தொலைபேசி எதிர்வினைகள்
1.
"சிவகுமார், எப்படி இருக்கீங்க!"
"நான் நல்லா இருக்கேன், நீங்க!"
"ஒங்க பிளாக்ஸ்பாட் பார்த்தேன், நல்லா எழுதியிருக்கீங்க!"
"எதப்பத்தி சொல்றீங்க?"
"அதான், தமிழ் மாநாடு புறக்கணிப்பு பத்தி எழுதியிருக்கீங்களே. நான் கூட இன்னைக்குக் கிளம்பி மாநாட்டுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன். அப்பதான் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்னு பார்த்தேன். சரியா எழுதியிருக்கீங்க.
செல்லமுத்து குப்புசாமி கூட புறக்கணிப்பை ஆதரிச்சிருக்காரே! அவருடைய விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகம் படித்திருக்கிறேன்.
பெரிய ஆளுங்க எல்லாம் வாராங்களா, அல்லது இவனுங்களே கூடிக் கூத்தடிச்சிக்கிறானுங்களா?"
"சிவத்தம்பி என்று ஒரு பெரியவரின் பெயர் கேள்விப்பட்டேன். ஹார்ட் என்ற தமிழ் ஆய்வாளர் பேசியதும் செய்தித்தாளில் படித்தேன். மற்றபடி விபரங்களை கண்டு கொள்ளவில்லைதான். வ செ குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள் இணையத் தமிழ்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்"
2. "லக்கிலுக்கின் இடுகையில், 'நாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும், சிறிதளவாவது துடித்தோம்' என்று எழுதியிருந்ததைப் படித்தேன். அதுதான் உங்களுக்குத் தொலைபேசத் தூண்டியது. நான் கூட வலைப்பதிவு வைத்திருக்கிறேன். முன்பு ஒரு தடவை என் இடுகையில் நீங்கள் பின்னூட்டம் கூட போட்டீர்கள்"
5 கருத்துகள்:
உங்கள மாதிரி கணல் கண்ணன்கள்
பலகோடி பேர் கலந்துகொள்ளாததால் கோவையில் கூட்டமே இல்லைன்னு கலைஞர் ரொம்ப கவலயா இருக்காரு.
குளத்தோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போகும் அறிவிசீவிகளே இழப்பு குளத்திற்கு இல்லை, உங்கள் குண்டிக்குத்தான் எனப்தை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
ஒரிஜினல் மனிதன்,
நீங்க கலந்து கிட்டீங்களா?
தலை நிமிர்ந்து போனீங்களா, அல்லது இங்கு போல முக்காடு போட்டுக் கொண்டு போக வேண்டியிருந்ததா?
மலம் நிரம்பிய குளத்தில் கழுவுவதை விட வேறு இடத்தில் நீர் தேடுவது அறிவு என்று 'அறிவுசீவிகள்' சொல்கிறார்கள்.
hello siva how r u?
நல்லா இருக்கேன் ஸ்ரீ. நீங்க இப்போ எங்கே இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? வேளாண்மை எல்லாம் எப்படி போகிறது?
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் சிவா,இனையத்தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதில் ஒரு நீண்ட இடைவெளி.
கருத்துரையிடுக