இந்து நாளிதழின் விளையாட்டுப் பிரிவு தலைமை ஆசிரியர், நிர்மல் சேகர். அவரைப் போல் விளையாட்டுக்களை அனுபவித்து ரசித்து எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவரது இன்றைய கட்டுரையைப் படியுங்கள்.
அவர் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்ட ஒரு சம்பவம், இரண்டு ஆண்டுகள் விம்பிள்டன் வெற்றி வீரராக இருந்து அடுத்த ஆண்டில் இரண்டாம் சுற்றில் தோற்ற உடனான பத்திரிகையாளர் சந்திப்பில், போரிஸ் பெக்கர் சொன்னது.
"ஏன் எல்லோரும் இப்படி உம்மென்று இருக்கிறீர்கள். மைதானத்தில் யாரும் செத்து விடவில்லை, நான் ஒரு ஆட்டத்தில் தோற்று விட்டேன் அவ்வளவுதான்." இது நடக்கும் போது பெக்கருக்கு இருபது வயது நிரம்பவில்லை.
விதர்பாவில் விவசாயிகள் சாகும் பிரச்சனையை விட்டு விட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் இல்லை, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியோ, தோல்வியோ!
தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா: இந்திய கிரிக்கெட் அணியின் அடிமைத் தன்னிலை !
4 கருத்துகள்:
ஒரு காலத்துலே நானும் இந்த 'க்ரிக்கெட்' பைத்தியம் முத்தி இருந்தவள்தான்.
மேட்ச் ஃபிக்ஸிங் என் கண்ணைத் திறந்துருச்சு. இப்ப எல்லாம் ஏதோ செய்தின்ற
அளவுலே கண்ணு பார்த்துட்டு நகர்ந்துருது.
விளையாட்டுலெ வெற்றி தோல்வி சகஜம். அளவுக்கு மேலே எல்லாத்துக்கும்
'ஹீரோ வொர்ஷிப்' நிறுத்துனாவே போதும்.
இதைவிடக் கவலைப்படவேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் நாட்டுலெ இருக்கு.
வணக்கம் துளசி அக்கா,
பொழுதுபோக்கை எல்லாவற்றையும் எதிர்க்கக் கூடாது என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார். பொழுது போக்கு அந்த அளவில் நின்று விட்டால் பரவாயில்லை. நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அளவுக்கு என்ன நடந்து விட்டது என்று புரியவில்லை. அதைத்தான் சுட்டிக் காட்டுகிறார் நிர்மல் சேகர்.
அன்புடன்,
மா சிவகுமார்
************************
மா.சி,
என் பதிவுக்கு லிங்க் கொடுத்தமைக்கு நன்றி :) இப்போது தான் கவனித்தேன் ! கடுப்பில தான் எழுதினேன் ;-)
நிர்மல் சேகர், ஆங்கிலப் புலமையிலும், விளையாட்டு (முக்கியமாக கிரிக்கெட், டென்னிஸ்) விமர்சனத்திலும் வித்தகர் என்பது என் எண்ணம். இல்லையா ? இன்னிக்கு என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் !!!
எ.அ.பாலா
*****************
வணக்கம் பாலா,
நேற்றே உங்கள் பதிவைக் கவனித்தேன். இன்று காலையில் தொடர்புடையதாக நிர்மல் சேகரின் கட்டுரை. அதுதான் லிங்க் கொடுத்து எழுதினேன் :-)
பள்ளியில் படிக்கும் போது மோனிகா செலஸ் ஸ்டெஃபி கிராபை ஃபிரெஞ்சு ஒப்பன் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்கடித்தவுடன் அவர் எழுதிய கவிதை மழையான கட்டுரையிலிருந்துதான் நிர்மல் சேகரின் ரசிகனானேன்.
அப்போதெல்லாம் பெரிய டென்னிஸ் போட்டிகள் வருவதை அவரது விமரிசனம் படிக்கலாம் என்பதற்காகவே எதிர்பார்த்துக் காத்திருப்போம்!
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக