ஒரு இடுகை எழுதி தமிழ்மணத்தில் இணைத்து சில நிமிடங்களில் காணாமல் போய் விட்டது. இன்னும் ஒரு முறை பதிந்து இணைத்தால் மீண்டும் காணவில்லை. அதைக் குறிப்பிட்டு மறுபடியும் இணைத்தால், ஒரு மின்னஞ்சல்.
'இடுகையின் தலைப்பு நீளமாக இருப்பதால் பிளாக்கர் அதை விழுங்கியிருக்கும்' என்று சுருக்கமாக குறிப்பிட்டு வழி காட்டியிருந்தார் மதி கந்தசாமி.
தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு காவல் தேவதை போல தடுமாறும் போது கை கொடுத்து, பின்னணியில் தனது தொழில் நுட்பப் பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார் மதி.
- ஆரம்பத்தில் தமிழ் வலைப்பதிவுகளைத் தொகுத்துக் கொடுத்த வலைப்பதிவை நடத்தியது,
- தமிழ்மணத்தை காசி ஆறுமுகம் நடத்தும் போது பல வேலைகளில் பங்கேற்றது,
- தமிழ் மீடியா இனிஷியேடிவ் நிறுவனம் பொறுப்பேற்ற பிறகு அதிகாரப் பூர்வமாக இணைந்தும் தனிப்பட்ட முறையிலும்
அவரது எழுத்துக்களின் ஈழத்து வேர்களும் மேற்கத்திய மணமும் ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன. சென்னையில் தனது வாழ்க்கையைக் குறித்து அவர் எழுதியிருந்த இடுகையில் பயன்படுத்திய சொல்லாடல்கள் மறக்க முடியாதவை.
திடீரென்று நான் ரசித்த காதல் கதைகள் என்று ஒரு பெரிய திரைப்படப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இவ்வளவு படங்களைத் தேர்ந்தெடுக்க எத்தனை படங்களைப் பார்த்திருப்பார் என்று வியப்பாக இருந்தது.
இன்றைக்கும் யாராவது புதிய பதிவரின் குழப்பான நேரங்களில் எங்கிருந்தோ அவரது உதவிக் கரம் நீண்டு கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
30 கருத்துகள்:
//இன்றைக்கும் யாராவது புதிய பதிவரின் குழப்பான நேரங்களில் எங்கிருந்தோ அவரது உதவிக் கரம் நீண்டு கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.//
ஆம்! முற்றிலும் உண்மை!
என்ன திடீர்னு மத்ஹியின் துதி?
அருமையான பதிவர். நிஜமான மூத்த பதிவ்வர் அவர்தான். அவங்களுக்கு உதவி செய்வதென்றால் அல்வா திங்குறதுமாதிரி (பாத்து ச்சுகர் எகிறிடப் போகுது).
வலைமகுடம்... நல்ல பெயர்.
திலகம் விட்டுட்டீங்களே...
அடுத்து என்ன.. பூரட்சி, சூப்பர், சுப்ரீம், எல்லாம் வரப்போகுதா?
புதிய பதிவர் என்ற முறையில் ஏகப்பட்ட தடுமாற்றங்களை சந்தித்து வருகிறேன். இதோ சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் அவருக்கு சந்தேகங்களை எழுதி விடுகிறேன்
நான் பதிவுலகத்தில் கால் வைத்த காலத்தில் உதவிக் கை நீட்டியவர்.
என் நன்றிகளும், வணக்கங்களும்.
சிவா, உண்மையைச் சொல்லணுமுன்னா இவுங்களுக்குத்தான்
முதல் மகுடம் சூட்டி இருக்கணும். நாங்கெல்லாம் ஓசைப்படாம
அப்பத் தலையைக் குனிஞ்சு ஏத்துக்கிட்டோம்(-:
எனக்கு இவுங்கதான் 'குரு'. செஞ்ச உதவியைச் சொல்லி மாளாது.
மதி கந்தசாமி - வலை மகுடம் ..சந்தேகமில்லை!
நன்றி நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ், செல்வேந்திரன், தருமி ஐயா, துளசி அக்கா, ஜோ.
//என்ன திடீர்னு மத்ஹியின் துதி?//
நான் மதிக்கும் பல பதிவர்களைப் பற்றி என் கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறேன். அவ்வப்போது பதிகிறேன்!
முந்தைய இடுகைகள்
//இதோ சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் அவருக்கு சந்தேகங்களை எழுதி விடுகிறேன//
அவராகப் பார்த்து உதவுவார் :-)
//உண்மையைச் சொல்லணுமுன்னா இவுங்களுக்குத்தான் முதல் மகுடம் சூட்டி இருக்கணும்.//
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் தமிழ்ப் பதிவுலகை வளப்படுத்துகிறார்கள், அதைப் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு
அன்புடன்,
மா சிவகுமார்
//அருமையான பதிவர். நிஜமான மூத்த பதிவ்வர் அவர்தான். அவங்களுக்கு உதவி செய்வதென்றால் அல்வா திங்குறதுமாதிரி///
ithuvum unmai
//இன்றைக்கும் யாராவது புதிய பதிவரின் குழப்பான நேரங்களில் எங்கிருந்தோ அவரது உதவிக் கரம் நீண்டு கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்//
unmai unmai
//மதி கந்தசாமி - வலை மகுடம் ..சந்தேகமில்லை! //
marupidiyum unmai
பிரமிக்கத்தக்க, மிகப்பரந்த வாசிப்பு , ரசிப்புத்தளங்கள், உடையவர்.
புதியவர்களை அடையாளங்காணவும், புதியவர்கள் அடையாளங்காணவும், உதவும் உறவாளர்.
இணையம் தவிர்ந்தும், செயலும், உதவலும், புரிபவர்.
பாராட்டுக்குரியவர்.
தகமைக்குக் தகமை சேர்த்த தகமைக்கும் நன்றி.:)
மதியை ஆண் என்று நினைத்து மெயில் அனுப்பிய அனுபவமும் எனக்குள்ளது.
நட்சத்திர பதிவாளராக ஒரு வாரம் இருக்க முடியுமா என்று எனக்கு மின்னஞ்சல் வந்ததிலிருந்துதான் அவரை எனக்கு தெரியும்.
உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. அவருடைய யோசனையில்தான் நான் 'சூரியன்' என்ற தொடரையே துவக்கினேன். தி.பா. தொடரில் எழுத முடியாத விஷயங்களை ஒரு புதினமாக எழுதலாமே என்று அவர் கேஷுவலாக தெரிவித்த யோசனை.. சுமார் 200 பதிவுகள் அளவுக்கு அதை கொண்டுபோக தூண்டியது...
நீங்கள் கூறியுள்ளது போலவே அவருடைய ஈழ பாணியிலான நடையும் என்னை மிகவும் கவர்ந்த அம்சங்களில் ஒன்று..
அவருக்கு மகுடம் சூட்டியது மிகவும் பொருத்தமான விஷயம்...
வாழ்த்துக்கள் உங்களுக்கும்..
மதியக்கா ஒருமுறை "அளப்பறை: என்று என்னை செல்லமாக விமர்சித்திருந்தார். அளப்பறை என்றால் என்ன மீனிங்?
இப்படி நீ கேட்டு இருக்க பார் அதுக்கு பேர் தான் அளப்பறை.
ஒன்னோட ரவுசுக்கு அளவே இல்லையா?
ரவுசு என்றால் என்ன மீனிங்?னு கேட்டுறதப்பா..
நன்றி துர்கா, மலைநாடான், ஜோசப் சார்.
லக்கிலுக், பாலா உங்க கேள்விக்கு விடை கிடைக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்,
மா சிவகுமார்
அருமையான தேர்வு சிவகுமார். தமிழில் வலைப்பதிவுகள் வேரூன்றுவதற்கு மிகவும் பாடுபட்டவர் மதி. வலைப்பதிவுகளைப் பலரும் எள்ளிநகையாடிய காலத்தில் தனியொருவராக நின்று பணி செய்தவர். தனித்தனியே பலரிடம் பேசி வலைப்பதிவுகளைத் தொடக்கிக் கொடுத்தவர். நீங்களே சொன்னபடி வலைப்பதிவுகளுக்கென்று ஒரு திரட்டி வேண்டும் என்று ஒன்றை உருவாக்கியவர். அப்படி உருவாக்கியதுதான் இப்போது தமிழில் இத்தனை பேர் வலைபதிவதற்குக் காரணமென்றால் மிகையில்லை. இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக வலைப்பதிவுகள் இருப்பதற்கும் இவர்தான் காரணம். அவருக்கு என்னுடைய நன்றியும் வணக்கங்களும்.
சூடான இடுகைல மேல இருந்ததே. இப்போ காணப்போயிடுச்சு. தமிழ்மணத்துக்காரங்களுக்குப் பொருக்கலப்போல. வாழ்க தமிழ்மணம்.
பி.க. testing
மா.சி.
ஆஹா.. இதென்னது?!
இடுகைக்கு நன்றி மா.சி.
வலைப்பதிவுகள் ஒரு மாற்றூடகமாகச் செயல்படும் என்ற நம்பிக்கை நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்தது. [இப்போதும் இருக்கிறது.] முக்கியமாகத் தமிழில் வலைப்பதிவுகள் ஒரு great levellerஆக இருக்கும் என்று நினைத்தேன். அப்போது குழுமங்களில் இருந்த சூழ்நிலை இந்த எண்ணத்தை வலுப்படுத்தியது. என்ன கொடுமைன்னா, அந்த மனப்பாங்கு இப்போது இங்கே அப்படியே இடம் மாறி வந்துவிட்டதுதான். இந்த முதுகுசொறிதல்களுக்கும், மொக்கை/மொட்டை/மொண்ணைகளுக்கும், தரக்குறைவான நேரடி/மறைமுகத் தாக்குதல்களுக்கும் (மூத்த பதிவர்களும் விதிவிலக்கில்லை என்பதுதான் சோகம்) இடையில் இன்னமும் நம்பிக்கை புதிய பதிவர்களின் வடிவில் துளிர் விடுகிறது. உலகின் பல பாகங்களில் வலைப்பதிவுகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை ஒரு நாள் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. இது, வலைப்பதிவர்களின் கையிலும் இருக்கிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
சரிசரி... முடிச்சிர்ரேன். :)
பிடித்த காதல்படங்கள் பற்றி: இதுக்கு இங்கேயிருக்கும் நூலகங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். ஒரு சில படங்களைத் திரையரங்கிலும் இன்னும் சில படங்களை வீடியோக்கடையிலும் எடுத்தேன். இன்னொரு முக்கியமான காரணம், நான் ஆடிக்கொரு தரந்தான் தமிழ்ப்படம் பார்க்கிறேன். தமிழ்ப்படம் பிடிக்காதென்றில்லை. ரொம்ப சிலதுதான் என்னுடைய இரசனைக்கு ஒத்து வருது. மிச்சமெல்லாம் பல்லுக்கூசுது! :)
-0-
நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ், தருமி, துளசி, ஜோ, துர்கா, மலைநாடான், டிபிஆர், லக்கிலூக், எஸ்பா, அனானீஸ்: நன்றி, மிக்க நன்றி!!
செல்வேந்திரன்: வலைப்பதிவர்களுக்கு உதவுவதற்காக உதவிக்குழுவொன்று உள்ளது. வலைப்பதிவும் இருக்கிறது. சுட்டி இப்ப கைவசம் இல்ல. மா.சி.யின் ஃப்ரொஃபைல் பாருங்க. இருக்கும். எனக்கும் எழுதலாம். mathygrps at gmail dot com. நன்றி!
-மதி
நல்ல பதிவு!
மதிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
//சூடான இடுகைல மேல இருந்ததே. இப்போ காணப்போயிடுச்சு. தமிழ்மணத்துக்காரங்களுக்குப் பொருக்கலப்போல. வாழ்க தமிழ்மணம்.//
அனானி,
24 மணி நேரம் தாண்டியதும் போய் விட்டது.
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க மதி,
சமூகத்தின் குறைகளை தொழில் நுட்பத்தால் மாற்றி விட முடியாது என்பார்கள். குழுமங்களானாலும், பதிவுகளானாலும் தனியே ஒரு குணம் கொண்ட தமிழர்கள்தானே நாமெல்லாம் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
//வலைப்பதிவுகளுக்கென்று ஒரு திரட்டி வேண்டும் என்று ஒன்றை உருவாக்கியவர். அப்படி உருவாக்கியதுதான் இப்போது தமிழில் இத்தனை பேர் வலைபதிவதற்குக் காரணமென்றால் மிகையில்லை. இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக வலைப்பதிவுகள் இருப்பதற்கும் இவர்தான் காரணம்.//
அனானி,
முற்றிலும் உண்மை. நன்றி.
அன்புடன்.
மா சிவகுமார்
நன்றி சந்து.
அன்புடன்,
மா சிவகுமார்
தமிழ் வலையுலகின் பிதாமகள் அவர்களுக்கு வணக்கங்கள்.
/தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு காவல் தேவதை /
விழா எடுக்கும் திட்டம் இருந்தால் எனக்கும் அழைப்பு உண்டுதானே!
நன்றி, சிவகுமார்!
//வலைப்பதிவுகளுக்கென்று ஒரு திரட்டி வேண்டும் என்று ஒன்றை உருவாக்கியவர்.//
சிவகுமார் நீங்கள் தமிழ் வலைப்பதிவுகள் பட்டியலை [http://tamilblogs.blogspot.com/]குறிப்பிடுகிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் திரட்டியை குறிப்பிடுகிறீர்களா?
மாசி,
உங்கள் முஹஸ்துதி, அதற்கு மற்றவர்களின் ஜால்ராக்கள், பாராட்டப்பட்டவரின் கூச்சமில்லாத ஏற்புரை எல்லாம் தமிழ்நாட்டு அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவதாக உள்ளது. இணையவெளியின் சிறப்பே மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்கக் கூடியதான சாத்தியம் தான். இணையபோதைக்கு அடிமையான, வேறு உருப்படியான வேலையின்றி கழிப்பதற்கு ஏராளமான பொழுது உடைய எவரும் செய்யக்கூடியது தான் நீங்கள் பாராட்டியுள்ளவர் செய்திருப்பது. தொழில்நுட்ப ரீதியாக தமிழ்ப் பதிவுலகுக்கு காசி, சாகரன் மாதிரி மதி ஏதாவது சுயமாக, முன்னோடி என்று சொல்லக்கூடிய வகையில் செய்திருந்தால் சொல்லுங்கள். நானும் உங்களோடு சேர்ந்து பாராட்டுகிறேன். சராசரி இணைய அறிவுகொண்டவர்களுக்கு தெரிந்த டிப்ஸ்கள் கொடுத்ததற்காகவோ, மற்றவர்கள் ஏதாவது செய்யும்போது அதில் உள்நுழைந்து பெயர் தட்டிச்செல்வதற்காகவோ அவர் வலைமகுடம் என்றால், உங்கள் மதிப்பீட்டின்படி மற்றவர்களை "வலைச் செருப்புகள்" என்று தான் சொல்லவேண்டும். இதே ரீதியில் வலைப் பதிவில் ஏராளமான குப்பைகள் கொட்டும் இட்லிவடை, பாஸ்டன் பாலா கூட "வலை மகுடங்கள்" தான்.
இணையவெளித் தமிழ்ச்சூழலில் பல திடீர் சாதனையாளர்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. நாலு நூல்களைப் படித்து இணையத்தில் கதை எழுதிப் பார்த்தவர்கள் இலக்கியவாதிகள். நூல்களைப் பற்றி அரைகுறையான கருத்துக்களை உதிர்த்தவர்கள் விமர்சகர்கள். Your namesake and Mathy's former friend is an example of this shameless kind.
அன்புள்ள சிவகுமார்
நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளவை சரிதான். எனினும் ஆர்வக் கோளாறால் பின்னூட்டத்தில் வந்த தகவலை அதன் வரிகளின் பொருளை உணராமல் நீங்கள் உறுதிப் படுத்தி விட்டீர்கள்.
தமிழ் வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கியவர், வலைப்பூவை நடத்தியவர், பல ஆரம்ப பதிவர்களுக்கு வழிகாட்டியவர் என்பவை மதியின் பெருமைக்குரிய செயல்பாடுகளே.
ஆனால் தமிழின் முதல் திரட்டியை உருவாக்கியவர் என்று கூறுவது எனக்கு புரியவில்லை. தமிழின் முதல் திரட்டி தமிழ்மணம் என்றால் அதை உருவாக்கியவர் காசி ஆறுமுகம். மதி வேறு எந்த திரட்டியை உருவாக்கினார் என்று தெரியவில்லை.
பின்னர் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழுவில் மதியும் பங்கேற்றிருந்தார் என்பது உண்மை. ஆனால் தமிழ்மணம் என்பது முழுக்க காசியின் தொழில்நுட்பப் படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதைக் கூறுவதால் மதியின் பெருமையை குறைப்பதாகாது என்றே கருதுகிறேன்.
பின்னூட்ட தகவலின் பிழையால் இங்கேயும் இணைய அரசியல் புகுந்து விட்டது வருத்தமளிக்கிறது.
//நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளவை சரிதான். எனினும் ஆர்வக் கோளாறால் பின்னூட்டத்தில் வந்த தகவலை அதன் வரிகளின் பொருளை உணராமல் நீங்கள் உறுதிப் படுத்தி விட்டீர்கள்.//
சிந்தாந்தி,
நீங்கள் சொல்வது சரிதான். பின்னூட்டத்தில் நான் சொதப்புவது இது முதல் முறை இல்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
//உங்கள் முஹஸ்துதி, அதற்கு மற்றவர்களின் ஜால்ராக்கள்,//
அனானி,
நான் உணர்ந்த, நான் மதிக்கும் பணியைச் செய்பவர்களைப் பாராட்டுவதைத் தொடர்ந்து செய்து வருவேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக