வியாழன், அக்டோபர் 11, 2007

தொலைக்காட்சியில் மென்பொருள் பற்றி...

"இணையத்தில் கிடைக்கும் இலவச மின்பொருட்கள்" என்ற தலைப்பில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை ஜெயா தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி நிகழ்ச்சியில் பாரதி என்ற நண்பர் கலந்து கொள்கிறார். திறவூற்று/பரி நிரல் உலகில் பல ஆண்டுகளாக அனுபவம் உடைய பாரதி பங்கு கொள்ளும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் திறவூற்று மென்பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு மேலும் பரவும்.

வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் பாருங்கள். தெரிந்தவர்கள், நண்பர்களுக்கும் தகவல் சொல்லுங்கள்.

3 கருத்துகள்:

SnackDragon சொன்னது…

அனிபின் மாசி,

இது போன்றதான விடியோக்களை யூட்யூப் போன்றவற்றில் ஏற்றினால்,
பதிவாகவும், வெளிநாட்டில் வாழும் பதிவர்கள் பார்க்கவும் வாய்ப்பாகும்.

சிரமம் பார்க்காமல் முயற்சி எடுக்க முடியுமா?

வடுவூர் குமார் சொன்னது…

மா சிவகுமார்
இன்றிலிருந்தா? எத்தனை நாட்களுக்கு?

மா சிவகுமார் சொன்னது…

கார்த்திக்,

தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சியின் பதிவைக் கொடுக்க மாட்டார்களாம். நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டியின் மூலம் பதிவு செய்வதுதான் ஒரே வழி.

நான் தொலைக்காட்சிப் பெட்டியை ஒதுக்கி கொஞ்ச நாளாகி விட்டது. முயற்சி செய்ய ஆரம்பிக்கவே முடியாதே :-(

குமார்,

ஆமா, நாளைக் குறிப்பிடவில்லை!!. இன்று மட்டும்தான் (அக்டோபர் 11, 2007 வியாழக்கிழமை)
நிகழ்ச்சி நேரம் இந்திய நேரப்படி.

அன்புடன்,
மா சிவகுமார்