1995ல் மதுரை மாவட்டத்தில் ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சுடுகாடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது.
ஒரு தனியார் குத்தகைதாரருக்கு வேலையை கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த ஆணையை பின்பற்ற மறுத்து அப்போதைய கூடுதல் ஆணையர் (DRDA), திரு உமாசங்கர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதி மன்றம், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது (WP No 15929/1995). இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த வழக்கின் சிபிஐ விசாரணை எந்த நிலையில் உள்ளது?
=========================
சமீபத்தில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசால் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், ஊழல்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்.
5 கருத்துகள்:
சில மாதங்களுக்கு முன்னர்... அல்லது சில ஆண்டுகளா? மதுரை நீதிமன்றத்தில் உமாசங்கர் சுடுகாட்டு வழக்கில் சாட்சி கூறியதாக செய்தித்தாள்களில் படித்த நினைவு இருக்கிறது.
எப்படியோ, சில நாட்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதுரை ஆட்சித் தலைவர் சம்பத் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.
ஜெ ஆட்சியின் பொழுதும் உமாசங்கர்
மாற்றப்பட்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகினார். பின்னரே சுடுகாட்டு பிரச்னை வெடித்தது.
வணக்கம் பிரபு ராஜதுரை,
முதல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்து ஊழல் (1990களில்) இது.
அதன் பிறகு நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று அறிகிறேன். அதற்கு சட்ட ரீதியாக என்ன செய்ய முடியும்?
அன்புடன்,
மா சிவகுமார்
பதில் கிடைத்து விட்டது:-)
இன்றைய தினகரனில் செய்தி. உமாசங்கர் ஆப்செண்ட். சுடுகாட்டு வழக்கு தள்ளிவைப்பு. ஆம், உமாசங்கரின் குறுக்கு விசாரணை இன்னமும் முடியவில்லை...எப்படியும் வழக்கு 20 வருடங்களுக்குள் முடிவுக்கு வந்து விடலாம்...
//எப்படியும் வழக்கு 20 வருடங்களுக்குள் முடிவுக்கு வந்து விடலாம்...//
:-(
கருத்துரையிடுக