வியாழன், அக்டோபர் 05, 2006

பின்னூட்டத்துக்கு பரிசு பெறுபவர்

சென்ற வாரம் பின்னூட்டத்துக்கான பரிசு பெறுபவர் பொன்ஸ். அவருக்கு லூயி பிஷரின் Mahatma Gandhi (Biography) பரிசாக அனுப்பி வைக்கப்படும். வாழ்த்துக்கள்

பின்னூட்டங்களை மதிப்பிட்டு சிறந்த பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்த சிவஞானம்ஜி ஐயாவுக்கும், துளசி கோபால் அக்காவுக்கும் நன்றிகள்.

பின்னூட்டங்களின் அட்டவணை இங்கே.

4 கருத்துகள்:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

வாழ்த்துகள் பொன்ஸ்!

துளசி கோபால் சொன்னது…

பொன்ஸ் அம்மாடி,

வாழ்த்து(க்)கள்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

சிவகுமார், சிவஞானம்ஜி, துளசி அக்கா,

எல்லாருக்கும் நன்றி :) பரிசுக்குத் தேர்வு செய்ததற்கு...

பின்னூட்டங்கள் போட்ட போது இந்தப் பரிசைப் பற்றி எந்த யோசனையும் இருக்கவில்லை. அரைகுறையாக தெரிந்த விஷயமாக இருக்கிறதே, சரியாகத் தெரிந்து கொள்வோமே என்று தான் படிக்கத் தொடங்கினேன். பரிசுக்குத் தேர்வு செய்ததில் மெத்த மகிழ்ச்சி.

சின்ன யோசனை: பொருளாதாரப் பாடத்துக்கான பரிசு எனில், பொருளாதாரப் புத்தகங்களாகவே இருக்கலாம் இல்லையா.. அல்லது ஏதேனும் புத்தக கூப்பன் - பொருளாதாரம் தொடர்பான புத்தகத்தை வாங்கிக் கொள்வதற்கு..

நீங்கள் கொடுத்த பட்டியலில் புத்தகத்தை முடிவு செய்வது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.. அப்புறம் இந்த லூயி பிஷர் கொஞ்ச நாட்களாகவே படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்ததால், தப்பித்தேன் :)

மா சிவகுமார் சொன்னது…

நீங்கள் சொல்வது சரிதான் பொன்ஸ்.

கடைசியில் எல்லா பின்னூட்டங்களிலும் மிகச் சிறந்ததற்கு Paul Samuelson எழுதிய Economics என்ற புத்தகம் காத்திருக்கிறது. ஆதம் ஸ்மித்தின் புத்தகம் போன வாரமே பத்மா அரவிந்த் எடுத்துக் கொண்டு விட்டார்.

பொருளாதாரம் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததுதானே. ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம் கூட வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடும்.

அன்புடன்,

மா சிவகுமார்