புதன், ஜூலை 04, 2007

விவசாயி - ஒரு சிறு முயற்சி

விவசாய பொருளாதாரம் பற்றிப் பல கருத்துக்கள் கல்வெட்டும், வவ்வாலும் நடத்தும் விவாதத்தில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

கல்வெட்டின் பின்னூட்டத்திலிருந்து;

===================================================================
ஒரு சின்ன திட்ட வடிவம்:

(இதில் குறைகள்/பிழைகள்/தவறான தகவல்கள் இருக்கலாம். இங்கே பொதுவில் பேசுவதே அனுபவம் உள்ளவர்களுடம் இருந்து சரியான தகவல்களைப் பெறுவதற்கே. எனது அனுமானங்கள் தவறு என்னும் பட்சத்தில் திருத்தவும்)
  1. தக்காளியின் விலை எல்லா காலத்திலும் சீராக இருப்பதில்லை. 5% ஏற்ற இறக்கங்களை ஒத்துக் கொள்ளலாம்.
  2. ஆனால் கிலோ 5 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக மாறுவது என்பதும் அதுவே தீடிரென்று 8 ரூபாயாகக் குறைவதும் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் பிரச்சனை.
  3. இப்போது நாம் பிரச்சனை என்ன என்று கண்டுபிடித்தாகி விட்டது.
  4. இதற்கான தீர்வுகள் என்ன?
அ. விவசாயத் திட்டமிடல்

ஆ. ஆண்டின் சராசரி நுகர்வு மற்றும் ஒரு ஆண்டின் சராசரி நுகர்வின் அதிகரிப்பு (உதாரணம்: ஒரு ஆண்டிற்கு 1000 கிலோ நுகர்வு மற்றும் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ நுகர்வின் அதிகரிப்பு என்று கொள்ளலாம்.)

இ. விளைவுத்திறன் (10 % இயற்கையின் பாதிப்பு என்று கொள்ளலாம்). இது 1000 + 10 % க்கு அதிகமாக இருந்தால் அதனை விளைவிக்க கட்டுப்பாடு அவசியம். குறைவாக இருந்தால் அதிகரிக்க ஆராய்ச்சிகள் தேவை. நாம் இப்போதைக்கு 1000 +10 % சரியாக விளைவிக்கபடுவதாகக் கொள்ளலாம்.

ஈ. இந்த விளைவுத் திறனை சமச்சீராக 360 நாட்களுக்குப் பிரித்தால் நாளுக்கு 3 கிலோ வருவதாக் கொள்வோம்.

** ஒரு நாளைக்கு 3 கிலோ உற்பத்தி மட்டுமே இருக்கும் பட்சத்தில் நம்மால் ஆண்டு முழுவதும் நுகர்வோரின் தேவையை ஒத்துக் கொள்ளப்பட்ட 5% ஏற்ற இறக்கங்களுடன் பூர்த்தி செய்ய இயலும்.
** உற்பத்தியை 3 கிலோக்குள் வைத்து இருக்க முடியவில்லை எப்போதும் 5 கிலோவையே தொடுகிறது என்றால் அதிகமுள்ள 2 கிலோக்கான மாற்றுச் சந்தையை கண்டறிய வேண்டும்.

உ. இந்த 3 கிலோ உற்பத்தியை மாவட்ட அளவின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் அந்த அந்த மாவட்டங்களில் உள்ள தக்காளி பயிர் செய்யத்தக்க விவாசாய நிலங்களில் பிரித்து பயிரிடலாம்.

ஊ. புதியதாக ஒருவர் தக்காளி பயிரிட நினைக்குப் போது அவர் நமது தகவல் நிலையத்தை அணுகுவார்.

தக்காளி அறுவடைக்கு வர 50 நாட்கள் ஆவதாகக் கொண்டால் அவர் அந்த 50 வது நாளில் 3 கிலோவுக்கு குறைவாக "விளைச்சல் Forecast" செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த குறையை சரி செய்ய பயிர் செய்ய வேண்டும்.

எ. "விளைச்சல் Forecast" அவரை தக்காளி பயிரிட அனுமதிக்காத பட்சத்தில் அவர் மற்ற பயிர்களின் (அவரது நிலத்தில் அந்தப் பருவத்தில் விளையக்கூடிய) விளைச்சல் Forecast ஐப் பார்த்து அதைப் பயிரிட வேண்டும்.

ஏ. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ( 4 மாதங்கள் என்று கொள்வோம்) எந்த விவாசாயப் பொருட்களின் "விளைச்சல் Forecast" ம் சரியாக அமையவில்லை என்றால் அவர் விளைவிக்காமைக்கு மானியம் பெறத் தகுதியாகிறார். அத்துடன் அவர் "விளைச்சல் Forecast" ன் படி 4 வது மாத முடிவில் பயிரிடப் போகும் பயிரை உடனே முன் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஐ. இந்த மானியம் அரசின் உதவியால் மட்டுமே சாத்தியம் என்றாலும்,மானியத் தொகைக்காக இலாபத்தில் ஒரு பங்கை சேமிப்பாக நாம் வைத்துக் கொள்ளலாம்.இதனால் அரசை (மண் குதிரையை) நம்பி இந்த திட்டத்தில்( ஆற்றில்) இறங்கும் சாத்தியம் குறையும்.

* இது கடலை கடுகுக்குள் புகுத்த நினைக்கும் திட்டம் போல் தெரிந்தாலும் சாத்தியமே என்று தோன்றுகிறது.
=========================================================================

மென்பொருள் உருவாக்கத்துக்கான திட்டப் பக்கம் இங்கே

49 கருத்துகள்:

ஸ்ரீ சொன்னது…

சிவா,உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்."இராமனுக்கு ஒரு அணிலைப்போல்" ஒரு சராசரி விவசாயி என்ற வகையில் என்னால் முடிந்த உதவிக்கு காத்திருக்கிறேன்.விவசாயிகளின் மீதான உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைபட்டுள்ளேன்.மிக்க நன்றி.

Unknown சொன்னது…

சிவா,வவ்வால்,sree,டண்டணக்கா ..சென்ற பதிவில் இருந்து இந்த விவாதத்தின் தொடர்ச்சியை இங்கே இட்டுள்ளேன்.

இது தொடர்பான சாதக/பாதகங்களை இங்கே விவாதிக்கலாம்

...............................

வவ்வால் said...

கல்வெட்டு ,

நீங்கள் பட்டியலிட்ட அம்சங்களை கொண்டது தான் பயிர் பதிவு முறை, ஆனால் இதில் ஒரு அம்சம் மட்டும் இருப்பதாக தெரியவில்லை ... விளைவிக்காமைக்கு மானியம் என்ற ஒன்று தவிர , மற்ற அனைத்தையும் கொண்டது தான் பயிர் பதிவு முறை, எந்த பயிர் என்று தேர்வு செய்து , ஒரு விரவலாக்கிய முறையில் சாகுபடி செய்தால் இது போன்ற நிலை வராது.

உதாரணமாக தக்காளி எடுத்துக்கொள்வோம்,

ஒரு ஆண்டுக்கு 100 டன் தெவைப்படுகிறது , அதற்கு 1000 ஏக்கர் நிலம் தேவை எனில் , முதல் 3 மாதங்களுகு 250 ஏக்கருக்கு மட்டும் அனுமதி தரப்படும், இப்படி நான்காக பிரித்து ஒராண்டு முழுவதும் வருமாறு செய்வார்கள், அதுவும் வேறு வேறு பகுதிகளில், இடைப்பட்ட காலத்தில் பயிர் சுழற்சி முறையில் வேறு பயிர் சாகுபடி செய்யப் பரிந்துறைக்கப்படும், இது போன்ற கணக்கீடுகளுக்கு தான் அரசு செயல்படவேண்டும் , எல்லாம் ஒரு ஒருங்கிணைந்த மைய முறையில் இருக்கும்.

ஏதாவது ஒரு காரணத்தால் உற்பத்தி பாதிக்கப்படும் எனில் அதற்கு காப்பீடும் வழங்கப்படும். இத்தகைய முறை தான் அமெரிக்க , சீனா ஆகிய நாடுகளில் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். விதைக்கும் நாள் முதல் அனைத்தும் ஒரு முன்கூட்டிய திட்டமிடல் இருக்கும் இதில்.

நீங்கள் கூட இதனை கேள்விப்பட்டிருக்கலாம் , அமெரிக்க போன்ற நாடுகளில் திடீர் என அப்படி குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்தே அதிக விளைச்சல் வந்து விட்டால் அதனை கடலில் அல்லது ஆற்றில் விவசாயிகள் கொட்டி விடுவதாக.

நம் நாட்டில் அப்படி ஒரு நிலை வராது ஏன் எனில் நம் மக்கல் தொகை அதிகம் , மேலும் நமகு இன்னும் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி அதிகமாகவே உள்ளது.

ஒரே பிரச்சினை குறிப்பிட்ட காலத்தில் தேவை எவ்வளவு என தெரியாமல் மானாவாரியாக எல்லாரும் ஒரே படிரைப்போட்டு விலை வீழ்ச்சியடைவது தான்.

இதனை செய்வதற்கு அரசு தயங்க காரணம் இதற்கு என்று மேலும் விரிவான ஒரு நெட்வொர்க், ஆள்பலம், விரைந்து செயல்படும் வேகம், விவசாயிகளுக்கு இதனை புரியும் படி விளக்கி ,முறையாக பின்பற்ற வைத்தல் ஆகியவை செய்ய வேண்டும். வேளான் துறைக்கு வேலைப்பளு அதிகரிக்கும் .

முன்னரே இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்,புதுவையில் எம்.எச்.சுவாமினாதன் வேளான் ஆராய்ச்சி மையம் இது போன்ற ஒரு மாடலை பரிட்சார்த்த ரீதியாக புதுவையில் சில கிராமங்களில் மட்டும் செய்து வருகிறார்கள்.

அது செயல்படுவது இப்படி தான், ஒரு கிராமத்தில் முன்னோடி விவசாயி என ஒரு சிலரை தேர்ந்தெடுத்து , அவருக்கு கணிப்பொறி, வயர்லெஸ் கருவி எல்லம் தருவார்கள் அவர்களை மத்திய மார்கெட்டில் உள்ள ஒருவருடன் தொடர்பில் இணைத்து விடுவார்கள், அங்கு ஒரு நாளைக்கு என்ன தேவை என்பதை உடனுக்குடன் கிராமத்தில் உள்ள விவசாயிக்கு தெரிவிக்க வைப்பார்கள் அதற்கு ஏற்றார்ப்போல் தான் காய்கறிகளை கூட பறிப்பதாக சொல்கிறார்கள், இது பற்றி முன்னர் தினமணிக்கதிரில் ஒரு கட்டுரை வந்துள்ளது. இதே முறை மீனவர்களிடமும் செய்து வருகிறார்கள். எந்த மீனுக்கு தேவை எவ்வளவு என்பது கரையில் இருந்து கடலில் உள்ள மீனவருக்கு வயர்லெஸ்ஸில் தெரிவிக்கப்படுகிறதாம்.


---------------

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
விளைவிக்காமைக்கு மானியம் அவசியம் என்பது எனது நிலைப்பாடு.

இது விவசாயிக்கு ஒரு உத்திரவாதத்தைத் தரும். சரியான திட்டமிடல் இருந்தால் அந்தக் காலங்களில் சரியான மாற்றுப்பயிரை பயிரிடச் சொல்லி அதற்கான சந்தை உத்திரவாதத்தையும் அளிக்கலாம்.இதனால் மானியம் தவிர்க்கப்படலாம் அல்லது மாற்றுப்பயிரின் விலைக்கு ஏற்ப மானியத்தை குறைத்துக் கொள்ளலாம்.


****

//ஒரே பிரச்சினை குறிப்பிட்ட காலத்தில் தேவை எவ்வளவு என தெரியாமல் மானாவாரியாக எல்லாரும் ஒரே படிரைப்போட்டு விலை வீழ்ச்சியடைவது தான்.//

//புதுவையில் எம்.எச்.சுவாமினாதன் வேளான் ஆராய்ச்சி மையம் இது போன்ற ஒரு மாடலை பரிட்சார்த்த ரீதியாக புதுவையில் சில கிராமங்களில் மட்டும் செய்து வருகிறார்கள்.//


இது போல் ஒரு முயற்சி ஏற்கனவே இருப்பது நல்ல செய்தி.
இவர்கள் மூலம்
எந்த அளவில் இது வெற்றி பெற்றுள்ளது? ,ஏன் இது வளரவில்லை? அல்லது அடுத்த கட்டம் என்ன ? என்பது போன்ற தகவல்களைப் பெறலாம்.


*****

விவசாயிகளிடம் செல்லும் முன் அதற்கான கட்டமைப்பை தகவல் தொழில் நுட்ப ரீதியில் நாம் முடித்து வைத்துவிட வேண்டும். பின்னர் களத்திற்குச் செல்லலாம்.

****

//அது செயல்படுவது இப்படி தான், ஒரு கிராமத்தில் முன்னோடி விவசாயி என ஒரு சிலரை தேர்ந்தெடுத்து , அவருக்கு கணிப்பொறி, வயர்லெஸ் கருவி எல்லம் தருவார்கள் அவர்களை மத்திய மார்கெட்டில் உள்ள ஒருவருடன் தொடர்பில் இணைத்து விடுவார்கள், அங்கு ஒரு நாளைக்கு என்ன தேவை என்பதை உடனுக்குடன் கிராமத்தில் உள்ள விவசாயிக்கு தெரிவிக்க வைப்பார்கள் அதற்கு ஏற்றார்ப்போல் தான் காய்கறிகளை கூட பறிப்பதாக சொல்கிறார்கள்,//

நல்ல திட்டம்தான்.
இதையே கொஞ்சம் முன்னோக்கி பயிரிடல் அளவிலேயே தொடங்கலாம்.
நான் நினைப்பது கிராம அளவில் ஒரு Farmers Boutique அமைப்பதன் மூலம் எல்லா விவசயிகளும் வந்து தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி.

//இதனை செய்வதற்கு அரசு தயங்க காரணம் இதற்கு என்று மேலும் விரிவான ஒரு நெட்வொர்க், ஆள்பலம், விரைந்து செயல்படும் வேகம், விவசாயிகளுக்கு இதனை புரியும் படி விளக்கி ,முறையாக பின்பற்ற வைத்தல் ஆகியவை செய்ய வேண்டும். வேளான் துறைக்கு வேலைப்பளு அதிகரிக்கும் .//

உண்மைதான்.
but with the same effort we can not make new changes...

**

நாம் முதலில் தகவல் தொழில் நுட்ப அளவில் தகவல் சேகரிப்பு/ பயிர்ப் பதிவு / விளைச்சல் Forecast போன்றதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டால் விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வை உண்டக்கலாம்.

micro credit போல் இதனை கிராம அளவில் விவசாய சுய உதவிக் குழுக்கள் போன்று வேர் அளவில் இறங்கி செயல் படுத்தலாம்.

அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மிகவும் சுலபம் பார்க்கலாம்.

நம் முயற்சி தோல்வி அடைந்தால் கூட முயன்ற திருப்தியும், நாம் செய்த தவறுகள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிற்காலத்தில் பயன் படலாம். எத்தனை காலத்துக்கு விவசாயியை புறக்கணிக்க முடியும்?

தொடர்ந்து நல்ல தகவல்களைக் கொடுப்பதற்கும், நல்ல விவாதத்திற்கும் ,பங்களிப்புக்கும் நன்றி

மேலும் விவாதிப்போம்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

http://code.google.com/p/payir/wiki/TechnicalDesign

comments..

Land Table -ல்
1. land_size need to have Unit of measure ( ஏக்கர் /ஹெக்டேர் )

அது போல் Land Table ல் அந்த நிலத்தில் விளையக்கூடிய முக்கியப் பயிர்கள்(primary) மற்றும் மாற்றுப் (secondary)பயிர்களுக்கான தகவலும் இருந்தால் நல்லது. இதை crop_id யுடன் இணைத்து விட்டால் நம்மால் ஒரு குறிப்பிட்ட பயிர் விளையக்கூடிய நிலத்தையும் அதில் ஆர்வமுள்ள விவசாயிகளையும் சுலபமாக கணக்கிட முடியும்.

crops_tbl-ல்

1. crop_type நல்ல பிரிவு. பின்னாளில் நாம் இதை உணவுப்பயிர், வணிகப் பயிர், காய்கறி,கீரை ,பழம் ..என்று வகைப் படுத்த முடியும்.

2. இங்கே அந்த crop விளைவிக்கத் தேவையான கால அளவையும்(crop_days ??) சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக தக்காளி 50 நாட்கள். இது மிகவும் அவசியம்.

3. அது போல் தக்காளிக்கான "crop_id" 01 என்று கொண்டால் அதன் உட்பிரிவுகளை எப்படிப் பிரிப்பது? உதாரணமாக பெங்களூர் தக்காளி/ குண்டுத்தக்காளி ..?? ஒரு உட்பிரிவு வைத்தால் நல்லது.

4. crop_source இல் விதை வாங்கும் தகவல் உடன் நிறுத்தாமல் பயிரிடல்,உரமிடல்,தண்ணீர் தேவை , பராமரிப்பு போன்ற தகவல்களை இணைக்கும் வசதி வேண்டும்.

மேலும் விவாதிக்கலாம்....

வவ்வால் சொன்னது…

கல்வெட்டு,

ஒரு நாட்டின் மிக முக்கியமான சிறு அலகு என்பது கிராமமே, ஒவ்வொரு கிராமத்தின் மண்வகை ,பயிரிடும் முறை, பயிர் வகை , எத்தனை முறை பயிரிடப்படுகிரது, என்பது போன்ற தகவல்களை திரட்டலாம் அதற்கு அங்குள்ள கிராம நிர்வாக அலுவலரை அனுகலாம் , ஏனெனில் நில வரி வசூல் செய்வதற்காக அவர்கள் அனைத்து வகையான தகவல்களையையும் வைத்து இருப்பார்கள், ஒவ்வொரு நிலத்தின் பற்றிய தகவல்களுக்கும் சிட்டா-அடங்கல் என்பார்கள். அதில் தான் நிலம் குறித்தான அனைத்து வகையான தகவல்களும் இருக்கும், வங்கிகளில் விவசாயக்கடன் வாங்க சென்றால் முதலில் சிட்டா அடங்கள் நகல் தான் கொண்டு வர சொல்கிறார்கள்.

இதன்மூலம் சரியான தகவல்கள் கிடைக்காமல் போகலாம் காரணம் சிலர் பயிரிடாமலே நீண்டகாலத்திற்கு தரிசாக கூட போட்டு இருக்கலாம் ஆனால் அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும் , அடிப்படையாக தகவல் சேகரிப்பை கிரம நிர்வாக அலுவலகத்தில் இருந்து தொடங்கலாம். அல்லது தாலுக்கா வருவாய் துறை அலுவலகத்தில் இருந்து மொத்தமாக அனைத்து கிராமம் குறித்தும் தகவல் பெறலாம் , எங்கிருந்து பெரும் தகவல் சரியான நிலவரத்தை காட்டும் என்பதை பொறுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது இரண்டும் அல்லாமல் பஞசாயத்து யூனியன் எல்லாவற்றிலும் வேளான் வளர்ச்சி துறை உள்ளது அவர்களிடம் இருந்தும் பெறலாம் ஆனால் அவர்கள் பல காலம் முன்னர் பெற்ற தகவல்களையே ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பெற்றது போல பராமரித்து வருவார்கள்.கிராம நிர்வாக அலுவலர் வரி வசூலிக்க என்பதால் ஓரளவு சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

வவ்வால் சொன்னது…

கல்வெட்டு ,

இது போன்ற பயிர் ,மண் வகைப்படுத்துதல் ,என்பது போன்றவை எல்லாம் ஏற்கனவே வேளாண் துறையினரால் செய்யப்பட்டுள்ளது அதனையே அப்படியே வைத்துக்கொள்ளலாம் , அது சார்ந்த சரியான புள்ளி விவரங்களை மட்டும் பெற்றால் போது.

உதாரணமாக மண்வகைகள் என ,
alluvial soil - paddy like crops
black soil - cotton like crops
clay soil - paddy, sugarcane, etc,
red soil - cashew, maize etc
sandy soil - cassuarina etc
sandy loam soil - ground nut, tapioca etc

அது போல பயிர்வகைகள்,

cereals,
pulses ,
oil seeds,
cash crops ,
fibre crops ,
plantation crops ,
vegetables ,

பயிர்காலம் சார்ந்த வகை,
single season , eg: paddy
perennial crops - eg coconut

பயிரிடும் எண்ணிக்கை சார்ந்த வகை
single crop ,

double crop
three crop,
fallow crops ,
inter cropping ,
ratoon crop

then classification based on season

rabi crop, kharif crop


இவ்வாறு பல வகையிலும் வேளான் துறையினர் இந்தியா முழுவதற்கும் பொருந்தும் வகையில் வகைப்படுத்தி வைத்துள்ளனர் அதனை மாற்ற வேண்டாம்.

னாம் செய்ய வேண்டியது சரியான புள்ளி விவரங்களை தொகுக்க வேண்டியதே!

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

"சிறு துளி பெரு வெள்ளம்" -
பங்கு பெரும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-விபின்

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம்,
நல்லதொரு முயற்சி... வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

வவ்வால்,
தகவல்களுக்கு நன்றி! தொடர்ந்து உங்களின் பங்களிப்பு தேவை. இந்தத் தகவல்களே ஒரு நல்ல ஆரம்பம்.

**

பயிர்களின் வகை, மண்ணின் வகை, குறிப்பிட்ட பருவ காலங்களில் விளையும் பயிர்கள்... இன்ன பிற ..

இந்தத் தகவல்கள் நிச்சயம் நாம் புத்திதாக ஏதும் கட்டமைக்க முடியாது.பயன்பாட்டில் இருக்கும் தொகுப்புகளையே பயன் படுத்த வேண்டும் என்ற உங்களின் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.

**

செயல்படக்கூடிய திட்ட மாதிரி தயாரனவுடன் தகவல் சேகரிப்பு தொடங்கிவிடும். அப்போது நீங்கள் சொல்லியுள்ள அனைத்து அரசு அமைப்புகளையும் நாம் நிச்சயம் தொடர்பு கொண்டே ஆக வேண்டும்.இந்த கால கட்டத்தில் பயிர்களுக்கான அனைத்து வகைகளையும் அவர்களின் உதவியுடன் உள்ளீடு செய்யப்படும். அது முடிந்தவுடன் தற்போதைய நிலைமை என்ன என்பதை நாம் கிராம அளவில் இருந்து தகவல் சேகரிக்கப் போகிறோம்.

