திங்கள், ஏப்ரல் 16, 2007

ஆர்எஸ்எஸ் ஒரு அபாயம் - 2

'சங்கத்தின் வழியே ஒரே வழி, சங்கத்துக்கு பணி புரிவதே ஒரே நோக்கம், அதற்குத் தடையாக வருவதை எல்லாம் ஈவு இரக்கமின்றி தியாகம் செய்து விட வேண்டும்' என்று போதிக்கும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.

'ஒரு வீட்டின் நன்மைக்காக ஒரு தனி மனிதனையும், ஒரு கிராமத்தின் நன்மைக்காக ஒரு குடும்பத்தையும், ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு கிராமத்தையும் பலி கொடுப்பது தவறில்லை' என்று நம்பும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.

'இந்தியா என்பது ஒரே நாடு, அதன் மொழி ஒரே மொழி, அதன் மக்கள் ஒரே இனத்தினர், அதன் பண்பாடு ஒரே பண்பாடு, அதன் மதம் ஒரே மதம்' என்று பேரின வாதத்தின் அடிப்படையில் இயங்குவது ஆர் எஸ் எஸ்.

'மனிதர்களை விட நாட்டில் எல்லைகள்தான் புனிதமானவை, தனி மனித உரிமைகளை விட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வழிமுறைகள்தான் உயர்ந்தவை' என்று அதற்காகக் கண் மூடித்தனமாக போராடும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.

முன்பே சொன்னது போல ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் அனைவரும் அப்பழுக்கில்லாதவர்கள், மக்கள் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். குடும்ப வாழ்க்கையைக் கூட தியாகம் செய்து இயக்கப் பணிக்காக வாழ்வை கழிப்பவர்கள்.

ஆனால் அவர்களது இலக்கு பயங்கரமானது. அவர்கள் கனவு காணும் இந்தியா என்ற ஒரு தேசம் எந்த காலத்திலும் இருந்ததில்லை. இன்றைக்கு இருப்பது போலவே பல்வேறு இனத்தவரின், பலமொழிகள் பேசுபவர்களின், பல மதங்களைப் பின்பற்றுவர்களின் நிலப்பரப்பாகவே இருந்து வந்திருக்கிறது இந்தியா.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை இனத்தவரும், கறுப்பு இனத்தவரும், மஞ்சள் இனத்தவரும் இந்தியா முழுவதும் பரவியிருந்திருப்பார்கள் என்பது நமது தோல் நிறத்தைப் பார்த்தாலே தெரிய வரும். ஒரே குடும்பத்தில் கறுப்பும், வெளுப்பும், பழுப்பும், மஞ்சளும் கூடத் தென்படுகின்றன (குமரி மைந்தன் மாற்று கருத்தைக் கூறினார்). இந்தியா முழுவதும் ஒரே இனம், ஒரெ மொழி ஒரே ஆட்சி நடந்தது என்பது 56 தேசங்களைத் தன் குடைக்கீழ் ஆட்சி புரிந்தான் என்பது, கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை என்று கணக்கிட்டு 56ஆக வருவதாகத்தான் இருந்திருக்கும்.

இந்தியாவின் நிலப்பரப்புக்கு ஏற்ற ஆட்சி முறை, மக்களாட்சி முறை. தனிநபர் உரிமைகள். ஒவ்வொரு சமூகமும் தமது சிறப்பு குணங்களைப் போற்றி மற்றவர்களின் குணங்களை மதித்து வாழும் வாழ்க்கை முறைதான் நமக்குப் பொருந்தும்.

இங்கு இசுலாமியர்கள் தமது நம்பிக்கையைப் பின்பற்றி, தமக்கு என்று தனி சட்டத்துடன் வாழவும், இந்துக்கள் தமக்குரிய சட்டத்துடன் வாழவும், தமிழர்கள் தமது மொழியைப் போற்றி தமிழில் பொதுப் பணிகளை நடத்தவும் இடம் இருக்கிறது. 'ஒரே தேசிய மதம், ஒரே தேசிய மொழி, ஒரே தேசிய இனம்தான் இந்தியா மற்றவர்கள் வாழலாம், இரண்டாந்தரக் குடிமக்களாக தேசிய கொள்கைகளுக்கு அடிபணிந்து இருக்கும் வரை' என்ற இந்துத்துவா வழிமுறை கனவில் மட்டும்தான் சாத்தியமாகும்.

ஆனால் அந்தக் கனவை அடைய எந்தக் கொடுமைக்கும் தயாராக இருப்பவர்கள் இந்துத்துவா வாதிகள். அவர்களைப் பொறுத்த வரை இலக்கை அடைவதற்காக கொடுக்கப்படும் விலையாக எந்தப் பலியையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.

1980களிலும், 90களிலும் ஏதாவது மாவட்டத்தில் மதக் கலவரங்கள் நடந்தால் அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று விடும் என்பதை செய்திகளில் அவதானித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அனுதாபம் காங்கிரசுக்கு மாற்றான பாஜகவிடம் இருந்தது. மதக்கலவரங்களை எப்படித் திட்டமிட்டுத் தூண்டி விடுவார்கள், மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வன்முறைக்கு எப்படி வித்திடுவார்கள் என்பதை நாகர்கோவிலில் நேரடியாகப் பார்த்தவன் நான்.

என்னதான் பசு வேசம் போட்டாலும் ஓநாயின் பற்களும் நகங்களும் தேவையான இடத்தில் வெளிப்பட்டு விடும். தமது நோக்கத்தை அடைய சாம பேத தான தண்டம் என்று எந்த வழியையும் பின்பற்றத் தயங்காத சுத்த வீரர்கள் ஆர் எஸ் எஸ் ஊழியர்கள்.

20 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆர்.எஸ்.எஸ் என்பது வகுப்புவாத தீவிரவாத இயக்கம். இந்த இயக்கத்துக்கு முஸ்லிம் பிடிக்காது. தலித்துகளை பிடிக்காது. கிறிஸ்துவர்களை பிடிக்காது.

பிறகு யாரைத்தான் பிடிக்கும்?

சமஸ்கிருதம், பாப்பான், பாப்பார அடிவருடிகள் மற்றும் அல்லக்கைகள்.

பெயரில்லா சொன்னது…

RSS will be a necessary evil in this country as long as islamic fundamentalism and terrorism and political parties that appease minorities exist.Hinduvta has grown because of these factors.RSS and its associates run the largest network of educational institutions in India.RSS has roots
in civil society.Dont forget this.

RSS is an evil but Hindus
need it to protect from other
evils that are threats to India
and world.Unless parties practise secularism in letter and spirit
Hindus will need RSS. Modi is
a monster but compared to Saddam
Hussein he is nothing.You cannot
oppose Modi and shed tears for
Saddam in the name of secularism.
You cannot negate the highest court's verdict (Shah Bano case)
through an amendment and claim
that you are secular.If there can be an All India Muslim Personal Law Board that refuses to accept Indian Constitution why there cannot be a RSS.

பெயரில்லா சொன்னது…

நல்ல ஜல்லி பதிவு போட்டதர்கு நன்றி.
CPI, CPI(M) ் விட ஆர்.ஸ்.ஸ மோசம் அல்ல.
ஆர்.ஸ்.ஸ ஒரு அரசியல் கட்சி கூட கிீடாயாது, அதை கண்டு ஏன் பயம்.

அசுரன் சொன்னது…

மாசி,

என்னோட கேள்விகளுக்கு பதிலே சொல்லவில்லை?

காந்தியின் கள்ள மௌனமே எனக்கும் பதிலா?

அதிகாரத்துவத்தின் முகமூடியாக காந்தி செய்த அதே வேலைகளை காந்தியாவாதியாகிய நீங்களும் செய்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆம், RSS நீலகண்டனிடம் நட்பு பாராட்டுவதை விட என்னிடம் பாராட்டுவது சிரமம் தான் ஏனேனில் RSSன் எதிரி இஸ்லாமியன் உறுதியாக நீங்கள் இல்லை.


அங்கு அவருடன் இழித்துக் கொண்டிருந்து சமூக அங்கீகாரம் கொடுத்து விட்டு இங்கு போலியாக RSS எதிர் பிரச்சாரம் செய்வது என்ன விதமான நேர்மை என்று எனக்கு புரியவில்லை. இதனை அயோக்கியத்தனம், பிழைப்புவாதம் என்று நான் சொல்வேன்.

அசுரன்

மா சிவகுமார் சொன்னது…

//RSS will be a necessary evil in this country//

அனானி,

இதற்குத்தான் அரவிந்தன் நீலகண்டனிடம் பேசும் போது இராமகிருஷ்ணர் சொன்ன தேளைக் காப்பாற்றிய சாதுவின் கதை சொன்னேன். இசுலாமிய தீவிரவாதத்தை எதிர் கொள்ள வன்முறையைக் கையில் எடுத்தால் அது இந்து தருமம் இல்லை. அது ஆர்எஸ்எஸ் இயக்கம். இந்து தர்மத்தைக் காக்க சூலாயுதம் ஏந்திய மூர்க்கர்களின் கூட்டம் தேவையில்லை.

சதாம் உசேன் இருப்பதால் மோடியும் மற்றவர்களைக் கொல்லலாம் என்று சொல்வது உங்களுக்கே நகைப்பாகப்படவில்லையா?

டுமுக்கு,

ஆர்எஸ்எஸ்சின் அரசியல் முகம்தான் பாஜக. இதைப்பற்றி இனி வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.

அசுரன்,

உங்கள் கருத்துத் தீவிரவாதத்தை என் மீது திணிக்காதீர்கள். யாருடன் நான் பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ள என்னால் முடியும் என்று நினைக்கிறேன். யாரிடம் பழகினாலும் எனது மனம் திரிந்து போகாது என்ற அளவுக்கு எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது.

உங்கள் கரிசனத்துக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

I am just a reader not yet started my blog. I donot want partcipate in a biased situation.

We Expecting (6 people) Tamil Blogs to clean with Educated people .

We Hate all people who sees only wrong view.

If this goes well we all going to join and provide world vision of Tamil people in Tamil blogs. Otherwise DK guys can continue your arrogance on make people to hate periyar......
(Typical Example Vidathu Karuppu Even here Asuran)

Just see how much support can tamil people give for Periyar movie...Thats all b'cos DK is Arrogance

DOn't get ready for accusing Pappan or pappan supporter. I am a typical Hindu (not a Pappan) but accepts Hindu culture and try to remove some of the bad from Hindu culture (who thought by Periyar). He never supported any religion in his life but all DK supports all the religions except Hindu....Thats b'cos DK did not make any difference or progress after Periyar. If Jayalalitha comes to power DK supports her If Karunanidhi comes he supports him to save the money and establish DK's Business Thats why now its dimnishing

Now you can see most of the DK people they talk like they hate hindu but they say they are allowing their family members to follow the traditions.

Example .....
1. Karunanidhi allow his Family
2. Sathyaraj (Vazhum Periyar) allowhis family (amma and Wife)

They say they are respecting their rights ....They why they agaist others rights....

I appriciate you can point out the bads in a polite manner in any religion which gives the respect and also people accepts


Gohead and continue your views....Appriciated

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

என்ன மாசி லெட்டர் சீன் எப்ப முடிஞ்சு நீங்க மெயின் பிக்சரை எப்ப ஆரம்பிச்சு....அதுக்குள்ள நான் தமிழ்மணத்தை விட்டு போயிருவேன் போலிருக்கே...
இருந்தாலும் உங்களுக்காக: ''சங்கத்தின் வழியே ஒரே வழி' அப்படீன்னு சங்கம் எங்கே சொல்லியிருக்கு?
//'இந்தியா என்பது ஒரே நாடு, அதன் மொழி ஒரே மொழி, அதன் மக்கள் ஒரே இனத்தினர், அதன் பண்பாடு ஒரே பண்பாடு, அதன் மதம் ஒரே மதம்' என்று பேரின வாதத்தின் அடிப்படையில் இயங்குவது ஆர் எஸ் எஸ்//
இந்தியா என்பது ஒரே நாடு அப்படீங்கறதை ஏத்துகிடுவீங்கன்னு நினைக்கிறேன். அதன் பண்பாடு ஒரே பண்பாடு அப்படீங்கறது கூட ஏத்துக்கொள்ளத்தக்க விசயம் தான், ஆனா ஒரே மதம் ஒரே இனம் (race?) ஒரே மொழி அப்படீங்கறதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் எங்களுக்கு சொல்லி தராத விசயம்.
//தனி மனித உரிமைகளை விட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வழிமுறைகள்தான் உயர்ந்தவை' என்று அதற்காகக் கண் மூடித்தனமாக போராடும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.//
இல்லியே. பழையன கழிதலும் புதியன புகுதலும் அப்படீங்கறதுதான் நம்ம பண்பாடு. நம்ம பண்பாட்டோ ட முக்கிய அம்சமே இந்த openness (எங்கிருந்தும் மேன்மையான கருத்துகள் நம்மை அடையட்டும் - ரிக்வேதம்) தான் நம்ம பண்பாட்டோ ட முக்கிய வரையறை அம்சங்களில் ஒன்று. அப்படீன்னு எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்காங்க ஆர்.எஸ்,எஸ்ஸில்.

திருமலை சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அசுரன் சொன்னது…

நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் பழகிக் கொள்ளுங்கள். அது குறித்தா நான் கேள்விக் கேட்டேன்?

ஒரு ஜனநாயக சக்தி, நல்லவர் என்று வேசமிடுவதாக நான தங்களை சங்தேகமுறுகிறேன். அதனை பொதுத் தளத்தில் வைத்து விவாதிக்கிறேன். எனது கேள்விகளில் தவறிருந்தால் அவற்றை களையுங்கள். அதை விடுத்து கருத்து தீவிரவாதி என்று என்னை சொல்வது உங்களது இயலாமையையும் காந்தியத்தின் பொறுமை என்பது RSS போன்ற ஆதிக்க சக்திகளிடம் மட்டும்தான் எடுபடும் என்பதனையுமே காட்டுவதாக உள்ளது.

மேலும், இங்கு நான் எந்த கருத்தையும் திணிக்கவில்லை. ஒரு பக்கம் RSS பிரதிநிதிக்கு சமூக அங்கீகாரம் கொடுக்கும் ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டே இன்னோரு பக்கம் அதனை(RSS) எதிர்க்கும் மோசடி நாடகம் ஏன் என்று கேட்க்கிறேன்.

அது மோசடி நாடகம் இல்லையென்று நீங்கள் கருதுகின்ற பட்சத்தி என்னை திருத்துங்கள். அதனை விடுத்து மாசி நல்லவர்ன் என்ற கருத்தின் அடிபப்டையில் உங்களது அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிற காந்திய கருத்து தீவிரவாதியாக இருப்பது நீங்கள்தான்.

அசுரன்

மா சிவகுமார் சொன்னது…

அசுரன்,

ஒருவர் அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்தைக் கொண்டிருப்பதாலேயே அவர் கன்னியாகுமரி மாவட்டம் குறித்த கூட்டுப் பதிவில் பங்கேற்கக் கூடாது என்ற உங்கள் கருத்தைத்தான் நான் தீவிரவாதமாகக் குறிப்பிட்டேன்.

ஆர்எஸ்எஸ்சின் அடிப்படை வாதத்தை எதிர் கொண்டு சமாளிக்கும் வலிமையும் உறுதியும் இந்திய மக்களாட்சி முறைக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். அந்த மக்களாட்சி முறையில் வெவ்வேறு தளங்களின் எதிரெதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் தடை ஏதும் இல்லை என்று நினைக்கிறேன்.

அரவிந்தன் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருப்பதால் அவருக்கு வேறு எங்கும் இடம் இருக்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

உங்கள் கேள்விக்கு தெளிவு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

உங்கள் நீளமான பின்னூட்டத்துக்கு நன்றி. தமிழ்ச் சமூகத்துக்காக ஒரு நீண்டகாலத் திட்டத்தை உருவாக்கும் உங்கள் குழுவினரின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற உங்கள் கருத்து மிகச் சரியானது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அரவிந்தன்,

நீங்க லெட்டர் சீன் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே படமே முடிந்து விடும் :-), இதுதான் படங்க!

நான் சுட்டிகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்று உண்மைகள், புகைப்படங்கள் என்று தொகுத்து எழுதப் போவதில்லை. நான் என் அனுபவத்தில் உணர்ந்தவற்றை, எனக்குப் புரிந்தவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தொடர்ந்து உரையாட நமது கோணங்கள் ஒருவருக்கொருவர் புரியலாம். உங்களது பார்வை எனக்குப் புரிந்தே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

அசுரன் சொன்னது…

// இந்திய மக்களாட்சி முறைக்கு இருக்கிறது என்று நம்புகிறேன் //

ஆமாம், எந்த சமூகத்திலும் பொதுவுடமையை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறீர்கள். அஹிம்சை என்பது வன்முறை கிடையாது என்று நம்புகிறீரக்ள். இதனை கற்பானாவாதம் என்று எழுதியதற்க்கு உருப்படியான எதிர்வினை செய்யவில்லை. அப்படி செய்யும் எண்ணம் கூட உங்களுக்கில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

அது போலவே இந்திய மக்களாட்சி என்று நம்புகிறீர்கள். அதில் இருந்து கொண்டே RSSயை எதிர்க்க முடியும் என்று நம்புகிறீர்கள். RSS யார் என்பதே உங்களுக்கு தெரியாது என்று என்னால் குற்றம்சாட்டி நிரூபிக்க முடியும். எதிரி யார் என்றே தெரியாமல் ஒரு தோல்விகரமான போருக்கு போகிறீர்கள் என்று என்னால் நீருபிக்க முடியும். ஆனால் அப்படி உங்களிடம் பேசுவதில் பிரயோசனம் இல்லை எனவே உங்களது பாணியில் வெறும் கருத்து கோர்வையாகவே இதனையும் விட்டுச் செல்கிறேன்.

ஒருவேளை இந்தியாவில் ஜனநாயகமே இல்லை என்று எழுதியதை இங்கு நான் முன் வைத்தால் அதனை விவாதித்து நிராகரிப்பது என்ற ஜனநாயகத்தைக் கூட நீங்கள் செய்ய மாட்டீர்கள்.

ஆனால் மக்களாட்சி என்று நம்புவீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு என்ன அளவுகோல் மா. சிவக்குமார்? மக்களாட்சி என்று தேர்தலில் வோட்டு போடுவதை சொல்கிறீர்களா?

வேண்டாம்... பதில் சொல்லி விவாதிக்க வேண்டாம்.. .உங்களுடனான விவாதம் எந்த பயனுள்ள நோக்கத்துடனும் நடப்பதில்லை. ஏனெனில் ஒரு பிடிவாதமான குழந்தையின் நிலையிலிருந்தே நீஙகள் விவாதம் செய்வதாகத்தான் எனது முந்தைய அனுபவங்கள் இருக்கின்றன.

ஆனாலும் நீங்கள் நம்புவீர்கள். ஏன் நம்புகிறீர்கள் என்று விளக்கம், தெளிவான விளக்கம் எதிர்பார்க்க முடியாது. எனேனில் நீங்கள் உஙக்ளது சொந்த அன்பவத்தைத்தானே எழுதுகிறீரக்ள். மக்களாட்சி குறித்தும், அதில் RSSயை வீழ்த்த முடியும் என்பது குறித்தும் உங்களது சொந்த அனுபவத்திலேதானே எழுதுகிறீர்கள் பிறகு எப்படி நான் கேள்வி கேட்க்க முடியும்.

சோசலிசம்ம் குறித்து கூட காந்தியின் வாழ்க்கை ஒன்றிலிருந்தே கற்றுக் கொண்டவர் அல்லவா நீங்கள்..... என்ன செய்ய? ஸ்டாலின் குறித்தும் மாவோ குறித்தும் கூட அரசல் புரசலாக கண்ணில் படும் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்துதேன் உங்களுக்கு தெரியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதிகபட்சம் ஜனநாயகம் குறித்தும், RSS குறித்தும் உங்களது அனுபவத்தின் ஊடாக அன்றி, அதனது சித்தாந்த, செயல் வடிவ, வரலாற்று பின்புலத்துடனும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கோரிக்கையை மட்டுமே இங்கு வைக்க முடியும் என்று உணர்கிறேன்.

ஏனெனில் RSS ஒரு பாசிச அமைப்பு என்று நிறுவுவதில் அல்ல உங்களது வெற்றி, மாறாக இந்து மதம் என்பது குறித்து அவன் இடுகின்ற ரெட்டை வேடம் இருக்கிறதலல்வா அதனை அம்பலப்படுத்துவதில்தான் உங்கள்து வெற்றி உள்ளது. அதே சூட்டுடன் அவனை தனிமைப்படுத்துவதில்தான் உங்களது வெற்றி உள்ளது.

ஆம் உஙக்ளது நம்பிக்கையின்படி அது சாத்தியமில்லை. ஏனேனில் எந்த சமூகத்திலும் பொதுவுடமையை நிலைநாட்ட முடியும் என்று நம்பும்(நம்ப மட்டுமே செய்யும்) ஒருவரால் RSS எதிர்ப்பிலும் கூட இப்படி கற்பனாவாதமாக சாதனை படைக்கும் யோசனையை முன் வைக்க முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இதோ உங்களது கேள்விகள் அனைத்திற்க்கும் வெகு சுலபமாக பதில் சொல்வார்கள் ஜாடாயுவும், நீலகண்டனும். இதோ அவர்கள் இருவருக்கும் இதுவரை தமிழ்மணத்தில் தலைமறைவாக அலைந்தவர்கள் என்று இருந்த அவப்பெயர் நீங்கி அங்கீகாரம் கொடுத்து வீட்டீர்கள். இதே ஆட்கள் 'திரு' வர்ணாஸ்ரமம் குறித்து கேட்ட கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில் சொன்னதில்லையே ஏன்? ஏனேனில் திரு அடித்த்தது சாவு மணி. நீங்கள் அடித்துள்ள் இந்த கட்டுரை ஜால்ரா மணி என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. ஆயினும் என்ன செய்ய நமது நண்பர்கள் தவறு செய்யும் போது அதனை கருணையின்றி சுட்டிக் காட்டுவது மிக அத்தியாவசியமானதாக இருக்கிறதே?

இதோ அவர்களும் வந்து விட்டார்கள் வெகு விமரிசையாக நாகர்கோவில் மீட் செகண்ட் பார்ட், தேர்ட் பார்ட் போகும்....

படிக்கும் சில மக்கள் ஆகா... என்னே அறிவு இருவருக்கும்... என்று விதந்தோம்பி பதிவு போடும் வாய்ப்பு கூட உண்டு..

நீங்கள் கொடுத்துள்ளது போன்ற அங்கீகாரங்களை எல்லாம் விட மிக வலுவான அங்கீகாரங்கள் இருக்கும் பலத்தில்தான் அவர்கள் ஆடுகிறார்கள் ஆயினும் அவையெல்லாம் நேரடியாக தம்மை RSS ஆதரவாளரக அறிவித்துக் கொண்டவை. ஆனால் மா.சியும், கடல்கன்னியும் அப்படியல்ல எனவேதான் இங்கு உங்களது இந்த ஆபத்தான உருமாற்றத்தை அறிமுகப்படுத்தி நான் எழுத வேண்டியதாகியது.

குறைந்த பட்சம் பல்லாயிரக்கணக்கனவரகளை கொன்றதை நியாயம் என நம்பும், அது போல இன்னும் பல ப்டுகொலைகளை செய்வதற்க்கான தாயாரிப்பில் இருக்கும் ஒருவருடன் உறவாடுவதை இந்தளவுக்கு எளிமையாக மாசியால் புரிந்து கொள்ள முடியுமேனில் ஆச்சர்யம்தான்.

ஆனால் உங்களது இந்த உறவு குறித்து இஸ்லாமியார்கள் சார்பில் கேள்வி கேட்டால் உங்களிடமிருந்து என்ன பதில் வரும்? எமது சகோதரர்களின் சாவுக்காக கேள்வி கேட்டால் உங்களிடமிருந்து என்ன பதில் வரும்?

நம்பிக்கை!..........

Bullshit நம்பிக்கை....(இது எனது பதில்)

உங்களது நேர்மையின் மீதான எனது நம்பிக்கை குறைந்து வருகிறது. புதிதாக கற்றுக் கொள்வது என்பது உங்களிடமில்லையோ என்று அய்யம் ஏற்படுகிறது. ஏனேனில் பாடாரென்று கதவை மூடிக் கொண்டு நான் சொல்வதை மட்டும் கேள் கேள்வி கேட்க்காதே என்ற உணர்வே உஙகளது பதில்களில் முன் நிற்கிறது.

ஆம், RSSக்கு மட்டுமல்ல, மக்கள் விரோத சக்திகள் அனைத்திற்க்கும் நான் தீவிரவாதிதான்


அசுரன்

மா சிவகுமார் சொன்னது…

அசுரன்,

இந்தியாவின் இன்றைய மக்களாட்சிதான் மிகச்சிறந்தது என்று நான் நினைக்கவில்லை. இதில் அதிகாரக் குவியலை நீக்குதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்கள் என்று பல மாறுதல்கள் தேவைப்படும். ஆனால் இன்றைய பாராளுமன்ற மக்களாட்சி முறை எந்த விதமான சர்வாதிகார அமைப்புகளை விட எந்த நாளும் சிறந்தது என்று நம்புகிறேன். (உழைக்கும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தையும் சேர்த்து)

இந்திய மக்களாட்சி முறையில் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் தலையெடுக்கத்தான் செய்யும். அதை சரியான விழிப்புணர்வினால் தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறேன். அது இல்லை என்றால் இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் இந்துத்துவா வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள். அதை தோற்கடிக்கும் பெருமை இந்திய மக்களாட்சி முறைக்கே உரியது என்று நினைக்கிறேன்.

நான் சொந்த அனுபவத்தை மட்டும்தான் எழுத முடியும். நான் படித்துத் தேர்ச்சி பெற்று துறைகளில்தான் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்குத் தேவையான ஆவணச் சான்றுகளையும் புள்ளி விபரங்களையும் மேற்கோள் காட்ட முடியும்.

மறுபடியும் சொல்கிறேன் அசுரன், கருத்து வேற்றுமைக்காக ஒருவரை பார்க்கக் கூடக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. 'நீங்கள் சொல்வதுடன் நான் முரண்படலாம். ஆனால், அந்தக் கருத்தைச் சொல்வதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாக்க பாடுபடுவேன்' என்ற தனிமனித உரிமையில்தான் உலகம் இயங்குகிறது என்று நம்புகிறேன்.

நாட்டுக்காக ஒரு கிராமத்தை பலி கொடுக்கலாம் என்ற இந்துத்துவா கொள்கைகளையோ அதற்கு ஈடான பிற சர்வாதிகார அமைப்புகளின் கொள்கைகளிலோ எனக்கு ஏற்பு கிடையாது.

நான் எழுதிவற்றிலிருந்து, என்னைப் பற்றித் தெரிந்தவற்றிலிருந்து என் மீதான நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றால் அதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். எனது வாழ்வையும், எண்ணங்களையும் இன்னும் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு அறிகுறியாக அதை எடுத்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

அசுரன் சொன்னது…

மாசி,

கருத்து வேற்றுமைக்காக பிறரை பார்க்கக் கூடாது என்று நான் சொல்லவில்லையே? பிறகு ஏன் அந்த ஜுஸ்டிபிகேஸன்.

நான் குறிப்பிட்டது RSSஉடன் நமக்கு இருக்கும் முரன்பாடு என்பது கருத்து வேற்றுமை இல்லை என்பதைத்தான்.

இல்லை என்பதற்க்கு ஆதாரமாகத்தான் வாதம் செய்ய அவர்கள் வராமல் இருப்பதை குறிப்பிடுகிறேன். அல்லது வசதியான விசயத்தில் மட்டும் வாதம் செய்யும் அயோக்கியத்தனத்தை குறிப்பிட்டேன்.

ஒரு எ-காவுக்கு: இங்கு உஙகளிடம் வாதம் செய்கின்றனர். ஏன் திருவின் பல பதிவுகளுக்கு பதில் எழுதியுள்ளனர். எனது சில ஆரம்ப கட்ட பதிவுகளுக்கு பதில் எழுதினர், ராஜவனஜ்ஜின் பதிவுகளுக்கு பதில் எழுதினர்.

ஆனால் ஒரேயொரு விசயத்திற்க்கு மட்டும் அவர்கள் எங்குமே பதில் சொல்வதில்லை. - அது வர்ணாஸ்ரமம் பற்றிய எமது கேள்விகளுக்கு.

அதில் வாதம் செய்ய அவர்கள் தாயரில்லை என்கிற போதே நமக்குள் இருபப்து வெறும் கருத்து வேற்றுமையல்ல என்பதும். அவர்களின் RSS வெறிக்கு அடிப்படை என்பது பாசிசம் என்பதும் வெளிவருகிறது.

ஏனேனில் பாசிசம்தான் எந்த ஒரு தர்க்க அடிபப்டையும் இன்றி வரலாற்றில் உருவாகும் பொதுக்கருத்தின் மீது உட்கார்ந்து கொண்டு சவாரி செய்யும் - அராஜகமாக.

எனவே மீண்டும் உங்களை எச்சரிக்கிறேன், தவறு செய்கிறீர்கள். RSSபற்றிய உங்களது புரிதல் மிகவும் மேலோட்டமாக இருக்கிறது என்று அஞ்சுகிறேன்.

இந்திய சட்டமன்ற நாடாளுமன்றத்தில் RSSக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களின் இந்து ராஜ்ய கனவிற்க்கான் பாதையில் நீங்கள் சொல்லும் போலி ஜனநாயக அமைப்பு முறை இல்லை.

அதனை அவர்கள் உபயோகப்படுத்துவது என்பது இருக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்துவது என்ற் அளவில் மட்டுமே.

எனவே தேர்தல் வெற்றி தோல்விகளை வைத்து RSS-ன் வளர்ச்சியை எடை போடுவது தவறான வழியை நோக்கி செலுத்தும்.

தேர்தல் குறித்தும் மக்களுக்கும் எந்த மாயையும் இல்லை. அதில் லாபமடையும் ஏகாதிபத்திய தரகு வர்க்க அரசியல் ரவுடிகளுக்கு எந்த மாயையும் இல்லை. உங்களைப் போன்ற நடுத்தர வர்க்கவாதிகளே அதன் புனிதத் தன்மை குறித்து சிலாகித்து வருகிறார்கள். ஏனேனில் இன்றைய வாழ்க்கையில் தியாகம் செய்யவோ, அல்லது இதன் வசதிகளை இழக்கவோ தாயாரில்லாத - அதாவது மாற்றத்தை விரும்பாத நிலையே அவர்களை அவ்வாறு சிந்திக்க சொல்கிறது.

எப்படியாவது நமது வசதியையும் தக்க வைத்துக் கொண்டு, சமூக மாற்றத்தையும் சாதிக்க முடியாதா என்ற சுய்நலமே சீர்திருத்தவாதம், அஹிம்ஸை என்று பொய்யாக பேச வைக்கீறது.

***********

இந்திய ஜனநாயக்த்தின் பெருமை இதோ இன்றூ கூட BJP MP ஒருவரால் நாறுகிறது.

சட்டமன்றத்தில் 70% மேற்ப்பட்டவர்கள் பொறுக்கிகள், நீதிமன்றங்களோ ஆட்சியில் மனு நிதிக்கு மாறாக நீதி கொடுத்ததாக இது வரை இல்லை (உபியில் பாலியல் பலாத்காரத்திற்க்குள்ளான ஒரு பெண் சமூக சேவகிக்கான தீர்ப்பில் நீதிமன்றம் சொன்னது - \"தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை ஆதிக்க சாதியினர் வன்புணர்ச்சி செய்யும் அளவு சமூக ஒழுங்கு கெட்டுப் போகவில்லை. எனவே இந்த் குற்றச்சாட்டு நம்ப இயலாதாதாக் உள்ளது\' என்று தீர்ப்பு சொன்னது).

