வெள்ளி, ஜூலை 16, 2010

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 6 - தமிழீழ மக்களுக்கு

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது - உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே...

ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான், கைவிடப்பட்ட நிலைமைக் காலங்கள்தான் சிறந்த மக்கள் தலைவர்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம்.

அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

aiyoo paavam. b'cos of u kind of peoples the tamil peoples of srilanka still living in hell.

பெயரில்லா சொன்னது…

muthukumar is an psychopath

பெயரில்லா சொன்னது…

"தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம்."

நடமாடும் எரிமலை அண்ணன் சீமான் தலைமையில் அகண்ட தமிழகம் உருவாக அனைத்துப்பதிவர்களும் அல்லும், பகலும் அயராது பாடுபடுவோம்.

மா சிவகுமார் சொன்னது…

அனானி 1, அனானி 2,
மனிதர்கள்தானே நீங்கள்?

பாலா சொன்னது…

இணையத்தில் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் மற்றும் செய்திகளுக்கு கீழ்த்தரமாக பின்னூட்டம் இடுவதற்கு சிங்களத்தால் நியமிக்கப்பட்ட தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள்.. சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் மட்டும் ஏறக்குறைய 17 பேர் நியமிக்கபட்டுள்ளார்கள். ஆகையால் நீங்கள் அனானிகளுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்..