இன்னும் செய்ய வேண்டியவை:
- ஒவ்வொரு பதிவிலும் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்துவது.
- ஒவ்வொரு பதிவிலும் பொருத்தமான இடங்களில் சுட்டிகளை ஏற்படுத்துவது.
- ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு சிறு குறிப்பு கொடுத்து இன்னொரு அட்டவணை செய்வது.
- இந்த அட்டவணைக்கான சுட்டியை வடிவப் பலகையில் சேர்ப்பது. (ஆகி விட்டது)
இந்த வேலைக்கு உதவியாக இருந்த அன்னியன் வெங்கட்ரமணியின் காப்பக தேடிக்கு நன்றிகள்.
8 கருத்துகள்:
100க்கு வாழ்த்து(க்)கள்.
நன்றி அக்கா.
அன்புடன்,
மா சிவகுமார்
இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு சாதித்திருக்கிறீர்கள்!மனமார்ந்த வாழ்த்துகள்.
அம்மா, உண்மையிலேயெ சொல்கிறேன். எதுவும் சாதித்து விடவில்லை. உருப்படியான வேலைகள் இனிமேல்தான் செய்ய ஆரம்பிக்க வேண்டும். பெரியவர்களின் ஆசியும் மற்றவர்களின் அன்பும் இருந்தால் நிறைய செய்யலாம் உலகில்.
மா சிவகுமார்
வணக்கம் சிவகுமார்.3 மாதங்களில் 100 பதிவுகளா?உங்களின் ஒரு சில பதிவுகளைப் படிக்கதான் நேரம் கிடைத்தது.மற்றவகளைப் படிக்க ஆசைதான்.ஆனால் முடியவில்லை.விடுமுறை காலத்தில்தான் உங்கள் பதிவை ஆற அமர படிக்க வேண்டும்.100க்கு எனது வாழ்த்துக்கள்.
நன்றி துர்கா,
உங்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்ஜி, 100வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். யார் படித்தாலும், படிக்காவிட்டாலும் நீங்கள் எழுதும் விதத்தையும், எழுதும் தரத்தையும் மாற்றிக்கொள்ளாமல், குறுகிய காலத்தில் இத்தனை பதிவுகள் போடுவது எளிது என எனக்கு தோன்றவில்லை.. இவ்வளவும் உங்களின் பணிகளுக்கு மத்தியில்.. சாதனை தான்... உங்கள் எழுத்து நிறைய பேர் படிக்க வேண்டும் என்பது என் ஆசை.. 100வது பதிவின் Special உங்களின் புகைபடமா?!! :)
நன்றி கவிதா.
நூறாவது பதிவு போட்டது ஜூலை 16ல். புகைப்படம் இணைத்தது இரண்டு நாள் முன்புதான் (25ம் தேதி?). அதனால் ஸ்பெஷல் எல்லாம் இல்லை. :-)
இது கொஞ்சம் பழைய புகைப்படம். இப்போதைய புகைப்படம் பிடித்து போட வேண்டும் என்றும் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். நம்ம சுறுசுறுப்புக்கு அது எப்போ நடக்குமோ என்று தெரியாமல் இருக்கவே கைவசம் இருப்பதைப் போட்டு விடலாம் என்று இணைத்து விட்டேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக