புதன், மே 02, 2007

நல்லதைச் செய்வோம்

தனிமனிதர்களாக நமது வாழ்க்கைக்குக் கிடைத்துள்ள மூலப் பொருட்கள் நமது உடலும், அறிவும், அனுபவமும்தான். அதை பயனுள்ள சேவையாக வழங்குவதன் மூலம் நமது ஊதியத்தைப் பெறுகிறோம்.

நமது நேரத்தை எவ்வளவு பயனுள்ளதாகப் பயன்படுத்துகிறோமோ, வீணாக்கலை எவ்வளவு குறைக்கிறோமோ, நமது நேரத்தின் மதிப்பை எவ்வளவு அதிகமாக்கிக் கொள்கிறோமோ நமக்குக் கிடைக்கும் ஆதாயமும் அவ்வளவு அதிகமாகும்.

நாம் சோம்பேறியாக இருந்து விட்டால் தென்கொரியாவில் இருக்கும் இன்னொரு மாணவன் நம்மை விட திறமையாகச் செயல்பட்டு நமது வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டு விடுவான். இதுதான் உலகமயமாக்கலின் சிக்கல்.

தனிமனிதர்களும் சரி, நிறுனங்களும் சரி, தொழிலாளிகளும் சரி, தொழில் முனைவோரும் சரி, தமது பழம்பெருமையில் சோம்பி இருந்து விட முடியாது.

ஒரு அரசு தனது உள்கட்டமைப்பைப் புறக்கணித்து, நாட்டு மக்களின் நல வாழ்வைக் கவனிக்காமல் எல்லோருக்கும் இலவசத் தொலைக்காட்சி வழங்குவதில் தனது வருமானத்தைச் செலவிட்டால். அதே வருமானத்தை உருப்படியான பணிக்குப் பயன்படுத்தும் இன்னொரு நாடு இந்த நாட்டை முந்திச் சென்று விடும்.

ஒரு ஊரின் மக்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு, சாதியின் பெயரால் சக மனிதனை அடக்கிக் கொண்டு இருந்தால். அப்படிச் செய்யாத ஊர் முன்னேறிச் சென்று விடும்.

இந்தியா ஆயிரம் ஆண்டுகளாக வறுமையில் உழன்று கொண்டிருப்பதன் காரணம், படையெடுத்து வரும் வீரர்களிடம் எல்லாம் தோற்று மண்டியிட்டதன் காரணம் நம்முள் இருக்கும் பிணிகளே தவிர, வெளியிலிருந்து யாரும் நம்மை இப்படி நசுக்கி வைத்திருக்கவில்லை என்று உணர்ந்து கொள்ளலாம்.

அழிவு வாதிகளை அழிவு வழிக்குப் போகாமல் தடுக்க முடிந்தால், ஒன்று பத்தாக முடிந்தால் ஒரு சில மாதங்களில் முழு உலகும் மாறி விட முடியும். நல்ல ஒரு சேதியை உரக்கச் சொன்னால் அது பல காதுகளுக்குப் பரவி, அந்த மனங்களுக்குள் புகுந்து, இன்னும் உரத்த சிந்தனைகளாக வெடித்து உலகையே மாற்றி விட முடியும்.

அதே போலத்தான் தீய செய்திகளும். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். நெருப்பைப் போலப் பரவக் கூடியது தீமை.

எந்த எண்ணமும் - நல்லதோ, தீயதோ - சரியாகச் சொல்லப்பட்டால் காட்டுத் தீ போலப் பரவக் கூடியது.

35 கருத்துகள்:

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//இந்தியா ஆயிரம் ஆண்டுகளாக வறுமையில் உழன்று கொண்டிருப்பதன் காரணம், படையெடுத்து வரும் வீரர்களிடம் எல்லாம் தோற்று மண்டியிட்டதன் காரணம் நம்முள் இருக்கும் பிணிகளே தவிர, வெளியிலிருந்து யாரும் நம்மை இப்படி நசுக்கி வைத்திருக்கவில்லை என்று உணர்ந்து கொள்ளலாம்.//
ஆயிரம் ஆண்டுகள் நாம் ஒன்றும் தோற்று மண்டியிடவில்லை சிவகுமார். இது மற்றொரு மாயை. பாரசீக சௌராஷ்டிர மதம் போன்று, கிரேக்க பாகனீயம் போன்று நம் பண்பாடு அழித்தொழிக்கப்படவில்லை. மாறாக இன்று வரை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து நின்று போராடுகிறது. இத்தனை தொடர்ச்சியான போராட்டம் யூததேசத்தை தவிர வேறெதற்கும் இல்லை எனலாம். ராணா கும்பா, ராணா சங்கா, பிரதாபசிம்மன், ஹரிஹர புக்கர், குரு கோவிந்த சிங், மகாராஜா ரஞ்சித் சிங், சத்ரபதி கார்வேலர், வீர சிவாஜி, வீர சத்ரசால், கனோஜி ஆங்க்ரே, பாஜி ராவ், விவேகானந்தர், அய்யா வைகுண்டர், குருநானக், கபீர்தாஸர், சுவாமி தயானந்தர், ஜான்ஸி ராணி நேதாஜி, மகாத்மா என நீளும் அந்த பட்டியலின் வீரமும் ஞானமும் இந்த தேசத்தை மகத்தான தியாகத்தினாலும் வீரத்தினாலும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் உட்பகையையும் வெளிப்பகையையும் ஒருங்கே வெற்றி கொண்டவர்கள். பாரதம் எவனிடமும் தோற்று மண்டியிடவில்லை.

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

அரவிந்தனின் வாதமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என்றாலும் உங்களுடைய பதிவு நல்ல சிந்தனையை தூண்டுகிறது.

இன்றைய என்னுடைய தி.பா தொடரிலும் இந்தியா இன்னும் ஏன் வளரும் நாடாகவே இருந்துவருகிறது என்பதற்கான ஒரு காரணத்தையும் அலசுகிறது..

உழைப்பு மட்டும் போறாது, ஆக்கபூர்வமான உழைப்பும், உறுதியான தொலைநோக்கும், இவற்றையெல்லாம் விட செய்யும் எதிலும் நேர்மையும் மிக, மிக அவசியம் என்பதை அனுபவம் எனக்கு உணர்த்தியிருக்கிறது.

இது போன்ற ஆக்கபூர்வமான பதிவுகளை கேலி, கிண்டல், நையாண்டி, பிறரை பழித்தல் என்பது போன்ற பதிவுகளுக்கிடையில் நீங்கள் தொடர்ந்து எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது..

வாழ்த்துக்கள் சிவா..

பெயரில்லா சொன்னது…

நல்லவை எது , தீயவை எது?

கவிதா | Kavitha சொன்னது…

//எந்த எண்ணமும் - நல்லதோ, தீயதோ - சரியாகச் சொல்லப்பட்டால் காட்டுத் தீ போலப் பரவக் கூடியது.//

உண்மை, நல்லதாக இருந்து விட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, தீயவையும் நல்லதை விட வேகத்தில் பரவுவதால், அதை தவிர்ப்பது நலம்.

நல்ல பதிவு நன்றி

லக்ஷ்மி சொன்னது…

//இது மற்றொரு மாயை. பாரசீக சௌராஷ்டிர மதம் போன்று, கிரேக்க பாகனீயம் போன்று நம் பண்பாடு அழித்தொழிக்கப்படவில்லை. மாறாக இன்று வரை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து நின்று போராடுகிறது. இத்தனை தொடர்ச்சியான போராட்டம் யூததேசத்தை தவிர வேறெதற்கும் இல்லை எனலாம். // இது உண்மைதான் அரவிந்தன். ஆனால் ஒவ்வொரு முறையும் அத்தகைய போராளிகள் தோல்வியுற்றதன் பின்னணி என்னவென்று பாருங்களேன் - அது சிவகுமார் சொல்வது போல உட்பிணிகளாகிய பங்காளிச்சண்டை, சுயநலம் என்பது போலவே இருக்கும். ராஜபுத்திர வரலாற்றிலேயே எத்தனை மித்ர துரோகங்களும் சகோதர துரோகங்களும் உண்டென்று எண்ணிப்பாருங்கள். அவற்றைத்தான் சிவகுமார் குறிப்பிடுவதாக நான் கருதுகிறேன். நல்ல சிந்தனை சிவகுமார்.

பெயரில்லா சொன்னது…

//நாம் சோம்பேறியாக இருந்து விட்டால் தென்கொரியாவில் இருக்கும் இன்னொரு மாணவன் நம்மை விட திறமையாகச் செயல்பட்டு நமது வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டு விடுவான். இதுதான் உலகமயமாக்கலின் சிக்கல்.//

இது தவறான சிந்தனை சிவா

சோம்பேரியாக இருந்து வாய்ப்பை இழந்துவிட்டு உழைத்தவன் மேல் பழி போடுவது சரி அல்ல. சோம்பேரியாக இருந்து வாய்ப்பை இழந்தால் உலகமயமாக்கல் காரணமாகாது. அதுக்கு உனது சோம்பேரித்தனம்தான் காரணம். இது உலகமயமாக்கலின் வரமே, சிக்கலோ சாபமோ அல்ல. உழைப்பை துண்டும் உலகமயமக்கல் மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதே.

கணியன் பூங்குன்றனார் அழகாக கூறியது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா,
நாதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னாது என்றலும் இலமே, பின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(கணியன் பூங்குன்றன், புற நானூறு, 192).

The Sages

To us all towns are one, all men our kin,
Life's good comes not from others' gifts, nor ill,
Man's pains and pain's relief are from within,
Death's no new thing, nor do our blossoms thrill
When joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much-praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightning's flash from darkened skies.
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise !
We marvel not at the greatness of the great;
Still less despise we men of low estate.

Kaniyan Poongundran, Purananuru - 192
(Translated by G.U.Pope, 1906)

பெயரில்லா சொன்னது…

//நமது வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டு விடுவான். இதுதான் உலகமயமாக்கலின் சிக்கல்.//

உன்னோட வாய்ப்புன்னு சொன்னது ரொம்ப நக்கல்.

கோவி.கண்ணன் சொன்னது…

மாசி,

அருமையான கட்டுரை எளிய முறையில் அழகாக எழுதி இருக்கிங்க.
பயனுள்ள அறிவுரைகள்

ஜோ/Joe சொன்னது…

//ஒரு ஊரின் மக்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு, சாதியின் பெயரால் சக மனிதனை அடக்கிக் கொண்டு இருந்தால். அப்படிச் செய்யாத ஊர் முன்னேறிச் சென்று விடும்.//

மிகச்சரியான கருத்து .சீனா நம்மை விட வேகமாக முன்னேறி செல்வதற்கு காரணமே இது தான் .

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

இந்தியாவின் பண்பாட்டு ஆழங்கள் நம்மைக் காத்து வருகின்றன என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் கடந்த 1000 ஆயிரம் ஆண்டுகளில் நமது கையளிப்பாக உலகில் பயன்படுத்தப்படும் கோட்பாடுகள், பொருட்கள் என்ன?

என்னைக் கேட்டால் காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தவிர்த்து வேறு எதுவும் தென்படவில்லை.

அமெரிக்க பங்களிப்பான கணினியில் வேலை செய்கிறோம், ஃபின்லாந்து நிறுவனம் விற்கும் செல்பேசியில் பேசுகிறோம். மேனாட்டு தொழில்நுட்பங்களை உள்ளூரிலேயே நகல் செய்து விட்டதாக மருந்துகள், ராக்கெட்டுகள் தயாரிக்கிறோம்.

ஆயுதங்கள் கூட வெளிநாட்டு தயாரிப்புகள், தொழில் நுட்பங்களில்தான் கிடைக்கின்றன.

இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம். நமது மன வளமும் பண்பாட்டுச் செறிவும் இதை விட பல மடங்கு உயர்ந்த இடத்தை அடைய தகுதியுடையவை. எது நமமைத் தடுத்து நிறுத்துகிறது?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//உழைப்பு மட்டும் போறாது, ஆக்கபூர்வமான உழைப்பும், உறுதியான தொலைநோக்கும், இவற்றையெல்லாம் விட செய்யும் எதிலும் நேர்மையும் மிக, மிக அவசியம் என்பதை அனுபவம் எனக்கு உணர்த்தியிருக்கிறது.//

ஜோசப் சார்,

சத்தியமான வரிகள்.

ஒவ்வொரு அடியிலும் சரியான ஆக்க பூர்வமான முடிவெடுத்தலும், தனிநபர் நேர்மையும் இன்றியமையாதவை.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//நல்லவை எது , தீயவை எது?//

அனானி,

அது உங்களுக்கே தெரியும். நேர்மையாக உண்மையாக யோசிக்கும் போது எது நல்லது என்று தோன்றுகிறதோ அது நல்லது, அல்லது தீயது. குழப்பமே இல்லை,

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கவிதா,

//உண்மை, நல்லதாக இருந்து விட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை,//

பொய்மையும் வாய்மையிடத்த என்கிறீர்களா? :-)

நன்றி லக்ஷ்மி,

நமது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் பெருமைகளை இழந்து விட்டோம் என்றுதான் நினைக்கிறேன்.

அனானி,

//அதுக்கு உனது சோம்பேரித்தனம்தான் காரணம். //

நானும் உங்கள் கருத்தையேதான் நம்புகிறேன்.

நக்கல் நமசிவாயம்,

நக்கல் புரியவில்லையே :-)

நன்றி கோவி கண்ணன்,

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//சீனா நம்மை விட வேகமாக முன்னேறி செல்வதற்கு காரணமே இது தான்//

அதுவும் ஒரு பெரிய காரணம்தான். ஆனால் சீனாவில் இல்லாத சிறப்புகள் நம்மிடம் இருப்பதும் உள்ளது.

