உலகில் எல்லா தீமைகளும் மறைந்து போனால் எவ்வளவு ஆக்கபூர்வமான வேலைகள் நடக்க வெளி ஏற்படும். போர்களும் ஆயுத உற்பத்தியும், ஒருவரை ஒருவர் வெறுத்தலும், கோபமும், ஆத்திரமும் மறைந்து விட்டால் ஏற்படும் வெற்றிடத்தில் ஆக்க சக்தி நிரம்பி வழியும். கண்ணுக்கு கண் என்று ஒருவரை ஒருவர் குருடாக்கிக் கொண்டிராமல் ஏதாவது ஒரு இடத்தில் திசை திரும்பி எல்லா மாந்தரும் ஒரே திசையில் தமது முயற்சியைச் செலுத்தினால் வானை அளப்பதும் விண்மீன்களில் குடியிருப்புகளை உருவாக்குவதும் மனிதனுக்கு முடியாமலா போகும்!
நம்முடைய ஆற்றல்கள் வெவ்வேறு திசைகளில் திரும்பி பிளவுபட்டுக் கிடக்கின்றன. இரும்புத்துண்டில் அணுக்களின் ஈர்ப்பு விசைகள் எதிரெதிர் திசைகளில் நோக்கிக் கொண்டிருப்பதால் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுகின்றன. மின்சாரப் பாய்ச்சல் மூலம் எல்லா அணுக்களையும் ஒரே திசையில் மின்ஈர்ப்பை செலுத்தத் தூண்டினால் தனது சுற்றுப் புறத்தை மாற்றி விடக் கூடிய காந்த சக்தி உருவாகிறது.
இது போல உருவான எல்லாக் காந்தங்களும் ஒரே திசையில் நோக்கியிருந்தால் எந்த பெரும் சக்தியையும நகர்த்தி தாம் விரும்பிய நிலைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தமக்கு ஒப்புதல் இல்லாது சக்திகளை எதிர்த்து விரட்டி விடலாம்.
இயற்கையை மனிதன் தனக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ள இது ஒன்றே வழி. ஆழிப் பேரலைகளும், சுழிக்காற்றுகளும் ஒருங்கிணைந்து மனித சக்தியின் முன் ஒரு குழந்தை போல பாசத்தோடு கழுத்தைக் கட்டிக் கொள்ளும். ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு எதிரெதிர் திசையில் நின்று கொண்டிருக்கும் மனிதக் கூட்டங்கள்தான் பேரலைகளில் அடித்துச் செல்லப்படுகின்றன. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது பேச்சுப் போட்டிகளில் மட்டும் முழங்க வேண்டிய வெற்றுரை அல்ல.
மனிதன் கடலைத் துளைவ, வானை அளக்க வல்ல ஆற்றலை ஒருங்கிணைக்கும் ஒரே வழி அன்பு வழி. ஒவ்வொரு மனதும் அன்பால் நிரம்பி வழிய வேண்டும். வெள்ளை, கறுப்பு, மஞ்சள், பழுப்பு மனிதர்கள், பலவேறு மதத்தினர், ஏழை, பணக்காரர், பல நூறு மொழி பேசுபவர்கள் ஒவ்வொருவரும் தம்மை இறைவனாகப் போற்றித் தம் சக மனிதர்களையும் தம்மைப் போன்ற மதிப்பினராக நடத்தினால் இது நிச்சயம் நடக்கும்.
முதலாளிக்கு எதிராக தொழிலாளி ஆயுதம் ஏந்த வேண்டும், இந்துவுக்கு எதிராக முஸ்லீமும், முஸ்லீமுக்கு எதிராக கிருத்துவரும், கிருத்துவருக்கு எதிராக இந்துக்களும் கை உயர்த்த வேண்டும் என்ற பேதை தத்துவங்கள் இருக்கும் வரை இங்கு உய்வுக்கு வழியில்லை. அடிப்படையில் தெய்வ இயல்பு படைத்த மனிதர்கள் மனது வைத்தால், நம் வாழ்நாளிலேயே அந்த சொர்க்க பூமியை உருவாக்கி விடலாம். விண்கலத்தில் ஏறி தூரத்து தாரகைகளுக்கு பயணம் செய்து வரலாம்.
