நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று .
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
-மூதுரை, ஔவையார்
8 கருத்துகள்:
அன்பிர்க்குஇனியவன்........
மூதுரைநல்வழியைப்போலவே,தீயவர்கள்,எப்போதும் பிறரைப்பற்றி பொல்லாங்கு
பேசுபவர்கள் ,புறம்கூறுபவர்கள்,இவர்களது கண்ணில் நாம் படாதவாறு விலகியிருத்தல் எப்போதுமேநல்லது என்று நன்னெறியில் கீழ்வரும் பாடல் கூறுகிறது.
கொம்புளதற்கைந்து குதிரைக்கு பத்துமுழம்,
வெம்புகரிக்காயிரந்தான் வேண்டுமே...வம்புசெறி
தீங்கினர் தம் கண்ணில் தெரியாததூரத்தே
நீங்குவதே நல்ல நெறி.
விளக்கம்: மாடுபோன்ற கொம்புள்ள மிருகங்களிடமிருந்து 5 அடி தள்ளிநின்றால்
தப்பித்துக்கொள்ளலாம்.குதிரை போன்ற உதைக்கும் மிருகங்களிடமிருந்து 10 அடி
தள்ளிநின்றால் தப்பித்துக்கொள்ளலாம்.மதம்பிடித்த யானையிடமிருந்து 1000 அடி
தள்ளிநின்றால் பிழைத்துக்கொள்ளலாம்.ஆனால் எப்போதும் வம்பு பேசும் தீயவர்களிடமிருந்துதப்பித்துக்கொள்ள ,அவ்ர்களது கண்ணிலேயே படாமலிருந்தால்
மட்டுமே தப்பித்துக்கொள்ள முடியும்.
சான்றோர்களின் சிந்தனைகள் ஒன்றுபோலவே இருக்கிறது பாருங்கள்
முற்றிலும் உண்மை ஐயா. இந்தப் பாடலும் பள்ளிப் பாடத்தில் படித்த நினைவிருக்கிறது :-)
எடுத்துக் கொண்ட உவமானம் எவ்வளவு தாக்கமுடையதாக இருக்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
நல்லோர் ஓகே. தீயோர் என்று ஒரு பிரிவு இருக்கிறதா என்ன? இவ்விஷயத்தில் அவ்வைக் கிழவியுடன் முரண்படுகிறேன். :-))
//தீயோர் என்று ஒரு பிரிவு இருக்கிறதா என்ன?//
லக்கி,
தீயோர் இல்லை, தீயார். அதாவது ஒரு பிரிவினர் இல்லை. தனி நபர்.
சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்பவர் என்று தெரிந்தால் அவரிடமிருந்து ஒதுங்கி இருப்பது அறிவுடமை.
அவ்வைக் கிழவி நம் கிழவி, அமுதின் இனிய சொற்கிழவி :-)
அன்புடன்,
மா சிவகுமார்
Arra kulaththin aruneer paravaippol
urruzhi therththar uravellam uravillai akkulaththil kottiyum ambalum neidhalum pola otti uravar urave uravu.
Idhaiyum padiththiruppergale
'ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்'
பாட்டி இப்படியும் சொல்லி வச்சுருக்காங்க.
எல்லாம் அந்தக் காலத்துலேஇருந்தே இருக்குது போல:-)
துஷ்டாரைக் கண்டால் தூர விலகு.
இந்த கருத்தை ஒட்டி வரும் நபிமொழி ஒன்று
"ஒருவன் ஒரு தீமையை செய்தால் கரத்தால் தடுக்கவும். அதற்கு சக்தி பெறவில்லையெனில், வாயால் தடுக்கவும். அதற்கும் சக்தி பெறவில்லை எனில் மனதால் வெறுக்கவும்."
நீதிமான்
மா.சி, உங்களை மொக்கை பதிவு போட tag செய்திருக்கிறேன். பார்க்க http://nunippul.blogspot.com/2008/01/blog-post_12.html
கருத்துரையிடுக