தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிகவுழன்று
பிறர் வாடப் பலசெயல்கள்செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
- பாரதி
(நினைவூட்டலுக்கு நன்றி - நந்தா)
4 கருத்துகள்:
முழுக் கவிதையும் இதோ
------------------------------------
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னை தீய வினை பயன்கள் - இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்
கவலையரச் செய்து - மதி
தன்னை மிக தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
அன்புடன்
வெங்கட்ரமணன்
முழு கவிதையையும் இன்னொரு முறை படிக்க சந்தோஷமாக இருக்கிறது.
எதைச் செய்தாலும், எப்போதும் மனதின் ஒரு மூலையிலிருந்து ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டிருக்கும் வரிகள்...
A part of these imortal lines were read /sung with conviction and depth by Kamal in his magnum opus
Mahanadhi (jail scene).
hope you all remember that scene.
நன்றி வெங்கட், நந்தா,
நந்தாவின் ஜிடாக் நிலைத் தகவலில் பார்த்ததும் ஒரு இடுகையாகப் போட்டு விட்டேன் :-)
நான் மகாநதி பார்க்கவில்லை அதியமான். நல்ல படம் என்று கேள்விப்பட்டேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக