புதன், ஜனவரி 14, 2009

இப்படி வாழ வேண்டும்!

நான் மதிக்கும் நபர்களின் பட்டியல் (மனதில் வந்த வரிசையில்)
  1. ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இந்தித் திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்
  2. ஓமர் அப்துல்லா காஷ்மீரில் தலைவராகியிருக்கிறார்
  3. சச்சின் டெண்டூல்க, டிராவிட், கும்ப்ளே, கங்கூலி போன்றவர்கள் கிரிக்கெட்டில் தமது முத்திரையைப் பதித்திருக்கிறார்கள்.
  4. ராகுல் காந்தி தனது குடும்ப ஆதரவில் காங்கிரசு கட்சியில் உயர்ந்திருக்கிறார்.
  5. பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகியிருக்கிறார்
  6. வாடிக்கையாளர் ஒருவர் பெரிய தோல் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்.
  7. இன்னொருவர் தோல் தொழிலை புதிய முறையில் வரையறுக்கிறார்.
  8. இன்னொருவர் குடும்பத் தொழிலில் ஒரு தொழிற்சாலையை எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
  9. விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் தமிழ்த் திரையுலகில் தமக்கென இடம் பிடித்திருக்கிறார்கள்.
  10. திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவராக தலையெடுத்திருக்கிறார்
  11. மாயாவதி உத்திரபிரதேச மாநில முதல்வராகியிருக்கிறார்
  12. கனிமொழி தந்தையின் அரசியல் பணியை அடித்தளமாக்கி மாநிலங்களவை உறுப்பினராகவும், சென்னை சங்கமம் ஏற்பாடு செய்பவராகவும் இருக்கிறார்
  13. பத்ரி கிரிக் இன்போ உருவாக்கி மனதுக்குப் பிடித்த புத்தகப் பதிப்புத் தொழிலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறார்.
  14. டேவிட் பெக்கம் கால்பந்தாட்டத்தில் பிரபலமாகியிருக்கிறார்
  15. இளவரசர் வில்லியம் அரச குடும்பத்திலிருந்து மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறார்.
  16. வாடிக்கையாளர் ஒருவர் தந்தை காட்டிய வழியில் ஒரு தொழிற்சாலையை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
  17. இன்னொருவர் தந்தையையும் விஞ்சும் துடிப்போடு ஓடிக் கொண்டிருக்கிறார்.
  18. நண்பன் இன்போசிசில் உயர் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.
  19. இன்னொரு நண்பன் ஐஐடியில் விரிவுரையாளராக சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறான்.
  20. மூன்றாவது நண்பன் அப்பா வழியில் மூன்று தொழிற்சாலைகளை உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கிறான்.
  21. தனிவழி அமைத்து தனது அறிவுக் கூர்மையால் பலருக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார்.
  22. ஆனந்த் சதுரங்க விளையாட்டில் உலக முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
  23. மிர்ச்சி சுசி, யுவன் சங்கர் ராஜா என்று தமது பெயரை நிலைநாட்டியிருக்கிறார்கள்
  24. பாலபாரதி நண்பர்கள் மத்தியில் தனது பெயரை பொறித்திருக்கிறார்.
  25. லினஸ் டோர்வால்ட்ஸ் லினக்சு இயங்குதளத்தை உருவாக்கி சாதனை புரிந்திருக்கிறார்.

9 கருத்துகள்:

SurveySan சொன்னது…

//ராகுல் காந்தி தனது குடும்ப ஆதரவில் காங்கிரசு கட்சியில் உயர்ந்திருக்கிறார்.//

adhukku yen madhikkanum?

//இப்படி வாழ வேண்டும்!"// idhu OK.

மா சிவகுமார் சொன்னது…

சர்வேசன்,

//adhukku yen madhikkanum?//
அதைக் கூட சரியாக செய்யத்தெரியாமல் சொதப்பக் கூடிய பேர் நிறைய உண்டு. பிரமோத் மகாஜனின் பையனை எடுத்துக் கொள்ளுங்களேன்!

நன்றி.
சிவகுமார்

KARTHIK சொன்னது…

26.மறுபடியும் நீங்க எழுத வந்திருப்பது.

பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

கல்வெட்டு சொன்னது…

சிவா,
பகட்டான வாழ்க்கையும் பத்திரிக்கைச் செய்திகளில் இருந்தும் (வெகு ஜன ஊடகம்) உங்கள் பட்டியல் வந்து இருக்கிறது. இதுதான் நாட்டின் அவலம். மக்கள் வழிகாட்டியாக அல்லது தங்களது ஆதர்ச நபராக காட்டக்கூடியவர்களை இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அவரவர் தங்களுக்கு தெரிந்த லிஸ்டில் இருந்துதான் வழிகாட்டியை காட்டமுடியும்.

உங்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பதும் உங்களின் மனதில் எது பதிந்திருக்கிறது என்பதும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

**
உதாரணத்திற்கு ஐய்வராயாராயும் சிம்புவும் அவர்களின் துறைசார்ந்த வெற்றியை வைத்து (பணம் மற்றும் சினிமா பார்ப்பவர்களின் மத்தியில் புகழ்) நீங்கள் அளவிடுகிறீர்கள். துறையில் நீங்களும் வெற்றியடைலாம் , ஆனால் இவர்களைப் பார்த்து வாழ வேண்டும் என்று சொல்வது சமூகத்தைச் நானும் சீரழிப்பேன் என்று சொல்வதற்குச் சமம்.

**

கிருஷ்ணம்மாள் (http://velarasi.blogspot.com/2008/10/blog-post.html)
போன்ற கிழவிகளையும் அல்லது குத்தம்பாக்கம் இளங்கோ (
http://chummafun.blogspot.com/2008/08/blog-post_15.html) போன்ற வெட்டிவேலை செய்பவர்களையும் அல்லது உலக அளவில் வங்கேர் மாத்தாய் (http://en.wikipedia.org/wiki/Wangari_Maathai)போன்ற உருப்படாத மக்களைப் பற்றியோ உங்களுக்குத் தெரிந்திருந்தால் தானே அவர்களையும் பரிசீலனைக்காவது எடுத்துக் கொண்டு இருப்பீர்கள்.

தெரிந்தவகைளில் இருந்துதான் பட்டியலே போட முடியும்.
எது தெரிந்திருக்கிறது என்பது உங்களின் பட்டியலில் இருந்தே தெரிகிறது.

உங்களுக்குத் தெரியும் என்று சொன்னால் , உங்களின் லிஸ்டில் அவர்கள் அல்லது நான் சொன்ன ஒருவரைப் போல யாரும் அடையாளம் காட்டப்படாததற்கான காரணம்?... அய்ச்வர்யாராயிடம் கிருஷ்ணம்மாள் போன்ற கிழவிகள் தோற்றுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.


**

துறைசார்ந்த வெற்றியும் அல்லது வெகுசன ஊடகத்தில் பெயர் வருவதும்தான் சிறப்பு என்றும் அவர்களைப் பார்த்து "இப்படி வாழ வேண்டும்" என்று நீங்கள் பட்டியல் இடுவது மிகவும் நகைப்பிற்கு உரியது.

**

பாலபாரதியின் ஆளுமைத் திறன், கபடமற்ற நட்பு அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது.

**

புகழடைந்துள்ள சினிமா மினுக்கிகள், அரசியல் பொறுக்கிகள் எல்லாவற்றையும் காட்டி இப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் நீங்கள் அப்படியே அயோத்தியா குப்பம் வீரமணியையும் (லேட்) சேர்த்துக் கொள்ளலாம். வெட்கப்பட ஒன்றும் இல்லை. அவரும் துறை சார்ந்த வெற்றியடந்தவர்தான்.

இதற்கு 'சமூகம்' 'முன்னேற்றம்' குறிச்சொற்களில் அடையாளப்படுத்துவதும் , இப்படி வாழ வேண்டும் என்று சொல்வதும், ரொம்ப ஓவர் சிவா

**

நீங்கள் குறிப்பிட்டுள்ள சில நபர்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து அடையாளம் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களைப்பற்றிச் சொல்ல ஒன்றும் என்ன்னிடம் இல்லை.

**

வாழ்க வளமுடன் :-)))

மா சிவகுமார் சொன்னது…

கொஞ்சம் சறுக்கினாலும், மணிக்கட்டில் அடித்துத் திருத்தும் கல்வெட்டு இருக்கும் வரை என்ன கவலை :-)

உங்கள் கருத்துக்களை எடுத்துக் கொள்கிறேன். இப்படி வாழ வேண்டும் என்று மொட்டையாக குறிப்பிட்டு இந்த பட்டியலை போட்டது சரியில்லைதான்.

ஏதோ ஆழ அமர்ந்து சிந்தித்து போட்ட பட்டியல் இல்லை. நீங்கள் சொன்னது போல, நானும் குறிப்பிட்டிருப்பது போல மனதில் தோன்றிய பெயர்களை எழுதி சில நிமிடங்களில் உருவான பட்டியல்.

நான் குறிப்பிட்ட ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு வகையில் நான் வியக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட அயோத்திக் குப்பம் வீரமணிக்கும், மதுரை அழகிரிக்கும் ஊடகங்களில் பரபரப்பு கிடைத்தும் எனக்கு அவர்கள் நினைவு வரவில்லை என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.

கிருஷ்ணம்மாள் போன்ற மூதாட்டிகளையும், குத்தம்பாக்கம் இளங்கோ போன்றவர்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருப்பது என்னுடைய அறியாமைதான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய வாசிப்பையும் அவதானிப்பையும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்,
சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கார்த்திக்,

நன்றி!

?!!!@#%* சொன்னது…

திரும்ப‌வும் எழுத‌ வந்த‌திற்கு மிக‌வும் ம‌கிழ்கிறேன், ந‌ன்றி,

ந‌மது கால‌த்தை சேர்ந்தவ‌ர்களை மட்டும் எடுத்து கொள்ள‌லாம்,

இற்ந்த‌வ‌ர்க‌ள் அந்த‌ கால‌த்திற்கு ம‌ட்டுமே ச‌ரி,

நான் "எல்லோரையும்" சேர்த்து தான் கூறுகிறேன்,

காலம் & வாழ்க்கையின் மாற்ற‌ம் அவ்வாறு உள்ள‌து.

ச‌ஹ்ரித‌ய‌ன்

பெயரில்லா சொன்னது…

இடைச்சொருகல்கள் இனிதாய் இருந்தது - நான்

எதைச் சொல்கிறேன் என்பதை விளக்கத் தேவையில்லை!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சஹ்ரிதயன்.

//எதைச் சொல்கிறேன் என்பதை விளக்கத் தேவையில்லை!//
எனக்குப் புரியவில்லை, அருள்செல்வன்!

அன்புடன்,
மா சிவகுமார்