வெள்ளி, மே 11, 2007

மாயாவதிக்கு வாழ்த்துக்கள்

நான்காவது முறையாக உத்தர பிரதேச முதலமைச்சர் ஆகப் போகும் மாயாவதிக்கு வாழ்த்துக்கள்.

சாதி வெறி, குண்டர் கலாச்சாரம், மத வெறிகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்தும் கும்பல்கள், குடும்ப அரசியல் நடத்தும் கூட்டங்கள் வேரறுந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட கட்சிகள், தலைவர்கள் பொறுப்புகளைப் பெறும் போக்கு வளர வாழ்த்துக்கள்.

14 கருத்துகள்:

உடன்பிறப்பு சொன்னது…

வெற்றி பெற்ற மாயாவதியை கழகத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்

பெயரில்லா சொன்னது…

oh my god..

dont you know Mayavathi is UP's JJ...
She is no way better than Mulayam.. there are so many cases pending against her..

It is so clear, her party had more criminal candidates in that election...

//சாதி வெறி, குண்டர் கலாச்சாரம், மத வெறிகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்தும் கும்பல்கள், குடும்ப அரசியல் நடத்தும் கூட்டங்கள் வேரறுந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட கட்சிகள், தலைவர்கள் பொறுப்புகளைப் பெறும் போக்கு வளர வாழ்த்துக்கள்.
//

If you think Mayavathi is //மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட கட்சிகள்//

too much comedy...

பெயரில்லா சொன்னது…

காமடியன் சிவக்குமாரே முன்ன பின்னே உபியில் மாயாவதி ஆட்சி நடந்தும் போது சென்றது உண்டா.அராஜக ஆடசி என்ன வென்றால் அங்கு சென்றால் பார்க்கலாம்.

என்ன அடிச்சாலும் தாங்கறீங்க நீங்க ரொம்ப நல்லவரு,அதுவும் ஒரு கருத்து களத்தில் மாடரேட்டாராக இருந்த லக்கிலுக்கை ஐபி எண்களை மூர்த்திக்கு கொடுத்த குற்றத்துக்கு நீக்கபட்ட ஒருவனை இங்கு மாடரேட்டாராக போட்ட நீர் ரொம்ப நல்லவரு. விவரம் புரியாத ஆசாமி நீர்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
உடன்பிறப்பு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

முலாயம் சிங் போனதடவை மாயாவதி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிய போது மாயாவதியுடன் அவர் நிறுத்திய அனைத்து பிராம்மண எம்.எல்.ஏக்களும் நின்றார்கள். சும்மா ஒரு சாதியினரை கிரிமினல்கள் என்று சொல்லும் ஆசாமிகள் தினகரன் ஆபீசை எரித்து மூன்று இளைஞர்களை கொன்ற ரவுடிகளையெல்லாம் சாதி பார்த்து பேசுகிறோமா என பார்க்க வேண்டும். வக்கணையாக நியாயம் தனிமனித தாக்குதல் என சொக்காரம் பேசும் சிவகுமார் தமது பதிவில் ஒரு குறிப்பிட்ட சாதியை மோசமாக பேசுவதை அனுமதிப்பதை காண்கிறேன், ஒருவேளை இதெல்லாம் சமுதாய நீதி என நினைக்கிறாரோ என்னவோ...

யோசிப்பவர் சொன்னது…

//If you think Mayavathi is //மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட கட்சிகள்//

too much comedy... //

I too agree with this.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி உடன்பிறப்பு, அனானி, யோசிப்பவர்

//dont you know Mayavathi is UP's JJ...
She is no way better than Mulayam.. there are so many cases pending against her.. //

//மாயாவதி ஆட்சி நடந்தும் போது சென்றது உண்டா.அராஜக ஆடசி என்ன வென்றால் அங்கு சென்றால் பார்க்கலாம்.//

////If you think Mayavathi is //மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட கட்சிகள்//

//I too agree with this.//

முந்தைய முறைகளில் மாயாவதியின் தலைமையில் உத்தரபிரதேசம் பல தொல்லைகளை சந்தித்தது உண்மைதான்.

இந்த முறை சாதிகளின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்ட கட்சிகளுடன் போட்டி போட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தெருவில் இறங்கி உழைத்து பல்வேறு சமூகத்தினரின் ஒற்றுமையை துருப்புச் சீட்டாகக் கொண்டு வெற்றி பெற்ற மாயாவதியின் சாதனை இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையப் போகிறது.

பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கப்பட்ட வலியை தெரிந்த மாயாவதி, அந்த அமைப்புக்குக் காரணமான சாதியினரையே தான் ஆட்சியைப் பிடிக்க துணை கொண்ட சாமர்த்தியமும், தன்னை நம்பிய மக்களுக்கு அரசியல் அதிகாரத்திற்கு வழி காட்டிய திறமையும் காட்டி இந்தப் பதவிக்குத் தன்னைத் தகுதி உடையவராக்கிக் கொண்டுள்ளார்.