அதுவரை சபிக்கப்பட்டவர்களாக இந்த பூமிப்பந்துடன் கட்டுண்டு கிடப்பதுதான் நமது விதியாக இருந்து விடும். நமது மனம் என்னும் பேராற்றலை சரியான திசையில் செலுத்தி அந்த உடோபிய உலகை உருவாக்குவது இன்றைய உலகின் ஒவ்வொரு மனிதப் பிறவியின் கையில் இருக்கிறது. எதுவும் வேண்டாம், சிறப்பாக எதையும் சாதிக்க வேண்டாம். மனதினுள் சின்னதாக ஒலித்துக் கொண்டிருக்கும் நல் வாழ்வை வலியுறுத்தும் குரலுக்கு செவி சாய்த்தால் போதும்.
உலகம் தயாராக இருக்கிறதா அல்லது எள்ளி நகையாடப் படுமா என்பதைக் குறித்தெல்லாம் கவலைப்படாமல் நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டே போக வேண்டும். தயக்கமின்றி செயலில் இறக்கி நல்ல எண்ணங்கள் எல்லா மனங்களிலும் பரவ எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
34 கருத்துகள்:
எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிருச்சு.
ஒரு பொழுது போக்குக்காக பாக்கர படத்துலயே, வர்ணம் பூசி, எங்க எந்த நிறம் இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சு சண்ட வேற போட்டுக்கரோம்.
எங்க வெளங்கப் போறோம் :)
இந்த மே தினத்துக்கான பொருத்தமான பதிவு.
வாழ்த்து(க்)கள் சிவா.
கனவு மெய்ப்பட வேண்டும்.
யுடோ பிய கனவுகளே பெரும்பாலும் வதைமுகாம்களின் விதைகளாக இருக்கின்றன. அவரவர் அடிப்படையில் நேர்மையாக இருந்தால் அதுவே பெரியவிசயம். உடோ ப்பியா படைக்கப்போகிறேன் என்று உண்மைகளை மறைப்பவர்கள் படுகொலைகளுக்கு வெள்ளையடிப்பவர்களாக மாறிவிடுகின்றனர். வார்த்தைகளில் நயமும் நெஞ்சில் நஞ்சும் நேர்மையின்மையுமாக மா.சிவகுமாரைப்போல.
அன்பு நண்பர் திரு. நீலகண்டனுக்கு! மா.சி இந்தப் பதிவில் சக மனிதனுடன் அன்பாயிருங்கள் என்று தானே சொல்லுகின்றார்!
ஜாதிய, மற்றும் மதத்தினால் பிளவு பட்டு கிடக்கும் மனித சக்தி ஒன்று பட்டால் நல்லது,எதையும் சாதிக்க இயலும் என்ற கருத்தைதானே இந்தப் பதிவில் முன்வைக்கின்றார்!
இதி(லும்)ல் எங்கே உங்களுக்கு மட்டும் அவரின் நெஞ்சில் உள்ள நஞ்சும், நேர்மையின்மையையும் தெரிகின்றது?
நல்ல ஒரு பதிவை எதற்காக தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வெட்டித்தனமான விவாதப் பதிவாக மாற்ற முயலுகின்றீர்கள்?
அன்புடன்...
சரவணன்.
சொல்ல மற்ந்துவிட்டேன்!
அனைத்து நண்பர்களுக்கும் உழைப்பாளர்(மே)தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்...
சரவணன்.
//நல்ல ஒரு பதிவை எதற்காக தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வெட்டித்தனமான விவாதப் பதிவாக மாற்ற முயலுகின்றீர்கள்//
100 முறை ரிப்பீட்டு..
வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!
எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.
சகோதரர் மா.சிவகுமார்!
//ஒவ்வொருவரும் தம்மை இறைவனாகப் போற்றித்//
மக்கள் இப்படி கூறுபவர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதே கடந்த கால உண்மைகள்.எனவே இதே வார்த்தைகளை, "....ஒவ்வொருவரும் தனக்கு எதை விரும்புவானோ அதையே பிறருக்கும் விரும்பி தன்னை போன்றே உதிரத்தாலும் உணர்வுகளாலும் படைக்கப்பட்ட மனிதனாக கருதினால் இது நிச்சயமாக நடக்கும்.", இவ்வாறு திருத்தினால்
எங்கள் நண்பனாகிய உங்கள் நண்பன் எனும் சகோதரன் சரவணன் அவர்களே! உங்களின் ஆதங்கமும் வேதனையும் எனக்கு புரிகிறது. ஐயா! ஊர் (மக்கள்) இரண்டு பட்டால் தானே கூத்தாடிக்கு (மனிதகுல விரோதிகள்)கொண்டாட்டம்.
நெஞ்சில் நஞ்சை பற்றி பேசுகிறார் இந்தியாவின் தீவிரவாத இயக்கமான சங்பரிவார சகோதரர் அரவிந்தன். இதைத் தான், "ஊருக்கு தான் உபதேசம் என்று சொல்வதோ?"
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கோஷம் அல்ல, நம் கொள்கை.
ஒன்றுபடுவோம். உறுதி பெறுவோம்.
குறுதியோட்டத்திறக்கு விடை கொடுப்போம்.
வாழத்துக்களுடன்
உங்கள் சகோதரன் நெய்னா முஹம்மது
சர்வேசன்,
//எங்க வெளங்கப் போறோம் :)//
இப்படி மனம் தளர்ந்துட்டா எப்படி? :-)
வாங்க துளசி அக்கா,
//கனவு மெய்ப்பட வேண்டும்.//
கலாம் அவர்கள் சொல்வது போல கனவுதானே மெய்ப்படுதலின் முதற்படி.
அன்புடன்,
மா சிவகுமார்
அரவிந்தன்,
உண்மை நண்பன் சரவணனின் பதிலைப் பாருங்கள், மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்.
நன்றி சரவணன்,
வணக்கமும் நன்றியும் உண்மைத்தமிழன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
நெய்னா அவர்களே,
இஸ்லாத்தின் படி ஒரே இறைவன் என்பதை நம்புகிறீர்கள். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பது எனது நம்பிக்கை.
//ஒன்றுபடுவோம். உறுதி பெறுவோம்.//
கவிஞர் தாகூர் உருவாக்கிய சொற்றொடர் வேற்றுமைகளின் மூலம் ஒற்றுமை (unity through diversity) என்று இருந்ததாம். unity in diversity என்ற வேற்றுமையில் ஒற்றுமையை விட் வலுவானது அது.
வேற்றுமைகளைப் போற்றி ஒற்றுமையை வளர்ப்பதுதான் இந்தியப் பண்பாடு, அதை பாதுகாப்போம்.
நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
" வார்த்தைகளில் நயமும் நெஞ்சில் நஞ்சும் நேர்மையின்மையுமாக மா.சிவகுமாரைப்போல."
வார்த்தை நயம் இந்த பதிவில், (நஞ்சு என்று சொல்லாவிடினும்)தவறான உடோபிய கருத்துக்களும், நம்பிக்கைகளும் பல முந்தய பதிவுகளில்.
வாங்க சரவணன்!
//ஜாதிய, மற்றும் மதத்தினால் பிளவு பட்டு கிடக்கும் மனித சக்தி ஒன்று பட்டால் நல்லது,எதையும் சாதிக்க இயலும் என்ற கருத்தைதானே இந்தப் பதிவில் முன்வைக்கின்றார்! இதி(லும்)ல் எங்கே உங்களுக்கு மட்டும் அவரின் நெஞ்சில் உள்ள நஞ்சும், நேர்மையின்மையையும் தெரிகின்றது? நல்ல ஒரு பதிவை எதற்காக தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வெட்டித்தனமான விவாதப் பதிவாக மாற்ற முயலுகின்றீர்கள்?//
நல்ல பதிவுதான். ஆனால் சொந்த மாவட்டத்தில் நடந்த விசயங்களையே நேர்மையுடன் பதிவு செய்ய முடியாத மனுசருக்கு வருகிற உட்டோ பியா கனவு ஆபத்துக்குதான் அடிகோலும். யோசித்து பாருங்க...1981 இல் நடந்த இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டை பத்தி அப்படி பேசினவரு அதுக்கு முன்னாடி நடந்த கிறிஸ்தவ ஐக்கிய ஊர்வலத்தை பத்தி சாதிச்ச மௌனத்தில் அலறின நேர்மையின்மையை பாருங்க. அப்புறம் இந்த பதிவுல மக்களே சேர்ந்து வாழுவோம் அப்படீன்னா என்னாங்க அர்த்தம்? ஒண்ணு அடுத்தவனுக்கு அட்வைஸ் கொடுக்கறதுக்கு முன்னாடி நம்ம ஒழுங்கா இருக்கணும் இல்லை அட்வைஸ்லாம் கொடுக்காம நான் நல்லமனுசனா இருக்க முயற்சி பண்றேன் அப்படீன்னு சொல்லணும். ஏதோ தான் பெரிய யோக்கியன் மாதிரி -எழுத்து பூரா பொய்யா புளுகினாலும் காந்திய வாதி மாதிரி- பேசினா "யோக்கியன் வாராறு மக்கா செம்பை எடுத்து உள்ளாற வை" அப்படீங்கிற மரியாதைதான் கிடைக்கும். அதுக்கு பிறகு ஜால்ராக்களுக்கும் வீண் வருத்தம்.
எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் மா.சிவகுமார்!
//கவிஞர் தாகூர் உருவாக்கிய சொற்றொடர் வேற்றுமைகளின் மூலம் ஒற்றுமை (unity through diversity) என்று இருந்ததாம். unity in diversity என்ற வேற்றுமையில் ஒற்றுமையை விட் வலுவானது அது//
"வேற்றுமை மூலம் ஒற்றுமை", இதில் வேற்றுமையை நாமே உருவாக்குவது போல நான் உணர்கிறேன்.
"வேற்றுமையில் ஒற்றுமை", இதில் இயற்கையாகவே நம்மில் அமைந்த வேற்றமையை குறிப்பதாக நான் உணர்கிறேன். அதாவது, ஒருவன் சார்ந்துள்ள இன, மொழி, கலாச்சாரம் போன்ற சமூகம் சார்ந்தவைகள் மனிதன் தன் சுயவிருப்பத்தால் தேர்வு செய்யபட்டவை அல்ல. ஏனென்றால், மனிதன் தான் இந்த பெற்றோருக்கு தான் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்ற விருப்பதில் பிறக்கவில்லை. எனவே இயற்கையாக அமைந்துவிட்ட வேற்றுமைகள் மிகப் பரந்த நாடான இந்தியாவில் அமைந்துள்ளதும் தவிர்க்க முடியாது. அதற்காக அனைத்து இந்தியர்களும் ஒரேவிதமான சமூக கோட்பாடுக்குள் வர வேண்டும் என்று ஒற்றுமையை காரணம் காட்டி நிர்பந்தித்தால் அது அடக்குமுறையாகி விடும். ஒவ்வொருவருக்கும் அவனவன் சார்ந்துள்ள சமூக அமைப்பு அவனுக்கு முக்கியமானதாகும். அதற்காக நமக்குள் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனோநிலை உருவாகி, அதன் காரணமாக இந்தியா சிதறுண்டுவிடவும் கூடாது. இவற்றையெல்லாம் சிந்தித்து தான், நமது சுதந்திர போராட்ட வீரர்கள், தன்னலமற்றவர்களாக சிந்தித்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின் அடிப்படையில் "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் தாரக மந்திரத்துடன் அரசியல் சாசனத்தை அமைத்தார்கள். அந்த பெரும் தியாகிகளுக்கு தான் தெரியும் எப்படிபட்ட அரும் தியாகத்தால் இந்தியாவின் சுதந்திரம் பெறப்பட்டது. அந்த தியாகத்தை அழித்தொழிக்க சங்பரிவார கும்பல்கள் சிறுபான்மை மக்களை வேற்று மக்களாக பார்ப்பதையும், பொது சிவில் சட்டம் என்னும் அடக்கு முறையை சிறுபான்மை மக்களுக்கு எதிராக உபயோகிக்க முற்பட்டு, ஒன்றுபட்ட இந்தியாவை சிதறுண்டு போவதற்க்கு முயற்சிப்பதை நாமும் கண் கூட கண்டு வருகிறோம். இதை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையுமாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கோஷம் அல்ல, நம் கொள்கை.
ஒன்றுபடுவோம். உறுதி பெறுவோம்.
குரோத விரோதங்களுக்கும், குறுதியோட்டங்களுக்கும் விடை கொடுப்போம்.
எனது கருத்துக்களில் உண்மையிருந்தால் புகழனைத்தும் இறைவனுக்கே!. தவறிருந்தால் என் சிறுமதியால் வந்ததாகும். சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்வேன்.
வாழத்துக்களுடன்
உங்கள் சகோதரன் நெய்னா முஹம்மது
/மனதினுள் சின்னதாக ஒலித்துக் கொண்டிருக்கும் நல் வாழ்வை வலியுறுத்தும் குரலுக்கு செவி சாய்த்தால் போதும்.
/
சரியாக சொன்னீர்கள், சிவக்குமார்!
நல்ல பதிவுக்கு நன்றி!
"மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்."
இது பாரதியின் பிராத்தனை மட்டும் அல்ல... நம்முடைய பிராத்தனைகளாகவும் இருக்கட்டுமே !
அரவிந்தன்,
மாசி கருத்துக்கு எதிராய் உங்கள் கருத்துக்களை உங்கள் பதிவில் சொல்லிவிட்டாயிற்றே? அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியானதாயில்லை என நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் இந்துத்துவாவும் ஒரு யுட்டோப்பியன் கருத்தாக்கம்தான். இதுதான் எல்லாவற்றிற்கும் சிறந்த வழி என உணராமலா நீங்கள் அதை தூக்கிப் பிடிப்பீர்கள்?
//நம்முடைய ஆற்றல்கள் வெவ்வேறு திசைகளில் திரும்பி பிளவுபட்டுக் கிடக்கின்றன. இரும்புத்துண்டில் அணுக்களின் ஈர்ப்பு விசைகள் எதிரெதிர் திசைகளில் நோக்கிக் கொண்டிருப்பதால் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுகின்றன. மின்சாரப் பாய்ச்சல் மூலம் எல்லா அணுக்களையும் ஒரே திசையில் மின்ஈர்ப்பை செலுத்தத் தூண்டினால் தனது சுற்றுப் புறத்தை மாற்றி விடக் கூடிய காந்த சக்தி உருவாகிறது.///
அருமையான வரிகள்...
நன்றி
அனானி, அரவிந்தன்,
என்னைப் பொறுத்த வரை நேர்மையாக எனது அனுபவங்களைப் பதிவு செய்தேன். யாரோ செய்த பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு என்னால் எனது அறிவை அடகு வைத்துக் கொள்ள முடியாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், மெய்ப்பொருள் காண்பது எமது மரபு.
அரவிந்தன்,
என்னைத் தாக்கி நிலைகுலைய வைக்க முயற்சிப்பதோடு விட்டு விடுங்கள், பிற பதிவர்களைத் தாக்கும் உங்கள் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். புரிதலுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
நண்பர் நெய்னா அவர்களே,
//ஒன்றுபடுவோம். உறுதி பெறுவோம்.
குரோத விரோதங்களுக்கும், குறுதியோட்டங்களுக்கும் விடை கொடுப்போம்.//
முற்றிலும் உடன்படுகிறேன்.
வேற்றுமை மூலம் ஒற்றுமை குறித்து தெளிவாக விளக்கத் தவறி விட்டேன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்றால் பக்கத்து வீட்டுக் காரரின் தனி இயல்புகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று பொருள், வேற்றுமையின் மூலம் ஒற்றுமை என்றால் அவரது தனி இய்ல்புகளைப் போற்றி மதிக்கிறேன் என்று பொருளாம்.
நீங்கள் சொல்வது போல் பொருள் கொண்டுதான் நமது தலைவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையை என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
உங்களுக்கு எனது வணக்கங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
தென்றல்,
யுகக் கவிஞனின் அழியா வரம் பெற்ற வரிகள். இந்த உறுதியைக் கைக் கொண்டால் எந்த சோதனையையும் நாம் எதிர்கொள்ளலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி சிறில் அலெக்ஸ்.
நன்றி மங்கை. அன்பே ஆற்றல்களை ஒருங்கிணைக்கும் மின்சக்தி, இல்லையா!
அன்புடன்,
மா சிவகுமார்
//என்னைத் தாக்கி நிலைகுலைய வைக்க முயற்சிப்பதோடு விட்டு விடுங்கள், பிற பதிவர்களைத் தாக்கும் உங்கள் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். புரிதலுக்கு நன்றி.//
யாரையும் நிலைகுலைய வைக்கும் நோக்கம் எனக்கில்லை மா.சி. WCC இல் இன்று மிசிநரி தரிசன முகாம். எந்த விதத்தில் எல்லாம் மதமாற்றம் நடத்தலாம் என்று படு சத்தமாக வெளிப்படையாகவே பேசிக்கொண்டிருந்தார்கள். உங்கள் நண்பன் வழக்கமாகவே அங்கே போவேன் என்று சொன்னதால் இன்றைக்கும் அங்கு போய் பார்க்க சொன்னேன் அவ்வளவுதான். நீங்கள் வேறெப்படியோ விசயத்தை பொருள் எடுத்துக்கொண்டீர்கள் போலும் (ஏப்ரல்,மே ஐயா)
//என்னைப் பொறுத்த வரை நேர்மையாக எனது அனுபவங்களைப் பதிவு செய்தேன். யாரோ செய்த பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு என்னால் எனது அறிவை அடகு வைத்துக் கொள்ள முடியாது.//
சொல்லுகிற பொய்யையும் சொல்லி அது எப்படிப்பட்ட பொய் என்பதனை தெள்ளத்தெளிவாக காட்டிய பிறகு இப்படி ஒரு 'மீசையில் மண் ஒட்டவில்லை' தேவையா?
//என்னைப் பொறுத்தவரையில் இந்துத்துவாவும் ஒரு யுட்டோப்பியன் கருத்தாக்கம்தான். இதுதான் எல்லாவற்றிற்கும் சிறந்த வழி என உணராமலா நீங்கள் அதை தூக்கிப் பிடிப்பீர்கள்?//
இந்துத்வா உடோ ப்பியன் கருத்தாக்கம் அல்ல. இந்து ராஷ்டிரம் என்பது அடையவேண்டிய இலக்கு குறித்ததல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் உணர வேண்டிய தேசிய யதார்த்தம். இதுதான் வழி என இந்துத்தவம் கூறவில்லை. நாளைக்கு அனைத்து மக்களும் இது இந்து ராஷ்டிரம்தான் என்று உணர்ந்தால் உடனே பாலும் தேனும் ஓடும் என எவரும் கூறிடவில்லை. பிரச்சனைகள் இருக்கும். அவற்றினை தீர்ப்பதற்கான முயற்சிகளும் இருக்கும். தேசியம் என்பது மானுடத்தில் கரைய வேண்டும் எனும் நோக்கும் இந்துத்வத்திடம் இருக்கிறது. ஆனால் அதற்கும் அது இதுதான் பாதை என எதையும் வகுக்கவில்லை. அதே நேரத்தில் இந்த பாதையை தவிர வேறுபாதையில்லை என கூறும் பாசிச போக்குகளை அது ஒறுக்கிறது.
அரவிந்தன்,
இது குறித்த பின்னூட்டங்களை இந்த இடுகையில் தவிர்த்து விடுங்கள். ஆர்எஸ்எஸ் குறித்த இடுகையில் தொடரலாம்.
உங்கள் நண்பன் குறித்த எனது, உங்கள் வாக்கியங்களை நீக்கி விடுகிறேன். புரிதலுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
என்ன நடக்குது இங்க?
//ஏப்ரல்,மே ஐயா)??
:((((
அரவிந்தன்! இன்று நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலில் 1008 பொங்கல்பானை வைத்து விழா நடந்ததே! வந்தீர்களா? எங்காவது தென்படுவீர்கள் என்று பார்த்தேன்!
//யுகக் கவிஞனின் அழியா வரம் பெற்ற வரிகள்//
யு மீன் முண்டாசு வந்தேறி அப்படீன்னு உங்க சகோதரர்கள் அன்போட அழைத்த (அப்படி அழைச்சதையும் நீங்க புரிஞ்சிருப்பீங்க...ஹி ஹி அப்சலை பகத்சிங்கோட ஒப்பிடுற உங்க பெரிய மன்சு ஆருக்கு வரும் அப்படியே காந்தியோட சில எக்ஸ்பிரிமெண்ட்ஸை நொய்டா கொலைகாரனோட ஒப்பிட்டுடாதீங்க சாமி தாங்காது!) பாரதியாரையா யுக கவிஞர் அப்படீன்னெல்லாம் புகழுதீங்க....பார்த்து பார்த்து உங்க சகோதரர்கள் மனசு புண்பட்டிர போகுது.
//அரவிந்தன்! இன்று நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலில் 1008 பொங்கல்பானை வைத்து விழா நடந்ததே! வந்தீர்களா? எங்காவது தென்படுவீர்கள் என்று பார்த்தேன்!//
இல்லீங்க...ஒரு காலத்துல ஐயா அங்கே ரெகுலரா ஆஜராயிட்டிருந்தேனாக்கும். ஹும் அது ஒரு காலம்.
அரவிந்தன்
கீழுள்ள பதிவைப் படித்தீர்களா?
http://vanajaraj.blogspot.com/2007/04/exposed-again.html
உண்மை நண்பன், அரவிந்தன்,
நாகர்கோவில் குறித்த நினைவுகளுக்கு நன்றி.
அரவிந்தன்,
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்று ஒரு குறள் படித்திருக்கிறோம் இல்லையா :-) (தமிழ் புத்தகங்களும் படிப்பீர்கள் அல்லவா? ;-)
அன்புடன்,
மா சிவகுமார்
//அரவிந்தன்,
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்று ஒரு குறள் படித்திருக்கிறோம் இல்லையா :-) (தமிழ் புத்தகங்களும் படிப்பீர்கள் அல்லவா? ;-)//
அதென்ன அப்படி கேட்டுவிட்டீர்கள்...நானென்ன பாரத மக்களை ஒட்டுண்ணிகள் என்று சொல்லுகிற மானம்கெட்ட வர்க்கமா? கட்டாயமாக தமிழ் நூல்களைத்தான் அதிகம் படித்திருக்கிறேன். 'தமிழ் படிப்பாயா?' என்று கேட்ட தமிழ் புலவரே பூஞ்சாற்று கௌணியன் விண்ணந்தாயன் சொன்னதை கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.'மெய் அன்ன பொய் உணர்ந்து பொய் ஒராது மெய் கொளீஇ' என்கிற பாடலை நன்றாக பொருள் உணர்ந்து படித்திருக்கிறேன். எனவேதான் உங்களைப்போன்ற போலி காந்திய தோல் போர்த்திய இந்திய எதிர்ப்பாளர்களை இனம் கண்டுகொள்ள முடிகிறது. :))))))
//அரவிந்தன்
கீழுள்ள பதிவைப் படித்தீர்களா?
http://vanajaraj.blogspot.com/2007/04/exposed-again.html //
படித்தேன் அலெக்ஸ். இதற்கான பதிலை நான் எழுதி அது இரண்டு வாரங்கள் முந்தைய விஜயபாரதத்தில் கூட வெளியாயிற்று இன்னும் என் வலைப்பதிவில் ஏற்றவில்லை சோம்பல்தான் காரணம். செய்கிறேன்.
அரவிந்தன்,
உங்கள் பரவலான வாசிப்புக்கு பாராட்டுக்கள். இன்னும் விரிவாக்கி மனதையும் விசாலமாக்கிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
//இன்னும் விரிவாக்கி மனதையும் விசாலமாக்கிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் :-)//
முதலில் அடுத்தவனை சரியாக எடை போடாமல் மட்டம் தட்டுவது அப்புறம் வழிந்தபடி 'உங்க மனசை விசாலப்படுத்துங்கள்' என paternal அட்வைஸ் பண்ணுவது...ஏன் மா.சி முதலில் உங்களை குறைந்தபட்ச நேர்மையான ஆசாமி ஆக்கிய பிறகு அடுத்தவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கலாமே! :-))))))))))
//முதலில் அடுத்தவனை சரியாக எடை போடாமல் மட்டம் தட்டுவது அப்புறம் வழிந்தபடி 'உங்க மனசை விசாலப்படுத்துங்கள்' என paternal அட்வைஸ் பண்ணுவது...ஏன் மா.சி முதலில் உங்களை குறைந்தபட்ச நேர்மையான ஆசாமி ஆக்கிய பிறகு அடுத்தவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கலாமே//
அரவிந்தன்,
நீங்கள் எழுதியதுதானே!
அன்புடன்,
மா சிவகுமார்
some arguments about Gandhiji and
partition at :
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_30.html
கருத்துரையிடுக