சனி, டிசம்பர் 23, 2006

சாதி ஒழிய வேண்டும்

சூதாட்ட விடுதியில் யாரும் விடுதிக்கு எதிராக வெற்றி பெற்று விட முடியாது. விதிகளை அமைத்தவர்கள் அவர்கள். யார் என்ன செய்தாலும் தமக்கு ஒரு பங்கு வந்து விடுமாறுதான் விதிகளையே அமைத்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதியினர் வகுத்த சாதி முறைக்குள்ளேயே அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒரு அளவுக்குத்தான் சாத்தியம். எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குறிப்பிட்ட பங்கு விதிகளை வகுத்த வகுப்பினருக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு அடித்து ஆடுகிறீர்களோ, அவ்வளவுக்களவு நீங்கள் எதிர்க்க நினைக்கும் ஆதிக்க சாதியினர் வளர்ந்து வருவார்கள்.

குறிப்பிட்ட சாதியினர் உழைப்பால் முன்னேறியிருக்கிறார்கள், அதைப் போல மற்றவர்களும் செய்ய வேண்டியதுதானே என்று சொல்லும் ஹரிஹரன், பிரெஞ்சுப் புரட்சியின் போது, "ரொட்டி இல்லையென்றால், கேக் சாப்பிடட்டும்" என்ற அரசியின் கூற்றை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

இன்னும் விபரமாகப் புரிய வேண்டுமென்றால், Invisible Man என்று கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவின் இனப் பாகுபாடுகளைப் பற்றி எழுதிய நாவலைப் படித்துப் பாருங்கள். (நான் இதை முழுவதும் படிக்கவில்லை )

'விதிகளுக்குக் கட்டுப் பட்டு கடினமாக உழைக்கும் 'நிக்கர்'களுக்கு நாங்கள் போடும் பொறைகள் சாப்பிடக் கிடைக்கத்தானே செய்கின்றன' என்று இன்றைக்கும் நிற ஆதிக்க வாதிகள் விவாதித்து வருகிறார்கள். அதே வகையில் சேர்வதுதான் உங்கள் கட்டுரைகளும்.

சாதி, அதனால் ஏற்பட்ட, அனுபவித்த கொடுமைகளை ஒழிக்க - சாதி அடையாளம் நிரந்தரத் தீர்வு ஆகாது. ஒவ்வொரு முறை சாதியின் பெயரால் ஒருவர் செயலாற்றும் போதும், அவர் சாதி முறை,் உள்ளமைந்த ஏற்றத் தாழ்வு, ஆதிக்கக் கோட்பாடுகளுக்கு உரம் சேர்க்கிறார்.

வேறு என்னதான் வழி என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால், சாதி அடையாளத்துடன் தமது நிலையை உயர்த்திக் கொள்ள ஒடுக்கப்பட்டவர்கள் போராடுவது அவர்களை பயன்படுத்தி வந்த ஆதிக்க சாதியினரின் கைகளைப் பலப்படுத்துவதுதான்.

13 கருத்துகள்:

BadNewsIndia சொன்னது…

புரியலியே. இன்னும் தெளிவா எழுதி இருக்கலாமோ?

லக்கிலுக் சொன்னது…

//வேறு என்னதான் வழி என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால், சாதி அடையாளத்துடன் தமது நிலையை உயர்த்திக் கொள்ள ஒடுக்கப்பட்டவர்கள் போராடுவது அவர்களை பயன்படுத்தி வந்த ஆதிக்க சாதியினரின் கைகளைப் பலப்படுத்துவதுதான்.//

இதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெயிலில் தொலைத்த காசை நிழல் இருக்கும் இடத்தில் போய் தேடிய தெனாலிராமன் கதை தான் நினைவுக்கு வருகிறது.

எந்த இடத்தில் கிணறு தோண்டினோமோ அந்த இடத்தில் தான் நீர் கிடைக்கும். கிணறை ஒரு இடத்தில் தோண்டிவிட்டு மேட்டில் போய் நின்றுக் கொண்டு நீர் கிடைக்கவில்லையே என்று புலம்புவதில் எந்த நியாயமும் இல்லை.

சாதி ஒழிய வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனாலும் பல தலைமுறைகளாக சாதிமுறையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான ஒரு நீதி உங்களிடம் இருக்கிறது எனப் புரியவில்லை.

தயவுசெய்து நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பாதீர்கள் :-)

ஓகை சொன்னது…

தலைப்பு நல்ல தலைப்பு.

சொல்லியிருக்கும் விஷயம் யாவும் ஏற்றுக் கொள்ளவே முடியாத துவேஷம். அந்த சூதாட்ட விடுதியின் உதாரணத்த்தை எவ்வகையிலும் பொறுத்திப் பார்க்க முடியவில்லை.

ஜாதியை ஒழிக்க கலப்புமணங்கள் ஒன்றே உடனடித் தீர்வு. அனைவருக்கும் கல்வி நீண்டகாலத் தீர்வு.

புரட்சி செய்யவேண்டுமென்பது மட்டுமே நோக்கமாக இருப்பது மருந்து மட்டுமே உணவாக வேண்டும் என்று சொல்வதைப்போல.

மருந்து என்பது ஒரு விஷத்தை முறிக்கும் இன்னொரு விஷம். நோயிருந்தால் மட்டுமே மருந்து. நோய் இப்போது இல்லையா என்று கேட்டால் எந்த நோய்க்கு என்ன மருந்து எவ்வளவு மருந்து என்றெல்லாம் இருக்கிறது.

மருந்தே இல்லாமால் தானாக நம் உடம்பே குணப்படுத்திக் கொள்ளும் மருத்துவ முறையே அனைத்திலும் சாலச் சிறந்தது.

Hariharan # 03985177737685368452 சொன்னது…

//பிரெஞ்சுப் புரட்சியின் போது, "ரொட்டி இல்லையென்றால், கேக் சாப்பிடட்டும்" என்ற அரசியின் கூற்றை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.//

சிவகுமார்,

நான் அந்தப்பதிவில் சொல்லியது சும்மா வெட்டியாக சாதி சாதி என்று பேசுவதால் மட்டுமே தீர்வு ஏதுவும் வராது என்பதையே. கண்முன்னேயே 40 ஆண்டு காலத்தில் நாடார் சமூகம் உழைப்பால் மேலேறி வந்த ஆக்கமான வழி போன்று சமூக சக்தியை உருப்படியான விஷயங்களுக்குப் பயன்படுத்தினால் முன்னேற்றம் நிச்சயம்!

முழு ரொட்டி இல்லை எனில் பகுதியாவது கிடைக்கும் என்பதைச் சொல்லும் விதமான பதிவு!

சாதியற்ற சமூகம் என்பது இம்மாதிரி உழைப்பால் மேலேறி வந்தபடியே அனைவரும் கல்வி கற்கின்றபோது மட்டுமே சாத்தியமாகும். வெறும் சாதி ஒழிப்புக் கத்தல்கள், கத்திகளால் சாதிக்க முடியாது!

Thamizhan சொன்னது…

சாதி ஒழியவேண்டும் என்பதை எல்லா மனிதநேயம் உள்ளவர்களும் ஒத்தக்ுகொள்வார்கள்.ஓத்துக்கொள்ளாதவர்களைச் ச்ட்டம் தண்டிக்க வேண்டும்.
இதற்கு உண்மையாகவே சிந்தித்துச் செயல் பட்ட தலைவர்கள் தந்தை பெரியார்,பாபாசாகேப் அம்பேத்கர்,அறிஞர் அண்ணா போன்றோர் கருத்துக்களையும் இன்றைய சூழ்நிலையில் உள்ள நல்ல சமுதாயத் தலைவர்களையும் ஆராய்ந்து செயல் படவேண்டியக் கட்டாயம் இந்தியாவுக்கு உல்கநாடுகட்குமுன் வந்துவிட்டது.மூடிமறைத்து வைத்திருந்தது இன்று ஐக்கிய நாட்டுச்சபையின் முன் வந்துவிட்டது.
1.இந்திய அரசியல் சட்டத்திலே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று இருப்பது போய் சாதி ஒழிய வேண்டும் என்று வரவேண்டும்.இதற்காகத்தான் பெரியார் அன்று சட்டத்தை எரித்தார்.அதைப் பண்டித நேரு அவர்களிடம் சரியாக எடுத்துச் சொல்லாமல் மாற்றி பெரியார் இந்தியாவுக்கு எதிரானவர் என்று தடம் மாற்றிவிட்டனர்,
2.அனைவர்க்கும் பிறப்பில் இருந்து இறப்புவரை ஒரு எண் தரப்பட வேண்டும்.அது அவர்கள் செய்யும் தொழில் வேலை வருமானம் வங்கி கணக்கு என்பது அனைத்தையும் இணைக்கும்,ஏமற்ற முடியாது வரவைக் காண்பிக்கவேண்டிவந்து விடும் அதிலேயே சாதிகளையும் குறிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்து விட்டால் படிப்பு வேலை எதற்கும் சாதியே போடவேண்டியதில்லை.யார் எந்த சாதி என்பது ரகசியமாகவே இருக்கும்.அடுத்த தலைமுறைக்குச் சாதியே தெரியாது.
3.ஆரம்பக்கல்வி முதலே ஆண்களும் பெண்பிள்ளைகளும் சேர்ந்தே உட்காரவேண்டும்.பேசிப் பழகி வளர்ந்து விட்டால்,காதல் மணங்கள் மலரும்,பல பிரச்சனைகள் ஒழியும்.
4.அடுத்தத் தலைமுறையிலிருந்துக் கட்டாயமாகவும்,இந்த தலைமுறை விரும்புபவர்களும் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்,சாதி அமைப்புகள் கலைக்கப்படவேண்டும்.
இதெல்லாம் நடக்குமா என்று கேட்காதீர்கள்,தென் ஆப்பிரிக்காவைப் பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

சாதிகளை எல்லாம் பேப்பரில்
எழுதி எரித்து விட்டு
சாதி ஒழிந்தது என்று சந்தோசபடுங்கள்.

சாதிகளாவது ஒழியிறதாவது.

மா சிவகுமார் சொன்னது…

இந்தப் பின்னூட்டங்களைத் தொகுத்துத் தனிப்பதிவாகப் போட்டு விடுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

ப்ளாக்கர் சொதப்புகின்றது எனவே என் பின்னூட்டத்தை அனானி பின்னூட்டமாக இடுகின்றேன், அதன் படி கீழ் கண்ட சுட்டியில் உள்ளது.

http://kuzhalifeedbacks.blogspot.com/2006/12/18.html#c116689382349311255

சிவக்குமார் நல்ல பதிவு....

//ஆதிக்க சாதியினர் வகுத்த சாதி முறைக்குள்ளேயே அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒரு அளவுக்குத்தான் சாத்தியம். எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குறிப்பிட்ட பங்கு விதிகளை வகுத்த வகுப்பினருக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு அடித்து ஆடுகிறீர்களோ, அவ்வளவுக்களவு நீங்கள் எதிர்க்க நினைக்கும் ஆதிக்க சாதியினர் வளர்ந்து வருவார்கள்.
//
இது நிச்சயமான உண்மை தான், ஆனால் எதன் பெயரால் உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ, எதன் பெயரால் கல்வி மறுக்கப்படுகின்றதோ அதன் பெயரால் தானே ஒன்றினைந்து போராட முடியும்? நீங்களே கூறியுள்ளீர் ஆதிக்க சாதியினர் வகுத்த சாதி முறைக்குள்ளேயே அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒரு அளவுக்குத்தான் சாத்தியம். என்று முதலில் அந்த ஓரளவிற்கு முன்னேற்றம் அடையட்டும், முன்பொருமுறை சந்தோஷ் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்....
//எந்த ஊருடா நீ, செம்மங்குப்பம், ஓ செம்மங்குப்பத்தானா நீ, பள்ளிப்பசங்க(அருந்ததியரை சக்கிலி என்று தாழ்வாக சொல்வார்களே அது மாதிரி வன்னியர்களை பள்ளி என்று என்று தாழ்வாக சொல்வது வழக்கம் ) நீங்கலாம் படிச்சி என்னடா செய்யப்போறிங்க உங்களுக்கெதுக்குடா படிப்பு, சாரயம் காச்சபோறியா படிச்சிட்டு என்று கேட்ட பள்ளிக்கூட வாத்தியாரிலிருந்து//
இப்படி கேட்ட வாத்தியாரிடம் அய்யா தமிழனாகிய நான் ஏன் படிக்க கூடாது என்றோ? அய்யா இந்தியனாகிய நான் ஏன் படிக்கக்கூடாது என்றோ அய்யா மனிதனாகிய நான் ஏன் படிக்கக்கூடாது என்றா கேட்க முடியும், அப்படி கேட்டால் நான் எங்கே தமிழனை படிக்க கூடாது என்று சொன்னேன், பள்ளிப்பசங்க படிச்சி என்ன ஆகப்போகிறதுன்னு தானே கேட்கிறேன் என்பார்? நான் எங்கே இந்தியனை படிக்க கூடாது என்று சொன்னேன், பள்ளிப்பசங்க படிச்சி என்ன ஆகப்போகிறதுன்னு தானே கேட்கிறேன் என்பார்?

எதன் பெயரால் உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அதன் பெயரால் தான் மறுக்கப்பட்டவர்கள் ஒன்றினைந்து உரிமைக்காக போராட முடியும், சாதியின் பெயரால் மறுக்கப்படும் போது வேறெவற்றின் பெயரால் இணைய முடியும்,

இங்கே அடிப்படை பிரச்சினை அதுவல்ல... இந்த கட்டமைப்பு மிகவும் அசாதாரணமானது, அப்படி இப்படி இணைந்து அடித்து போராடி சாதிய அடுக்கில் மேலே வந்துவிட்டால் மேலே வந்தவர்களுக்கு இந்த சாதிய அடுக்கு கலையாமல் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.... ஹரிகரன் புகழும் நாடார் சமூகத்தினர் 40 ஆண்டுகால உழைப்பில் முன்னேறும்போது அதற்கு கடுமையான தடை ஏற்படுத்தியவர்கள் யாரென்று புரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்!!! "பறையனை தொட்டால் தீட்டு சாணானை(நாடார்)பார்த்தால் தீட்டு" என்று சொல்வார்கள் முன்பு அந்த இழிவை நீக்கி முன்னேறிய இதே சமூகம் இன்று தலித்களோடு எப்படி உள்ளது என்பது தூத்துக்குடிகாரர்களிடம் கேட்டால் தெரியும்...

வரலாற்றிலேயே வலங்கை போர்கள் பற்றி படிக்கும்போது நிறைய விசயங்கள் புரியலாம், போராட்டத்தில் வெற்றி பெற்று மேலேரும் சாதி அதே சாதி அடுக்குமுறையை கட்டிக்காக்கின்றது, அதே சாதிய ஒடுக்குமுறையை பிறர் மேல் பிரயோகிக்கின்றது

படிப்புதான் சாதியை போக்குகின்றது, காதல் திருமணம் சாதியை ஒழிக்கின்றது என்பதெல்லாம் சும்மா பம்மாத்து... காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பெரும்பாலும் ஆணின் சாதியிலோ பெண்ணின் சாதியிலோ ஐக்கியமாகிவிடுகின்றனர், படிப்பு சாதியை ஒழிக்கிறதா என்பதை சற்று யோசித்து பார்த்தால் புரியும்.

எல்லோரும் எல்லாமும் பெறும் போது சாதி தானாக ஒழியும் என்பது உண்மை ஆனால் எப்படி எல்லோரும் எல்லாமும் பெறமுடியும் என்று சொல்லுங்கள்...

மா சிவகுமார் சொன்னது…

குழலி,

//முதலில் அந்த ஓரளவிற்கு முன்னேற்றம் அடையட்டும்,//

அந்தக் காலகட்டத்தில், சாதி அடையாளத்தைப் பயன்படுத்துவது நம்மை ஒடுக்கி வைத்திருக்கும் அமைப்பிலிருந்து முழு விடுதலை பெற உதவாது என்ற விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது என் கருத்து.

//பள்ளிப்பசங்க படிச்சி என்ன ஆகப்போகிறதுன்னு தானே கேட்கிறேன் என்பார்? //

அப்படிக் கேட்ட நாக்கை அறுக்க வேண்டும் என்று சமூகம் கருத்து உருவாக்க வேண்டும். அப்படிக் கேட்ட ஆசிரியரைச் சிறையில் போடும் படி சட்டம் உருவாக வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவும் சாதி அடையாளம் ஆதிக்கம் செலுத்தும் அந்த ஆசிரியர் போன்றவர்களுக்கும் வலு சேர்க்கும் போக்கு மாற வேண்டும்.

//அப்படி இப்படி இணைந்து அடித்து போராடி சாதிய அடுக்கில் மேலே வந்துவிட்டால் மேலே வந்தவர்களுக்கு இந்த சாதிய அடுக்கு கலையாமல் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.//

மேலே வந்து விட்டவர்கள் மட்டுமின்றி, போராடிக் கொண்டிருப்பவர்களும், துன்பப்பட்டிருப்பவர்களும் கூட சாதி அமைப்பு கலைந்து விடக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது எனது புரிதல். அவ்வளவு மூளைச்சலவை, அவ்வளவு சமூக அழுத்தம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இன்றும் இருந்து வருகிறது.

//படிப்புதான் சாதியை போக்குகின்றது, காதல் திருமணம் சாதியை ஒழிக்கின்றது என்பதெல்லாம் சும்மா பம்மாத்து//

ஒத்துக் கொள்கிறேன்.

//எல்லோரும் எல்லாமும் பெறும் போது சாதி தானாக ஒழியும் என்பது உண்மை ஆனால் எப்படி எல்லோரும் எல்லாமும் பெறமுடியும் என்று சொல்லுங்கள்...//

குழலி, நீங்களும் நானும் மனது வைத்தால் எல்லோரும் எல்லாமும் பெற முடியும், சாதி ஒழியும். என்னைக் கேட்டால் சாதி ஒழிந்த பிறகுதான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும்.

அன்புடன்,

மா சிவகுமார்

இராம. வயிரவன் சொன்னது…

சிவகுமார், இன்னும் சற்று கூடுதலாகச் சிந்தித்துப் பாருங்கள். சாதி என்பது என்ன? பிரிவுகள். அப்படியென்றால் இவ்வுலகம் எண்ணற்ற வகையில் எண்ணற்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது. மதத்தால், மொழியால், இனத்தால், இடத்தால், ..இன்னும். பிரிவுகளே கூடாது என்பது சரியா? அப்படியென்றால் ஒரு மொழி, ஒரு மதம், ஒரே இனம்தான் இருக்க முடியும். அது சாத்தியமா? அதனால் பிரிவுகள் இருக்கக்கூடாது என்பதைவிட பிரிவுகளுக்குள் பிரச்சினை இருக்கக்கூடாது என்பதே முக்கியம். வளர்ச்சிக்கும் வசதிக்கும் பிரிவுகள் முக்கியம். ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மதிக்கணும். வெறுப்பதை வேரறுக்க வேண்டும். ஒற்றுமை ஓங்க வேண்டும். இக்கருத்தை என் பதிவுகளில் கவிதைகளில் சொல்லியிருக்கிறேன். படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

நன்றி, வயிரவன்.

மா சிவகுமார் சொன்னது…

வயிரவன்,

பிரிவுகளில் இரண்டு வகை. ஒன்று மாறிக் கொள்ள முடியாதது, மற்றொன்று மாற முடிவது.

பிறப்பால், நிறத்தால், உடலமைப்பால் ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் முதல் வகையைச் சேரும். சாதி, நிறப் பாகுபாடுகள் மனிதனை ஒடுக்க உதவும் பிரிவுகள். நான் குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்டால் நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியாது. அத்தகைய பிரிவு அழிய வேண்டும்.

மதம் மாறிக் கொள்ளலாம், மொழிகளைக் கற்றுத் தேர்ந்து கொள்ளலாம். ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை புரிந்து கொண்டு எத்தனை மில்லியன் மக்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று ஆங்கிலம் பேசும் உலகில் கொடி கட்டி பறக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்தும் சாதிக்கு ஒருவர் மாறவே முடியாதே!

அப்படி முயற்சியால் மாற்றிக் கொள்ள முடியும் பிரிவுகள் நன்மை தரும். பிறப்பிலேயே குத்தப்படும் சாதி என்ற முத்திரை சில பலன்களைத் தருவதாக இருந்தாலும், அது செய்து விட்ட, செய்து வரும் தீங்குகளைப் பார்க்கும் போது அதை வேரோடு அழித்து விடுவதுதான் சமூகத்துக்கு நல்லது.

உங்கள் கவிதைகளைப் படித்துப் பார்க்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

dondu(#11168674346665545885) சொன்னது…

//"எந்த ஊருடா நீ, செம்மங்குப்பம், ஓ செம்மங்குப்பத்தானா நீ, பள்ளிப்பசங்க(அருந்ததியரை சக்கிலி என்று தாழ்வாக சொல்வார்களே அது மாதிரி வன்னியர்களை பள்ளி என்று என்று தாழ்வாக சொல்வது வழக்கம் ) நீங்கலாம் படிச்சி என்னடா செய்யப்போறிங்க உங்களுக்கெதுக்குடா படிப்பு, சாரயம் காச்சபோறியா படிச்சிட்டு என்று கேட்ட பள்ளிக்கூட வாத்தியாரிலிருந்து"
இப்படி கேட்ட வாத்தியாரிடம் அய்யா தமிழனாகிய நான் ஏன் படிக்க கூடாது என்றோ? அய்யா இந்தியனாகிய நான் ஏன் படிக்கக்கூடாது என்றோ அய்யா மனிதனாகிய நான் ஏன் படிக்கக்கூடாது என்றா கேட்க முடியும், அப்படி கேட்டால் நான் எங்கே தமிழனை படிக்க கூடாது என்று சொன்னேன், பள்ளிப்பசங்க படிச்சி என்ன ஆகப்போகிறதுன்னு தானே கேட்கிறேன் என்பார்? நான் எங்கே இந்தியனை படிக்க கூடாது என்று சொன்னேன், பள்ளிப்பசங்க படிச்சி என்ன ஆகப்போகிறதுன்னு தானே கேட்கிறேன் என்பார்//?

//ஹரிகரன் புகழும் நாடார் சமூகத்தினர் 40 ஆண்டுகால உழைப்பில் முன்னேறும்போது அதற்கு கடுமையான தடை ஏற்படுத்தியவர்கள் யாரென்று புரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்!!! "பறையனை தொட்டால் தீட்டு சாணானை(நாடார்)பார்த்தால் தீட்டு" என்று சொல்வார்கள் முன்பு அந்த இழிவை நீக்கி முன்னேறிய இதே சமூகம் இன்று தலித்களோடு எப்படி உள்ளது என்பது தூத்துக்குடிகாரர்களிடம் கேட்டால் தெரியும்...//
இதையெல்லாம் உதாரணமாகக் காட்டத் தெரிந்த குழலி அவர்கள் வன்னியர்கள் தலித்துகளுக்கு செய்யும் கொடுமைகளின் ஒரு உதாரணம் கூட தராமல் தவிர்த்ததற்கு காரணம் அவரது சாதிப்பாசம்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

குழலி புருஷோத்தமன் ஒரு வன்னியஜாதி வெறியன் என்பதுதான் உண்மை.

ஆனால் அதே சமயத்தில் டோண்டு ராகவன் பார்ப்பன ஜாதி வெறியன் என்பதனையும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்!