தான் முதலமைச்சராக இருந்த போது, திட்டமிட்டு பொதுச் சொத்தை அழிக்க உடந்தையாக இருந்து பதவிப் பிரமாணத்தையும், நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியையும் வெட்கமில்லாமல் மீறிய கல்யாண் சிங் போன்றவர்களும் அவரது கட்சியும், அதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிக்க முயலும் சூழலில், புதிய பெருந்தன்மையுடன் மக்களை அணுகிய மாயாவதியின் தலைமை உபிக்கு ஒரு வரப்பிரசாதம் என்று நான் நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

என்னுடைய நேர்மையில் நோக்கங்களில் உங்களுக்கு இருக்கும் ஐயங்களை வெளிப்ப்டையாகக் கேட்டு விடுவதற்கு நன்றி.

கூடவே, நீங்கள் எழுதும் எல்லா பின்னூட்டங்களையும் ஒரு இடத்தில் சேமித்து வைத்துப் படித்துப பாருங்கள். வக்கிரமாக எழுதுவதில் யாருக்கும் நீங்கள் சளைத்தவரில்லை என்பது புரியும்.

எனக்குக் கருத்தில் பட்ட, கண்ணில் பட்ட மோசமாகத் தெரியும் பின்னூட்டங்களை நீக்கி விட்வே செய்கிறேன். ஏதாவ்து தப்பி இருப்பதையும் சுட்டிக் காட்டினால், எனக்கு சரி என்று பட்டால் நீக்கி விடுவேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

நான் வக்கிரமாக எழுதியுள்ள ஒரு பின்னூட்ட வாக்கியத்தை மா.சிவகுமார் காட்டமுடியுமா? வக்கிரம் என்றால் என்ன? உதாரணமாக இரண்டுவாரங்களாக உங்கள் பதிவில் நீங்கள் அனுமதித்திருந்த பின்னூட்டத்தை போல வக்கிரமாக நான் எங்காவது எழுதியிருக்கிறேனா? அந்த பின்னூட்டத்தையும் நான் சுட்டிக்காட்டிய பின்னூட்டத்தையும் எவ்வித விளக்கமும் இல்லாமல் எடுத்த உங்கள் நேர்மையை என்ன என்று சொல்லலாம்? எனது கடுமை கூடி கூடி போனால் 'மூளை இருக்கிறதா நேர்மை இருக்கிறதா' என்கிற அளவில்தான் இருக்கும். ஆனால் நான் குறிப்பிட்ட பின்னூட்டத்தை அனுமதித்த உங்கள் யோக்கியதை எப்படிப்பட்டது? எதுவானாலும் இத்தகைய அடிப்படை 'நேர்மையை' மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ள ஒரு மனிதரிடம் இனியும் பேச ஏதுமில்லை. நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி அரவிந்தன்.

நீங்கள் சுட்டிக் காட்டியதை அலசிக் காயப் போட வேண்டிய விருப்பமும் ஆர்வமும் இல்லை. நீக்கி விட்டுப் போவதுதான் நான் செய்யக் கூடிய ஒரே வேலை. அதை செய்து விட்டேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Let us wait and see if Mayawathi can deliver on her promises and
remove the goonda raj.

In her previous tenures she was
as cynical, corrupt, populist and
arrogant (towards her officers, esp). the Taj corrider scandal is still alive. And she spent some
600 crores in establishing Ambedkar's statue and parks. Instead of spending the scarce resource on welfare. And UP continues to remain the hotbed of
polio in the country. TN is good
in its cmpaign against polio, UP has the worst possible record. And Mayawathi was indifferent about it
(so did M.S.Yadav). She amassed a fortune with plenty of huge diamonds like our JJ and her freind !

Status quo will continue and don't expect much from a corrupt and cynical politican. But i hope she
stops the goonda raj and jails the
criminals in the system...

let us see

K.R.Athiyaman

K.R.அதியமான் சொன்னது…

by the way, Mayawathi was born and
brought up in Delhi city where she
worked as a school teacher. She never had to endure the deprivations of dalith villager.
She owes everything to Kanshi Ram,
whom she kept as a near prisoner
in her house when he was ailing ;
did not allow his family to visit him, fearing rival power centres..

She is a dalith legally ; that's all. all the talk about her being
senitive to the injsutice against
daliths is a bit thick. she is
ungrateful and oppurtunistic and
highly unethical (like most politicians). she really doen;t care for the poor or downtrodden not has any vision for governance.

In my opinion Amar Singh (in spite of being a corrupt power broker and
mafia like contacts) has a better vision for UP....

Athiyaman

மா சிவகுமார் சொன்னது…

அதியமான்,

மாயாவதியைப் பற்றிப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், அமர்சிங் பற்றிய கடைசி வரி கொஞ்சம் அதிகம். எனது கருத்தில், crony capitalismஇன் அழுக்கான முகங்களில் முதலிடம் வகிப்பது அமர்சிங்.

அன்புடன்,

மா சிவகுமார்