எல்லா "மதங்களையும்" தூக்கிச் சாப்பிட்டு விடும் ஒரு மதம் "கம்யூனிசம்" என்று சொல்லப்படும், கட்சி சார்ந்த, புரட்சி செய்ய முனையும் கூட்டத்தினரின் மதம்.
சக மனிதனை ஏய்த்து வயிறு வளர்க்கும் கூட்டத்துக்கு ஏதாவது ஒரு கருவி கிடைத்து விடும். 'மதம் என்று சொல்லிக் கொண்டு தேவாலயங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மதகுருக்களை ஒழித்துக் கட்டுவதாகச் ' சொல்லிக் கொண்டு வந்த புரட்சியாளர்கள், பொதுவுடமை என்று சொல்லிக் கொண்டு கட்சி அலுவலகங்களில், கட்சி என்ற பெயரில் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். (சோஷலிச சீனாவிலும் சோஷலிச ரஷ்யாவிலும்).
கோட்பாடுகள், சித்தாந்தங்கள் எல்லாம் ஒரு உறைதான். சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகள்தான் அதில் வாழும் மக்களின் மனப்போக்கைச் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. 'தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்று வாழும் மனிதர்கள் இருக்கும் உலகில் மனிதம் தளைக்கும்.
தனிமனிதர்கள் பின்பற்றும் கோட்பாடுகள் சரியானதாக இருந்து விட்டால் எந்த முறையிலும் மனிதம் தளைக்கும். கம்யூனிசப் புரட்சி என்று மக்களை ஒடுக்கிய சர்வாதிகாரிகளும் (சோவியத்தின் ஸ்டாலின், அவர் வழி வந்தவர்கள், சீனாவின் மாவோயிச வழி வந்தவர்கள்) உண்டு, முதலாளித்துவ முறையில் எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க விளையும் சமூகங்களும் (வடக்கு ஐரோப்பிய நாடுகள்) உண்டு.
அப்படி ரஷ்யாவும் சீனாவும் பின்பற்றிய சோஷலிசம்தான் விடிவு என்றால் அந்த இரண்டு நாடுகளில் அந்த இசத்தின் கதி என்ன ஆச்சு? ரஷ்யாவில் 70 ஆண்டுகளும், சீனாவில் 30 ஆண்டுகளும் வாய்ப்பு கிடைத்தும், பெருமளவு மக்கள் தொகை, மிகப்பெரிய நிலப்பரப்புடன் இருந்தும் தாக்குப் பிடிக்காமல் அந்தப் 'பொற்காலம்' எங்கே போச்சு?
அதை நம்பித்தான் எல்லோரும் ஆயுதம் ஏந்தி புரட்சியில் இறங்க வேண்டுமாம். தனிமனித உரிமைகள், தனிமனிதனை மதிக்கும் சமூகங்கள்தான் தளைக்கும். அதை மறுக்கும் சோஷலிசம் என்ற முறையில் ஜல்லி அடிக்கும் வித்தகர்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள்தாம்.
பொதுவுடமை என்பது அழகான தேவையான நிலைமை. அதை அடைவதற்கான வழி ஸ்டாலினும், மாவோவும் காட்டியதா அல்லது இந்தியாவின் சிறிய பெரிய 'கம்யூனிஸ்டு இயக்கங்கள்' காட்டுவதா?
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பாதையான இணையம் உருவானது எந்த வழியில்? அதில் எல்லோரும் நடைபோட உதவ எந்த வழியில் சாத்தியமாகும்?
எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் திறவூற்று மென்பொருட்கள் எந்த வழியில் உருவாகின்றன? சமவுடமை சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் மதிப்பு உண்டு. எந்த மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை.
மனிதன் சமூகத்துக்கு அடிமை என்று செங்கொடி ஏந்தி சீன, சோவியத் தலைவர்கள் படம் ஏந்தி நடக்கும் இயக்கத்தினர் காட்டும் வழி இரு பெரும் நிலப்பரப்புகளில் இரு பெரும் மக்கள் சமூகங்களில் தோல்வி அடைந்து போன ஒன்று.
அசுரனின் கட்டுரை
20 கருத்துகள்:
அசுரன் போன்றவருடன் விவாதம் செய்து என்ன அடைவதாக எண்ணம்? அவர்களுக்கு தாங்கள் எதிர்க்கும் உலகமயமாக்கல் மூலமே கிடைத்த வேலையில் இருந்து கொண்டு பொழுது போக்காக சோஷலிசம் பேசுவதே வேலையாகி போயிற்று. நிறைய வெட்டி நேரம் அவர்களுக்கு இருக்கும்போல.
ஆனால் ஒன்று, என் போன்ற கூட்டாளிகள் பதில் கொடுத்தால், பார்ப்பனீயத்தையும் தாக்கி எழுதுவார்கள். உங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை.
