புதன், ஜூன் 30, 2010

எரிபொருள் விலை உயர்வு

டெக்கான் குரோனிக்கிளில் ஜெயதி கோஷ் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து

1. எரிபொருள் விற்கும் நிறுவனங்களுக்கு இழப்பு என்று அரசு காரணம் சொன்னாலும், அந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளில் நல்ல ஆதாயம் ஈட்டியதாகத்தான் வருகிறது. ஆதாயம் குறைவதை இழப்பு என்று சொல்கிறார்கள்.

2. உலகச் சந்தையின் விலையுடன் உள்நாட்டு விலையை இணைப்பது தேவையில்லாமல் ஏற்ற இறக்கங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

3. இந்த விலை ஏற்றம் தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு அதிக ஆதாயம் கிடைப்பதற்காக செய்யப்பட்டிருக்கிறது.

4. எரிபொருள் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அரசு எரிபொருள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்க நேரிடும்.

காஷ்மீர்

பல மாதங்களாக காஷ்மீரிலிருந்து பெரிய வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகள் படிக்கவில்லை. ஓமர் அப்துல்லா நல்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்தேன்.

கடந்து இரண்டு நாட்களாக மீண்டும் கலவரம். இரண்டு இளைஞர்கள், துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்.

டெக்கான் குரோனிக்கிளில் ஓமர் அப்துல்லாவின் பேட்டியில் இதைப் பற்றியும் காஷ்மீர் போராட்டம் குறித்த மற்ற செய்திகளைப் பற்றியும் பேசியிருந்தார்.
  • 'காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தானின் மேலாண்மையில்தான் செயல்படுகிறார்கள்.'
  • 'இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி வந்து விடக் கூடாது என்று ஒரு கூட்டமே செயல்படுகிறது'
  • 'காஷ்மீரில் கலகத்தைத் தூண்டுவதற்கு, பிரிவினை வாதிகளும், எதிர்க்கட்சிகளும் தவிர இன்னும் சில கைகளும் செயல்படுகின்றன'
அவரது வழிகாட்டலில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இன்றைய நாளிதழில் மேலும் துப்பாக்கி சூடு, மேலும் உயிரிழப்பு என்று செய்தி.

சனி, ஜூன் 26, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 8

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 7

தொலைபேசி எதிர்வினைகள்

1.
"சிவகுமார், எப்படி இருக்கீங்க!"
"நான் நல்லா இருக்கேன், நீங்க!"

"ஒங்க பிளாக்ஸ்பாட் பார்த்தேன், நல்லா எழுதியிருக்கீங்க!"
"எதப்பத்தி சொல்றீங்க?"

"அதான், தமிழ் மாநாடு புறக்கணிப்பு பத்தி எழுதியிருக்கீங்களே. நான் கூட இன்னைக்குக் கிளம்பி மாநாட்டுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன். அப்பதான் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்னு பார்த்தேன். சரியா எழுதியிருக்கீங்க.

செல்லமுத்து குப்புசாமி கூட புறக்கணிப்பை ஆதரிச்சிருக்காரே! அவருடைய விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகம் படித்திருக்கிறேன்.

பெரிய ஆளுங்க எல்லாம் வாராங்களா, அல்லது இவனுங்களே கூடிக் கூத்தடிச்சிக்கிறானுங்களா?"

"சிவத்தம்பி என்று ஒரு பெரியவரின் பெயர் கேள்விப்பட்டேன். ஹார்ட் என்ற தமிழ் ஆய்வாளர் பேசியதும் செய்தித்தாளில் படித்தேன். மற்றபடி விபரங்களை கண்டு கொள்ளவில்லைதான். வ செ குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள் இணையத் தமிழ்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்"

2. "லக்கிலுக்கின் இடுகையில், 'நாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும், சிறிதளவாவது துடித்தோம்' என்று எழுதியிருந்ததைப் படித்தேன். அதுதான் உங்களுக்குத் தொலைபேசத் தூண்டியது. நான் கூட வலைப்பதிவு வைத்திருக்கிறேன். முன்பு ஒரு தடவை என் இடுகையில் நீங்கள் பின்னூட்டம் கூட போட்டீர்கள்"

வெள்ளி, ஜூன் 25, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 6

வலைப்பதிவர்களின் சமீபத்திய இடுகைகள்
இது தொடர்பான எனது முந்தைய இடுகைகள் (பிற இடுகைகளின் சுட்டிகளோடு)

புதன், ஜூன் 23, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 5

சாந்தகுமார்

Shanthakumar: siva coimbatore yar poyirukardhu

me : http://masivakumar.blogspot.com/2010/06/4.html . I am boycotting it, Shantha!

Shanthakumar: mm nalla mudivu.

ennai poruthavarai, eezha punn innum aaravillai. pirabakaran maranathai nambinalum, meendu varuvar endru nambikkai vaithirundhalum, pallayirakkanakkana uyirgal sethu madivadhai pakkathu mannilirundhu paarthukkondu dhan irundhom..

matra vishangalilum ivargal aadum koothu, ketparillai. ------------removed--------------- aduthu varugiravanukku thalaiyai thattil vaithu koduthu viduvom

me : I will quote you in my blog and give your comments, it is okay?

Shanthakumar: perfectly ok..

தமிழ் எழுத்துக்களில்

சாந்தகுமார்: சிவா, கோயம்புத்தூர் யார் போயிருக்கிறது?

நான்: http://masivakumar.blogspot.com/2010/06/4.html . நான் மாநாட்டைப் புறக்கணிக்கிறேன், சாந்தா

சாந்தகுமார்: ம்ம், நல்ல முடிவு.

என்னைப் பொறுத்தவரை, ஈழப் புண் இன்னும் ஆறவில்லை. பிரபாகரன் மரணத்தை நம்பினாலும் மீண்டு வருவார் என்று நம்பிக்கை வைத்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிவதை பக்கத்து மண்ணிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

மற்ற விஷயங்களிலும் இவர்கள் ஆடும் கூத்து, கேட்பாரில்லை. -----------நீக்கப்பட்டது ------------ அடுத்து வருகிறவனுக்கு தலையில் தட்டி வைத்து கொடுத்து விடுவோம்

நான்: உங்கள் பெயர் குறிப்பிட்டு என் வலைப்பதிவில் உங்கள் கருத்தை வெளியிட்டுக் கொள்ளலாமா?

சாந்தகுமார்: நிச்சயமாகச் செய்யுங்கள்.

தமிழ்ப் புழுக்கள்

தமிழ் நாட்டுத் தமிழருக்கு பொதுவாகவும், 'உலகத்' தமிழ் செம்மொழி மாநாடு காணும் கருணாநிதி கும்பலுக்கு குறிப்பாகவும் பொருந்தும் வரிகள்!
=================
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
== பாரதியார்

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 4

உங்களுக்கே தெரியும் இருந்தாலும்...
பரிதாபிகளே, மன்னியுங்கள்!

புதிய சேர்க்கைகள்:
முந்தைய பதிவுகள்
எனது பதிவுகள்

வெள்ளி, ஜூன் 18, 2010

அமெரிக்க உயிர்களும், இந்திய உயிர்களும்

'Compared to 11 deaths reported during oil rig explosion, Bhopal's tragedy has claimed the lives of 15, 0000 men, women and children.'

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு

While the US government holds BP and its CEO Tony Heyward directly responsible for the spill; in 1984, the US embassy pushed for 'safe passage' for the then Union Carbide chief Warren Anderson.

வியாழன், ஜூன் 17, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 2

உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்தால் இன்ன விழாவையும் புறக்கணிக்க வேண்டாமா?
வீட்டில் சாவு நிகழ்ந்தால் பண்டிகை கொண்டாடுவதையே நிறுத்தி விட வேண்டுமா?

என்று கேள்விகள் எழுகின்றன.

1. தமிழர் படுகொலை நடக்கும் போது அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் அரசியல் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் தமிழக முதல்வர்.
  • இனப்படுகொலைக்கு ஆதரவான இந்திய அரசின் உதவிகளைக் கூடத் தடுக்கவில்லை.
  • இன உணர்வுகளின் வெளிப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்தார்.

2. அவ்வளவுக்கும் பிறகு உலகத் தமிழ் மக்களின் தலைவர் என்று நினைத்துக் கொண்டு 'உலகத்' தமிழ் மாநாடு கூட்டுகிறார்.

இந்த இரண்டுக்குமிடையான கொடுமுரண்பாட்டை சுட்டிக்காட்டுவதுதான் புறக்கணிப்பின் நோக்கம்.

மற்ற எந்த நிகழ்வுக்கும் இத்தகைய கொடுமுரண்பாடு கிடையாது.

திங்கள், ஜூன் 14, 2010

"உலகத்" தமிழ்ச் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 3

செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?
  1. தமிழ் செம்மொழி என்பதிலோ, தமிழுக்கு மாநாடு நடத்துவதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

  2. 2009ம் ஆண்டிலும் அதன் பிறகும் தொடர்ந்து தமிழ் ஈழத்தில் நடந்து வரும் இனப் படுகொலைகளை, இன அழிப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்காமல் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு 'உலகத் தமிழ்', 'செம்மொழி தமிழ்' என்று மாநாடு நடத்த வெட்கமாக இருக்க வேண்டும்.

  3. அப்படியே 'அன்றைக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, கையாலாகாதவனாகத்தான் இருக்க முடிந்தது. ஏதாவது செய்திருந்தால் ஜெயலலிதா ஆட்சி அமைத்திருப்பார். அதனால் நான் தொடைநடுங்கியாக இருந்து விட்டேன்' என்று சொன்னால் அந்த வெட்கத்திலாவது இது போன்று 'உலகத் தமிழ்' மாநாடு என்று நடத்தத் துணியக் கூடாது.
புறக்கணிப்பும், எதிர்ப்பும் தமிழுக்கும் மாநாட்டுக்கும் இல்லை. லக்கிலுக்
தெளிவாகச் சொல்வது போல 'உலகத் தமிழினத்துக்கு பச்சைத் துரோகம் செய்த கருணாநிதி
நடத்துவதால்தான் புறக்கணிப்பு'.

பணமும், அதிகாரமும், ஊடக ஆதிக்கமும் தாரை தப்பட்டைகளோடு சத்தம் போட்டாலும்,
நேர்மையுடனும் உண்மையுடனும் ஒரு சிலராவது தமது உணர்வுகளை பதிவு செய்வது அவசியம்
என்ற நோக்கில்தான் இந்த புறக்கணிப்பு பதிவுகள்.

வரலாற்றில் நாமெல்லாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும் கொஞ்சம் துடித்தோம் என்று
புரிந்து கொள்ளட்டும்.

வியாழன், ஜூன் 10, 2010

"உலகத்" தமிழ்ச் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 1

1. தமிழுக்கும், தமிழ்க் கணிமைக்கும் சிறப்பான பங்களித்திருக்கும் ஒரு தோழியின் கருத்துக்கள்.
Hi Shiva,
You are right.... We should just say no this crapy semozhi maanadu...
I second your thoughts on this...
My husband said " Naanum vazhi mozhikireen"

2. வலைப்பதிவர் கோவி கண்ணன்
செம்மொழி மாநாடு - எழவு வீட்டில் கறிவிருந்து !

3. ஜோதி பாரதி
http://jothibharathi.blogspot.com/2010/06/blog-post_10.html

4. நிறைய எழுதும் பிரபல பதிவர்

"நானும் இதே கொள்கையுடன்தான் இருக்கிறேன்..!
விரைவில் தனிப் பதிவு போடும் எண்ணத்தில்தான் நானும் இருந்தேன்..! போடுகிறேன்..!
பரிந்துணர்வுக்கு நன்றி.."

5. தமிழ் இணையத்தின் ஆரம்ப உருவாக்க முன்னோடிகளில் ஒருவர்

"உங்கள் கருத்துக்களோடு முற்றாக உடன்படுகிறேன்
கோலாகலக் கொண்டாட்டங்கள் பட்டி மன்றங்களாகவும், கவியரங்கங்களாகவும் மக்களை மேலும் சிதைவுக்குள்ளாக்கும் வகையிலேயே கொண்டாடப்படவிருக்கின்றன

எனது எதிர்ப்பை எனதுபண்புடன் குழுமத்தில் பதிவு செய்துவிட்டேன்
வலைப்பதிவெழுதியே பன்னாட்களாகிறது முடிந்தால் அங்கும்பதிவு செய்கிறேன்
முகநூலிலும் என் எத்ரிப்பை பதிவு செய்து விடுகிறேன்"

6. கல்வெட்டு
செத்து செத்து விளையாடுவோம்
--- பெருகும்

செவ்வாய், ஜூன் 01, 2010

தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு

தமிழகம் இழைத்த துரோகம்

பின்னூட்டத்தில் தமது உணர்வுகளை தெரிவித்த நண்பர்களுக்கும், தனியாக பதிவிட்டு தானும் புறக்கணிக்கப் போவதாகச் சொன்ன செல்லமுத்து குப்புசாமிக்கும், இன்னும் மாநாட்டு புறக்கணிப்பில் ஒப்புதல் உடைய பிற நண்பர்களுக்கும்

இந்தத் தமிழ்மாநாடு புறக்கணிப்பை இன்னும் கொஞ்சம் முனைப்பாக செய்ய முடிவெடுத்துள்ளேன்.

1. நம்முடைய தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவர்களையும் மாநாட்டைப் புறக்கணிக்கக் கேட்டுக் கொள்ளலாம்.
2. நமது வலைப்பதிவுகளில் புறக்கணிப்பு அறிவிப்பு செய்து மற்றவர்களையும் அதே போல அறிவிக்கும் படி கேட்டுக் கொள்ளலாம்.

நான் அப்படி செய்யும் முயற்சிகளை தொடர்ந்து பதிந்து வருகிறேன்.

பின்னூட்டத்தில் ஒத்த உணர்வு தெரிவித்த நண்பர்கள்.
1. ராஜநடராஜன்
2. யெஸ் பாலபாரதி
3. கோவி கண்ணன்
4. குழலி
5. நந்தா
6. தகடூர் கோபி
7. சீனு
8. நாஞ்சில் பிரதாப்
9. பெயரிலி
10. சவுக்கடி (யார் என்று தெரியவில்லை????)
11. bala
12. nt

பின்னூட்டத்தில் மாற்றுக் கருத்து தெரிவித்தவர் - யுவகிருஷ்ணா
அவரையும் கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் உணர்வை வெளிப்படுத்த புறக்கணிப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நமக்கு கட்சி சார்பு, தனி நபர் சார்பு அதிகம். சில அடிப்படை கொள்கைகளை வைத்து அதன்படி செயல்படுவது அதை விடச் சிறந்தது.

யாருமே (நம்மையும் சேர்த்து) always யோக்கியமில்லை. ஒரு கட்சி, ஒரு தலைவர் என்று அடையாளப் படுத்திக் கொள்ளும் போது, அந்தக் கட்சி, அந்தத் தலைவர் செய்வது எல்லாவற்றையும் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். நமது மனதுக்கு தவறு என்று பட்டாலும், அதை வெளியில் சொல்ல முடியாத கட்டு.

அதைத் தவிர்த்து விட்டால், குழப்பம் கொஞ்சமாவது குறையும். நமக்கு நாமே தலைவர், நமது நிலைப்பாடுகள் நமது கட்சி அவ்வளவுதான். மனதறிந்து உண்மையாக பேசி நடந்து கொள்ள முடியும். தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் ஆயிரம் நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள். அதற்கெல்லாம் நாம் கொடி பிடித்துக் கொண்டே இருக்க முடியுமா!

தனி உரையாடலில் விளக்கம் கேட்ட நண்பரையும் புறக்கணிப்பில் சேர்ந்து கொள்ள அழைக்கிறேன்.