திங்கள், டிசம்பர் 04, 2006

வலைமகுடம் - 2

உயரப் பறக்கும் பருந்து போல பார்வை பரத்தி எங்கு என்ன நடக்கிறது என்று உடனடி தீர்ப்பு சொல்லி அதையே ஒரு பதிவாகச் செய்து விட்டவர் போஸ்டன் பாலா. பலருக்கு ஊக்கமூட்டுபவராக இருக்கிறார். ஈதமிழ் என்ற தனது முதன்மைப் பதிவில் அவருக்கே உரித்த பாணியில் வலது பக்கம் நீளமான அலங்கரிப்புகள். விட்டேற்றியான நடையில் சுழன்றடிக்கும் சாட்டையாக வந்து விழும் சொற்களில் பல பொருட்களைப் பற்றி எழுதி விடுவார்.

பாபா என்று பலராலும் அன்பாக அழைக்கப்படும் போஸ்டன் பாலா தனது புகைப்படத்தை வரை கோடுகளாக வெளியிட்டிருப்பதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு செயலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

ஜூன் 2006ல், ஒரு மாத இடைவெளி விட்டு அந்த நேரத்தில் எழுதி வைத்திருந்த இருபது, இருபத்தைந்து பதிவுகளை காலையில் ஒன்று மாலையில் ஒன்றாக வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தமிழ்மண நட்சத்திரமாக பாலா இருந்தார். திடீரென்று ஒரு பதிவில் இந்த வார உண்மையான நட்சத்திரம் மா சிவகுமார் என்று நான் வெளியிட்ட எல்லா பதிவுகளையும் தொகுத்து போட்டார். அன்று முதல் அவ்வப்போது snapjudgeல் இணைப்பதிலும், எப்பொழுதாவது எழுதும் பின்னூட்டங்களிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டார்.

முத்து தமிழினி ஒரு இடத்தில் சொன்னது போல snapjudgeல் ஒரு பதிவு இடம் பெறுவதை வைத்து அதன் தரத்தை எழுதியவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இவரது உள்ளேற்கும் திறன் வியக்கத்தக்கது. ஓவியக் கலை ரசிப்பிலிருந்து, புத்தக விவரிப்புகள், திரைப்பட விமரிசனங்கள், அரசியல் நிகழ்வுகள், சக வலைப்பதிவர்களைக் கலாய்த்தல் என்று எல்லாத் துறைகளிலும் கை வைத்து தனக்கே உரிய பாணியில் அவற்றின் பரிமாணங்களை வெளிப்படுத்தி விடுவார். இவரது ஈரப்பதம் இல்லாத நகைச்சுவைப் பதிவுகள் ஒரு நிமிடம் இழுத்துப் பிடித்து பல மணி நேரங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கக் கூடியவை.

இது வரை நேரில் பார்த்திரா விட்டாலும், எண்ணங்களால் மிக நெருங்கிய உணர்வைத் தரும் பதிவர் பாலா. என் பார்வையில் பட்ட வரையிலேயே நான்கைந்து இடங்களில் எனது எழுத்து பதிவை பரிந்துரைத்து எழுதியிருந்தார். இந்த எழுத்து பதிவில் எப்போதாவது தடுமாற்றம் வந்து விடுமோ என்று படும் போது ஒரு பின்னூட்டம் பாலாவிடமிருந்து வந்திருக்கும்.

பாலாவின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும்.

9 கருத்துகள்:

ரவி சொன்னது…

இது நூறு சதவீதம் உண்மை...நான் ஒரு கதை எழுத ஆரம்பித்தபோது முதலில் படித்து ஊக்கப்படுத்தினார்....அவர் கொடுத்த தைரியத்துல ஏழு பாகம் ஓடிருச்சி...:)))

Boston Bala சொன்னது…

தங்கள் அன்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி சிவா!

துளசி கோபால் சொன்னது…

ஆஹா........பாபா பத்துன முழுவிவரமும் இப்பத்தான் கிடைச்சது:-)

கோட்டுச் சித்திரம்? எப்ப ? எங்கெ?

மா சிவகுமார் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் ரவி. பாலாவின் ஊக்கமும் அங்கீகாரமும் பலரை எழுதத் தூண்டுகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் துளசி அக்கா,

வலைப்பதிவிலும், அவரது பின்னூட்டத்துக்கு அருகிலும் தெரிவது மங்கலாக்கப்பட்ட அவரது புகைப்படம்தானே. அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். :-)

அன்புடன்,

மா சிவகுமார்

சிறில் அலெக்ஸ் சொன்னது…

//முத்து தமிழினி ஒரு இடத்தில் சொன்னது போல snapjudgeல் ஒரு பதிவு இடம் பெறுவதை வைத்து அதன் தரத்தை எழுதியவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.//

இது பாபாவுக்கு தெரியுமா?
:)

மா சிவகுமார் சொன்னது…

//இது பாபாவுக்கு தெரியுமா?
:)//

உங்க ஊர்தானே, தொலைபேசியில் கேட்டிருங்க!

அன்புடன்,

மா சிவகுமார்

வெட்டிப்பயல் சொன்னது…

ரொம்ப ரொம்ப உண்மை...

Snapjudgela இல்லைனா நம்ம பதிவ பத்தி நாமலே தெரிஞ்சிக்கலாம் ;)

தென்றல் சொன்னது…

உங்கள் 'பாணி'யிலேயே சொல்லிருக்கிறீர்கள், சிவகுமார்! நன்றி!

/...ஆரம்பித்து ஒவ்வொரு செயலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்./

மேலும் பல முத்திரைகள் பதிக்க வாழ்த்துக்கள், பாலா!