விடை உதவி - வவ்வால்்
"பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு , அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும், சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்காக அதிக ரத்த ஓட்டம் ... வயிற்றின் பக்கம் திருப்பப்படும் எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் அதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும் ,அதுவே தூக்கத்திற்கு அழைத்து செல்லவும் காரணம் "
இணையத்தில் தேடியதில் வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலான கட்டுரைகள் ரத்த ஓட்டம் செரிமானத்துக்கு அதிகமாகத் தேவைப் படுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து மந்த நிலை ஏற்படுகின்றது என்றே சொல்கின்றன.
விழித்திருந்து படிக்க வேண்டும் என்றால் வயிறு நிறைய சாப்பிடாமல் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் தலை சாய்த்தல் கேட்கிறது என்றால், கொஞ்சம் யோசியுங்க.
அடுத்த கேள்வி:
உலோகம் குளிர்ச்சியாகவும், மரக்கட்டை குளிராமலும் இருப்பது ஏன்?
10 கருத்துகள்:
ஜப்பானில் அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளைக்குப் பின் சிறிது நேரம் தூங்குவதற்கு அனுமதிப்பார்களாமே
மருதநாயகம்,
சீனாவிலும் ஒரு மணி நேரம் தூக்க இடைவேளைதான். அதற்கு ஈடாக மாலையில் வேலை பார்த்துக் கொள்வார்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
தகவலுக்கு மிக்க நன்றி மா.சி.
கார்போ வகை உணவுகளை நாம் அதிகம் சாப்பிடுவதால் தான் தூக்கம் வருகிறது. பைபர் வகை உணவுகளால் தூக்கம் வருவது கம்மி
மா.சி,
நன்றி!
உலோகம் எளிதிற் கடத்தி(good conductor) எனவே வெப்பம் பெற்ற வேகத்திலேயே இழந்து விடும், மரம் அறிதிற்கடத்தி (bad conductor)... வெப்பத்தை வெளியிடாது.
என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து , மரத்தில் நிறைய காற்று அறைகள் இருக்கும் அதனாலும் வெப்பம் கடத்துவது தடுக்கப்படுகிறது என நினைக்கிறேன்.(உதாரணம்: தெர்மோகோல்)
I am not sure that the reasoning given by you is totally correct.
Brain detects the need for blood by any organ and assigns accordingly. when we eat, "brain" does not get starved of blood....it is usually the "blood" flow of the limbs that gets directed to the stomach.. that is why we are adviced against swimming after a good lunch.
when we eat and get sleep it is usually because of blood glucose levels. the quick rise/ fall of glucose makes you sleepy. Eat a light lunch or fibre filled food u won't get sleep. eat a "carb" food u will otherwise.(as given in another comment)
// உலோகம் எளிதிற் கடத்தி(good conductor) எனவே வெப்பம் பெற்ற வேகத்திலேயே இழந்து விடும், மரம் அறிதிற்கடத்தி (bad conductor)... வெப்பத்தை வெளியிடாது.//
Firstly both the wood and the metal are at the same temperatures. An object that feels cold must be colder than the hand.
i want to elabore a little further on the answer.....
The temperature-sensitive nerves in our skin detects the difference between body temperature and the outside skin temperature. When we touch an object, temperature-sensitive nerves indicates that the object we are touching is cold. An object that feels cold must be colder than the hand.
wood and metal though they both start at room temperature and are both colder than your hand. They do not feel equally cold because they carry heat away from our hand at different rates.(this is the thermal conductivity)
wood is an insulator, a very poor conductor of heat. When our hand touches, heat flows from our hand to the wood and warms the surface. Because this heat is not conducted away quickly, the surface of the wood soon becomes as warm as our hand. Hence we 'feel' wood as very warm
The metal carries heat away quickly. Metal is a good conductor of heat. Heat flows from our hand into the metal and then is conducted quickly away leaving a samll "temp" difference between our hand and the metal surface.
காலை வேலையில் நன்றாக சாப்பிட்டாலும் தூக்கமோ அசதியோ அவ்வளவாக வருவதில்லையே ஏன்? (இரவு நன்கு தூங்கி விடுவதலா)
தூங்குவதற்கு முன் சாப்பிடுவதே சாப்பிட்ட உடன் தூக்கம் வரக் காரணம் ;)
புது மாப்பிளை யாராவது இருந்தா பதில் சொல்லங்கப்பா! இரவுச் சாப்பாடு முடிஞ்சா ஏன் அவசரப்பட்டு தூக்கம் வருது?
புள்ளிராஜா
மருதநாயகமும், அனானி ஒருத்தரும் சொல்வது போல சாப்பிடும் உணவைப் பொறுத்து தூக்கம் வருவது மாறும் என்றும் படித்திருக்கிறேன். ரத்த ஓட்ட குறைவு இன்னும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்று படுகிறது.
இந்தக் கேள்வி இரவுச் சாப்பாட்டுக்கு இல்லை என்பதை ரவிசங்கருக்கும், புள்ளி ராஜாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன் :-)
காலை உணவிலும் நிறைய அடைத்துக் கொண்டால் தூக்கம் வரத்தான் செய்கிறது, முரளி. பொதுவாக காலை உணவுக்குப் பின் தேநீர் அல்லது காபி குடிப்பதும் தூக்கத்தை விரட்ட ஒரு காரணமாக இருக்கலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக