திங்கள், ஜனவரி 28, 2008

கொடும்பாவங்கள்

காந்தி அடிகளின் சமாதியில் இப்படி எழுதப்பட்டுள்ளதாம்

ஏழு கொடும்பாவங்கள்
  1. உழைக்காமல் ஈட்டிய செல்வம்
  2. கட்டுப்பாடு இல்லாத நுகர்வு
  3. மனிதம் இல்லாத அறிவியல்
  4. பண்பாடு இல்லாத அறிவு
  5. கொள்கை இல்லாத அரசியல்
  6. நேர்மை இல்லாத வியாபாரம்
  7. தியாகம் இல்லாத வழிபாடு
??????????

10 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

இதோடு சேர்க்க பல இருந்தும் காந்தி சொல்லாமல் விட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.

இம்சை சொன்னது…

நன்றி சிவா... அருமை

மா சிவகுமார் சொன்னது…

நன்றி குமார், இம்சை!

அன்புடன்,
மா சிவகுமார்

சின்னப் பையன் சொன்னது…

இவைகளையும் சேர்த்திருக்க வேண்டும்.
1. கலைஞர் குடும்பத்தினர் இல்லாத மத்திய மந்திரி சபை
2. தோழி இல்லாத அம்மா
3. ஆளுங்கட்சியில் இல்லாத மருத்துவர்
4. கோஷ்டியில்லாத காங்கிரஸ்

Anil சொன்னது…

ச்சின்னப் பையன் சொல்வது போல்
எழுதினால் உலக தலைவர்களின்
கல்லரையில் இடம் காணாது...!!!

பெயரில்லா சொன்னது…

//

உழைக்காமல் ஈட்டிய செல்வம்

//



அப்ப நூற்றுக்குத் தொண்ணூறு அரசு ஊழியர்கள் கொடும்பாவிகள்!


//

பண்பாடு இல்லாத அறிவு
//


இதப் படிச்சா அருந்ததி ராய் தான் ஞாபகம் வந்துத் தொலைக்கிறது.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ச்சின்னப்பையன், மயில், அனானி.

அன்புடன்,
மா சிவகுமார்

உண்மைத்தமிழன் சொன்னது…

1. உழைக்காமல் ஈட்டிய செல்வம்
இதை வைத்திருப்பவர்கள் யார்..?

2. கட்டுப்பாடு இல்லாத நுகர்வு
ஒரே வீடாக இருந்தாலும் நான்கு அறைகளுக்கும் நான்கு டிவிக்கள் வாங்கிவைத்து தனிமனித உரிமையை நிலைநாட்டுபவர்கள் யார்..?

3. மனிதம் இல்லாத அறிவியல்
குளோனிங்கில் மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் யார்..?

4. பண்பாடு இல்லாத அறிவு
லிவிங் டூ கெதராக வாழலாம் என்கிற அளவுக்கு சிந்தனையை சிதறடித்திருக்கும் சிந்தனையாளர்கள் யார்..?

5. கொள்கை இல்லாத அரசியல்
5 வருட ஆட்சிக்காலத்தில் ஒரு வீடாவது வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் யார்..?

6. நேர்மை இல்லாத வியாபாரம்
ஒரு பொருளை கட்டுப்படியாகக்கூடிய விலையைவிடக் குறைத்து விற்று சிறு தொழில்களை அழித்து தாங்கள் மட்டும் வளரும் பெரும் தொழிலதிபர்கள் யார்..?

7. தியாகம் இல்லாத வழிபாடு
கோவிலுக்குச் சென்றால்கூட கண நேரத்தை கடவுளுக்காக தியாகம் செய்யப் பிடிக்காமல் சிறப்பு தரிசன வழியாக முண்டியடிப்பது யார்..?

அவருடைய பிள்ளைகள்தான்.. சும்மா ஆசைக்கு எழுதி மட்டும் வைச்சிருக்கோம்..

அதை 'உண்மை'ன்னு எடுத்துப் போட்டு கமெண்ட் போடுறான்னா எப்படி..?

Irai Adimai சொன்னது…

மொத்தத்துல இன்றைய அரசியல் வாதிகளுக்குத் தேவையான அடிப்படை தகுதிகள் அத்தனையும் பொறிக்கப் பட்டிருக்குதுன்னு சொல்லலாம்.

மா சிவகுமார் சொன்னது…

உண்மைத்தமிழன்,
//அதை 'உண்மை'ன்னு எடுத்துப் போட்டு கமெண்ட் போடுறான்னா எப்படி..?//
:-)

வணக்கம் இறை அடிமை.

அன்புடன்,
மா சிவகுமார்