என்னுடைய நல்லதைச் செய்வோம் என்ற இடுகையின் பின்னூட்டங்களில் ஒன்றில்் 'வெளி நாட்டு உழைப்பில்/அறிவில் உருவான பொருட்களையும் சேவைகளையும் பயன்படுத்திக் கொண்டு நமது பங்களிப்பாக எதையுமே அளிக்காத ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாக வாழ்கிறோம்' என்று எழுதியிருந்தேன்.
'இந்தியாவிலிருந்து மனித குலம் முழுமைக்கும் பயன்படும் வகையில் உருவான படைப்புகள், பிற நாடுகள் உருவாக்கிய படைப்புகளை நாம் பயன்படுத்தும் அளவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவானது. இன்னும் பெருவாரியானவர்கள் உருப்படியான புதியவற்றை படைத்தால்தான் நமது கடன் தீரும்' என்பதை வலியுறுத்தும் நோக்கில் அப்படி எழுதியிருந்தேன்.
ஆனால், எழுதியிருந்த வாக்கியம், 'இந்தியாவில் யாருமே அப்படிப் பங்களிப்பதில்லை' என்று பொருள் படும்படி அமைந்து விட்டது. அதற்காக எனது வருத்தங்களும், அப்படிப் பங்களிக்கும் பெரியவர்களிடம் எனது மன்னிப்புகளும்.
அரவிந்தன் ஏற்கனவே எழுதிய பட்டியலுடன் என்னுடைய சேர்க்கைகள்:
- அநீதியை எதிர் கொள்ள கத்தியின்றி ரத்தமின்றி தம் பக்கம் நியாயம் இருக்கும் மக்கள் தமது மனத் தூய்மையாலும், உறுதியாலும் போராட்டம் நடத்த மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட சத்தியாக்கிரக முறை.
- பல ஆயிரம் மக்களுக்கு பொருளாதார ஆதரவு அளிக்கும் வகையில் பல நாடுகளில் பயன்படுத்தப்படும், பங்காள தேசத்தைச் சேர்ந்த மொகம்மது யூனுஸ் உருவாக்கிய மைக்ரோ கிரெடிட் முறை.
- பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது நாட்டின், சமூகத்தின் கடன் என்று காமராசரால் தொடங்கப்பட்டு எம்ஜிஆரால் விரிவு படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் உலக வங்கியால் ஏற்கப்பட்டு பிற பகுதிகளிலும் பரிந்துரைக்கப்படுகிறது.
- பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர் என்று இல்லாமல் இணைந்து வாழும் வசதி செய்து கொடுத்த முனைவர் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசமைப்புத் திட்டம் பல வகை மக்கள் கூட்டங்கள் சேர்ந்து வாழத் தலைப்படும் பிற நாடுகளுக்கு வழி காட்டியாக உள்ளது.
- தமிழரும் நாகரீகமும (பொதுவுடமை)
தீயவை தீய பயத்தலால் தீயவற்றை தீயினும் கொடியதாக அஞ்சி ஒதுக்கி ஆக்க பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுவோம்.
57 கருத்துகள்:
//தீயவை தீய பயத்தலால் தீயவற்றை தீயினும் கொடியதாக
அஞ்சி ஒதுக்கி ஆக்க பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுவோம்.//
அப்படியே வழிமொழிகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் மா சிவகுமார் அவர்களே!
//இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம். நமது மன வளமும் பண்பாட்டுச் செறிவும் இதை விட பல மடங்கு உயர்ந்த இடத்தை அடைய தகுதியுடையவை. எது நமமைத் தடுத்து நிறுத்துகிறது?//
உலக மக்கள் தொகையில் 6ல்1 பங்கு நமது மக்கள் தொகையாகும். அகில உலக அரங்கில் நமது பங்களிப்பு அதிகப்படியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், நமது மக்கள் வளத்தையும், இயற்கை வளத்தையும், நாகரிக பண்பாடு (அறிவு, மன முதிர்ச்சி) வளத்தையும் வைத்து பார்க்கும் போது, உலக சமூகத்திற்க்கு நமது பங்களிப்பு, மிக் குறைவானதே என்பது எனது கருத்தாகும். இந்த அடிப்படையில் அமைந்த சுயவிமர்சனமாக தான் உங்களுடைய கருத்தை நான் பார்க்கிறேன். அந்த கருத்து சுயப்பரிசோதனையின் விளைவாக வந்த சுய விமர்சனமாக நான் காணுகிறேன். இந்த கருத்தால் நமது நாட்டை நீங்கள், கேவலப்படுத்தியதாகவோ குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகவோ, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியதாகவோ என்னால் உணர முடியவில்லை. உங்களின் அந்த கருத்து, நமது முன்னேற்றத்திற்க்கு வினையூக்கியாக தான் அமையுமே தவிர, நம்மை நாதே தாழ்த்தியதாக ஆகாது.
இந்த அடிப்படையில், எல்லா வளங்களையும் பெற்றிருக்கும் போது, நாம் (இந்தியர்) ஏன் மேற்கத்திய உலகத்தை விட அதிகமாகவோ அல்லது அதற்கு நிகராகவோ சாதனைகளை உலக அரகில் நிகழ்த்தி காட்ட முடியவில்லை என்னும் சுயப்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அந்த சுயபரிசோதனையின் முடிவில் நமது சமூகத்திற்க்கு எதிராக குற்றசாட்டுகள் (ஆட்சி செய்பவர்களின் அவலம், புறையோடி போன ஊழல், ஆராய்ச்சி பணிகளுக்கு நமது நாடு செய்து தரும் வசதி வாய்ப்புகள்...) எழும். இவைகள் தான் எனது முன்னேற்த்திற்கான தடைகளாக இருக்கின்றன என்று பட்டியலிட்டால், உடனே நயவஞ்சகர்கள், போலி தேசிய பற்றாளர்கள், நம்மை (சுயவிமர்சனம் செய்பவனை)ஏதோ தேச விரோதியாக எடுத்து காட்டி, நம்மை தேச துரோகியாக, குற்றாவாளிகளாக, சித்தரிப்பார்கள். ஏதோ அவர்கள் (சுயபரிசோதனை செய்யாதவர்)தான் நாட்டுபற்றாளர்கள் போன்றும், சுயபரிசோதனையும், சுயவிமர்சனமும் செய்பவர்களை தேச விரோதிகளாகவும் குறை கூறுவார்கள். இவர்கள் தான் நயவஞ்சகர்கள், தேச விரோதிகள். சுயபரிசோதனையும், சுயவிமர்சனமும் நமது குறைகளை போக்கி முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்லும். அதை விடுத்து பழம் பெருமைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு, நமக்கு நாமே திருப்தியடைந்து கனவு கண்டு கொண்டிருக்க சொல்லும் இந்த போலி நாட்டு பற்றாளர்கள் தான் தேச விரோதிகள்.
இந்த அடிப்படையில் உங்களது மன்னிப்பு நமது முன்னேற்றத்திற்க்கு தடையாக இருப்பதோடு, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தவறிழைப்பவன் தான் மனிதன். பொரும்பாலும் மனிதர்கள் தனது தவறுகளை ஒத்து கொள்வதில்லை. தனது தவறுகளை ஓத்து கொண்டு வருந்தி மன்னிப்பு கோறுபவன் மனிதருள் புனிதன்.
ஆதமின் மக்கள் தவறிழைப்பவர்களே. அவர்களில் சிறந்தவன் வெய்த தவறுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருபவன். (நபி மொழி).
ஆனால், செய்யாத தவறுக்கு வருந்தினால்,அது தாழ்வு மனப்பான்மையை தான் கொண்டு வரும். மக்களை அடிமைப்படுத்தும் உயர்வு மனப்பான்மை கொண்ட கும்பல்களின் ஒரு தந்திரம் தான் மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவது. அதனால் தான் நமது முன்னோர்கள் பிறபட்ட மக்களாக, தாழ்த்தபட்ட மக்களாக மனித விரோத கும்பல்களால் நடத்தப்பட்டார்கள். எனவே, நமது செயல்பாடுகளை குற்றமாக சித்தரித்து மன்னிப்பு கோர வைப்பது, நம்மை தாழ்வு மனப்பான்மையாளர்களாக ஆக்கி மீண்டும் பிற்படுத்த பட்டவர்களாக ஆக்க முயலும் சதியாகும். அதற்கு பலியடா ஆகி விடாதீர்கள் என்பதே எனது ஆலோசனை. இந்த அடிப்படையில் தங்களது //இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம். நமது மன வளமும் பண்பாட்டுச் செறிவும் இதை விட பல மடங்கு உயர்ந்த இடத்தை அடைய தகுதியுடையவை. எது நமமைத் தடுத்து நிறுத்துகிறது?// கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை. ஆகையால், உங்களுடைய மன்னிப்பு பதிவை மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.
எனது கருத்துகளில் உண்மையிருக்குமானால், புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால், அது என் சிறுமதியால் விழைந்ததாகும். அதனை சுட்டிகாட்டினால், மன்னிப்புகோரி திருத்தி கொள்வேன்.
நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
உங்கள் சகோதரன் நெய்னா முஹம்மது
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர் சிவகுமார் அவர்களுக்கு,
பணிவான வணக்கங்கள்.
தங்கள் பார்வையின் தவறினை சுட்டிக்காட்டவே சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள். பாரதத்தின் அனைத்துமக்களும் நல் வாழ்வு வாழ வேண்டும் எனும் எண்ணத்தில் நாம் மனதால் ஒருங்கிணைகிறோம். தங்கள் பெருந்தன்மையான பண்பினால் உயர்ந்து நிற்கும் தங்களுக்கு எனது வணக்கங்கள்.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்.
மா.சிவகுமார் குறித்து
உங்கள் ஆதங்கம் புரிகிறது மா.சிவகுமார்.
நம் ஒவ்வொருவர் உள்ளும் குறைந்த பட்சம் ஒரு திறமையாவது புதைந்து இருக்கிறது. அதை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே இங்கு முக்கியம் வாய்ந்தவை.
பெரியவர்கள் காமராசர் ஆகட்டும் அல்லது அம்பேதகர் பெரியார் ஆகட்டும், இவர்கள் தனிமனிதாக இருந்து எதையும் சாதித்துவிடவில்லை. இவர்கள் சார்ந்திருந்த சமுதாயத்தின் மொத்த மனநிலையின் வெளிப்பாடே இவர்களின் கொள்கைகளும் குணங்களும். இச்சமுதாயங்கள் உருவாக்கிய பிரதிநிதிகளே இவர்கள். எனவே திறமையானவர்கள் உருவாக அதற்கேற்ற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் உருவாக்கித்தர வேண்டும். தடைகள் உடைத்தெறியப்பட வேண்டும். வசதி உள்ளவர்களும் ஆதிக்கர்களும் தங்களது மனக்கண்களைத் திறந்து வெளிச்சக்திகளை திறமைகளை இனம்கண்டு ஆவன செய்தல் நன்று.
இந்தியாவில் இருந்து மனிதகுலம் முழுமைக்கும் பயன்படும் மற்றவைகள் யோகாசனம், தியானம், புத்தம், எண்களில் உள்ள பூஜ்யம் மற்றும் தற்போது வழக்கத்தில் உள்ள அரபு எழுத்துக்கள் என தவறாக கருதப்படும் அனைத்து எண்களும் ...
முதலில், இந்திய குடியரசுக்கு என்ன வேண்டும், அதன் கொள்கைகள் என்ன, போக இருக்கும் வழி என்ன, கையில் உள்ள பலம் யாது, வசதிகள் குறைபாடுகள், தடங்கல்கள், அடைய வேண்டிய குறிக்கோல், காலம், நேரம் ... போன்றவைகளை பொது மக்கள் முன் சமர்ப்பிக்கப் படவேண்டும். இது எதையும் செய்யாமல் எதையாவது எப்படியாவது செய் என விட்டுவிட்டால் போகும் திசை அறியாமல் மக்கள் பேதமையில் காலம் முழுதும் மூழ்கிக் கிடந்து பூச்சிகள் வாழ்க்கை வாழ்ந்து மடியவேண்டியது தவிர்க்க முடியாதது.
எதற்குமே அடிப்படை திட்டமிடுவது அவசியம். இதில்லாமல் எதுவுமே சாத்தியமில்லை.
முதலில் நம்முள் ஒலிந்து இருக்கும் பேதம் பார்க்கும் பூதங்களை ஒழித்துக் கட்டுவோம். பிறகு அனைத்திற்கும் வழி பிறக்கும்.
இவ்வுலகின் ஈடினையற்ற அற்புத மக்களான நம் பாரத சமுதாயம் தழைத்து ஒங்குவது நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது.
கண்ணெதிரில், கையில் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க முயற்சிக்க வேண்டாமே!
//அப்படியே வழிமொழிகின்றேன்.//
நன்று துளசி அக்கா,
நெய்னா,
"இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம்."
என்பதைத் தொடர்ந்து
"நமது மன வளமும் பண்பாட்டுச் செறிவும் இதை விட பல மடங்கு உயர்ந்த இடத்தை அடைய தகுதியுடையவை. எது நமமைத் தடுத்து நிறுத்துகிறது?"
என்று எழுதியிருந்தேன்.
முதலில் சொன்ன வாக்கியத்தை மட்டும் எடுத்துப் பார்த்தால் ஒரேயடியாக எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுவ்தாகவே இருக்கிறது.அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லவா!
மற்றபடி நீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். என் நோக்கத்தைச் சரிவர விளக்கியதற்கு நன்றி.
அரவிந்தன்,
புரிதல்களுக்கு நன்றி, உங்கள் பதிவில் எழுதியிருந்தது போல நிதானத்தோடு கருத்துப் பரிமாறிக் கொள்வதும் தமது பிறளல்களை திருத்திக் கொளவதும் அடிப்படை பண்பாடு.
மாசிலா,
//இவ்வுலகின் ஈடினையற்ற அற்புத மக்களான நம் பாரத சமுதாயம் தழைத்து ஒங்குவது நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது. //
இதுதான் நான் சொல்ல வருவதும். பிறரின் சாதனைகளைப் பட்டியல் போடுவதோடு நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவதுதான் நேர்மையான வாழ்க்கையாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
என்ன நடக்குது இங்க? நான் காண்பது உண்மை தானா?"வழக்கம் போல்" இல்லையே!
மன்னிப்புப் பதிவிற்கும், புரிதலுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்!
அன்புடன்...
சரவணன்.
காலையிலிருந்து பல முறை நான் இந்த பதிவை படித்து விட்டேன்..
என்ன சொல்வது என்று தெரியவில்லை
எங்கள் எல்லார் மனதிலும் உயர்ந்து நிற்கிறீர்கள்...நன்றி..
//முதலில் நம்முள் ஒலிந்து இருக்கும் பேதம் பார்க்கும் பூதங்களை ஒழித்துக் கட்டுவோம். பிறகு அனைத்திற்கும் வழி பிறக்கும்.
இவ்வுலகின் ஈடினையற்ற அற்புத மக்களான நம் பாரத சமுதாயம் தழைத்து ஒங்குவது நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது.
கண்ணெதிரில், கையில் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க முயற்சிக்க வேண்டாமே!//
அப்படியே வழிமொழிகிறேன்..
என்ன மதம், இனம், ஜாதி என்பதெல்லாம் பார்க்காமல் இந்த இந்தியனிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை பரிசோதித்து அது ஆரம்பக் காலத்திலாக இருந்தால் அதனை நம்முடைய சொத்து என வளர்த்து அதை நாட்டுடமையாக்கி அதனை அவனால் பெருமைப்படுத்தி, அவனையும் கெளரவப்படுத்தினால் இந்தியாவுக்கு சிறந்த அறிஞர்களும், விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் கிடைப்பார்கள்.
முதலில் திருந்த வேண்டியது நமது அரசுகள்தான். மக்கள் அல்ல. அரசுகள் திருந்தினால் ஒழிய, மக்கள் திருந்த மாட்டார்கள்.
மா.சி. ஸார்.. ஆரம்பத்துல படிச்சப்போ நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அப்புறம் வார்த்தைகளின் தன்மையைப் பார்த்து 'மேட்டர்' எங்கயோ போகப் போகுதுன்னுதான் தோணுச்சு. திடீரென்று அமைதிப் பூங்காவிற்கு திசை திரும்பியது தங்களுடைய பெருந்தன்மையால்தான்.. நன்றி.. நன்றி.. நன்றி..
நன்றி சரவணன், மங்கை.
உண்மைத் தமிழன்,
//அதனை நம்முடைய சொத்து என வளர்த்து அதை நாட்டுடமையாக்கி அதனை அவனால் பெருமைப்படுத்தி,//
எங்கோ புரட்சிப் பாதையில் போகிறீர்களே!
//முதலில் திருந்த வேண்டியது நமது அரசுகள்தான். மக்கள் அல்ல. அரசுகள் திருந்தினால் ஒழிய, மக்கள் திருந்த மாட்டார்கள். //
இரண்டு பக்கமும் திருந்த வேண்டும். என்னைக் கேட்டால் மக்களிலிருந்துதான் மாற்றம் ஆரம்பிக்க வேண்டும்.
//ஆரம்பத்துல படிச்சப்போ நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அப்புறம் வார்த்தைகளின் தன்மையைப் பார்த்து 'மேட்டர்' எங்கயோ போகப் போகுதுன்னுதான் தோணுச்சு.//
இப்போ அமைதியான சூழலில் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொண்டு உருப்படும் வழியைப் பார்க்கலாம் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்
தாவர அறிவியலில் இந்தியா நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பழங்கள் மூலமாக குறிப்பாக வாழைப்பழத்தின் மூலமாக தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அளிக்க TIFR இல நல்ல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னும் முயற்சி செய்யவேண்டியதும், அரசியல் கலப்பில்லாமல் தகுதியானவரை ஊக்கப்படுத்துதலும் அடிப்படை வசதிகள் நிறைவு பெற செய்தாலும் இன்னும் நலம் பயக்கும்.
வணக்கம் பத்மா,
//தாவர அறிவியலில் இந்தியா நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.//
ஒட்டு வகைகள் கூட இந்தியாவில் நிறைய உருவாக்கப்பட்டன என்று சின்ன வயதில் பாடப் புத்தகத்தில் படித்தது.
//இன்னும் முயற்சி செய்யவேண்டியதும், அரசியல் கலப்பில்லாமல் தகுதியானவரை ஊக்கப்படுத்துதலும் அடிப்படை வசதிகள் நிறைவு பெற செய்தாலும் இன்னும் நலம் பயக்கும்.//
நிச்சயமாக, எல்லாவற்றையும் விட தனி மனித முயற்சிகளும் நேர்மையும் செய் நேர்த்தியும் நம்மை முன்னேற்றிச் செல்லும்.
அன்புடன்,
மா சிவகுமார்
//தாவர அறிவியலில் இந்தியா நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பழங்கள் மூலமாக குறிப்பாக வாழைப்பழத்தின் மூலமாக தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அளிக்க TIFR இல நல்ல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னும் முயற்சி செய்யவேண்டியதும், அரசியல் கலப்பில்லாமல் தகுதியானவரை ஊக்கப்படுத்துதலும் அடிப்படை வசதிகள் நிறைவு பெற செய்தாலும் இன்னும் நலம் பயக்கும்.//உண்மையில் பலதுறைகளில் இந்தியா வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. இஸ்ரோவின் செய்திருக்கும் சாதனைகளுடன் அதற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையை ஒப்பிட்டால் நாஸாவால் அத்தகைய சாதனைகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஜெய்ப்பூர் செயற்கைகால்கள் செய்ய பாலியூரித்தேன் பயன்படுத்தப்பட்டது இஸ்ரோ ஆய்வகங்களில்தான். இத்தகைய ஒரு சாதனையை நாஸா நிகழ்த்தியிருந்தால் அது குறித்து ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை வரும். பிறகு ஒரு நாவல் வரும். பிறகு ஒரு திரைப்படம் வந்து அதற்கு ஆஸ்கார் கிடைத்திருக்கும். ஆனால் இஸ்ரோவின் இந்த சாதனை - அது ஓசைப்படமால் நிகழ்த்திய சாதனை- நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அறிவியலின் வரலாற்றில் இந்த பூவுலகு சாரா நுண்ணுயிரிகளை கண்டுபிடித்தது முதன்முதலாக இஸ்ரோவின் பரிசோதனை. ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் எனும் பாரத பிரபஞ்சவியலாளர் வடிவமைத்த பரிசோதனை அது. ஆனால் அது அதற்குரிய முக்கியத்துவத்தை பெற்றதா என்றால் இல்லை. நம் பாடநூல்களே நம் சாதனைகளை பேசி நம் குழந்தைகளை ஊக்குவிக்கவில்லையென்றால் வேறு யார் செய்வார்கள்? ஏதோ இந்தியர்கள் என்றாலே இட்லியையும் சட்னியையும் தவிர வேறெதையும் கண்டுபிடிக்காதவர்கள். அவர்களுக்கு பழம்பெருமை பேசத்தான் தெரியும் என குழந்தைகள் +2 முடிக்கும் போது முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மேற்கின் தொழில்நுட்பத்தின் மீது இருக்கும் வியப்பில் நூற்றில் ஒரு பங்கு நம் தேச சாதனையாளர்களின் வியர்வையில் வருவதில்லை. ஹென்ரிச் ஷலைமான் ட்ராயை கண்டுபிடித்தது குறித்து கிடைத்த விளம்பரம் துவாரகையையும் பூம்புகாரையும் எஸ்.ஆர்.ராவ் கண்டுபிடித்ததற்கு கிடைத்ததா என்றால் இல்லை. இந்தியா குறித்து சில பிம்பங்களை சர்வதேச ஊடகம் விரும்புகிறது. அதனை பூர்த்தி செய்யும் இமேஜ்களை அது பிரதானப்படுத்துகிறது. ஆனால் பாரதத்தின் ஆன்மா அந்த பிம்பங்களுக்கு அப்பால் உயிர் துடிப்புடன் இயங்குகிறது. அதனை தரிசிக்கும் பக்குவம் நமக்கு இருந்தால் நாமும் அத்தகைய சாதனைகளை செய்ய அதுவே ஊக்கம் அளிக்கும்.
மன்னிப்பு கேட்கும் உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன் மா.சிவகுமார்.
அதே நேரத்தில் ஒரு கருத்தை சொல்ல வருவதற்கு முன் அது பற்றிய பின்னணி மற்றும் தகவல்கள் பற்றி அறிந்துகொள்வதற்கும், சிந்திப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் நீங்கள் மெனக்கெடுவது இல்லை என்றே தோன்றுகிறது.
ஆர்.எஸ். எஸ். ஆகட்டும், மண்டைக்காடு கலவர வரலாறு ஆகட்டும், இந்த பொறுப்பற்ற சுய தேசிய ஏளனமாகட்டும்: அடிப்படை தகவல் பிழைகள் கொண்ட, படு மேம்போக்கான பதிவுகளாகவே இருந்தன. அரவிந்தன் என்ற ஆளுமை இவற்றுக்கு முனைந்து மறுமொழி தந்ததால், இது வெளிவரவாவது ஒரு முகாந்திரம் உருவாயிற்று. இது உங்கள் பாக்கியம்.
வேறு சில இணைய ஆசாமிகள் போன்று இல்லாமல் நீங்கள் இதை ஏற்று ஒரு நல்ல விவாதம் நடப்பதற்கான சூழல் உருவாகும் சாத்தியங்களை அதிகரிக்கிறீர்கள். இது தமிழ் இணையத்தின் பாக்கியம்.
நிறைய பதிவுகளை எழுதித் தள்ளி மறுமொழிகளில் உழல்வதைக் கொஞ்சம் குறைத்து, உங்கள் வாசிப்பையும், சிந்தனையையும் விஸ்தீகரித்தால் உங்கள் எழுத்துக்கள் இன்னும் பக்குவம் அடையலாம் என்பது என் பணிவான எண்ணம். இதை ஒரு மென்மையான யோசனையாகவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இந்த இடுகைக்கு சற்றும் தொடர்பில்லாத கேள்வியொன்றை மறுமொழியாக்குவதற்கு மன்னிக்கவும்.
தமிழ்மணத்திற்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்கள், சரி. ஆனால் அந்த வில்லையின் பின்னணியில் திராவிடர் கழகத்தின் கொடி (கருப்பின் நடுவில் சிவப்பு வட்டம்) தெரிகிறதே, அப்படியானால் அந்தக் கழகத்திற்கும் உங்கள் ஆதரவு உண்டா? தயைகூர்ந்து இதனைத் தெளிவுபடுத்தினால் தங்களை நான் சரியாக அவதானிக்க ஏதுவாக இருக்கும். அதனால் தங்களுக்கு ஏதும் இலாபமில்லைதான். ஆனால் என் புரிதலுக்காக!!
நன்றியுடன்
எஸ்.கே
"உள்ளத்தனையது உயர்வு"
//பாரதத்தின் ஆன்மா அந்த பிம்பங்களுக்கு அப்பால் உயிர் துடிப்புடன் இயங்குகிறது. அதனை தரிசிக்கும் பக்குவம் நமக்கு இருந்தால் நாமும் அத்தகைய சாதனைகளை செய்ய அதுவே ஊக்கம் அளிக்கும்.//
அதை ஊக்குவிப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும், அரவிந்தன். இந்தக் கூடி வாழும் பண்பாட்டுக்கு அச்சுறுத்தல் எது வந்தாலும் அவற்றுக்கு சரியான பாதுகாப்பு நமது சாதனைகள் மட்டுமே!
அத்தகைய சாதனைகள் நமக்கு மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் போக வேண்டும். இந்த வலைப்பதிவு சேவை கூட அமெரிக்க நிறுவனத்தின் தயவால் நமக்குக் கிடைத்திருப்பதுதானே!
இதை ஒரு முதலீடாகப் பயன்படுத்தி நமது திறமையால் நலம் தரும் பணிகளை செய்து வந்தால், அது சரியான பயன்பாடாக இருக்கும். இல்லா விட்டால், கடன் வாஙகி குடும்பம் நடத்தும் நிலைமையாகத்தான் போய் விடும்.
அன்புடன்,
மா சிவகுமார்
ஜடாயு,
//ஒரு கருத்தை சொல்ல வருவதற்கு முன் அது பற்றிய பின்னணி மற்றும் தகவல்கள் பற்றி அறிந்துகொள்வதற்கும், சிந்திப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் நீங்கள் மெனக்கெடுவது இல்லை என்றே தோன்றுகிறது.//
சிந்திப்பதற்கு நிறைய நேரம் செலவிடுகிறேன். என் அனுபவங்களையும், படித்தவற்றையும் பொருத்தி ஆய்வு செய்து எனக்கு உண்மையாகப் படுவதை மட்டுமே எழுதுகிறேன்.
பின்னணியும் தகவலும் தெரியாதவற்றைப் பற்றி எழுதுவதைத் தவிர்த்து விடுகிறேன். எடுத்துக்காட்டாக, சவுதி அரேபியா பற்றி எழுதுவதற்கு ஒரு முறை ரியாத் போய் வந்த பிறகுதான் துணிவு வந்தது.
//நிறைய பதிவுகளை எழுதித் தள்ளி மறுமொழிகளில் உழல்வதைக் கொஞ்சம் குறைத்து, உங்கள் வாசிப்பையும், சிந்தனையையும் விஸ்தீகரித்தால் உங்கள் எழுத்துக்கள் இன்னும் பக்குவம் அடையலாம் என்பது என் பணிவான எண்ணம்.//
கற்றது கைம்மண்ணளவு என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன் ஜடாயு. இப்போதும் ஒரு மணி நேரம் எழுதினால் இரண்டு மூன்று மணி நேரம் படிப்பதிலும் செலவிடுகிறேன். வாய்பபுக் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கும் மனிதர்களுடன் பேசி அவர்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
உங்களைக் கூட ஒரு முறை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
அரவிந்தன்,
//தாங்காது,//
அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு வேண்டுகோள்.
கருத்துக்களை மட்டும் விமரிசித்தால் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். தனிநபர் விமரிசனங்கள் யாருக்கும் பலன் தருவதில்லை என்பது எனது அனுபவம்.
அன்புடன்,
மா சிவகுமார்
எஸ் கே,
பெரியார் என்ற சமூகப் போராளி ஆரம்பித்த இயக்கம் என்ற வகையில் மரியாதை உண்டு. இப்போதைய அவர்களது நடவடிக்கைள், எனக்குப் புரிந்தவரை சரியாகப் படவில்லை.
நண்பர்கள் உருவாக்கிய வில்லையை அப்படியே எடுத்துப் போட்டுக் கொண்டேன், அவ்வளவுதான்.
அன்புடன்,
மா சிவகுமார்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்
அன்பு சகோதரர் அரவிந்தன் அவர்களே!
உலகத்தில் இரு வகையான விமர்சனங்கள் உண்டு. ஒன்று நன்மையை நாடி, முன்னேற்ற வழிவகையை காண்பதற்காக கூறப்படும் விமர்சனம். இரண்டாவது, சுயவெறுப்பு காரணமாக, கொஞசம் கூட உண்மையில்லாமல் வஞ்சகத்தால் வெளிப்படும் தரக்குறைவான விமர்சனம். முதல் வகை விமர்சனத்துக்கு உதாரணமாக மா. சிவகுமார் உடைய "நல்லதை செய்வோம்" என்ற பதிவை கூறலாம். இரண்டாவது வகை விமர்சனத்துக்கு உதாரணமாக, அரவிந்தன்&நேசக்குமார்& co வின் இஸ்லாத்தின் மீது வைக்கும் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை கூறலாம்.
சகோதரர் அரவிந்தன் அவர்களே! உங்கள் மனசாட்சியிடம் சில கேள்விகள்.
1) இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து விட்ட, தன்னிறைவு பெற்ற விட்ட, நாடாக நீங்கள் கருதுகிறீர்களா?
இதை தான் சகோதரர் சிவக்குமார், நாம் மற்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும் போது எந்நிலையில் இருக்கிறோம் என்பதனை விருப்பு, வெறுப்பு வைக்காமல் நடுநிலையாக யோசித்து பார்க்கிறார். நாம் பெற்றிருக்க வேண்டியவை, சாதித்து இருக்க வேண்டியவை மிகக் குறைவாக உள்ளதே என்னும் வேதனை அவருக்கு வருகிறது. இதன் மூலம் நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது என்னும் கடமை உணர்வு பிறக்கிறது. முன்னேறிய நாட்டின் மக்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே? பின் அவர்கள் முன்னேறியதை போன்று நாமும் ஏன் முன்னேற முடியாது என்னும் உத்வேகம் பிறக்கிறது. இதன் மூலம், நாம் சாதனைகளை செய்ய, என்னென்னவைகள் தேவை? நம்மை சூழ்ந்திருக்கும் என்னென்னவைகள் நமது முன்னேற்றத்திறக்கு தடைகளாக உள்ளன? போன்ற சிந்தனைகள் உள்ளத்தில் எழுகின்றன.
2) இந்த மனநிலை ஒரு தேசபற்றாளனுக்கு வரவேண்டுமா? அல்லது பழம் பெருமைகளை எண்ணி பெருமைபட்டு கொண்டு அந்த கற்பனையிலேயே மூழ்கி மடியும் மனநிலை ஒரு தேசபற்றாளனுக்கு வரவேண்டுமா?
நம்மில் தலை சிறந்த மக்களை (கணிதத்துக்கு இராமனுஜத்தை, அறிவியலுக்கு சர் சிவி ராமனை, தலைமைக்கு காந்தியை, நிர்வாகத்துக்கு காமராஜரை, பகுத்தறிவுக்கு பெரியாரை, விளையாட்டிற்க்கு பிடி உஷாவை…..) நிறைவு கூறப்பட வேண்டும் என்பதில் அணுவளவு கூட எனக்கு கருத்து வேறுபாடில்லை. இதன் மூலம் நாம் நிச்சயமாக பலனடைவோம் என்னும் நம்பிக்கையும் எனக்கு உண்டு. இந்த உத்தமர்களை நினைவு கூறுவதால், நம் சமுதாயத்திற்க்கு இவர்கள் அளித்த பங்களிப்பு நன்றி கூறுவதாகும்.
3) ஆனால், வெறும் புகழ்ச்சி நமக்கு பலனை தர முடியுமா?
தரமுடியாது. அவர்கள் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினைகளே நமக்கு, பலனை பெற்ற தரும். இது சிறந்த தலைமுறைகளை உருவாக்கிட உதவும்.
இன்றைய நவீன உலகத்தில், பொறியியல், தொழில் நுட்பம், மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம், நிர்வாகம், ஊடகம் .... போன்ற பல்வேறு துறைகளில் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமது பங்களிப்ப சதவீதம் எவ்வளவு? பெருமைபடக் கூடியதா?
4) சகோதரர் சிவக்குமார் இதனை எண்ணி, நமது சமுதாயத்தின் மீது அவருக்கிருந்த அக்கறையினால் தானே அவர் தனது ஆதங்கத்தை வெளிப்பாடுத்தினார். இதே உணர்வில் தானே நானும் எழுதி கொண்டிருக்கிறேன். இது தேச துரோகமா? தேசபற்றா?
இதில் கூட மதச் சாயம் பூசும் மத வெறியாளராக அடையாமிட்டு உங்களை நீரே அசிங்கப்படுத்துகிறீர்களே!
நிச்சயமாக, சத்தியமாக முஸ்லிம் நாடுகள் இந்தியாவை விட மிகக் கீழ் நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் வேதனையோடு கூறுவதில் எனக்கு தயக்கமில்லை. இந்தியாவை ஒட்டுண்ணி என்று விமர்சித்தால், முஸ்லிம் நாடுகளை இந்த விசயத்தில் அதை விட மிக மோசமான உதாரணத்தை கொண்டு விமர்சிக்க தகுதியானவர்கள்.
5) சரி. எண்ணெய் வளத்தை வைத்து என்று அரபு நாடுகள் உலக நாடுகளை மிரட்டின? எழுதுவது எல்லாம் செய்தியா? தகவல் என்றால் உண்மையிருக்க வேண்டும் என்ற சலனம் கூட உங்களுக்க கிடையாதா?
அமெரிக்க-ஐரோப்ப கள்ள உறவால் பிறந்த இஸ்ரேலுக்கு, அதர்மமான முறையில் தார்மீக ஆதரவை அமெரிக்க-ஐரோப்பகள் கொடுத்தும், இந்த அநியாயத்திறக்க எதிர்ப்பு தெரிவிக்கம் வகையில் கூட ஒரு வினாடி எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி மிரட்டியதில்லையே? சொல்லப் போனால் வெவ்வேறு பதட்டமான சூழ்நிலைகளின் (இராக் போர்...) போதும், பொருளாதார நெருக்கடி உலக சமுதாயத்தை சூழ வேண்டாம் என்ற அக்கறையால், தங்களது உற்பத்தியை அதிகரிக்க செய்தார்களே தவிர குறைக்கவில்லை. வரலாறு மோசடி செய்யாதீர்கள். சங்பரிவார கும்பலின் தலைமுறை நோயான வரலாற்று மோசடி செய்யும் நோய் உங்களையும் தாக்கியுள்ளது. தகுந்த பரிகாரத்தை எடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
எனது கருத்துகளில் உண்மையிருக்குமானால், புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால், அது என் சிறுமதியால் விழைந்ததாகும். அதனை சுட்டிகாட்டினால், மன்னிப்புகோரி திருத்தி கொள்வேன்.
நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
உங்கள் சகோதரன் நெய்னா முஹம்மது
நெய்னா அவர்களே,
குறிப்பிட்ட அரவிந்தனின் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்.
உங்கள் சிந்தனைத் தெளிவை வியக்கிறேன். தனிப் பட்ட தாக்குதல்களினால் அதிகமாக நிதானம் இழக்காமல், விவாதத்துக்கு எடுக்கப்பட்டுள்ள பொருளை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். கடுமையான சொற்களைத் தவிர்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
// இந்த பொறுப்பற்ற சுய தேசிய ஏளனமாகட்டும்: அடிப்படை தகவல் பிழைகள் கொண்ட, படு மேம்போக்கான பதிவுகளாகவே இருந்தன. //
உண்மை. ஜடாயு சொல்வது சரிதான்.
// என் அனுபவங்களையும், படித்தவற்றையும் பொருத்தி ஆய்வு செய்து எனக்கு உண்மையாகப் படுவதை மட்டுமே எழுதுகிறேன். //
இது காமெடியா இருக்கே. அவர் சொன்னது பற்றி நீங்க எழுதியதில் எந்த ஒரு ஆய்வும் தெரியலையே. காதில் விழுந்ததையெல்லாம் அப்படியே இல்ல எழுதின மாதிரி இருந்தது?
// இப்போதும் ஒரு மணி நேரம் எழுதினால் இரண்டு மூன்று மணி நேரம் படிப்பதிலும் செலவிடுகிறேன். //
இப்போ புரியுது. இந்த மாதிரி ஒரு விகிதத்தை வைத்துக்கொண்டு அரவிந்தன் மாதிரி ஜாம்பவான் கிட்ட எல்லாம் விவாதம் செய்யமுடியுமா?
இதை 1:10 (எழுத்து:படிப்பு) என்ற விகிதத்தில் ஆக்கப் பாருங்க.
இளங்கோவடிகள்,
உங்கள் வரவு நல்வரவாகட்டும். :-)
இனிமேல் அதிகமாகப் படிக்க முயற்சி செய்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்
அன்பு சகோதரர் மா சிவக்குமார் அவர்களே!
நீங்கள் என மீது வைத்திருக்கும் நல்லெண்ணத்திறக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். புகழுக்குரியவன் இறைவன் ஒருவனே.
எது ஒன்றை தனக்கு விரும்புவானே, அதை தனது சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்பது இறைத்தூதரின் கட்டளை. இந்த பண்பை ஈமான் என்று சொல்லப்படும் இறை நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி கூறினார்கள் முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!).
அந்த அடிப்படையில் எனது தன்மானம் பாதுகக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். பிறர் என்னிடம் மனது புண்படும் வார்த்தைகளை கொட்டிவிடக் கூடாது என்று விரும்புகிறேன். மற்றவர்கள் என்னுடன் பாசத்தோடும் பரிவோடும் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே நபியவர்கள் போதனைக்கு ஏற்ப, நான் மென்மையான வார்த்தைகளை உபயோகிக்கவும், தனிப்பட்ட தாக்குதலில்லாமலும், பிறர் தன்மானத்தை நான் ஏளனபடுத்தி விடக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாகவே நடக்கிறேன்.
//கடுமையான சொற்களைத் தவிர்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.//
உங்களுடைய இந்த நினைவூட்டல் இன்னும் எனக்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக உங்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவிக்கின்றேன். எனது கருத்துக்கள் உண்மைக்கு புறம்பாக, நல்லிணக்கத்துக்கு குந்தகமாக இருந்தால் எடுத்து சொல்லுங்கள்.
நன்றியும் வாழ்த்துக்களுடன்
அன்ப சகோதரன் நெய்னா முஹம்மது
ஜாம்பவான், ஆளுமை ;))))
மாசி சார் சிரிக்கத்தான் தோன்றுகிறது. திட்டமிட்ட புளுகர்களுக்கு ஜால்ராக்கள் சூட்டும் பட்டங்கள்.
இப்படி ஒருபக்கத்து புளுகுகளை வாரி இறைத்து ஆதா-ரம் காட்ட வேறு யாரால் முடியும். ஆகவே அவர் ஜாம்பவான் என்பது மெய்தான். இவரால் மூளைச்சலவை செய்யப் பட்ட மூடர்களுக்கு இவர் ஆளுமை தான்.
இந்தப் புளுகு மூட்டைகளின் ஆதாரங்களுக்கு குமரி மைந்தன் வைத்திருக்கும் ஆப்பு பார்த்தீர்களா? ஆதாரம், ஆய்வு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரியாதவர்கள் படித்து புரிந்து கொள்ளட்டும். அதில் அவர் ஆர்எஸ்எஸ்ஸின் புரட்டு வித்தைகளை புட்டு வைத்திருக்கிறார்.
மண்டைக்காடு கலவரத்தின் உண்மை நிலவரத்தையும் நடுநிலையாக ஆய்ந்து விரிவாகவே சொல்லி இருக்கிறார். இந்த அண்டப் புளுகர்களைப் போல ஒருபக்க நியாயம் அவர் பேசவில்லை.
நீங்கள் உண்மையை எழுதியபோது உங்களை தனிப்பட தாக்கியது இவர்களின் நிதானமான எழுத்து என்றால் மதக்கலவரங்களை இவர்கள் எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதற்கு இதற்கு மேல் சான்று தேவையா?
நெய்னா அவர்களே,
இசுரேல் பற்றி, சங் பரிவார் பற்றி எழுதும் போது கொஞ்சம் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதாக எனக்குப் பட்டது.
கீரன்,
நாம் எல்லோருமே ஒரு வகையில் நாம் விரும்புவதை, நமது நம்பிக்கைகளுக்கு ஒத்துப் போவதையே படித்துப் பாராட்ட நினைக்கிறோம்.
எடுத்துக்காட்டாக, ரீடிஃப் டாட் காம்மில் வரும் பின்னூட்டங்களை இப்போதெல்லாம் என்னால் படிக்க முடிவதில்லை. எல்லாமே எனது நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதால் ஒதுக்கி விடுகிறேன் :-)
இது போல ஒவ்வொருவருக்கும் அவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறத்தைப் பொறுத்து ஒவ்வொன்றைப் போற்றவோ தூற்றவோ தோன்றுகிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
கீரன் குறிப்பிட்டுள்ள குமரி மைந்தன் அவர்களின் பதிவுகள் 10 பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன:
முதல் சுட்டி இதோ
மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் மனுசன், மன்னிக்கத்தெரிந்தவன் பெரியமனுசன்
அரவிந்தன் தன் புளுகு மூட்டை அம்பலமாகிவிட்டதால் குமரிமைந்தனை நகைச்சுவைக்காரர் என்கிறாரோ?
"விவிலியம் சித்தரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை" என்று இவர் கூறுவதை நம்பவேண்டும்; ஆனால் குமரிக் கண்டத்தில் ஒட்டகம் இருந்ததாக குமரிமைந்தன் கூறினால் அது நகைச்சுவையாம்.
விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்; ஆனால் அது குமரிக்கண்ட கடலோடிகளின் காம்பசின் குறியீட்டு வடிவமே என்று குமரிமைந்தன் கூறுவது நகைச்சுவையாம். குமரிமைந்தன் குமரிக் கலவரத்தை மத சாயம் பூசப்பட்ட சாதிக் கலவரம் என்றதனால் தன் கதை எடுபடாது என்று அஞ்சி அவர் மீது கிறித்துவ சாயம் பூச நினைக்கிறாரோ?
அன்புள்ள எட்வின்,
நான் என்ன புளுகுகளை எழுதியிருக்கிறேன் என விளக்குவீரா? அல்லது என்னுடைய எந்த வார்த்தைகளை புளுகாக திரு.குமரிமைந்தன் கூறியுள்ளார் என்பதனை தெரிந்து கொள்ளலாமா? சரி குமரிமைந்தனின் ஆராய்ச்சி பார்வையின் ஆழத்தை சிறிதே பார்க்கலாம். பொதுவாக அவரது 'ஆதாரங்கள்' வாய்வழி செய்திகளுக்கு அப்பால் செல்லாமல் நின்று விடுகின்றன. அதையாவது இந்த மனிதர் சரிபார்த்தாரா என்றால் அதுகூட இல்லை. உதாரணமாக செவி வழி செய்திகளை ஐயா அடுக்குகிறார் பாருங்கள்: "மண்டைக்காட்டுக் கோயிலின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை மாதா கோயிலை நோக்கித் திருப்பிவைத்து இந்து மதப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டனவாம். அதற்கு எதிர்ப்பாக மாதா கோயில் ஒலிபெருக்கி அம்மன் கோயிலை நோக்கித் திருப்பப்பட்டதாம். அதை நிறுத்தும் படி கேட்கப்போன காவலரைத் தாக்கினதால் அவர்கள் சுட்டார்களாம். இது இன்னொரு கதை." (http://kumarimainthan.blogspot.com/2007/05/4.html) இப்படி ஒருவித moral relativism - zeal உடன் 'கதைகளை' அடுக்குகிற இந்த குமரி மைந்தன், சிறிதே நேரம் செலவழித்து மண்டைக்காட்டுக்கு போய் பார்த்திருந்தால் அங்கே இருப்பது 'மாதாகோவிலா' குருசடியா என்பது தெரிந்திருக்கும். இந்த இலட்சணத்தில் இருக்கிறது குமரிமைந்தனின் ஆராய்ச்சி பார்வை. இது ஒரு சின்ன சாம்பிள்தான். வதவத என எழுதி தள்ளியிருக்கும் குமரிகண்ட ஒட்டக கண்டுபிடிப்பாளரின் எழுத்துக்களை படித்து ஒவ்வொரு புள்ளியாக இந்த ஆசாமி மறைத்தும் மிகைப்படுத்தியும் கூறிய விசயங்களை ஒவ்வொன்றாக காட்டத்தான் போகிறேன். அதற்கு முன் இந்த குமரி கண்ட புளுகுகளுக்கு வரலாம். மேதாவி குமரி மைந்தனின் குமரிக்கண்ட புளுகுகளை கிழித்து உலரவிட்டு விட்டார் கிறிஸ்டோ பர் ஜெயகரன் என்னும் நிலவியலாளர். அதற்கு உருப்படியான பதிலை இன்னமும் இந்த ஆசாமியிடமிருந்து காணோம். சரி அது போகட்டும் திருவாளர்.எட்வின் என்கிற உங்களது சீர் எப்படி இருக்கிறது என்றால் பரமார்த்த குமரிமைந்தனுக்கு ஏற்ற சீடராகத்தான் இருக்கிறீர். இதோ உங்களது கூற்று: "விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்; ஆனால் அது குமரிக்கண்ட கடலோடிகளின் காம்பசின் குறியீட்டு வடிவமே என்று குமரிமைந்தன் கூறுவது நகைச்சுவையாம்." ஆகா ஐயா குமரிக்கண்டத்தை குமரி மைந்தன் 'கண்டுபிடித்ததை'விட பெரிய கண்டுபிடிப்பையா இது. இதோ எனது எழுத்துக்கள்: "...இந்த இயா தெய்வம் தன் தூதுவர்களை உலகெங்கும் அனுப்புகிறது. இந்த தூதர்களில் முதன்மையானவன் ஓயன்னஸ் (Oannes) என்பவர் ஆவார்...." என கூறும் நான் தொடர்ந்து கீழ் குறிப்பில் எழுதுகிறேன்: "...மேலும் ஓயன்னஸுக்கும் விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்துக்கும் கூட இணைகளை காண முடியும்." அதாவது புரிகிற விதத்தில் (ஹும் இப்படி தெள்ளத்தெளிவாக எழுதியதையும் 'புரிகிற' விதத்தில் சொல்ல வேண்டி இருக்கிறது.) சொல்வதாக இருந்தால் விஷ்ணுவின் அவதாரம் குறித்த புராணத்திற்கும் சுமேரிய தொன்மக்கதைக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். அதாவது ஒரு இந்திய கடவுள் குறித்த புராணத்துக்கும் சுமேரிய தெய்வத்தின் தூதன் குறித்த சித்தரிப்புக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். ஒரு தீவிர வைணவருக்கு சங்கடம் ஏற்படுத்துகிற சமாச்சாரம் இது. ஆனால் எட்வினுக்கு இது 'விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்' என நான் கருதுவதாக ஆகிவிடுகிறது. சரி ஏன் எட்வின் சார் உங்களுக்கு இந்த எரிச்சல்...ஒருவேளை "விவிலியம் சித்தரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை" என்று இவர் கூறுவதை நம்பவேண்டும்" என்கிற உங்கள் ஆத்திர வரிகளில் பூனை வெளியே வருகிறதோ? குமரிக்கண்ட கப்பல்களில் காம்பஸ்...:-)))) கிரேக்க .அண்டிகைதிரா அமைப்பு கூட கிமு(BCE) 150-100 என்கிறார்கள். நம்ம குமரிகண்ட காம்பஸ் எந்த காலம் எட்வின் சார்? நல்ல சிரிப்பு காட்டுறீங்க.