**

அரசின் உதவி இல்லாமல் எந்த திட்டமும் முழுப்பயன் பெறாது என்று நம்புகிறேன்.அதே சமயம் அரசின் ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்காக காத்திருப்பது என்று இல்லாமல் தொடர்ந்து இயங்குவோம்.

**


Phase I

செயல்படக்கூடிய திட்ட மாதிரி தயாரித்தல்.
(database tables, UI, etc.,)

Phase II

திட்ட மாதிரி முடிந்தவுடன் பயிர்,நிலம்,... போன்ற தகவல்கள் கீழ்க்கண்ட அமைப்பின் மூலம் திரட்டலாம் என்று எண்ணுகிறேன்.

* அரசு அமைப்புகள்.
*தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்.
*விவசாயச் சங்கங்கள்.
*தனிப்பட்ட ஆர்வலர்கள்.
*பத்திரிக்கைகள் ( பசுமை விகடன்)
*வலைப் பதிவாளர்கள் ( மாவட்டத்திற்கு குறந்த பட்சம் ஒருவர் அடையாளம் காணப்பட வேண்டும்)



இவர்கள் மூலம் கிடைக்கும் பயிர்,மண்...வகைகள் பிரிவுகள் உள்ளீடு செய்யப்படும்

Phase III

Actual Data Collection

கிராம அளவில் கிடைக்கும் தகவல்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகத் திரட்டுவது.

இந்த சமயத்தில் விவசாயி தன்னை இதில் பதிவு செய்து கொள்வார்.

இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் வேண்டும்.

நிச்சயம் நம்மால் முடிந்த அளவு விவாசாய துறையின் உதவியை நாடுவோம். அவர்கள் உதவாவிடாலும் சிறிய அளவில் தன்னார்வளர்களை வைத்து திரட்டப் பார்ப்போம்.


**********************

ரவிசங்கர் ,பாரி.அரசு உங்களின் ஊக்க்குவிப்புவிற்கு நன்றி!

இது ஒரு திறந்த விவாதம். யார் சொல்வதும் முடிவானாது அல்ல. அனைவரும் அவர்களின் பார்வையைப் பதிவு செய்வோம்.மாற்றங்கள்/ஆலோசனைகள்/புது திட்ட வடிவங்களைப் பகிர்ந்து கொண்டு, விவாதித்து இத நல்ல முறையில் கொண்டு செல்வோம்.

மா சிவகுமார் சொன்னது…

கல்வெட்டு,

கருத்துக்களுக்கு நன்றி.

//அது போல் Land Table ல் அந்த நிலத்தில் விளையக்கூடிய முக்கியப் பயிர்கள்(primary) மற்றும் மாற்றுப் (secondary)பயிர்களுக்கான தகவலும் இருந்தால் நல்லது. இதை crop_id யுடன் இணைத்து விட்டால் நம்மால் ஒரு குறிப்பிட்ட பயிர் விளையக்கூடிய நிலத்தையும் அதில் ஆர்வமுள்ள விவசாயிகளையும் சுலபமாக கணக்கிட முடியும்.//

இது முக்கியமான ஒன்று.

ஆரம்பத்தில் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்க வேண்டியது அவசியம். எல்லா சேவைகளையும் கொடுக்க எண்ணினால் குழப்பம் அதிகமாகி விடலாம்.

ஒரு முறை பதிவு (5 நிமிட வேலை), அதன் பிறகு 3-4 விபரங்களை மட்டும் உள்ளிடும் தேவை வைத்துக் கொண்டால், பயன்பாடு பரவ வசதியாக இருக்கும். கூடுதல் வசதிகளை போகப்போக சேர்க்கலாம்.

//இது இரண்டும் அல்லாமல் பஞசாயத்து யூனியன் எல்லாவற்றிலும் வேளான் வளர்ச்சி துறை உள்ளது அவர்களிடம் இருந்தும் பெறலாம் ஆனால் அவர்கள் பல காலம் முன்னர் பெற்ற தகவல்களையே ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பெற்றது போல பராமரித்து வருவார்கள்.கிராம நிர்வாக அலுவலர் வரி வசூலிக்க என்பதால் ஓரளவு சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.//

ஒவ்வொரு விவசாயியும் தானே முன் வந்து விபரங்களை உள்ளிடுவதில் என்ன சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

//பல வகையிலும் வேளான் துறையினர் இந்தியா முழுவதற்கும் பொருந்தும் வகையில் வகைப்படுத்தி வைத்துள்ளனர் அதனை மாற்ற வேண்டாம்.

னாம் செய்ய வேண்டியது சரியான புள்ளி விவரங்களை தொகுக்க வேண்டியதே!//

சரியான கருத்து. அதற்கு கைம்மாறல்கள் குறைவாக இருக்கும்படிப் பார்த்துக் கொண்டால் நல்லது. விவசாயி தகவல்களை உள்ளிட ஒரு நல்ல காரணம் அளிக்க வேண்டியதுதான் தேவை.
===
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி
=====

// Phase I
செயல்படக்கூடிய திட்ட மாதிரி தயாரித்தல்.
(database tables, UI, etc.,)//

இந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு வாரங்களில் 0.1 பதிப்பு கொண்டு வர முயற்சிக்கலாம். ஆகஸ்டு 1 என்று வைத்துக் கொள்வோம்.

அடுத்தடுத்த கட்டங்களில் கல்வெட்டின் திட்டத்தைப் பின்பற்றலாம்.

தம்மால் முடிந்த அளவு பங்காற்ற விரும்பும் தன்னார்வலர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

சிவா,
நீங்கள் Land Table ல் அந்த நிலத்தில் விளையக்கூடிய முக்கியப் பயிர்கள்(primary) மற்றும் மாற்றுப் (secondary)பயிர்களுக்கான தகவல் சேர்க்கலாம் என்ரு சொல்கிறீர்களா அல்லது இபோதைக்கு வேண்டாம் என்று சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. :-))


நான் இது முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன்.Land Table ல் அந்த நிலத்தில் விளையக்கூடிய முக்கியப் பயிர்கள்(primary) மற்றும் மாற்றுப் (secondary)பயிர்களுக்கான தகவல் இருத்தல் அவசியம்.இதை ஆரம்ப கட்டத்திலேயே சேர்த்துவிடுவது நல்லது.

ஏன்?

1000 டன் தக்காளி விளைவிக்க வேண்டும் என்பது இந்த வருடத்தின் திட்டம் என்றால் அதற்கேற்ற நிலங்கள் எங்கே உள்ளது என்று கண்டறிய முடியும்.இதனைப் பொறுத்துத்தான் விவசாயியின் பயிர்த் திட்டமிடல் அமையும். அந்த மண்ணில் மாற்றுப் பயிர் என்ன போடலாம் என்பதும் முக்கியம். விளைவிக்காமைக்கு மானியம் கொடுப்பதற்கு முன் மாற்றுப் பயிர் ஆலோசனை வழங்க இது உதவும்.

Land Table-ல் அந்த மண்ணில் விளையக் கூடிய பயிர் பற்றிய தகவ்ல் இல்லை என்றால் அது முற்றுப் பெறாது.திண்டுக்கல் பகுதியில் திராட்சை,சூரியகாந்தி போன்றவை விளைவிக்கலாம் என்பதும், சாத்தூர் பகுதியில் கம்பு, சோளம் போடலாம் என்பதும் முக்கியமான அடிப்படைத் தகவ்லகள்.

தயாரிக்கும் திட்ட மாதிரி நிச்சயம் எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தத் தகவல் இல்லை என்றால் அடிப்படை நோக்கமே செயல்பாட்டுக்கு வரத் தேவையான தகவல்கள் இருக்காது.