சீரியசாகவே கூறுகிறேன். விவாதம் என்றால் நல்ல ஆதாரங்களுடன் விவாதம் செய்வதே நமக்கும் நேர விரையம் ஆகாது தடுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மக்கள் பிரச்சனைக்கு கம்யூனிசம் ஒரு தீர்வோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு கம்யூனிசம் ஒரு சிறந்த நிறுபிக்க பட்ட தீர்வை தந்துள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கலாச்சார புரட்சி (Cultural Revolution)மற்றும் Concentration camps(siberia) மூலமாக குறைந்த காலத்தில் பெரிய அளவில் மக்கள் தொகை பெருக்க கட்டுபாட்டை செய்து காட்டி உள்ளனர். மேலும் சீன அரசு தற்போது மிக சிறந்த முறையில் அதற்கான முயற்சி எடுத்து உள்ளது.இதை தங்களால் மறுக்க முடியுமா?
பொதுவுடமை நிலை ஒரு நல்ல விசயம் என்று நீங்கள் கருத்தளவில் ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சிகரமானது.
அநேகமாக பலர் இதற்கு மாறான கருத்தையே முன்னிறுத்தி பொதுவுடமைக் கோட்பாட்டை எதிர்க்கின்றனர். வலுத்தவர் வாழ்வார் என்றும், பொதுவுடைமை என்ற எண்ணக்கருவே மனித குலத்துக்கு எதிரானதென்றும், ஒரு சிலர் நன்மை பெற பலர் உழைத்துக்கொடுக்கவேண்டிய சமூக அமைப்புத்தான் சரியானது என்றும் அவர்கள் வாதாடுவர்.
மனித நேய அடிப்படையில் பொதுவுடைமை என்ற எண்ணக்கருவின் தேவையை உணர்ந்துகொண்ட உங்களைப் பாராட்டுகிறேன்.
நீங்கள் சொன்னதுபோல கம்யூனிசம் மதம்போன்ற ஒன்றாகவே பின்பற்றப்பட்டுவரும் நிலை இன்றைக்கு உண்டு.
கம்யூனிஸ்டுக்களின் செயற்பாடெல்லாம் நீர்த்துப்போய், ஏதோ கடமைக்கு பாராளுமன்றக்கட்சிகளை நடத்திக்கொண்டும், உட்கார்ந்த இடத்திலிருந்து கட்டுரை எழுதிக்கொண்டும் இருக்கும் அவர்கள் மதத்தன்மையைப்பெறுவது ஒன்றும் அதிசயமில்லையே?
இந்தப்போக்கு கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியதே.
மனிதர் செயற்கையாக உருவாக்கிய எந்தக்கட்டமைப்பும் காலத்தால் தகர்ந்துபோகும் என்பதுதான் நியதி.
பிரித்தானிய சாம்ராஞ்யம் சரிந்தது. தமிழர்தம் சோழ, சேர, பாண்டியப்பேரரசுகள் மண்கவ்வின. இஸ்லாமிய, இந்து, சைவ, கிறித்துவ ராச்சியங்கள் எல்லாம் கரைந்து மறைந்து போயின.
அவ்வளவு ஏன் ரத்தம் சிந்திப்போராடி பின் ஒருவாறு வந்து கிடைத்த இந்திய சுதந்திரம் என்ற பெருங்கனவும் கூட குலைந்துதானே போயிற்று?
இன்று பிரித்தானியாவுக்கு பதிலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிமைகளாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியாக, ஒரு சிலர்மட்டும் அவர்களை உறிஞ்சி வாழும் நிலைக்கு இந்திய சுதந்திரம் போய்விட்டதல்லவா/
மனிதர் நூறுவீதம் முழுமையானவர்கள் அல்லர். அவர்தம் கோட்பாடுக்ளும் கட்டமைப்புகளும் அப்படியே.
நீங்கள் குறிப்பிட்ட சோசலிசப்பரிசோதனை அமைப்புக்கள் யாவும் எந்த அய்யத்துக்கும் இடமின்றி தகர்ந்து சரிந்துவிட்டனதான். அது முழுதும் உண்மை. அது கம்யூனிசத்தினதும் தோல்விதான்.
பொதுவுடமை எனும் மனிதரை நேசிக்கும் நீதிக்கு நீங்கள் ஆதரவாக இருப்பதால், உங்களால் இந்த கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதார இழையை உணர்வு பூர்வமாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த மதவழிபாடுபோல் ஓதும் கம்யூனிஸ்டுக்களையும் அவர்தம் கொள்கைகளையும் நீங்கள் ஓரங்கட்டிவிடலாம்.
கம்யூனிச சித்தாந்தத்தையும் கூட.
ஆனால், ஒரு சிலர் மட்டும் வாழ, மற்றைய மனிதர்கள் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் கொண்டிருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது.
இந்த அநீதியான சமூக அமைப்பை நீக்கி நீதியான சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கிய கருத்துத்தேடல்களை செய்ய ஆரம்பிக்கலாம்.
அப்படியான நீதியான சமூக அமைப்பை உருவாக்குவதற்கு தடைபோடுபவர்களையும் தடையாய் அமையும் காரணங்களையும் எதிர்ப்போம் என்ன?
சரி, நீங்கள் வாழும் சூழலிலேயே பாருங்க, இந்த அநீதியான சமூக அமைப்பு ஏன் மாற்றப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது? அதனை தமது சுயநலத்துக்காக தாங்கிப்பிடிப்பவர்கள் யார்? அவர்களை எப்படி அகற்றுவது?
Is this ma.sivakumar writing ?
//
ஒரு சிலர் நன்மை பெற பலர் உழைத்துக்கொடுக்கவேண்டிய சமூக அமைப்புத்தான் சரியானது என்றும் அவர்கள் வாதாடுவர்.
//
who is keeping that sort of ideas ? The socialists go by the basic tenent of socialism
"from each according to his ability to each according to his needs"
That means few people will not have any ability and can get a free hand out from those who have ability.
The fundamental principle of socialism is to keep many people working like "slaves" for few "masters".
"It only stands to reason that where there's sacrifice, there's someone collecting the sacrificial offerings. Where there's service, there is someone being served. The man who speaks to you of sacrifice is speaking of slaves and masters, and intends to be the master."
-Ayn rand
Please enlighten yourself and enlighten the rest of the "heathen" thamizmanam bloggers who are deluding themselves of the alleged "virtues" of "socialism".
Ayn rand on socialism
My favorite quote is:
"There is no difference between communism and socialism, except in the means of achieving the same ultimate end: communism proposes to enslave men by force, socialism - by vote. It is merely the difference between murder and suicide."
- From "Foreign Policy Drains U.S. of Main Weapons"
இதர்க்கு நான் சரியான ஒரு தீர்வை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் இப்போது நமக்கு இருக்கும் அர்சியலமைப்பு கூட ஒரு நல்ல வழிதான் இருப்பினும் இவளவு தொழில் நுட்ப்பம் வளர்ந்த இதியாவில் இன்கம் டேக்ஸ் ஏமற்றுபவ்ர்களும் லஞ்ஜம் வான்குபவ்ர்களும் கொள்ளை அடிப்பவர்களும் திருடர் களும் பெருகிவிட்டனர் இதனை தடுக்க ஒரு எளிய வழிமுறை உள்ளது இதனை அரசு செயல் படுத்துமா
அனைவருக்கும் டிஜிடலைஸ்டு பேன் கார்டு வழங்கவேன்டும்
அதவைத்து தான் அவர் பாங்க் அக்கவுன்ட் டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போட் மற்றும் இந்தியாவில் எஙிருந்தாலும் இனையம் மூலம் வாகளிக்கும் உரிமை ஆகியவற்றைக்கொடுக்கவேண்டும்
அனனிவரும்ம் பயன்படுத்தும் கடைகள் ஒருனாலைக்கு 25 ஆயிரத்துக்கு மேல் விற்ப்பனைஆகும் கடைகள் அனைத்தும் கிரிடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு கொன்டுதான் பொருட்க்களை வாங்கவேண்டும் எஙு பயனம் செய்தாலும் ரயில் மற்றும் விமான் டிக்கெட்டுகள் இதன் மூலமே பர்ச்சஸ் செய்யவேண்டும் இவ்வாறு செய்தால் திருடு தீவிரவாதம் கொலை கொள்ளை லஞ்ஜம் வரிஏய்ப்பு ஆகிய அனித்துக்கும் முடிவு கிடைப்பதுடன் உன்மையான வருமைக்கோட்டினை வறையறுக்கமுடியும்
எந்த ஒரு அடிப்படைப் புரிதலும் இல்லாத பதிவு. இங்கே விவாதிப்பதோ புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதோ
உங்கள் நோக்கமாகத் தெரியவில்லை. இந்த மாதிரி சூழல்களை விரும்பி நிற்கும் சங்கர் போன்ற
மானுட விரோத கருத்துக்கள் கொண்டவர்கள் தங்கள் முந்தைய மூக்குடைபட்ட சம்பவங்களுக்கு இது போன்ற பதிவுகளில் மருந்து போட்டுக் கொள்ள வேண்டுமானால் உதவும்.
மாசிவக்குமார் உங்கள் அறியாமையின் ஆழம் எவ்வளவு நீங்கள் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள். அறியாமையில்
இருப்பவனிடம் கூட விவாதித்து விளங்க வைக்க முடியும்.. நீங்களோ self-imposed ignoranceல் இருக்கிறீர்கள்.
வரிக்கு வரி; வார்த்தைக்கு வார்த்தை வாய் விட்டு சிரிக்க வைத்ததற்கு மிக்க நன்றி
இது போன்ற நகைச்சுவைப் பதிவுகளை அடிக்கடி இட்டு எங்களை நீங்கள் சிரிப்பில் ஆழ்த்தலாம். அதற்கு டோண்டு ராகவன் போன்ற காமெடியன்கள் உங்களுக்கு உதவ தயாராகவே இருப்பார்கள்.
-k
நண்பரே,
சீனாவிலும், ரஷ்யாவிலும் புரட்சியாளர்கள் வயிறு வளர்த்தார்களா? புரட்சிக்கு முந்தைய சீன, ரஷ்ய நிலையை ஆராய்ந்தால் அவர்கள் நாட்டை அசுர வேகத்தில் வளர்த்து தெரியும். பாசிச இட்லரை அழித்து உலக மனித இனத்தை காப்பாற்றியதோடு தன் நாட்டையும் வல்லரசாக மாற்றிக்காட்டியவர்கள் புரட்சியாளர்கள்.
தனிமனிதர்கள் பின்பற்றும் கோட்பாடுகள் சரியாக இருக்க நீங்கள் சொல்லும் வழிமுறை தான் என்ன? கம்யூனிச புரட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் உண்டென்றால் அது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும், உழைக்கும் மக்களை சுரண்டுபவர்களும் தான். அவர்களை ஒடுக்காமல் ஒரு பொதுவுடமை சமுதாயம் படைப்பது சாத்தியமில்லை.
வடக்கு ஐரோப்பிய நாடுகளில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கிறதா? ரஷ்யாவில் அதை சாதித்து காட்டினார்கள், மனித வாழ்வின் அனைத்து முன்னேற்றங்களும் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றது.
ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிசம் என்று அறியப்பட்ட நடைமுறை தோல்வியுற்றாலும் அது கம்யூனிசத்தின் தோல்வியல்ல, அமொரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளின் சதிவேலைகளும் இதற்கு ஒரு காரணம்.
இணையம் எல்லோர்க்கும் கிடைக்கிறதா? அதுவும் நடுத்தர மற்றும் முதலாளி வர்கத்திற்கே கிடைக்கிறது.83 கோடி இந்திய மக்களின் தினசரி சம்பளம் 20 ரூபாய், இவர்களுக்கும் இணைய வசதி கிடைக்கிறதா? சோறு கிடைகாதவர்கள் இணையத்தை என்ன செய்வார்கள். இணையம் உருவானதே முதலாளித்துவ அமைப்பிற்கு சேவை செய்வதற்கே.
இறுதியாக ஒன்று, சமூகத்தின் துணையின்றி எந்த மனிதனும் சாதிக்க முடியாது. சமவுடைமை சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் மதிப்பு உண்டு, ஆனால் சமவுடமை சமூகத்தை நிறுவும் வழிமுறைதான் என்ன? சோசலிசத்திலும் மனிதன் சமூகத்தின் அடிமையல்ல சமூகத்தின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவறும் பங்கேற்கின்றனர்.
//ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிசம் என்று அறியப்பட்ட நடைமுறை தோல்வியுற்றாலும் அது கம்யூனிசத்தின் தோல்வியல்ல, அமொரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளின் சதிவேலைகளும் இதற்கு ஒரு காரணம்.//
1. அப்ப எதுதான் கம்யூனிசம்?
2. முதலாலித்துவ நாடுகள் செய்த சதிதான் என்ன?
3. கம்யூனிசத் தத்துவம்தான் உலகை உய்விக்கும் வழி என்றால் ரஷ்யாவும், சீனாவும் ஏன் அந்த பாதையில் இருந்து விலகிச் சென்றது/செல்கிறது?
4, CPC(communist part of china), CPI, CPM காட்டும் வழி கம்யூனிசம் இல்லையென்றால் எதுதான் கம்யூனிசம்?
//
மனித நேய அடிப்படையில் பொதுவுடைமை என்ற எண்ணக்கருவின் தேவையை உணர்ந்துகொண்ட உங்களைப் பாராட்டுகிறேன்.
//
மனித உரிமைகள் இருந்தால் தான் மனித நேயம் வரும்.
தான் சம்பாதித்ததை தானே அனுபவித்தல் போன்ற அடிப்படை மனித உரிமையைத்தராத சோசியலிசம் போன்ற கொள்கைகள் மனித நேயத்தைப் பற்றி பேசுவது வியப்பிலும் வியப்பான ஒன்று.
//
அவ்வளவு ஏன் ரத்தம் சிந்திப்போராடி பின் ஒருவாறு வந்து கிடைத்த இந்திய சுதந்திரம் என்ற பெருங்கனவும் கூட குலைந்துதானே போயிற்று?
//
ஒன்றும் குலைந்து கரைந்து போகவில்லை. உங்களைப் போன்றவர்களால் கம்ப்யூட்டரில் சோசிலிச கன்றாவிகளையெல்லாம் எழுதிட முடியும் இந்தச் சுதந்திரத்தைத்தான் அவர்கள் "கத்தியின்றி ரத்தமின்றி" பெற்றார்கள்.
அதைப் பேணுவது நிச்சயம் மாற்று சுதந்திரம் உள்ளதாக ஆசை காட்டி தனிமனித சுதந்திரத்தை அடகுவைக்கச் சொல்லும் சோசியலிசம் அல்ல.
அத்தகய சோசியலிஸ்டுகளுக்கும் ஆசை காட்டி அடிமட்டத்தில் இருக்கும் இந்துக்களை மதம் மாற்றும் கயவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
//
பொதுவுடமை எனும் மனிதரை நேசிக்கும் நீதிக்கு
//
பொதுவுடமை என்பது மனித விரோதக் கொள்கை. PERIOD. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.
//
எந்த ஒரு அடிப்படைப் புரிதலும் இல்லாத பதிவு.
//
தற்பொழுது தான் அடிப்படையையே கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கிறார் மா. சி. அதைக் கெடுத்து அவர் திரந்த கண்களின் மேல் சிவப்புக் கம்பளம் விரிக்க வந்து விட்டார் ஒரு கயூனிசப்பாதிரியார்.
//
வரிக்கு வரி; வார்த்தைக்கு வார்த்தை வாய் விட்டு சிரிக்க வைத்ததற்கு மிக்க நன்றி
//
ஹி ஹி ஹி...
The hardest thing to explain is the glaringly evident which everybody had decided not to see. -ayn rand (மேலே வஜ்ரா சுட்டிய சுட்டியிலிருந்து தான் கொடுக்கிறேன்)
//
ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிசம் என்று அறியப்பட்ட நடைமுறை தோல்வியுற்றாலும் அது கம்யூனிசத்தின் தோல்வியல்ல,
//
=
குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல்ல.
//
2. முதலாலித்துவ நாடுகள் செய்த சதிதான் என்ன?
//
கம்யூனிசத்தைக் கடைபிடிக்காமல் முதலாளித்துவத்தைக் கடைபிடிப்பது தான் அவர்கள் தவறு.
//
3. கம்யூனிசத் தத்துவம்தான் உலகை உய்விக்கும் வழி என்றால் ரஷ்யாவும், சீனாவும் ஏன் அந்த பாதையில் இருந்து விலகிச் சென்றது/செல்கிறது?
//
படம் முடிஞ்ச்போச்சு, வணக்கம் போட்டாங்க, சோலியப் பாக்கப் போறாங்க.
//
4, CPC(communist part of china), CPI, CPM காட்டும் வழி கம்யூனிசம் இல்லையென்றால் எதுதான் கம்யூனிசம்?
//
சிறு திருத்தம்:
அது CPC அல்ல CCP (chinese communist party)
சரியான வழி: நக்சல்பாரிகளுக்கு காசு கொடுங்கள். முடிந்தால் ஆயுதம் ஏந்திப் போராடுங்கள்.
யாருக்கு எதிராக என்றெல்லாம் கேட்கக் கூடாது! கேள்வி கேட்பது கம்யூனிசத்திற்கு எதிரானது.
வாங்க டோண்டு சார்,
//விவாதம் என்றால் நல்ல ஆதாரங்களுடன் விவாதம் செய்வதே நமக்கும் நேர விரையம் ஆகாது தடுக்கும்.//
அயன் ராண்டின் எல்ஸ்வொர்த் தூஹி போன்றவர்களுக்கு விவாதம் செய்வதைத் தவிர, மற்றவர்களை கருத்தழிப்பதைத் தவிர வேறு பணியே கிடையாது. என்னைப் போன்றவர்கள் அனுபவத்தில் உணர்ந்தவற்றை மட்டும் தான் பேச முடியும். இதற்காக முழு நேரமும் ஆராய்ச்சி செய்து கட்டுரை படைக்க முடியாது.
படிப்பவர்களும் அதைத் தெரிந்தேதான் படிக்கிறார்கள்.
சாணக்கியன்,
//மக்கள் தொகை பெருக்கத்திற்கு கம்யூனிசம் ஒரு சிறந்த நிறுபிக்க பட்ட தீர்வை தந்துள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியாது.//
நீங்கள் கிண்டல் செய்தாலும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு, தாய் சேய் நலவாழ்வுக்கு சீன கட்டமைப்பு செய்த மாற்றங்கள் இந்தியாவில் நடந்ததை விட அதிகம்தான். அங்கு அடிப்படை கோளாறே வேறு இடத்தில்.
மயூரன்,
//பொதுவுடமை நிலை ஒரு நல்ல விசயம் என்று நீங்கள் கருத்தளவில் ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சிகரமானது. //
கருத்தளவில் மட்டுமின்றி, நடைமுறையிலும் நான் இதை முற்றிலுமாக நம்புகிறேன். ஆனால் அதை அடையும வழிக்கு ஏகபோக உரிமையாளர்கள் செங்கொடியினர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
//இந்த மதவழிபாடுபோல் ஓதும் கம்யூனிஸ்டுக்களையும் அவர்தம் கொள்கைகளையும் நீங்கள் ஓரங்கட்டிவிடலாம்.//
அதைத்தான் நான் செய்ய விழைகிறேன். 'தான் சொல்வதே கோட்பாடு, அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை, மாறாக நினைப்பவர்களை எதிரிகளாகப் பார்ப்போம்' என்பது யாராயிருந்தாலும் கீழ்மைதான். கட்சியின் சர்வாதிகார அமைப்பை நிலை நாட்ட முயன்ற / முயலும் 'கம்யூனிஸ்டு' கட்சிகள் அந்த வழியைத்தான் நம்புகின்றன.
//அநீதியான சமூக அமைப்பு ஏன் மாற்றப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது? அதனை தமது சுயநலத்துக்காக தாங்கிப்பிடிப்பவர்கள் யார்? அவர்களை எப்படி அகற்றுவது?//
அவசியம் விடை காண வேண்டிய கேள்விகள். இது போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு விடை தேடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் விடை என்று யாரும் தடியெடுத்துச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காணும் பண்பாடு நம்முடையது.
அன்புடன்,
மா சிவகுமார்
வஜ்ரா,
//"from each according to his ability to each according to his needs"
That means few people will not have any ability and can get a free hand out from those who have ability//
உங்கள் புரிதல் சரியில்லை.
நான் பணி செய்யும் போது எனது முழு திறமையையும் செலுத்தி உழைக்க வேண்டும். இதுதான் professionalism எனப்படும் எந்த பொருளாதார முறையிலும் பின்பற்றப்பட வேண்டியது. (from each according to his ability).
அந்தப் பணியினால் விளையும் பலன்களை என்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவையின் அடிப்படையில் பயன்படுத்துவேன்.
உடனடி குடும்பத்தை எடுத்துக் கொண்டால், வீட்டுக்கு பொருள் ஈட்டி வரும் தந்தை எல்லாவற்றையும் தனக்கே செலவழிப்பாரா! குழந்தைக்கு என்ன தேவை, வயது முதிர்ந்த தாய் தந்தையருக்கு என்ன தேவை என்று பார்த்து செலவழிப்பார்கள் குடும்பத் தலைவியும், தலைவனும்.
இதையே விரிவாக்கி உங்கள் அண்டை அசலையும் முழு சமூகத்தையும் சேர்த்துப் பார்த்தால் - to each according to his need என்பது பொருள் புரியும்.
இதை எப்படி செயல்படுத்துவது என்பதில்தான் விவாதம்.
அன்புடன்,
மா சிவகுமார்
ஜெயம்,
நல்ல யோசனைகள்!
அடிப்படை நேர்மையை வளர்க்கா விட்டால் எத்தகைய கணக்கீட்டு முறையையும் ஏய்க்கும் வித்தகன்கள் தோன்றிக் கொண்டுதான் இருப்பார்கள். சமூகத்தின் நெறிமுறைகள், நம்பிக்கைகள், மதிப்புகள் மாறி குழந்தை பருவத்திலிருந்தே தாய் தந்தையர் காட்டும் வழியில்தான் சமவுடமை சமூகம் மலரும்.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் k,
//மாசிவக்குமார் உங்கள் அறியாமையின் ஆழம் எவ்வளவு நீங்கள் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள். அறியாமையில்
இருப்பவனிடம் கூட விவாதித்து விளங்க வைக்க முடியும்.. நீங்களோ self-imposed ignoranceல் இருக்கிறீர்கள்.//
எனக்குப் புரிய வைப்பவர் ஒருவரைச் சந்தித்த பிறகு தெளிந்து கொள்கிறேன். அது வரை அறியாமை இருள்தான் என்ன செய்வது :-(
வாங்க ஆசாத்,
//கம்யூனிச புரட்சியாளர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் உண்டென்றால் அது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும், உழைக்கும் மக்களை சுரண்டுபவர்களும் தான்.//
அதைத் தீர்மானிப்பவர்கள் யார் என்பதுதான் அந்த சமூகங்களில் சிக்கலாக இருந்தது.
//ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிசம் என்று அறியப்பட்ட நடைமுறை தோல்வியுற்றாலும் அது கம்யூனிசத்தின் தோல்வியல்ல, அமொரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளின் சதிவேலைகளும் இதற்கு ஒரு காரணம்.//
நிச்சயமாக அது கம்யூனிசத்தின் தோல்வியல்ல, கம்யூனிசம் என்று அறியப்பட்ட நடைமுறையின் தோல்விதான்!
முதலாளித்துவம் பழுத்துதான் கம்யூனிசம் மலரும் என்று ஒரு கருதுகோளும் உண்டு. அப்படிப் பார்க்கப் போனால் உண்மையான கம்யூனிச சமூகங்கள் எங்கு முதலில் மலரும்?
//ஆனால் சமவுடமை சமூகத்தை நிறுவும் வழிமுறைதான் என்ன?//
இந்தக் கேள்விக்கு திட்டமான விடை யாரிடமும் இல்லை. நாங்கள்தான் அதற்கு ஏகபோக உரிமையாளர்கள் என்று கொடி பிடிக்கின்றனர் கம்யூனிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கூட்டத்தினர்.
அன்புடன்,
மா சிவகுமார்
அனானி,
//தான் சம்பாதித்ததை தானே அனுபவித்தல் போன்ற அடிப்படை மனித உரிமையைத்தராத சோசியலிசம் போன்ற கொள்கைகள் மனித நேயத்தைப் பற்றி பேசுவது வியப்பிலும் வியப்பான ஒன்று.//
தான் சம்பாதித்ததை தானே அனுபவித்தல் என்பதில் என்ன மனித நேயம் கண்டீர்கள்! நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு (குடும்பம், அண்டை அயலார், சமூகத்தினர்) யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதுதானே மனித நேயம்?
மற்ற அனானிகளுக்கும்,
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் சமவுடமை சமூகம் மலருவதுதான் மனிதம் என்பது என்னுடைய நம்பிக்கை.
அன்புடன்,
மா சிவகுமார்
//
தான் சம்பாதித்ததை தானே அனுபவித்தல் என்பதில் என்ன மனித நேயம் கண்டீர்கள்! நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு (குடும்பம், அண்டை அயலார், சமூகத்தினர்) யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதுதானே மனித நேயம்?
//
அப்ப உங்கள் ஊரில் இருக்கும் பிச்சைக்காரருக்கு நீங்கள் உங்கள் இந்த மாத வருமானத்தை வழங்கிவிடுங்கள்.
மனிதம் வளருமா ? பிச்சைக்காரனின் வயிறு வளருமா ?
அவர் அவர் தேவையை அவரவர் தான் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும், அப்போது தான் தன் சம்பாத்தியத்தின் மதிப்பு தனக்குத் தெரியவரும். அடுத்தவர் உதவியிலேயே காலத்தை ஓட்டிவிடவேண்டும் என்ற சோம்பேறித்தனத்தை தான் பொதுவுடமை சிந்தனை இதுவரை வளர்த்துள்ளது, இனிமேலும் வளர்க்கும். அதனால் தான் அதை மனித விரோத சிந்தனை என்று சொல்கிறேன்.
(தான் என்பது தானும் தன் குடும்பத்தினரும் தனக்கு விரும்பிவேண்டப்பட்டவரும் ஆகும், அப்படி இல்லாதவர்கள் individual ஆக இருந்துகொண்டு போகட்டும்.)
பொதுவுடமை அதாவது socialism த்தின் முக்கிய கோட்பாட்டை நீங்கள் எப்படிவேண்டுமானாலும் அமுல் படுத்தலாம் அதன் விளைவு ஒன்று தான். சோம்பேறிகளை உருவாக்குதல்.
ஒருவனுக்கு பொறுப்புணர்ச்சி எப்போது வரும் என்ற கேள்விக்கு விடை என்ன ?
தன் பொருளுக்குத் தானே பொறுப்பு, தன் தேவையை நிரைவேற்றிக் கொள்ள தான் தான் பிரயத்தனப் படவேண்டும் என்ற உந்துதல் இருந்தால் தான் அந்த பொறுப்புணர்ச்சி வரும். அது சுயநலத்திற்கு இட்டுச் செல்லும் என்று நீங்கள் கருதினால் அதை தடுத்து நிறுத்த என்ன வழி என்று யோசிக்கவேண்டும்.
தனி மனித உரிமைகளை வளர்த்தால், அதன் பொருளை சாமானியருக்கும் அறியச்செய்தால், அதனால் வரும் பயனை அனைவரும் தானாக அடைவர்.
