இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்த கொள்கை சீனா 1980களில் கொண்டு வந்த கொள்கையை தழுவியே இருக்கிறது என்கிறார்கள்.
- சீனாவில் இவை போல பிரச்சனைகள் இருந்தனவா?
- பாமக போல எதிர்ப்புக் குரல்கள் எழவில்லையா?
- எப்படிச் சமாளித்து நடத்தினார்கள்.
- பல வளரும் நாடுகளில் அதே போல செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு எப்படிச் சாதித்துக் காட்டினார்கள்?
'சீனாவே சந்தைப் பொருளாதாரத்தையும், உலக மயமாக்கலையும் ஆதரிக்கும் போது, நீங்கள் ஏன் இந்தியாவில் எதிர்க்கிறீர்கள்?'
'மேற்கு வங்கத்தில் உங்கள் அரசு பின்பற்றும் அதே கொள்கைகளை பிற மாநிலங்களில் ஏன் எதிர்க்கிறீர்கள்?'
இப்படி கேட்டால் மேலே சொன்ன பதில்தான் வரும்.
சீனாவில் 1980களின் நிலவரமும், இந்தியாவில் 2000ம் ஆண்டுகளின் நிலவரமும் ஒரே மாதிரி இல்லைதான். அப்படி என்ன வித்தியாசம்? அவர்களால் சிக்கல் இல்லாமல் செய்ய முடிந்தது நமக்கு ஏன் இவ்வளவு தலைவலி தருகிறது.
13 கருத்துகள்:
மா.சி,
//'அங்கிருந்த சூழல்கள் வேறு, இங்கிருக்கும் சூழல்கள் வேறு' என்பது.//
//சீனாவில் 1980களின் நிலவரமும், இந்தியாவில் 2000ம் ஆண்டுகளின் நிலவரமும் ஒரே மாதிரி இல்லைதான். அப்படி என்ன வித்தியாசம்? அவர்களால் சிக்கல் இல்லாமல் செய்ய முடிந்தது நமக்கு ஏன் இவ்வளவு தலைவலி தருகிறது.//
அங்கெல்லாம் எதிர்ப்பு வந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்கள் என்பதே அங்கிருக்கும் சூழல் வேறு என்பதன் அர்த்தம்! :-))
டினாமென் சதுக்கத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சீன அரசு தாக்குதல் மறந்து விட்டதா?
உங்களுக்கு சீன அனுபவம் அதிகம் , அங்கு கூட நகர , கிராம மக்களிடையே அதிக ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாகவும், வட சீனர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு தகவல். சரியா என்பதை கூறவும்.
சீனாவில் முடிவெடுக்கும் வேகம் அதிகம், இன்போசிஸ்க்காக இந்தியா வந்தபோது சீன அதிபர் மேடையில் வைத்தே அனுமதியை வழங்கியதாக செய்திப்படித்துள்ளேன்.
சிவகுமார்,
சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் வந்து இந்தியாவின் பொருளாதாரத்தை சீக்கிரத்தில் வளப்படுத்திவிடும். அதை எதிர்ப்பவர்கள் முட்டால்கள் என்று மிக எளிமையான முடிவுகளுக்கு வர முடியாது.
சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் தொடர்பான பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை.
கம்யூனிஸ்டுக்களின் எதிர்ப்பை விட்டுவிடுங்களேன்.
ஏராளமான மக்கள் போராளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும், ஏன் சுற்றுச்சூழல் போராளிகளும் கூட எதிர்க்கிறார்களே ஏன்?
நாட்டின் அறிவாளிகள் மட்டத்தில் மக்களைப்பற்றி சிந்திப்பவர்கள் மட்டத்தில் தீவிர எதிர்ப்பு ஒன்று எழுகிறதென்றால், அதனை சற்றே ஆழமாகப் போய் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மேலோட்டமாக அதிகாரத்தில் இருக்கின்ற பணக்கார வர்க்கத்தின் பேச்சுக்களையும் அவர்களின் மீடியா சொல்லும் செய்திகளையும் கருத்துக்களையும் அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கக்கூடாது.
இந்தியாவின் மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ந்து உச்சங்கள் தொடுவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவும் சரிவர நிறைவேற்றப்படுவதில்லை.
நாட்டுக்கு சோறுபோடும் விவசாயிகளின் பிரச்சினைகள் கவனிக்கப்படுவதில்லை. பெரும் மக்களின் அடிப்படைத்தேவைகள் கவனிக்கப்படுவதில்லை.
சிறப்புப்பொருளாதார மண்டலங்களுக்கும், வெளிநாட்டு மூலதனங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் ஆரவாரம்?
இதற்குப்பின்னால் ஏதோ இருக்கிறதல்லவா?
அது என்ன என்று கண்டறிய முற்படுங்கள்.
எம்மை எமாற்றும் சக்திகளின் எம்மை உறிஞ்சிக்குடிக்க நினைக்கும் சக்திகளின் ஏமாற்று நாடகத்தை அறிவால் தோலுரிப்பதுதானே இளைஞர்களின் கடமை.
அப்போதுதானே பூமிப்பந்தை புரட்டிப்போடும் மூளை தமிழருடையதாய் இருக்க முடியும்?
இல்லாவிட்டால் அந்த மூளையை அமெரிக்கா வாங்கிக்கொண்டுபோய் ஆங்கிலத்தில் புரட்டிப்போடப் பயன்படுத்தும் ;-)
பார்க
http://poarmurasu.blogspot.com/2007/09/blog-post_09.html
http://poarmurasu.blogspot.com/2007/09/blog-post_09.html
ஒரு முறை சீன பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது
அவள் சொன்னது.
அங்கு மாதம் 2 கிலோ அரிசி. வருடத்துக்கு இத்தனை
கஜம் துணி. இருக்க அறை (லூம்/ரூம்). இதை அரசாங்கம் தரும்.
வாங்க்கிக்கொண்டு வேலை செய்தார்கள். மாதத்தில் முதலிலேயே
பார்ட்டி வைத்து அரிசியை தீர்த்துவிட்டால் மாதக் கடைசியில்
பட்டினிதான்.
இதில் சில நிறைய பையன்களுக்கு லூம் இல்லஆமல் பெற்றோருடன்
இருந்தார்கள்.லூம் இல்லாத பையனை திருமணம் செய்ய
முடியாது என்று நீண்ட நாட்கள் நான் திருமணம்
செய்யவில்லை என்று சொன்னாள்.
(இது ஒரு பத்து வருடம் முன்பு).
மா.சி. அவர்களே, வணக்கம்.
இதில் முதல் விஷயம் சீனா இதை செய்ய நினைத்தது தனது கம்யூனிஸ்ட் கட்சியின் நலனுக்காகவோ அங்கு ஆட்சியில் இருப்பவர்களின் சொந்த நலனுக்காகவோ அல்ல.. நாட்டிற்காக.. தங்களது நாட்டை எப்பாடுபட்டாவது எந்த விதத்திலும் முன்னேற்றப் பாதையிலேயே நிலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக..
இங்கே அப்படியா..?
பல கட்சி ஆட்சி முறையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு பக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை இழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் முன்னேறி மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவாரோ.. அப்படி இடம் பிடித்துவிட்டால் நமக்குச் செல்வாக்கு குறைந்துவிடுமே.. அப்புறம் நாம் எப்படி கட்சி நடத்துவது என்கின்ற பய உணர்வு நமது அரசியல்வாதிகளுக்கு நிறையவே உண்டு. இதுதான் நமது நாட்டின் நிலைமை.
விவசாய விளை நிலங்களை அழித்துவிட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வருவதற்கு நம்மூர் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஒரு வகையில் சரி என்றாலும் இன்னொரு வகையில் ஒன்றை இழந்துதானே மற்றொன்றை பெற முடியும் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
யூண்டாய் கார் கம்பெனி வந்த போதும் இதைத்தான் சொன்னார்கள். ஆனால் அந்தக் கார் கம்பெனி இன்றைக்கு தனது வாடிக்கையாளரை கொட்டாம்பட்டி வரைக்கும் விஸ்தரித்துக் கொண்டு போக இன்றைக்கு சிங்கம்புணரியில் ஒர்க்ஷாப் வைத்திருப்பவர் மதுரை டிவிஎஸ் ஒர்க்ஷாப்பிற்குச் சென்று யூண்டாய் காரை சர்வீஸ் செய்வதைப் பற்றி டிரெயினிங் எடுத்துக் கற்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. அந்த ஒரு கம்பெனியால் எத்தனை பேருக்கு லாபம்..? எத்தனை பேருக்கு நஷ்டம்? கூட்டிக் கழித்துப் பார்த்தால் பணப் புழக்கம் அவர்களால்தான் அதிகமாகப் புழங்குகிறது.. இன்றைக்கு தமிழ்நாட்டில் எத்தனை ஒர்க்ஷாப்புகளில் யூண்டாய் கார்களுக்கென்று தனி டிரெயினிங் கொடுக்கின்ற அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
சரி வேண்டாம்.. காரை வைத்து நாம் திங்க முடியாது.. அது பணக்காரர்களின் பணத்திமிரைக் காட்டுவது என்று வாதமெடுத்தால் விவசாயத்தில் மென்மேலும் நாம் சாதிக்க மத்திய, மாநில அரசுகள் செய்திருக்கும் நற்செயல்கள் என்னென்ன..?
உள்நாட்டில் அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்துவிட்டு வெளிநாட்டில் இருந்து மேலும், மேலும் இறக்குமதி செய்து வருகிறார்கள். இந்தக் கொள்கையை சீனா பின்பற்றுகிறதா..?
முதலில் வெளிநாட்டு கோதுமையால் உள் நாட்டு கோதுமையின் விலை நிர்ணயம் செய்வதில் குந்தகம் விளைவித்து இங்கே விவசாயிகளின் அடிமடியில் கை வைத்துவிட்டதே அரசு.. இது யாருடைய கொள்கை..?
ஒரு பத்து ஏக்கர் விவசாய நிலம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலே ஒரு வருடத்திற்கு எவ்வளவு விளைச்சல் வரும்? அதிலே அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் போக விவசாயிக்கு கிடைப்பது எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.. வாயிற்கும், வயித்துக்கும் பற்றாக்குறை என்பார்கள். இதையேதான் எந்த அரசு வந்தாலும் சொல்வார்கள். உண்மையும் அதுதான்.
உண்மையாகவே விவசாயத்தை வளர்ச்சியடைய வைப்பதுதான் அரசுகளின் நோக்கம், விவசாயத்தைப் பாதுகாப்பதுதான் பாட்டாளிகளின் நோக்கமெனில் விளைகின்ற விளைபொருட்களின் ஆதி முதல் அந்தம்வரை அரசுகள் அந்த விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதைப் போல் இருக்க வேண்டும். இருக்கிறார்களா..?
ஒரு நிலத்தை சும்மாவே வைத்திருப்பதைவிட அதை எதற்கும் பயன்படுத்தலாம்.. காரணம் காலம்.. அதைப் பிடிக்க முடியாதே.. இன்றைக்கு யுண்டாய் கார் கம்பெனி எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதே விவசாயியின் பிள்ளைகள் அதில் ஓரளவுக்காவது திருப்திப்பட்டிருப்பார்களே.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சென்னை அருகேதான் அமைக்கப்பட வேண்டும் என்றால் அதற்குக் காரணம் போக்குவரத்துதான். அதை யாரும் மறுக்க முடியாது. எந்த இடத்தில் அரசுத் தரப்பு நிலத்தைக் காட்டினாலும் அதில் மக்கள் குடியிருக்கிறார்கள் என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று கூச்சலிடுகிறார்கள் அரசியல்வாதிகள். சத்தியமாக அந்த நிலத்தில் எனது வீடும் இருந்தால் நானும் கத்தத்தான் செய்வேன். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அந்த நிலத்துக்குரிய மிகச் சரியான பணத்தை உரியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பின்புதான் அதை நிறைவேற்ற முயல வேண்டும். அந்த வேலையை மட்டும் நமது அரசுகள் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் கல்பாக்கம் அனல் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களே இன்னமும் தனது இரண்டாவது தலைமுறையினருக்கு வேலை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த லட்சணத்தில்தான் நமது அரசு இயந்திரங்கள் உள்ளன. அப்படியிருக்க இப்போது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தை கொடுக்கும் ஜனங்களுக்கு நியாயமான விலையை அரசு கொடுக்குமா என்பது சந்தேகமே.. மக்களின் இந்த சந்தேகத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்து வைத்துவிட்டு அதன் பின் நிலத்தில் கால் வைக்கலாம். மக்கள் அதிகம் பேர் இப்போது பயப்படுவது, அது விவசாய நிலங்கள் என்பதற்காக அல்ல என்பது எனது கருத்து. நிலத்திற்கு நியாயமான விலை கிடைக்காதே என்று பயப்படுவதால்தான்.
அரசியல் கட்சிகள் இதில் வரிந்து கட்டிக் கொண்டு வருவது நல்ல பெயர் எடுக்கத்தான். வேறு எதுவுமில்லை. அதிலும் கம்யூனிஸ்ட்கள் மாநிலத்திற்கு மாநிலம் தங்களது கம்யூனிஸ கொள்கையை மாற்றிக் கொண்டு மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனில், ஸ்டாலின் போன்றோருக்கெல்லாம் தண்ணி காட்டுபவர்கள். அவர்களுடைய மிகப் பெரிய கொள்கை அடுத்து வரக்கூடிய எந்தத் தேர்தலிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை தாங்கள் இழக்கக்கூடாது. அதே சமயம் ஏழை, எளிய மக்களின், பாட்டாளிகளின் கட்சி தாங்கள்தான் என்ற பெயரையும் விட்டுவிடக்கூடாது என்ற உண்மையான கம்யூனிஸக் கொள்கையில் தெளிவாக இருப்பவர்கள். அதனால்தான் எதிர்க்கிறார்கள்.
சீனா போன்று ஒரு கட்சி ஆட்சி முறையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாதிரி ஒரு நீக்குப் போக்குத் தெரிந்த கம்யூனிஸ்ட் கொள்கைகள் கொண்ட தலைவர்களும் இந்தியாவுக்கு வாய்த்தால்..
இந்த மாதிரி கேலிக்கூத்துகள் இங்கே நடக்காது என்று நினைக்கிறேன்.
SEZs are mainly useful in evading the obsolote labour laws, exit policy for sick industries and high taxation in India. it is a indirect way of abolsihing these counter-productive laws which were a legacy of our socialsitic era.
but these SEZ enclaves are misuded and discriminatory against exisiting industiries located outside it. hence instead of SEZs, if all these laws and tax regimes are moderated uniformaly all over India, then it would be better and more equitible.
Hire and fire policy may look cruel, but it creates more employment for unskilled labour than the present rigid laws, which is mis-used by the organised labout at the cost of the majority of the unorganised labour. We cannot imagine 9000 workers working inside a single factory with harmony and amity. as it is impossible to maintain order or disipline in such huge factories due to labout millitancy and rigid labour laws, which prevent sacking of lazy, imcompetent or dishonest workers, no such huge factories come up (unlike China). the effort is split into hundreds of small SSIs which increase cost and reduce economies of scale, thereby increasing wasted effort and reducing our competitiveness..
and high tax regime (IT, VAT and excise) creates evasion and black economy, corrupting all the participants. SEZ try to reduce all this. but it is unfair for the others who exisit outside these enclaves..
a re-thinking about all this is needed.
உண்மைத்தமிழர் ,
//உள்நாட்டில் அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்துவிட்டு வெளிநாட்டில் இருந்து மேலும், மேலும் இறக்குமதி செய்து வருகிறார்கள். இந்தக் கொள்கையை சீனா பின்பற்றுகிறதா..?
முதலில் வெளிநாட்டு கோதுமையால் உள் நாட்டு கோதுமையின் விலை நிர்ணயம் செய்வதில் குந்தகம் விளைவித்து இங்கே விவசாயிகளின் அடிமடியில் கை வைத்துவிட்டதே அரசு.. இது யாருடைய கொள்கை..?//
இதற்கு மட்டும் ஒரு சிறிய விளக்கம் தருகிறேன்,
இது GATT(general agreement on trade and tariff)என்ற " WTO" என்ற ஒப்ப்பந்தத்தின் காரணமாகவே அப்படி நடக்கிறது. நாம் ஒரு நாட்டிற்கு ஏற்று மதி செய்கிறோம் என்றால் எதாவது இறக்குமதியும் செய்ய வேண்டும். மேலும் இறக்குமதி செய்வதற்கு என தடை இருக்க கூடாது, அப்படி தடை இருக்குமெனில் அதனை நீக்கிக்விட ஒரு கால அளவும் நிர்ணயம் செய்துள்ளது WTO.
