வியாழன், ஜூலை 19, 2007

சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?

வவ்வால் போன பதிவிலேயே விடையைச் சொல்லி விட்டார். 'குறைந்த வெப்பம் வேதிவினை திறனைக் குறைக்கும்' என்று.

வேதி வினைகள் குறித்த வெப்ப நிலையில் அதிக பட்ச வேகத்தில் நடக்கும். நமது உடலின் உயிர் வேதி வினைகள் அனைத்தும் உடல் வெப்ப நிலையிலேயே நடக்கும் படி தகவமைந்திருக்கும்.

சாப்பிட்டுட, குளிர்ந்த நீர் குடித்தால் வயிற்றின் உள் வெப்பநிலை குறைந்து உணவைச் செரிக்கும் வினைகள்
பாதிக்கப்படும் என்று அனுபவம்.

வெதுவெதுப்பான நீர்தான் வயிற்றுக்கு நல்லது.

அடுத்த கேள்வி:
சாப்பிட்ட உடன் தூக்கம் வருவது ஏன்?

19 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

MaaSi,
Please check out this link. Very much related to the topic you've taken up..

http://naturesplatform.com/health_benefits.html#rb

- Ravi

முரளிகண்ணன் சொன்னது…

பல விசயங்களை எங்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். நன்றி. தொடரட்டும் உமது பணி

வவ்வால் சொன்னது…

மா.சி,

ரொம்ப அடிப்படையாக ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்களா?

//சாப்பிட்ட உடன் தூக்கம் வருவது ஏன்?//

பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு , அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும், சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்காக அதிக ரத்த ஓட்டம் ... வயிற்றின் பக்கம் திருப்பப்படும் எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் அதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும் ,அதுவே தூக்கத்திற்கு அழைத்து செல்லவும் காரணம் என நினைக்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

Very Usefull info. thanks

வவ்வால் சொன்னது…

பொதுவாக குறைந்த வெப்பநிலையில் வேதிவினை மெதுவாக நடக்கும் ஆனால் நம் இரைப்பையில் சேர்ந்த சில நிமிடங்களில் குளிர்ந்த நீரின் வெப்பம் மாறிவிடும்,செரிக்க 4- 5 மணி நேரம் என்ற கால அளவை பார்க்கையில் இது பெரியது அல்ல எனவே அதனால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றே நினைக்கிறேன். உறைனிலைக்கு பக்கமாக தண்ணீர் குடித்தால் வேண்டுமானால் அப்படி ஆகலாம்.

பிஸ்ஸாவுக்கு துணையாக கோக் தருவார்கள் ஒரு சலுகை விலையில் அதற்கு காரணமே பிஸ்ஸவை எளிதில் செரிக்க வைக்கும் கோக் என்பதால் தான். ஆரம்பத்தில் இரண்டும் சேர்த்து சாப்பிட்டால் திம்மென்று திவ்யமாக இருக்கும் ,ஆனால மீண்டும் சீக்கிரம் பசிக்கும் ,மீண்டும் ஒரு பிஸ்ஸா சாப்பிட வருவார்கள் என்ற எண்ணம் தான்.

Unknown சொன்னது…

மாசி நல்ல தகவல்.. பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி

ரவி சொன்னது…

நல்ல தகவல் மா.சி...!!!!!!!!

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ரவி,

//http://naturesplatform.com/health_benefits.html#rb//

பயனுள்ள சுட்டி, குறித்துக் கொண்டேன். பொறுமையாகப் படிக்க வேண்டிய விபரங்கள்.

முரளி,

//பல விசயங்களை எங்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள்.//

அனுபவமாக அவதானித்தவைதான். அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்தது இல்லை :-)

வவ்வால்,

//அதுவே தூக்கத்திற்கு அழைத்து செல்லவும் காரணம்//

கேள்விகளுக்கு பதில்களை குவிக்கிறீர்கள். நான் நினைத்திருந்த அதே பதில். பதிவாகப் போட்டு விடுகிறேன்.

//Very Usefull info. thanks//

நன்றி சின்ன அம்மிணி.

//செரிக்க 4- 5 மணி நேரம் என்ற கால அளவை பார்க்கையில் இது பெரியது அல்ல எனவே அதனால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றே நினைக்கிறேன்//

குளிர் நீர் இறங்கிய நிமிடங்களிலும் வேதி வினை நின்று விடுவதில்லை. குறைந்த வெப்பநிலையில் பகுதி வினை நடந்து நச்சுப் பொருட்கள் கூட உருவாகலாம்.

//ஆரம்பத்தில் இரண்டும் சேர்த்து சாப்பிட்டால் திம்மென்று திவ்யமாக இருக்கும் ,ஆனால மீண்டும் சீக்கிரம் பசிக்கும் //

அதற்கு கோக்கின் குளிர்தன்மைதான் காரணம் என்று நினைக்கிறீர்களா? அல்லது பிட்சாவே அவ்வளவுதானா?

நன்றி தேவ், செந்தழல் ரவி.

அன்புடன்,

மா சிவகுமார்

மருதநாயகம் சொன்னது…

குளிர்ந்த நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு நம் சிறு நீரகங்கள் வழக்கத்தை விட அதிகம் வேலை செய்ய வேண்டும். அதனால் முடிந்த வரை குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது

வவ்வால் சொன்னது…

மா.சி ,

கோக்கின் குளிர் தண்மை விட அதன் வேதிப்பொருட்களுக்கு உணவை கரைக்கும் தண்மை ..உண்டு.. செரிக்கும் தண்மை என அதை சொல்ல கூடாது!
--------------------------------

மருத நாயகம் ,

குடலில் நீர் உட்கிரகித்து ரத்ததில் கலந்து பின்னர் தான் யூரியாவை பிரித்து உபரி ந்நிர் வெளியேற்றப் படுகிறது குளிர் நீர் எல்லாம் சிறு நீரகம் பக்கமே போகாது ரத்தம் தான் போகும் அங்கே!

பெயரில்லா சொன்னது…

No harm in drinking cool water....

If you drink the water that has just melted from ice that saves calories

வவ்வால் சொன்னது…

மா.சி ,

பட்டறை நினைவுகளில் இருந்து பதிவர் நினைவுகளுக்கு வந்தாயிற்று போல் உள்ளது!

குளிர் நீரோ அல்லது வெறும் நீரோ உணவிற்கு முன் அதிகம் குடித்தால் சீரணம் செய்யப்பயன்படும் நொதிகளை(digestive juice) நீர்க்க செய்து விடலாம், எனவே தான் அதிகம் உணவின் போது அல்லது முன்பு குடிக்க வேண்டாம் என சொல்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

சாப்பிட்ட பிறகும் அளவோடு தான் தண்ணீர் அருந்த வேண்டும் என நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

sivakumaar,
olden days habits were good.
my grandmother use to dring only jeerakam water that too when it is warm.
a jug full of seerakaththaNNi will cure any kind of discomfort.
thank you for this health note.

பெயரில்லா சொன்னது…

குளிர்ந்த நீரு வேண்டாம், ஓகே. குளிர்ந்த பீரு குடிக்கலாமா??

வவ்வால் சொன்னது…

அனானி ,

ஓசில கிடைச்சா ஒரு கேஸ் பீர் கூட குடிக்கலாம் :-))

மா சிவகுமார் சொன்னது…

வாங்க வல்லி அம்மா,

நம் முன்னோர் வகுத்த நெறிகளில் ஆழமான அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன.

புருனோ,

உங்க லாஜிக் புரியலையே!

வவ்வால்,
நம்மளும் விக்கிபசங்க குழுமத்தில் சேர்ந்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. அடுத்தடுத்து கேள்விகளும் விடைகளும் போட வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

For those who like to drink cold water..... It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this "sludge" reacts with the acid , it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.

வவ்வால் சொன்னது…

மா.சி,
நான் சொல்வது எல்லாம், பழைய நியாபகதின் அடிப்படையில் யூகித்து சொல்வது தானே அதை எல்லாம் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ள முடியுமா?

அனானி ,

//t is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this "sludge" reacts with the acid , it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer//

வெறும் குளிர்ந்த நீர்குடிக்க வேணாம் பானம் குடிக்க சொல்லிட்டு , கேன்சர் வரும்னு சொல்றிங்க அப்புறம் ஏன் நைஸ் னு சொல்றிங்க?

பெயரில்லா சொன்னது…

//t is nice to have a cup of cold drink after a meal. However... //


//வெறும் குளிர்ந்த நீர்குடிக்க வேணாம் பானம் குடிக்க சொல்லிட்டு , கேன்சர் வரும்னு சொல்றிங்க அப்புறம் ஏன் நைஸ் னு சொல்றிங்க? //


குளிர் தண்ணிர் குடிப்பதர்க்கு சுவையாக இருக்கும்.. ஆனால் குளிர் தண்ணிர் நல்லது அல்ல என்ற அர்தத்தில் எழுதியது. after the first sentence , the second sentence begins with However... to show the contrast.
--- same anony