செவ்வாய், ஜூலை 06, 2010

ஐரோப்பியர் மனிதர்கள், இந்தியர்கள் இருதயமற்றவர்கள்

வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்திலிருந்திலிருந்து இலங்கையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டாலும், பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கு இலங்கை அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஜூலை முதல் தேதிக்கு முன்பு இதற்கான பதில் கிடைக்காததால் இலங்கைக்கு ஜிஎஸ்பி ரத்தாகிறது - பிபிசி செய்தி.

பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கை அரசின் அட்டூழியங்கள் கண்ணில் படுகின்றன. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் கண்ணடைத்துப் போயிருக்கிறது.
  • தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் அரசியல் அமைப்பை செயல்படுத்தும் வரை இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதார / அரசியல் தடைகளை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும்.

  • இதற்கான முன்முயற்சிகளை தமிழ்நாடும், இந்திய அரசும் செய்ய வேண்டும்.

  • தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிரான தடைகளில் இந்தியா முன்னிலை வகித்தது போல இலங்கை அரசுக்கு எதிராகவும் செயல்பட வேண்டும்.
(தொடரும்)

7 கருத்துகள்:

L நாச்சியப்பா சொன்னது…

I fully support this. Yarukko seythathai indru nam sakotharaththukkaka seyvom

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கை அரசின் அட்டூழியங்கள் கண்ணில் படுகின்றன. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் கண்ணடைத்துப் போயிருக்கிறது.//

சத்தியமான வார்த்தைகள்.. தலைப்பும் கூட.. :(((

மா சிவகுமார் சொன்னது…

நன்றி நாச்சி, பாலா!

இரண்டு ஆண்டுகள் முன்பு வரை தீவிர வாத எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தியாவின் வாசல் முற்றத்தில் நடக்கும் இந்த அநியாயத்தைக் கண்டிக்க வாயில்லாமல் இந்திய அரசு நிற்பது நமக்கெல்லாம் அவமானம்.

Robin சொன்னது…

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அங்குள்ள தமிழர்களும் சேர்ந்துதானே பாதிக்கப்படுவார்கள் ?

மா சிவகுமார் சொன்னது…

ஆமாம் ராபின்.அங்கிருக்கும் தமிழருக்குத்தான் இன்னும் கூடுதல் சுமை.

தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை எதிர்த்த பலர் இதைச் சுட்டிக் காட்டினார்கள் (அங்கிருக்கும் கறுப்பு இனத்தவருக்கு சிரமம்தானே!).

பாலா சொன்னது…

வெளியுறவு செயலாளர் துறையில் உள்ள நெருங்கிய நண்பர் சொன்னது.. சராசரி வாழ்வாதார பிரச்னைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் கொடுத்து எப்படி சாதிக்கிறார்களோ அதைப்போல் தான் இலங்கை இந்திய வெளிடுறவு துறையில் நன்கு பணத்தை கொண்டு விளையாடுகிறது.. முக்கிய இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமாக இரு தீவுகளே உள்ளது என்றால் எந்த லட்சணத்தில் இந்திய அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். சில நேரங்களில் வேறுவிதமான கவனிப்புகளும் நடக்குமாம்.. ஏன் இலங்கை துணை தூதர் சென்னையில் நிருபர்களுக்கு விருந்து அளித்து கவர் குடுக்கவில்லையா.. இந்தியா என்கிற பெயருக்கான மரியாதை பொய் பல நாட்கள் ஆகிவிட்டது உலக அரங்கில். அதிகாமான நுகர்வோர் உள்ள நாடு என்கிற ரீதியில் மட்டுமே இந்தியாவுக்கு இனி உலக அரங்கில் மரியாதை..

மா சிவகுமார் சொன்னது…

உண்மைதான் பாலா!

1980கள் வரை இந்தியா ஏழை நாடு என்று ஒதுக்கப்பட்டாலும், வெளிநாடுகளுடனான உறவில் அடிப்படை கொள்கை சார்ந்த நடைமுறையை கடைப்பிடித்து வந்தது.

1991லிருந்து ஆரம்பித்த கார்பொரேட் அரசு முறையின் கீழ், 'எது எப்படி ஆனாலும் சரி, எனது வயிறு நிரம்பினால் சரி' என்ற மனப் போக்குடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் வந்து விட்டார்கள்.

அமெரிக்காவின் carpet baggers போல, இருப்பதை தனது சாக்குப் பையில் நிரப்பிக் கொள் முயலும் அவசரம்தான் தெரிகிறது. நீண்ட கால நோக்கும், மனித நேயமும் மறைந்தே போய் விட்டதாகப் படுகிறது.

இதிலிருந்து இந்திய அரசியல் மீள்வது கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் (அது நடக்க முடியாத ஒன்று) ஆரம்பமாகலாம். காங்கிரசு, பாஜாக அல்லது இரண்டும் சேரா சமாஜ்வாதி/பகுஜன் சமாஜ், திமுக/அதிமுக, தெலுகுதேசம் கட்சிகளின் கூட்டணி அரசுகள் இதே பாதையில்தான் போய்க் கொண்டிருக்கும்.

மக்கள் மத்தியில் கருத்தாக்கம் மாறினால் அரசியல்வாதிகள் மேல் அழுத்தம் ஏற்படலாம்.