முதல் இரண்டு வரிசைகளில் இருக்கும் 50 பகுதிகள் பொருளாதாரவியலை நான் புரிந்து கொண்ட அளவில் விளக்குகின்றன.
மூன்றாவது வரிசையில் இருக்கும் 12 பகுதிகள் பொருளாதார சமூகம் எப்படி மாறினால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசைகளை வெளிப்படுத்துகின்றன.
பின்னூட்டமிட்டவர்கள் தமது அனுமதியைக் கொடுத்தால், இந்தப் பதிவுகளில் வெளியான பின்னூட்டங்களையும் புத்தகத்தில் தொகுத்து வெளியிடுவது என்று திட்டம். என்னிடம் அஞ்சல் முகவரி இருக்கும் நண்பர்களை தனிமடலிலும் தொடர்பு கொள்கிறேன்.
புத்தக விற்பனையில் வரும் எழுதியவருக்கான பங்கிற்கு மாற்றாக பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் இலவசப் பிரதியும், மின்நூல் வடிவில் இணையத்தில் இலவச தகவிறக்கமும் அளிக்குமாறு, பதிப்பாள நண்பரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
பின்னூட்டமிட்டவர்கள் (யாரும் விட்டுப் போகவில்லை என்று நம்புகிறேன்):
- துளசி கோபால்
- இளா
- கார்த்திக்வேலு
- சிவஞானம்ஜி
- வடுவூர் குமார்
- டோண்டு
- கைப்புள்ள
- டண்டணக்கா
- கவிதா கெஜானனன்
- அருள்குமார்
- சீமாச்சு
- பத்ரி
- கலாநிதி
- நாமக்கல் சிபி
- சிறில் அலெக்ஸ்
- வீரமணி
- Sree
- SP VR சுப்பையா
- ஜயராமன்
- பொன்ஸ்
- பத்மா அரவிந்த்
- வைசா
- எஸ்கே
- பழூர் கார்த்தி
- மயிலிறகு
- tamilreber
- வவ்வால்
- ஜெய்
- Muse
- Vajra
- Sri Rangan
- தென்றல்
- குறைகுடம் (ப்ரசன்னா)
- Indian
- Meenapriya
- Surveysan
- வினையூக்கி
- Bala
- பிரதீப்
- Murthi
- மயூரன்
- நற்கீரன்
- துர்கா
- arasan
23 கருத்துகள்:
//பின்னூட்டமிட்டவர்கள் தமது அனுமதியைக் கொடுத்தால், இந்தப் பதிவுகளில்
வெளியான பின்னூட்டங்களையும்
புத்தகத்தில் தொகுத்து வெளியிடுவது என்று திட்டம்.//
எனக்கும் இந்த எண்ணம் ரொம்ப நாளாவே மனசுலே இருக்கு. எப்படிக் கேக்கன்னு
ஒரு தயக்கம். இப்ப நீங்க கேட்டாச்சு. இதுக்கு என்ன பதில் வருதுன்னு பார்க்கலாம்.
என்னோட அனுமதியைக் கணக்கில் எடுத்துக்குங்க.
சில சமயம் பதிவை விட அதில் வர்ற பின்னூட்டங்களே மிகவும் சுவாரசியம்:-)))
//சில சமயம் பதிவை விட அதில் வர்ற பின்னூட்டங்களே மிகவும் சுவாரசியம்:-)))//
நிச்சயமாக! :-)
உங்கள் அனுமதிக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
எனது அனுமதி தாராளமாக உண்டு. வாழ்த்துக்கள்.
டோண்டு ராகவன்
பாராட்டத்தக்க முயற்சி!
வெற்றி பெற வழ்த்துகள்!
இம்முயற்சியில், பின்னூட்டங்களையும் சேர்ப்பதன் மூலம்,என்னையும் சேர்த்துக்கொள்வதற்கு,
என் நன்றி!
நன்றி. வாழ்த்துக்கள் சிவா. பொருளாதார கட்டுரைகள் மிக அருமையாகவே இருந்தன. எளிய உதாரணங்களோடு.
அட என் பேரு கூட இருக்கு. count mine too.
Dear Shiva,
I feel you must still develop a
deeper understanding of economics, esp about free market capitalism,
the fallaces and problems of
socialism (as practised in India
until 1991), the crony capitalism,
and license, permit raj that exisited.
The sub-title of your blog itself
is a socialistic slogan and utopian
but impractiable. everyone cannot
get or have everything. Of course
dire poverty should be abolished and the living conditions of the
bottom most should be tolerable and
reasonable. and those who work hard
and are ambitious and skilled should have enough oppurtunities to
come up in life. (say, like in developed nations like US or Europe)...
You must read Rajaji's works on this vital subject. and about Swathanthra Party's (which he founded in 1959) valiant efforts in
fighting licsene raj and other evils perpetuated by a 'socialistic' congress.
Pls see
http://rajaji.net/Rajaji-Original/frame.htm
My pet passion is economic issues.
And i try to create awareness about
the effects of deficit financing
that is printing of some 90,000 crores of legal tender every year
by the govt to bridge its chronic
deficits. it is the major cause for
inflation and higher interst rates.
My favourite economic authors are :
Milton Friendman,
Henry Hazlitt (Economics in one lesson)
Hayek (the road to serfdom)
Ludwig von Mises (Human Action).
Also pls see mises.org &
capitalism.org
Anbudan
athiyaman.blogspot.com
Some good Indian blogs on this
subject are :
http://indianeconomy.org/
http://www.swaminomics.org/
http://www.bankerinindia.typepad.com/
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள் சிவகுமார்!
ரொம்ப எளிமையா எழுதிருக்கீங்க!
(ஒரு கேள்வி கேட்டு பதிலை படிக்கிறதுக்கு முன்னால நீங்க மூணு, நாலு பகுதி எழுதிறீங்க... கலக்குங்க!)
அட.... என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி!
டோண்டு சார்,
உங்கள் ஆசீர்வாதம் எனது மகிழ்ச்சி.
சிவஞானம்ஜி ஐயா,
உங்கள் பின்னூட்டங்கள் இந்தத் தொடரின் முதுகெலும்பு போல, அவற்றைச் சேரப்பதால் மதிப்பு பெரிதும் உயர்ந்து விடுகிறது. நன்றி.
பத்மா,
உங்கள் வாழ்த்துக்களும் ஊக்கமளிப்பும் பல கட்டங்களில் எழுந்து நிற்க எனக்கு உதவியிருக்கின்றன. அதற்கும் சேர்த்து நன்றிகள்.
அதியமான்,
கற்றது கைம்மண்ணளவு என்பதை நான் உணர்கிறேன். எளிமையான பொருளாதாரத் தத்துவங்களைப் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதில் இது போன்ற அறிவுச் செல்வங்களும் சேரும்.
வினையூக்கி,
சம்மதத்துக்கு நன்றி.
தென்றல்,
பாராட்டுக்கு நன்றி. நீங்களும் பின்னூட்டம் போட்டிருந்தீர்கள், ஒரு வேளை மறந்து விட்டிருப்பீர்கள் :-).
அன்புடன்,
மா சிவகுமார்
தென்றல்,
தோல் துறை பற்றிய 3-10 வரையிலான பத்து பகுதிகளும் ஒரே மூச்சில் மே 1ம் தேதி அதிகாலையில் 2 மணி நேரம் எழுதியது. அதை 8 பகுதிகளாகப் பிரித்து பதித்தேன்.
இன்று காலையில் ஒரு மணி நேரம் எழுதி அடுத்த 5 இடுகைகளை தயார் செய்து விட்டேன். அதனால் கேள்விக்கும் பதிலுக்கும் நடுவில் எழுதுவது இல்லைதான் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
சிலகுறைகள் இருப்பினும் நல்ல எளிய தொடர் அது மாசி. முன்னமே சொல்ல வேண்டுமென நினைத்தேன். வாழ்த்துக்கள். முடிந்தால் காந்திய பொருளாதார மேதை ஜோசப் குமரப்பாவின் பார்வைகளை இணைக்க முயலுங்கள். விரைவில் நூல் வர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி அரவிந்தன்.
காந்தியைப் பற்றி எழுதுவதை சில காலம் தள்ளிப் போட்டிருக்கிறேன். சில மாதங்களுக்குப் பிறகு நான் உணர்ந்தவற்றை எழுத முயல்கிறேன்.
காந்தியின் எழுத்துக்களை, கடிதத் தொகுப்புகளைப் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் பிரமிப்பு ஏற்படுகிறது.
'இப்படி ஒரு மனிதர் இந்த பூமியில் நடந்தாரா என்று வரும் சந்ததியினர் வியப்பார்கள்' என்று ஐன்ஸ்டைன் சொன்னாராம். அந்த வியப்பை அவரது வாழ்க்கை விபரங்களும் படைப்புகளும் எனக்குத் தந்து கொண்டிருக்கின்றன. அந்த வியப்பு தணிந்த பிறகு அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள். என் பின்னூட்டத்துக்கு ராயல் 'டீ' நாயர் கடையில் வாங்கித் தருவதாயிருந்தால் போடலாம்.
:)
கலக்குங்க.
ஏம்பா, நான் காந்தியக் கொன்னப்புறமும் ஏம்பா அவரு பத்தி எளுதுறீங்க? அட போங்கப்பா. இரு இரு மோடிய கூப்புடுறேன்.
//காந்தியைப் பற்றி எழுதுவதை சில காலம் தள்ளிப் போட்டிருக்கிறேன். சில மாதங்களுக்குப் பிறகு நான் உணர்ந்தவற்றை எழுத முயல்கிறேன்//
உங்கள் புரிதல் திறனுக்கு என் வந்தனங்கள். நான் கூறியது காந்தியைக் குறித்தல்ல. காந்திய பொருளாதார சிந்தனை - குறிப்பாக ஜோஸப் குமரப்பாவின் பொருளாதரங்களின் இயற்கை குறித்து. நன்றி. இதற்கு மேல் வளர்க்க விரும்பவில்லை.
வாழ்த்துக்கள் மா.சி.
நன்றி பாலா,
சிறில்,
டீக்கு உத்தரவாதத்துடன் உங்கள் அனுமதியைப் பெற்றுக் கொள்கிறேன் :-)
"எம் எஸ் கோல்வல்கர்",
கிண்டலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், காந்தி இறந்த பிறகும் அவரது கொள்கைகள் உலகை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அரவிந்தன்,
உங்கள் கருத்து புரிகிறது. காந்தியைப் புரிந்து கொள்ளாமல் காந்தீயப் பொருளாதாரம் குறித்து எப்படி புரிந்து கொள்ள முடியும் என்பது எனது எண்ணம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி சந்தோஷ்.
அன்புடன்,
மா சிவகுமார்
மிக்க பயனுள்ள முயற்சி.வாழ்த்துக்கள் சிவா.உங்களின் பொருளாதார கட்டுரை புத்தகத்தில் எனது பெயரும் இடம் பெறும் வாய்ப்புக்கு மிக்க நன்றி.உங்கள் பணி சிறக்க மன நிறைவோடு வாழ்த்துக்கள்.நன்றி.
ஸ்ரீ ஐயா,
மிக்க நன்றி.
உங்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் என்னை என்றும் சிறப்பிக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி, சிவகுமார்.என்னுடையதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி பிரசன்னா,
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக