வெள்ளி, ஜூலை 13, 2007

பின் நவீனத்துவம் - முனைவர் ரமணியின் பேச்சிலிருந்து குறிப்புகள்

கோவையில் நடந்த பதிவர் பட்டறையில் பின் நவீனத்துவம் பற்றி முனைவர் ரமணி:
  • பின்நவீனத்துவம் என்பது, நவீனத்துவம் என்று பின்பற்றப்பட்ட கட்டுகளை உடைத்து கலை, அறிவியல், தொழில், பொதுப் பண்பாடு என்று எல்லா துறைகளிலும் புதிய பாதைகளை உருவாக்கும் போக்கு.
    (சொல்வதைப் பார்த்தால் இன்றைக்கு நடக்கும் எந்த மாற்றத்தையும் பின் நவீனத்துவம் என்று அடையாளம் ஒட்டி வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது).

  • பழைய புனித பிம்பங்களை உடைக்கும் இளையதலைமுறையினரின் போக்கு பின் நவீனத்துவம். இடம், பயனைப் பொறுத்து கட்டிடம் வடிவமைத்தல், இசைத் துறையில் வரையறைகளை மாற்றுதல், இலக்கியத் துறையில் எதிர்க் கலைத்துவப் படைப்புகளை உருவாக்குபவர் பின்நவீனத்துவ படைப்பாளி.

    (புதுக் கவிதை, அயன் ராண்டின் ஹோவார்டு ரோர்க், ஏ ஆர் ரஹ்மான்/இளையராஜாவின் இசை முறைகள் போன்றவை தனக்கென மரபுகளை உருவாக்கினார்கள். ஏற்றுக் கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத பாத்திரங்களைப் படைத்திருப்பார்கள். சல்மான் ரஷ்டியின் எழுத்துக்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட போக்குகள் இருக்கின்றன.)

  • பொருளாதாரம், தொழில்நுட்பம், அரசியல், ஊடகம் எல்லா துறைகளிலும் மையம் உடைந்து விட்டது. அசலுக்கும் நகலுக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்து விட்டது. இணையத்தில் யாரும் எழுதுவது அவருக்கு உரியது என்று சொல்ல முடியாது.

    ஊடக உள்ளடக்கங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட முயற்சிக்கும் DRM போன்றவை, அரசியல் ஆதிக்கப் போக்குகள் மறைந்து விடுகின்றன. எந்த நாடும் யார் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

  • உலகளாவிய சமூகமாக மாறுகிறது. எந்த குழுவும் இன்னொரு குழுவின் மீதும் மேலாதிக்கம் செலுத்தும் நிலைமை இருக்க முடியாது. மென்பொருள் ஆதிக்கத்தின் மூலமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்த முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

  • எப்படிப்பட்ட கலை இலக்கியம் இருக்க வேண்டும் என்று முதலாளித்துவ சக்திகள் தீர்மானித்தன. சந்தைப் பொருளாதாரத்தின் மூலமாக ஏற்பட்ட தொழில் நுட்ப மாற்றங்களின் வழியாக, யதார்த்தவியல் தொடர்ந்து இரண்டாவது உலகப் போரின் இறுதி வரை மோனோபொலி முதலாளித்துவத்தின் இரண்டாவது நிலை, நவீனத்துவம் நிலை நாட்டியிருந்தது.

  • இன்றைய கால கட்டம் முதலாளித்துவத்தின், பன்னாட்டு, நுகர்வோர் பொருளாதாரம் நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது உற்பத்தியை விட நுகர்வு முதன்மை பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலமாக எந்த உற்பத்திச் சிக்கலையும் தீர்த்து வைக்கலாம். அணுக்கரு, மின்னணு தொழில்நுட்பங்கள், சமூக, அரசியல், அறிவியல் மாறுதல்களின் திரட்சியாக வருகின்றன.

  • நவீனத்துவம் (modernism) ஒழுங்கை எதிர்பார்க்கிறது. பகுத்தறிவுக்கு முதலிடம் கிடைத்தது. எந்த அளவு ஒழுங்கு இருக்கிறதோ அந்த அளவு சமுதாயம் சீராக இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒழுங்கு, ஒழுங்கீனம் என்ற நிலைமை பராமரிக்கப்பட்டது. ஒழுங்கு அடையாளம் காண ஒழுங்கீனமும் அங்கங்கு இருந்தே ஆக வேண்டும் என்று நிச்சயப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

  • வெள்ளையர் அல்லாதோர், ஆணாதிக்க எதிர்ப்பாளர்கள். மூட நம்பிக்கை என்று அடையாளங்கள் ஒட்டப்பட்டு ஒதுக்கப் பட்டனர். ஒழுங்கீனத்தை ஒதுக்கி வைக்க அழித்து விட முயற்சிகள் எடுக்கப்பட்டன. முத்திரை குத்துவதன் மூலம் சமுதாயத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதாக முயற்சித்தார்கள்.

  • காரல் மார்க்சின் தஸ் கேபிடல் போன்ற கொள்கைகள் எப்படி தனது நம்பிக்கைகள், விழுமியங்கள் பற்றி செயல்பட வேண்டும் என்று சொல்வதுதான் இந்த கிரேன்ட் நரேடிவ்ஸ். 'முதலாளித்துவம் தானாக மறுகிப் போகும், அதன் பிறகு பொற்காலம் மலரும்' என்று சொல்வது மார்க்சிசம்.

  • நடைமுறையில் இருப்பதை மூடாமல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு குறு கொள்கை விளக்கங்களைப் பற்றிப் பேசுகிறது பின்நவீனத்துவம். இது பரவலானது இல்லை என்று தெளிவாகக் காட்டுகிறது. தனிநபர் வாதம்தான் பின்நவீனத்துவத்தின் அடிப்படை.

  • கொள்கை கோட்பாடு போன்றவற்றுக்கு அவசியம் இல்லாத ஒன்றாகி விட்டது. 1950க்கு பிறகு பின் நவீனத்துவம் ஆரம்பித்தது. வரலாறு திரும்ப ஓடுவதில்லை, திரும்ப நடக்கிறது.

  • வசதி, அமைதி, செல்வம், பணி, வேலை வாய்ப்புகள் அரசியலைத் தீர்மானிக்கின்றன. இனியும் இந்துத்துவம், பிராமணீயம், சாதீத்துவம், உலக மயமாக்கல் போன்ற கொள்கை அடிப்படைகள் தகர்ந்து விடுகின்றன.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளது இந்த கட்டுரை...

பாலபாரதி வழங்கிய நோட்டில் அடிக்கடி நீங்க நோட் பண்ணியபோதே நினைச்சேன்...

இப்படி பக்காவா ஒரு அரும்'சொல்'பொருள் விளக்கத்துடன் ஒரு பதிவு வரும் என்று...

வெல் டன்...

நாஞ்சிலான் சொன்னது…

\\வரலாறு திரும்ப ஓடுவதில்லை, திரும்ப நடக்கிறது.\\

Hegalலின் dialectics?

பெயரில்லா சொன்னது…

//இனியும் இந்துத்துவம், பிராமணீயம், சாதீத்துவம், உலக மயமாக்கல் போன்ற கொள்கை அடிப்படைகள் தகர்ந்து விடுகின்றன.//

There is some grammar mistake in the sentence.

மா சிவகுமார் சொன்னது…

ரவி,

அன்றைக்கு கேட்டுக் கொண்டே கணினியில் தட்டச்சியது, முடிந்த வரை பிழை திருத்தி, வடிவமைத்து போட்டேன். அனானி சொல்வது போல இலக்கணப் பிழையும் இருந்து விட்டது.

//இப்படி பக்காவா ஒரு அரும்'சொல்'பொருள் விளக்கத்துடன் ஒரு பதிவு வரும் என்று...//

உங்களுக்கு முழுசா புரிஞ்சிருச்சா?! எனக்கு இன்னும் இல்லை :-)

//Hegalலின் dialectics?//

எதைக் கேட்டு இந்த வாக்கியத்தை எழுதினேன் என்று எனக்கும் மறந்து விட்டது :-)

அன்புடன்,

மா சிவகுமார்