அரவிந்தன் நீலகண்டன்
அரவிந்தன்,
நிதானமாக சொற்களைக் கையாளாமல் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடும் பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்.
இனிமேலும் இது போன்ற பாணியில் எழுதத் தோன்றும் போது உங்கள் பதிவிலேயே போட்டுக் கொள்ளுங்கள். இங்கு வந்து எழுதி, அதை நான் நீக்கும் வேலை எதற்கு!
கருத்துக்களை மட்டும் விவாதிக்கும் பின்னூட்டங்களுடன்
மட்டும் உங்களுக்கு என்றும் வரவேற்பு உண்டு.
அன்புடன்,
மா சிவகுமார்
அரவிந்தன் அய்யா
நானும் உங்கப்பக்கம்தான். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நாசரெத்திலே பிறந்து வளர்ந்தவன்.
இந்துகிறுத்துவ மோதல்களை சிறுவயதிலிருந்தே கண்டு வந்திருக்கிறேன். என்
குடும்பத்திலே பலரும் சங்கத்துடன் தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள்
என்பதால் சங்கத்தில் பலரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும்.
அவர்கள் தனிப்பட்ட முறையிலே நல்லவர்களாய் இருந்தாலும் மோதல் என்று
வந்தால் கிறுத்துவர்களை விட தீவிரமான வன்முறையாளர்களாய் இருப்பதைப்
பார்த்து மிகவும் பயந்து போனதுண்டு. அதனாலேயே சங்கத்தை விட்டு விலகி
இருக்கிறேன்.
எனக்கு சிறுவயது முதலே சிவாஜி படங்கள் என்றால்
உயிர். 'தங்கங்களே நாளைத் தலைவர்களே' என்ற பாட்டைக் கேட்டிருப்பீர்கள்.
அதிலே 'நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்' என்ற வரியைக்
கேட்டால் இன்றும் அழுது விடுவேன். காந்தியைத் தாத்தாவாகவும் நேருவை
மாமாவாகவும் நெருக்கமாய் உணரும் அளவிற்கு எந்தத் தலைவரையும் நினைக்க
முடியவில்லை. தலைவர் ராஜீவ் அவர்கள் இந்த இடத்தை நிரப்பி இருப்பார்.
ஆனால் அவரும் வன்முறைக்குப் பலியானது சோகம்.
வளரும் தலைவர் ராகுல் அவர்கள் இந்த வெற்றிடத்தை நிச்சயம் நிரப்புவார்
என்று நம்புகிறேன். அவர் உபி தேர்தல் பிரச்சாரத்திலே பேசியதைக் கேட்டதும்
எனக்கு இந்த நம்பிக்கை வலுத்திருக்கிறது.
'என் தந்தையார் ராஜிவ் உயிருடன் இருந்திருந்தால் அயோத்தியாவிலே பாபர்
மசூதியை நிச்சயம் இடிக்க விட்டிருக்க மாட்டார்' என்று ராகுல் அவர்கள்
சொன்னது சத்தியம். இந்தியாவிலே மதநல்லிணக்கமும், தேசிய ஒருமைப்பாடும்
என்றும் நீடித்திருக்க காங்கிரஸ் பேரியக்கமே என்றும் பாதுகாவலாக
இருக்கும். அருமை நண்பர் மா.சிவகுமார் போன்ற சிறந்த எழுத்தாளர்கள்
கட்சியிலே இணைந்து பணியாற்றி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையில்
இந்திய நாட்டிற்கே வழிகாட்ட வேண்டும் என்று இங்கே வேண்டுகோள் வைக்கிறேன்.
அன்புடன்
நாசரெத் நாகராசன் (நாநா)
ஒரு 'மன்னிப்பில்' ஆரம்பித்த விவாதம் வேறு எங்கெங்கோ செல்கிற மாதிரிதான் இருக்கிறது.
மாசி சில பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறார். அதற்கு 'தனி மனித' தாக்குதல் என்று காரணமும் சொல்கிறார். ஆனால் இங்கு ஒரு சிலரின் கருத்துகளை அது மிகவும் positive-ஆக இருந்தாலும், அவர்களை தனி நபராக தாக்கி எழுதியிருக்கும் பின்னூட்டங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. மாசி அவர்கள் பின்னர் ஒரு முன்வடிவ (template) பின்னூட்டமிட்டு அவர்களை 'தனிமனித' தாக்குதல் செய்யாமல் இருக்குமாறு மீண்டும் மீண்டும் வேண்டி கேட்டுக் கொள்வார் என்று நம்புகிறோம்.
மற்ற பின்னூட்டங்களை அவராகவே நீக்கி விடுவார்...
//இரண்டாவது, சுயவெறுப்பு காரணமாக, கொஞசம் கூட உண்மையில்லாமல் வஞ்சகத்தால் வெளிப்படும் தரக்குறைவான விமர்சனம்.
இரண்டாவது வகை விமர்சனத்துக்கு உதாரணமாக//
இந்த பட்டியலை பார்த்தாலே யார் இரண்டாவது வகை விமர்ச்னம் செய்கிறார்கள் என்று புரியத்தான் செய்கிறது. இந்த பட்டியலில் தமிழ் மணத்தில் தற்போது காணக் கிடைக்கும் பல 'வெறுப்புமிழும்' பதிவுகளுக்கு இடமில்லை போலும். நல்ல நடுநிலைமை கருத்து.
கருத்து சுதந்திரம் வாழ்க!
தமிழ்மண கலாச்சாரம் ஓங்குக!
பொறுத்துக்கொள்ளுங்கள் மா.சிவகுமார். உங்கள் வரையறையில் தனிமனித தாக்குதல் என்பது எது என நான் அறிந்துகொள்ளலாமா? உதாரணமாக நீங்கள் நீக்கிய எனது பின்னூட்டத்தில் நான் கூறியிருப்பதையும் உங்கள் பதிவின் வேறு சிலர் கூறி நீங்கள் நீக்காததையும் ஒப்பிட்டு பாருங்கள்:
//அரவிந்தன் தன் புளுகு மூட்டை அம்பலமாகிவிட்டதால்// - எட்வின் பிரகாஷ்
//இப்படி ஒருபக்கத்து புளுகுகளை வாரி இறைத்து ஆதா-ரம் காட்ட வேறு யாரால் முடியும்// -கீரன்
//புளுகு மூட்டைகளின் ஆதாரங்களுக்கு குமரி மைந்தன் வைத்திருக்கும் ஆப்பு பார்த்தீர்களா? //-கீரன்
//இந்த அண்டப் புளுகர்களைப் போல// - கீரன்
இதெல்லாம் மா.சிவகுமாரைப் பொறுத்தவரையில் தனிமனித தாக்குதல்கள் இல்லை. இத்தனைக்கும் நான் கூறுவது புளுகு மூட்டை என்றால் அது என்ன புளுகு என்று இன்னும் கூறிட இவர்களுக்கு சொல்ல முடியவில்லை. நான் என்ன நடந்த ஒரு மத ஊர்வலத்தை மறைத்து ஏதோ இந்துக்கள்தான் முதலில் ஊர்வலம் நடத்தி கலவரம் வெடித்ததாக கூறினேனா என்ன? அப்படி சொன்ன புளு....மன்னித்துக்கொள்ளுங்கள் மாசி....அப்படி சொன்ன அரிசந்திரன் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இல்லை கதைகளை அடுக்கும் போது குருசடியை மாதாகோவில் ஆக்கும் பித்தலாட்....மன்னித்துக்கொள்ளுங்கள் மாசி....குருசடியை மாதாகோவிலாக்கும் அற்புதர் யார் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இனி நான் கூறி மாசி விலக்கியதில் என்ன தனிமனித தாக்குதல் இருந்தது?
//ஆதாரம், ஆய்வு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரியாதவர்கள் படித்து புரிந்து கொள்ளட்டும்.// என குமரிமைந்தனின் எழுத்துக்களை குறித்து கீரன் சொல்லுவதால்தான் ஒரு பானை சோத்துக்கு ஒரு பத்து பதம் என குமரிமைந்தனின் செல்லப்பிள்ளை தியரியான குமரிக்கண்ட தியரிக்கு அவர் அளிக்கும் ஆதாரங்களின் தன்மை மூலம் சுட்டிக்காட்ட தலைப்பட்டேன்.
//1930 களில் நாகரிகத்தின் கதை என்ற பெருந்தலைப்பின் கீழ் முதல் மடலமாக கீழை நாடுகள் நமக்களித்த கொடைகள் ( Story of Civilisation- our Oriental Heritage ) என்ற நூலை எழுதிய வில்தூரன் அவர்கள் அவர் காலம் வரை இடம்பெற்றிருந்த மேலை அறிவியல், அரசியல், குமுகியல், ஆட்சியியல் வளர்ச்சிகள் அனைத்தும் கீழைநாடுகளில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் மறுகண்டுபிடிப்புகளே என்கிறார். அவரைத் தொடர்ந்து பண்டை மக்கள் விட்டுச் சென்றுள்ள அரிய சுவடுகளைத் தொகுத்து எழுதிய எரிக்வான் டெனிக்கன் என்ற நாசா அறிவியலாளர் எழுதிய Chariots of Gods என்ற நூலில் இன்றைய அணுவியல் மின்னணுவியல் வளர்ச்சிகளையும் நம் முன்னோர்கள் எய்தியிருந்தனர் என்கிறார்.// §ÁüÜȢ ¬Ã¡ö Å¢§¿¡¾ò¨¾ ±Ø¾¢Â ¦ÀÕÁ¸É¡÷ ÌÁâ¨Áó¾ý. þÐ http://kumarimainthan.blogspot.com/2005_11_01_arc ±Ûõ ¯ÃÄ¢ø þÕ츢ÈÐ.
இப்போது நான் குமரிமைந்தனின் புளுகு மூட்டை அம்பலமாகிவிட்டது என எட்வின் பிரகாஷ் போல கூறவில்லை. அண்டப்புளுகர் என்றோ புளுகுமூட்டையின் ஆதாரங்களுக்கு ஆப்பு என்றோ மாசி அனுமதித்திருக்கும் கீரன் போல சொல்லவில்லை. நான் என்ன சொல்கிறேன்: எப்படி எரிக் வான் டானிக்கன் என்கிற மோசடி பேர்வழியை - அவரது பொய்களை 1978 இலேயே பிபிசி பிட்டுபிட்டு வைத்திருக்கும் போது - எப்படி வாய்கூசாமல் நாசா விஞ்ஞானி என கூறுகிறீர்கள் என குமரிமைந்தனின் சீடர் எட்வின் பிரகாஷை கேட்கிறேன்.
//சுவிஸ் ஹோட்டல்காரராக இருந்து மோசடி வழக்கில் கைதான எரிக் வான் டானிக்கனை நாசா அறிவியலாளர் என கூசாமல் பேசுகிற குமரிமைந்தனுக்கும் அவருக்கு ஆமாம் சாமி போடுகிற எட்வினுக்கும் மதக்கலவரத்தை சாதியை கொண்டு ஓட்டை அடைப்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் இல்லைதான். தமிழர்களின் அறிவின் மீது அத்தனை நம்பிக்கை இந்த ஆசாமிக்கும் அவரது கும்பலுக்கும்.// இதில் தனிமனித தாக்குதல் - அதுவும் கீரனோ எட்வின் பிரகாஷோ எழுதியதில் இல்லாத தனிமனித தாக்குதல் என்ன இருக்கிறது என மாசி கூறிடுவாரா? எட்வின் பிரகாசோ கீரனோ எழுதியதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பது வேறுவிசயம். ஆதாரமில்லாமல் புளுகு மூட்டை என என்னை கூறுபவர்களை நான் கண்டுகொள்வதில்லை. இதனை எனது பதிவிலும் தாராளமாக அனுமதிப்பேன், இதனை வெளியிடுவதும் வெளியிடாமல் இருப்பதும் உங்கள் இஷ்டம். நீக்குவதும் உங்கள் இஷ்டம். எனது பதிவுகளை நீக்கியதனை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீங்கள் அளித்துள்ள காரணங்கள் சரியானவை அல்ல என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மற்றபடி இதிகாசங்களில் அணு ஆயுதங்கள் ஜெட்விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என மேதாவித்தனமாக :) நம்பும் 'பெரிய மனுசர்களிடம்' பேசாமல் இருப்பதே நல்லது என்பதுதான் எனது எண்ணம்.
மாசி!
"மன்னிப்பு" பதிவு பிரமாதம்!
இப்பொழுதுதான் வழக்கம்போல் உள்ளது!:))))))
உண்மையைச் சொல்லவேண்டுமெனில் உங்களூக்கு வரும் பின்னூட்டங்கள் வாயிலாக பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது!நன்றி.
அன்புடன்...
சரவணன்.
இங்கு குமரி மைந்தன் குறித்து நடத்தப்பட்ட பின்னூட்ட சர்ச்சையின் முழு இழையை இங்கே அளித்துள்ளேன். விரும்புகிறவர்கள் க்ளிக்கலாம் அல்லது http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_07.html சென்று கண்டுகொள்ளலாம்.
மா.சி.,
பாசிச மணத்திலிருந்து வெளியேறி, சனநாயக கூட்டில் முடங்கியதில், இழந்துவிட்ட வாசகர் வட்டத்தைப் பெற, விளம்பரப் பலகை ஆகிக் கொண்டிருக்கிறது, உங்கள் பதிவு!
வருகைக்கு நன்றி நாசரேத் நாகராசன்,
காங்கிரசு இயக்கத்தில் உட்கட்சி நடைமுறைகள் மிகவும் பழுதடைந்து இருப்பதாகப்படுகிறது. மக்களின் வாழ்க்கையுடன் விலகியும் போய்க் கொண்டிருக்கிறது. அதனால்தான் மற்றக் கட்சிகள் அது விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
நம்மைப் பொறுத்த வரை, நம்மால் இயன்ற சிறு பணிகளைச் செய்து வருவோம்.
அன்புடன்,
மா சிவகுமார்
அனானி,
//மீண்டும் மீண்டும் வேண்டி கேட்டுக் கொள்வார் என்று நம்புகிறோம். //
புரிகிறது!! :-)
கருத்துக்களைச் சொல்லி ஓரிரு வாக்கியங்கள் கடுமையாக இருப்பதைக் கூடப் புரிந்து கொள்ளலாம். அரவிந்தன் பிறரைத் தாக்கவே வரிந்து வரிந்து எழுதுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
அப்படிப்பட்டவை நீக்கப்பட்டுள்ளன.
//இந்த பட்டியலில் தமிழ் மணத்தில் தற்போது காணக் கிடைக்கும் பல 'வெறுப்புமிழும்' பதிவுகளுக்கு இடமில்லை போலும். நல்ல நடுநிலைமை கருத்து.//
வெறுப்பை உமிழும், தனிமனித தாக்குதலால் எதிர்க் குரல்களை மறைந்து போக வைக்க நினைக்கும் கருத்துக்களுக்கு எந்த நடுநிலை மன்றத்திலும் இடம் கிடைக்க முடியாது.
அன்புடன்,
மா சிவகுமார்
அரவிந்தன்,
//உங்கள் வரையறையில் தனிமனித தாக்குதல் என்பது எது என நான் அறிந்துகொள்ளலாமா? //
ஏன், கருத்துக்களை விமரிசிக்காமல் ஒருவரது character assassination செய்வதுதான் பதில் என்று முயல்கிறீர்கள்! நீங்கள் சொல்ல வருவது உறுதியாக இருந்தால் அந்தக் கருத்தே போதுமே!
அப்படிப்பட்ட உங்கள் பின்னூட்டங்கள் தனிமனிதத் தாக்குதல். உங்களையும் குறிப்பிட்ட சாதியினரையும் தாக்கி இருந்த விடாது கருப்புவின் பின்னூட்டங்கள் தனி மனிதத் தாக்குதல்.
உங்கள் பதிவில் நீங்கள் உங்கள் பாணியைத் தொடருங்கள். புரிதலுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
//இப்பொழுதுதான் வழக்கம்போல் உள்ளது!:))))))//
சரவணன், ஆமாமா :-)
அன்புடன்,
மா சிவகுமார்
//பாசிச மணத்திலிருந்து வெளியேறி, சனநாயக கூட்டில் முடங்கியதில், இழந்துவிட்ட வாசகர் வட்டத்தைப் பெற, விளம்பரப் பலகை ஆகிக் கொண்டிருக்கிறது, உங்கள் பதிவு!//
நானும் அதை ஓரளவுக்கு உணர்கிறேன்.
எவ்வளவு தூரம்தான் போகிறது என்று பார்ப்போமே! தமது நோக்கத்தில் நேர்மை இல்லாத செயல்களின் தன்மை எல்லோருக்கும் புரியவே செய்யும்.
அன்புடன்,
மா சிவகுமார்
மா.சி ஐயா...எரிக் வான் டானிக்கன் என்பவர் நாசா விஞ்ஞானி என சொல்லியிருக்கிறார் குமரி மைந்தன். எப்போது எரிக் வான் டானிக்கன் நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றினார் என விளக்குவீர்களா ஐயா. நான் சொன்னதெல்லாம் தப்பு என பெரியதாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு விடுகிறேன். அவ்வளவு ஏன் என் பதிவையே டெலீட் செய்துவிடுகிறேன். மாறாக எரிக்வான் டானிக்கன் நாசாவில் விஞ்ஞானி இல்லை என்றால் என்னை புளுகுமூட்டை என்றும் பொய்களை அவிழ்த்து விடுவதாகவும் சொல்லுகிறவர்கள் அதே பட்டங்களை குமரி மைந்தனுக்கு சூடுவார்களா?
"விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்" என்ற வரி
விஷ்ணுவின் "கூர்ம" அவதாரத்தை நம்பலாம் என்று இருக்க வேண்டும்
தவறுக்கு வருந்துகிறேன்
// வாய்பபுக் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கும் மனிதர்களுடன் பேசி அவர்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
உங்களைக் கூட ஒரு முறை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் :-) //
சிவகுமார், உங்கள் ஆவலுக்கு நன்றி. நேரமும், வாய்ப்பும் கிடைத்தால் கண்டிப்பாக சந்திக்கலாம்.
இங்கு அரவிந்தன் மீதான "புளுகுமூட்டை" போன்ற கேவலமான தனிமனித தாக்குதல் மொழிகளை நீங்கள் தான் அனுமதித்தீர்கள். இதைச் சொன்னவர்கள் அரவிந்தன் கூறிய ஆதாரங்களில் எவை எவை எல்லாம் பொய்கள் என்று ஒரு பட்டியல் தர முடியுமா?
அரவிந்தன் நீலகண்டன் said...
// மாறாக எரிக்வான் டானிக்கன் நாசாவில் விஞ்ஞானி இல்லை என்றால் என்னை புளுகுமூட்டை என்றும் பொய்களை அவிழ்த்து விடுவதாகவும் சொல்லுகிறவர்கள் அதே பட்டங்களை குமரி மைந்தனுக்கு சூடுவார்களா? //
பாரதி கருத்துத்தளத்தில் தன் எதிரிகளை அதி கூர்மையுடன் காட்டமாக சாடியிருக்கிறார். ஜெயமோகனின் தாக்குதல்கள் இலக்கிய வட்டங்கள் அறிந்தவை.
ஒரு படைப்பாளி என்ற அளவில் அரவிந்தனது இந்த கோபம் முற்றிலும் நியாயமானது, அதை என்னால் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
அவர் மீது சேறு பூசியவர்கள் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாரா?
ஜடாயு,
//சிவகுமார், உங்கள் ஆவலுக்கு நன்றி. நேரமும், வாய்ப்பும் கிடைத்தால் கண்டிப்பாக சந்திக்கலாம்.//
எதிர்பார்க்கிறேன் :-)
//இங்கு அரவிந்தன் மீதான "புளுகுமூட்டை" போன்ற கேவலமான தனிமனித தாக்குதல் மொழிகளை நீங்கள் தான் அனுமதித்தீர்கள்.//
தவறுதான். இத்தகைய தனி மனிதத் தாக்குதல்கள் ஓரிரு சொற்களிலும், மீதி ஆக்கபூர்வமான கருத்து விமரிசனமாகவும் இருந்தவற்றை விட்டு வைத்தேன். வெறும் தனி மனிதத் தாக்குதல்களாக வந்தவற்றை நீக்கி விட்டேன்.
//ஒரு படைப்பாளி என்ற அளவில் அரவிந்தனது இந்த கோபம் முற்றிலும் நியாயமானது, அதை என்னால் புரிந்து கொள்ளவும் முடிகிறது. //
இது படைப்பாளியின் கோபம் இல்லை. தனது கருத்தை சொல்ல முடியாத இயலாமையின் வெளிப்பாடாகவே எனக்குப் படுகிறது. சொல்ல வரும் கருத்தில் உறுதி இருந்தால் தனி மனிதத் தாக்குதல்களுக்குத் தேவையே இல்லை.
அன்புடன்,
மா சிவகுமார்
ஐயா சிவகுமாரே,
அங்கே ஒரு கேள்வி மே-எட்டாம் தேதியிலிருந்தே கேள்விக்குறியுடன் நிற்கிறதே.. இதிகாசங்களில் ராக்கெட் தொழில்நுட்பத்தையும் அணு ஆயுதம் பயன்பட்டதையும் நம்புகிற குமரிமைந்தன் போன்றவர்களின் கொள்ளு குருவான எரிக்வான் டானிக்கன் நாஸா அறிவியலாளர் என குமரிமைந்தன் கூறியிருக்கிறாரே அதை நிரூபிப்பாரா? இல்லையென்றால் என்னை சொன்ன அடைமொழிகள் அனைத்தையும் அன்னாருக்கு பயன்படுத்தலாமா என்கிற கேள்விகளுக்கு இன்னமும் பதிலை சொல்லுகிற வழியை காணோம். அழுத்தி சொன்னால் தனிமனித தாக்குதல் என்று மூக்கை உறிஞ்சுவீர்கள்....சரி சரி விடுங்கள் விசயத்தை.நான் சொன்னதை எதிர்க்க மேட்டர் இல்லாதபோது முத்திரை குத்துவது உங்களுக்கெல்லாம் கைவந்த கலைதானே! இந்த கலையும் 64 கலைகளில் ஒன்றாக குமரிக்கண்ட பாலைவன பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டு வந்திருக்கலாம் போல. (இதையும் தனிமனித தாக்குதல் என எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.)
//இதிகாசங்களில் ராக்கெட் தொழில்நுட்பத்தையும் அணு ஆயுதம் பயன்பட்டதையும் நம்புகிற குமரிமைந்தன் போன்றவர்களின் கொள்ளு குருவான எரிக்வான் டானிக்கன் நாஸா அறிவியலாளர் என குமரிமைந்தன் கூறியிருக்கிறாரே அதை நிரூபிப்பாரா?//
இதை அவரிடமே நேரில் கேட்கலாம். அல்லது அவரது பதிவில் போய்க் கேட்கலாம்.
//அழுத்தி சொன்னால் தனிமனித தாக்குதல் என்று மூக்கை உறிஞ்சுவீர்கள்....சரி சரி விடுங்கள் விசயத்தை.நான் சொன்னதை எதிர்க்க மேட்டர் இல்லாதபோது முத்திரை குத்துவது உங்களுக்கெல்லாம் கைவந்த கலைதானே!//
:-). நான் சொன்னதையே திருப்பி விடுகிறீர்களே! இப்படி செறிவாக கேட்க விரும்புவதைக் கேட்டால் எழுதிவருக்கும் பலன் உண்டு, படிப்பவருக்கும் தகவல் கிடைக்கும்.
//இந்த கலையும் 64 கலைகளில் ஒன்றாக குமரிக்கண்ட பாலைவன பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டு வந்திருக்கலாம் போல. //
அதானே அரவிந்தன் அடித்து விளாசுகிறார் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
பின்குறிப்பு:
மகிழ்ச்சியான நாள் இன்றைக்கு, பார்க்க:
http://masivakumar.blogspot.com/2007/05/blog-post_11.html
//இதை அவரிடமே நேரில் கேட்கலாம். அல்லது அவரது பதிவில் போய்க் கேட்கலாம்.//
எட்வின் பிரகாஷ் இந்த பதிவில்தானே கூர்மாவதாரத்தின் காம்பஸ் விளக்கத்தை கொடுத்திருக்கிறார் :)))
// “மண்டைக்காட்டுக்கு போய் பார்த்திருந்தால் அங்கே இருப்பது 'மாதாகோவிலா' குருசடியா என்பது தெரிந்திருக்கும்.”//
நண்பரே!
மண்டைக்காட்டில் மாதா கோயிலும் இருக்கிறது; குருசடியும் இருக்கிறது: உமக்கு சந்தேகமிருந்தால் போய் பார்த்துவிட்டுவாரும். மண்டைக்காட்டம்மையும் கண்ணம்மையும் (மேரி மாதா – கண்நோய் தீர்ப்பதால் கண்ணம்மா என்று மாதாவை அழைக்கிறார்கள்.) அக்கா தங்கைகள் என்றொரு வழக்கு குமரி மாவட்டத்தில் உண்டு. இப்போது புரிந்திருக்குமே மாதா கோயில் இருப்பது.
குமரிமைந்தன் வாய்வழிச் செய்தியை பதிவு செய்திருக்கிறார். மண்டைக்காட்டில் நடந்தவற்றைப் பற்றி பலர் கூறிய செய்திகள் பலவாறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த செய்தியை பதிவு செய்த குமரிமைந்தன் “இது இன்னொரு கதை” என்று சொல்லியிருப்பது உமக்கு புரியவில்லை?
தகவலாளி தரும் செய்தியை உள்ளது உள்ளபடி அப்படியே பதிவு செய்தல் வேண்டும். அதுபோலவே இன்னொருவரின் கட்டுரையையோ நூலையோ மேற்கோள் காட்டும்போது அதில் உள்ள வரிகளை உள்ளது உள்ளபடி அப்படியே பயன்படுத்த வேண்டும். கருத்து தவறு, வாக்கிய பிழை, என்று எதிலும் திருத்தம் செய்தல் கூடாது. இது ஆய்வியல் நெறிமுறையின் பால பாடம். குமரிமைந்தன் வாய்வழிச் செய்தியை பதிவு செய்ததில் ஆய்வியல் நெறிமுறையை கடைபிடித்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
கிறித்துவ கோயில்களை பொதுவாக மாதா கோயில் என்று குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளதுதானே. இந்த தகவலாளியும் அவ்வாறே கருதியிருக்க இடமிருக்கிறதே. எப்படியாயினும் “இது இன்னொரு கதை” என்று குமரிமைந்தன் தன் கருத்தை சரியாகவே பதிவு செய்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
// “வதவத என எழுதி தள்ளியிருக்கும்” //
“வதவத என எழுதி தள்ளியிருக்கும்” என்ற வரிக்கு என்ன பொருள் என்பது எனக்கு புரியவில்லை. ஓர் ஆய்வு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு குமரிமைந்தனின் கட்டுரைகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமையும் என்பதில் ஐயமில்லை. குமரிமைந்தன் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு “குமரி மாவட்ட கலவரம் – ஒரு பகுப்பாய்வு” என்பதாகும். இதில் மாவட்ட வரலாறு, அமைப்பு, உறவுமுறைகள், கலவரத்திற்கான பின்னணி, உடனடி காரணம், படிப்பினைகள், தீர்வுகள் என தெளிவாகவே பகுப்பாய்வு செய்துள்ளார். அதோடு அவர் கட்டுரையை நிறைவு செய்துவிடவில்லை. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான பொன்னீலன் அவர்களுக்கு அனுப்பி அவரது கேள்விகளையும் அதற்கான பதில்களையும் இணைப்பாக தந்திருக்கிறார். ஒருசார்பு எண்ணத்துடன் கருத்துகள் கூறாமல் இரு தரப்பினரிடமும் காணப்பட்ட தவறுகளை பாரபட்சமின்றி கூறியிருக்கிறார் என்றே கருதுகிறேன்.
// “மேதாவி குமரி மைந்தனின் குமரிக்கண்ட புளுகுகளை கிழித்து உலரவிட்டு விட்டார் கிறிஸ்டோபர் ஜெயகரன் என்னும் நிலவியலாளர் ” //
யாரிந்த கிறிஸ்டோபர் ஜெயகரன்? வெறும் பெட்ரோலிய – மண்ணெண்ணெய் தேடலுக்கான கடலடி ஆய்வுகளை வைத்து குமரிக்கண்டம் இல்லை என்று கூறியவர் தானே!
குமரிக்கண்ட பஃறுளி ஆறு – குமரிமாவட்டத்தின் பழையாறு தானாம். பஃறுளி மருவி பறளி என்றாகியதாம். பழையாற்றுக்கு பறளியாறு என்று பெயர் இருக்கிறதாம். இதற்கு ஒரு கல்வெட்டை சான்று காட்டுகிறார் ஜெயகரன். ஐயா! குமரி மாவட்டத்தில் இன்னொரு பறளியாறு இருக்கிறதே அது தங்களுக்கு தெரியுமா? தங்கள் வாதத்தை சரி என்று ஏற்றுக்கொண்டாலும் அப்போது குமரியாறு என்று எதைச் சொல்வீர்கள் தாமிரபரணியையா? அப்போதும் இரண்டு தாமிரபரணி வருகிறதே?! நெல்லையில் ஒன்று; குமரியில் ஒன்று.(இந்த தாமிரபரணிக்கு கோதையாறு, குழித்துறையாறு என்ற வேறு பெயர்களும் உண்டு. குமரியில் பாயும் பறளியாறு இந்த தமிரபரணியில்தான் சேர்கிறது.)
அரவிந்தனாரே! குமரிமைந்தனை மண்டைக்காட்டுக்குப் போகச் சொன்னது போல ‘புகழ்’ வாங்கிய புவியியங்கியலார் ஜெயகரனை குமரிக்கு வரச் சொல்வீரா? பறளியாற்றை பார்க்கச் சொல்வீரா?
மனித தோற்றம் பற்றி வெவ்வேறு காலக் கணிப்புகளைத் தருகிறார் ஜெயகரன். பார்க்க: குமரி நில நீட்சி, பக். 17, 45, 47 & 59.
ஐயா, மனிதன் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. 50 ஆயிரமா? ஒன்றரை மில்லியன் ஆண்டுகளா? 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா? 5 மில்லியன் ஆண்டுகளா?
“தாலமியின் உலக வரைபடம் – தவறுள்ளது” என்ற கருத்தை முன்வைக்கிறார் ஜெயகரன். பார்க்க: குமரி நில நீட்சி, பக்.35
குமரிமைந்தனின் “பழைய பாண்டம் புதிய பண்டம்” கட்டுரையை படித்தால் ஜெயகரன் செய்திருக்கும் குளறுபடி விளங்கிவிடப்போகிறது. கட்டுரை திண்ணையில் வெளியாகியுள்ளது.
“இளங்கோவடிகள் குறிப்பிடும் குமரிக்கோடு, திருச்செங்கோடு போல நாட்டின் தென்கோடியில் அமைந்த இன்றைய விவேகானந்தர் பாறையாக இருக்கலாம்” என்ற குலசேகரனின் கருத்தை ஜெயகரன் தன் நூலில் எடுத்தாள்கிறார்.
“குமரிக்கோடு” என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவது விவேகானந்தர் பாறை? எவ்வளவு விவேகமான பேச்சு! [:-))))))))] அப்படியானால் பன்மலை யடுக்கம்...... ஆங் புரிகிறது புரிகிறது அடுத்திருக்கும் அய்யன் திருவள்ளுவர் பாறை அதனருகில் இருக்கும் சிறுசிறு பாறைகள் ஓ! :-!!!! இதுதான் பன்மலை யடுக்கம்.
இதுபோல ஜெயகரனின் நூல் முழுவதும் உள்ள செய்திகளை பட்டியலிட முடியும்.
ஐயா அரவிந்தனாரே இப்போது கூறும் “பரமார்த்த குமரிமைந்தனுக்கு ஏற்ற சீடனா?” அல்லது பரமஹம்சருக்கு ஏற்ற விவேகானந்தனா?
// “விஷ்ணுவின் அவதாரம் குறித்த புராணத்திற்கும் சுமேரிய தொன்மக்கதைக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். அதாவது ஒரு இந்திய கடவுள் குறித்த புராணத்துக்கும் சுமேரிய தெய்வத்தின் தூதன் குறித்த சித்தரிப்புக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். ஒரு தீவிர வைணவருக்கு சங்கடம் ஏற்படுத்துகிற சமாச்சாரம் இது.” //
ஒரு தீவிர வைணவருக்கு சங்கடம் ஏற்படுத்துகிற சமாச்சாரம் எது? ஒரு இந்திய கடவுள் குறித்த புராணத்துக்கும் சுமேரிய தெய்வத்தின் தூதன் குறித்த சித்தரிப்புக்கும் இணைகள் இருப்பதைக் கூறியதா? அல்லது விஷ்ணு புராணத்திற்கும் குமரிக்கண்ட நாகரிகத்திற்கும் தொடர்பிருப்பதாக கூறியதா? விஷ்ணு புராணம் – குமரிக்கண்டம் தொடர்புபடுத்தினால் ஒரு தீவிர வைணவருக்கு சங்கடம் ஏற்படுத்துகிற சமாச்சாரம். “விவிலியம் சித்தரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை ” – இது தீவிர கிறித்தவருக்கு சங்கடம் ஏற்படுத்தாதோ?
// “ நம்ம குமரிகண்ட காம்பஸ் எந்த காலம் எட்வின் சார்? “ //
கூர்ம அவதாரம் நிகழ்ந்தது எந்த காலம் என்று கருதுகிறீர்களோ அந்த காலத்தையே காம்பஸ் காலம் என்று வைத்துக்கொள்ளலாம் தவறில்லை. சீன கடலோடிகள் பயன்படுத்திய காம்பஸ் ஆமை வடிவத்தில் இருந்ததாக செய்திகள் கேள்விபட்டிருக்கிறேன். ஜெயகரன்களும் அரவிந்தன்களும் செவிவழிச் செய்திகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்வதில்லையே? இதை ஏற்றுக்கொள்வார்களோ என்னவோ? ஆங்! குமரிக்கோடு – விவேகானந்தர் பாறை?..... ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் வேறு என்ன செய்ய.
// “நாசா அறிவியலாளர் .......... மோசடி வழக்கில் கைதான ........ எரிக் வான் டானிக்கன் ” //
எரிக் வான் டெனிக்கன் எழுதிய “கடவுளர்களின் தேர்கள்(Chariots of Gods)”என்ற நூலில் காணப்படும் செய்திகளுக்கும் குமரிக்கண்ட செய்திகளுக்குமான தொடர்புகளை ஒப்புமைப்படுத்தி குமரிமைந்தன் பேசியிருக்கிறார் என்றே கருதுகிறேன். அரவிந்தனின் விஷ்ணு புரணத்திற்கும் சுமேரிய தொன்மத்திற்குமான ஒப்புமை போன்றதே இது. எரிக் வான் டெனிக்கனின் தனிப்பட்ட வாழ்க்கை பின்னணி நமக்கு முக்கியமில்லை. (ஐயா அரவிந்தனாரே, டெனிக்கன் என்ற மோசடிக்காரருக்கு பொலிவியா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறதாமே. அமெரிக்க, ஜெர்மானிய தொலைக்காட்சிகள் இவரது படைப்புகளை தொடர்களாக ஒளிபரப்பியிருக்கிறதாமே. இவரது 26 புத்தகங்கள் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாமே. உண்மையா?!)
// “மதக்கலவரத்தை சாதியை கொண்டு ஓட்டை அடைப்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் இல்லைதான்.” //
மண்டைக்காட்டுக் கலவரத்திற்கு மதம் ஒரு உடனடிக் காரணம் அவ்வளவுதான். ஆனால் உள்ளூர புகைந்து கொண்டிருந்தது சாதீய காழ்ப்புணர்வே. குமரியின் மேற்குப் பகுதியில் நாடார்களுக்கும் மலையாள உயர் வகுப்பினருக்கும் இடையேயான சிக்கல்கள், கடற்கரைப் பகுதிகளில் மீனவர்களுக்கும் நாடார்களுக்குமான பிரச்சனைகள். குமரிமைந்தன் இதைத்தான் தன்னுடைய கட்டுரையில் பகுப்பாய்வு செய்திருக்கிறார் என்று கருதுகிறேன்.
உண்மையில் இது மதக் கலவரமாக இருந்திருக்குமானால் கிறித்தவரும் இந்துக்களும் சரிபாதியாக உள்ள நாடார் சமுகம் குமரி மாவட்டத்தில் வேரோடு அழிந்திருக்குமே. பள்ளம் மீனவ கிராமத்தை நாடார்கள் அனைவரும் சேர்ந்து சின்னாபின்னமாக்கியதாக கூறப்படுகிறதே.(இது செவிவழிச் செய்தி; அரவிந்தன் ஏற்றுக்கொள்வாரோ என்னவோ!) குமரி மாவட்டக் கலவரத்தைக் கதைக் கருவாக கொண்ட தேரிமணல் என்றொரு புதினம் படித்தேன். ஆசிரியர் கலவரத்தை சாதீய கண்ணோட்டத்தோடே அணுகுகிறார் என்றே கருதுகிறேன்.
// “தமிழர்களின் அறிவின் மீது அத்தனை நம்பிக்கை இந்த ஆசாமிக்கும் அவரது கும்பலுக்கும்.” //
இந்த வரிகளின் உள்நோக்கமென்ன? தமிழர்கள் அறிவிலிகள் என்று அரவிந்தன் கருதுகிறாரா? இந்த வரிகள் ஒவ்வொரு தமிழனையும் உணர்வுபூர்வமாக தாக்கும் என்று அறிந்துதானே பயன் படுத்தியிருக்கிறார்? இந்த வரிகளுக்காக அரவிந்தன் உலகத் தமிழர்களுக்கு பதில்சொல்லியாக வேண்டும். உமது இந்த வார்த்தைகளை எமது தமிழினம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.
உலகப் பொது மறை தந்தது யார்?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலக சகோதரத்தை வலியுறுத்தியது யார்?
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதை உலகுக்குச் சொன்னது யார்?
வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவன் யார்?
தொல்காப்பியன், இளங்கோ, திருவள்ளுவன், கம்பன், பாரதி, …….. அப்துல் கலாம் என்னும் தகைசால் தலைவர்கள் எல்லாம் யார்?
ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாமல் சீரிளமையுடன் திகழும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் அறிவுக்கு இப்படி ஒரு அவச்சொல் வந்ததே. அய்யகோ! நெஞ்சு பொறுக்குதில்லையே.
// “ நான் கூறி மாசி விலக்கியதில் என்ன தனிமனித தாக்குதல் இருந்தது?” //
அரவிந்தன் கூறி மாசி விலக்கிய பின்னூட்டத்தில் எந்தவித தனிமனித தாக்குதலும் இல்லை?! தமிழன் மீதான தாக்குதல் தான் இருந்தது. மாசி அவர்களே தனிமனித தாக்குதலை விலக்குவதாகக் கூறிவிட்டு தமிழன் மீதான தாக்குதல் வரிகளை நீக்கிவிட்டீர்களே. இப்போது புரிகிறதா அரவிந்தன் கேள்வியின் நியாயம்.
எட்வின் பிரகாஷ் இதுதான் முழு பூசணிக்காயை சோத்துக்குள் மறைப்பது...கலவரத்துக்கு காரணம், எனக்கூறப்பட்டது ஒலிபெருக்கி வைத்தமையால் ஏற்பட்ட தகராறு. இது குருசடியில் வைத்த ஒலிபெருக்கியால் என்பது அனைவருக்கும் தெரியும். புதூர் மாதாகோவில் ஊருக்குள் தள்ளி இருப்பதும் அனைவருக்கும் தெரியும். 1971 இல் வைக்கப்பட்ட குருசடி (இரண்டடுக்கு குருசடி - சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட செல்வ செழிப்பில் மூன்றடுக்கு ஆக்கப்பட்டது) சரியாக கோவிலில் இருந்து கடற்கரைக்கு பக்தர்கள் வரும் வழியில் வைக்கப்பட்டதும் மண்டைக்காடு போய்விட்டு வந்த சிறுகுழந்தைக்கு கூட தெரியும். ஆனால் இதற்கு கூட குமரிமைந்தனுக்கு ஒரு கதை சொல்லி தேவைப்படுகிறார். கடல் பிரயாண காம்பஸ் கண்டுபிடிக்கப்பட்ட கால கட்டம் எது எட்வின் பிரகாஷ்? குமரிகண்டம் எனும் கருதுகோளுக்கு நீங்கள் கொடுக்கும் காலகட்டம் எது? எரிக்வான் டானிக்கனின் 'சேரியட் ஆஃப் தி காட்ஸ்' ஒரு மோசடி புத்தகம். நாஸ்கா வரை படங்கள் ஆகட்டும் ஈஸ்டர் தீவு சிற்பங்கள் ஆகட்டும் டெல்லி இரும்புத்தூண் ஆகட்டும் அந்த ஆசாமியை அறிவியலாளர்கள் பொய்யன் என்று தொடர்ந்து காட்டி வந்துள்ளார்கள். பொலிவியாவில் ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததா எரிக் வான் டானிக்கனுக்கு? எந்த பல்கலைக்கழகம்? இப்படிப்பட்ட டாக்டர் பட்டங்கள் ஆயிரம் ஆயிரம் கிடைக்கும். மதுரை நாகமலை புதுக்கோட்டைக்கு பக்கத்தில் கூட ஒருவர் டாக்டர் பட்டம் கொடுக்கிறார். ஆனால் குமரிமைந்தன் தெள்ளத்தெளிவாக எரிக் வான் டானிக்கனை நாசா அறிவியலாளர் என்று சொல்லியிருந்தாரே அது எதற்கு? டானிக்கனின் கருத்துக்கு படிப்பவர் மனதில் நம்பகத்தன்மை ஏற்படுத்தத்தானே...தமிழன் ஏமாளி என நான் கூறவில்லை ஆனால் தமிழன் என்ன சொன்னாலும் டானிக்கன் போன்ற மோசடி பேர்வழியை (ஆமாம் மோசடி பேர்வழியேதான்.) நாசா அறிவியலாளர் என்று சொன்னாலும் நம்புவான் என்று தமிழனை மடையன் என நினைத்து செயல்பட்டவர் திருவாளர்.குமரிமைந்தன் தான். என் கேள்வி இன்னமும் அப்படியே இருக்கிறது. குமரி மைந்தன் எரிக் வான் டானிக்கனின் கருத்துகளை டானிக்கன் ஒரு நாசா அறிவியலாளர் எனக்கூறி நம்பகத்தன்மையை படிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறார். எரிக் வான் டானிக்கன் எப்போது நாஸாவில் வேலை பார்த்தார்? குமரிமைந்தன் பதில் சொல்வாரா? இல்லையென்றால் எரிக் வான் டானிக்கனை ஏன் நாசா அறிவியலாளர் என குமரிமைந்தன் முன் நிறுத்தினார்? இதை வேண்டுமென்றே செய்த புரட்டுத்தனம் என்பதா? எரிக் வான் டானிக்கன் நாசா அறிவியலாளர் என குமரி மைந்தன் கூறியது ஏன் என்றால் அது டானிக்கனின் தனிப்பட்ட வாழ்க்கை என்கிறார் எட்வின். ஏன் தனிப்பட்ட வாழ்க்கை விசயத்தை குமரி மைந்தன் குறிப்பிட்டார்? குமரி மைந்தன் ஆய்வினைக் காட்டிலும் - அந்த தராதரத்திலேயே வராத- சிறந்த ஆய்வு ஜெயகரனது. அவரது நூல்கள் எல்லாமே சிறப்பானவை. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட வேண்டிய அறிவியல் நூலாகும் சிறப்பு உடையது குமரி நில நீட்சி. இது குறித்தும் இந்நூலின் மீது எட்வின் வைக்கும் அரைகுறை விமர்சனங்களுக்கும் முழுமையான ஒரு விளக்கத்தினை விரைவில் என் பதிவில் வைக்கிறேன்.
// "இந்நூலின் மீது எட்வின் வைக்கும் அரைகுறை விமர்சனங்களுக்கும்" //
அரவிந்தன்,
எது அரைகுறை விமர்சனம்? தெளிவாக பக்க எண்கள் குறிப்பிட்டிடுக்கிறேனே.
குமரிமலை - விவேகானந்தர் பாறை
பஃறுளி ஆறு - பழையாறு என்று ஜெயகரன் குறிப்பிடுவது சிறந்த விளக்கமா? இதையா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் போகிறீர்.
கருத்துரையிடுக