புதன், ஜூலை 04, 2007

காந்தி - ஒரு கேள்வி

காந்தி, இந்திய விடுதலைக்காக காங்கிரசு பணியில் ஈடுபட்டது ஏன்?

சத்தியத்தில் உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால் தனி ஒரு மனிதராக கிராமங்களில் போய் தமது பணியை ஆரம்பித்திருக்கலாம். எதற்காக ஒரு இயக்கத்தில் சேர வேண்டும்.?

'ஒரே ஒரு சத்தியாக்கிரகி உள்ளத் தூய்மையுடன் உறுதியாக இருக்கும் வரை வெற்றி கிடைத்து விடும்' என்று தென்னாப்பிரிக்காவில் இருந்த நம்பிக்கை எங்கே போனது? காங்கிரசு என்று பூதத்தை வளர்த்து விட்டு நாட்டுக்கு தீங்கு விளைத்து விட்டாரா?

'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள வேண்டும்' என்று நம்பிய அவர் ஏன் புது தில்லியில் வைஸ்ராயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்?

ஒரு கிராமத்தில் குடியேறித் துறவியாக வாழ்ந்திருந்தாலே அவரது சத்தியம் நாடெங்கும் பரவி ஒவ்வொரு மனிதரையும் மேம்படுத்தி அனைவருக்கும் உறுதியும், வளமும், முன்னேற்றமும் பெற்றுத் தந்திருக்காதா?

13 கருத்துகள்:

சுந்தர் / Sundar சொன்னது…

என்ன ஆச்சு உங்களுக்கு ..?

மா சிவகுமார் சொன்னது…

ஏன் சுந்தர்? :-)

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை, படைப்புகளைப் படிக்கும் போது எனக்குத் தோன்றிய கேள்வி அது?

அன்புடன்,

மா சிவகுமார்

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

மிகச்சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்...காங்கிரசின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு வித்திட்டது காந்திதான். அவரது கொள்கைகளை கடைபிடிக்க காங்கிரசுக்கும் நேருக்கும் மட்டும் ஏன் அவர் விதிவிலக்களித்தார் என்பது இன்றும் கேள்வி குறியாகவே உள்ளது.

வவ்வால் சொன்னது…

//காங்கிரசு என்று பூதத்தை வளர்த்து விட்டு நாட்டுக்கு தீங்கு விளைத்து விட்டாரா?//

காந்தி தெனாப்ரிக்காவிலிருந்து இந்தியா வரும்முன்னரே காங்கிரஸ் நன்கு வளர்ந்த இயக்கமாக இருந்தது, காந்திக்கு முன்னரே பல பெரும் தலைவர்கள் இருந்தார்கள் , காந்திக்கு சமகாலத்தவராக பலரும் இருந்தும் இவருக்கு ஏன் காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து விட்டது என நான் பல முறை எனக்குள் கேள்வி கேட்டுகொண்டுள்ளேன்!

நீங்கள் தலை கீழாக கேள்விக்கேட்டுள்ளீர்கள்

ஜீவி சொன்னது…

பாவம், காந்தி...
அந்த கிழவரின் கொள்ளுப் பேரன் வயசு கூட இல்லாதவர்களெல்லாம்
இப்படியெல்லாம் தன்னை நாராகக் கிழித்துப் போடுவார்களென்று நினைப்பில்லாமல் ஒரு துரும்பைக்கூட
நகர்த்தாமல், மஹாத்மாவாகி விட்டார்.
அய்யோ, பாவம்.. மா.சி... பக்கம் பக்கமாய் எழுதி எழுதி
யாரும் தன்னைச் சீந்தக் காணோமே என்று சலித்து
பிறரைக் கவர, காந்தியைத் தொட்டிருக்கிறார், போலும்.
ஒரு சாராருக்கு ரஜினி (சிவாஜி) என்றால், இவருக்கு
காந்தி... அவ்வளவுதான்.
மற்றபடி வேறு எந்த முக்கியத்துவமும் இவரது 'கண்டுபிடிப்பில்'
இருப்பதாகத் தெரியவில்லை, எனக்கு.

மா சிவகுமார் சொன்னது…

//மிகச்சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்..//

ஜீவி முறைக்கிறார் பாருங்க :-). கேள்விகளைத் தாண்டிய புனிதம் எதுவுமில்லை என்பதுதான் காந்தியின் வாழ்க்கையே சொல்லும் பாடம்.

//காங்கிரசின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு வித்திட்டது காந்திதான்.//

இன்றைக்கு ஒரு வாடிக்கையாளருடன் பேசிக் கொண்டிருக்கும் போது காங்கிரசு கட்சிக் காரர்கள்தான் இருப்பதில் குறைவான அடாவடி செய்பவர்கள் என்றார். அதுவும் உண்மைதானே!

வவ்வால்,

//காந்தி தெனாப்ரிக்காவிலிருந்து இந்தியா வரும்முன்னரே காங்கிரஸ் நன்கு வளர்ந்த இயக்கமாக இருந்தது, //

அப்போது உயர்தட்டு அறிவு ஜீவிகளின் கட்சியாகவே இருந்தது என்பது எனது புரிதல். காந்தியின் அரசியலின் மூலம்தான் காங்கிரஸ் பொதுமக்களை அணுகிய கட்சியானது.

ஜீவி,

:-)

கேள்விதானே கேட்டேன். உண்மையிலேயே தெரியாமல் கேட்ட கேள்விதான் அது. எதையும் புதிதாகக் கண்டு பிடித்து விட்டதாகக் கேட்டது இல்லை. உங்கள் கருத்து என்ன?

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Congress as we know today or since
1947 is very very different than the one that exisited before. The leaders were all of very good calibre and selfless. And landlords and the very rich didnot become Congress memebers or leaders then as it was riskie to oppose the British.

Gandhiji converted the Congress into a mass movement with people's participation. and the word monster cannot be applied to his congress. And he did asked for the Congress to be desolved after 1947,
in vain. Socilisim and its license,permit raj dostorted the Congress ideals and made it an instrument of corruption. Rajaji
opposed all this and finaly quit Congress to form Swathanthra party to fight the 'monstor'..

and it is indeed easy to villfy Gandhiji or the Congress of the freedom struggle era..

he had his faults of course as he was a human indeed. he hated the title 'mahathma'...

one needs to read and learn a lot to understand his times and ideals.
not an easy task..

நந்தா சொன்னது…

//At June 28, 2007 12:31 PM ஜீவி said...
// ஒருவரே தீவிர இந்துத்துவா வாதியாகவும், இசுலாமிய //
மகாத்மாவை ஏன் ஒரு மனித நேயராக உங்களால் பார்க்க
முடியவில்லை? ஏனென்றால், 'இந்து- இஸ்லாம்-கிருஸ்தவ'
என்ற இந்த மூன்றடுக்கு வார்த்தைகளே பழகிப்போன ஒரு
சூழலில், ஒட்டு மொத்த மனித நலனுக்காக தன்னையே
தீய்த்து வருத்திக்கொண்ட அந்த மேலான ஆத்மாவின்
பரிசுத்தம் புரியாதலால் தான்...//


வணக்கம் ஜீவி.

மேலே இருப்பது எனது பதிவில் நீங்கள் சொல்லியிருப்பது. அதில் காந்தியை பரிசுத்த ஆத்மா என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இங்கே "ஒரு துரும்பைக்கூட
நகர்த்தாமல், மஹாத்மாவாகி விட்டார்" என்று சொல்லி இருக்கிறீர்கள். எதை நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?????????

//ஒரு சாராருக்கு ரஜினி (சிவாஜி) என்றால், இவருக்கு
காந்தி... அவ்வளவுதான்.// மன்னிக்கவும் ரஜினி - சிவாஜியையும் காந்தியோடு ஒப்பிட்டுப் பேசுவதை எந்த வகையில் சேர்த்தி என்று தெரிய வில்லை. அப்படி பார்த்தால் எந்த விஷயத்தை குறித்தும் பேச முடியாது. சிந்திக்க முடியாது. எதையும் மறு பரிசீலனை செய்ய முடியாது.

//மற்றபடி வேறு எந்த முக்கியத்துவமும் இவரது 'கண்டுபிடிப்பில்'
இருப்பதாகத் தெரியவில்லை, எனக்கு. //

இதில் கண்டுபிடிப்பு எல்லாம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. ஒரு நல்ல பகிர்தலைத் வேண்டியும், தன் மனதினுள் எழும் கேள்விகளிற்கு விடை தேடியும் செய்த முயற்சியாக எனக்குத் தோன்றுகிறது.

வவ்வால் சொன்னது…

மா.சி,

நான் கேள்வி எழுப்பியது வேறு, தென்னாப்ரிக்காவிலிருந்து வந்ததும் காந்திக்கு எப்படி திடீர் என்று ஒரு குறிப்பிட தக்க முக்கியத்துவம் அளித்தார்கள் என்பது தான்.பெரிதாக எதுவும் செய்யாமலே, வந்தவுடன் அவரை ஒரு தேசியதலைவராக அஙிகரித்துவிட்டார்கள். எதன் அடிப்படையில்?.

காந்தி தனது வாழ்கை வரலாற்றிலும் மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்ப விரும்பியதாக தான் குறிப்பிட்டுள்ளார்.அவர் சிலருடன் பேட்டிக்கண்டதாகவும் அப்போது இங்கேயே இருங்கள் என்றவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு பரிசீலிப்பதாகவும் தான் சொல்லியுள்ளார், பின்னர் உடனே காங்கிரசின் மேல் மட்ட வளையத்திற்கு எளிதாக சென்று விட்டார்.

எனது கணிப்பு என்னவெனில்,

காந்தி தெ.ஆவில் இருந்க போது ஆங்கிலேயருடன் இணக்கமான வழியில் நடந்து கொண்டார், போயர் யுத்தத்தில் மருத்துவ செவை செய்து விருதெல்லாம் வாங்கி இருந்தார். எனவே அவருக்கு ஆங்கில மட்டத்திலும் நல்ல தொடர்பு இருந்தது, எனவே அவர்களும் காந்தி காங்கிரசில் குறிப்பிடத்தக்க தலைவராக வருவதை விரும்பினார்கள் அதற்கு மறைமுகமாக உதவி இருக்கலாம் என்பதே!

Sridhar Narayanan சொன்னது…

//அவர்களும் காந்தி காங்கிரசில் குறிப்பிடத்தக்க தலைவராக வருவதை விரும்பினார்கள் அதற்கு மறைமுகமாக உதவி இருக்கலாம் என்பதே!//

இந்த வாதத்திற்கு சான்றுகள் இப்பொழுது இல்லாவிடினும் இதற்கான சாத்தியங்கள் அதிகமே.

அதையும் தாண்டி அவரிடம் ஒரு பெரும் வசீகரம் (charisma) இருக்கத்தான் செய்தது.

அவருடைய அரசியல் குருவாக அவர் கொண்டது கோகலே. அதனால் அவர் தன் குருவின் பாதையிலேயே அரசியல் பயனத்தை காங்கிரசிலிருந்து தொடங்கியிருக்கலாம்.

பின் வந்த நாட்களில் அவர் காங்கிரசை விட பெரும் சக்தியாக மாறிவிட்டார்.

மா சிவகுமார் சொன்னது…

அதியமான்,

//Gandhiji converted the Congress into a mass movement with people's participation. and the word monster cannot be applied to his congress. And he did asked for the Congress to be desolved after 1947,
in vain.//

உங்களுடன் ஒத்துப் போகிறேன் அதியமான். இருப்பினும் 1947க்குப் பிறகு, குறிப்பாக நேருவின் மறைவுக்குப் பிறகு, காங்கிரசின் பன்முகத்தன்மை அழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

// தன் மனதினுள் எழும் கேள்விகளிற்கு விடை தேடியும் செய்த முயற்சியாக எனக்குத் தோன்றுகிறது.//

நன்றி நந்தா,
இந்தக் கேள்விகளுடன் காந்தியின் வாழ்க்கையை படிக்கும் போது விடை கிடைத்தாலும் கிடைத்து விடலாம்.

//தென்னாப்ரிக்காவிலிருந்து வந்ததும் காந்திக்கு எப்படி திடீர் என்று ஒரு குறிப்பிட தக்க முக்கியத்துவம் அளித்தார்கள் என்பது தான்.பெரிதாக எதுவும் செய்யாமலே, வந்தவுடன் அவரை ஒரு தேசியதலைவராக அஙிகரித்துவிட்டார்கள். எதன் அடிப்படையில்?.//

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் பற்றிப் படித்துப் பாருங்கள் வவ்வால். அதன் மூலம் கோகலே முதலான தலைவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தார் காந்தி.

இந்தியா வந்ததும் திடீரென்று தேசிய தலைவராக உயர்ந்து விடவில்லை. சாதாரண காங்கிரசு தொண்டராகவே ஆரம்பிக்கிறார். சம்பாரண் முதலான போராட்டங்கள், நலிவுற்றோர் அவரை நாடலாம் என்ற
வெளிச்சத்தைக் கொடுத்தன.

/ரகாந்தி தெ.ஆவில் இருந்க போது ஆங்கிலேயருடன் இணக்கமான வழியில் நடந்து கொண்டார்,//

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் படித்தால் இதன் எதிர்மறையும் புரிகிறது.

//அவருடைய அரசியல் குருவாக அவர் கொண்டது கோகலே. அதனால் அவர் தன் குருவின் பாதையிலேயே அரசியல் பயனத்தை காங்கிரசிலிருந்து தொடங்கியிருக்கலாம்.//

இதுதான் நடந்தது என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

யோசிப்பவர் சொன்னது…

//சத்தியத்தில் உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால் தனி ஒரு மனிதராக கிராமங்களில் போய் தமது பணியை ஆரம்பித்திருக்கலாம். எதற்காக ஒரு இயக்கத்தில் சேர வேண்டும்//

அந்த நேரம் காங்கிரஸும் இந்திய விடுதலைப் 'பணியில்'(முயற்சியில்) ஈடுபட்டிருந்தது. உங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அதே நோக்கத்துக்காக ஏற்கெனவே சிலர் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது சிறந்ததா? இல்லை, அவர்களுடன் சேரமாட்டேன். தனியாகத்தான் செய்வேன் என்று சொல்வது புத்திசாலித்தனமா?


//காங்கிரசு என்று பூதத்தை வளர்த்து விட்டு நாட்டுக்கு தீங்கு விளைத்து விட்டாரா?
//
மேலும் அந்த நேரம் காங்கிரஸ் மிக உயரிய நோக்கங்களுடன்(இப்பொழுதை விடுங்கள்!) செயலாற்றிக் கொண்டிருந்தது என்பதையும் நாம் மறக்கலாகாது.

//ஒரு கிராமத்தில் குடியேறித் துறவியாக வாழ்ந்திருந்தாலே//
துறவிக்கு எப்பொழுதுமே செயலும், கடவுளைத் தவிர வேறு குறிக்கோளும் கிடையாது. காந்தி துறவி கிடையாது. துறவியாக இருந்திருந்தால், ஒரு தேச விடுதலைக்காக பாடுபட முடியாது.

மா சிவகுமார் சொன்னது…

யோசிப்பவர்,

நீங்கள் சொல்வது நியாயமான வாதமாகத்தான் படுகிறது. இருந்தும் இன்னும் நிறைவில்லை. சத்தியாக்கிரகம் பற்றி காந்தி எழுதியுள்ளவற்றைப் படித்தால் இயக்கம் மூலம் ஆள் சேர்க்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்