வியாழன், ஏப்ரல் 19, 2007

பாதகம்

பாதகம் செய்பவரைக் கண்டால் பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

12 கருத்துகள்:

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

என்ன ஆச்சு ?

அன்புடன்
சிங்கை நாதன்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

அப்ப நீங்க அதை கண்ணாடிய பார்த்துதான் செய்துக்கணும்

கோவி.கண்ணன் சொன்னது…

மாசி,

என்ன ஆச்சு ?

கொள்கை தீவிரவாதிகள் யாரேனும் வம்பு செய்தார்களா ?
:)

பெயரில்லா சொன்னது…

தல

என்ன ஆச்சு...உங்களின் சமீபத்திய பதிவுகளுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் ???????

விட்டுத்தள்ளுங்க...(ஒரு உதை)

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

//பாதகம் செய்பவரைக் கண்டால் பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
//

எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் அருமையான வரிகள்!
ஆனால் இதை இப்பொழுது சொல்லும் அவசியம் என்ன மாசிக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராதே! "யாராலும்" அவ்வளவு சீக்கிரத்தில் வரவழைக்கவும் முடியாதே!


//அரவிந்தன் நீலகண்டன் said...
அப்ப நீங்க அதை கண்ணாடிய பார்த்துதான் செய்துக்கணும்
//

ஏனுங்க நீலகண்டன் கண்ணாடியை மோதி மிதித்துவிட்டால் உடைந்துவிடாதா! கவனம் நமது காலும் உடையும்:)))
அன்புடன்...
சரவணன்.

மா சிவகுமார் சொன்னது…

நண்பர்களுக்கு வணக்கம்,

நான்கு நாட்கள் விவாதத்துக்கு உரிய பதிவுகளைப் போட்ட பிறகு இன்று, எழுதி வைத்துப் பதிக்காமல் வைத்திருந்த கோப்புகளை மேய்ந்து கொண்டிருக்கும் போது இது கண்ணில் பட்டது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு சூழலில் எழுதியிருந்தது.

இப்போது விவாதங்கள், காழ்ப்புணர்ச்சி தூண்டல்கள், தனி மனிதத் தாக்குதல்கள், நேர விரயம் குறித்து வருந்தி கொண்டிருந்ததற்கு பொருத்தமாக அமைந்து விட்டது.

உங்கள் அன்புக்கு நன்றி சிங்கை நாதன், கோவி கண்ணன், ரவி. சரவணன் (உங்கள் நண்பன்) சொல்வது போல யாரும் சீக்கிரத்தில் வருத்தி விடாத படி கெட்டித் தோல்தான் எனக்கு :-)

உங்கள் அன்புக்கும் நன்றி அரவிந்தன் ;-)

அன்புடன்,

மா சிவகுமார்

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. நல்லாரிந்தா சரிதான். அதெப்படி ஆதாரமே இல்லாம உங்க அனுபவத்த சொல்லுதீக...ஈத்தாமொழி பக்கம் தென்னந்தோப்புல இந்து குடும்பங்கள் கஞ்சிக்கு வழியில்லாம அநாதையா நாலு மாசத்துக்கு மேலே கிடந்துச்சே அதெயெல்லாம் நீங்க உங்க 'அனுபவத்துல' பார்த்தீகளா சாமி அல்லது அந்த காலத்துலேயே பழமா ஸ்கூல் உண்டு நம்ம வேல உண்டுன்னுட்டு இருந்திடீயளா? நம்ம ஊருல இப்படிப்பட்ட 'பிள்ளை'களை தனியா ஒரு வார்த்தை சொல்லுவாவை. வெறும் பழம்னு சொல்லமாட்டாவை. மொந்தம் பழம் அப்படீம்பாவை. ஒருவேளை அப்படீ இருந்திட்டீயளோ அப்படீன்னு ஒரு நெனப்பு அவ்வளவுதான். பொதுவா நாஞ்சில் நாட்டு கூட்டவியல் ரொம்ப சாப்பிட்டுதான் 'பிள்ளை'களெல்லாம் மொந்தம்பழமாவிட்டாவளாம். சொல்லுவாவிய. எதோ நல்ல 'பிள்ளை'யா இருந்தீயன்னா சரிதான். மத்தபடி இந்து சமுதாயம் மாதிரிப்பட்ட பிரச்சனையெல்லாம் எங்ககிட்ட வுட்டுருங்க. காவிக்கொடிய முதமுதலா இந்த மாவட்டத்துல தூக்கி சாதிக்கு எதிரா நின்னவிய நாங்க. நாங்க அதெல்லாம் பாத்துக்குறோம். காந்தி வழி பேரன் என்னமோ கொல்கொத்தா ராசபவன்லேந்து சத்தியசோதனைக்கு இரண்டாம் பாகம் எழுதுறாப்பலயாம். அத நீங்க படிச்சு புரட்டி போத்த புத்தகத்துல போடுங்க. (நெசமாவே அது புரட்டத்தான் செய்யுது) சரியா?

உண்மைத்தமிழன் சொன்னது…

எனக்கு பாரதியின் பாடல்களில் புரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று. பாப்பாக்களிடம் "சொல்லக்கூடிய" விஷயமா இது? வன்முறையைத் தூண்டுவது போலல்லவா தெரிகிறது.. எப்படியிருந்தாலும் மகாகவவி பாரதி இப்படி பாடியிருக்கக் கூடாது..

மா சிவகுமார் சொன்னது…

உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றிகள், அரவிந்தன் :-). எனக்குப் புத்தியில் ஏறினதைச் செய்கிறேன் இனிமேலும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

உண்மைத் தமிழன்,

உருவகத்தைப் பற்றி அரவிந்தன் அழகாக விளக்கினார். அவரிடம் தனிமடலிலோ, பொதுவிலோ கேளுங்கள், எப்படி நேரடிப் பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று புரிந்து கொள்ளலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

அசுரன் சொன்னது…

Ma.Si,

நீலகண்டன் பாதகம் செய்பவரா? அப்படியெனில் அவரது முகத்தில் குத்தும் ஒரு நடவடிக்கைதான் அவருக்கு ஜனநாயக அங்கீகாரம் வழங்கும் உங்களது செயல்பாடா?


இப்போ மாசி என்ன நினைப்பார் தெரியுமா? \"என்னே விந்தை - காந்திக்கும் கூட இதே போல இரண்டு இடத்திலிருந்தும் எதிர்ப்பு வந்தது, நமக்கு வருகிறதே? ஆக நாம சரியாதான் போய்கிட்டு இருக்கிறோம்\" என்று.

ஆமாம் அவர் நினைப்பது சரிதான். இந்திய வரலாற்றில் காந்தியின் பாத்திரம் ஒரு அதிகார வர்க்க முகமூடி எனில் மாசியின் பாத்திரமும் கூட அதுதான்.

என்ன இருந்தாலும் இந்தியாவின் முதல் NGO காந்தியல்லவா?

அசுரன்

மா சிவகுமார் சொன்னது…

அசுரன்,

மனதத்துவ வல்லுனர் ஆகி விட்டீர்கள் :-)

அரவிந்தனுக்குச் சொன்னது போல இனிமேலும் எனக்குப் புரிந்த பாதையிலேயே தொடர்ந்து நடப்பேன். அதிலிருக்கும் தவறை அன்பு கொண்டு விளக்கினால் உணர்ந்து நான் மாறலாம். அது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கும் உரிமை என்று நம்புகிறேன். தனிமனித உரிமைகள், மேம்பாடுகள், மனிதர்களுக்கிடையே நல்லுறவு இவைதான் என்னைச் செலுத்துபவை. எந்த மதங்களும், இசங்களும் ஈயங்களும் என்னைக் கட்டுப்படுத்தா.

அன்புடன்,

மா சிவகுமார்