புதன், ஆகஸ்ட் 08, 2007

பட்டறை - விவாதம்

பதிவர் பட்டறையில் மாலன் பேசியதைக் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த சமயத்தில் அரங்கை ஒருங்கிணைத்தவன் என்று முறையில் சின்ன குறிப்பு:

உண்மையில் கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை. எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாற்றுத் திசையில் விவாதம் திரும்பாமலும் நேரம் அதிகமாக ஆகி விடாமலும்தான் கவனம் செலுத்தினேன். அதனால்தான் நன்னடத்தை தொடர்பான உரையைத் தொடர்ந்து விவாதம் நீளாமல் நிறுத்த நேரிட்டது.

பொறுப்புள்ள மூத்த பத்திரிகையாளராக, பதிவராக காலையில் ஒரு விவாதத்தின் போது 'அரசியல் கொள்கை விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை' என்று அழகாக விளக்கினார் மாலன்.

வலை நன்னடத்தை என்ற தலைப்பில் பேச வேண்டிய முத்துகுமரன் வர முடியாமல் போகவே கடைசி நேரத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்தத் தலைப்பில் பேசினார் மாலன். அந்த உரையின் இறுதியில் பெயரிலியுடனான அவரது விவாதங்கள், ஒரு ஆங்கில நாளிதழ் ஆசிரியரைக் குறித்த குறிப்புகள், அதை ஒட்டி ஈழத்தமிழர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அனைத்தும் பட்டறையின் நோக்கத்துக்கும் உணர்வுக்கும் பொருந்தாதவை என்றே நம்புகிறேன்.

இனிமேல் பட்டறைகள் நடத்தும் போது இது போன்ற கருத்து அரங்குகள் தேவை இல்லை என்று தோன்றுகிறது. அவற்றைத்தான் நாள்தோறும் பதிவுகளில் செய்கிறோம். அவ்வப்போது சந்திப்புகளில் பேசிக் கொள்கிறோம். பட்டறைகளில் கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் மட்டும் நடந்தால் போதும்.

13 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

இப்ப என்ன நடக்குது? போஸ்ட் மார்ட்டமா?

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

மா.சி.
நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவு அமாநாட்டை (unconference)க் குறித்துப் கடந்த இரு நாட்களில் எழுதப்பட்ட பதிவுகளை வைத்து, கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை வைத்தும் நோக்கும்போது வெற்றிகரமாக நடந்ததாக அறிய முடிகிறது. பட்டறை என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த அமாநாட்டின் வெற்றி ஏற்கனவே வலைப்பதிபவர்கள் எவ்வளவு பேர் கலந்துகொண்டார்கள் என்பதை விட அடுத்த ஒரு மாதத்தில் எத்தனைபேர் புதிதாக வலைப்பதிய ஆரம்பிக்கிறார்கள் என்பதில் தான் தெரியவரும் (தமிழ்மணம் புள்ளியல் பக்கத்தை உற்று கவனிக்கவேண்டும்). இதில் உற்சாகமாக ஈடுபட்டுச் செயலாற்றிய உங்கள் அனைவரது உழைப்பும் வீண்போகாது என்று நம்புகிறேன்.

சமீபகாலமாக வலைப்பதிவாளர் கூட்ட அஜெண்டாக்களில் "போலி ****" இல்லாதிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. இப்போது அந்த இடத்தில் பெயரிலியை உதாரணமாக வைத்துப் நன்னடத்தை பற்றி பேசுவது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்த கட்டற்ற ஊடகவடிவத்தை முன்வைத்து பேசும்போது நீதிபோதனை செய்வது நகைமுரண்.

மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் ஒலி/ஒளி வடிவங்கள் வலையேற்ற முடிந்தால் செய்யவும். கலந்துகொள்ள முடியவில்லையே என்று ஆதங்கப்படுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போது பேசப்படும் பிரச்சினைகளைப் பற்றியும் தெளிவு கிடைக்கும்.

வெற்றி சொன்னது…

சிவகுமார்,

முதலில், உங்களுக்கும் உங்களுடன் இணைந்து கடினமாக உழைத்து பட்டறையை வெற்றிகரமாக நடாத்திய அனைவருக்கும் என் நன்றிகள். பாராட்டுக்கள்.

உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

/* பொறுப்புள்ள மூத்த பத்திரிகையாளராக, பதிவராக காலையில் ஒரு விவாதத்தின் போது 'அரசியல் கொள்கை விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை' என்று அழகாக விளக்கினார் மாலன். */

:-)

/* ஈழத்தமிழர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அனைத்தும் பட்டறையின் நோக்கத்துக்கும் உணர்வுக்கும் பொருந்தாதவை என்றே நம்புகிறேன்.*/

தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

/* இனிமேல் பட்டறைகள் நடத்தும் போது இது போன்ற கருத்து அரங்குகள் தேவை இல்லை என்று தோன்றுகிறது. */

ஒரு சிலர் முறைதவறி நடந்துவிட்டார்கள் என்பதற்காக கருத்தரங்குகளை நிறுத்துவது சரியில்லை என எனக்குப் படுகிறது.

