புதன், ஜனவரி 14, 2009

பிரச்சனைகளுக்குத் தீர்வு ? - 2

தமிழ் சமூகத்தில் சாதி உணர்வுகள்
சாதி அமைப்பை ஒழிப்பதற்கு அதைத் தாக்குதவதான அணுகுமுறை தந்தை பெரியாருடையது. அதிலேயே பங்கேற்று ஒழித்துக் கட்டுவது என்பது இட ஒதுக்கீடு போன்ற வழியில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்ப்பட்டவர்களை முன்னேற்ற முயற்சிப்பவர்கள். இரண்டிலுமே முழு வெற்றி கிடைக்காது. உள்ளே இருந்து கொண்டே அதை தாக்க முயற்சிப்பது தாக்குபவர்களை அதிகமாக பலவீனப்படுத்தி விடும். இரண்டு அணுகுமுறைகளுமே சாதீயக் கட்டமைப்பு வகுத்த விதிகளின் படி போராடுவதுதான்.

சாதிக் கட்டமைப்பின் தாங்கிப் பிடிப்புகளை எப்படி கழன்று போகச் செய்யலாம். கலப்பு மணம், கிராமங்களை விட்டு நகர்ப் புறத்துக்கு குடியேறுதல் என்று அணுகுமுறைகள் சரியாகப் படுகின்றன. பொறுத்த வரை யாரும் சாதிப் பெயர் கேட்டு விட முடியாது. அப்போதும் கூட யாராவது ஒரு பெற்றோரின் சாதியைக் குறிப்பிட வேண்டி வந்து விடுகிறது.

பேராசை சார்ந்த ஊழல் பொருளாதாரம்.
புரையோடிக் கிடக்கும் இந்த ஊழல் வளர்க்கும் வாழ்க்கை நெறிக்கு அடிப்படை, அதிக பணம் வைத்திருப்பது பெரிய வீடு கட்டுவது புதிய வண்டி வாங்குவது, நிறைய நகை போட்டுக் கொள்வதுதான் மாண்பு என்ற சமூக மனப் போக்கு. அது மாற வேண்டும். தகுதி இல்லாமல் ஈட்டிய செல்வம் நாயின் மேலிட்ட தவிசு போல வெற்று ஓசை எழுப்புவதுதான் என்று நிறுவ வேண்டும்.

இந்திய அரசியலில் இந்துத்துவா, மற்றும் பிரிவினையைத் தூண்டும் சக்திகளின் ஆதிக்கம்
மனுவாத, சாதிக் கட்டமைப்பு ஒழிந்தாலே இந்துத்துவா அரசியிலின் அடிப்படை ஆட்டம் கண்டு விடும். அன்பும் சேவை மனப்பான்மையும் சார்ந்த சமூக தத்துவம் நிலை பெறும் போது வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஆட்டம் கண்டு விடும்.

அமெரிக்க ஆங்கிலேயே மனிதனின் பேராசையை அடிப்படை இயல்புகளை தூண்டும் வாழ்க்கை நெறிக்கு மாற்றாக பிற மனிதர்களுக்கு சேவை செய்வதையும், அன்பையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை மூலம் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்.

கருத்துகள் இல்லை: