ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

இந்தியம்

  • சாதி அமைப்புதான் இந்துமதம், இந்துமதத்தை ஒழித்தால்தான் சாதி முறை ஒழியும் என்பது சரிதானா?

  • அயோத்தியில் கோவில் கட்டுவதும், செங்கல் பூஜை செய்வதும்தான் இந்து மதமா?
  • ராமர் பாலம் என்று சச்சரவு எழுப்பி முன்னேற்றப் பணிகளுக்கு முட்டுக் கட்டை போடுவதுதான் இந்து மதமா?

  • கோடி கோடியாக சுரண்டி குவித்து விட்டு திருப்பதிக்குப் போய் உண்டியலை நிறைப்பதுதான் இந்து மதமா?
  • நிர்வாணச் சாமியார்கள் சூலாயுதத்துடன் அலஹாபாத் திரிவேணி சங்கமத்தில் குளிப்பதுதான் இந்து மதமா?

  • மற்ற மதங்களுடன் பகையை வளர்த்து சமூகங்களை மோத விட்டு ரத்தம் குடிக்க முயல்வதுதான் இந்து மதமா?
  • பிள்ளையார் சிலைகளை தெரு முனைகளில் வைத்து, பத்து நாட்களுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதுதான் இந்து மதமா?
இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா அமைப்புகளும், இந்து மதத்தை ஒழித்துக் கட்டி விட முயலும் கடவுள் மறுப்பு அமைப்புகளும் இவற்றில்தான் தம்மை நிலைநாட்டிக் கொள்கின்றன.

ஆதரவாளர்களால் அலங்கோலப்படுத்தப்பட்டும், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டும் இந்த மதம் ஆண்டாண்டு காலமாக மக்களிடையே தளைத்து நிற்பதற்குக் காரணம் மேலே என்ன?

யார் உண்மையான இந்து? இந்து மதம் எங்கு வாழ்கிறது?
  • யாரும் நம்முடைய தலைவன் இல்லை? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை உணர்ந்து தனக்கு சரி எனப்படுவதைச் செய்து கொள்ள வேண்டும் என்பது இந்து மதம்.
  • தன்னுடைய நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிக்காமல், ஆன்மீகத்தை வீடு என்று நான்கு சுவர்களுக்குள்ளோ, இன்னும் சிறப்பாக தனது மனதுக்குள் மட்டும் பேணிக் கொள்பவர் இந்து.
  • எம்மதமும் சம்மதமே, பூமியில் ஓடும் எல்லா நதிகளும் கடலைப் போய்ச் சேருவது போல, எந்த மதத்தைப் பின்பற்றுபவரும் இறுதியில் இறைவனைப் போய்ச் சேருவார்கள் என்று மனத் தெளிவுதான் இந்து மதம்.
  • ஆங்கே ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் என்று தனது செல்வங்களை அடுத்தவர் நலனுக்குப் பயன்படுத்து பொருளாதாரப் பொறுப்புணர்ச்சிதான் இந்து மதம்.
  • வெயிலில் வாடி வருபவருக்குத் தண்ணீர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் மாண்புதான் இந்துமதம்.
  • நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வலிமை நம் கையிலேயே இருக்கிறது என்று தன்னம்பிக்கை பாவிப்பது இந்து மதம்.
  • பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று தன்னிடம் மாறுபட்டவர்களையும் புரிந்து கொள்ள முற்பட்டு பகைமை ஒழித்து வாழும் நட்பு இந்து மதம்.
சாதிப் பெயரை குறிப்பிடாமலே, பழகுபவர்களிடம் அவர்கள் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளாமலேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.

பகட்டும், கபடமும், ஏய்த்தலும் நிரம்பிய கோயில்களுக்குப் போகாமலேயே நிம்மதியாக இருக்க முடிகிறது.

ராமர் பாலம் என்று பிதற்றுவது மடத்தனம் என்று தெளிவாகத் தெரிகிறது. அயோத்தி ராமர் கோவிலுக்காக செங்கல் பூஜையும், கரசேவையும் மக்களைச் சுரண்டும் முயற்சிகள் என்று கண்டிக்க முடிகிறது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்று ஆன்மீகத்தை பாட்டிலில் அடைத்து விற்க முயலும் வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இதுதான் இந்து மதம் எனக்கு.

16 கருத்துகள்:

TBCD சொன்னது…

தலைப்பு இந்துயம் என்று இருக்கனும்மோ..??

Unknown சொன்னது…

<<<
பூமியில் ஓடும் எல்லா நதிகளும் கடலைப் போய்ச் சேருவது போல, எந்த மதத்தைப் பின்பற்றுபவரும் இறுதியில் இறைவனைப் போய்ச் சேருவார்கள் என்று மனத் தெளிவுதான் இந்து மதம்.
>>>

<<<
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்று ஆன்மீகத்தை பாட்டிலில் அடைத்து விற்க முயலும் வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
>>>

சூப்பர் சிவகுமார்.

இன்னும் உரக்க சொல்லுங்கள், சில பேர் காது கேட்டும் செவிடர்களாக உள்ளனர்.

அருமையான பதிவு.

saravana சொன்னது…

<<<
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்று ஆன்மீகத்தை பாட்டிலில் அடைத்து விற்க முயலும் வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
>>>

Could you please explain how u identified it?

I m not a follower of him.But I like the way he helped the srilankan tamils by whatever extent he can.

Morever I dont think Ravishankar doing any black magic.

I will be happy to know how he is bottling sprituality?
BTW I agree with all your views on hinduism.

vanathy சொன்னது…

நான் நாத்திக வாதியல்ல,திராவிட இயக்கத்தின் சாதி ஒழிப்பு ,பெண் அடிமை ஒழிப்பு தமிழ் உணர்வு (,நான் சொல்வது பெரியார்,அண்ணா காலத் திராவிட இயக்கம் பற்றி )மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளால் நான் கவரப் பட்டாலும் ,கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனத்தைப் புண்படுத்துவது மாதிரியான அவர்களின் கருத்து எனக்கு உடன்பாடு இல்லை.
இந்து மதம் என்ற சொல் என்னைக் கொஞ்சம் குழப்புகிறது. ஏன் என்றால் சைவக் குடும்பத்தில் பிறந்தவளாகவே என்னை நான் கருதுகிறேன்.இப்போது சைவத்தையும் இந்துமதம் என்ற குடைக்குள் சேர்த்து இருப்பதால் நானும் இந்து என்ற மதத்துக்குள்தான் அடங்குகிறேன்
இன்னும் நான் இந்துவாகவே இருந்தாலும் எனக்குப்பிடிக்காத அம்சங்களாக நான் கருதுவது.
1.சாதி அடக்குமுறை
2.மூடநம்பிக்கை
3.சடங்குகள் என்ற முறையில் மிகப்பெரிய அளவில் பணத்தை விரயம் செய்தல்
4.போலிச்சாமியார்களின் நடவடிக்கைகளும் சமயத்தின் பேரால் சாமானியாமக்கள் ஏமாற்றப்படுவதும் .
குறிப்பாக சாதி அமைப்பும் மூட நம்பிக்கையும் இந்துமதத்துக்கு என்றே உள்ளவை
இவை சீர்சிருத்தம் பெறாவிட்டால் இந்து மதத்தினர் என்று சொல்லிக் கொள்வதில் பலர் தயக்கம் காட்டுவார்கள்.
-வானதி

பெயரில்லா சொன்னது…

1) Sri Sri Ravishankar at least raised his voice against Mahinda Rajapaksha and Sinhalese atrocities.... What is your view about this? Summa Korai Mattum Sonna Podhuma.... If you are not interested don't go to him.

2) What about the forced conversions of Hindus by christian missionaries in government hospitals and slums.......by brain washing and giving money? Most of the christian missionary schools run by government aid too, do not allow the hindu girls to wear bindi and flowers. They get the money from government which is also from hindus. Prayers only christian songs are sung...If BJP rules and if it insist surya namaskar and slokas in schools u people are shouting that they are saffronizing the schools then what about christian missionary schools. Christian schoolukku oru nyayam though it is a governement aided school maththa school ku nyama........

3) Do you think there is no caste in Christians and muslims..... then what is CSI Nadar, CSI Dalit Christians.....What is Rowther, Labbai (Rowther Falls under FC and Labbai Falls under BC category under govt rules......).

4) What about the Muslim atrocities on Kashmiri Hindu Pandits.....

5) Will today muslims give money to our Hindu Temples which was destroyed by Muslim Kings for eg The Konark Temple.....Will they accept forced conversions of Hindus by Muslim Kings.....

6) Indian Government is giving Money for Muslims for Haj Yathra saying secular, then they should also give money for hindus to go for Pilgrimage right? Now Rajasekara Samuel Reddy has given money from government for Christians to go to Bethlehem and Jerusalem.....It is the money from Hindus also right? Then what is done for Hindu Pilgrimage

7) Can you talk loud on Christian Atrocities and Muslim Atrocities, Can u criticize them their superstitious beliefs....Can u talk on Freedom for Muslim Women, Their Burka Practice and Thalak atrocities....

8) Dear Mastan - A Happy Ramadan to you - What is your opinion regarding this link -

http://www.themalaysianinsider.com/index.php/malaysia/36272-protesters-threaten-bloodshed-over-hindu-temple

Let the Malaysian Muslims not allow Hindu Temple .... Thats Okay ... for that they can shout during their procession that is also okay ..... but what they have done? ....do they need to cut the head of the cow and bring it during the procession to hurt the sentiments of Hindus.

So the muslim people know, what will be painfull for the hindus and they are doing that to hurt the hindus....Is this what told by allah in koran....

Please answer Mr. Mastan. We do not want a Temple in Ayodya though it was already there and destroyed by Muslims.....But answer to my questions.....

பெயரில்லா சொன்னது…

go and read hindu matrimonial and if there is no caste in christianity then come write blog like this.....

Voice on Wings சொன்னது…

//# யாரும் நம்முடைய தலைவன் இல்லை? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை உணர்ந்து தனக்கு சரி எனப்படுவதைச் செய்து கொள்ள வேண்டும் என்பது இந்து மதம்.
# தன்னுடைய நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிக்காமல், ஆன்மீகத்தை வீடு என்று நான்கு சுவர்களுக்குள்ளோ, இன்னும் சிறப்பாக தனது மனதுக்குள் மட்டும் பேணிக் கொள்பவர் இந்து.
# எம்மதமும் சம்மதமே, பூமியில் ஓடும் எல்லா நதிகளும் கடலைப் போய்ச் சேருவது போல, எந்த மதத்தைப் பின்பற்றுபவரும் இறுதியில் இறைவனைப் போய்ச் சேருவார்கள் என்று மனத் தெளிவுதான் இந்து மதம்.
# ஆங்கே ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் என்று தனது செல்வங்களை அடுத்தவர் நலனுக்குப் பயன்படுத்து பொருளாதாரப் பொறுப்புணர்ச்சிதான் இந்து மதம்.
# வெயிலில் வாடி வருபவருக்குத் தண்ணீர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் மாண்புதான் இந்துமதம்.
# நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வலிமை நம் கையிலேயே இருக்கிறது என்று தன்னம்பிக்கை பாவிப்பது இந்து மதம்.
# பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று தன்னிடம் மாறுபட்டவர்களையும் புரிந்து கொள்ள முற்பட்டு பகைமை ஒழித்து வாழும் நட்பு இந்து மதம்.//

சிவகுமார், நீங்க பட்டியலிட்டிருக்கிற நற்குணங்கள் பற்றி நிச்சயமா கருத்து வேறுபாடு கிடையாது. ஆனா இவைதான் இந்து மதம்ன்னு எந்த அடிப்படையில் முடிவுக்கு வரீங்கன்னு புரியல. திருக்குறள், மற்றும் இந்து மதத்துக்குச் சம்மந்தமே இல்லாத பல மூலங்களிலிருந்து அள்ளித் தெளிக்கப்பட்ட இந்தக் கருத்துக் கோர்வைகளுக்கு இந்து மத லேபிளை ஒட்டி, அதன் பல கசடுகளிலிருந்து அதை sanitize செய்யும் முயற்சியைப் போன்ற ஒரு உணர்வை உங்க பதிவு ஏற்படுத்துது. தெளிவுப்படுத்துவீங்கன்னு நம்பறேன்.

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

நீங்கள் யாரிடமாவது ஸ்ரீ ஸ்ரீ பற்றி பேசி , அறிந்து இருக்கீர்களா ... அவர் என்ன செய்தார் அநியாயம் ??!!!! நான் ஆராய்ச்சி செய்தது கிடையாது.... தெரிந்தால் சொல்லவும்.

இந்து மதமே ஒழிந்தால் ...ஜாதி ஒழிந்து விடுமா ????

திருப்பதி போறீங்க ... உயர்ந்த தத்துவமும் எழுதீறீங்க /பேசறீங்க ,, ஒண்ணுமே புரியல ?

vanathy சொன்னது…

some people say that there is caste system in christianity and islam.
true ,but only in india and south asian countries like Srilanka.

True christianity and islam are against caste system.The sad thing is clutches of caste system exists beyond religions in india,even if they shred their religious identity people find it difficult to shred their ingrained caste identity.
I think rather than converting to other religions,people should fight against caste within the hindu belief system and reform the hindu religion.

-vanathy

பெயரில்லா சொன்னது…

இந்து மதம் யாருடைய கண்டுபிடிப்பு? The Invention of the Hindu, by Pankaj Mishra

பெயரில்லா சொன்னது…

Yes, Vanathy is correct.

There is no caste system in Christianity and Islam. If we find some people practising it, that comes from their parent religion, Hindu religion. They have brought the same mindset which they had as Hindus, when they came over to C and I.

In Hindu religion, the caste system comes from their ancient concept Varnams. Even today, the cocnept of Varnams has not been disowned by them. They accept that it is one of the roots of the relgion.

Thus, in Hindu religion, caste system is official.

In other religion, it is an activity not written or given to them by the founders like Christ or Prophet Mohammed.

As vanathy said, instead of looking inwards and cleansing their houses, the Hindus try to justify their ugliness by pointing out that the converts in other religions practice caste system.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க TBCD,

இந்தியா, இந்துமதம், இந்தி இவை எல்லாம் பல நூற்றாண்டுகளாக உருவான brands. அவற்றை நமக்கு ஒப்புதல் இல்லாத திசையில் எடுத்துப் போகிறார்கள் என்று நாம் ஒதுங்கி விடுவது சரியில்லை.

எங்க அப்பா அம்மா சொல்லிக் கொடுத்த வாழ்க்கை முறை எனது மதம். அதன் பெயர் இந்து. அந்த அடையாளத்தை ஏன், முரட்டுவாதிகளிடம் விட்டு விட்டு அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்?

மஸ்தான்,
நன்றி. பல வழிகளுக்கும் இறைவன் ஒப்புதல் அளிக்கிறார் என்ற secular சிந்தனை இந்தியாவின் மிகப்பெரிய கொடை.

saravana,

ஆன்மீகம் என்பது தனிநபர் விஷயம். அதை ஒரு இயக்கமாக ஆரம்பித்து, தலைவர் துதிபாடி, (தங்க அபிஷேகம் கூட செய்வித்தார்கள்) நடத்துவதைத்தான், பாட்டிலில் அடைத்து விற்பது என்று குறிப்பிட்டேன்.

திரு ரவிசங்கர் ஒரு வாழ்க்கை முறை ஆலோசகர் (lifestyle counselor) என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இந்த நூற்றாண்டில் மென்பொருள் துறையில் கொழிக்கும் பணத்துக்கான வடிகாலாக அவரது நிறுவனம் அமைந்து விட்டது.

ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்தது குறித்து தெரிந்த, புரிந்த விபரங்கள் குறைவு. பண உதவி செய்ததோடு நில்லாமல் உரக்கக் குரல் கொடுக்கவும் செய்தார். அது போற்றப்பட வேண்டியதே.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வானதி,

உங்கள் கருத்துக்கள்தான் எனக்கும். இதைப் போன்ற எண்ணத்துடன்தான் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த அடையாளத்தைக் கடத்தி அடாவடி செய்யும் கும்பல்கள் எழுப்பும் சத்தத்தில் இந்த பெருவார மக்களின் குரல் அடங்கி இருக்கிறது.

அதனால் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் தவிர்ப்பு, பணவிரயம் செய்யாமை, போலிச் சாமியார்களை ஒதுக்குதல் போன்ற சீர்திருத்தங்களுக்கு இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது.

அனானி,
இந்து மதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், மற்ற மதங்களை உள்ளே இழுத்து விடுகிறீர்கள். ஏன்? சிறந்ததை வளர்த்து, இழிந்ததை ஒதுக்கினால் யார் எப்படி இருந்தாலும், இந்து மதம் தளைத்து நிற்கும் என்பதில் என்ன ஐயம் உங்களுக்கு?

அனானி 2,
மேட்ரிமோனியலில் சாதிகளின் ஆதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. சாதி ஒழிப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்று (புற்று நோயை குணப்படுத்துவது போன்றது). புற்று நோய் போல எல்லா செல்களுக்கும் பரவி நிற்கிறது, அதை ஒழித்தால்தான் இந்து மதம் உய்வடையும் என்பது மட்டும் தெளிவு.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

VoW
//ஆனா இவைதான் இந்து மதம்ன்னு எந்த அடிப்படையில் முடிவுக்கு வரீங்கன்னு புரியல//

நான் பின்பற்றுவது இவை. எங்க அப்பா அம்மா, இதை எல்லாம் சொல்லித் தந்து இதுதான் இந்து என்றார்கள். இதை விட வேறு எந்த அடிப்படை வேண்டும்?

கசடுகளை கொடி பிடித்துக் கொண்டு இந்து என்ற அடையாளத்தை தமதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கு இடம் விட்டு நாம் ஏன் ஒதுங்க வேண்டும்?

அது ஒரு கனாக்காலம்,

ஸ்ரீஸ்ரீ பற்றி பரவலாக பேசித் தெரிந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அவரது நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர் கூட்டம் கூட்டுவதும், நிறுவனம் நடத்துவதும் ஆன்மீகம் ஆகாது என்று எனக்குப் படுகிறது.

வானதி சொல்வது போல சாதிமுறையை ஒழித்துக் கட்டுவது மட்டுமே இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கு ஒரே வழி.

மூன்றாவது அனானி சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்துக்கள் தமது வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் பார்த்து அடுத்தவர்களில் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் உதவாது.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

Even an atheist can call himself Hindu, or Christian for that matter, and he/she wont be chided or ostracized for speaking against an established religious code. Except for one religion.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//he/she wont be chided or ostracized for speaking against an established religious code//
இந்த நிலை தொடர வேண்டும் என்றுதான் விருப்பம்.
அன்புடன்,
மா சிவகுமார்