- நாளிதழ் தினமும் படிப்பவர்கள் பழைய தாள்களை ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை பழைய விலைக்குப் போடுவது வழக்கம். அதை நேரடியாகச் செய்யாமல் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்கார அம்மா, அல்லது கட்டிடக்காவல்காரர் அல்லது அது போன்று அந்த நூறு ரூபாய்கள் பெரிதாகப் பயன்படுபவர்களிடம் கொடுத்து விற்றுக் கொள்ளச் சொல்லாமே!
- சமையல் வாயுவுக்கு அரசு ஒரு சிலிண்டருக்கு இருநூறு ரூபாய்களுக்கு மேல் மான்யம் வழங்குகிறதாம். அந்தக் கூடுதல் விலையைத் தாங்கிக் கொள்ள முடிந்த நாம் அரசு சமையல் வாயுவை புறக்கணித்து, அரசு நிறுவனங்களிடமிருந்து வணிக முறை இணைப்பையோ அல்லது தனியார் இணைப்பைப் பெற்றுப் பயன்படுத்தலாமே!
- பழைய பொருட்களை ஒழிக்கும் போது சட்டையோ, கால்சட்டையோ, பையோ, பாத்திரமோ ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படாமல் இருக்கிறது என்று பார்த்தால் அதைப் பயன்படுத்த முடிபவரிடம் கொடுத்து விடலாமே!
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
ஞாயிறு, ஜனவரி 27, 2008
இப்படிச் செய்யலாமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
நல்ல யோசனைகள்...
மாசி சார், நகைச்சுவை என்று வகைப்படுத்தி இருக்கிறீர்களே...சரி பாருங்கள்...
3. happens all the time.
1. once we tried to collect old newspaper for an orphanage. most of our middle class gave weird looks in chennai. xtians were the best in this collection drive. they gave happily.
நன்றி ச்சின்னப் பையன்/அனானி,
//நகைச்சுவை என்று வகைப்படுத்தி இருக்கிறீர்களே//
நான் தமிழ்மணத்தில் சேர்க்கவில்லை. வேறு யாரோ நகைச்சுவை உணர்வு கொண்ட நண்பர் ஒருவர் இணைத்திருக்கிறார்.
அங்கே சிரிப்பவர்கள்.... :-)
அன்புடன்,
மா சிவகுமார்
நல்ல எண்ணங்கள் சிவா.
இங்கே பேப்பர் எல்லாம் இப்போது ரீசைக்கிள் ஆகிரது. சிட்டிக்கவுன்ஸில் அதற்கென்றே ஒரு பெரிய பெட்டி வீட்டுவீட்டுக்குக் கொடுத்துள்ளது.
துணிமணிகள் சிட்டி மிஷன், சால்வேஷன் ஆர்மி இதுகளுக்குக் கொடுத்தால் ரொம்ப மலிவு விலைகளுக்கு நிதிவசதி குறைந்தவர் வாங்கிப் பயன் படுத்துகிறார்கள்.
கடந்த ரெண்டு மாதங்களாக துணிமணிகள், இன்னும் பயன்படுத்தாத டோஸ்ட்டர், ஃப்ரைபேன் போனற வீட்டுச் சாமான்கள் எல்லாம் 'பூனை'க்குக் கொடுக்கின்றேன்.
ஆதரவற்ற பூனைகளுக்கு உணவு வழங்கிக் காப்பாற்றும் அனாதாலயம்.
கோபாலகிருஷ்ணனுக்கு அதிர்ஷ்டம்.
மியாவ்..............