மேலும் இது அல்லாமல் நம் நாடு சில நாடுகளுடன் நட்புறவு நாடு என்றும், வியாபார முன்னுரிமை உள்ள நாடு என்றும் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தங்கள் போட்டு இருக்கிறது, எனவே அவர்களை மகிழ்விக்க நமக்கு தேவை இல்லை என்றாலும் இறக்குமதி செய்தாக வேண்டும். அப்போது தான் நம்மிடம் அவர்கள் வாங்குவார்கள்.
உதாரணமாக மென்பொருள் துறையில் நம்மிடம் பலரும் வருகிறார்கள் என்றால் அதனை தக்க வைத்துக்கொள்ள அவர்களிடம் இருந்து ஏதேனும் இறக்குமதி செய்தாக வேண்டும் என்பது கட்டாயம்.(அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் இருந்து கோதுமை, அமெரிக்க போயிங்க் விமானம் என்று ஆர்டர் தருதல்)
நம் அரசு எது மலிவாக அங்கே இருக்கிறது என்று பார்த்து உணவுப் பொருட்களை வாங்குகிறது அவர்கள் நம்மிடம் அதை விட விலை உயர்வான மென்பொருள் நுட்பம் போன்றவற்றை வாங்கிக்கொள்கிறார்கள்.
இது போன்ற "bi lateral trade" இருந்தால் தான் சாத்தியம். இதில் அடிப்படுவது எப்போதும் போல ஏழை விவசாயிகள் தான்.
அரசுக்கும் இதில் ஒரு காரணம் இல்லாமல் இல்லை. மத்திய அரசு ரேஷன் கடைகளுக்கு வழங்க என மாநில அரசுகளுக்கு தானியங்களை மானிய விலையில் தர வேண்டும். அதனை உள்நாட்டில் கொள்முதல் செய்தாலும் காசு தான் ,அயல் நாட்டில் கொள்முதல் செய்தாலும் காசு தான் ,எனவே அவர்கள் அயல் நாட்டில் போய் வாங்கிக்கொள்கிறார்கள். உள்நாட்டில் செய்தால் விவசாயி வாழ்வான், அயல் நாட்டில் செய்வதால் நம் வெளியுறவு கொள்கை வாழும்!
சில சமயம் பாகிஸ்தான் போன்ற சண்டைப்பிடிக்கும் நாடுகளிட கூட நல்லப்பெயர் வாங்க அவர்களிடமும் ஒப்பந்தம் போடுவோம். அப்படி நாம் பாகிஸ்தானிடம் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்கிறோம்.
இதனால் தான் இந்தியாவில் கரும்புக்கு ஓரளவுக்கு மேல் விலை ஏற்றி தருவதில்லை. மலிவான சர்க்கரை இறக்குமதிக்கு வாய்ப்புள்ள போது ஏன் அதிகம் பணம் தர வேண்டும் என்ற எண்ணம் தான்.
சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி்ய பதிவென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.
வவ்வால்,
//அங்கெல்லாம் எதிர்ப்பு வந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்கள் என்பதே அங்கிருக்கும் சூழல் வேறு என்பதன் அர்த்தம்! :-))//
நான் சொல்ல வருவதும் கிட்டத்தட்ட இதேதான் :-)
//அங்கு கூட நகர , கிராம மக்களிடையே அதிக ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாகவும், வட சீனர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு தகவல். சரியா என்பதை கூறவும்.//
நான் பார்த்த வரையில் ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவை விடக் குறைவுதான். பொருளாதாரச் சீர்திருத்தங்களும், உலகமயமாக்கலும் நகர/கிராம ஏற்றத்தாழ்வுகள், நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையே வேறுபாடுகளை வளர்க்க ஆரம்பித்தன.
//சீனாவில் முடிவெடுக்கும் வேகம் அதிகம், இன்போசிஸ்க்காக இந்தியா வந்தபோது சீன அதிபர் மேடையில் வைத்தே அனுமதியை வழங்கியதாக செய்திப்படித்துள்ளேன்.//
அதெல்லாம் முதலிலேயே திட்டம் போட்டு வைத்து விட்டுத்தான் வந்திருப்பார். அப்படி அதிரடியாக அறிவிப்பதாக முன்கூட்டியே கட்சிக்குள்ளும், அரசுக்குள்ளும் விவாதித்துதான் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க மயூரன்,
//சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் வந்து இந்தியாவின் பொருளாதாரத்தை சீக்கிரத்தில் வளப்படுத்திவிடும். அதை எதிர்ப்பவர்கள் முட்டால்கள் என்று மிக எளிமையான முடிவுகளுக்கு வர முடியாது.//
முற்றிலும் உண்மை
//நாட்டுக்கு சோறுபோடும் விவசாயிகளின் பிரச்சினைகள் கவனிக்கப்படுவதில்லை. பெரும் மக்களின் அடிப்படைத்தேவைகள் கவனிக்கப்படுவதில்லை. //
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அந்தத் தேவைகளைத் தீர்க்க உதவும் என்பதுதான் அதை ஆதரிப்பவர்களின் வாதம், இல்லையா!
//சிறப்புப்பொருளாதார மண்டலங்களுக்கும், வெளிநாட்டு மூலதனங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் ஆரவாரம்?
இதற்குப்பின்னால் ஏதோ இருக்கிறதல்லவா? அது என்ன என்று கண்டறிய முற்படுங்கள்.//
அதுதான் முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள். நீங்கள் கொடுத்த சுட்டியையும் படித்துப் பார்க்கிறேன்.
ஆதிரை,
//அங்கு மாதம் 2 கிலோ அரிசி. வருடத்துக்கு இத்தனை கஜம் துணி. இருக்க அறை (லூம்/ரூம்). இதை அரசாங்கம் தரும். //
மத்தியில் திட்டமிடும் பொருளாதார முறையில் அவ்வளவுதான் சாத்தியமாகும். :-(
கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு மாறுதல்கள் வந்து நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதே திசையில்தான் தொடர்ந்த மாற்றங்கள் நடப்பதாக நினைக்கிறேன்.
//லூம் இல்லாத பையனை திருமணம் செய்ய
முடியாது என்று நீண்ட நாட்கள் நான் திருமணம்
செய்யவில்லை என்று சொன்னாள்.//
நான்கு குடும்பங்களுக்கு சேர்ந்து ஒரு வீடு. ஆளுக்கு ஒரு வாழும் அறை. சமையலறை, குளியலறை முற்றம் பொது. பையனுக்கு திருமணம் ஆக வேண்டுமானால் தனியாக அறை அலாட் ஆனால்தான். ஒரே வீட்டில் மட்டுமின்றி ஒரே அறையில் எத்தனை குடும்பங்கள் வசிக்க முடியும்!
உண்மைத்தமிழன்,
//இதில் முதல் விஷயம் சீனா இதை செய்ய நினைத்தது தனது கம்யூனிஸ்ட் கட்சியின் நலனுக்காகவோ அங்கு ஆட்சியில் இருப்பவர்களின் சொந்த நலனுக்காகவோ அல்ல.. நாட்டிற்காக.. தங்களது நாட்டை எப்பாடுபட்டாவது எந்த விதத்திலும் முன்னேற்றப் பாதையிலேயே நிலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக..//
ஏன் அவங்க எல்லாம் கடவுள்களா? நம்ம ஊரை போலவே ஊழல் வாதிகள், சொந்த நலம் தேடும் மனிதர்களும் நிறைந்த சமூகம்தான் சீன சமூகமும்.
//சீனா போன்று ஒரு கட்சி ஆட்சி முறையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாதிரி ஒரு நீக்குப் போக்குத் தெரிந்த கம்யூனிஸ்ட் கொள்கைகள் கொண்ட தலைவர்களும் இந்தியாவுக்கு வாய்த்தால்..
இந்த மாதிரி கேலிக்கூத்துகள் இங்கே நடக்காது என்று நினைக்கிறேன்.//
இதை விட மோசமான கேலிக் கூத்துக்கள் நடக்கும் என்பது ஒரு புறமிருக்க நம்ம ஊருக்கு அந்த நிலைமை வராத என்பது என் நம்பிக்கை. வரலாற்றில் பார்த்தாலும் இந்தியா முழுவதையும் ஒரு குடைக்குள் ஒரே மன்னர் ஆண்ட காலங்கள் மிக அரிதாகவே இருக்கும். சீனாவில் பேரரசுகளின் ஆட்சிக் காலங்களிலிருந்து சர்வாதிகாரத்துக்கு இடம் இருக்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
வவ்வால்,
//இது GATT(general agreement on trade and tariff)என்ற " WTO" என்ற ஒப்ப்பந்தத்தின் காரணமாகவே அப்படி நடக்கிறது. நாம் ஒரு நாட்டிற்கு ஏற்று மதி செய்கிறோம் என்றால் எதாவது இறக்குமதியும் செய்ய வேண்டும். மேலும் இறக்குமதி செய்வதற்கு என தடை இருக்க கூடாது, அப்படி தடை இருக்குமெனில் அதனை நீக்கிக்விட ஒரு கால அளவும் நிர்ணயம் செய்துள்ளது WTO.//
விவசாயப் பொருட்களுக்கு அப்படி கட்டற்ற வர்த்தகம் இருக்கிறதா என்ன? இந்திய அரசு கூட பற்றாக்குறையைத் தவிர்க்கத்தான் இறக்குமதி செய்வதாகச் சொல்கிறார்களே?
இறக்குமதிக்குக் கொடுக்கும் அதை விலையை நம் விவசாயிக்கும் கொடுக்கலாமே என்பதுதானே கேள்வி!
அன்புடன்,
மா சிவகுமார்
மா.சி,
//விவசாயப் பொருட்களுக்கு அப்படி கட்டற்ற வர்த்தகம் இருக்கிறதா என்ன? இந்திய அரசு கூட பற்றாக்குறையைத் தவிர்க்கத்தான் இறக்குமதி செய்வதாகச் சொல்கிறார்களே?//
GATT னால் இந்திய பொருளாதாரம், மற்றும் விவசாயத்தின் மீதான விளைவுகள்:
1)இந்திய அரசு ஏற்றுமதிக்கு மானியம் அளிப்பது , இறக்குமதிக்கு வரி விதிப்பது நிறுத்தப்பட வேண்டும்.
2) எந்த ஒரு நாட்டையும் பிரியமான நாடாக கருதி அதிக வியாபாரம் நடக்க அரசு உதவக்கூடாது. அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும்.
3)இறக்குமதிக்கான தடைகள் இருக்க கூடாது.
4)இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு என எந்த கட்டுப்பாடும் விதிக்கபட கூடாது.
இன்னும் பல இருக்கிறது.
மேற்சொன்ன அனைத்தும் விவசாயத்திற்கும் பொருந்தும்.
தற்போது ஒரு வியாபாரி நினைத்தவுடன் நேரடியாக ஒரு பொருளை இறக்குமதி செய்து விட முடியாது.
உதாரணமாக உள்ளூர் அரிசியை விட இறக்குமதி அரிசி விலை கம்மி என்று செய்து விட முடியாது அனுமதி வாங்க வேண்டும், அதுவே WTO பரிந்துரைப்படி செயல்பட்டால் , அப்படி கட்டுப்பாடு இருக்கக்கூடாது.
இந்த கட்டற்ற வியாபர நிலை 2000க்குள் வர வேண்டும் என்று 1996 இல் WTO சொன்னார்கள். ஆனால் இழுத்துப்பிடித்து இன்னும் காலம் தள்ளுகிறது அரசு , தற்போது கடைசி கெடு 2010 என நினைக்கிறேன்.
அதன் பின்னர் அரிசி வியாபாரம் செய்பவர் நினைத்தால் போதும் அவரே இறக்குமதி செய்து கொள்ளலாம்.தற்போது கூட அனுமதி வாங்கி இறக்குமதி செய்யலாம் ஆனால் அதற்கான வரி அதிகம்!
அதே போல அரசு தட்டுப்பாடு இருக்கும் காலத்தில் இறக்குமதி செய்கிறது ஆனால் உபரியாக உற்பத்தி இருக்கும் போதும் இறக்குமதி செய்வதை நிறுத்துவதில்லை, காரணம் வெளியுறவு ஒப்பந்தங்கள் , இது போன்ற ஒப்பந்தங்களின் வழிகாட்டுதல்கள் தான்.
மேலும் அரசு மானியத்தில் உணவுப்பொருளை வழங்குகிறது உள்ளூர் கோதுமை விலை அதிகம் அதை வாங்கி , குறைந்த விலைக்கு ரேஷ்னனில் தந்தால் கையை கடிப்பது அதிகரிக்கும், அதற்கு பதில் விலை குறைந்த அயல்நாட்டுக்கோதுமையை வாங்கி தந்துவிடலாம் என நினைக்கிறது.
கூடுதலாக காசு கொடுத்தாலும் நம்ம நாட்டு விவசாயிக்கு தானே போய் சேரும் என்ற எண்ணம் இல்லாமல் புள்ளிவிவரப்படி செயல் படுகிறார்கள்.
http://commerce.nic.in/trade/international_trade_tig_agriculture_wtoaoa.asp
INDIA'S COMMITMENTS
Market Access
As India was maintaining Quantitative Restrictions due to balance of payments reasons(which is a GATT consistent measure), it did not have to undertake any commitments in regard to market access. The only commitment India has undertaken is to bind its primary agricultural products at 100%; processed foods at 150% and edible oils at 300%. Of course, for some agricultural products like skimmed milk powder, maize, rice, spelt wheat, millets etc. which had been bound at zero or at low bound rates, negotiations under Article XXVIII of GATT were successfully completed in December, 1999, and the bound rates have been raised substantially.
Domestic Support
India does not provide any product specific support other than market price support. During the reference period (1986-88 ), India had market price support programmes for 22 products, out of which 19 are included in our list of commitments filed under GATT. The products are - rice, wheat, bajra, jawar, maize, barley, gram, groundnut, rapeseed, toria, cotton, Soyabean (yellow), Soyabean (black), urad, moong, tur, tobacco, jute, and sugarcane. The total product specific AMS was (-) Rs.24,442 crores during the base period. The negative figure arises from the fact that during the base period, except for tobacco and sugarcane, international prices of all products was higher than domestic prices, and the product specific AMS is to be calculated by subtracting the domestic price from the international price and then multiplying the resultant figure by the quantity of production.
Non-product specific subsidy is calculated by taking into account subsidies given for fertilizers, water, seeds, credit and electricity. During the reference period, the total non-product specific AMS was Rs.4581 crores. Taking both product specific and non-product specific AMS into account, the total AMS was (-) Rs.19,869 crores i.e. about (-) 18% of the value of total agricultural output.
Since our total AMS is negative and that too by a huge magnitude, the question of our undertaking reduction commitments did not arise. As such, we have not undertaken any commitment in our schedule filed under GATT. The calculations for the marketing year 1995-96 show the product specific AMS figure as (-) 38.47% and non-product specific AMS as 7.52% of the total value of production. We can further deduct from these calculations the domestic support extended to low income and resource poor farmers provided under Article 6 of the Agreement on Agriculture. This still keeps our aggregate AMS below the de minimis level of 10%.
India’s notifications on AMS are available at web site address www.wto.org/wto/online/ddf.htm (G/AG/N/IND/1).
Export Subsidies
In India, exporters of agricultural commodities do not get any direct subsidy. The only subsidies available to them are in the form of (a) exemption of export profit from income tax under section 80-HHC of the Income Tax Act and this is also not one of the listed subsidies as the entire income from Agriculture is exempt from Income Tax per se. (b) subsidies on cost of freight on export shipments of certain products like fruits, vegetables and floricultural products. We have in fact indicated in our schedule of commitments that India reserves the right to take recourse to subsidies (such as, cash compensatory support) during the implementation period.
கருத்துரையிடுக