வியாழன், அக்டோபர் 12, 2006

ஆண்களுக்கு மட்டும்தான் உதவும்

யூதர்களும், முஸ்லீம்களும் பின்பற்றும் ஒரு பழக்கம் ஆண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆண்குறியின் நுனித்தோலை வெட்டி விடுவது . என்னுடைய முஸ்லீம் நண்பர்கள் சிறுநீர் கழித்த பிறகு ஆண்குறியை நீரால் கழுவுவதையும் வழக்கமாக வைத்திருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்குறியின் முனையை மூடியிருக்கும் தோலின் பின்பக்கம் அழுக்கு சேர்வது இயல்பாக நடக்கிறது. தோலின் மடிப்புகளுக்குப் பின்னால், சுரப்புகளின் காய்ந்த துகள்கள் சேர்ந்து விடுகின்றன. ஆங்கிலத்தில் smegma எனப்படும் இந்தப் படிவுகள் துர்நாற்றத்தை உருவாக்குவதுடன், உணர்ச்சி பூர்வமான இந்தப் பகுதியில் மேல் தோலுடன் உராய்ந்து சிரமத்தைக் கொடுக்கின்றன. சில நேரம் பாக்டீரியாக்கள் சேர்ந்து எரிச்சலையும் உருவாக்கலாம்.(balantis)

குளிக்கும் போது நுனித் தோலை முற்றிலும் பின் தள்ளி தோல் குறியுடன் இணையும் இடத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது இதை நீக்குவதற்கான வழி. சோப்புகள் எதையும் பயன்படுத்தாமல், தூய்மையான குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தலை செய்யலாம். மிகக் கவனமாக தோலையோ, உறுப்பையோ காயப்படுத்தி விடாத வணணம் தினமும் சுத்தம் செய்வது நலனைத் தரும்.

4 கருத்துகள்:

Muse (# 01429798200730556938) சொன்னது…

ஆண்களுக்கு மட்டும்தான் உதவும்

அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம்.

பத்மா அர்விந்த் சொன்னது…

சிவகுமார், உடல் உறவிற்கு முன்னும் பின்னும் சுத்தப்படுத்துதல் கூட நலம். இது மனிவியருக்கு (partner)சிறுநீர் குழாயில் வரும் infection (UTI)ஐ குறைக்கும். நம் ஊரில் பல பெண்கள் இதனால் அவதிப்படுவது மருத்துவமனியில் தெரிய வரும்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி மியூஸ்.

இதைப் பற்றி நான் முதன்முதலில் படித்தது காந்தி எழுதிய 'ஆரோக்கியத் திறவுகோல்' என்ற புத்தகத்தில். அப்புறம் நேற்றுதான் இணையத்தில் தேடி விக்கிபீடியா கட்டுரைகளையும் படித்தேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பத்மா,

அவ்வளவு பரவலாக மருத்துவமனைகளில் தெரியவரும் பிரச்சனைகளுக்கு ஏன் பிரச்சார முறைகளில் விபரம் ஊட்ட முனைவதில்லை நம் ஊரில். அடிப்படை தூய்மை முறைகளைக் கடைப்பிடித்தாலே பல நோய்களைத் தவிர்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்