வியாழன், ஏப்ரல் 26, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - முடிவுரை (இப்போதைக்கு)

இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்துத்துவா இயக்கங்கள் ஆக்க பூர்வமாக என்ன செய்யலாம்?

1. சாதி ஒழிப்பு: கலப்புத் திருமணம், இட ஒதுக்கீடு, சாதி முறை பழக்கங்கள் ஒழிப்பு என்று வெளிப்படையாக அறிவித்து தலைவர்களில் ஆரம்பித்து தொண்டர்கள் அனைவரும் இவற்றைப் பின்பற்ற உறுதிமொழி எடுக்கலாம்.

2. கோயில்களில் சாதி பாகுபாடு இல்லாமல் எந்த பக்தியுள்ள இந்துவும் பூசாரியாக உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதை நடைமுறைப்படுத்தத் தேவையான அரசியல், சமூக, சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

3. ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியின் மொழியிலேயே வழிபாடுகள் நடத்தப் போராட வேண்டும். எல்லா மொழியும் இந்தியாவின் தேசிய மொழிகள்தான் என்று ஏற்றுக் கொண்டு 'தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' போன்ற அவமானங்களைத் துடைக்கப் பாடுபடலாம்.

4. மடங்களிலும், கோயில்களிலும் குவிந்து கிடக்கும் சொத்துக்களை, செல்வங்களை நலிந்தவர்களுக்குப் பயன்படும் வகையில் செலவழிக்க ஏற்பாடுகள் செய்யலாம். கடவுளின் இருப்பிடமும், அவரது பக்தர்களின் நடவடிக்கைகளும் எளிமையும், அன்பும் கலந்ததாக மாறி பல கோடி மக்களின் வறுமைக்கிடையே நடக்கும் ஆடம்பர வழிபாடுகளை, மட நடவடிக்கைகளை மாற்ற முயற்சிக்கலாம்.

இதை எல்லாம் செய்து முடித்து விட்டால், இந்து மதத்தின் உண்மையான செல்வங்கள் எல்லோரையும் போய்ச் சேரும். மிரட்டியும், உணர்வுகளைத் தூண்டி விட்டும், சூலாயுதம் ஏந்தியும் மதத்தைக் காக்க வேண்டிய தேவையே இல்லாமல் போய் விடும்.

123 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

மாசி... இப்படி ஒரு நல்ல யோசனையை சொல்லி ஆர்.எஸ்.எஸ் தோன்றியதற்கான காரணங்களையே அழிக்க பார்க்கிறீர்கள். மேலே குறிப்பிடுபவைகள் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாகவும், அதற்கான முட்டுக்கட்டைகளுக்கே முட்டுக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்கு நீங்கள் சொல்வதெல்லாம் ஏறாது. நாமெல்லாம் இந்துக்கள் என்று சத்தமாகவே சொல்வார்கள்... இந்த 'இந்துக்கள்' என்ற ஒருங்கினைப்பு ஒரூமைப்பாட்டுக்கு அல்ல, பழமை வாதத்தை நிலைநிறுத்துக்கொள்ளவே. நாமெல்லாம் இந்துக்கள் கோசம் ஓரளவுக்கு பலன் தருகிறது.

இப்படித்தான்...

ஒருவர் கூட எங்கோ எழுதியிருந்தார்...'எத்தனை சீர்த்திருத்தவாதிகள் வந்தால் என்ன ? இந்துக் கோவில்களில் கூட்டம் குறைந்தா போய்விட்டது ?'
:))

Thamizhan சொன்னது…

நல்ல பதிவுகள் போட்டு நன்றாக முடித்துள்ளீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.
விவேகானந்தர் முதல் வள்ளலார் வரை எவ்வளவோ பேர் இந்து மதத்தில் மாற்றங்கள் வேண்டும் என்று முயன்று பார்த்தார்கள்.வள்ளலார் கடை விரித்தேன் கொள்ளுவார் இல்லை என்றார்.
மனித நேயம் இல்லாத மதம் மனிதர்களுக்கு நல்லது செய்ய முடியாது.இறைவன் முன்னே கோடிசுவரர்கள்,குடிமகன்கள்,பெண்கள் என்ற வேற்றுமைகள் ஒழிந்தால்தான் அது எந்த நல்லதும் செய்ய முடியும்.இல்லாவிட்டால் மதம் ஒரு அரசியல் கருவி என்ற இந்துத்துவ வெறிதான் மிஞ்சும்.

ஜோ/Joe சொன்னது…

மிக நல்ல யோசனைகள்.

-L-L-D-a-s-u சொன்னது…

மாசி..

கட்டுரைகளுக்கு நன்றி..

நல்ல யோசனைகள்..

பெயரில்லா சொன்னது…

வெங்காயத்தனமான யோசனைகள்...நீங்க வேணுமானா மிசிநரிக்காசில் மதம் மாறுங்க.

ஏய்யா டுபாக்கூர், இந்த சிந்தனைகளை ஏன் மிசிநரி சொத்துக்களுக்கும், இஸ்லாமிய வக்பு வாரியத்திற்கும் நீங்க எக்ஸ்டண்ட் பண்ண வேண்டும்ன்னு எழுதக் கூடாது?...ஏன் எழுதமாட்டிங்கன்னா உங்களுக்கு அவங்க தருகிற பெட்டிகள் நின்றுவிடும். அதுமட்டுமா, உலகத்தில் உங்களை நடமாட விடமாட்டார்கள்...அந்த பயம்...ஆனால் ஆர் எஸ் எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்திற்கு பயப்படுவதால் நீங்க இந்தமாதிரி ஜெல்லியடிக்க முடிகிறது....அடிங்க, அடிங்க, நல்லா அடிங்க.

பெயரில்லா சொன்னது…

/ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியின் மொழியிலேயே வழிபாடுகள் நடத்தப் போராட வேண்டும். எல்லா மொழியும் இந்தியாவின் தேசிய மொழிகள்தான் என்று ஏற்றுக் கொண்டு 'தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' போன்ற அவமானங்களைத் துடைக்கப் பாடுபடலாம்./

மசூதியில் அரபு மொழியில் மட்டும்தான் தொழுகை என்று வைத்திருக்கிறார்களே? அதையும் சேர்த்துத்தானே மாற்ற வேண்டும்?

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

ஒரு உண்மையை சொல்லவேண்டுமென்றால் நான் மா.சிவகுமாருக்கு ஒரு பெரிய நன்றியைக் கூற வேண்டும். நானாக இந்த விசயங்களை எழுத ஆரம்பித்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் காரன் வேண்டுமென்றே பழைய விசயங்களை கிளறி மதக்காயங்களை ஏற்படுத்துகிறான் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் மா.சிவகுமார் இந்த மாதிரி மொண்ணையாக ஆதாரங்கள் இல்லாத பிரச்சார பதிவை ஆரம்பித்து எனக்கு உண்மைகளை கூற ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீதான அவதூறு பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் பதிவுத் தொடரையும் விரைவில் எழுதுவேன். இதற்கெல்லாம் உத்வேகமும் ஊக்கமும் அளிப்பதற்காக நான் மா.சிவகுமாருக்குதான் நன்றி சொல்லவேண்டும். எனக்கும் அவர் தொடரை நிறுத்தியது வருத்தம்தான். அவரைப்போல் பொய்களையும் பிரச்சார மாயைகளையும் கூச்சலிட்டு சொல்பவர்கள்தான் நாம் சொல்லும் உண்மைகளை மேலும் பிரகாசிக்க வைக்கிறார்கள். அந்த விதத்தில் சிவகுமாருக்கு நன்றிகள் பல.
மண்டைக்காடு கலவரங்களுக்கு முந்தைய கிறிஸ்தவ அவதூறு பிரச்சாரங்கள் குறித்து இங்கே:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_18.html
மண்டைக்காடு கலவரங்களுக்கு முன்னர் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்கள் இங்கே:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_1238.html
மண்டைக்காடு கலவரங்களுக்கு முன்னர் இந்து வழிபாட்டு தலங்களின் அருகில் அரசு-விதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு சம்பவங்கள் இங்கே:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_26.html இது புதுசு
மண்டைக்காடு கலவரங்களை ஆராய்ந்த வேணுகோபால் கமிசனின் தலைவர் நீதியரசர் (ஓய்வு) முனைவர்.வேணுகோபால் மதமாற்றங்கள் எப்படி கலவரங்களை தூண்டின என்பது குறித்து எழுதிய கட்டுரை இங்கே:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_21.html
மீண்டும் மிகவும் நன்றி திரு மா.சிவகுமார். அடிக்கடி இப்படி எழுதி சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன்,

திட்டமிட்டு நடத்தப்படும் இந்துத்துவா இயக்கங்களின் அரசியல் திரட்டலுக்கு நமது விழிப்புணர்வே ஒரே மறுமொழியாக இருக்க முடியும். நம்மால் முடிந்ததை தொடர்ந்து செய்வோம்.

தமிழன்,

ஒவ்வொரு நிலையிலும் குறைகளைக் களைந்து நல்லவற்றை ஏற்றுக் கொள்ளும் சமூகங்கள் தளைக்கும். நாமும் அதே வழியில் போனால் நல்வாழ்வு உறுதி.

ஜோ, தாசு,

நன்றி.

அனானி 1 & 2,

நான் இந்துவாக இருப்பதால் இந்து மதத்தின் குறைகளைக் குறித்துப் பேசுகிறேன். உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. இஸ்லாத்திலும், கிருத்துவ மதத்திலும் இருப்பவர்கள், தமது சமூகம் முன்னேறத் தேவையானதைச் செய்து கொள்வார்கள்.

அரவிந்தன்,

மேலே சொன்ன மாறுதல்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை? அவை எல்லாம் பொருட்டில்லையா?

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

அன்புள்ள சிவகுமார்,

உரையாடலோ விவாதமோ இரு தரப்பிலுமாக நிகழ வேண்டும். துரதிர்ஷ்டவசமாக நேர்மையான திறந்த விவாதத்திற்கு தாங்கள் எந்த அளவுக்கு சாத்தியப்படுகிறீர்கள் என்பது மகத்தானதோர் கேள்விக்குறியாகவே உள்ளது. அப்பட்டமான நேர்மையின்மை முதல் அடிப்படைவாதத்தினை ஒக்கும் முன்முடிவுகள் வரையாகவே தங்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்த 'கட்டுரை' தொடர்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக முதல் இந்து எழுச்சி மாநாட்டினை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்னர் நிகழ்ந்த ஐக்கிய கிறிஸ்தவ ஊர்வலத்தை குறித்து நீங்கள் மறைத்து விட்டு இந்து எழுச்சி ஊர்வலத்தை குறித்து பேசுகிறீர்கள். பிந்தையது உங்கள் பார்வையில் தவறானது எனக் கொண்டாலும் கூட அதற்கு ஒரு provocation ஆக இருந்த நிகழ்ச்சியை முழுக்க மறைத்துவிட்டு பேசுவதற்கு பெயர்தான் நேர்மையா? இதைத்தான் காந்தியிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டீர்களா? முதலில் நீங்கள் உண்மையை பேச முயற்சி செய்யுங்கள். குறைந்தபட்சம் இப்போது கூட (உங்களுக்கு காந்தி என்கிற பெயர் ஏதாவது நேர்மை உணர்வை அளித்திருக்கும் பட்சத்தில்) உங்களது பதிவுகள் உண்மையை மறைத்திருப்பதை ஒப்புக்கொள்வீர்கள். சரி வெளிப்படுத்தப்பட்ட உங்கள் பொய்களுக்கு நீங்கள் பதில் சொல்லமுடியாமல் பெரியமனுசன் (யோக்கியன் வாராரு செம்பெடுத்து உள்ள வை ஸ்டைல் பெரியமனுசன்) வேசம் போட்டு கூறியுள்ள விசயங்களுக்கு வருவோம். நீங்கள் கூறியுள்ள விஷயங்களை அமைப்பு ரீதியாக செயல்படுத்தி வரும் ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பதனை தாங்கள் மறைத்துவிடுகிறீர்கள். மா.சிவகுமார் போன்ற நேர்மையற்ற போலி காந்திய வகையறாக்களின் ஆலோசனைகள் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கோ அல்லது இந்துசமுதாய இயக்கங்களுக்கோ தேவையில்லை.
தலித்துகளுக்கு பாரதத்தின் முக்கிய கோவில்களில் பூசாரித்துவம் வழங்க வேண்டும் என குரல் எழுப்பும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தலித்துகளின் முன்னேற்றத்துக்காகவும் சமுதாய சமரசத்திற்காகவும் பாடுபடும் ஆர்,எஸ்,எஸ்ஸை தலித் தலைவர்கள் மனமுவந்து பாராட்டும் போது (பார்க்க இங்கே) ஆர்.எஸ்.எஸ்ஸின் அரிச்சுவடியையும் அறியாமல் இந்துக்கள் படும் துயரில் எள்ளளவும் பங்கேற்க துணியாத சிவகுமார் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆலோசனை சொல்வது சிரிப்பாகத்தான் இருக்கிறது.
இன்றைய தேதியில் தலித் சமுதாயங்களுக்கு பெருமளவில் மருத்துவம், கல்வி, சமுதாய நீதி ஆகியவற்றில் பெரும்பணியாற்றிவரும் இந்து இயக்கம் ஆர்.எஸ்.எஸ்ஸே ஆகும்.
கோவில் அர்ச்சனையை பொறுத்தவரையில் சமஸ்கிருதம் இந்த தேசம் முழுமைக்கும் சொந்தமான மொழி. எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ இனமோ பிராந்தியமோ சாதியோ சொந்தம் கொண்டாடாத தேசம் முழுமைக்கும் சொந்தமான ஒரு மொழி உண்டென்றால் அது சமஸ்கிருதம். அதன் ஆதிகவி வான்மீகி எனும் வேடர், அதன் ஆகச்சிறந்த கவி காளிதாசர் எனும் சூத்திரர். பகவத் கீதையை அருளியது ஒரு இடையன். அதனை தொகுத்தளித்தவர் ஒரு மீனவப்பெண்ணின் மைந்தர். காயத்ரி மந்திரத்தை அருளிய விசுவாமித்திரர் அந்தணரல்லாத அரசர். சண்டோ க்கிய உபநிடதம் கூறும் ஞானி ரைக்யர் எனும் வண்டி இழுப்பவர். எனவேதான் அண்ணல் அம்பேத்கர் அது பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் என கூறினார். சமூக போராளியும் ஆன்மிக அருளாளருமான ஸ்ரீ நாராயணகுருவும் தலித் தலைவரான அய்யன் காளியும் சமஸ்கிருத கல்விக்கு முக்கிய இடமளித்தனர். இன்றைக்கும் ஸ்ரீ நாராயணகுருவின் சிவகிரியில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றால் காரணம் அதுதான். ஸ்வாமி விவேகானந்தரும் சமுதாய ஆற்றல் பெற சமஸ்கிருத கல்வியின் முக்கியத்துவத்தை கூறியுள்ளார். எனவே சமஸ்கிருதம் ஏதோ இந்து சமுதாயத்தை பலவீனப்படுத்தவில்லை மாறாக ஏற்றமளிக்கிறது. இந்து தருமத்தின் கோவில்கள் வெறும் வழிபாட்டுதலங்களல்ல மாறாக தேசத்தின் ஆன்மிக ஒருமைப்பாட்டு கேந்திரங்கள். (இதனை நான் சொல்லவில்லை மகாத்மா காந்தியே தமது 'இந்து சுவராஜ்ஜியம்' எனும் நூலில் கூறியுள்ளார். போலி காந்தியவாதிகள் மறக்க ஆசைப்படும் அந்த நூலை கடாசிவிடுவீர்களென எனக்கு தெரியும்) எனவே சமஸ்கிருத அர்ச்சனை தேசிய ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் ஒரு வழியாகும். உண்மைகள் இவ்வாறிருக்க எவ்வித சமுதாய அறிவும் இன்றி பேசும் சிவகுமார் போன்ற போலிகளை தோலுரித்துள்ளது திருவாளர்.சிவகுமாரின் கட்டுரைத்தொடர், அதற்கு மீண்டும் நன்றி சிவகுமார்.

அரவிந்தன் நீலகண்டன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவில் அர்ச்சனையை பொறுத்தவரையில் சமஸ்கிருதம் இந்த தேசம் முழுமைக்கும் சொந்தமான மொழி. எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ இனமோ பிராந்தியமோ சாதியோ சொந்தம் கொண்டாடாத தேசம் முழுமைக்கும் சொந்தமான ஒரு மொழி உண்டென்றால் அது சமஸ்கிருதம். அதன் ஆதிகவி வான்மீகி எனும் வேடர், அதன் ஆகச்சிறந்த கவி காளிதாசர் எனும் சூத்திரர். பகவத் கீதையை அருளியது ஒரு இடையன். அதனை தொகுத்தளித்தவர் ஒரு மீனவப்பெண்ணின் மைந்தர். காயத்ரி மந்திரத்தை அருளிய விசுவாமித்திரர் அந்தணரல்லாத அரசர். சண்டோ க்கிய உபநிடதம் கூறும் ஞானி ரைக்யர் எனும் வண்டி இழுப்பவர். எனவேதான் அண்ணல் அம்பேத்கர் அது பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் என கூறினார். சமூக போராளியும் ஆன்மிக அருளாளருமான ஸ்ரீ நாராயணகுருவும் தலித் தலைவரான அய்யன் காளியும் சமஸ்கிருத கல்விக்கு முக்கிய இடமளித்தனர். இன்றைக்கும் ஸ்ரீ நாராயணகுருவின் சிவகிரியில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றால் காரணம் அதுதான். ஸ்வாமி விவேகானந்தரும் சமுதாய ஆற்றல் பெற சமஸ்கிருத கல்வியின் முக்கியத்துவத்தை கூறியுள்ளார். எனவே சமஸ்கிருதம் ஏதோ இந்து சமுதாயத்தை பலவீனப்படுத்தவில்லை மாறாக ஏற்றமளிக்கிறது. இந்து தருமத்தின் கோவில்கள் வெறும் வழிபாட்டுதலங்களல்ல மாறாக தேசத்தின் ஆன்மிக ஒருமைப்பாட்டு கேந்திரங்கள். //

இந்த தேசத்தில் பல மாநிலங்கள் இருக்கிறது, பல மாநிலங்களில் பல கோவிலகள் இருக்கிறது ... அரசு மொழியாக இல்லாமலும் அல்லது எவருக்கும் புரியாத மொழியாக இருக்கும் ஒரு மொழி தேசம் முழுவதற்கும் சொந்தம் என்றால் நரிக்குறவர்கள் பேசும் மொழிகள் கூட எவரும் சொந்தம் கொண்டாடாத மொழிதான். பழம் பெருமை எல்லா பழைய மொழிகளுக்கும் இருக்கிறது, தமிழுக்கு பட்டியல் இட்டால் எழுதிமாளாது, அது போல தெலுங்குக்கும் ஏனைய மற்ற இந்திய மொழிகளுக்குமே தத்தம் சிறப்பு இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு தேவர்களுக்கு புரியும் என்று கற்பனையால் சொல்லப் படுகிற மொழியே தேச ஒற்றுமைக்கு வழி வகுக்கிறதென்பதற்கு எந்த சான்றும் இல்லை. மொழி வாரி மாநிலங்கள் அமைப்பு முறையில் அமைத்த மாநிலங்களில் அந்ததந்த மொழிகளிலேயே வழிபாடுகள் நடத்தப்படவேண்டும். அண்ணல் அம்பேத்காரின் கொள்கைகளைப் மற்ற கொள்கைகளை இவர் போற்றுகிறாரா தெரியவில்லை. சூத்திரன் படித்தால் நாவை அறு என்று சொல்லும் மனுவேதத்திற்கு மண்டகப்படி அளக்கும் இந்துத்துவா வாதிகள் சமஸ்கிரதம் சமத்துவம் பேசும் மொழி என்று சொல்வதைக் கேட்கையில் சிரிப்புதான் வருகிறது. கோவில்கள் கூடாது என்று சொல்லவில்லை... அது கொடியவர்களின் கூடாரம் ஆகக் கூடாது என்று சொல்லும் கலைஞரின் பராசக்தி வசனம் நினைவுக்கு வருகிறது.பொத்திப் பொத்தி வைத்ததால் அழிந்து போனது சமஸ்கிரதம்.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//அண்ணல் அம்பேத்காரின் கொள்கைகளைப் மற்ற கொள்கைகளை இவர் போற்றுகிறாரா தெரியவில்லை. சூத்திரன் படித்தால் நாவை அறு என்று சொல்லும் மனுவேதத்திற்கு மண்டகப்படி அளக்கும் இந்துத்துவா வாதிகள் சமஸ்கிரதம் சமத்துவம் பேசும் மொழி என்று சொல்வதைக் கேட்கையில் சிரிப்புதான் வருகிறது.//
மனு வேதம் அல்ல ஸ்மிருதி. அதனை இந்துத்வவாதிகள் ஏற்பதில்லை. ஆக, அறியாமையும் வெறுப்பையுமே மூலதனமாக்கி திரியும் கருத்தியல் மூடர்களுக்கு இந்துத்துவம் புரியாமல் போனதில் அதிசயமும் இல்லை.

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

நீங்கள் பாதுகாக்கப் போராடும் இந்துத்துவா என்பதற்கும் நான் பின்பற்றும் இந்து மதத்துக்கும் தொடர்பே இல்லை என்று நினைக்கிறேன்.

'சமஸ்கிருதம்தான் தேவ மொழி, எல்லா இந்துத்துவா வழி செல்பவர்களுக்கும் பொது மொழி' என்றால் அது நிச்சயமாக என் வழி இல்லை.

நலிவுற்ற சாதியினரின் நலனுக்காக பாடுபடும் திசையில் கலவரத்துக்கு திட்டமிடும் நேரத்தில் சிறு பகுதியை செலவிட்டிருந்தால் இன்று சாதி முறையே ஒழிந்திருக்கும்.

தீண்டாமை ஒழிப்பின் போது இந்து மகாசபையின் நிலை என்ன? கோயில்களில் அனைத்து சாதியினரும் பூசாரி ஆகலாம் என்பது குறித்து இந்துத்துவா இயக்கங்களின் நிலைப்பாடு என்ன?

இவை அனைத்திலுமே வருணசிரம தர்மத்தை வளர்க்கும், ஒரே மொழியை நிலைநாட்டச் செய்யும், ரு சிறு ஆதிக்க குழுவினரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும் குறிக்கோளில்தான் இந்துத்துவா இயக்கங்கள் செய்லபடுகின்றன என்பது என்னுடைய கருத்து

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

////கோவில் அர்ச்சனையை பொறுத்தவரையில் சமஸ்கிருதம் இந்த தேசம் முழுமைக்கும் சொந்தமான மொழி. எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ இனமோ பிராந்தியமோ சாதியோ சொந்தம் கொண்டாடாத தேசம் முழுமைக்கும் சொந்தமான ஒரு மொழி உண்டென்றால் அது சமஸ்கிருதம்.//


இதையே இஸ்லாமியர்கள் அரபி விஷயத்தில் சொல்வது கவனிக்கத்தக்கது. அதை அவர்கள் சொல்லும்போது இணைய தமிழ்-பக்தர்கள் வாய்மூடி மவுனமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.


//இந்த 'இந்துக்கள்' என்ற ஒருங்கினைப்பு ஒரூமைப்பாட்டுக்கு அல்ல, பழமை வாதத்தை நிலைநிறுத்துக்கொள்ளவே. //


இதையும் இஸ்லாத்துடன் பொருந்திப்பார்க்கலாம். கிட்டத்தட்ட இந்த தொடர் முழுக்க எனக்கு மா.சி ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக வைக்கும் காரணங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு பொருந்துவதாக தோன்றியது.


மா.சி காசு வாங்கிக் கொண்டு இப்படி எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டுகள், நான் எழுதும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்கள் கண்டு இதே குற்றச்சாட்டைச் சொல்லும் இணைய இஸ்லாமிஸ்டுகளை நினைவுக்கு கொண்டுவந்தது.


மற்றபடி, தொடரும் அதற்கு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் எதிர்வினையும் படிக்க சுவாரசியமாக இருந்தது, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வைத்தது.


அ.நீயின் கோபம் எனக்குப் புரிகிறது. அதே சமயம், அரவிந்தனின் கோபத்தால் பாதிக்கப்படாமல் எதிர்வினை புரியும் மா.சியின் பண்பு போற்றுதலுக்குரியது.

நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

நேசகுமார்,

மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உள்ளிருந்தே வர வேண்டும், வெளியிலிருந்து சுட்டிக் காட்டினால் முரண்டும் பிடிவாதமும் அதிகமாகுமே தவிர நிலைமை மேம்படாது என்பது என்னுடைய கருத்து.

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி :-)

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உள்ளிருந்தே வர வேண்டும், வெளியிலிருந்து சுட்டிக் காட்டினால் முரண்டும் பிடிவாதமும் அதிகமாகுமே தவிர நிலைமை மேம்படாது என்பது என்னுடைய கருத்து.//

That depends on the contextual variables like level of violence, internal tolerance versus external incapacity, traditions, overall atmosphere prevailing within that community etc.

I will write in detail regarding this at some later point.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

மா.சிவகுமார் நீங்கள் எழுப்பியிருக்கும் சில கேள்விகளுக்கு இங்கே பதிலளித்துள்ளேன். பார்க்கவும்:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_28.html

Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

RSS என்னும் பாஸிச வெறிக்கும்பலின் சுயரூபத்தை சகோதரர் மா. சிவக்குமார் தோலுறித்து காட்டி, இந்தியாவின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மினப் பெரும் விரோதி என்று தெளிவாக்கியுள்ளார். RSSன் அடிவருடி
சகோதரர். நேசக்குமார், மனித விரோத அமைப்பான RSSஐ, மனித நேய இலக்கணத்தின் கோட்பாடான இஸ்லாத்துடன் பொருந்துவதாக எழுதி, தான் எப்படிபட்ட பெரும் குழப்பவாதி என்பதனையும், கருத்து மோசடியில் கில்லாடி என்பதனையும் நம் அனைவருக்கும் சுயவிளக்கம் தந்துள்ளார். நன்றி நேசக்குமார் அவர்களே! எந்த இரு எதிர்மறையான கருத்துக்களையும் கூட பொருத்தி காட்டும் நேர்மையற்றவர் என்று பறைசாற்றிய வாக்குமூலம் இதோ,
//இந்த தொடர் முழுக்க எனக்கு மா.சி ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக வைக்கும் காரணங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு பொருந்துவதாக தோன்றியது.//

இஸ்லாத்தை எதிர்க்க வேண்டம் என்றும் ஒற்றை கொள்கையோடு உலாவரும் இவர், அதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கும் வெறியராக தன்னை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இத்தகைய இனவெறியர்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டிற்கும், சமூக நல்லிணக்கத்திறகும் அவசியம்.

சிந்தித்து செயல்படுவோம்!
ஒன்றுபட்டு உறுதிபெறுவோம்!

வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் கோஷம் அல்ல. நம் கொள்கை!

வளமான இந்தியாவை வலிமையான இந்தியாவை உருவாக்கிட, வர்ணாசிரம வர்க்க சங்பரிவார கும்பலை இந்தியாவிலிருந்து இல்லாமல் ஆக்குவோம். வாருங்கள்

அன்புடன் சகோதரன்
நெய்னா முஹம்மது

பெயரில்லா சொன்னது…

//வளமான இந்தியாவை வலிமையான இந்தியாவை உருவாக்கிட, வர்ணாசிரம வர்க்க சங்பரிவார கும்பலை இந்தியாவிலிருந்து இல்லாமல் ஆக்குவோம். வாருங்கள்
//


இதையே நான் குறிப்பிட்டேன். இப்போது நைய்னா சுட்டிக் காட்டும் இடம் வேறாக இருக்கிறதே தவிர, செய்ய முனையும் விஷயம் மா.சிவகுமார் கண்டிக்கும் அதே விஷயம்தான்.


குஜராத்தில் நிகழ்ந்தது என்று நாம் அனைவரும் கண்டிக்கும் ஒன்றுதான் சவுதியில் நிறுவனப்படுத்தப்பட்டு அரசின் கோட்பாடாக, அல்லாஹ்வின் ஷரீயத்தாக துலங்குகிறது. முஸ்லீமுக்கு ஒரு நீதி ஹிந்துவுக்கு ஒரு நீதி என்பதை இங்கே கண்டித்தால், அதுவே சவுதியில் தூய்மையான இஸ்லாமாக பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருக்கிறது(அங்கே இந்து இறந்தால் ஒரு தொகை, ஈமானுள்ள முஸ்லீம் இறந்தால் அதைவிட கூடுதலான ஈட்டுத் தொகை - இதுதான் நைய்னாவின் கடவுளின் கடைசி தூதர் காட்டிய அன்பு மார்க்கத்தின் சமநீதி, மனித நேயம்!).


அய்யா நைய்னா, ஆர்.எஸ்.எஸ்ஸின் குறைபாடு என்று நீங்களே பட்டியலிடுங்களேன். அது எப்படி இஸ்லாத்தின் அதிகாரபூர்வ கொட்பாடாக, அடிப்படையாக இருக்கிறது என்று நான் விளக்குகிறேன். பிறகு யார் ஃபாஸிசத்துக்கு வால் பிடிக்கிறார்கள் என்பதை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

அப்படியே, இஸ்லாம் சென்றவிடமெல்லாம் எப்படி மண்ணின் மைந்தர்கள் காணாமல் போகின்றனர் என்பதையும் பார்க்கலாம் - எகிப்தின் பூர்வ குடிகள் எங்கே போனார்கள், அங்கே எப்படி அரபிக்களே நிறைந்துள்ளனர், இலங்கையில் எப்படி தமிழ் முஸ்லிம்கள் தங்களை அரபிக்களாக கருதுகின்றனர், மொரொக்கோவில் எப்படி அரபிக்கள் நிரம்பினார்கள் - அங்கே வாழ்ந்த பூர்வ குடிகளுக்கு என்ன நேர்ந்தது என்று விலாவாரியாக மனிதநேயக் கோட்பாட்டின் மகத்துவத்தைப் பற்றி விரிவாக விவாதித்து பின்பு யார் பாசிஸத்தை இன்றும் ஆதரித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை முடிவு செய்யலாம்.


மதவெறியே இல்லாத மனித நேய மார்க்கம் மலிந்துள்ள பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும், எகிப்திலும், சவுதியிலும் மாற்று மதத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது என்று பார்த்து அதை இந்தியாவுடன் ஒப்பிடலாம்.


அதோடு கூட தமிழ்நாட்டில் எத்தனை கோவில்களில் முழுமையாக சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக பயன்படுத்தப் படுகிறது, எத்தனை மசூதிகளில் தமிழ் முழுமையாக வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் விவாதிக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

//TENTH GRADE

The 10th-grade text on jurisprudence teaches that life for non-Muslims (as well as women, and, by implication, slaves) is worth a fraction of that of a "free Muslim male." Blood money is retribution paid to the victim or the victim's heirs for murder or injury:

"Blood money for a free infidel. [Its quantity] is half of the blood money for a male Muslim, whether or not he is 'of the book' or not 'of the book' (such as a pagan, Zoroastrian, etc.).

"Blood money for a woman: Half of the blood money for a man, in accordance with his religion. The blood money for a Muslim woman is half of the blood money for a male Muslim, and the blood money for an infidel woman is half of the blood money for a male infidel."
//

இது சவுதி பாடப் புத்தகத்தில் இருப்பது. காஃபிர் ஒருவரின் உயிருக்கு இருக்கும் மதிப்பு, முஃமீனாக முஸ்லீமின் உயிரின் மதிப்பில் ஒரு சிறு பங்கே. ஒரு பெண்ணின் உயிரின் மதிப்பு, ஆணின் உயிரின் மதிப்பில் பாதியே - இதெல்லாம் அங்கிருக்கும் சட்டம்! ஆம், அல்லாஹ்வால் அருளப்பட்ட ஷரீயத்து சட்டம்.


இதற்குப் பெயர்தான் மனிதநேயம், ஆம், இஸ்லாமிய மனிதநேயம்!

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/05/19/AR2006051901769_pf.html

பெயரில்லா சொன்னது…

அரவிந்தன் & மா.சி,

நான் ஒரு இந்து என்று நினைக்கிறேன் இந்து தெய்வங்களை வழிபடுகிறேன். ஆனால் என்னால் வடமொழியை ஏற்றுக்கொள்ள் முடியவில்லை. மேலொர் கீழோர் என்று உள்ளதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அரவிந்தன்,
நீங்கள் எப்போதும் நம் மதத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் ஏன் மற்ற மதத்தை இழுக்கீறீர்கள். ஏன் நாம் எல்லாம் சேர்ந்து நம் மத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி அதை நிவர்த்திக்கும் முறை பற்றி மட்டும் விவாதிக்க கூடாது.

சிவக்குமார்,
நீங்களும் இந்த மேலே சொன்ன மாதிரியான விவாதத்தை மட்டும் அனுமதித்து ஒரு பதிவு இடுங்கள் எல்லோரும் கருத்து கூறட்டும்.

தயவு செய்து மற்ற மததினரைப்பற்றிய கமெண்டுகளை அனுமதிக்காமல் விவாதித்தினைக் கொண்டு செல்லுங்கள்.

பெயரில்லா சொன்னது…

சமஸ்கிருதம்தான் இந்துக்களின் மொழி, இந்தியாவின் மொழி என்று உளறி வைத்திருக்கும் அரவிந்தன் நீலகண்டனின் வசனம் குறித்து நான் இட்ட பின்னூட்டம் எங்கே சிவகுமார் ஐயா? நண்பர் என்பதற்காக இப்படி அமுக்கிவிடுவதா? குறைந்தபட்சம், பின்னூட்டம் அனுமதிக்கப்படவில்லை என்றாவது போடுவதற்கு என்ன? அப்படி என்னதான் தப்பாகக் கேட்டுவிட்டோம் அதில்?

பெயரில்லா சொன்னது…

// அ.நீயின் கோபம் எனக்குப் புரிகிறது. அதே சமயம், அரவிந்தனின் கோபத்தால் பாதிக்கப்படாமல் எதிர்வினை புரியும் மா.சியின் பண்பு போற்றுதலுக்குரியது. //

தன் ஒவ்வொரு வாதத்திற்கும், எதிர்வினைக்கும் ஆணித்தரமான உண்மைகளை வைக்கும் அரவிந்தன் எங்கே? எந்த intellectual honesty-ம் இல்லாத மாசி எங்கே? அரவிந்தன் கூற்றுகளுக்கு உள்ள credibilityக்கும் மா.சி.யின் பிரசார பொய்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

சும்மா ரிடாரிக்கலாகவே மீண்டும் மீண்டும் எதிர்வினை புரிவது ஒரு "போற்றுதலுக்குரிய பண்பு" என்று நீங்கள் கூட நினைக்கிறீர்களா நேசகுமார்??

பெயரில்லா சொன்னது…

பொய்களையும் பசப்புகளையும் மதவெறியையும் வெளிப்படுத்தும் அரவிந்தனின் அலட்டல்கள் ஆணித்தரமான உண்மைகள் என்ற பிரமையில் சிக்கிய அடிவருடிகளுக்கு மாசி யின் எழுத்துக்கள் அப்படித்தான் தோன்றும். வெறும் மதவெறி தவிர என்ன உண்மை வெளிப்படுகிறது அரவிந்தனிடம்?

பிறமதங்களை இழுக்காமல் தன் மதம் குறித்து பேசவே தெரியாத பிண்டங்கள் எல்லாம் அறிவாளிகள் என்றால் நாங்களெல்லாம் அறிவற்றவர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். என்ன எழுதுகிறோம் என்று அறிந்து தான் பேசுகிறீர்களா நீங்களெல்லாம். எழுத்தால் கருத்தால் விவாதிக்கும் மாசியை தனிமனித தாக்குதலால் நேரிடும் இவர்களுக்கு ஆதரவாக பேச இன்னும் சில வெறியர்கள்! வெட்கம் கெட்டவர்கள்.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

நண்பர் மாசி

அரவிந்தன்களோடு விவாதிப்பதில் பயனில்லை. விவாதிக்க தேவையும் இல்லை. அவர்கள் விவாதத்தின் மூலம் பிரச்சாரம் தான் செய்ய முயல்கிறார்கள். மக்களின் மனதில் உள்ள மத உண்ர்வை வெறியாக தூண்ட வைத்து தங்களுக்கு ஆதரவாக சிந்திக்க வைப்பது மட்டுமே அவர்களின் நோக்கம். அதற்கு நீங்களும் இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ஓகை சொன்னது…

//இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்துத்துவா இயக்கங்கள் ஆக்க பூர்வமாக என்ன செய்யலாம்?//

இந்து மதம் ஏன் பாதுகாக்கப் படவேண்டும்?

இந்துமதம் ஒழிய வேண்டுமென்று கூறும் பல பதிவுகளை இணையத்தில் படித்திருக்கிறேன்.
இந்து மத புராணங்கள் ஆபாசக் களஞ்சியங்கள் என்று விவரிக்கும் பல பதிவுகளை இணையத்தில் படித்திருக்கிறேன்.
இந்து மதத்தின் மனுதர்மத்தால் விளந்த கேடுகளைப் பற்றி பல பதிவுகளை இணையத்தில் படித்திருக்கிறேன்.
இன்னும் பலவாக இந்துமதத்தால் விளையும் தீமைகளை விவரிக்கும் பல பதிவுகளை இணையத்தில் படித்திருக்கிறேன்.

இந்து மதத்திற்கு என்ன தேவை?

இந்து மதம் தேவையில்லை என்ற பதிலைத் தவிர்த்து வேறு பதில் தருவதாக இருந்தால் சற்று விளக்கமாகத் தரவேண்டுகிறேன்.

ஓகை சொன்னது…

திரு சுப்பு அவர்களே,

//நான் ஒரு இந்து என்று நினைக்கிறேன் இந்து தெய்வங்களை வழிபடுகிறேன். ஆனால் என்னால் வடமொழியை ஏற்றுக்கொள்ள் முடியவில்லை. மேலொர் கீழோர் என்று உள்ளதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

இந்துவாக இருக்க வடமொழியை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்ற அவசியம் இல்லை. மேலோர் கீழோர் என்று உள்ளதாக நீங்கள் நினைப்பதையும் ஏற்றுக்கொள்ளத் தேவை இல்லை. இவற்றை இந்து மதம் வலியுறுத்துவதாக நான் கருதவில்லை. அவ்வாறு சிலர் வலியுறுத்தினாலும் அதை நான் பொருட்படுத்துவதில்லை. இதையே உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

ஓகை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஓகை சொன்னது…

//சும்மா ரிடாரிக்கலாகவே மீண்டும் மீண்டும் எதிர்வினை புரிவது ஒரு "போற்றுதலுக்குரிய பண்பு" என்று நீங்கள் கூட நினைக்கிறீர்களா நேசகுமார்??//

நேசக்குமாருடன் நான் உடன்படவில்லை.

மாறாக இவ்வாறு மா.சி. பதில் கூறுவது நேர் கேள்விகளை அலட்சியப் படுத்துவதான ஒரு பண்பாகும். இது போன்ற பதிலகள் கேள்விகளைக் கேட்டவரை நோக்கி சொல்லப்படவில்லை.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

இந்தத் தொடர் தொடங்கியதிலிருந்தே அதற்கான அவசியம் இல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்.. ஆனால், இந்தப் பதிவுக்கேனும் மட்டுறுத்தல் செய்யலாமே சிவகுமார்.. ?

பெயரில்லா சொன்னது…

//அய்யா நைய்னா, ஆர்.எஸ்.எஸ்ஸின் குறைபாடு என்று நீங்களே பட்டியலிடுங்களேன். //

இதச் சொல்றது யாருன்னு பாத்தீங்களா?

RSS doesnt mean anything to us -ன்னு சொன்னவர்.

இந்த RSS வந்து Really Simple Syndication-ன்னு சொல்லி மயக்கம் போட வச்சிராதீங்கய்யா

மா சிவகுமார் சொன்னது…

//That depends on the contextual variables like level of violence, internal tolerance versus external incapacity, traditions, overall atmosphere prevailing within that community etc.//

நேசகுமார்,

இரண்டு கருத்துக்கள்:

1. ஒரு தனிமனிதனாயிருந்தாலும் சரி, அமைப்பாக இருந்தாலும் சரி, மாற்றம் என்பது உள்ளே இருந்து வர வேண்டும்.

2. நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தை மேம்படுத்த முயலும் போது உண்மையான பக்தர்களின் மனம் நோகும்படி ஒரேயடியாகக் கொச்சையாக விமரிசிப்பது எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என்பது என் கருத்து.

நீங்கள் இஸ்லாமில் இருப்பதாக நினைக்கும் குறைகளை போக்க விரும்பினால், முதலில் ஒரு உண்மையான முஸ்லீமாக மாறுங்கள். அன்பான ஆக்க பூர்வமான முறையில் அந்த சமூகப் பெரியவர்களுடன் சேர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

இப்போது செய்வது போல ஒரேயடியாக பல கோடி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவது எப்படி சரியாகும்?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

உங்கள் இடுகையைப் படித்தேன்.

சமஸ்கிருதம் குறித்து என்னுடைய கருத்தில் மாற்றம் எதுவும் இல்லை. தமிழ் மொழியின் மூலம் இறைவனை வழிபட்டு நற்கதி அடைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றே நம்புகிறேன்.

பேச்சளவில் எவ்வளவு சொன்னாலும் சமஸ்கிருதம் என்பது ஒரு கூட்டத்தாருக்கு ஆதிக்கம் அளிக்கும் கருவியாகவே இருக்கிறது என்பது இன்றைய நடைமுறை உண்மை.

சாதி முறை குறித்து நீங்கள் சுட்டிக் காட்டிய விபரங்கள் நான் அறியாதவை. நன்றி.

இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு சாதி முறையை ஒழித்து விட்ட பிறகு சாதுக்களையும் சாமியார்களையும் அணிதிரட்டுவதில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நொய்னா முகமது அவர்களே,

நேசகுமாருக்கு நான் சொன்னது போல் ஒவ்வொரு சமூகமும் சீர்திருத்த மேம்பாடுகளை தாமே செய்து கொள்ள திறன் பெற்றவைதான். இசுலாமியப் பெரியவர்கள் தமது சமூக மேன்மைக்கான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

நேசகுமார் ஒட்டு மொத்தமாக இஸ்லாமை இழிவுபடுத்துவது ஏற்க முடியாத ஒன்று.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நேசகுமார்,

இஸ்லாமின் குறைகளாக சவுதி அரேபியாவில் நடைபெறுவதையும், எகிப்தில் நடந்ததையும் இன்னொரு பதிவில் விவாதிக்கலாம். எனக்கு அதைப் பற்றி விவாதிக்க தகுதி இல்லை என்று நினைக்கிறேன்.

சுப்பு சொன்னது போல தேவையில்லாமல் மற்ற மதத்தினரை இழுக்கும் பின்னூட்டங்களைத் தவிர்த்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சுப்பு,

வடமொழிதான் இந்து மொழியா என்று ஒரு தனி விவாதமும் பயனுள்ளதாகத்தான் இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி 1,

//அப்படி என்னதான் தப்பாகக் கேட்டுவிட்டோம் அதில்?//

உங்க்ள் பின்னூட்டம் எதையும் நான் நிறுத்தி வைக்கவில்லை.

அனானி 2,

//தன் ஒவ்வொரு வாதத்திற்கும், எதிர்வினைக்கும் ஆணித்தரமான உண்மைகளை வைக்கும் அரவிந்தன் எங்கே? எந்த intellectual honesty-ம் இல்லாத மாசி எங்கே?//

உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றிகள்.

அனானி 3

//எழுத்தால் கருத்தால் விவாதிக்கும் மாசியை தனிமனித தாக்குதலால் நேரிடும் இவர்களுக்கு ஆதரவாக பேச இன்னும் சில வெறியர்கள்! வெட்கம் கெட்டவர்கள்.//

நீங்களும் தனி மனிதர் தாக்குதலில் இறங்கி தரம் தாழ்ந்த மொழியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா?

அனானி 4, அனானி 5 பதிவுக்கு தொடர்பு இல்லாமல் பின்னூட்டம் இட்டவர்களைத் தாக்கும் உங்கள் பின்னூட்டங்களை நீக்கி விட்டேன். புரிதலுக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//அதற்கு நீங்களும் இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.//

நான் எழுதுவதன் நோக்கம் எனது கருத்துக்களை அனுபவங்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதுதான். அதனால் பலன் இருக்கும் என்று தோன்றினால்தான் என் வலைப்பதிவில் பதிகிறேன்.

உணர்வுகளைத் தூண்டி விட்டு கலவரம் உருவாக்கும் இந்துத்துவா இயக்கங்களைக் குறித்த எனது அனுபவங்களை கருத்துக்களைத்தான் இங்கு எழுதினேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இந்து மதம் தேவையில்லை என்ற பதிலைத் தவிர்த்து வேறு பதில் தருவதாக இருந்தால் சற்று விளக்கமாகத் தரவேண்டுகிறேன்.//

வாங்க ஓகை,

இந்து மதம் ஒரு அருமையான வாழ்க்கை வழிகாட்டி. தனி மனிதனை மதித்து அளவற்ற ஆன்மீக சுதந்திரத்தை அளிப்பது இந்து மதம்.

இந்த மதம் தளைக்க வேண்டும் என்றால் சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கான சாத்திர சம்மதம் மறைய வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் ஒவ்வொரு இந்துவும் சம உரிமையுடன் ஆண்டவனை அணுகும் நிலை இருக்க வேண்டும். சமூக அமைப்பில் ஒவ்வொரு குழந்தையும் சம வாய்ப்புகளுடன் முன்னேற வழிகள் இருக்க வேண்டும்.

சுப்புவிற்கு சொன்ன பதிலில், இதைத்தான் நீங்களும் நம்புகிறீர்கள். ஆனால் நடைமுறையில் இந்து சமூகத்தில் இந்த நிலை இல்லை. அதை மாற்றுவதுதான் முன்னேற்றத்துக்கு ஒரே வழி.

இதை விடுத்து புலி வருகிறது என்று பயமுறுத்தி மக்களை மதி மயக்கி கலவரங்களையும் வன்முறையையும் தூண்டி விடும் இயக்கங்கள்தான் இந்து மதத்துக்கு முதல் எதிரிகள் என்பது என்னுடைய கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

பொருத்தமே இல்லாத பின்னூட்டங்களை நீக்கி விட்டேன். தேவையில்லாமல் என்னுடைய வேலையை அதிகரிக்கும் நிலையை நண்பர்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது :-)

ஓகை,

அடிப்ப்டடையில் அரவிந்தனும் நானும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம் என்பதைப் புரிந்து கொண்டு எங்களது பார்வைக் கோணங்களை அறிந்து கொண்டால் முரண்பாடுகள் விளங்கி விடும்.

ஒவ்வொரு கருத்தாக எடுத்து விவாதிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பது என்னுடைய அனுபவம்.

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//சமஸ்கிருதம் குறித்து என்னுடைய கருத்தில் மாற்றம் எதுவும் இல்லை. தமிழ் மொழியின் மூலம் இறைவனை வழிபட்டு நற்கதி அடைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றே நம்புகிறேன்.//
சிவகுமார் இறைவனை அடைவதற்கு எந்த மொழியும் தனியுரிமை கோர முடியாது. இறைவனை அடைய சமஸ்கிருதம்தான் மொழி என நான் எங்கு சொன்னேன். பாரத தேசத்தின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் அனைவருக்கும் பொதுவான பாரம்பரிய செழுமை ஆகியவற்றின் அடையாளமாக சமஸ்கிருதம் விளங்குகிறது. எனவே ஒவ்வொரு மாணவனும் சமஸ்கிருதத்தினை அடிப்படை அளவிலாவது அறியும் வாய்ப்பிருப்பது அவசியம். இதனை அறிந்து ஏற்றுக்கொள்ள நீங்கள் காக்கி நிக்கர் போடவேண்டிய அவசியம் கூட இல்லை. மகாத்மா காந்தியின் எழுத்துக்களையோ நேருவின் எழுத்துக்களையோ படித்திருந்தால் போதும்.
//பேச்சளவில் எவ்வளவு சொன்னாலும் சமஸ்கிருதம் என்பது ஒரு கூட்டத்தாருக்கு ஆதிக்கம் அளிக்கும் கருவியாகவே இருக்கிறது என்பது இன்றைய நடைமுறை உண்மை. //
ஸ்ரீ நாராயணகுரு பேச்சளவில் சொன்னவர் அல்ல நடைமுறையில் செயல்படுத்தியவர். என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மொழியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் யார்? ஸ்ரீ நாராயணகுருவின் குடும்பத்தில் அவர் இரண்டாவது தலைமுறை சமஸ்கிருத அறிஞர். அவர் மாமனாரும் சமஸ்கிருத அறிஞர். அவரது மாமனார் சமஸ்கிருதம் பயின்றது ஒரு தமிழ் ஐயரிடம். என்றால் சம்ஸ்கிருதத்தை யாரும் படிக்க விடாமல் இல்லை. நாம் வெறுப்பியல் காரணமாக படிக்காமல் பூனை கண்ணை மூடிக்கொண்டதென்றால் இருண்டது உலகம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். அண்டை மாநிலமான கேரளத்தில் அனைத்து சாதியினரும் சமஸ்கிருதம் படித்து பாரத தத்துவ மரபின் வித்தகர்களாகவும் முன்னெடுத்து செல்பவர்களாகவும் மாறி வருகின்றனர். இன்றைக்கும் குமரிமாவட்டத்தை சார்ந்த பூர்வாஸ்ரமத்தில் நாடார் சாதியைச் சார்ந்த சுவாமி ஆசுதோஷானந்தர் எனும் சமஸ்கிருத புலமை பெற்ற துறவிதான் அனைத்திந்திய விவேகானந்த கலாச்சார கல்விமையத்தின் தலைவராக இருக்கிறார். ச்மஸ்கிருதம் வேண்டாம் என ஒதுக்குவது பாரத பாரம்பரியத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும் பெற்றுள்ள மரபினை இழப்பதற்கு சமம். அந்த கீழ்த்தர தலைவிதி தமிழனுக்கு தேவையில்லை.

மா சிவகுமார் சொன்னது…

//ச்மஸ்கிருதம் வேண்டாம் என ஒதுக்குவது பாரத பாரம்பரியத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும் பெற்றுள்ள மரபினை இழப்பதற்கு சமம். அந்த கீழ்த்தர தலைவிதி தமிழனுக்கு தேவையில்லை.//

மீண்டும் சொல்கிறேன். இந்தியப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள சம்ஸ்கிருதம் தெரிந்தால்தான் ஆச்சு என்பது ஏற்க முடியாதது. சமஸ்கிருதம் தெரியாமல் இருக்கும் தமிழர்கள் யாருமே எந்தவிதத்திலும் குறைந்து போய் விடவில்லை.

தமிழ் நாட்டில் தமிழில் பேசிக் கொண்டு, தமிழில் எழுதிப் படித்துக் கொண்டு இருக்கும் நாம், கோயிலுக்குள் போனால் மட்டும் சமஸ்கிருத அறிவின்மையால் இரண்டாந்தரக் குடிகளாக ஆகி விடுவதை ஏற்க முடியாது.

எந்த மொழியையும் வெறுக்க வேண்டியதில்லை. ஆனால் பிற மொழிகளை கீழ்நிலையில் பார்க்கும் ஆதிக்க உணர்வை ஏற்க முடியாது.

அன்புடன்,

மா சிவகுமார்

சாணான் சொன்னது…

உயர்ந்த ஜாதிக்காரர்களை மட்டுமே தலைவராக தேர்ந்தெடுத்து மனுதர்மத்தின் தீண்டாமையை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ், என்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ளுமா?

நான் சமஸ்கிருதம், மனு, ஸ்மிருதி அனைத்தையும் கற்றுக் கொள்ளவும், பிரம்மத்தை கடைபிடிப்பவனாகவும் இருக்க ஆசைப்படுகிறேன். என்னை பிராமணனாக மதம் மாற்றம் செய்து எனக்கு பூணூல் அணிவிக்க ஆர்.எஸ்.எஸ் தயாரா?

அரவிந்தன் நீல கண்டன் அய்யாவிடமிருந்தும், நேச குமார் அய்யாவிடமிருந்து பதிலை எதிர் பார்க்கிறேன்.

சாணான்

பெயரில்லா சொன்னது…

சாணான் அய்யா,

//நான் சமஸ்கிருதம், மனு, ஸ்மிருதி அனைத்தையும் கற்றுக் கொள்ளவும், பிரம்மத்தை கடைபிடிப்பவனாகவும் இருக்க ஆசைப்படுகிறேன். என்னை பிராமணனாக மதம் மாற்றம் செய்து எனக்கு பூணூல் அணிவிக்க ஆர்.எஸ்.எஸ் தயாரா?
//

ஆர்.எஸ். எஸ் பற்றி என்றால், இது அ.நீலகண்டனிடம், ஜடாயுவிடம், நண்பர் புதுவை சரவணனிடம், மற்றும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் ஏனைய ஆர்.எஸ்.எஸ்காரர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

***

இருப்பினும், எனக்குத் தெரிந்த வரைக்கும் பதில் சொல்ல முயற்சிக்கின்றேன்.

1. சமஸ்கிருதத்தை ஜாதி-மத வேறுபாடின்றி யாரும் கற்கலாம். ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்புகள்(சமஸ்கிருத பாரதி என்று நினைக்கிறேன் - சரியாகத் தெரியவில்லை), சில இந்து ஆன்மீக அமைப்புகள் சமஸ்கிருதத்தை பொதுவாக அனைவருக்கும் கற்பிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. இது தவிர, மைய அரசே சமஸ்கிருத கல்வி நிலையங்களை நடத்துகிறது. அங்கே யார் வேண்டுமென்றாலும் சென்று சமஸ்கிருதம் கற்கலாம்.

2. சமஸ்கிருதம் தெரிந்தால் தான் இந்து என்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன். இவ்விஷயத்தில் மா.சிவகுமாருடன் ஒத்துப் போகின்றேன்.

3. மனு ஸ்மிருதியை நீங்கள் கற்க வேண்டிய அவசியம்? அது குப்பையில் போட வேண்டிய நூல். இந்து மனு ஸ்மிருதியோ, இஸ்லாமிய மனு ஸ்மிருதியோ , அல்லது வேறெதாவது பெயரில் கடவுளின் பெயரால், கடவுளின் தூதர்களின் பெயரால், மதத்தின் பெயரால் மனிதர்களுக்குள் வேறுபாடு, பாரபட்சம், மேல்-கீழ் காட்டும் அனைத்து நூல்களையும் நான் நிராகரிக்கின்றேன். மனிதர்கள் என்று தம்மை கருதிக்கொள்ளும் ஒவ்வொருவரும் இதையே செய்ய வேண்டும் - இந்த விஷயங்கள் எந்த மதத்தில் இருந்தாலும்.

4.'பிரம்மத்தை கடைபிடிப்பவனாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்' - இதன் அர்த்தம் விளங்கவில்லை. பிரம்மம் என்பது 'இறை' என்ற அர்த்தத்தில் இந்து மரபுகளில் குறிப்பிடப் படுகின்றது. 'இறை'யை கடைப்பிடிப்பதற்கு எந்த மதத்திலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

5.'பிராமணனாக மதம் மாற்றம் செய்து எனக்கு பூணூல் அணிவிக்க ' - ஏன் பாரதியார் செய்துள்ளாரே, சுத்தானந்த பாரதி செய்துள்ளாரே, இராமானுஜர் செய்துள்ளாரே. இன்று இஸ்க்கான் செய்கிறதே, மாதா அமிர்தானந்தமயி செய்கிறார்களே. விரும்பினால், நீங்களே கூட பூணூல் அணிந்து கொண்டு பிராம்மணன் என்று சொல்லிக் கொள்ளுங்கள் - யார் தடுக்கப் போகிறார்கள். ஆசாரி வகுப்பினர் இன்றும் பூணூல் அணிகின்றனர் - இதற்காக கோர்ட்டெல்லாம் போய் சண்டையிட்டு வந்தவர்கள் அவர்கள்(இடங்கை வலங்கை விவகாரத்தின் நீட்சி அது). சவுராஷ்டிராக்காரர்கள் சிலர் கூட பூணூல் அணிவதை பார்த்துள்ளேன்.


பிராமணர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையே உள்ள இடைப்பட்ட சாதிகளில் , இடையில் இருக்கும் என்னுடைய சாதியில் கூட மரணச் சடங்குகள் சமயத்தில் பூணூல் அணிந்து சடங்கைச் செய்வதைப் பார்த்துள்ளேன்.

6.'ஆர்.எஸ்.எஸ், என்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ளுமா?' - ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ, சாமான்ய இந்துக்கள் மீனவ சாதியைச் சேர்ந்த அமிர்தானந்தமயி அவர்களை ஏற்றுக் கொள்கிறார்களே, கோடி கோடியாய். எந்த இந்து மத அதிபதியும், ஆர்.எஸ்.எஸ்ஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே - ஆனால், ஏன் இஸ்லாத்தில் பெண் நபி இல்லை என்று கேட்ட ரசூலுக்குத்தான் தலையை எடுக்க வேண்டும் என்ற ஃபத்வா பிறப்பிக்கப் பட்டது - மா.சிவ்குமாரின் மனதை புண்படுத்த வேண்டாம் என்பதற்காக அது எந்த மதம் என்று நான் இங்கே குறிபிட விரும்பவில்லை.

கேள்விகளுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

மா.சிவகுமார்,

சில கேள்விகள் - உங்களது சிந்தனைக்கு. இன்றில்லாவிட்டாலும் என்றாவது இவற்றை யோசித்துப் பாருங்கள். நான் எழுதியிருப்பது தவறென்று பட்டால் அழித்து விடுங்கள் - உங்கள் இஷ்டம்.


//
1. ஒரு தனிமனிதனாயிருந்தாலும் சரி, அமைப்பாக இருந்தாலும் சரி, மாற்றம் என்பது உள்ளே இருந்து வர வேண்டும்.
//


இதையே, அரவிந்தன் போன்றவர்கள் உங்களை நோக்கியும் சொல்லலாம் அல்லவா?


//நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தை மேம்படுத்த முயலும் போது உண்மையான பக்தர்களின் மனம் நோகும்படி ஒரேயடியாகக் கொச்சையாக விமரிசிப்பது எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என்பது என் கருத்து.
//

ஆம், உண்மைதான்.


//நீங்கள் இஸ்லாமில் இருப்பதாக நினைக்கும் குறைகளை போக்க விரும்பினால், முதலில் ஒரு உண்மையான முஸ்லீமாக மாறுங்கள். அன்பான ஆக்க பூர்வமான முறையில் அந்த சமூகப் பெரியவர்களுடன் சேர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துங்கள்//


அப்படி என்றால், சதி முறையை சட்டம் போட்டு தடுத்திய பெண்டிங் பிரபு, இந்துவாக மாறி பின்பு அதைச் செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்களா? குழந்தைத் திருமண ரத்து, தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றம் என்று பல விஷயங்களை இந்து அல்லாதவர்கள் செய்திருக்கின்றனர். ஏன், டாக்டர் அம்பேத்கரே பவுத்தத்திற்கு சென்றார் - அப்போது அவர் இந்து மதத்தின் குறைபாடுகளை விமர்சிக்கும் உரிமையை இழந்து விட்டாரா?

எந்தவொரு சமுதாயத்திலும் இருக்கும் குறைகளை வெளியில் உள்ளவர்கள் விமர்சிக்கும் உரிமையை இழக்கிறார்கள் என்று சொன்னால், இன்றைய மனித குல வளர்ச்சியே பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போயிருக்கும்.


//இப்போது செய்வது போல ஒரேயடியாக பல கோடி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவது எப்படி சரியாகும்?
//

மீண்டும் இந்து மதத்திற்கே வருகிறேன். ஒரு சில நூற்றாண்டுகள் முன்பு, இந்து மதத்தின் குறைகளை விமர்சித்தவர்களை இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள் என்றார்கள். அதையும் மீறி எழுந்த விமர்சங்களின் விளைவே இன்றைய மாற்றங்கள். கிறித்துவத்தில் 'எதிர்ப்பு' என்ற பெயரில் பெரும் இயக்கமே எழுந்தது. ஆனால், முதலில் அதுவும் கிறித்துவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது என்றே கருதப்பட்டது.

புண்படுத்துவது என்பது பிறரது நம்பிக்கைகளைக் குறை சொல்வது என்றால், அதையே அடிப்படையாகக் கொண்டுதானே இஸ்லாம் எழுந்தது, வாழ்ந்து கொண்டிருக்கிறது? உதாரணமாக, சிலை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்துக்கள்(பெரும்பாலோர்). குரான் திரும்பத்திரும்ப அதை விமர்சிக்கிறது. அதையே நான் திருப்பிச் செய்கிறேன், சொல்கிறேன். கல்லை வணங்குவது மூடத்தனம் என்றால், கடவுள் சொன்னார் என்று சொன்ன அரபி ஒருவரை நம்புவதும் மூடத்தனம் என்கிறேன். பின்னது தவறு என்றால், முன்னதும் தவறு அல்லவா?

இது குறித்து ஏற்கெனவே கல்கத்தா குர்-ஆன் வழக்கு என்று ஒன்று போடப்பட்டது. குர் ஆனின் வசங்கள் எப்படி பிறரது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று விவரிது நீதிமன்றத்தில் குர் ஆனை இந்தியாவில் தடை செய்துவிடுமாறு கோரியது அந்த விண்ணப்பம்(பெட்டிஷன்).

இன்று என்னைப் போன்றவர்கள் முகமதுவை விமர்சிப்பது, அவர் உண்மையிலேயே கடவுளின் சொல் கேட்டு நடந்தாரா அல்லது தமது மன இச்சைகளை கடவுளின் வாக்காக முன்னிறுத்தினாரா என்று சொல்வது அவதூறு , ஒரு கூட்டத்தாரின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றால், அதே அடிப்படையில் இஸ்லாத்தின் அடிப்படை நூலான குர் ஆனில் சிலை வழிபாடு செய்பவர்களை விமர்சித்து இருப்பது, இயேசுவை இறைமகன் என்று நம்பும் கிறித்துவ நம்பிக்கைகளை விமர்சித்து இருப்பதுவும் தவறல்லவா?

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//இந்தியப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள சம்ஸ்கிருதம் தெரிந்தால்தான் ஆச்சு என்பது ஏற்க முடியாதது.// அதெப்படி சிவகுமார் மகாத்மா காந்தி, நாராயண குரு, அண்ணல் அம்பேத்கர் மாதிரிப்பட்டவங்களெக்கெல்லாம் ஆதிக்க உணர்வு இருந்திருக்கு ஆனால் உங்களுக்கு இல்லை. தயவு செய்து வெத்து பந்தாவுக்காகவும் பதிவில் காந்தியவாதியாக உங்களை காட்டிக்கொள்வதற்காகவும் அல்லாமல் மனதூன்றி மகாத்மா காந்தி இது குறித்து கூறியுள்ள கருத்துக்களை ஒருமுறையாவது படிக்கவும்.:))))) //பிற மொழிகளை கீழ்நிலையில் பார்க்கும் ஆதிக்க உணர்வை ஏற்க முடியாது.// யாரும் கீழ்நிலையில் பார்க்கவில்லை. தமிழ்நாட்டு கோவிலோ அல்லது அமர்நாத் கோவிலோ அந்த மாநிலத்துக்கு மட்டும் சொந்தமில்லை. அகில பாரதத்துக்கும் சொந்தமானது என்ற முறையில் அகில பாரதத்தினரும் உரிமை கொண்டாட முடிந்த மொழி சமஸ்கிருதம் என்பதனால் அது வழிபாட்டு மொழியாக இருப்பதில் தவறில்லை. பாரத பண்பாட்டின் மொழியாக சமஸ்கிருதம் உண்மையான சமுதாய நோக்கம் கொண்ட ஆன்றோரால் ஏற்கப்பட்டு வந்துள்ளது. அதனை நொள்ளையாக 'நிராகரிக்கிறேன் நிராகரிக்கிறேன்' என்று சொல்வது மடத்தனம். ஏனெனில் சமஸ்கிருதத்தின் மிகச்சிறந்த பங்களிப்புகள் தமிழகத்திலிருந்தே அளிக்கப்பட்டுள்ளன. அதன் சிறந்த இலக்கியங்கள் சூத்திரர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே அதனை ஒதுக்குவது மறைமுகமாக நம் முன்னோர்களின் பாரம்பரியத்தையே நாம் இழப்பதாகும்.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

மண்டைக்காட்டு கலவரம் குறித்து மேலும் அறிந்து கொள்ள:
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_29.html

Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சகோதரர் நேசக்குமாருடைய மனநிலை குறித்து தற்போது என்க்கு கடுமையான சந்தேகம் வந்து விட்டது.

நம்மிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பது தவறல்ல. ஒருவருவர் பிறருடைய கொள்கையில் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை எடுத்து சொல்வதில் தவறில்லை. ஆனால், அவ்வாறு எடுத்து சொல்லும் போது, கருத்துக்கள் மீது தான் நமது குற்றச்சாட்டுகள் பதியபட வேண்டுமே அன்றி, அந்த நபரின் மீத குற்றம் சுமத்தப்பட்டால் அது மனித உரிமை மீறலாகும்.

சகோதார் நேசக்குமாரின் விமர்சனங்கள், கருத்தின் மீதான, கொள்கை மீதான குற்றச்சாட்டு பதிவாகவா உள்ளது? இல்லையே? உதாரணத்திற்க்கு, இஸ்லாம் கூறும் பலதாரமணத்தை ஒருவரால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று வைத்து கொள்வோம், இப்போது இவர், ஏன் பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதனை கேட்க தெரிய வேண்டும். பின் பலதார மணம் ஏன் தன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்பதனை பதிவு செய்யலாம். பலதார மணத்தால் ஏற்படும் பிரச்சனைகளை வாதிடலாம். இவை எல்லாமே வரவேற்க கூடியவைகள். ஆனால், அந்த கருத்தை ஏற்று கொண்டுள்ளான் என்பதற்காக, அதை பின்பற்றும் மனிதன் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் வைக்கப்படுமானால், அது மனித உரிமை மீறல் தானே?

சகோதார் நேசக்குமாரின் விமர்சனங்கள் எந்த அமைப்பில் உள்ளது? கொள்கை மீது வைக்க கூடிய குற்றசாட்டாக உள்ளதா? அல்லது கொள்கையை பின்பற்றுபவர்கள் மீது நடத்தும் தாக்குதலாக உள்ளதா? முஸ்லிம்களை எப்படி எல்லாம் கேவலமாக சித்தரிக்க முடியுமோ? அப்படி எல்லாம் எழுதுகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று, எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களை பற்றி எவ்வளவு கீழத்தரமான விமர்சனங்களை எழுதுகிறார். இது மனித பண்புகளான கண்ணியம், மரியாதை, பண்பாடு எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டதே.

நான் பலமுறை எழுதியிருக்கிறேன், இஸ்லாத்தின் மீதான தங்கள் அதிருப்தி, அதன் கொள்கைகள் மீதாக தான் இருக்க வேண்டும். அந்த கொள்கைகளின் ஆதாரங்கள், திருக்குர்ஆனும் நபிகளாரின் பொன் மொழிகளாகும். எனவே, இவற்றிலிருந்து கோடிட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதற்க்கு நாங்கள் பதிலளிக்க தயாராகவே இருக்கிறோம். இஸ்லாம் மீதான விமர்சனங்களை கண்டு நாங்கள் ஒரு போதும் அஞ்சியதில்லை. வெறுத்ததில்லை. ஏனென்றால் இஸ்லாத்திற்க்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்படுவது, இஸ்லாத்தை பற்றி நாங்கள் எடுத்து சொல்வதற்கும் கிடைக்கும் ஒரு அளப்பரிய வாய்ப்பபாகும். அதனால் சந்தோஷமாக தான் பதிலளிக்க வருவோமே தவிர கொஞ்சமும் வருத்தம் வராது. இறைவனின் அருளால் அவற்றிக்கு தகுந்த விளக்கங்கள் நல்லிணக்கமான முறையில் சந்தோஷமாக தருவோம்.

சில நாட்கள் முன்பு சகோதரர் தருமியின் இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களுக்கு, சகோதரர் சுல்தான் பதிலளித்தார். சகோதரர் தருமி தான் முஸ்லிம்கள் மீது ஏதேனும் வெறுப்பை உமிழ்ந்தாரா? அல்லது ஆஹா தருமி இஸ்லாத்தின் கொள்கைகளை விமர்சித்து விட்டார் என்பதற்காக முஸ்லிம்கள் யாராவது வெறுப்பை உமிழ்ந்தாரர்களா? எவ்வளவு நல்லிணக்கத்தோடு விவாதங்கள் நடத்தப்படுகிளது. இந்த பண்பாடு ஏன் உங்களிடத்தில் இல்லை சகோதரர் நேசக்குமார் அவர்களே!

உங்களது இஸ்லாத்தின் கொள்கைகள் மீதான விமர்சனங்களை தாராளமாக வையுங்கள். நல்லிணக்கமாக பதிலளிக்க காத்தருக்கிறோம்.முஸ்லிம்கள் மீதும், இறைத்தூதர் மீதும் அவதூறுகளை வீசியெறியும் கீழ்த்தரமான செயலுக்கு முற்றுபுளி இடுங்கள்.

ஆதமின் மக்கள் அனைவர்களும் தவறிழைப்பவர்களே, அவர்களில் சிறந்தவர் தனது தவறுக்கு வருந்தி இறைமன்னிப்பை பெறுபவராவார் (நபி மொழி)

அன்புடன்
உங்கள சகோதரன்
நெய்னா முஹம்மது

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கருப்பு சொன்னது…

//அண்டை மாநிலமான கேரளத்தில் அனைத்து சாதியினரும் சமஸ்கிருதம் படித்து பாரத தத்துவ மரபின் வித்தகர்களாகவும் முன்னெடுத்து செல்பவர்களாகவும் மாறி வருகின்றனர்.
//

அண்டை மாநிலம் கேரளாவில் வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கிறித்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நீல குண்டர்கள் மறந்து விட்டார்கள்.

சமஸ்கிருதம் படிச்சா மனிதன் செய்யக் கூடிய ஒரே வேலை மணியாட்டுவது! அதையும் பாப்பானுங்க தான் செய்வானுங்க. அப்பறம் ஏன் மற்றவர்கள் சமஸ்கிருதம் படிக்கனும்?

//இதையே இஸ்லாமியர்கள் அரபி விஷயத்தில் சொல்வது கவனிக்கத்தக்கது. அதை அவர்கள் சொல்லும்போது இணைய தமிழ்-பக்தர்கள் வாய்மூடி மவுனமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். //

ஆன்னா ஊன்னா வேஷக்குமார் தம்பிக்கு இஸ்லாமை குறை சொல்லலைன்னா பொழுது போகாது. முதலில் உன் குண்டியில் இருக்கும் அழிக்கைக் களைந்துவிட்டு மற்றவன் குண்டிக்கு செல்லலாமே வேஷக்குமார்?

வெட்டிப்பயல் சொன்னது…

//
இதை எல்லாம் செய்து முடித்து விட்டால், இந்து மதத்தின் உண்மையான செல்வங்கள் எல்லோரையும் போய்ச் சேரும். மிரட்டியும், உணர்வுகளைத் தூண்டி விட்டும், சூலாயுதம் ஏந்தியும் மதத்தைக் காக்க வேண்டிய தேவையே இல்லாமல் போய் விடும்.//

உண்மை :-)

பாராட்டுக்கள் சிவக்குமார்...

பாபு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

மொக்கை என்றால்

RSS doesnt mean anything to us என்று எழுதவேண்டும்

பின்னர் RSS-ன் குறைகள் என்ன நீங்களே பட்டியலிடுங்களேன் என்று எழுதவேண்டும்.

வெளிப்படையாகவே பதிவைக் கடத்திச் செல்லவேண்டும்.

நானும் மொக்கையாகவே கேட்கிறேன்

RSS-ன் நன்மைகள் என்ன என்று நீங்களே பட்டியலிடுங்களேன்.

அதுக்குல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா ரெண்டரை வருஷமா மொக்கை போடமுடியுமா?

-அதே அனானி

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
மா சிவகுமார் சொன்னது…

நேசகுமார் ந்தப் பதிவுக்கு தொடர்பின்றி புண்படுத்தும் விதமாக எழுதியிருந்த பின்னூட்டங்களையும், அதற்கு வந்த பதில்களையும் நீக்கி விட்டேன். புரிதலுக்கு நன்றி.

இன்னும் சில பின்னூட்டங்களும் வருத்தம் ஏற்படுத்தும் படியே இருக்கின்றன. யாராவது குறிப்பிட்டு கேட்டால் நீக்கி விடுவேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நேசகுமார்,

//அரவிந்தன் போன்றவர்கள் உங்களை நோக்கியும் சொல்லலாம் அல்லவா?//

நானும் இந்து, இந்தியக் குடிமகன் என்ற முறையில் எமது மதத்தையும் நாட்டையும் பயன்படுத்தி தமது ஒரு பக்க அரசியலைச் செய்வதாக நான் நினைக்கும் இயக்கங்களைத்தான் நான் சாடுகிறேன்.

//எந்தவொரு சமுதாயத்திலும் இருக்கும் குறைகளை வெளியில் உள்ளவர்கள் விமர்சிக்கும் உரிமையை இழக்கிறார்கள் என்று சொன்னால், இன்றைய மனித குல வளர்ச்சியே பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போயிருக்கும்.//

விமரிசிக்கும் உரிமையைப் பற்றிச் சொல்லவில்லை, விமரிசிப்பதால் பலனில்லை என்கிறேன். ஒவ்வொரு மனிதனின் மாற்றத்துக்கான கதவு உள்ளேயிருந்து பூட்டப்பட்டுள்ளது, நீங்கள் வெளியிலிருந்து இடிக்க தாழ் இறுகத்தான் செய்யும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

யாரை எப்படிப் படிப்பது என்று எனக்குத் தெரிந்தே இருக்கிறது :-).

மண்டைக்காடு கலவரம் குறித்து மீண்டும் உங்கள் மக்களிடையே பிளவு, அச்சம், குழப்பம், சந்தேகத்தை உருவாக்கும் பாணியில் ஆரம்பித்து விட்டீர்களே!

சாதி ஒழிப்பு பற்றி இன்னும் நாலு ப்திவு போட்டு விள்ம்பரப்படுத்துங்களேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நைய்னா,

ஆக்க பூர்வமான விமரிசனங்களை வரவேற்கும் உங்கள் திறந்த மனதை வரவேற்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

பாபு சொன்னது…

முஸ்லிம்களையும் இஸ்லாமையும் பற்றிய வெறுப்பில் ஒரு xxxxx போல் ஜீவிக்கிற ஒரு நேச எழுத்தரின் ஆர் எஸ் எஸ் அஜண்டா திட்டத்துக்கும்/கொள்கைக்கும் நிதானம் தவறி முஸ்லிம்கள் பலியாகிவிட வேண்டாம் எனும் தொனியைத் தான் முந்தையப் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். எந்த மதத்தாக்குதலும் செய்யவில்லை. எனினும் பதிவர் என்ற முறையிலும் உரிமையிலும் அப்பின்னூட்டத்தை நீக்கிய உங்கள் முடிவுக்கு உடன்படுகிறேன். நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

விடாது கருப்பு,

இப்படி ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவது நமமை பலவீனப்படுத்தி விடுகிறது என்பதை உணருகிறீர்களா?

நீங்களே இந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டு உங்கள் கருத்தை மட்டும் வெளியிட்டால் மகிழ்வேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//பாராட்டுக்கள் சிவக்குமார்...//

நன்றி பாலாஜி :-)

புரிதலுக்கு நன்றி பாபு,

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

letter of Sardar Patel's of September 11, 1948, addressed to the RSS chief Golwalkar himself: ...
----
Aurangzeb Road
New Delhi
Date: 11th Sept. 1948

Brother Sri Golwalkar,
...
You are very well aware of my views about the RSS. ... There can be no doubt that the RSS did service to the Hindu society. In the areas where there was need for help and organisation, the young men of the RSS protected women and children and strove much for their sake. No person of understanding could have a word of objection regarding that. But the objectionable part arose when they, burning with revenge, began attacking Mussalmans. Organising the Hindus and helping them is one thing but going in for revenge for its sufferings on innocent and helpless men, women and children is quite another thing.
...
All their speeches were full of communal poison. It was not necessary to spread poison in order to enthus the Hindus and organise for their protection. As a final result of the poison, the country had to suffer the sacrifice of the invaluable life of Gandhiji. Even an iota of the sympathy of the Government or of the people no more remained for the RSS. In fact opposition grew. Opposition turned more severe when the RSS men expressed joy and distributed sweets after Gandhiji's death. Under these circumstances it becamed inevitable for the Government to take action against the RSS.

Yours
(Sd.) Vallabh Bhai Patel

பெயரில்லா சொன்னது…

மா.சிவகுமார்,


நன்றி.நீக்கியது குறித்து பிரச்சினை ஒன்றுமில்லை. உங்களின் நோக்கம் நல்லது என்ற அளவில், உங்கள் மீது எவ்வித வருத்தமும் இல்லை.


//விமரிசிக்கும் உரிமையைப் பற்றிச் சொல்லவில்லை, விமரிசிப்பதால் பலனில்லை என்கிறேன்.//


நன்றி. ஓரளவுக்கு நீங்கள் சொல்வதும் சரிதான்.

நான் சுட்டிக் காட்டிய சில விஷயங்களுக்கு நீங்கள் நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும்(இந்து மதத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய/கோரிய இந்து அல்லாத சிந்தனாவாதிகள், சமூக சீர்திருத்த ஆர்வலர்கள் குறித்த கேள்விகள்), பொதுவாக நீங்கள் இப்படியே கருதுகிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.


நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை எந்த அடிப்படையில் விமர்சிக்கின்றீர்களோ , அதே அடிப்படையில்தான் நான் இஸ்லாத்தை விமர்சிக்கின்றேன். உதாரணமாக, இந்து, இந்தியக் குடிமகன் என்கிற வகையில், இந்த இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இருப்பதாகக் கருதுகின்றீர்கள்.


அதே போன்று, மனிதன் - இந்தியன் என்ற முறையில், தம்மை மனித குலம் முழுமைக்குமான ஏகத்துவ மார்க்கமாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் இஸ்லாத்தை, இந்தியாவைக் கூறு போட்டு, தொடர்ந்து இந்தியாவெங்கும் ஜிகாதி வன்முறையில் இறங்கி காஃபிர்களின் தாருல் ஹர்பான இந்தியாவை முஃமீன்களின் கனவுலகான தாருல் இஸ்லாமாக மாற்ற முனையும் இஸ்லாமிய கோட்பாட்டை விமர்சிக்க இந்தியன் என்ற முறையிலும், ஒரு சாமான்ய மனிதனாகவும் எனக்கு உரிமை உண்டு என்று கருதுகிறேன்.


மற்றபடி, உடன்படாமையோடு உடன்படுதல்(agreeing to disagree) என்ற கோட்பாட்டின் படி உங்களது கருத்துக்கள் உங்களுக்கு, எனது கருத்து எனக்கு. உங்களது கருத்துக்களில் சிலவற்றை ஏற்கிறேன், சிலவற்றை நிராகரிக்கின்றேன். ஆனா, இந்த உடன்படுதல், ஒவ்வாமை இரண்டையும் தாண்டி உங்களை மதிக்கின்றேன்.

தொடர்ந்து எழுதுங்கள், அமைதியான வாசகனாக இருந்து பார்க்கிறேன் (இஸ்லாம் குறித்த எனது கருத்துக்கள், இங்கே நீக்கப்பட்டவை, எனது பதிவில் பதிக்கப்பட்டுள்ளன. உருப்படியாக எதாவது எதிர்வினை புரிய விரும்புவர்கள் அங்கே தத்தமது கருத்துக்களைச் சொல்லலாம். மொக்கையாக திட்ட வேண்டும் என்றால், இங்கோ அங்கோ அல்லது எங்குமோ திட்டிவிட்டுப் போங்கள். இந்த திட்டுகள் எதுவும் எனக்குப் புதிதல்ல. ஆரம்ப காலத்திலிருந்து நான் பார்த்து வருவதுதான்).

நன்றி.

அன்புடன்,

நேசகுமார்.

மா சிவகுமார் சொன்னது…

புரிதலுக்கு மீண்டும் நன்றி நேசகுமார்.

ஆக்கபூர்வமான முறையில் உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

குறைகளைச் சுட்டிக் காட்டும் போது தொடர்புடையவர்களின் மனம் புண்படாதபடி எழுதினால், உங்கள் பணி இன்னும் சிறப்பாக நடக்கும் அல்லவா!

உங்கள் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது இல்லையே! குறைகளைக் களைவதுதானே! அதற்கு எத்தகைய மொழி மிக உகந்ததோ அதைப் பயன்படுத்துவதுதானே நல்லது.

அன்புடன்,

மா சிவகுமார்

பாபு சொன்னது…

அன்பு மா.சி,
ஆர்.எஸ்.எஸ் பற்றிய இந்தப்பதிவிலும் தனது இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்து இப்பதிவை இஸ்லாம் பற்றிய விவாதமாக மாற்ற முயற்சிக்கிற பரிவாரக்குஞ்சுகள் அறிவதற்காக வேண்டி இப்பின்னூட்டம்:

எவர் மீதும் காழ்ப்பின் எச்சிலை உமிழாமல், நிதானமாகவும் சரியாகவும் இஸ்லாம் குறித்த விமர்சனங்களுக்கு அபூமுஹை, இப்னு பஷீர் போன்ற இஸ்லாமியர் பதிவுகள் பதிலளித்து வருகின்றன. வெறுப்புணர்வில்லாத எவரும் அங்கு வந்து நேசமுடனோ, நேசமின்றியோ கேள்வி கேட்டும் விமர்சனம் செய்தும் உருப்படியான விவாதம் செய்யலாம்.

மா சிவகுமார் சொன்னது…

அதியமான்,

நல்ல தகவல், நன்றி.

பாபு,

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
நீங்கள் இஸ்லாமில் இருப்பதாக நினைக்கும் குறைகளை போக்க விரும்பினால், முதலில் ஒரு உண்மையான முஸ்லீமாக மாறுங்கள். அன்பான ஆக்க பூர்வமான முறையில் அந்த சமூகப் பெரியவர்களுடன் சேர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

இப்போது செய்வது போல ஒரேயடியாக பல கோடி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவது எப்படி சரியாகும்?
//

ரொம்ப சரி.

உங்களுக்கு அதே போல் இந்துத்வா இயக்கத்தில் சேர்ந்து சீர்திருத்த ஆசை இருப்பதினால் தான் ஆர் எஸ் எஸ் பற்றி 10 - 12 பதிவுகள் எழுதி வருகிறீர்களா என்று இந்த கேள்வியை உங்களுக்கே திருப்பலாம்.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

யாருடைய மத நம்பிக்கைகளையும் புண்படுத்தி எழுதவில்லை என்றே நம்புகிறேன். இந்துத்துவா இயக்கங்கள் இந்து மதம், இந்தியா என்று பெயர்களில் இயங்கி வருவ்தால் அவற்றைப் பற்றிப் பேச எனக்கு உரிமையும் தகுதியும் இருப்பதாக நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

நல்லடியார் சொன்னது…

மா.சிவகுமார்,

மன்னிக்கவும்! இப்பதிவில் நேசகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக என் பின்னூட்டம். என் பதிவிலும் பதிக்கப்படும். நன்றி.

இஸ்லாத்தின் மீதான நேசகுமாரின் எல்லாக் கேள்விகளுக்கும் அப்துல்லாஹ், அபூமுஹை உட்பட நானும் போதுமான விளக்கங்கள் கொடுத்திருக்கிறேன்.அவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்ட போதெல்லாம் வைக்கப்படும் துணைக்கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேலைப்பளு, கொலை மிரட்டல் என பின்வாங்குவது அல்லது பாகிஸ்தானில் நடக்க வில்லையா? சவூதியில் நடக்க வில்லையா? ஏன் நம் நாட்டில் கூட நடக்கவில்லையா? என்று துணைக் கேள்விகளை நியாயப்படுத்தி விவாதத்தை திசை திருப்புவது அல்லது அவ்வாறு கேள்வி கேட்டவரை பொய்யர், தீவிரவாதி, அடிப்படைவாதி என்று புறம் தள்ளுவது.இதுதான் நேசகுமாருடன் கடந்த இரண்டரை அவருடன் வருடங்களாக வாதிட்டு அல்லது ஜல்லியடித்து(எதிர்விவாதங்களை இப்படித்தான் அன்பாகக் குறிப்பிடுவார் :-) வருபவர்களின் அனுபவம்.

அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே கடவுள். அவனே எல்லா சக்தியுமுள்ளவன்" என்று ஒரு போதகர் சொன்னபோது, "தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லை கடவுளால் படைக்க முடியுமா?" என்று ஒருவர் கேட்டாராம். படைக்க முடியும் என்றால் கடவுளால் அந்தக் கல்லை தூக்க முடியாது. படைக்க முடியாது என்றால் "ஒரு கல்லைப் படைக்க முடியாதவன் எப்படி எல்லா சக்தியுமுள்ள கடவுளாக இருக்க முடியும் ?" குதர்க்கவாதம் செய்வதே இத்தகையவர்களின் நோக்கம்.

RSS இன் பயங்கரவாதத்தினைச் சொன்னால் அதேபோன்று குர்ஆனிலும் சொல்லப் பட்டிருக்கிறது?!? RSS அரசியல் ஆதாயத்திற்காகச் செய்வதை முஸ்லிம்கள் சுவர்க்கலோகக் கன்னியர் (அவரின் போலிகள் பாசையில் சொல்வதென்றால் பெ.மு.கன்னியர்) கிடைப்பர் என்ற ஆசைவார்த்தைகளுக்காகச் அவ்வாறு செய்கின்றனர் என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது.இதைத்தான் குர்ஆன் மாற்ற முடியாத தெய்வீகத் தன்மையுடையதா (Eternal) அல்லது சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதா (Contextual) என்று மேதாவித் தனமாகக் கேட்டிருக்கிறார்.

குர்ஆன் Eternal என்றால் ஏன் முஹம்மது நபியின் அந்தரங்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறன? Contextual என்றால் நீங்கள் சொல்வதற்கு எதிராக அல்லவா குர்ஆன் சொல்கிறது என்று குதர்க்கவாதம் செய்வது. இதில் எந்த பதிலுமே நேசகுமாரை திருப்தி படுத்தாது; ஏனெனில் அவரின் நோக்கம் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதல்ல என்பதை நன்கு அறிவோம் .

இனி இறைவேதமோ இறைத்தூதரோ வரபோவதில்லை என்று நம்பப் படுவதால் குர்ஆனில் சொல்லப் பட்டவை Eternal/மாற்ற முடியாதவை. அப்படியெனில் முஹம்மது நபி (ஸல்...) பற்றி குர்ஆனில் சொல்லப் பட்டவற்றைத் தானே எல்லா முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும். அதாவது வளர்ப்பு மகனின் மனைவியை விவகாரத்திற்குப் பின் முஹம்மது நபி மணந்ததாக குர்ஆன் சொல்கிறது. அதனால் முஸ்லிம்கள் எல்லோரும் வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் மணக்க வேண்டும். காஃபீர்களுடன் சண்டையிடச் சொல்லி குர்ஆன் சொல்கிறது.அதனால் எல்லா முஸ்லிம்களும் காஃபீர்களுடன் சண்டையிட வேண்டும் என்பதுபோல் பல அபத்தங்களைச் சொல்லி, அடச்சீ!இஸ்லாம் என்றால் இதுதானா? வேண்டாமய்யா வம்பு,காலம் முழுவதும் சூத்திரனாகவே இருந்து பிராமன ஐயர் சொல்லும் வேதப் பரிகாரங்களைச் செய்து அடுத்த பிறவியிலாவது மோட்சமடைவோம் என்று வர்ணாசிரமத்தை நிலை நாட்டுவதே நேசகுமார் குழுவினரின் நோக்கம்!

தனியொருவராக இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன முஹம்மது நபிக்கு எந்தவித உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை. முதலில் முஹம்மது நபியின் ஏகத்துவக் கோட்பாட்டை எதிர்த்த குரைஷி பாகன்கள்,அவர் தங்கள் கடவுளையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்க வேண்டுமென்றே எதிர்பார்த்தனர். ஏகத்துவத்துவத்தைச் சொல்லி அரசியல், பொருளியல் ஆதாயம் பெறுவதாக இருந்திருந்தால் அதனைக் கைவிட்டாலே அவற்றைக் கொடுக்கத் தயாராகவே இருந்தனர்.

இன்னொரு பக்கம், இயேசு கிறிஸ்துவையும் அன்னை மரியம் அலைஹி ... அவர்கள் பற்றியும் சொல்லப்படும் குர்ஆனியக் கருத்துக்கள் பைபிளில் சொல்லப் பட்டுள்ளதை விடவும் மிகவும் கண்ணியமாகவே சொல்லப் பட்டுள்ளன. முஹம்மது நபி சொன்னவையே பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டவை என்றதை மனப்பூர்வமாக உணர்ந்ததாலேயே ஆப்பிரிக்க மன்னர் நஜ்ஜாஸி முதல் மதீனத்து அன்சாரிகள்வரை இஸ்லாத்தை ஏற்றதோடு இஸ்லாத்திற்கு அரணாகவும் விளங்கினர். அவ்வாறு இஸ்லாத்தின் பரவலைத் தடுப்பதற்கு அன்றைய யூதர்களுக்கு இருந்த அச்சமே இன்றைய RSS, பார்ப்பனீய இந்துத்துவாக்களுக்கும் இருப்பதால்தான் நேசகுமார் முதல் நீலகண்டன்கள் வரையில் இஸ்லாத்தை அவதூறாக விமர்சிக்கின்றனர்.

1400 வருடங்களுக்கு முன்பு யூத பாஸிசத்திற்கு சாவு மணியடித்து இஸ்லாம் அரேபியாவை ஆட்கொண்டதுபோல், இங்கும் பார்ப்பனீய பாசிசத்திற்கு இஸ்லாத்தினால் சாவு மணி அடிக்கப்பட்டதை என்பதை நன்கு உணர்ந்திருப்பதாலேயே போலி என்கவுண்டர்கள் முதல் பாராளுமன்ற தாக்குதல்வரையிலான நாடகங்களை நடத்தி முஸ்லிம்களைக் குழுவாக கொன்றொழிப்பது. இதனைச் செய்யவே வெறும் ஐந்து மராட்டிய பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்ட RSS பாசிச இயக்கம் இன்று தன் நச்சுக் கரங்களை வலைப்பூக்கள் வரை நீட்டியுள்ளது.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

இந்த தொடர்புக்கு தொடர்பே இல்லாமல் யூத வெறுப்பு நச்சினை ஒருவர் கொட்டியிருக்கிறாரே அது குறித்து மௌனம் சாதிப்பது எவ்வித காந்திய அறவுணர்ச்சி என அறிந்து கொள்ளலாமா?

ஓகை சொன்னது…

//இந்து மதம் ஒரு அருமையான வாழ்க்கை வழிகாட்டி. தனி மனிதனை மதித்து அளவற்ற ஆன்மீக சுதந்திரத்தை அளிப்பது இந்து மதம்.//

உங்கள் பதிலுக்கு மிக நன்றி. இன்னும் விளக்கமாக சொல்லியிருக்கலாம். நீங்கள் மதிக்கும் இந்துமதம் காக்கப்பட வேண்டுமென்பதில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்க முடியாது. இந்த நோக்கத்தில் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் வழிமுறைகளாக நான்கு யோசனைகள் கூறியிருக்கிறீர்கள். இது பற்றி என் கருத்துகளைத் தனியாகத் தருகிறேன்.
ஒரு இந்திய குடிமகனாக இந்தப் பதிவில் சிலவற்றைக் கூறியிருக்கும் நீங்கள் முந்தய பதிவொன்றில் இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்திருந்ததாக சொல்லியிருந்தீர்கள். அதனால் அப்சலின் நோக்கத்தையும் அவரின் வழிமுறையையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆதரித்தீர்கள்.

எஸ்.கே சொன்னது…

"பார்ப்பனீய பாசிஸம்" என்றால் என்ன என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. ஆரேபியாவில் இஸ்லாம் வெற்றி கொண்டதுபோல் இந்தியா முழுவதும் "ஆட்கொண்டு" ஒரு காலிஃபேட்டை உருவாக்கி ஹிந்துக்களையும் முஸ்லிமல்லாத பிற மதத்தினரையும் கெட்டோவில் (ghetto) அடைப்பதுதான் திட்டமோ? அத்தகைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக ஆர்.எஸ்.எஸ் இருப்பதால் அதனை ஒரு பார்ப்பன சாயம் பூசி ஏற்கனவே பலர் மனதில் ஆழப் பதியவைத்திருக்கும் காழ்ப்பையும் வெறுப்புணர்ச்சியையும் இன்னும் உசுப்பிவிட்டு இந்துமதத்தை அழிக்க முற்படுவது நன்கு விளங்குகிறது. நடுநிலையாக நோக்கினால் பார்ப்பனீயம் என்பது இன்றைய நிலையில் எந்தப் பொருளும் கொள்ளமுடியாத ஒரு மலட்டு rhetoric. வேறு ஒன்றும் உருப்படியாக வாதம் புரிய கிடைக்கவில்லையெனில் இருக்கவே இருக்கிறது பார்ப்பனீயம் (ஈயம், பித்தளைக்கு பேரீச்சம்பழக் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்ட்டது!). இனிமேல் பார்ப்பனர்களின் இன்றைய நிலையை சிறிது உற்று நோக்கி அவர்களின் தாக்கம் இன்றைய சமுதாயத்தில் எள்ளளவும் இல்லை என்பதை அவதானித்து, அதனை a last resort for those who reach bankruptcy of ideas என்கிற நிலையில் கைகொள்ளும் வாதங்களை எல்லொரும் நிராகறித்து உண்மையான, அர்த்தமுள்ள வாதங்களை முன்வைக்கச் சொல்லுங்கள். கோயில்களில் அந்தண அர்ச்ச்கர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது உங்கள் மனதை உறுத்தினால், அவரை தமிழில் செய்யச் சொல்லுங்கள். எல்லாக் கோயில்கள்ளிலும் கொட்டை எழுத்தில் போர்டு வைத்திருக்கிறார்களே, "இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும்" என்று. அவர்களும் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தானே. "சுந்தர வதனாய நமஹா" என்பதை "அழகிய தோற்றம் கொண்டவரே போற்றி" என்று சொல்லப் போகிறார். பெருமாள் கோவிலில் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும், மற்றும் பல ஆழ்வார்களின் பாடல்களும், சிவன் கோயில்களில் தேவார திருவாசகமும் தினம் ஒவ்வொரு கால பூஜையிலும் ஓதப்படுகின்றனவே. இதற்கென்று ஓதுவார்களுக்கு நிலங்கள் மானியமாகவும், சம்பளமும் தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் காலத்திலிருந்து நாளதுவரை கொடுக்கப்பட்டு வருகிறதே. ஏதும் ஐயமிருந்தால் ஏதாவது ஒரு ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள செயல் அலுவரிடம் விசாரியுங்கள். அல்லது இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் (சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்துக்கள் சாதிப்பூசலை ஒழித்து ஒற்றுமையுடன் எழுச்சியுற்றால் மதமாற்ற சதிகள் தோல்வியுறும். அந்த பொற்காலத்தை எதிர்நோக்குவோம்!

பெயரில்லா சொன்னது…

RSS ஸை அடையாளம் காட்டும் இந்த பதிவுக்கு, மேலே ஒரு யோக்கியர் தொடர்புக்கு தொடர்பில்லாமல் இஸ்லாத்தின் வெறுப்பை உளறிக் கொட்டியிருந்தாரே அவருக்கும் இதே மாதிரி சொல்லிட்டீரா சின்ன யோக்கியரே?

யோக்கியர் தான், சொம்பை எடுத்து உள்ளே வைக்கிற அளவுக்கு..

பெயரில்லா சொன்னது…

ந்த தொடர்புக்கு தொடர்பே இல்லாமல் யூத வெறுப்பு நச்சினை ஒருவர் கொட்டியிருக்கிறாரே அது குறித்து மௌனம் சாதிப்பது எவ்வித காந்திய அறவுணர்ச்சி என அறிந்து கொள்ளலாமா?//

இந்த தொடர்புக்கு தொடர்பே இல்லாமல் அதற்கும் முன்பே ஒருவர் இஸ்லாமிய வெறுப்பு நச்சினை கொட்டியிருந்தாரே? அப்பொழுது எங்கே போயிருந்தது இந்த ஆர்.எஸ்.எஸ் ஜல்லி?

ஆரேபியாவில் இஸ்லாம் வெற்றி கொண்டதுபோல் இந்தியா முழுவதும் "ஆட்கொண்டு" ஒரு காலிஃபேட்டை உருவாக்கி ஹிந்துக்களையும் முஸ்லிமல்லாத பிற மதத்தினரையும் கெட்டோவில் (ghetto) அடைப்பதுதான் திட்டமோ?//

இஸ்லாத்தை குறித்து எதுவுமே அறியாதவர், ஒரு மனோ வியாதிக்காரனின் புரட்டுக்களை இஸ்லாம் எனத் தவறாக விளங்கிக் கொண்டு(அந்த மனம் பிறழ்ந்தவனோடு இணைந்து இவர் பேட்டி நாடகம் நடத்தியது வேறு கதை) இருக்கும் எஸ்.கே அவர்களுக்கு இவ்வாறு தோன்றுவதில் ஆச்சரியமில்லை.

இப்பதிவுக்கு தொடர்பில்லாததால் இதனோடு நிறுத்திக் கொள்கின்றேன்.

இஸ்லாத்தின் மீது அபாண்டத்தை வாரி வீசுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அந்த மனம் பிறழ்ந்தவனோடு இணைந்து இவர் அடித்த தகிடுதத்த கூத்துக்களைக் குறித்து அதிகம் அறிய விரும்புபவர்கள் என் வலைப்பதிவுக்கு வரவும்.

உண்மையிலேயே இஸ்லாத்தின் மீது நடுநிலை கண்ணோட்டத்துடன் விமர்சனம் வைப்பவர்களுக்கும் என் வலைப்பதிவு கதவை திறந்தே வைத்துள்ளது.

தயவு செய்து இந்த பதிவின் நோக்கத்தினை திசை திருப்பும் எண்ணைத்தை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைவிடவும்.

அன்புடன்
இறை நேசன்

அருண்மொழி சொன்னது…

//கோயில்களில் அந்தண அர்ச்ச்கர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது உங்கள் மனதை உறுத்தினால், அவரை தமிழில் செய்யச் சொல்லுங்கள். எல்லாக் கோயில்கள்ளிலும் கொட்டை எழுத்தில் போர்டு வைத்திருக்கிறார்களே, "இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும்" என்று. அவர்களும் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தானே. "சுந்தர வதனாய நமஹா" என்பதை "அழகிய தோற்றம் கொண்டவரே போற்றி" என்று சொல்லப் போகிறார்.//

மா.சி,

பதிவிற்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதற்கு மன்னிக்கவும்.

தமிழ்ல மந்திரமா? அப்படி சொன்னால் பலன் கிடைக்குமா? பருப்புகள் கலெக்டர், கலைஞர் பெயரை சொல்லி மிரட்டினால்தான் தமிழில் மந்திரம் சொல்கின்றன என்று பதிவுகளில் வந்ததே பார்க்கவில்லையா? ஜூனியர் விகடனில் கூட செய்தி போட்டிருந்தார்கள். அதை தயவு செய்து படிக்கவும்.

மா சிவகுமார் சொன்னது…

ஓகை,

//நீங்கள் மதிக்கும் இந்துமதம் காக்கப்பட வேண்டுமென்பதில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்க முடியாது. இந்த நோக்கத்தில் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன்.//

நிச்சயமாக. "இந்து மதத்தைக் காக்க இந்துத்துவா இயக்கங்களின் படை திரட்டும், மக்களிடையே பிளவைத் தூண்டும் வழிகள் உதவாது. அவர்களது வழிகள்தான் இந்து மதத்துக்கு எதிரானது" என்பது என் கருத்து.

//அதனால் அப்சலின் நோக்கத்தையும் அவரின் வழிமுறையையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆதரித்தீர்கள்.//

வாஞ்சிநாதனும் பகத்சிங்கும் நமக்கு எப்படி தேசபக்தர்களோ அதே போல, அப்சல் குரு காஷ்மீர் மக்களுக்கு தேச பக்தர் என்று சொன்னேன். நமக்கு ஒரு நியாயம், காஷ்மீருக்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. ஒவ்வொன்றுக்கும் இரண்டு பக்கம் உண்டு, ஒரு வன்முறையை நியாயப்படுத்த முயன்றால் நமக்கெதிரான வன்முறைகளுக்கும் நியாயம் இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டினேன்.

இதை இன்னொரு பதிவிலோ, தனியாகவோ விவாதிக்கலாம், ஏற்கனவே இந்த இடுகை இழுத்துக் கொண்டே போகிறது :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நல்லடியார்,

உங்கள் நம்பிக்கைகளை மதிக்கிறேன். வருணாசிரம அடாவடிக்கு மாற்று இஸ்லாமதான் என்று நான் நம்பவில்லை. இந்து மதத்திலேயே எல்லா பிரிவினரும் இணக்கமாக வாழ வழி இருக்கிறது என்று நம்புகிறேன்.

அரவிந்தன்,

காந்தியம் பற்றி விவாதிக்க ஒரு குறைந்தபட்ச தகுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இன்னும் அந்தத் தகுதியைப் பெற்று விடவில்லை.
நீங்கள் என்னை விட வெகு தொலைவில் இருக்கிறீர்கள் என்பது என்னுடைய் கருத்து.

அதனால் ஒவ்வொரு வாக்கியத்திலும் காந்தியின் பெய்ரை இழுப்பதன் உங்கள் நோக்கம் இழிவானதாகப்படுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இந்துக்கள் சாதிப்பூசலை ஒழித்து ஒற்றுமையுடன் எழுச்சியுற்றால் மதமாற்ற சதிகள் தோல்வியுறும். அந்த பொற்காலத்தை எதிர்நோக்குவோம்!//

எஸ்கே,

இதைத்தான் நானும் சொல்கிறேன். இந்தப் பணியை விட்டு விட்டு வதந்திகளைப் பரப்பி மக்களிடையே பயம், குழப்பம், சந்தேகங்களைக் கிளப்பி சமூகத்தையே சீர்குலைக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் இந்து மதத்தின் முதல் எதிரிகள் என்பது என் கருத்து.

இந்து மதத்தை மத மாற்றமோ, மற்ற மதப் பரவலோ பாதிக்க முடியாது. ஆர் எஸ் எஸ்சின் இந்துவுக்குப் பொருந்தாத பாசிச நடவடிக்கைகள்தன் இந்து சமூகத்துக்கு ஊறு விளைவிக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
யாருடைய மத நம்பிக்கைகளையும் புண்படுத்தி எழுதவில்லை என்றே நம்புகிறேன். இந்துத்துவா இயக்கங்கள் இந்து மதம், இந்தியா என்று பெயர்களில் இயங்கி வருவ்தால் அவற்றைப் பற்றிப் பேச எனக்கு உரிமையும் தகுதியும் இருப்பதாக நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்
//

Very good.

அப்ப நேசகுமார் ஒரு இஸ்லாமியராக இருந்தால் அவர் சொல்வது சரி என்று சொல்லிவிடுவீர்களா அல்லது இஸ்லாத்தில் இருந்து தான் அதை விமர்சிக்க தகுதி உள்ளது என்று சொல்கிறீர்களா ?

(www.faithfreedom.org) இந்தத் தளத்தில் இஸ்லாத்தில் இருந்தவர்கள் இஸ்லாத்தின் மீதான விமர்சனத்தை வைக்கிறார்கள். அதை ஒப்பிடும் போது நேசகுமார் வைத்ததெல்லாம் ஜுஜ்ஜுபி!

மா சிவகுமார் சொன்னது…

அனானி, இறைநேசன்,

பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் பின்னூட்டங்களைத் தவிர்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன். சில பின்னூட்டங்களை நீக்கவும் செய்தேன்.

அருண்மொழி,

நான் இடுகையில் சொன்னது போல, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று போடுவது அவமானம். ஏதோ பிச்சைக்காசு தூக்கிப் போடுவது போல சலுகை வழங்கியிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

எமது சமூகத்தில் எமது மொழியில் வழிபாடு செய்வது இயல்பு நடைமுறையாக இருக்க வேண்டும். தேவை என்றால் வெளி மாநில பக்தர்களுக்காக,
"சமஸ்கிருதம் மே பீ பூஜா கரேங்கே" என்று எழுதிப் போடட்டும்.

அது வரை இவர்களது நோக்கமெல்லாம் ஆதிக்கத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதுதான்.

உச்ச நீதி மன்றத்தில் எல்லா சாதியினரும் பூசாரி ஆகலாம் என்ற உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுதாரர்கள் இந்து மதத்தின் எதிரிகள்.

கோயில்களில் தமிழில்தான் வழிபாடு செய்யப்படும் என்று சட்டம் போட்டால் நீதிமன்றங்களில் தடை உத்தரவு வாங்க முதலில் நிற்பவர்கள்தான் இந்து மதத்தின் எதிரிகள்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

இஸ்லாமியர்கள் தங்களுக்குள் விவாதித்து தமது முறைகளை மாற்றிக் கொள்வதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை?

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//Very good.

அப்ப நேசகுமார் ஒரு இஸ்லாமியராக இருந்தால் அவர் சொல்வது சரி என்று சொல்லிவிடுவீர்களா அல்லது இஸ்லாத்தில் இருந்து தான் அதை விமர்சிக்க தகுதி உள்ளது என்று சொல்கிறீர்களா ?//

வஜ்ரா, very good.

அப்ப இந்து மதத்தை விமர்சிக்கும் இந்துக்களை மட்டும் என்னத்துக்கு anti-hindu என்று முத்திரை குத்தவேண்டும்? முஸ்லிம்கள் இஸ்லாமை விமர்சிக்கும்போது பாராட்டுவது மாதிரி இதையும் பாராட்டுவது தானே?

வஜ்ரா சொன்னது…

//
வஜ்ரா,

இஸ்லாமியர்கள் தங்களுக்குள் விவாதித்து தமது முறைகளை மாற்றிக் கொள்வதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை?

அன்புடன்,

மா சிவகுமார்
//
சார்! நான் கேட்ட கேள்வி, ஒரு கொள்கையை விமர்சிக்கவேண்டுமென்றால் அந்தக் கொள்கையைக் கடைபிடிப்பவர்களாக இருக்கவேண்டுமா, இல்லையா? என்பதே!

நீங்கள் மீண்டும் மீண்டும் இஸ்லாத்தை விமர்சிக்க இஸ்லாத்தவர்கள் தான் வரவேண்டும் என்று சொல்கிறீர்களே ஒழிய வேறு வார்த்தை வர மாட்டேன் என்கிறது உங்களிடத்திலிருந்து. இதிலிருந்து இஸ்லாத்தைப் பாதுகாக்க ஏன் எண்ணுகிறீர்கள் என்று கேட்கத்தான் எனக்குத் தோன்றுகிறது.

..
இந்து மதத்தின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. அதைவிட கடுமையாக நேசகுமாரும் கூட இந்துக்களை விமர்சித்திருக்கிறார்.

//
அப்ப இந்து மதத்தை விமர்சிக்கும் இந்துக்களை மட்டும் என்னத்துக்கு anti-hindu என்று முத்திரை குத்தவேண்டும்? முஸ்லிம்கள் இஸ்லாமை விமர்சிக்கும்போது பாராட்டுவது மாதிரி இதையும் பாராட்டுவது தானே?

//

நான் எடுத்துக் காட்டைத்தான் சொன்னேன். பாராட்டவில்லை. முத்திரையும் குத்தவில்லை.

..
நான் இந்து மதத்தின் எதிரி என்று நேராகச் சொல்லும் ஆட்களை, இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று நிராகரிக்கும் ஆட்களை, இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று சொல்லும் தலைவருக்கு வாக்களிக்கு கூட்டம், பார்ப்பானர்கள் தவிர மற்றவர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லுக் குள்ளநரிக்களை anti-hindu என்று சொல்லாமல் என்ன சொல்வது என்று எனக்கு advice செய்யுங்கள் please.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

எவ்வளவு கீழ்த்தரமாக இந்து எழுச்சி மாநாடுதான் கலவரத்துக்கு காரணம் என ஐக்கிய கிறிஸ்தவ மாநாடு நடந்த விசயத்தையே மறைத்து புளுகியவர் நீர் மா.சி. குறைந்த பட்சம் கலவரம் குறித்து முழுக்காரணங்கள் எனக்கு தெரியாது ஏதோ தெரியாமல் எழுதிவிட்டேன் என்று சொல்ல கூடிய நாணயம் கூட இல்லாதவர் நீர் என்பதையும் நிரூபித்திருக்கிறீர். நான் எழுதும் ஒவ்வொரு விசயத்தையும் எனக்கு நிரூபிக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இன்று வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கோபத்தையும் வலையேற்ற முடியும். தேவையற்ற விரோதம் எழும் என்பதனால் செய்யாமல் இருக்கிறேன். இந்த ஆறியிருந்தாலும் உள்ளே ரணமிருந்த புண்களை கீறிவிட்டது யார் என்றால் அது நீர்தான்...உம்முடைய சக-மனிதனின் துயரத்தை கண்டுகொள்ளாமல் ஏதோ பெரிய பருப்பு மாதிரி (ஆமாம் தெரிந்தே இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை குறித்து ஒருவன் அசிங்கமாக இந்த வார்த்தையை பயன்படுத்தியதை கண்டுகொள்ளாமல் நீர் அனுமதித்திருக்கிறீர்) பம்மலாத்து நியாயம் பேச வந்து இந்த காயங்களை கீறிவிட்ட கீழ்த்தர மனிதராக இருக்கிற ஆசாமி காந்தி பெயரை பயன்படுத்தும் அசிங்கத்தை விட யாரும் காந்தியை அவமானப்படுத்திட முடியாது, இந்த அளவு நாணக்கேடற்று நாணயக்கேடுடன் ஏதோ காந்தியை குத்தகைக்கு எடுத்தது போல 'நான் காந்திக்கு இவ்வளவு தூரத்துல இருக்கிறேன். நீ இவ்வளவு தூரத்தில் இருக்கிறாய்' என பத்வா போடுகிறீரே! காந்திய முல்லாவா நீர்? அல்லது காந்தியை உமக்கு எழுதி வைத்திருக்கிறதா?
மண்டைக்காடு கலவரத்துக்கு பின்னர் நடந்த மற்றொரு கலவரம் கொல்லங்கோடு கலவரம். அது குறித்து தகவல்களையும் ஒரு உண்மையான காந்தியவாதியுடைய வேதனையையும் இங்கே காணலாம்.

பெயரில்லா சொன்னது…

//நான் இந்து மதத்தின் எதிரி என்று நேராகச் சொல்லும் ஆட்களை, இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று நிராகரிக்கும் ஆட்களை, இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று சொல்லும் தலைவருக்கு வாக்களிக்கு கூட்டம், பார்ப்பானர்கள் தவிர மற்றவர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லுக் குள்ளநரிக்களை anti-hindu என்று சொல்லாமல் என்ன சொல்வது என்று எனக்கு advice செய்யுங்கள் please.//

வஜ்ரா, நான் இந்துமதத்துக்கு இவ்வளவு தூரத்துல இருக்கிறேன். நீ இவ்வளவு தூரத்தில் இருக்கிறாய் என பத்வா போடுகிறீரே! இந்து முல்லாவா நீர்? அல்லது இந்துமதத்தை உமக்கு எழுதி வைத்திருக்கிறதா?

நண்பர் வஜ்ரா. அரவிந்தன் நீலகண்டனின் சென்ற பதிலிலிருந்து ஒரு வரியை மட்டும் எடுத்து, காந்தி என்பதை எடுத்துவிட்டு இந்து என்று போட்டிருக்கிறது சரியாக வருகிறதா பாருங்கள். என்னது என்னது, நீலகண்டன் பார்வையில் மா.சிவகுமார் சொல்வது பத்வா, ஆனால் நீங்கள் சொல்வது பத்வா இல்லையா? அட ஆமா, சரிதான் போங்க.

இந்து மதத்தின் எதிரி என்று நேராச் சொல்ல இந்துவுக்கு உரிமை இல்லையா? உலகக் குடிமகனாக இருந்து இஸ்லாமிய எதிரியாக இருக்கும் இஸ்லாமியர்களை மட்டும் எடுத்துக் காட்டினால் போதுமா? விமர்சிப்பவர்கள் அனைவரும் எதிரிகளா? குறிப்பாக, உங்களை மாதிரி விமர்சிக்காதவர்கள் அனைவரும் எதிரிகளோ?

கருணாநிதிக்கு வாக்களித்த ஆத்திக இந்துக்கள் அனைவரும்கூட அப்போது anti-Hinduக்களா?

பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லுக் குள்ளநரிகளா? யாரைச் சொல்கிறீர்கள்? ஜாதி ஒழிப்புச் சட்டம் எல்லாம் வருவதற்கு முன்பா பின்பா குள்ளநரிகள்?

பெயரில்லா சொன்னது…

//
இந்து மதத்தை மத மாற்றமோ, மற்ற மதப் பரவலோ பாதிக்க முடியாது. ஆர் எஸ் எஸ்சின் இந்துவுக்குப் பொருந்தாத பாசிச நடவடிக்கைகள்தன் இந்து சமூகத்துக்கு ஊறு விளைவிக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.
//

ஆக, பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய முன்னாள் இந்திய பிரதேசங்களில் இந்துமதம் அழிந்ததற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் இன் பாசிச போக்கு என்று சொல்கிறீர்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்துமதம் அழிந்ததற்கு காரணமும் ஆர்.எஸ்.எஸ் ஆகத்தான் இருக்கும். இல்லையா?

கோவாவில் போர்ச்சுகீசியர்கள் கட்டாய மதம் மாற்றி கிறிஸ்துவர்களாக மாற்றியதற்கும் ஆர்.எஸ்.எஸ் இன் பாசிச போக்குதான் காரணம் இல்லையா?

ஏன் பெருவாரியான ஈழத்தவர் கேரளர்களும் கிறிஸ்துவர்களாக மதம் மாறியதற்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ் இல்லையா?

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

//அதனால் முஸ்லிம்கள் எல்லோரும் வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் மணக்க வேண்டும். காஃபீர்களுடன் சண்டையிடச் சொல்லி குர்ஆன் சொல்கிறது.அதனால் எல்லா முஸ்லிம்களும் காஃபீர்களுடன் சண்டையிட வேண்டும் என்பதுபோல் பல அபத்தங்களைச் சொல்லி, //

நல்லடியார்,

மருமகளை விவாகரத்து செய்தால் அவளை வேறுயாரும் மணமுடிக்கக்கூடாது, மாமனார் தான் மணக்கவேண்டும் என்று குரான் சொல்லவில்லை. மாமனார் மணக்கலாம் அது தவறில்லை என்று சொல்கிறது. இரண்டும் வெவ்வேறு.

அதே போல அடிமைகளை புணர்ந்தார் என்றால், புணரவேண்டும் என்பதில்லை, புணரலாம் என்பதுதான். புணர்ந்தால் தவறில்லை என்பதுதான் குரானும் கதீசும் கூறுபவை.

அல்லாவின் தூதரின் நடவடிக்கைகள் ஒரு அழகான எடுத்துக்காட்டு.

அவற்றில் எதனை பின்பற்றக்கூடாது என்பதையும் அல்குரானே தெளிவாக கூறுகின்றது. உதாரணமாக இறைதூதருக்கு இருக்கும் மனைவிகளின் எண்ணிக்கையை பின்பற்றவேண்டாம் என்று கூறுகிறது. அதே போல எல்லா காபிர்களையும் கொல்ல வேண்டும் என்பதில்லை. கொல்லலாம் அது பாவமல்ல என்பதுதான்.

Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் வஜ்ரா அவர்களே!
உங்கள் வார்த்தைகள் இதோ,
//www.faithfreedom.org) இந்தத் தளத்தில் இஸ்லாத்தில் இருந்தவர்கள் இஸ்லாத்தின் மீதான விமர்சனத்தை வைக்கிறார்கள். அதை ஒப்பிடும் போது நேசகுமார் வைத்ததெல்லாம் ஜுஜ்ஜுபி!//

உங்களிடத்தில் உண்மையை சொன்னால், பெரிய ஆய்வாளர்கள் போல, வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ச்சி செய்து விட்டது போல வக்கிரமாக பொய் புனைய முயற்சிக்கிறீர்கள். ஆனால் பொய்யை மட்டும் எவ்வித ஆய்வும் செய்யாமலே, உண்மை என்று உளறி அதை ஆதாரமாகவும் இடுகிறீர்கள். ஜயராமன்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டோ? இதெல்லாம் ஒரு ஆதாரமா ஐயா? உங்களுக்கே இப்படிபட்ட ஆதாரங்களை காட்டவது அசிங்கமாக தெரியவில்லையா? நீங்கள் உண்மையாளராக இருந்தால் தெளிவான ஆதாரத்துடன் முன்னாள் முஸ்லிமின் வாக்குமூலத்தை கொடுக்க முடியுமா? உங்களுக்கு முடிந்தது, ஜயராமன்களை சல்மாக்கள் பெயரில், நான் முன்பு இஸ்லாத்தில் இருந்தேன். பிறகு நான் அதன் கொள்கை பிடிக்காததால் வெளியேறினேன் என்று பொய் வாக்குமூலங்களை தான் உருவாக்க முடியும். போலி எண்கெளண்டர்களையே உருவாக்கிய உங்களுக்கு இதுவெல்லாம் எம்மாத்திரம். குடிகளை பாதுகாக்க வேண்டிய ஆடசியாளனே ஒரு பெண்னை கொன்று அந்த விபரங்களை 18 மாதங்களாக மறைத்ததும், இறந்த பிறகாவது அவளது பிரேதத்தை கண்ணியபடுத்தும் நாகரிகம் தெரியாமல் எரித்த சங்பரிவார கும்பல்கள் அல்லவா நீங்கள்?

6வது அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுக்க முயற்ச்சி செய்யுங்கள் வஜ்ரா & Co வினரே

நன்றி
சகோதரன் நெய்னா முஹம்மது

பெயரில்லா சொன்னது…

//குடிகளை பாதுகாக்க வேண்டிய ஆடசியாளனே ஒரு பெண்னை கொன்று அந்த விபரங்களை 18 மாதங்களாக மறைத்ததும், இறந்த பிறகாவது அவளது பிரேதத்தை கண்ணியபடுத்தும் நாகரிகம் தெரியாமல் எரித்த//

சகோதரர் நைய்னா முகம்மது,


நமக்குள் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் வேறுபாடு இல்லை.


அதிலும் அந்தப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மனநிலை பிசகியதால் கொன்றார்கள் என்று வரும் பத்திரிகை செய்தியைப் படிக்கும்போது மனது பிசைகிறது.


குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. இது போன்ற கொடுமைகள் எந்த மதத்தினருக்கு நடந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியவையே.

கருப்பு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரண்டாம் கருத்தும் கிடையாது. ஆனால் இதுவும் குஜராத் அரசே குற்றவாளிகளைக் குறித்து புகார் அளித்துள்ள போது இந்த போலி-மதச்சார்பற்ற கீழ்த்தரங்கள் செய்யும் மீடியா சர்க்கஸ் கூத்துகளின் ஆபாசம் தாங்கவில்லை.
இந்த 'போலி' என்கவுண்டர்கள் குறித்த சில புள்ளிவிவரங்கள்:
தேசிய மனித உரிமை அமைப்பின் புள்ளியியலிலிருந்து:
2004-2005 இல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இத்தகைய போலி என்கவுண்டர்கள் குஜராத்தில் 1. காங்கிரஸ் அரசாளும் ஆந்திர பிரதேசத்தில் 5. எஸ்.பி ஆளும் உத்தர பிரதேசத்தில் 54. காங்கிரஸ் ஆளும் ஹரியானாவில் 4. இன்னமும் விசாரணைக்காக காத்திருக்கும் போலி என்கவுண்டர் கேஸ்கள்: குஜராத் 5. ஆந்திர பிரதேசம் - 21 மகாராஷ்டிரா - 29. உத்திர பிரதேசம் 175. டெல்லி - 18. உத்தராஞ்சல் - 14. இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆக இந்த புள்ளிவிவரத்தில் அடங்கும் ஒரு சோக்ரபுதீனை வைத்து போலி மதச்சார்பின்மைகள் போடுகிற ஆட்டம் அப்பட்டமான வகுப்புவாதம். நிற்க. சோக்ரபுதீனோ 50க்கும் மேல் கிரிமினல் கேஸ்களை தன் மேல் தாங்கும் அப்பாவி - அதில் சில முஸ்லீம்களை மிரட்டி பணம் வசூலித்தது உட்பட. எனவே கொல்லப்பட்டது ஒன்றும் அப்பாவி முஸ்லீமும் அல்ல. மேலும் கஷ்டப்பட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்க ஐரோப்பிய யூனியன் வரை பிடி உள்ள ஒரு மாஃபியா கும்பல் மதம் எனும் பெயரில் வேலை செய்கிறது எனும் யதார்த்தம் இத்தகைய போலி என்கவுண்டர்களை உருவாக்கும் மற்றொரு காரணி. என்றாலும் தவறு செய்தவர்கள் அதுவும் அதிகாரத்தில் இருந்தபடி அதை மனித உரிமைக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக ஒரு அப்பாவி பெண்மணிக்கு எதிராக கொடுமை இழைத்தவர்கள் தயவு தாட்சண்யமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

கருப்பு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
மா சிவகுமார் சொன்னது…

விடாது கருப்பு,

உங்கள் பின்னூட்டங்களின் காரம் இந்த விவாதத்துக்குப் பொருந்தாது என்று கருதி நீக்கி விட்டேன். புரிதலுக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

கருப்பு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் நேசக்குமார் அவர்களே!
தங்களது கண்டன குரலுக்கு நன்றி
//நமக்குள் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் வேறுபாடு இல்லை.//
ஆனாலும் சகோதரன் அரவிந்தனுக்கு நியாயத்தை விட முஸ்லிம் என்னும் வெறுப்பு மேலோங்கி நிற்கிறது. எனகெளண்டரே போலி என்னும் போது ஷஹீதாகிய (இறைவன் அவருக்கு கருணை செய்வானாக!) அந்த சகோதரர் மீதான புகாரின் உண்மை நிலையை இறைவன் தான் அறிவான். அவர் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டதாக ஆதாரங்கள் உள்ளதா? காட்ட முடியுமா சகோதரன் அரவிந்தன் அவர்களே?
//சோக்ரபுதீனோ 50க்கும் மேல் கிரிமினல் கேஸ்களை தன் மேல் தாங்கும் அப்பாவி - அதில் சில முஸ்லீம்களை மிரட்டி பணம் வசூலித்தது உட்பட. எனவே கொல்லப்பட்டது ஒன்றும் அப்பாவி முஸ்லீமும் அல்ல.//
குற்றம் சுமத்தப்பட்டதாலே ஒருவன் குற்றவாளியா? எங்கிருந்து கற்றீர்கள்? ஓஹோ, நீங்கள் RSS அங்கத்தினர் இல்லையா, உங்களின் கருத்து இப்படி தானே இருக்கனும். ஆக நிரூபிக்கப்படாத, குற்றம் மற்றுமே சாட்டப்பட்ட ஒருவர் கொல்லப்படுவது அரவிந்தன் அகாராதியில் சரியானது. நீங்கள் தானே சகோதரர் மா சிவக்குமாரைப் பார்த்து, "யோக்கியா வருராறு செம்பை உள்ளத் தூக்கி வை" என்று நக்கலடித்தது. சகோதரன் அரவிந்தன் அறிவுரைப் படி இனி, நீதி மன்றங்களை எல்லாம் மூடி விடாலாமா? காவி போலீசக்கிட்டே தீர்ப்பை வழங்குற உரிமையை கொடுத்துடலாம், இந்தியாவை சுடுகாடாக மாற்றிட!
வலை சகோதரர்களே! இந்த பலுதான கிட்னி எல்லாம் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக சுகப்படுத்துறாங்களே? அது போல மனசாட்சிக்கு மாற்று அறுவை சிகிச்சை இருந்தால், தயவு கொஞ்சம் சொல்லுங்களேன். ஐயா அரவிந்தனுக்கு
உடனடியாக தேவைபடுகிறது

ஐயா அரவிந்தன்! என்ன? மற்ற மாநிலங்களில் மேலும் போலி எண்கெளண்டர்கள் புகார்கள் இருப்பதால், காவி கும்பல்களால் உருவாக்கப்பட்ட குஜராத் அரசு செய்தது நியாயமாகி விடுமோ?

கலவரங்களால் உயிர்களை பரிதாபமாக காவு கொடுத்த குடும்பங்களின் வேதனையை விளாவாரியாக விலக்கும் உமது முகம் பொய் முகம் தானே?

வலைப்பதிவு சகோதர, சகோதரிகளே! சங்பரிவார கும்பல்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரக் கூடாது என்ற கவலை நடுநிலை மக்களுக்கு ஏன் இருக்கிறது? என்பது சகோதரன் அரவிந்தன் மூலமாக புலனாகிறது தானே?

நன்றி
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

ரொம்ப ஓவராக குதிக்கவேண்டாம் நைனா. மற்ற மாநிலங்களில் நடைபெறுவதால் குஜராத் சம்பவம் நியாயம் என சொல்லவரவில்லை. ஆனால் அங்கெல்லாம் குதிக்காத போலி-மதச்சார்பற்ற கும்பல் அதைவிட குறைந்த எண்ணிக்கையில் Fake encounters நடைபெற்ற குஜராத்துக்கு மட்டும் குதித்து கும்மியடிப்பது ஏன் என்பதுதான் கேள்வி. மேலும் அப்பாவி பெண்ணை கொல்கிறவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என கூறியிருப்பது உமது கண்ணுக்கு படவில்லையா? சரி உங்கள் வழியிலேயே வருகிறேன். குஜராத் அரசு மூன்று காவல் துறை அதிகாரிகள் ஒரு கேடியை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக சொல்லியிருக்கிறது. ஆனால் அதுவும் குற்றச்சாட்டுதான். நிரூபிக்கப்படவில்லை. அப்போது ஏன் இப்போதே அது போலி என்கவுண்டர் என ஒப்பாரி வைக்க வேண்டும்? பத்திரிகைகள் 'alleged false encounter' என்று கூறுவதும் கண்ணில் படவில்லையா? என்றாலும் சந்தேகத்தின் பலனையும் ஒரு வித்தியாசமான முறையில் கேடிக்கு ஒரு விதத்திலும் காவல்துறையின் அதிகாரிகளுக்கு வேறுவிதத்திலும் அளிக்க வேண்டுமா? நான் ஏன் அவனை (அதாவது உங்கள் ஷகீதை) ஏன் கேடி என்கிறேன் தெரியுமா? திருவாளர் நைனா அவன் வெறுமனே குற்றம் சாட்டப்பட்டவன் மட்டுமல்ல 1999இல் மத்திய பிரதேச காவல் துறையால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒருவருடம் கடுங்காவல் தண்டனையும் பெற்றவன். இஷ்ரத் கொல்லப்பட்ட போதும் இது போல ஒரு கூக்குரல் எழுந்ததும் பின்னர் லஸ்கர்-இ-தொய்பாவே அவள் எங்கள் ஆள்தான் என ஒத்துக்கொண்டதும் எல்லையற்ற பேரரூளாளன் என நைனா நம்பும் அல்லாவால் நைனாவுக்கு ஞாபகம் வருமென நம்புவோம்.

Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் அரவிந்தன் அவர்களே!
நான் உங்களிடம் ஆதாரம் கேட்டால், நீங்களே எதையே type செய்து ஆதாரமாக்க முயல்கிறீர்கள். இது தான் ஆதாரமா?
//நான் ஏன் அவனை (அதாவது உங்கள் ஷகீதை) ஏன் கேடி என்கிறேன் தெரியுமா? திருவாளர் நைனா அவன் வெறுமனே குற்றம் சாட்டப்பட்டவன் மட்டுமல்ல 1999இல் மத்திய பிரதேச காவல் துறையால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒருவருடம் கடுங்காவல் தண்டனையும் பெற்றவன்//

அந்த ஷஹீதின் பற்றி (இறைவன் அவரை பொருந்தி கொள்வானாக!) நீங்கள் வைக்கும் ஆதாரம் ஒரு கருப்பு சட்டதின் கீழ் சிறையில் தள்ளப்பட்டதை. தடா, பேடா போன்ற சட்டங்களை கருப்பு சட்டங்களாக மனித உரிமை ஆவலர்கள் கூறுவது, எவ்வித விசாரணையுமின்றி சிறையில் தள்ளி கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்பதால் தானே? இப்படிபட்ட கருப்பு சட்டங்கள் தானே சங்பரிவார கும்பல்களுக்கு சக்கரை பொங்களலாகும். அப்படி பட்ட சட்டங்களை இயற்றினால் தானே, நீதி விசாரணையின்றி தான் வெறுக்கும் அப்பாவிகள் மீது அராஜக நடவடிக்கைகளை காட்ட முடியும். நீதி மன்றம், கமிஷன்கள் என்றாலே சங்பரிவார கும்பல்களுக்கு அலர்ஜி. பாபி மஜ்ஸித் விவாகாரத்திலிருந்து, பாஸிச பால்தாக்ரே மத கலவரத்தை தூண்டி பல்லாயிர கணக்காக உயிர் பலிகள் ஏற்படவும், குறுதிகள் பம்பாய் ரோடுகளில் ஓட்ட காரணமான குற்றவாளி என்று சிருஷ்ணா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்டதை ஏற்க மறுத்ததிலிருந்து, சச்சார் கமிஷன் முஸ்லிம்களின் பரிதாப நிலையை படும் பிடித்து காட்டியதை ஏற்க மறுத்ததிலிருந்து........என்னத்த சொல்ல எதை விட?

ஆனால், இஸ்லாம் சொல்லி தரும் பாடம் என்ன தெரியுமா?
"இறைநம்பிக்கையாளர்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இறைவனுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யமாலிருக்க உங்களை தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும். நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்பவற்றை நன்க அறிந்தவனாக இருக்கிறான்" அத்தியாயம் 5 வசனம் 8.
இந்த வசனம் கற்று தரும் பாடம், சங்பரிவாரங்கள் அவர்களது இஸ்லாமிய குரோதவுணர்வுகளால் எங்களுக்கு வெறுப்பானதாக இருந்தாலும், பால்தாக்ரேக்கும்,எனது சகோதரனுக்கும் இடையில் ஒரு பிரச்சனையிருந்து அதில் சந்தேகமின்றி பால்தாக்ரே பக்கம் நியாயம் இருந்தததை கண்ட சாடசியாளனாக இருந்தால், எனது சகோதரனுக்கு எதிராக, பால்தாரேக்கு சாதகமாக சாட்சி சொல்லி, பால்தாக்ரேக்கு நீதிகிடைக்க உதவ வேண்டும் என்பது, மார்க்க கடமையாக கற்று தந்துள்ள மார்க்கம் இஸ்லாம்.


சிந்தியுங்கள். செயல்படுங்கள்.

நன்றியும் வாழ்துக்களும்
அன்புடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

பாபு சொன்னது…

ஆர். எஸ். எஸ்ஸுக்கு முட்டுக்கொடுப்பவர்களில் மிகப்பெரும்பாலோர் பிராமணீயர்களாகவே (கவனிக்கவும், பிராமணர்கள் என்று எழுதவில்லை) இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழ்வலையுலகிலும் பலகாலமாகத் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதினால், ஒன்று அதற்கு ஆதரித்தோ, அல்லது மறுத்தோ விளக்கமெழுதலாம். ஆனால் இந்த பிராமணீயர்கள் செய்வதென்ன? சம்பந்தமேயில்லாமல், இன்னொரு மதத்தைப் பற்றி எழுதி இழையைத் திரிப்பது. இதைத்தான் பிராமணிய திரிபு என்று சொல்வது.

இந்த லட்சணத்தில், யூதர் பற்றி வந்த ஒரு வார்த்தைக்காக ஆர்.எஸ்.எஸ் தொண்டரடிப்பொடியாழ்வாரொருவர் பொங்கி எழுகிறார். தொடர்பில்லாத இழையிலும் இஸ்லாம் பற்றி எதுவும், எந்த எல்லைக்கும் சென்று வெறுப்பின் நஞ்சை பரப்பும் குழாமின் நயவஞ்சகத்தனம் இப்படியாகப் பல்லிளிக்கிறது.

அடுத்து, இஸ்லாம் பற்றிய தன் அரைகுறை அறிவைக்கொண்டும், பழுதுடைப்புரிதலைக்கொண்டும், முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் ஒரே எண்ணத்தில் எழுதிக் கொண்டிருக்கிற இஸ்லாமோஃபோபிக் நபருக்கு, சரியாகவும் தெளிவாகவும் பதிலளிக்க இஸ்லாமின் நல்லடியார்கள் தயாராகவே இருப்பது நல்ல செய்தி.

பெயரில்லா சொன்னது…

//
இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்துத்துவா இயக்கங்கள் ஆக்க பூர்வமாக என்ன செய்யலாம்?
//

இந்து மதத்தைப் பாதுகாக்க இந்துத்வா இயக்கங்கள் முதலில் செய்யவேண்டியது இந்து எதிர்ப்பை ஒடுக்குவது. அதற்கு துணை போகும் திம்மித்தனத்தை புத்தியிலிருந்து விரட்டுவது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு இந்தப் பதிவின் 100 பின்னூட்டங்கள் சாட்சி.

ஆக்கப் பூர்வமாக மட்டுமே செய்தால் போதாது. எதிரியை முழுதாக அழிக்காவிட்டால் மீண்டும் வந்து நம்மை அழிப்பான் என்பது பிருத்வி ராஜ் சௌஹானின் வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஆர் எஸ் எஸ் என்ற அபாயம் விலக மா. சிவகுமாரான நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமை. இந்து மதத்தை ஆதரித்தும், இஸ்லாம் போன்ற கொடிய மனித விரோதக் கொள்கையை எதிர்த்தும் எழுதவேண்டியது அவசியம். அதை உங்களைப் போன்றவர்கள் செய்யாமல் அமைதியான முறையில் இஸ்லாமை ஆதரிப்பதினால் வரும் சாபக் கேடு தான் நீங்கள் சொல்லும் அபாயமான ஆர் எஸ் எஸ் வளர முக்கிய காரணம்.

Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் சுந்தர பாண்டியன் அவர்களே!
//இந்து மதத்தை ஆதரித்தும், இஸ்லாம் போன்ற கொடிய மனித விரோதக் கொள்கையை எதிர்த்தும் எழுதவேண்டியது அவசியம். அதை உங்களைப் போன்றவர்கள் செய்யாமல் அமைதியான முறையில் இஸ்லாமை ஆதரிப்பதினால் வரும் சாபக் கேடு தான் நீங்கள் சொல்லும் அபாயமான ஆர் எஸ் எஸ் வளர முக்கிய காரணம்.//
இஸ்லாத்தை கொடிய மதமாக சித்தரிக்கும் சுந்தர பாண்டியன் ஐயா! எந்த அடிப்படையில் இந்த கருத்தை முன் வைத்தீர்கள்? சொல்லுகிறீர்களா?

//அமைதியான முறையில் இஸ்லாமை ஆதரிப்பதினால் வரும் சாபக் கேடு//
மத துவேசங்களை தனது மக்கள் மனதில் திணிக்காமலும், ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலைக்கு சூழ்நிலைகளை ஏற்படுத்த நினைக்காத பெரும்பான்மை இந்து சகோதர-சகோதரிகளை, அமைதியான முறையில் இஸ்லாத்தை ஆதரிப்பதாக அவதூறு சொல்கிறீரோ? இது நிச்சயமாக பயங்கரவாத பாஸிச RSS கும்பலை வளர விடாது. மாறாக இல்லாமல் அழிந்தொழியும். அந்த நல்ல நாள் வெகு தெலைவில் இல்லை.

நல்லிணக்கம் மக்கள் மனதில் தழைத்தோங்க, மனமாச்சரியங்கள் மடிந்தொழிய மனித குல விரோதிகளை அடையாளங்காணுவோம். அவர்களுக்கு எதிராக ஒன்றுபடுவோம்.அவர்கள் RSS முகமூடியில் வந்தாலும் சரி, அதை கழட்டி விட்டு சுந்தர பாண்டியன் போல புது வேடத்தில. வந்தாலும் சரி்

வளமான இந்தியாவே! வலிமையான இந்தியாவாகும்.

ஒற்றுமை ஓங்கும் இந்தியாவே! உறுதியான இந்தியாவாகும்.

மத நல்லிணக்கம், மக்கள் நல்லிணக்கம்.

குடிமக்களை பிரித்தாண்டு, குறுதியோட்ட நினைக்கும் சங்பரிவார கும்பலின் கனவை தகர்தெறிவோம்

நம்பிக்கையுடனும், தோழமையுடனும்
அன்பு சகோதரன்
நெய்னா முஹம்மது

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

i am still wondering how the hell did BJP and others could virtually go from zero to 100 lok sabha seats in one election!

And i still wonder how Karnataka is involving BJP as its main ally ?

Soon BJP will open accounts in AP and TN.

KERALA is already on the hitlist with 1000's of BMS organizations popping up in each village.

And you say that RSS is going to disappear. Naina muhamMAD, you must be joking.

Who are separatists and who want people to be united will be judged by the people of india themselves not by "intellectuals" and Terrorist, naxalite sympathizers.

If you really wish what you have written as a comment, please stop identifying yourself with terrorists just because they are fellow muslims.

Do not glorify terrorists. The whole muslim community is to be blamed for their fate right now in india. They fought alongside for freedom and have ruled (pretty much ruined) india for 800 years and now they are labelled terrorists WHY ?

The single important reason is that they identify themselves with OSAMA's and SADDAM HUSSEIN's and not ABDUL KALAM's. (how many kids were named after OSAMA and SADDAM in malabar coast? and how many were named KALAM ?)

Naina சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் சுந்தர பாண்டியன் அவர்களே!
//i am still wondering how the hell did BJP and others could virtually go from zero to 100 lok sabha seats in one election!//
பாபரி மஸ்ஜித் விவாகரத்தை எடுத்து இந்து முஸ்லிம்களை தங்களது பதவி வெறிக்காக பிரித்தாள சூழ்ச்சி செய்த போது, ஒரு சில அறியாத இந்து மக்கள் அந்த மத துவேச மாய வலையில் வீழ்ந்ததால் அந்த எண்ணிக்கை வந்தது. துரதிஷ்டவசமாக அந்த எண்ணிக்கை கிடைத்ததும், தங்களது பிரித்தளும் சூழ்ச்சியில் வெற்றியை கண்ட சங்பரிவார அரசியல் பிரிவான பிஜேபி இன்னும் வெறித்தனமாக தனது பிரித்தாளும் சூழச்சியை ரத்தயாத்திரை மூலமாக முடிக்கி விட்டு, அதன் காரணமாக இந்திய பிரிவினை மத கலவரங்களுக்கு பிறகு முதல் முதலாக இந்து முஸ்லிம் மக்களுடைய இரத்தங்கள் ஓட்டபட ஆரம்பித்தது. ஊரை இரண்டாக்கி அந்த கயமைத்தனம் மூலம் பெற்ற வெற்றியால், குதுகலித்து கொண்டாடுகின்றன சங்பரிவார கூத்தாடிகள்.

அங்கே கால்பதிக்கிறோம், இங்கே ஆளுகின்ற அளவு வளர்ந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களே, இந்த இறுமாப்புக்கு முற்றுப்புள்ளி மதநல்லிணக்கத்தை விரும்பும் மக்களால் விரைவில் வைக்கப்படும்.

முதலில் தீவிரவாதத்தின் வரைவிலக்கணத்தை கூறுங்கள். அதன் பிறகு தெரியும், தீவிரவாதி என்று பிறருக்கு முத்திரை குத்துறானே அவன் தீவிரவாதியா? இல்லை தீவிரவாதியாக பட்டம் சூட்டப்பட்டானே அவன் தீவிரவாதியா? நமது சுதந்திர போராட்ட தியாகிகளும், நமது மண்ணை அடக்குமுறையால் ஆண்ட ஆங்கிலேயர்களால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறைச்சாலைகளையும், தூக்கு கயிற்றையும் சந்தித்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்தார்கள். அவர்கள் போராளிகள், தியாகிகள். தீவிரவாதியா?
எனவே உங்களை போன்ற சங்பரிவார கும்பல்கள், மதநல்லிணக்கம் இந்தியாவில் தழைத்தோங்க வேண்டும் என்ற நாட்டம் கொண்டுள்ள என்னை தீவிரவாதி என்று சொன்னால் அது எனக்கு பெருமையே.

உங்களிடம் எனது சென்ற பதிவிலேயே கேட்டிருந்தேன், இஸ்லாத்தை கொடிய மதமாக சித்தரிக்கும் சுந்தர பாண்டியன் ஐயா! எந்த அடிப்படையில் இந்த கருத்தை முன் வைத்தீர்கள்? சொல்லுகிறீர்களா? அதற்கு பதில் தராமல் ஏதேதோ ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு தான் தமிழ் தெரியாதா? இல்லை நான் தான் என்ன வந்தேறியா? ஆங்கிலத்தில் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். முஸ்லிம்களுக்கு ஒரேயொரு முன்னோடி, வழிகாட்டி தான் உண்டு. அவர்கள் தான் முஹம்மது நபி(இறை சாந்தி அவர்கள் மீது உண்டாகட்டும். வேறு எந்த மனிதனும் எங்கள் முன்னுதாரணம் அல்ல.

நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

மா சிவகுமார் சொன்னது…

சுந்தர பாண்டியன்,

இந்து மதத்தின் பெருமையைப் பற்றி நிச்சயமாக எழுதுவேன், எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பிஜேபி ஆட்சிக்கு வரும் வழிகள்தான் எனது கவலைக்குரியவை. மக்களிடையே பிளவை உருவாக்கி அதிகாரத்தைப் பிடிக்கும் இயக்கம் வேரறுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது இந்த இடுகைகளின் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//மக்களிடையே பிளவை உருவாக்கி அதிகாரத்தைப் பிடிக்கும் இயக்கம் வேரறுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது இந்த இடுகைகளின் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்//


மிக்க பெருமிதமடைகிறேன் மா.சிவக்குமார். இந்த வார்த்தைகள் உங்களுடையது மட்டுமன்று, இந்தியாவை நேசிக்கும் அனைத்து குடிமகன்களுடையதுமாகும். இந்த உண்மையான உணர்வை இயக்கப்பெருமை பேசி வம்பளந்து காலம் கடத்துபவர்கள் சிந்திக்கவேண்டும்.

பிற மதங்களை நிந்திக்கவும் தம் குலப்பெருமை நீட்டி முழக்கவும் செலவிடுகிற நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்துவதே இம்மண்ணுக்கு இவர்கள் ஆற்றும் உதவி எனச் சொல்லலாம்.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//மக்களிடையே பிளவை உருவாக்கி அதிகாரத்தைப் பிடிக்கும் இயக்கம் வேரறுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது இந்த இடுகைகளின் கருத்து.//
பொய்களை எழுதி பெரியமனிசத்தனம் காட்டி பின்னூட்ட பாராட்டுக்களையும் தன்னை பற்றிய ஒரு புனிதபிம்பத்தையும் உருவாக்கும் ஈனத்தனமே மா,சிவகுமாரின் இந்த பதிவுகளின் நோக்கம். ஏனெனில் குமரிமாவட்டத்தில் நடந்த விசயங்களை தப்பும் தவறுமாக வேண்டுமென்றே சில விசயங்களை திரித்தும் மறைத்தும் எழுதிய அயோக்கிய சிகாமணிக்கு, இந்தியர்களை ஒட்டுண்ணிகள் என வாய்கூசாமல் விவரித்த ஒரு ஆசாமிக்கு வேறென்ன நோக்கம் இருக்கமுடியும்?

மா சிவகுமார் சொன்னது…

//பிற மதங்களை நிந்திக்கவும் தம் குலப்பெருமை நீட்டி முழக்கவும் செலவிடுகிற நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்துவதே இம்மண்ணுக்கு இவர்கள் ஆற்றும் உதவி எனச் சொல்லலாம்.//

நன்றி பாபு,

இன்னும் திருத்தமாக பலமுறை உரக்கச் சொல்லுங்கள், பலருக்கும் போய்ச் சேரும் விதமாக எல்லோரும் சேர்ந்து சொல்லுவோம். தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்.

அரவிந்தன்,

கொஞ்சம் நிதானத்துக்கு வாருங்கள்!

அன்புடன்,

மா சிவகுமார்

கோவி.கண்ணன் சொன்னது…

மாசி உங்கள் பொறுமைக்கு மீண்டும்
மாசி மீண்டும் பாராட்டுக்கள் ! .... அதற்கு மிகப்பொறுமையாக தம் நிலை எது என தெளிவாக எடுத்துச் சொன்னார் மாசி. இது அவரிடம் உள்ள ஒரு முதிர்வு நிலையாகப் பார்க்கிறேன்...

பெயரில்லா சொன்னது…

மா.சி அவ்வளவு நல்லவரா நீங்க?

ஏன் என் பின்னூட்டத்தை வெளியிடவில்லை?

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//கொஞ்சம் நிதானத்துக்கு வாருங்கள்!//
முதலில் நீங்கள் கொஞ்சமாவது நேர்மைக்கு வாருங்கள்...வர முயலுங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

சுந்தரம்,

//ஏன் என் பின்னூட்டத்தை வெளியிடவில்லை?//

ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தேவையில்லாமல் ஏன் இன்னும் கிளற வேண்டும் என்றுதான் உங்கள் நகைச்சுவை ததும்பும் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். :-)

அரவிந்தன்,

எனக்கு நேர்மையும் உங்களுக்கு நிதானமும் கிட்ட இறைவனை வேண்டிக் கொள்வோம் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கோவி கண்ணன்,

நம்மளவில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் வரை வீண் கோபமும் வெற்று மொழிகளும் தேவையே இல்லை.

உங்கள் பாரட்டுகளுக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

நீங்கள் இந்த பதிவுத் தொடரை போடாவிட்டால் அரவிந்தன் தகுந்த ஆதாரங்களுடனான பதிவுகளைப் போட்டிருக்கமாட்டார்.

நன்றி சிவக்குமார்.

உங்களால் ஆர் எஸ் எஸ் பற்றிய ஒரு தெளிவான கருத்து ஏற்பட்டது. அதன்மீது மரியாதை ஏற்படுகின்றது.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

பல கோணங்களில் சீர்தூக்கிப் பார்த்து ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறோம். உங்கள் முடிவு என்னுடையதைப் போலவே இருக்க வேண்டியதில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

சுவாமி சொன்னது…

மாசி,
நல்லாவே எழுதரீங்க. நன்றி. உங்க பதிவினால ரெண்டு பக்கத்தில இருந்தும் கொஞ்சம் புதுசா தெரிஞ்சுகிட்டேன். RSS பத்தி பெரும்பாலும் எனக்கு உங்க கருத்துதான். ஆனா எனக்கு ஒரு 2 மணி நேர நேரடியான அனுபவம்தான் இருக்கு. கல்லூரியில் படிக்கும் போது ஒரு RSS meeting க்கு போனேன். ரொம்ப உழைக்க வேண்டியுருக்குமோ என்றும், ரொம்ப extremist ஆ இருக்குன்னும் தோணியதால அதோட விட்டுட்டேன். அதோட இந்திய நாட்டை ஒரு இந்து நாடா ஆக்க பார்க்கிறார்கள் என்று இன்று நினைக்கிறேன். நிறைய நல்லதும் செய்கிறார்கள். ஆனால், இப்போதய நிலவரத்தை உணர்ந்து, எல்லா மதத்தவரையும் மதித்து அரவணைத்து சென்றால், எல்லார் ஆதரவும் கிட்டும்.
As an aside, காந்திக்கும் காந்தியவாதிகளுக்கும் common ஆ இருப்பது என்ன தெரியுமா?! An infuriating combination of self righteousness, ambiguity, level headedness, honesty, hypocrisy, compassion, humility, obstinacy, simplicity and sometimes being theaterical. No wonder you get some people riled.

PS: போர இடத்தில எல்லாம் சொல்றதுதான். பட்டையயை எடுத்து விடுங்களேன். பின்புலம் கொஞ்சம் தெரிஞ்சதால உங்க பதிவில it is very jarring.

சுவாமி

மா சிவகுமார் சொன்னது…

//நல்லாவே எழுதரீங்க. நன்றி. உங்க பதிவினால ரெண்டு பக்கத்தில இருந்தும் கொஞ்சம் புதுசா தெரிஞ்சுகிட்டேன். RSS பத்தி பெரும்பாலும் எனக்கு உங்க கருத்துதான்.//

நன்று சுவாமி.

//ரொம்ப உழைக்க வேண்டியுருக்குமோ என்றும், ரொம்ப extremist ஆ இருக்குன்னும் தோணியதால அதோட விட்டுட்டேன்.//

:-)

//அதோட இந்திய நாட்டை ஒரு இந்து நாடா ஆக்க பார்க்கிறார்கள் என்று இன்று நினைக்கிறேன். நிறைய நல்லதும் செய்கிறார்கள். ஆனால், இப்போதய நிலவரத்தை உணர்ந்து, எல்லா மதத்தவரையும் மதித்து அரவணைத்து சென்றால், எல்லார் ஆதரவும் கிட்டும்.//

எப்போதுமே இந்தியா பல மதத்தினர் இணைந்து வாழும் சமூகமாகவே இருந்தது, இனிமேலும் இருந்து வரும். அதை ஏற்றுக் கொள்ளாத, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம் என்பதை அடிப்படையாகக் கொண்ட இயக்கம் மாற முடிந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

//காந்திக்கும் காந்தியவாதிகளுக்கும் common ஆ இருப்பது என்ன தெரியுமா?//

என்னை நான் காந்தியவாதி என்று சொல்லிக் கொள்வதில்லை. ஒரு சிலர் திட்டுவதாக நினைத்து அப்படிச் சொல்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை எதைக் கேட்டாலும் நான் மெய்ப் பொருள் என்று கண்டு கொள்வதை பின்பற்றுகிறேன். காந்தி சொன்னார் என்பதற்காக ஒன்றை வேத வாக்காக எடுத்துக் கொள்வதில்லை, அவர் சொல்லவில்லை என்பதால் மட்டும் எதையும் ஒதுக்கவும் செய்வதில்லை.

கடந்து ஆயிரம் ஆண்டுகளில் இந்தப் பூமியில் நடந்த மனிதர்களில் சிறந்தவர் காந்தி என்று நினைக்கிறேன். அவரது வாழ்க்கையையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

//self righteousness, ambiguity, level headedness, honesty, hypocrisy, compassion, humility, obstinacy, simplicity and sometimes being theaterical.//

Wow!!

//No wonder you get some people riled.//

:-)

//பின்புலம் கொஞ்சம் தெரிஞ்சதால உங்க பதிவில it is very jarring.//

என்ன பின்புலம் பற்றிச் சொல்றீங்க? தமிழ் மணத்துக்கு ஆதரவு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைதான். நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் சேர்த்தேன். நல்லாத்தானே் இருக்கிறது! :-)

அன்புடன்,

மா சிவகுமார்

சுவாமி சொன்னது…

மாசி,
இந்த 'வாதி'களும், 'ism' களும் 'ist' களும் எப்போதுமே குழப்பம்தான். காந்தியவாதிகளுமே காந்தி சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பிறர் உங்களை திட்டுவதற்காக உபயோகப்படுத்திய categorisation ஐ நான் எழுதியதற்கு வருந்துகிறேன்.

பட்டை தனியாக பார்த்தால் innocent ஆகவும் உயர்ந்த நோக்கத்துடன் உள்ளதாகவும் தோண்றுகிறது. In context, தமிழ்மணத்தில் இருந்து நீங்கிய/நீக்கப்பட்ட பதிவர்கள் ஜாதி/மத வெறியர்களாகவும், பட்டை போட்டு ஆதரவு தெரிப்பவர்கள் ஜாதி/மத வெறி இல்லாமல் எல்லோரயும் இணக்கமாக பார்ப்பவர்களாயும் தோற்றதை ஏற்படுத்துகிறது. அதான் சொன்னேன். Just my views and it is your blog. பதிவிற்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதால், நீங்கள் இதை edit செய்தால் எனக்கு சம்மதமே.

சுவாமி

மா சிவகுமார் சொன்னது…

சுவாமி,

//இந்த 'வாதி'களும், 'ism' களும் 'ist' களும் எப்போதுமே குழப்பம்தான்.//

இதுதான் எனது கேள்வியும். ஒரு முத்திரை குத்தி விட்டால் அந்த இசம், வாதத்தை முழுமையாகத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகள். எதையும் நாமே பகுத்தாய்ந்து ஏற்றுக் கொள்ளும் உரிமையை வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

//ஆனால் பிறர் உங்களை திட்டுவதற்காக உபயோகப்படுத்திய categorisation ஐ நான் எழுதியதற்கு வருந்துகிறேன். //

கிண்டலாகத்தான் சொல்லியிருந்தேன் :-) வருத்தமே தேவையில்லை.

//பட்டை தனியாக பார்த்தால் innocent ஆகவும் உயர்ந்த நோக்கத்துடன் உள்ளதாகவும் தோண்றுகிறது.//

அடுத்த மாற்றத்தில் (ஓரிரு நாட்களுக்குள்) எனது வாக்கியத்திலேயே ஒரு சுட்டியைக் கொண்டு இந்தப் பட்டியை மாற்றிக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

வாஞ்சிநாதனும் பகத்சிங்கும் நமக்கு எப்படி தேசபக்தர்களோ அதே போல, அப்சல் குரு காஷ்மீர் மக்களுக்கு தேச பக்தர் என்று சொன்னேன்.
Brilliant.Bhagat Singh did not plot to kill anyone.He protested by throwing a bomb in a place where there was no body.How can
Afzal be compared with Bagat Singh.
Is Kashmir an alien country which India has annexed by force.Is not Kashmir part of India.If you state
that Kashmir is under Indian occupation then I have nothing to say. You are fit to join the ranks of Arundati Roys and other psuedo-secularists.
அப்சல் குரு காஷ்மீர் மக்களுக்கு தேச பக்தர் என்று சொன்னேன்.
Perhaps you seem to think that all
Kashmiris want 'liberation' from India. This shows your ignorance.
In any case had you written this
part more forcefully as a separate
post ....... would have praised you.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//
Perhaps you seem to think that all
Kashmiris want 'liberation' from India. This shows your ignorance.//

இந்தியாவில் உண்மையான மக்களாட்சி வந்து விட்டால் யாரும் யாரை எதிர்த்தும் போராட அவசியம் இருக்காது. இங்கிலாந்து இந்தியாவை ஆளும் போதும், அதற்கான சட்டங்கள் வகுத்து, பிரதிநிதிகளை நியமித்து, "மேன்மை மிகு அரசரின் செங்கோலின் கீழ்" இந்திய மக்களை 'மேம்படுத்தும்' விதமாகத்தான் ஆட்சி நடந்தது.

அப்போதும் பெரும்பான்மை மக்கள் வழக்கமான வாழ்க்கையை நடத்திக் கொண்டுதான் இருந்திருப்பார்கள்.

இந்தியா என்பது புதுதில்லியை மையமாகக் கொண்டு எல்லா முடிவுகளும், அதிகாரங்களும் சிலர் கையில் குவிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்று கொண்டால், இந்தியா காஷ்மீரை வலுவில்தான் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

மாறாக, இந்தியா என்பது, தனி மனித உரிமை, கீழ்நிலை தன்னாட்சியை ஊக்குவிக்கும், அத்தகைய தன்னாட்சி அமைப்புகள் பொது நலனுக்காக மத்தியில் கூட்டாட்சி நடத்துகின்றன என்று கொண்டால் காஷ்மீராகட்டும் நக்சலைட்டுகளாகட்டும் மனக்குறைக்கு காரணங்கள் மறைந்து போய் விடும்.

அத்தோடு தேச பக்தி, தேச உருவமைப்பு என்று சல்லி அடிக்கும் இந்துத்துவா இயக்கங்களும் வேரறுந்து போய் விடும்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
மக்களிடையே பிளவை உருவாக்கி அதிகாரத்தைப் பிடிக்கும் இயக்கம் வேரறுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது இந்த இடுகைகளின் கருத்து.
//

The congress and communists are the one who started it. They separated minorities and majority. They want to modify foreign policy as dictated by terrorist organizations (read fundamentalist muslim ulemas). They want to ban a books and movies that are offensive to Christians and muslims but they will not do the same for Hindus.

Congress and communists want reservation for muslims. Reservation on the basis of religion is not separatist ideal then what is ?

The same blame that you put against BJP is equally and very suitably valid against Congress and communists.

Those living in glass houses should not throw stones at others.

மா சிவகுமார் சொன்னது…

சுந்தர பாண்டியன்,

//The same blame that you put against BJP is equally and very suitably valid against Congress and communists.//

யார் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல் செய்தாலும் அது தவறுதான். அதைச் செய்வது இந்துத்துவா இயக்கங்கள்தான் என்பது என் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்