க பெரும் இயக்கம் ஆரம்பித்து டாட்காம் பூம் என்று விரிந்து வெடித்து ஓய்ந்தது.
இப்போது இரண்டாவது அலையாக இணையத்தையும் அதன் மேல் இயங்கும் வையவிரிவு வலையையும் பயன்படுத்தி கணினிகளைத் தாண்டி கணினிக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களை இணைக்கும் முயற்சிகள் பல வெற்றிகரமாக உருவாகி வருகின்றன.
வலைப்பதிவுகள், வலைப்பக்கங்களை உருவாக்குவதை எளிதாக்க வேண்டும் என்று முயன்றதில் வந்த சிக்கலற்ற கருவிகள். வையவிரிவுவலை ஆரம்பத்திலேயே இருந்தக் கருவிகளையே பயன்படுத்தி செயல்படுபவைதான் வலைப்பூக்களை எழுதி சேமிக்கும் முறை. யார் வேண்டுமானாலும் தனது எண்ணங்களை, புரிதல்களை, அனுபவங்களை வலையில் இடலாம் என்று வசதி செய்து கொடுக்கின்றன வலைப்பூ கருவிகள்.
எழுதியதைப் பரவலாக்கும் வலைச் சேவை தொழில்நுட்பம் மட்டும்தான் சமீப காலத்தியது.
சென்னபட்டிணம்
15 கருத்துகள்:
நண்பருக்கு,
எங்களைப் போன்ற அஞ்ஞானங்களுக்கு கொஞ்சம் நிறுத்தி நிதானித்துச் சொன்னால்தான் புரிகிறது. கவிதை பிடிக்கிற அளவுக்கு கணனி பிடிப்பதில்லை. தொழினுட்ப ஒவ்வாமை என்றொரு நோய்தான் காரணம். தகவலுக்கு நன்றி.
Shivakumar,
For your kind Information Internet was not invented by the US it was invented by CERN a research organisation in geneva.As usual the americans covered up this fact and they started telling the world that they invented the Internet with as usual lies(this is one such thing.) http://en.wikipedia.org/wiki/CERN check here for more information.
உங்கள் கட்டுரையின் அடிநாதமாக "தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்" என்ற எண்ணத்தையே பார்க்கிறேன். அதுதான் உண்மை.
மேலே செல்வது பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் கூட அவற்றுக்கான தேவை பலரால் உணரப்படுவதால் மட்டுமே செயல்படுத்தப்படும். ஊதுகிற சங்கை நீங்கள் ஊதி விட்டீர்கள். பிறகு என்ன ஆகிறது என்று பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Link to that CERN site where they say this fact. http://public.web.cern.ch/Public/Content/Chapters/AboutCERN/Achievements/WorldWideWeb/WWW-en.html
ஆஹா.... இப்படியே கணினி சம்பந்தமான தமிழாக்கங்களையும் தெரிஞ்சுக்க முடியுது. அதுக்கு ஒரு சிறப்பு நன்றி.
ஆனா இதை எவ்வளவு தூரம் புரிஞ்சுக்குவேன்னு தெரியாது.
முயற்சிக்கிறேன்.
உம்.... சொல்லுங்க.அப்புறம்?
அஞ்ஞானங்களுக்கு மெய்ஞானம்
சொல்றீங்க....கொஞ்சம் ஆங்கில
வார்த்தைகளையும் அடைப்புக்குள்ளே
போட்டா நல்லா இருக்கும் போல
தோணுது.
அருமையான கலைச் சொல்லாக்கம் செய்த கட்டுரை சிவா! நன்றி!
சிஜி சார் சொல்லுகிற மாதிரி அடைப்புக்குள் ஆங்கிலம், ஒப்பு நோக்க எளிதாய் இருக்கும்!
உங்களுக்கு வேலைப்பளு,நேரமில்லை என்றால், இதோ:
தனிக் கணினி = Personal Computer
கணினி வலைகள் = Computer Networks
வைய விரிவு வலை = World Wide Web
கணினிக் கட்டமைப்பு = Computer Infrastructure.
மிஸ்டர் சிவகுமார்
உங்கள் முயற்சிகளுக்கு எங்களது மனப்பூர்வமான ஒத்துழைப்பும், பாராட்டுக்களும்,நன்றியுடைமையும் எப்போதும் உண்டு.
வலைப்பூக்களை மேம்படுத்துவதற்கும், தமிழ் அறிந்த அனைவரையும் - கணினி வைத்திருக்கும் தமிழ் அன்பர்கள் அனைவரையும் நமது வலைப்பூக்கள் சென்றடைவதற்கு
உள்ள வழிமுறைகளுக்கும் ஏதாவது சிறப்பாகச் செய்யுங்கள்
வாழ்த்துக்கள்!
SP.VR.SUBBIAH
வணக்கம் தமிழ்நதி,
எனக்குப் புரிந்தவற்றை நிதானமாகவே சொல்ல முயல்கிறேன். இது ஒன்று கம்ப சூத்திரம் இல்லை. எல்லோரும் எளிதாக புரிந்து கொண்டு விடக் கூடியதுதான்.
அன்புடன்,
மா சிவகுமார்
சந்தோஷ்,
தகவலுக்கு நன்றி. CERN கண்டு பிடித்திருந்தாலும், முதல் முதலில் நடைமுறைப் பயன்பாட்டில் பரவலாகப் பயன்படுத்தியது அமெரிக்க ராணுவம்தானே?
அன்புடன்,
மா சிவகுமார்
டோண்டு சார்,
சங்கை ஊதா விட்டால் சத்தமே வராதே! ஊதுவதை ஊதிவிட்டால் சிலருக்காவது கேட்டு விடுமே :-)
அன்புடன்,
மா சிவகுமார்
துளசி அக்கா,
கணினிதான் ஏற்கனவே பயன்படுத்துகிறீர்களே, பின்னணி புரிந்து கொள்வது சுலபம்தான்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிஜி ஐயா,
பொருளாதாரம் போலவே ஆங்கிலப் பதங்களை சேர்க்கச் சொல்லுகிறீர்கள். படிக்கும் போது நிரடக் கூடாதே என்றுதான் தயக்கம். பின்னொட்டாக கொடுத்து விடலாமா?
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி கண்ணபிரான் ரவிசங்கர்,
அன்புடன்,
மா சிவகுமார்
//வலைப்பூக்களை மேம்படுத்துவதற்கும், தமிழ் அறிந்த அனைவரையும் - கணினி வைத்திருக்கும் தமிழ் அன்பர்கள் அனைவரையும் நமது வலைப்பூக்கள் சென்றடைவதற்கு
உள்ள வழிமுறைகளுக்கும் ஏதாவது சிறப்பாகச் செய்யுங்கள்//
கண்டிப்பாக செய்ய வேண்டும் ஐயா. கணினி வைத்திருப்பவர்கள் மட்டுமின்று தமிழ் திருமண தளங்களைப் போல கணினி அறிவு இல்லாதவர்களும் வலைப் பதிவு மூலம் பலன் பெறக் கூட சிந்திக்கலாம்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
கருத்துரையிடுக