புதன், ஜூன் 23, 2010

தமிழ்ப் புழுக்கள்

தமிழ் நாட்டுத் தமிழருக்கு பொதுவாகவும், 'உலகத்' தமிழ் செம்மொழி மாநாடு காணும் கருணாநிதி கும்பலுக்கு குறிப்பாகவும் பொருந்தும் வரிகள்!
=================
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
== பாரதியார்

2 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

முண்டாசுக்கும் அப்பவே தெரிஞ்சுருச்சா:(

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் துளசி அக்கா,
80 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் பெரிதளவு மாறி விடவில்லை :-(