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம்.//
மிகவும் சரியாக சொன்னீர்கள் சிவகுமார். நீங்கள் சொல்வதை ஒத்துக்கொண்டுதான் ஆக்க வேண்டும். ஜகதீஷ் சந்திரபோஸ் உயிரி-இயற்பியலுக்கு அளித்த அடிப்படையான பங்களிப்பையும், (2001 இல் நோபெல் பரிசு கொடுக்கப்பட்ட கண்டுபிடிப்பான) போஸ்-ஐன்ஸ்டைன் கண்டன்ஸ்டேட் நிலை பொருண்மையின் இருப்பை பல பத்தாண்டுகளுக்கு சத்தியேந்திரநாத் கணித்தறிந்ததையும், எத்தனையோ வளரும் நாடுகளில் மேற்கத்திய இறக்குமதி போர்களின் கண்ணி வெடிகளால் எத்தனையோ இலட்சோப-இலட்சம் குடும்பங்களின் வீடுகளுக்கு விளக்கேற்றி வைத்திருக்கும் ஜெய்ப்பூர் செயற்கை கால்களையும் அதனை மேலும் இலகுவாக்கிய போலி யூரித்தேன் தொழில்நுட்பத்தை அளித்த இஸ்ரோவையும், அதனை காப்புரிமை ஏதும் வாங்காமல் உலகெங்கும் பயன்படுத்த அனுமதித்து இன்றைக்கும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து பால் கறக்கிற 80 வயது தாண்டிய அந்த ஜெய்ப்பூர் செயற்கைகால்களை கண்டுபிடித்த ஸ்ரீ ராமச்சந்திராவையும், லுக்கீமியா நோயாளிகளுக்காக ஃபாலிக் அமிலத்தை முதன்முதலாக கண்டுபிடித்த - கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள உயிரி-வேதியியல் ஆய்வகங்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் பரிசோதனை முறையான திசுக்களில் பாஸ்பரஸ் இருப்பதற்கான ஆய்வினை கண்டுபிடித்த - ப்ராட் ஸ்பெக்ட்ரம் ஆண்டிபயாடிக்ஸ் தேர்வில் பெரும் சாதனையை ஏற்படுத்திய -எல்லப்ராத சுப்பாராவையும், பலகோடிக்கணக்கான ஆப்பிர்க்க ஆசிய உயிர்கள் காலராவுக்கு பலியாகமல் காலரா பாக்டீரியத்தின் உயிரிலக்கியத்தை கண்டுபிடித்த சங்கர் தேவையும், இன்றைக்கும் க்வாண்டம் இயற்பியலில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ள திபங்கர் ஹோமையும் ஜியார்ஜ் சுதர்ஷனையும், உலக அளவில் இன்றைக்கு சிறந்ததாக அறியப்படும் பல கோடி வீடுகளில் ஆற்றல் அளிக்கும் சாண எரிவாயு மாடலான தீனபந்து மாடலை அளித்த காந்திய விஞ்ஞானிகளையும் மறந்துவிட்டு, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொண்டுதான் ஆக்க வேண்டும். சிவகுமார் உங்கள் குறுகிய பார்வை என்னை வியக்க வைக்கிறது. தொழில்நுட்பத்தின் பன்மை பரிமாணங்களை கூட அறியாத ஒரு மடையன்தான் பாரதத்தின் மண் சார்ந்த தொழில்நுட்ப பங்களிப்புகளை மறந்துவிட்டு இப்படி பேசுவான். ஜெய்ப்பூர் செயற்கை கால்களுக்கு காப்புரிமை பெற்றிருந்தால் ராமச்சந்திரா இன்று உலகமகா பணக்காரர்களில் ஒருவராகியிருக்க முடியும். நீங்கள் சொல்லுகிற ஒட்டுண்ணி மக்கள் கூட்டத்தில் ஒருவரான அவர் செய்திருக்கும் பங்களிப்பு - ஊனமுற்ற எத்தனையோ ஆப்பிரிக்க ஆப்கானிஸ்தானிய இதர ஆசிய மக்களின் வாழ்க்கைகளில் ஒளி ஏற்றியுள்ளது. இந்த தொழில்நுட்பம் எப்படி உருவானது? எப்படி பரவியது? என்பதனை சிறிது தியானித்தாலே பாரதம் ஒட்டுண்ணி மக்களின் தேசம் அல்ல என்பது புரியும். உண்மையான காந்தியவாதியான தரம்பாலின் பாரத அறிவியல் குறித்த நூலை சிறிதே படித்தால் உங்கள் மடத்தனம் விலகலாம்.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
K.R.அதியமான் சொன்னது…

A hypothetical question :
If there were no foreign or
alien invasions and empires
in India (incl Alexander)
and esp the Muslim and British
invasions , would India be
a political union as formed
in 1947 ?

My view is that we would have
become a cluster of nations
like Africa or Europe with
a common culture and heritage
but no political union.

even in 1947, with mass movements
of Congress and awareness of
people, Sardar Patel had a very
tough time in integrating the
reluctunt and rebellioous Princes
and Maharajas with India (or Pak).
Nawab of Hyderabad and Junagedh ;
and Travancore Maharaja with
C.P.Ramasamy Iyer's help
declared independence.....

It is inconceivable that these
warring states (like Chola, Cheras)
would have willingly united to
form unified India.

the British Raj created some very
useful and fruitful institutions
as a side effect. English language,
common civil service, Railways,
Macaluay system of education and
independent judiciary ; and the
rudiments of paliament. We use
the Westminister model of parliamentary democracy with universal adult franchise.

the Bristish empire was bad and
exploitative no douubt. But it
gave us political unity like
never before....

And pls read "The World if Flat"
by Thomas Freidman. an excellent
book for all.

athiyaman.blogspot.com

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

நீங்கள் கொடுத்த பட்டியல் நிச்சயம் பெருமைப்படுவதற்குரியதுதான். இதை விட சிறப்பாக வழங்க நமது பண்பாட்டால் முடியாதா? நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது எது என்பதுதான் என் கேள்வி.

இந்தப் பதிவுக்குப் பொருத்தமில்லாத பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

உங்கள் கருத்துகளுக்கு நன்றி அதியமான்,

வழக்கம் போல மிகத் தெளிவான வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

அருண்மொழி சொன்னது…

//A hypothetical question :
If there were no foreign or
alien invasions and empires
in India (incl Alexander)
and esp the Muslim and British
invasions , would India be
a political union as formed
in 1947 ?//

you should not ask these kind of dumb question. Barath history is billions of years old. Barathan & Sri Rama ruled Barath millions of years ago. Please go & read history properly.

Actually it was british who divided our motherland into pieces & created srilanka, pakistan, bangladesh, nepal, bhutan, afganisthan .....

True patriots have a vision to create the real barath one day.

K.R.அதியமான் சொன்னது…

only dumb people can say that this
question is dumb. Sardar Patel earned his nick name while trying
valiantely to unite the maharajas and princes with India. We would not be what we are today, say from the Gupta period (and the chola, chera, pandiys) of 9th century, there were no alien invations.

First of all withour english, there
would be no communication between TN, Punjab and Assam and Bengal.
Sanskrit was not the common language. it was for the elite of
the elites only.

and all this talk about Ramayana
and Bharatha are only legends. anyway the picture after Aurengazeb, when there was chaos
and anarchy into which the British
stepped in was so different. If there was no British rule in that
crucial period, then there would never have been a unified India of
today. i am not supporting the
British empire, etc, but this is
a accident of history for which we
must be grateful.

Our kings were fighting each other
constantly (read Sangam literature, etc) and there was no need for the British to divide us
as such...

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

Dear athiyaman cannot you see that Arunmozhi is being sarcastic and is supporting you...making a caricature of Hindu stand (which is being wrongly caricatured of course)?

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம்//
இப்படி சொந்த தேசத்தை குறித்து கைகூசாமல் எழுதிய பொய்யரின் பொய்யை தோலுரிக்கவும் பாரதம் அளித்துள்ள நவீன தொழில்நுட்ப அறிவியல் கொடைகளினை குறித்த தொடரின் முதல் கட்டுரையை இங்கே காணவும். இதனை படித்த பிறகாவது 'இந்தியா தனது கொடையாக எதையுமே கொடுக்காமல் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாக' இருப்பதாக பொய்யையும் அவதூறையும் கலந்து தன்னாட்டு மக்கள் மீது வீசியதற்கு மன்னிப்பு கேட்பாரா இந்த போலி காந்தியவியாதி.

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

நான் எழுதியதை அமைதியாக சிந்தித்துப் பாருங்கள், நம்மால் செய்ய முடிவது இவ்வளவுதானா? நமது புராதனச் சிறப்புக்கும், ஆழமான பண்பாட்டுக்கும் இன்னும் சிறப்பாக எவ்வளவு செய்ய முடியும் என்பது எனது ஆதங்கம்.

'எமது நாட்டின், எமது மொழியின், எமது மக்களின் பெருமையைப் பறை சாற்றும் படி ஒன்றையாவது வாழ்நாளில் சாதிப்போம்' என்று உறுதி பூண்டு உருப்படியான வேலைகளில் மட்டும் நேரத்தைச் செலவழித்தால் மட்டுமே நாம் தலை நிமிர்ந்து உலகக் நாடுகளிடையே நிற்க முடியும்.

மென்பொருள் துறையின் வளர்ச்சிக்கு முந்தைய 1990களில் நான் வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது இந்தியா என்றால் பிச்சைக்காரர்கள், பாமபாட்டிகள், தெருவில் செத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்றுதான் பொதுவான பிம்பம் இருந்தது.

சமீப ஆண்டுகளில் இது சிறிதளவேனும் மேம்பட்டிருப்பதன் காரணம் தகவல் தொழில் நுட்பத் துறையில் நமது இளைஞர்கள் உழைப்பையும், திறமையையும் மேனாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைமைதான்.

பேர் சொல்லும் படி எதுவும் இல்லை என்பது எனது கருத்து.

பழம் பெருமை பேசி வாழ்ந்து கொண்டிருப்பதை விடுத்து, நம்மால் முடிந்த ஆக்க பூர்வமான படைப்புகளை உருவாக்க் வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

லெனின் பொன்னுசாமி சொன்னது…

நல்ல பதிவு நீலாந்தா சுவாமிகளே..! மிக்க நன்றி..

மா சிவகுமார் சொன்னது…

பூக்குட்டி,

யாரந்த நீலாந்தா சுவாமிகள்? :-)

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Dear Friends,

Don't let us waste our time and energy in highly personalised attacks against each other.
It is good to have difference of
opinions but argument should be
objective and logical, never calling names.

There are postive and negative aspects in each and every civilisation and nation. India has
contributed a lot to maths, science, astronomy, medicne, etc.
the issue is not about our acheivements but about the structure of the society based on
caste hierarchy, esp in the past two thousand years. In original Hindu concepts, caste was not based on birth but by character and profession. and never so rigid as today. As far as i knew there
are no "Hindus" in my village,
only Gounders, Mudaliyars and
Pallars. No one uses the word Hindu
or identifies with each other as
a Hindu. only caste identiy exists.

We need not take too much pride in our ancient achievements (like the
Hinduthva group does) nor need we
condmemn or degrage anything that is ancient (like the leftists do).
Truth lies somewhere in between and we must try to realise it.

Personally, i am a beliver, read
Gita and other vedic literatute
and as ametuer astrologer. But that
doesn't mean that we have to accept all that is written eons ago at face value.

Anyway all this arguments about
religious identities, culture are
not much relevent today and out
priorities are different with a
billion people and poverty, etc.

athiyaman.blogspot.com

மா சிவகுமார் சொன்னது…

அதியமான்,

வழக்கம் போல உங்கள் கருத்துக்கள் தெளிவானதாக ஆணித்தரமாக உள்ளன. நீங்கள் தமிழிலும் நிறைய எழுத ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//இந்தியாவின் பண்பாட்டு ஆழங்கள் நம்மைக் காத்து வருகின்றன என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் கடந்த 1000 ஆயிரம் ஆண்டுகளில் நமது கையளிப்பாக உலகில் பயன்படுத்தப்படும் கோட்பாடுகள், பொருட்கள் என்ன?

என்னைக் கேட்டால் காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தவிர்த்து வேறு எதுவும் தென்படவில்லை.

அமெரிக்க பங்களிப்பான கணினியில் வேலை செய்கிறோம், ஃபின்லாந்து நிறுவனம் விற்கும் செல்பேசியில் பேசுகிறோம். மேனாட்டு தொழில்நுட்பங்களை உள்ளூரிலேயே நகல் செய்து விட்டதாக மருந்துகள், ராக்கெட்டுகள் தயாரிக்கிறோம்.

ஆயுதங்கள் கூட வெளிநாட்டு தயாரிப்புகள், தொழில் நுட்பங்களில்தான் கிடைக்கின்றன.

இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம். நமது மன வளமும் பண்பாட்டுச் செறிவும் இதை விட பல மடங்கு உயர்ந்த இடத்தை அடைய தகுதியுடையவை. எது நமமைத் தடுத்து நிறுத்துகிறது?//


மா.சி,

சாட்டையடி...!!!! இட்டிலியை கண்டுபிடித்தோம் சட்டினியை கண்டிபிடித்தோம், கண்டுபிடித்தவர் இன்னும் பால் கறந்துகொண்டிருக்கிறார் என்ற அபவாத(தி)ங்களை (டவுசர் பாண்டிகளை என்றும் சொல்லலாம்) ஒதுக்கிடுவோம்...

மா சிவகுமார் சொன்னது…

ரவி,

பெயரில் செந்தழல் என்று சேர்த்துக் கொண்டதால் உங்கள் கருத்துக்கள் அக்கினிக் குஞ்சாகக் காட்டை எரித்துப் போடும் சூட்டுடன் வெளி வருகின்றன.

அறியாமை என்ற காட்டை வெந்து தணிக்க உங்கள் கோபம் பயன்பட வாழ்த்துக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//மென்பொருள் துறையின் வளர்ச்சிக்கு முந்தைய 1990களில் நான் வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது இந்தியா என்றால் பிச்சைக்காரர்கள், பாமபாட்டிகள், தெருவில் செத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்றுதான் பொதுவான பிம்பம் இருந்தது.//
பிரச்சனையே இதுதான். வெள்ளைக்காரன் நம்மை குறித்து என்ன நினைக்கிறான் என்பதுதான் அளவுகோல். இதைத்தான் காந்திஜியும் எதிர்த்தார். பிம்பத்தை விட்டுதள்ளுங்கள். உண்மை என்ன என்பதனை பாருங்கள்.

//சமீப ஆண்டுகளில் இது சிறிதளவேனும் மேம்பட்டிருப்பதன் காரணம் தகவல் தொழில் நுட்பத் துறையில் நமது இளைஞர்கள் உழைப்பையும், திறமையையும் மேனாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைமைதான். //
அதாவது பிம்பம் உடைந்திருக்கிறது. இதுதான் விவாதப்பொருளா? நீங்கள் தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். //இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம்.// என்று. இதைத்தான் இப்போது கேள்விக்கு உட்படுத்துகிறேன். அதாவது இந்தியா தனது கொடையாக எதுவுமே அளிக்காமல் ஒட்டுண்ணியாக வாழ்கிற சமுதாயம் என்பது உங்கள் வார்த்தைகள். தனது சக்திக்கு தகுந்தது போல கொடை அளித்ததா என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் அதற்கு எனது பதில் வேறாக இருந்திருக்கும். ஆனால் உங்கள் வார்த்தைகள் என்ன? இந்தியா தனது கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி என்பதாகும். சுப்பாராவ் ஒன்றும் என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அல்லர். (மற்றபடி இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது போன்ற உங்களது உளறல்கள் எனக்கு ஏற்புடையவை அல்ல. சீண்டத்தகாத அருவெறுப்பானவை அவை.) அவரது செயலாக்கங்கள் அவரது தீவிர அர்ப்பணிப்பு வாழ்க்கை ஆகியவற்றின் பின்னால் இருந்தது பாரதிய கருத்தியல். அதனால் காப்பாற்றப்பட்ட கோடிக்கணக்கான குழந்தைகளை எண்ணிப்பாருங்கள். பின்னர் உங்களுக்கு மனசாட்சி என்று ஏதாவது இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம். என்கிற உங்கள் வாசகத்தை மீண்டும் கூறமுடியுமா பாருங்கள். நிற்க...இவ்வளவுதான் நமது பங்களிப்பா என்கிறீர்கள். அதற்கும் எனது வலைப்பதிவு தொடர் பதில் சொல்லும்.

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//சாட்டையடி...!!!! இட்டிலியை கண்டுபிடித்தோம் சட்டினியை கண்டிபிடித்தோம், கண்டுபிடித்தவர் இன்னும் பால் கறந்துகொண்டிருக்கிறார் என்ற அபவாத(தி)ங்களை (டவுசர் பாண்டிகளை என்றும் சொல்லலாம்) ஒதுக்கிடுவோம்...//

ATP யும், ஃபாலிக் அமிலமும், பாஸ்பரஸ் அறியும் உயிரி-வேதியியல் சோதனையும், கான்ஸருக்கு உதவும் வேதிப்பொருளும், அரியோமைசினும், டெட்ராசைக்கிளின் வேதிப்பொருளும் செந்தழல் ரவிக்கு இட்லியாகவும் சட்னியாகவும் தெரிகிறது போலும். அந்த பார்வை கோளாறை பாராட்ட ஒரு மா.சி வேறு! செந்தழல் ரவி உங்கள் அறிவின்மையை இப்படி விளம்பரம் செய்திருக்கவேண்டாம்.

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

சுப்பாராவ் சாதித்தது இருக்கட்டும். 'அரவிந்தன் தன் வாழ்நாளில் என்ன விட்டுச் செல்லப் போகிறார். சிவகுமார் என்ன விட்டுச் செல்லப் போகிறார' என்று சிந்திப்பது அவசியம் இல்லையா?

குடி உயரத்தானே கோன் உயரும்!

ஒருவருக்கொருவர் இழிவாகத் திட்டிக் கொள்ளும் நேரத்தில் நம் மக்களும் பிற மக்களும் உயரும் வண்ணம் பயன் பெறும் வண்ணம் பணிகளைச் செய்யலாம் என்பது இந்த இடுகையின் என் பின்னூட்டங்களின் நோக்கம்.

இதிலேயே விவாதம் எவ்வளவு ஆக்க பூர்வமாக மாறியிருக்கிறது என்று எல்லா பின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள். அதில் உங்கள் பங்கு என்பதையும் அமைதியாக அலசிப் பாருங்கள்.

கருத்துகளை விமரிசித்து சரியானதாகப் பட்டால் ஏற்றுக் கொண்டு தவறானதாகப் பட்டால் பண்போடு சுட்டிக் காட்டி விவாதிக்கும் அடிப்படை நாகரீகம் கூட இழந்து விட்ட நமக்கு, எங்கோ நாட்டின் மூலைகளில் இருந்து தமது உழைப்பில் நல்ல பலன்களை உருவாக்கி வரும் பெரியவர்களை சுட்டிக் காட்டும் தகுதி கூட இல்லை என்பது எனது கருத்து.

வெள்ளைக்காரன் பாராட்டினால் இழிவு ஒன்றும் இல்லை. மறைவாக நமக்குள்ளே பழம் கதை பேசுவதை விட திறமான புலமை எனில் பிற நாட்டாரும் உணர்ந்து போற்றும் படி இருக்க வேண்டும்.

அது போன்ற சாதனைகளை உருவாக்க உறுதி கொள்ளுவோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

//சுப்பாராவ் சாதித்தது இருக்கட்டும். 'அரவிந்தன் தன் வாழ்நாளில் என்ன விட்டுச் செல்லப் போகிறார். சிவகுமார் என்ன விட்டுச் செல்லப் போகிறார' என்று சிந்திப்பது அவசியம் இல்லையா?//
ம்ஹும் சிவகுமார் உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீர்களா? இந்தியர்கள் ஒட்டுண்ணிகள் எதையுமே கொடையாக அளிக்காதவர்கள் என்று நீர் சொன்ன மானங்கெட்ட புளுகை வெளிப்படுத்தத்தான் நான் சுப்பாராவை உதாரணமாக சொன்னேன். அது பழைய பழங்கதை அல்ல என்பதனை கூட புரியாமல் ஏன் இந்த உளறல்?
//கருத்துகளை விமரிசித்து சரியானதாகப் பட்டால் ஏற்றுக் கொண்டு தவறானதாகப் பட்டால் பண்போடு சுட்டிக் காட்டி விவாதிக்கும் அடிப்படை நாகரீகம் கூட இழந்து விட்ட நமக்கு,//
நம் நாட்டு அண்மைக்கால சாதனைகளைக்கூட மறந்து நம் தேச சமுதாயத்தையே ஒட்டுண்ணி என வர்ணிர்த்த நேர்மையை கூட இழந்துவிட்ட நமக்கு என்று சொன்னால் இன்னமும் சால பொருந்தும் சிவகுமார். மீண்டும் தெளிவாக கேட்கிறேன். கீழே சொன்ன வார்த்தைகள் உங்களுடையவை. இதனை எழுதும் முன்னர் சுப்பாராவும் ஜெய்ப்பூர் செயற்கை கால்களும் அரவிந்த் கண் மருத்துவமனையின் சாதனைகளும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சாதனைகளும் அரவிந்த் கண் மருத்துவமனை இதர வளரும் நாடுகளுக்கு அளித்திருக்கும் சேவைகளைக் குறித்த அறிவும் உங்கள் நினைவில் ஓடியிருந்தால் நீங்கள் கீழ் வரும் மானங்கெட்ட வரியை எழுதியிருப்பீரா?
//இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம்.//
இப்படி அறிவில்லாமல் பாரத சமுதாயத்தை ஒட்டுண்ணி மக்கள் கூட்டம் என வர்ணித்தத்தை விட கீழ்த்தரமாக அப்படி நான் என்ன உங்களை விமர்சித்துவிட்டேன்? இனிமேலாவது அறிவில்லாமல் பயனில்லாத சொற்களை பயன்படுத்துவதை விட்டுவிடுங்கள். ஏனெனில் பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல் என்று சொல்லுகிற குறளை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மக்கட்பதடியாக இல்லாமல் இனியாவது சக இந்தியர்களை மனிதர்களாக (ஒட்டுண்ணிகளாக அல்ல) மதிக்கும் மனிதனாக முயற்சி செய்யுங்கள்.