***

//ஒவ்வொரு விவசாயியும் தானே முன் வந்து விபரங்களை உள்ளிடுவதில் என்ன சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? //

விவசாயிகள் தானே முன்வந்து உள்ளிடுவது என்பது நல்ல விசயம்தான். அதே சமயத்தில் இந்த தகவ்ல் சேகரிப்பு முறையில் அரசின் ஒத்துழைப்பை நாடுவதிலும் தவறு இல்லை.

அரசு உதவாவிட்டாலும் நமது திட்டம் தொய்வடையக்கூடாது. அரசு உதவும் பட்சத்தில் அதன் வீச்சு அதிகமாக இருக்கும்.நாம் அதை எதிர்பார்த்து இயங்காவிட்டாலும் we can keep the option open.

***

தொடர்ந்து விவாதிபோம்....

மா சிவகுமார் சொன்னது…

//நீங்கள் Land Table ல் அந்த நிலத்தில் விளையக்கூடிய முக்கியப் பயிர்கள்(primary) மற்றும் மாற்றுப் (secondary)பயிர்களுக்கான தகவல் சேர்க்கலாம் என்ரு சொல்கிறீர்களா அல்லது இபோதைக்கு வேண்டாம் என்று சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. :-))//

நிச்சயம் சேர்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் காரணங்கள் சரியானவைதான். அடுத்த மூன்று குறிப்புகள் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

//அடுத்த மூன்று குறிப்புகள் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன் :-)//

:-))

சிவா,
அடுத்த மூன்றில் இந்த இரண்டாவதும் முக்கியம் என்று கருதுகிறேன். :-))

2. இங்கே அந்த crop விளைவிக்கத் தேவையான கால அளவையும்(crop_days ??) சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக தக்காளி 50 நாட்கள். இது மிகவும் அவசியம்.

ஏன் இது அவசியம்?

சந்தையில் அதிக அளவு பயிர்கள்/காய்கள் வந்து விலையை தாறுமாறாக ஏற/இறங்க வைப்பதை கட்டுப்படுத்துவது நமது நோக்கங்களில் ஒன்று என்றால் ..அந்தப் பயிர் விளைந்து சந்தைக்கு வருவதற்கான கால அளவை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

திட்டமிடல் இதைப் பொறுத்தே அமையும்.

ஒவ்வொரு பயிர் விளைவிப்பதற்கான கால அளவு சுலபமாக திரட்டக்கூடியது. இதை விவசாயி இல்லாமலே நாம் திரட்டலாம். என்ன இருக்கும் விவசாயத் தகவல்களை கிளற வேண்டும்.

நமது நோக்கம் பயனாளியை அதிக கேள்வி கேட்டு நோகடிப்பதை தவிர்ப்பதே. ஆனால், பயனாளியிடம் நேரடியாக இல்லாமல் (தொல்லை கொடுக்காமல்) நம்மால் முடிந்த அவசியமான/தேவையான தகவல்களை முன் கூட்டியே திரட்டலாம் தவறு இல்லை.

****

வவ்வால்,ஸ்ரீகோபி,சம்சாரி,டண்டணக்கா மற்றும் விவசாய ஆர்வலர்களை ஒன்று திரட்டி ஒரு கலந்துரையாடல் செய்யலாம். இன்னும் பலர் ஆர்வமாய் இருக்கலாம்.

0.1 தயாரானவுடன் அதில் உள்ள நிறை குறைகளை விவாதிக்க ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தலாம். என்ன சொல்கிறீர்கள்?

மா சிவகுமார் சொன்னது…

கல்வெட்டு,

//0.1 தயாரானவுடன் அதில் உள்ள நிறை குறைகளை விவாதிக்க ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தலாம். என்ன சொல்கிறீர்கள்? //

நிச்சயம் செய்யலாம். ஆகஸ்டு 1 வாக்கில் தயாராகி விட்டால், 5ம் தேதி பதிவர் பட்டறையை ஒட்டி, ஓரத்தில்/இணையத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தலாம். இணைய வழி உரையாடல் கருவிகள் மூலம் செய்து கொள்ளலாம்.

//ஒவ்வொரு பயிர் விளைவிப்பதற்கான கால அளவு சுலபமாக திரட்டக்கூடியது. இதை விவசாயி இல்லாமலே நாம் திரட்டலாம். என்ன இருக்கும் விவசாயத் தகவல்களை கிளற வேண்டும்.//

கொடாநிலையாகக் கொடுக்கப் பயன்பட்டாலும், 'எப்போது விளைச்சல் சந்தைக்கு வரும்' ஒவ்வொரு முறையும் தொடர்புள்ள விவசாயியே தனது கணிப்பைக் கொடுப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் என்று நினைத்தேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

//'எப்போது விளைச்சல் சந்தைக்கு வரும்' ஒவ்வொரு முறையும் தொடர்புள்ள விவசாயியே தனது கணிப்பைக் கொடுப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் என்று //

சிவா,
பயிர்களின் விளைச்சல் காலங்கள் நிர்ணயிக்கப்பட்டவை.தண்ணீர் ,பருவங்களுக்கு ஏற்ப விளைச்சலின் அளவு வேண்டுமானல் மாறுபடுமே தவிர விளைவிப்பதற்கான கால அளவில் அதிக மாற்றம் இருக்காது.

நிச்சயம் விவசாயிகளிடம் இருந்து கேட்கலாம். ஆனால் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் ஒரு சராசரி கால அளவு பட்டியலிடப்பட வேண்டும். அப்போதுதான் பயிர் திட்டமிடலுக்கு உதவும்.

****

மேலும் பேசுவோம்...

மா சிவகுமார் சொன்னது…

//நிச்சயம் விவசாயிகளிடம் இருந்து கேட்கலாம். ஆனால் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் ஒரு சராசரி கால அளவு பட்டியலிடப்பட வேண்டும். அப்போதுதான் பயிர் திட்டமிடலுக்கு உதவும்.//

ஆமாம் கல்வெட்டு,

//மேலும் பேசுவோம்...//

நீங்கள் சொன்னது போல ஒரு மாதிரி பதிப்பை வைத்துக் கொண்டு பேசினால் இன்னும் தெளிவு கிடைக்கும். இன்றைக்கு கொஞ்சம் நிரல் வேலை ஆரம்பிக்க முடிந்தது. கோப்புகளை திட்டப் பக்கத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் ஒரு தளத்தில் செயல்முறை மாதிரி ஒன்றைக் காட்டி விடலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மா.சி.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தகவல்கள் வாங்க வேண்டும் என்பது சரி தான் ஆனால் விவசாயிகளின் மனப்போக்கு எப்படி இருக்கும் எனில் யாராவது பான்ட், சட்டை போடு வந்த அரசு அதிகாரி என நினைத்து மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவலையே தருகிறார்கள். கிராமத்தில் நாட்டுனலப்பணி திட்டதின் போது அக்கிராமம் மற்றும் பொருளாதரம் குறித்து தகவல் சேகரித்தோம் , எல்லம் ஏறுக்கு மாறாக தகவல்களை அளித்தார்கள், பின்னர் பஞ்சாயத்து பிரசிடென்ட் தான் சில தகவல்களை அளித்து உதவினார்.

விவசாய கூலி எவ்வளவு(உண்மையில் 75 ரூபாய் அப்போது எல்லாம் 50 ரூபாய் சொன்னர்கள்) , எத்தனை ஏக்கர் நிலம் , பசஙளும் வேலை செய்கிறார்களா என்பது போன்ற தகவல்கள் தான் அதற்கே யரும் உண்மையான தகவலை தரவில்லை.

கல்வெட்டு ,

சாகுபடி காலம் , விதைப்பு முதல் அறுவடை வரை தேவையானது தான். வகைக்கு வகை நாட்கள் மாறு, மேலும் தனிப்பயிரா , ஊடு பயிரா என்பது போன்ற தகவல்களும் தேவை.

விவசாயிகளைப்பொருத்த வரை ஒரு பயிரிலிருந்து திடிர் என மற்றதுக்கு மாறுவார்,.யாரவாது ஒருவர் வெங்காயம் போட்டேன் நல்ல விலைச்சால் சொன்னால் போதும் இவரும் போடுவார் இப்படியே நாலு பேர் சொன்னால் போதும் நாப்பது பேர் போடுவார்கள் அது தான் பெரிய பிரச்சினை.

மா சிவகுமார் சொன்னது…

//பான்ட், சட்டை போடு வந்த அரசு அதிகாரி என நினைத்து மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவலையே தருகிறார்கள். //

அதையேதான் நானும் சொல்கிறேன் வவ்வால். அவர்களாக முன் வந்து அவர்களது நலனுக்காக என்ற நம்பி விபரங்களைப் பதிய வேண்டும். வேறு யாராவது தகவல் திரட்டுவது சரிப்படாது.

திருணப் பொருத்தம் பார்க்கும் இணையத் தளங்களுக்கு அவரவர் போய்ப் பதிவு செய்து கொள்வது போல இதுவும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

//.யாரவாது ஒருவர் வெங்காயம் போட்டேன் நல்ல விலைச்சால் சொன்னால் போதும் இவரும் போடுவார் இப்படியே நாலு பேர் சொன்னால் போதும் நாப்பது பேர் போடுவார்கள் அது தான் பெரிய பிரச்சினை.//

அதைச் சரி செய்யத்தான் இந்த முயற்சி, இல்லையா!

அன்புடன்,
மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//பான்ட், சட்டை போடு வந்த அரசு அதிகாரி என நினைத்து மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவலையே தருகிறார்கள். //
வவ்வால்,
சேலை, வேட்டி கட்டிகிட்டு போய் கேட்போமே? ;)

வவ்வால் சொன்னது…

மா.சி,

தாங்கள் நினைப்பதிலோ , ஆசைப்படுவதிலோ தவறேதும் இல்லை , ஆனால் விவசாயிகளின் எழுத்தறிவு , கணினி அறிவு , மற்றும் , இணையத்தொடர்பு வசதிகளை எல்லாம் இந்திய சூழலில் கணக்கிட்டால் அவர்களே முன்வந்து தருவதற்கான சாதகங்கள் குறைவே!

யாரேணும் தானாக திரடவேண்டும் ,அதுவும் சரியான தகவல்களை , மிக சவாலான ஒன்று , எப்படி அதனை சாதிக்கலாம் , சொல்லுங்கள் ஊர் கூடி இழுத்தால் தேர் வந்து சேரும் எல்லாரும் தேர் இழுப்போம்!
-----------------------------

அம்மா பொன்ஸ் ,

வேட்டி ,சேலை எனப்போனாலும் அன்னியருக்கு எதற்கு இதெல்லாம் சொல்ல வேண்டும் என்று யோசிப்பார்கள், அவர்களிடம் பேசி உண்மையான தகவல்களை பெறுவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போன்றது, ஆனாலும் நமக்கு தகவல்கள் வேண்டும் வழி சொல்லுங்கள் பின் தொடற தயாராக உள்ளோம்!

மா சிவகுமார் சொன்னது…

//ஊர் கூடி இழுத்தால் தேர் வந்து சேரும் எல்லாரும் தேர் இழுப்போம்!//

சரியாகச் சொன்னீர்கள் வவ்வால். தேர் இழுக்க பலவிதமான மக்கள் கூடினால்தான் நடக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

சிவா/வவ்வால்,
களத்தில் இறங்கி ஒரு 10 பேரிடம் தகவல் திரட்டுவதற்குள் நமக்கு நாக்கு தள்ளிவிடும். அது உண்மையே

ஏன்?
எதற்கு?
யார்?
உங்களுக்கு என்ன கமிசன்? உண்மையச் சொன்னா லோன் கிடைக்காதே?
அதிகாரிகட்ட கேளுங்க..

இப்படி நிறைய பிரச்சனைகள் உண்டு உண்மைதான்.

இருந்தாலும் வெற்றிக்காக அனைத்து முறைகளிலும் தகவல் திரட்டத் தயாராக இருக்க வேண்டும்.

இப்படித்தான், இதுதான் என்று நின்றுவிடாமல் அனைத்து option களையும் open ஆக வைத்து இருக்க வேண்டும்.

மா சிவகுமார் சொன்னது…

//இப்படித்தான், இதுதான் என்று நின்றுவிடாமல் அனைத்து option களையும் open ஆக வைத்து இருக்க வேண்டும்.//

அதுதான் சரியான அணுகு முறையாக இருக்கும்.

ஆனால்,

இப்போது ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 படித்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கத்தை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை வலுக்கிறது. தனி மனிதர்கள் சின்னச் சின்னக் குழுக்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதுதான் நல்லது என்று தோன்றுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

//அரசாங்கத்தை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை வலுக்கிறது. //

சிவா அரசாங்கம் மட்டும் அல்ல சில நேரங்களில் சில குழுக்களிடமும் தள்ளி இருக்க வேண்டும். கூட்டு முயற்சியில் உண்மையான நோக்கம் நீர்த்துவிட வாய்ப்பு உண்டு.

தகவல் களம் அமைக்க நிறைய பேரின் /அமைப்புகளின் உதவிகள் தேவைப் படும். அதை தவிர்க்க வேண்டுமானால் கிராம அல்லது மாவட்ட அளவில் ஒரு தன்னார்வலரை நியமிக்க வேண்டும்.தற்போதைக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால் நிச்சயம் கிராமத்திற்கு ஒரு Farmers Information Center (FIC) அமைக்கவேண்டும். அது பின்னாளில் சாத்தியமே என்று தோன்றுகிறது.

வவ்வால் சொன்னது…

கல்வெட்டு,

//ஆனால் நிச்சயம் கிராமத்திற்கு ஒரு Farmers Information Center (FIC) அமைக்கவேண்டும்//

நீங்கள் குறிப்பிட்டது போல ஏற்கனவே அரசு சார்பில் இப்படி ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது , கிசான் கியோஸ்க் என்று பெயர் , தொடுதிரை கணிணி வசதியுடன் தகவல்களை பெறவும் உள்ளிடவும் வசதியுடன், மத்திய அரசால் துவக்கப்பட்டது , ஆனால் அது இப்போது என்னவானது என்று தெரியவில்லை. பட்ஜெட்டில் பார்த்தால் ஒவ்வொரு முறையும் இதற்கென நிதி ஒதுக்கபட்டு இருக்கும் , ஆனால் எனக்கு தெரிந்து கிராமங்களில் அப்படி பட்டவசதி காணக்கிடைக்கவில்லை!

ஒரு வேளை அமைச்சர் வரும் அன்று மட்டும் செட் அப் செய்து காட்டிவிடுவார்கள் போலும்! இதே போன்று வயல்வெளிப்பள்ளி என்ற விவாசாய விழிப்புணர்வு கற்பிக்கும் அமைப்பு, உழவர் மருத்துவமனை அதாவது அங்கு பயிர்களின் நோய்க்கு மருத்துவம் பார்ப்பார்களாம் , எல்லாம் அறிவித்து , துவக்க விழா நடத்தி தூங்கி கொண்டு இருக்கிறது.

அனைத்து சாத்தியகூறுகளையும் கவனத்தில் எடுத்துகொண்டு முயற்சி செய்தால் அன்றி இது சாத்தியப்படாது. குறைத்த பட்சம் ஒரு தாலுக்காவிற்கு ஒரு தன்னார்வலரையாவது கண்டறியவேண்டும். குறிப்பாக காய்கறி உற்பத்தி ஆகும் மாவட்டங்களில்.

?!!!@#%* சொன்னது…

I would like to share my thoughts here.

I have partly discussed with Ma.Sivakumar. already.

But Still the full compilation here..


Since many of here discusses about the Project, i would like to go further and visualize the usage and successful implementation which decides the Project Functionality so that it is implemented successfully.


I have commented based on the following.

1. To just prove our individually or helping intention, we should not eliminate the successful associations.

Like associating (clustering) with many other partly helping organisations (defining them as stake holders).


2. I may not added the comments here based on real time 1st hand knowledge but in due of some of my vision.

3. I am neither a farmer or a successful business person(or Project Management).I am not biased with any organisation.

4. I always want to bring a solution which is amicable to many inturn it really helps.


Hope the above "build-up" explains my "self", I will come to the points i wish to share...


1. We should 1st analysis/gather atleast few already built similar (may not be 100%) solutions. or atleast we should prepare 1st hand report. after meeting them.

I came to know that. this is one of that.

http://www.scidev.net/dossiers/index.cfm?fuseaction=dossierReadItem&type=2&itemid=345&language=1&dossier=25

Additional links

http://www.hindu.com/2006/07/27/stories/2006072718070300.htm
talks about village resource centre

http://eprints.rclis.org/archive/00003582/02/99-Arunachalam.pdf
Page 2 of pdf in the above explains about their aims.

www.mssrf.org/iec/601/Mission_2007.pdf

2. We can form a cluster so that our execution spreads very fastly.

I hope the cluster should not miss the following

1. Gathering (review-report of our draft project document) with

a. MS.Swaminathan (MSSR Foundation)

b. Egovernments.org . Srikanth Nadhamuni (Managing Trustee eGov)

c.dhan.org (largest network in south tamil nadu)

e.Thiru.Nammazhvar (Iyarkai Vivasayam Sceientist)

f.Isha Foundation (coimbatore)(http://www.ishafoundation.org/news/content/TheHindu_10Jul2007.pdf)
the organisation recently launched agro services. they have good valuable volunteer network (devoted for activities like this)


2. Talking to Browsing centre associations


They can give space for us placing our thatti about our website. and they can also form a stake holder. so that they can assist any farmer coming there to key in data as we done using a particular space (organisation map - login)

3. Talking to Seed/Pesticide/etc sellers association. (organisation map - login)

4. We can take one district as pilot project.

5. Before starting the project kick off. We should be ready with a data warehouse (built ready) So that we can forecast atleast with past (Sampling.trend analysis) data. So we may gain Trust from farmers and other stake holders.


6. I have not explored on how to gather data for data warehouse.

Some of the points i state may not be relevant or not successful. please state a reason we can record the option as known ignored.

7. Also do visit goodnewsindia.com

for some good things happening around india which is not known to many.


I will also look other direction/scenario and step in with my comments


Thank you
Sahridhayan

மா சிவகுமார் சொன்னது…

சகா,

நல்ல பயனுள்ள உரையாடல், உங்கள் கருத்துக்களைத் தொகுத்து இங்கு இட்டதற்கும் நன்றி. நாம் தொடர்ந்து விவாதிக்கலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

Sahridhayan,
கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

1.goodnewsindia D V Sridharan இப்போது pointreturn என்ற ஒரு திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு உள்ளார்.அவரால் எந்த அளவுக்கு இதில் பங்கு கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனால் திட்டத்தின் இயங்கு மாதிரி தயாரானவுடன் ஆர்வலர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்து விவாதிக்கலாம்.

2. dhna.org'ன் நிறுவனர் மற்றும் பல திட்ட அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நல்ல திட்டங்களை அவர்கள் செயல்படுத்த எப்போதும் தயங்கியதில்லை. அவர்களின் "வயலகம்" என்னும் ஒரு திட்டம் வேறு காரணக்களை முன்னிறுத்தி இதே விவயாசிக்காக இயங்குகிறது. நிச்சயம் இவர்களின் பங்களிப்பு தேவை என்னும் பட்சத்தில் அணுகுவது பிரச்சனையான் ஒன்று அல்ல.

3.M.S. சுவாமிநாதன் மற்றும் இயற்கை விவசாயி நம்மாழ்வார் இருவரும் கலந்தாலோசிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார்கள்.

4.Isha Foundation மட்டுமல்லாமல் இதற்காக உதவும் நிலையில் உள்ள அனைவரையும் தொடர்பு கொள்ளலாம்.

விவாசாயிக்கு பயன் ஏற்படவேண்டும் என்பதே முக்கியம். இதற்கு எந்த மைப்பு உதவி செய்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் , பல நேரங்களில் (எனது கள அனுபவங்களில் இருந்து) ஆரன்மகட்டத்த்கில் பலரிடம் விவாதிப்பது திட்ட நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது. எனவே, இந்த கருவை செயல்படக்கூடிய ஒரு திட்டமாக மாற்றியபின் (அதாவது நாம் என்ன , எப்படி செய்யப்போகிறோம் என்பதை திட்டவட்டமாக வரையறுத்தபின்) ஆர்வலர்களின் ஆலோசனைக்கேற்ப நிச்சயம் fine tune செய்யலாம் என்பதே எனது எண்ணம். இது பற்றி விவாதிக்கலாம்.

//Before starting the project kick off. We should be ready with a data warehouse (built ready) So that we can forecast atleast with past (Sampling.trend analysis) data. So we may gain Trust from farmers and other stake holders.//

அதே ...நீங்கள் சொன்னதேதான் ...இப்போது இந்த வேலைதான் நடந்து கொண்டு உள்ளது.

?!!!@#%* சொன்னது…

for some time, i could not come in internet,

i came to know that Our tamil nadu Government taken steps or already started a poral for vegetable (or farm goods sale!!) market price watch (Controlling also)

any body have more details please share i am also trying to get details.

thank you
sahridhayan

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சாஹா,

தகவலுக்கு நன்றி. யாருக்காவது மேல் விபரம் தெரிகிறதா என்று பார்ப்போம்.

அன்புடன்,

மா சிவகுமார்

?!!!@#%* சொன்னது…

I could not trace the newspaper content,

meanwhile see this info is useful.
-------------------------------------
Domestic and Export Market Intelligence Cell (DEMIC)

The Domestic and Export Market Intelligence Cell (DEMIC) has been established in the Centre for Agricultural and Rural Development Studies (CARDS), TNAU in order to forecast the supply and demand of important agricultural commodities in Tamil Nadu; to forecast future prices of major agricultural commodities; to study the state and national market situation related to important commodities; to disseminate the market and price information on to the farmers for planning, production and holding stocks; and to suggest policy measures to the Government of Tamil Nadu.

The main activities of DEMIC include forecasting price for agricultural commodities such as cotton, banana, chillies, turmeric, maize, small onion and gingelly based on the past price data collected from various major markets of Tamil Nadu and also based on the traders survey; maintaining a website www.tnagmark.tn.nic.in; developing and maintaining data base on commodity prices, area, production and productivity details; running a E-newsletter ie., Demic info Series; dissemination of agricultural commodity prices to farmers through newspapers and website; and offering export related information to traders.