அதை விடுத்து தனி மனிதன் தன் சம்பாதியத்தை தான் செலவு செய்தால் சுயநலமாக செலவளிப்பான் என்ற சந்தேகத்தினால் ஊருக்கு எழுதச் சொன்னால் யாருமே ஒழுங்காக உழைக்க மாட்டார்கள். ஏனென்றால் வியாபாரத்தின் மூல மந்திரம்
What's in it for me ? (எனக்கு என்ன இலாபம் ?)
என்பது தான்.
தனக்கு அதில் ஒன்றும் இல்லையென்றால் அதில் உழைப்பை வீணடிக்க எவனும் முன்வரமாட்டான், மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களைத் தவிற.
//அப்ப உங்கள் ஊரில் இருக்கும் பிச்சைக்காரருக்கு நீங்கள் உங்கள் இந்த மாத வருமானத்தை வழங்கிவிடுங்கள்.//
எங்கள் ஊரில் இருக்கும் பிச்சைக்காரரை விட அதிகத் தேவை உள்ளவர்களுக்கு என்னுடைய வருமானத்தைப் பயன்படுத்துகிறேன் (என்னையும் சேர்த்து).
//அவர் அவர் தேவையை அவரவர் தான் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும், அப்போது தான் தன் சம்பாத்தியத்தின் மதிப்பு தனக்குத் தெரியவரும். /ர
கைக்குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள், மாணவர்கள் - இவர்களின் தேவைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?
//தான் என்பது தானும் தன் குடும்பத்தினரும் தனக்கு விரும்பிவேண்டப்பட்டவரும் ஆகும்//
அந்த வேண்டப்பட்டவர் இந்த சமூகம் முழுவதும் என்று இருந்தால்??
//ஒருவனுக்கு பொறுப்புணர்ச்சி எப்போது வரும் என்ற கேள்விக்கு விடை என்ன ?//
தனது திறமைகளை தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக வெளிப்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும் என்ற professionalism இருந்தால் பொறுப்புணர்ச்சி தானே வரும்.
//தனக்கு அதில் ஒன்றும் இல்லையென்றால் அதில் உழைப்பை வீணடிக்க எவனும் முன்வரமாட்டான், //
கொஞ்சம் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தீர்கள் என்றால் தெரியும், எத்தனை பேர் நீங்கள் சொல்லும் விதிக்கு மாறாக உழைக்கிறார்கள், அதை வீண் என்று நினைக்காமல் பெருமையுடன் உழைக்கிறார்கள்.
மா சிவகுமார்
Ma.Ka.I.Ka thozharhal admire Josef Stalin. they should have lived in Ukraine of 1930s when forced collectivisation and forced aquiisition of food grains starved the region and MILLIONS perished in man-made hunger. there is ample evidence of all this and more.
Stalin once answered a question from Churchill about the greatest struggle that he had to undertake (during their Malta discussions) ;
Stalin's answer was that the war agaisnt nazis was easier than his struggle to collectivise soviet peasants in the 30s. more people died then than ever before. it was against human nature and ....
All this talk about equality and manithaneyam is purely acedamic. practise is very different from ideology or theories. only when one lives and experiences all this will one understand.
the saying 'the road to hell is paved with good intentions' is very true. more human misery is inflicted by 'good intentions' to do public good ; like communism.
even if Ma.Ka.I.Ka purists manage to usher in a 'pure' and true revolution of the proletariet, in course of time it too will be corrupted and loose its character ; and ultimately collapse like all other totalatarian or prolaterain dicatatorship. that is basic human nature. power corrupts and absolute power corrupts absolutely.
communism over centralises power in the long run. and human rights will be trampled. try reading about prsent N.Korea. and it acheived its 'communism' after a bitter and terrible war against 'reactionaries' of S.Korea and US in 1953. it was a colossal struggle and was intially high minded and had very idealistic origins.
and Vietnam abandanoed a hard won communist state. why ?
/////தனக்கு அதில் ஒன்றும் இல்லையென்றால் அதில் உழைப்பை வீணடிக்க எவனும் முன்வரமாட்டான், //
கொஞ்சம் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தீர்கள் என்றால் தெரியும், எத்தனை பேர் நீங்கள் சொல்லும் விதிக்கு மாறாக உழைக்கிறார்கள், அதை வீண் என்று நினைக்காமல் பெருமையுடன் உழைக்கிறார்கள்.
மா சிவகுமார்///
MaSi,
volountary service and charity is fine and idealistic but only a minority follow it. working for a profit is normal human nature and nothing immoral or illegal as long as no ethics is breached. industrialisation and free markets have lifter more people out of absolute poverty than any 'charity' or noble ideals of 'selflessness' (like in W.Europe, Japan in the past 120 years).
Mathalathaukku irru pakkamum idi ;
poor MaSi you are attacked by both extreme leftists and extreme rightists (free marketers like me) !! :))
and politics makes strange bed fellows...
கருத்துரையிடுக