இச் சம்பவத்தை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு, இப்படியான நிகழ்வுகள் வராமல் தடுப்பதே நல்லதெனெ நினைக்கிறேன்.

Voice on Wings சொன்னது…

//பட்டறைகளில் கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் மட்டும் நடந்தால் போதும்.//

வழிமொழிகிறேன்.

Boston Bala சொன்னது…

---ஒரு மாதத்தில் எத்தனைபேர் புதிதாக வலைப்பதிய ஆரம்பிக்கிறார்கள் என்பதில் தான் தெரியவரும்---

உங்களைப் போன்ற (மூத்த?) பதிவர்கள், உற்சாகம் கொண்டு, தொடர்ச்சியாகப் பதிவதும் இது போன்ற நிகழ்வுகளின் வெற்றியை கவனிக்க உதவும்.

நாள்தோறும் புதிது வருவது முக்கியம் என்பது போல்; ஏற்கனவே இருப்பவர்கள், தொடர்ச்சியாக எழுதுவதும் முக்கியமானது. இல்லாவிட்டால், கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் ஐநூறு மாணவர் படித்து, வெளியில் சென்றுவிடுவது போன்ற நிலைதான் மிஞ்சும்.

விதுரன் சொன்னது…

மாலன் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? உங்களைப் போலவே எனக்கும் வலையுலகில் எதிர்ப்பு இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். அவருடைய பேச்சு பட்டறையின் நோக்கத்திற்கு உகந்தது அல்ல என்று நீங்கள் நினைத்திருந்தால் உடனேயே அங்கேயே அவருடைய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் பிரச்சினை முடிந்த பிறகு கருத்து தெரிவிப்பது மாலன் என்கிற ஊடகவியலாரின் அருமையை நீங்கள் உணர்ந்ததால் ஏற்பட்ட ஒரு தயக்கம் என்றே நான் நினைக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

புரிதலுக்கு நன்றி நண்பர்களே.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

எங்கள் ஊர் பக்கம் ஒரு சொலவடை உண்டு, 'நாயைக் குளுப்பாட்டி ..' என்று ஆரம்பிக்கும். அதுபோல, வலைப்பதிவை விட்டே போகிறேன் என்று சொன்ன மாலனை ஏன் இத்தனை முக்கியத் துவம் கொடுத்துத் தாங்கினீர்கள். அதற்குத் தான் அனுபவிக்கிறீர்கள். படுங்கள், பட்டால்தான் புத்தி வரும்.

வவ்வால் சொன்னது…

மா.சி,

பதிவர் பட்டறையின் நோக்கம் எத்தகையது என்பது அனைவருக்கும் புரியும், அதில் மாலன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்பதும் தெளிவுள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள், எனவே மேலும் மேலும், வருத்தம் தெரிவிக்கும் போக்கில் பேசிக்கொண்டே பொனால் கடைசியில் விவாதமே திசை திரும்பி வேறு எங்கோ போய் நிற்கும். எனவே இதற்கு இத்தோடு மங்களம் பாடி விட்டு அடுத்து என்ன எனப்பேசலாம்.

பட்டறையை நடத்தியவர்களும் பதிவர்களே,பட்டறை மிகப்பெரும் வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. எனவே யாரும் தவறாக எதையும் எடுத்துக்கொள்ள போவதில்லை, அடுத்த நிலை என்ன என ஒரு திட்ட முன் வறைவு உருவாக்குங்கள் மா.சி.

ஓகை சொன்னது…

சிவக்குமார்,

//இறுதியில் பெயரிலியுடனான அவரது விவாதங்கள், ஒரு ஆங்கில நாளிதழ் ஆசிரியரைக் குறித்த குறிப்புகள், அதை ஒட்டி ஈழத்தமிழர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அனைத்தும் பட்டறையின் நோக்கத்துக்கும் உணர்வுக்கும் பொருந்தாதவை என்றே நம்புகிறேன்.//

இது நிகழ்ந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.


வலை நன்னடத்தை என்ற தலைப்பில் முற்றிலும் புதியவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பட்டறையில் ஒரு உரை நிகழ்த்துவதே அபத்தமானது. இது எப்படி நிரலில் சேர்க்கப்பட்டது என்பது எனக்கு புதிராக இருக்கிறது. இந்தத் தலைப்பை தெரிவு செய்தது மாபெரும் தவறு.

பட்டறை முன்னேற்பாடுகளில் நானும் கொஞ்சம் ஈடுபடாததற்காக இப்போது வருத்தமடைகிறேன்.

SnackDragon சொன்னது…

அன்பின் மா.சி,

பட்டறைக்காக உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். பட்டறை நடந்தவற்றை ஒலிவடிவில் இட்டால் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வவ்வால் சொன்னது…

பத்ரி அவர்களின் பதிவில் ஆடியோ வடிவில் தற்போது சில நிகழ்வுகள் கிடைக்கிறது , தரவிரக்கம் அல்லது நேரடியாக கேட்கவும் செய்யலாம்!

http://thoughtsintamil.blogspot.com/2007/08/blog-post_08.html

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கும், அனைத்து பதிவர் பட்டறை ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.!
-விபின், கோவை.