- technoratiயில் இருப்பது போல ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு கணக்குக் கொடுத்து தனது பதிவுகளை ஒரே இடத்தில் கண்காணிக்க வசதி செய்யலாம்.
- பதிவுகளை ஒரு சில காரணிகளின் அடிப்படையில் மதிப்பிட்டு வரிசைப் படுத்தலாம்.
- 10 அதிகமாகப் பார்வையிடப்பட்ட பதிவுகள்
- 10 அதிகமாக பின்னூட்டமிடப்பட்ட பதிவுகள்
- அதிகமான் எண்ணிக்கையில் எழுதிய பதிவர்கள்
- பின்னூட்டம் கொடுத்தவர்கள்
- நீண்ட காலம் பதிந்து கொண்டு இருப்பவர்கள்
என்று சுவையான விபரங்களைப் பட்டியலிடலாம்
- செந்தழல் ரவி வேலை வாய்ப்பு பதிவு ஆரம்பித்ததைத் தொடர்ந்து யாராவது வர்த்தக வாய்ப்புகளுக்காக ஒன்றை ஆரம்பிக்கலாம்.
- ஒவ்வொருவரும் தன் வீட்டில் கேரேஜ் விற்பனை செய்வது போல கடை திறக்கலாம். இது நடக்கலாம், நடக்காமல் போகலாம்.
நமக்கு தொழில் செய்வது, பணம் ஈட்டுவது என்பது ஒரு அவமானமாகவே இன்னும் இருந்து வருகிறது. வலைப்பதிவின் மூலம் ஒருவர் சம்பாதிக்க முயல்வதை இழிவாகக் கருதும் வரை இது வளர முடியாது.
- வலை திரட்டிகளிலேயே, இலக்கியம், வணிகத் தொடர்புகள், விவாத மேடை என்று தனிப் பிரிவுகள் வடிவமைப்புகள் கொடுக்கலாம்.
- வலைப்பதிவர்கள் சிலரை குறிப்பிட்ட காரணியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பதிவுகளுக்கு மதிப்பெண் கொடுக்கச் சொல்லலாம். எல்ல்லோருக்கும் இந்த உரிமை இல்லாமல் நல்ல நடத்தை உள்ளவர்களுக்கு மட்டும் கணினி நிரல் அடிப்படையில் இதைச் செய்ய வேண்டும்
.
மட்டுறுத்தும் வசதியை அளித்து மோசமான பதிவுகளை கீழிறக்கச் செய்யலாம்.
==நிறைந்தது. ===
1, 2, 3, 4
3 கருத்துகள்:
நல்ல கட்டுரை. என்னுடைய ரெண்டணாவுடன் (பதிவு/கருத்துக்கள்) விரைவில் வருகிறேன்
வணக்கம் பாலா. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
posted... ஈ - தமிழ்: "Tamil Blogs - Comaprison with the English World"
கருத்துரையிடுக