சமீபத்திய சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடுவது குறித்த தீர்ப்பிலும் கூட நீதிமன்றம் அப்பட்டமாக மனு நிதியை வாசித்தது. இது போல ஆயிரம் உதாரணம் வைத்தாலும் கூட உங்களது வர்க்க தேவைக்காக மீண்டும் மீண்டும் காந்தி நல்லவர், இந்த சட்டமன்ற நாடாளுமன்றம் புனிதம் என்ற பொய்யை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.

மக்களே ஜனநாயகமாகதா ஒரு நாட்டில் எப்படி ஜனநாயக்ம் இருக்கும் என்ற விந்தையையாவது குறைந்த பட்சம் மாசி விளக்குவார் என்று நம்புவோம்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து பேசும் முன்பாக ஜனநாயகம் என்பது என்னவென்பதை உங்களது சொந்த அனுப்வத்தின் படி விளக்கினால் மேற்கொண்டு பேசலாம் (முன்பொரு முறை சோசலிசம் குறித்து ஒரு விளக்க்ம் கொடுத்தீர்களே அதே மாதிரி).

எனது ஜனநாயகம் குறித்த கட்டுரையையும் வாய்ப்பிருந்தால் படிக்கவும்


//
நாட்டுக்காக ஒரு கிராமத்தை பலி கொடுக்கலாம் என்ற இந்துத்துவா கொள்கைகளையோ அதற்கு ஈடான பிற சர்வாதிகார அமைப்புகளின் கொள்கைகளிலோ எனக்கு ஏற்பு கிடையாது. //

சரி கம்யுனிஸ கொள்கை இதில் வரவில்லையே? பிறகு ஏன் அதில் உங்களுக்கு ஏற்பு இல்லை?

சரி, ஒருவேளை மாசியின் வாழ்வை வளப்பமுடன் வைத்திருக்கும் இந்த மக்களாட்சி(??) பொருளாதாரத்தில் லட்சம் விவசாயிகள் செத்துப் போவது ஏற்புடையதோ? ரிலையன்ஸ் தாக்குதலில் பலர் செத்தால் கூட இது சிறந்த மக்களாட்சியே? போஸ்டர் ஒட்டினால் தேசது துரோக வழக்கப் போடும் போதும் கூட இது சிறந்த மக்களாட்சியே?

பெரும்பான்மை மக்கள் அணி திரண்டு அதிகார வர்க்கத்தின் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கிய சீன பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ அவருக்கு மோசமானது. ஏனேனில் இந்தியாவில் இறந்து போவது அப்பாவி விவசாயி, அங்கு சீனாவில் இறந்து போனது இவரது சொந்த சகோத்ரர்கள் அல்லவா அந்த பாசம்.

சக்கரம் சுழல்கிறது. முன்பு விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே விடை சொன்ன விசயங்களை மீண்டும் விவாதித்திற்க்கு கொண்டு வரும் நீங்கள் பல நாட்கள் முன்பு விவாதம் செய்த விசயத்தையே மீண்டும் இங்கு புதிதாக இடுவது ஆச்சரியமான விசயமல்ல.

இருப்பதிலேயே ஆகக் கோடூரமானதாக காந்தியிசமாக இருப்பதை முந்தைய வாதங்களில் பல்வேறு எ-காவுடன் முன் வைத்ததற்க்கு இன்று வரை நீங்கள் பதில் கொடுக்கவில்லை. ஆயினும் நீங்கள் அஹிம்சை என்பது வன்மூறையில்லாத தத்துவம் என்று நம்புவீர்கள். எது உங்களை இப்படி கண்மூடித்தனமாக எந்த அடிபப்டையும் இன்றி நம்ப வைக்கிறது?

எனக்கு தெரிந்து உங்களது நடுத்தர வர்க்க சுக வாழ்வுக்கேற்ற சித்தாந்தம் என்பதுதான் காந்தியிசத்தை இப்படி கண்மூடித்தனமாக உங்களை காதலிகக்ச் செய்கிறது.

உங்களுக்கு உண்மையில் மக்கள் மீதேல்லாம் காதல் கிடையாது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனேனில் இது வரை நம்மிடையே எழுந்த விவாதங்களில். தேர்தல், பாவா சர்வாதிகாரம், ஜனநாயகம், கம்யுனிஸம் குறித்து விரிவாகவே உங்களுக்கு எதிர்வினை தொடுத்துள்ளேன். உண்மையில் உங்களுக்கு மக்கள் நலனில் அக்கறையிருந்திருந்தால் மக்கள் நலனுக்காக என்ற பெயரில் நான் முன் வைக்கும் கருத்துக்களை கொஞ்சம் கூட உள்வாங்கி பரிசீலிக்கவே இல்லை. அல்லது சோசலிசம் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் அஹிம்சை குறித்தும் சமூக இயக்கவியல் குறித்தும் பல வாதங்களை வைத்து உங்களுடைய அடிபப்டையான புரிதல்கள் தவறு என்று நிறுவிய இடத்தில் உங்களது புரிதலை அந்த அம்சத்தில் வளர்த்திருக்கலாம். உண்மையில் மக்கள் நலனில் ஆர்வம் உள்ளவன் அது போன்றதொரு முயற்சியில் ஈடுபட்டிருப்பான்(எமது புரிதல்களை ஏற்றுக் கொள்ள் வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் கூட இல்லை என்பது உங்களை உந்தி தள்ளும் விசை வேறு எதுவோ என்கிற எனது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது)

உங்களை உண்மையில் உந்தி தள்ளும் விசை எது? பரிசீலிக்கவும்.

ஜனநாயகம் குறித்த கட்டுரைகள்:

http://poar-parai.blogspot.com/2007/02/blog-post.html

http://poar-parai.blogspot.com/2007/04/blog-post.html

http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_15.html


அசுரன்

மா சிவகுமார் சொன்னது…

அசுரன்,

ஆர்எஸ்எஸ்சின் தீவிரவாதம் மற்ற கருத்து வேறுபாடுகளை விடக் கடுமையானது என்பதை நானும் உணர்கிறேன். அதை எப்படிக் கையாளுவது என்பதில் என்னுடைய போக்கும் உங்களுடைய போக்கும் ஒரே போல இருக்க வேண்டும் என்று தேவையில்லை. எனக்கு எது சிறந்த வழி என்று படுகிறதோ அதை நான் பின்பற்றுகிறேன். அதிலிருக்கும் தவறை பொறுமையாக உணர வைத்தால் மாற்றிக் கொள்வேன். அதுவரை அந்த வழிதான் :-)

ஏற்கனவே சொன்னது போல இந்தியாவில் இன்று இருக்கும் மக்களாட்சி பல குறைகள் மலிந்தது என்பதில் எனக்கும் வாதமில்லை. ஆனால் 'இதுவரை வரலாறு கண்ட, இன்று வேறு எங்கும் இருக்கும் முறைகளை விட இந்த முறை சிறந்தது, இதையே சீர்திருத்தி மேம்பட்டதாக மாற்றவதுதான் சரியாக இருக்கும்' என்று நம்புகிறேன். 'எல்லாவற்றையும் அழித்து விட்டு ஆயுதம் தாங்கி சர்வாதிகாரம் நிறுவுவது மூலம்தான் நாம் மாற வேண்டும்' என்ற கொள்கை எனக்கு ஏற்புடையதில்லை.

வாழ்வில் வளப்பம் என்பது அவரவர் மனதில் இருக்கிறது அசுரன். மாதம் ஆயிரக் கணக்கில், ஏன் லட்சக் கணக்கில் செலவளித்து விட்டு சோகமாக இருக்கும் நபர்களையும் எனக்குத் தெரியும் ஒரு சில நூறுகளில் நிறைவாக வாழுபவர்களையும் தெரியும். என்னைப் பொறுத்த வரை எனது தேவைகளை, சொத்துக்களைச் சுருக்கிக் கொண்டு எவ்வளவு வறுமையாக வாழ முடியும் என்று முயன்று கொண்டிருக்கிறேன்.

சீனாவில் சட்டையைப் பிடித்து உலுக்கிய சர்வாதிகாரத்தின் நிலை என்ன ஆனது? அது அமெரிக்காவுக்கு தனது உழைப்பை ஏற்றுமதி செய்துதானே பிழைக்க வேண்டிய அவலநிலைக்கு வந்திருக்கிறது. தனது பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமாக வெளிநாட்டு வர்த்தகத்தை சார்ந்து இருப்பதுதான் சாதனையா?

காந்தியிசம் பற்றி எனக்கு அக்கறையில்லை. காந்தியின் வாழ்க்கையிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டேன். போன மாதம் படித்த லினஸ் தோர்வால்ட்ஸ் வாழ்க்கையிலிருந்து இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்கிறேன். இரண்டு வாரம் முன்பு படித்த ஜேக்வெல்ச்சின் புத்தகத்திலும் சில பாடங்கள் கிடைத்தன. அசுரனின் பதிவுகளிலிருந்து சில புரிதல்கள் ஏற்படுகின்றன. எல்லோரும் மனிதர்கள்தான். ஒவ்வொருவரும் தமது நிலையிலிருந்து வாழ்க்கையை அணுகியிருக்கிறார்கள். அதை திறந்த மனதுடன் அணுகி என்னை மேம்படுத்திக் கொள்வதுதான் எனது வாழ்க்கை முறை. அதற்கு வெளியிலிருந்து ஒப்புதல் தேவையில்லை :-)

என்னை உந்தித் தள்ளும் விசை என்ன என்பது எனக்குப் புரிகிறது. உங்களுக்கும் தெரிய வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் அதிகமாக திறந்த மனதுடன் நாம் பேச வேண்டும், கணேசன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

Now i AM IN UAE. I belong to Kanyakumari dist. In that Mandaikadu incidence, my father went to findout the damage, and report submitted to Communist party(marxist) At that time i was studied. Amd i joined RSS in Vadasery camp. All RSS persons are o.k . But their policy is not accepted.

பெயரில்லா சொன்னது…

Now i AM IN UAE. I belong to Kanyakumari dist. In that Mandaikadu incidence, my father went to findout the damage, and report submitted to Communist party(marxist) At that time i was studied. Amd i joined RSS in Vadasery camp. All RSS persons are o.k . But their policy is not accepted.

பெயரில்லா சொன்னது…

Now i AM IN UAE. I belong to Kanyakumari dist. In that Mandaikadu incidence, my father went to findout the damage, and report submitted to Communist party(marxist) At that time i was studied. Amd i joined RSS in Vadasery camp. All RSS persons are o.k . But their policy is not accepted.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ராம்ஸ்,

உங்க கருத்தும்தான் என்னுடையதும்.

அன்புடன்,

மா சிவகுமார்