மாசி ஐயா! சமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் இரக்கத்தையும் அக்கறையும் தங்களது கருத்து பிரதிபலிக்கிறது. ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? என்பது கேள்வி. முதல் கருத்தும் முன்றாவது கருத்தும் தனிநபர் சார்ந்த விசயங்கள். ஆனால் இரண்டாவது கருத்தான சமையல் வாயு விசயத்தில் மக்களுக்கு அறிவுரை சொல்வதை விட ஆட்சியாளர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். ஓட்டுக்காக நாட்டின் வளத்தை நாசமாக்கும் அரசியல் வியாதிகளுக்கு மருத்துவம் தரப்பட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எல்லா மாணவ/ மாணவிகளுக்கும் இலவச புத்தக திட்டத்தையும் சைக்கிள் திட்டத்தையும் அறிமுகபடுத்தினார். அதை இன்னாள் முதல்வர் தொடர்ந்து செயல்படுத்துகிறார். இதனால் அரசுக்கு ஏற்படும் சுமை எத்தகையது? தனது பிள்ளைகளுக்கு புத்தகம், சைக்கிள் வாங்கி கொடுக்க தகுதியுடையவர்களின் பிள்ளைகளுக்கு அரசு இலவசமாக கொடுத்து தேவையற்ற பொருளாதார சுமையை சுமப்பது, தன் தலையில் தானே மண்வாரியிறைப்பது அல்லவா? சமையல் வாயுவுகளை உபயோகிப்பவர்கள் சாமனிய மக்களா? தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்ற சக்தி பெற்ற மக்களே அதிகமாக உள்ளனர். அரசாங்கத்தின் பொருளாதர உதவிகள் தகுதியானவர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு இந்த சிந்தனை மிகவும் அவசியமானது. அதுவல்லாமல், இலவச அறிவிப்புகள் மூலம் ஓட்டுகளை வேட்டையாடும் அரசியல் வியாதிகள் நம்மிலிருந்து நீங்கினால் மட்டுமே நமது நாடு வளம் பெறும். மக்கள் திருந்துவதை விட ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும், தொலைநோக்கு பார்வையும், சமூக அக்கறையும், தியாக மனமும், அர்ப்பணிப்பு உணர்வும் உடைய ஆடசியாளர்கள் நமக்கு வரவேண்டும்.
நீதிமான்
//சிட்டி மிஷன், சால்வேஷன் ஆர்மி இதுகளுக்குக் கொடுத்தால்
சாமான்கள் எல்லாம் 'பூனை'க்குக் கொடுக்கின்றேன்.//
உணர்வு பூர்வமான ஒட்டுதல் என்று பழசைக் கூடச் சேர்த்து வைப்பவர்களுக்கிடையே உங்கள் பழக்கம் நல்ல உதாரணம்.
//இரக்கத்தையும் அக்கறையும் தங்களது கருத்து பிரதிபலிக்கிறது.//
இரக்கமும் அக்கறையும் இதன் அடிப்படை இல்லை, நீதிமான். இது போன்று திட்டமிட்டு நினைத்து நினைத்து செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
//இரண்டாவது கருத்தான சமையல் வாயு விசயத்தில் மக்களுக்கு அறிவுரை சொல்வதை விட ஆட்சியாளர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.//
அதை எங்கு போய்ச் சொல்வது என்று சொல்லுங்கள். நமக்குள் நாம் பேசிக் கொண்டால், ஒருவொருக்கொருவர் நல்ல கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் திறந்த மடல் எழுதுவதால் அவர்கள் மாறி விடவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவுதானே!
//மக்கள் திருந்துவதை விட ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும், தொலைநோக்கு பார்வையும், சமூக அக்கறையும், தியாக மனமும், அர்ப்பணிப்பு உணர்வும் உடைய ஆடசியாளர்கள் நமக்கு வரவேண்டும்.//
மக்கள் எவ்வழி மன்னன் எவ்வழி. மக்களின் மனப் போக்குக்கு ஏற்ற தலைவர்கள்தான் வாய்ப்பார்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு.... நல்ல குறிக்கோள்...saaral Orkut community ல் இணையுங்கள்...http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339
தங்கள் குறிக்கோள் நிறைவேறும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு குழுமம்... நன்றி..
கருத்துரையிடுக