Working hours: 9.00 AM to 5.00 PM (Weekdays)

Phone: 0422-6611439

Email: directorcards@tnau.ac.in
-----------------------------------
http://www.tnau.ac.in/rti/pdf/p10.htm

மா சிவகுமார் சொன்னது…

Saha,

this looks interesting. Thanks.

anbudan,
Ma Sivakumar

?!!!@#%* சொன்னது…

hi all,

if any updates, you all wish to share to keep the FIRE intact?

Thank you,
sahridhayan

மா சிவகுமார் சொன்னது…

சகா,

இவ்வளவு உற்சாகம் காட்டிய நண்பர்களுக்கிடையே என்னால் என் பங்கு செய்ய முடியாமல் இருப்பதால் தேங்கி விட்டிருக்கிறது.

யாராவது மென்பொருள் கற்றுக் கொள்பவர்கள் தெரியுமா? ஆர்வமுள்ளவர்களின் விபரம் கிடைத்தால் வேலை ஆரம்பித்து விடலாம். நானும் மாற்று ஏற்பாடுகளைப் பார்க்கிறேன்.

தாமதத்துக்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
மா சிவகுமார்

செந்தில்நாதன் செல்லம்மாள் சொன்னது…

நண்பர் சிவா,

எனக்கும் ஏறக்குறைய இதே மாதிரியான எண்ணம் உண்டு. நான் கடந்த 2ம் தேதி ஜனவரி மாதம் பதிவேற்றம் செய்த http://youtube.com/watch?v=SccxJ-Q07lI - எண்ணம் மற்றும் திட்டத்தை பார்க்க வேண்டுகிறேன். உங்களிடமிருந்து பல தகவல்களை "http://vellamai.blogspot.com/" வெள்ளாமையில் பொருத்தியுள்ளேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு, தகவல் சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்.

ஒத்த எண்ணம் கொண்ட உங்களை கண்டதில், எனக்கு மித்த மகிழ்ச்சி...

தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்... விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...

நன்றிகள் பல...

மா சிவகுமார் சொன்னது…

//தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்... விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...//

வாங்க அம்மா,

நிச்சயமாக செய்ய வேண்டிய பணி. உங்கள் வெள்ளாமை தளத்தில் முயற்சிகளை ஒருங்கிணைக்கலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்

சதுக்க பூதம் சொன்னது…

தங்களுடைய இந்த பதிவை இப்போது தான் படிக்கிறேன். தங்களுடைய முயற்ச்சி எதுவும் அரம்பிக்கபட்டு நடந்து வருகிறதா?

மா சிவகுமார் சொன்னது…

//தங்களுடைய முயற்ச்சி எதுவும் அரம்பிக்கபட்டு நடந்து வருகிறதா?//

இன்னும் இல்லை சதுக்க பூதம் :-(
அன்புடன்,
மா சிவகுமார்

செந்தில்நாதன் செல்லம்மாள் சொன்னது…

மிக்க நன்றி...

செல்லம்மாள் செந்தில்நாதன்.

Unknown சொன்னது…

ஒத்த கருத்துடையோரை சந்தித்ததில் மகிழ்ச்சி,
நானும் தங்களுடன் இனைந்து பங்காற்ற விரும்புகிறேன். நான் தற்பொழுது மூலிகைகள் மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்த தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் ஓரளவிற்கு சேகரித்து வைத்துள்ளேன்.

விவசாயத்தை ஊக்குவிப்பதில் என்னுடைய எண்ணத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உங்கள் முயற்சி அனைத்தும் பாராற்றுக்குரியது ஆனாலும் இதற்க்கு முன்னர் விவசாயிகளை விவசாயத்தை தொடர்ந்து செய்விக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு போதுமான வருமானம் விவசாயத்தின் மூலமே கிடைக்கப் பெற வழி செய்ய வேண்டும்.
இதற்க்கு விவசாயம் மட்டும் இல்லாமல் துனைதொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

நடராஜன்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் நடராஜன்,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பெரிதாக எதுவும் செய்து விடவில்லை.

இந்த சுட்டியை பாருங்கள். கிட்டத்தட்ட நான் நினைத்தது போன்ற செயல்பாடு இருக்கிறது. அதை பரவலாக்க முயற்சி செய்யலாம்.

https://customers.reuters.com/community/commodities/focus/focus_june08.aspx

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

நன்றி சிவகுமார்,
நம் முயற்சி வெற்றிபெற என்னுடைய ஆலோசனையை முன்வைக்கிறேன்.
இந்த சுட்டியில் உள்ள அன்பர்கள் அவரவர் ஊர்களில் உள்ளோரை ஒருங்கிணைக்க வேண்டும். ஏனெனில் அங்கு மட்டுமே உண்மையான தகவல்களை சேகரிக்க முடியும்.

விவசாயத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும் எனில் நாம் முதலில் அதில் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டும் பிறகுதான் நம்முடைய வார்த்தைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அதன் பின்னர் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். முதலில் நாம் தான் தகவல் பரிமாற்றத்தை தொடங்கவேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் தகவல் தர முன்வருவார்கள். அதுமட்டுமே நம் என்னத்தை நிறைவேற்ற முடியும். இதற்க்கு குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும் (முயற்சியை கைவிடாமல் இருந்தால்).

இந்த முறையை நான் இப்போது தொடங்கும் முயற்சியில் இருக்கிறேன். என்னுடைய முதல் இலக்கு இயற்கை விவசாய வெற்றி. இது விவசாயிகளின் கவனத்தை திருப்பும். இது மட்டுமே நமது முயற்சிக்கு வெற்றியாக அமையும் என்பது என் கருத்து.

அனைவரது கருத்தையும் எதிர்நோக்கி உள்ளேன்.

அன்புடன்,
நடராஜன்.

மா சிவகுமார் சொன்னது…

நடராஜன்,

என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க. நான் இப்போது இருப்பது சென்னைக்கு அருகில் ராமாபுரம், வளசரவாக்கம் பகுதியில். விவசாய கிராமங்கள் 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கின்றன. அங்கு எனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்புகள் இல்லை.

ஏதாவது அமைப்புகள் இருக்கின்றனவா? அல்லது நமக்கத் தெரிந்தவர்கள் மூலம் செயல்பாட்டை ஆரம்பிக்க வேண்டுமா?

அன்புடன்,
மா சிவகுமார்

ARIVAZHAGAN சொன்னது…

அய்யா
நாம் மரபணு மாற்றபட்ட கத்தரிக்காய் எவ்வாறு சந்தைகளில் அடையாளம் காணலாம் தங்களுடைய கருத்தை அறிய
விரும்புகிறேன்

ARIVAZHAGAN சொன்னது…

அய்யா
நாம் மரபணு மாற்றபட்ட கத்தரிக்காய் எவ்வாறு சந்தைகளில் அடையாளம் காணலாம் தங்களுடைய கருத்தை அறிய
விரும்புகிறேன்

ARIVAZHAGAN சொன்னது…

அய்யா
நாம் மரபணு மாற்றபட்ட கத்தரிக்காய் எவ்வாறு சந்தைகளில் அடையாளம் காணலாம் தங்களுடைய கருத்தை அறிய
விரும்புகிறேன்

மா சிவகுமார் சொன்னது…

ASAN,

எனக்குத் தெரிந்த வரை மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை வேறுபடுத்தி அறிவது முடியாத ஒன்று. உற்பத்தி ஆகி, சந்தைக்கு வருவதற்கு முன்பு பொருத்தமான குறியீடு ஒட்டி அனுப்பினால்தான் நுகர்வோர் அதை பிரித்து அறிய முடியும்.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அத்தகைய குறியீடுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்கள். நம்ம ஊரில் சட்டம் போட்டாலும், நடைமுறையில் பிரித்தறிவது முடியாததாகவே இருக்கும். ,

ravi சொன்னது…

nice