செவ்வாய், ஜனவரி 08, 2008

கலைஞர்

போன சட்ட மன்றத் தேர்தலின் போது அதிமுகவின் ஜெயலலிதா, திமுகவின் கருணாநிதி என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஜெயலலிதாவே மேல் என்று எழுதியிருந்தேன். கலைஞர் ஆட்சி வருவதை விரும்பாததற்கு முக்கிய காரணம் மாறன் சகோதரர்களை எந்த வரைமுறையின்றி முன்னிலைப்படுத்தி அரசியலைக் கொச்சைப் படுத்தும் சிறுமை தலையாய காரணமாக இருந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு வாக்களித்திருந்தேன். அதன் பிறகு அவரை மத்திய அமைச்சராக்கி, அவரும் கூச்ச நாச்சமில்லாமல் எல்லா இடங்களிலும் முண்டி அடித்துக் கொண்டு முக்கியத்துவம் தேடிக் கொண்டிருந்த அவலம் கடுப்பேற்றியிருந்தது.

அந்தத் தவறுக்கான விலை கலைஞரும் திமுகவும் கொடுத்து விட்டார்கள். அதே பாதையில் மதுரையில் கொலைக்கும் தயங்காத மு க அழகிரி குழுவினர், சென்னையிலிருந்து கனிமொழி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டது என்று அந்த நாடகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

திராவிட இயக்கம் தோன்றி ஆட்சியைப் பிடித்த பிறகு அனைவரையும் அணைத்துச் செல்லத் தெரியாத தலைமையாக அமைந்து விட்டது. நான் பிறப்பதற்கு முன்பு நடந்தவை என்றாலும், அறிஞர் அண்ணாவும், பெரியாரும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பெருங்குணம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அளவுக்கு மீறிய பதவி ஆசை, தலைமைப் பொறுப்பில் குறுக்கிடும் அளவுக்கு குடும்பப் பாசம், எண்பது வயதுக்குப் பின்னும் எதிர்க்கட்சித் தலைவி பெண்மணியின் மீது வக்கிரமாக கமென்டு அடிப்பது, மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என்று மாநில அரசியலை இரு பிளவாகப் பிரித்த கீழ்மை அவருக்கே சேரும்.

எதிர்க்கட்சியாக இருக்கும் வரை என்னதான் அடாவடி அரசியல் செய்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி புரிகிறோம் என்ற பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் உருவாக்கும் அதே நேரத்தில் அதிலிருக்கும் நியாயங்களை விளக்கி அதனால் அனுபவித்து வரும் சுகங்களை இழக்கும் மக்களையும் அதை ஏற்றுக் கொள்ள செய்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.

நேற்று வரை அடக்கி ஆண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க, அந்தத் தலைமையை ஏற்க பெரும்பான்மையர் முன்வந்திருப்பார்கள். அதுதான் உண்மையான வெற்றி. முப்பத்தைந்து ஆண்டு கால அரசியலுக்குப் பின்னும், அவரது பெயரைக் கேட்டாலே சலித்துக் கொள்ளும் மக்களை உருவாக்கி இருப்பது அவரது தலைமையின் தோல்வி.

ஆரம்பத்திலிருந்தே கொள்கைகளையும் கட்சியையும், தொண்டர்களையும் தனது, தன் குடும்பத்து நலனுக்கு அவை எப்படி் உதவும் என்று கணக்கிட்டு அந்த அளவுக்கு அவற்றைக் கையாண்டு கொண்ட சராசரி அரசியல்வாதிதான் அவர் என்பது என்னுடைய புரிதல். அப்படிப்பட்ட ஒருவரை தமிழினத் தலைவர், ஒப்பற்ற அரசியல்வாதி என்று போற்றும் போது அரசியலின் தரம் தாழ்ந்து விடுகிறது.

தமிழகத்துக்கு தலைவராக இப்படிப்பட்ட ஒருவரை விடப் பல மடங்கு உயர்ந்த பலர் கிடைப்பார்கள். கிடைக்க வேண்டும். கைத்தடி முதலாளித்துவமான அரசியலையும் தொழிலையும் கலந்து தன்னை வளைப்படுத்திக் கொண்ட கீழ்த்தரமான அரசியல்தான் அவரது. ஜெயலலிதாவை விட எந்த வகையிலும் உயர்ந்தவர் கிடையாது கருணாநிதி. அவரது அரசியலால்தான் ஜெயலலிதா போன்றவர்கள் காலூன்ற முடிகிறது. அவர் எவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறாரோ அவ்வளவு நன்மை தமிழகத்துக்கு.

ஈழ நிலைமை பற்றி மத்திய அரசு ஆலோசனை கூட்டம் கூட்டினால் இவர் போய் கருத்து சொல்வாராம். ஏன்? தமிழினத் தலைவருக்கு இவ்வளவுதான் அக்கறையோ? தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி வாங்கிய சாணக்கியம் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட ஏன் பயன்படாமல் போய் விட்டது? மருமகனுக்கு அரசு செலவில் வைத்தியம் வேண்டும் என்று இலாகா இல்லாத அமைச்சராக ஒட்டிக் கொண்டிருந்து விட்டு அவரது மறைவுக்குப் பின் வசதியாக வெளியேறிய புத்திசாலித்தனம் தமிழர் நலனில் மறைந்து விடும்.

தமிழகத்துக்கு இது போன்ற தலைவர்கள்தான் தலைவிதி கிடையாது. 'திறமையைப் பயன்படுத்தி தொழில் செய்தார்கள்' என்று நியாயப்படுத்தப்படும் முதலமைச்சரின் கிளைக்குடும்பங்கள் எல்லாம் கொழிக்கும் இந்த இரண்டு நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும்.

நோய்கள்தாம் நமக்கு வரங்கள் என்று கொண்டாடிக் கொண்டிருந்தால் விடிவே இல்லை. பிணி தீர முதற்படி இப்படி ஒரு பிணி இருக்கிறது என்று உணர்ந்து கொள்வதுதானே. அதையே மறுத்துக் கொண்டிருந்தால் என்றைக்கு விடிவு?

'திமுகவின் ஆட்சி தமிழர்களின் நலன் விளையும் ஆட்சி. அதிமுக ஆட்சி சுயநல ஆட்சி' என்று பரவலான கருத்து உண்டு. அந்தக் கருத்தில்தான் எனக்கு மாறுபாடு. ஜெயலலிதா ஆளும் போது தமிழர் நலன் பாதுகாக்கப்படவில்லை என்று விழிப்பாவது இருக்கும். திமுக ஆட்சியில் அது போய் ஒரு பொய்யான ஆறுதல் வந்து விடுகிறது.

எதிரிகளை விட துரோகிகள் அதிக தீமை செய்பவர்கள் என்ற வகையில் திமுக அரசு தமிழர் நலனை குழி தோண்டி புதைப்பதுதான்.
  1. ஈழத் தமிழருக்காக தமிழக முதல்வர் எதுவும் செய்ய முடியவில்லை. தனது பதவியும், குடும்ப நலனும் பெரிதாகப் போய் விட்டன. அதிமுக ஆட்சியில் வெளிப்படையான விரோதம் தெரிந்திருக்கும்.
  2. சட்ட ஒழுங்கு அடாவடி அரசியல் இன்னும் தொடர்கிறது. அதிமுக ஆட்சியில் இதைவிட மேலாக இருந்திருக்கும்.
  3. சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடக்காமல் போயிருக்கலாம்.
  4. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதை நடக்க விடாமல் செய்தது இவர்கள்தான்.
மொத்தத்தில் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் தமிழர் நலன் பொறுத்த வரை பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டு பேருமே சொந்த நலனுக்காக பெரும் ஊழல் செய்பவர்கள். ஜனநாயக மரபுகளை மதிக்காதவர்கள்.

திமுக ஆட்சியில் அப்படி இல்லை என்ற பொய் உணர்வைப் பெறுவதால் நீண்ட கால நோக்கில் அது சமூகத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கிறது என்று நம்புகிறேன். நமது சமூகத்துக்கு இதுதான் தலைவிதி என்று கிடையாது.

43 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மூட்டைபூச்சிக்கு வீட்டை கொளுத்துவதும் நல்ல ஐடியா தான். தெருவில் கொசுக்கடிகளுடன் வாழ்ந்து விட்டு போவேமே, என்ன கெட்டுடும்! காலகாலமா அப்படித்தானே வாழ்ந்தோம்! முட்டைபூச்சிகள் நம் வீட்டை வியாபிக்கும் காரணமென்னவென்று ஆராய நமக்கேது நேரம்? சகல வசதிகளுடனொரு மாளிகை கிடைக்கும் வரை தெருவிலேயே வசிப்போம், அல்லது இருப்பதை கொளுத்துக்கிகொண்டே இருப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திராவிட இயக்கம் தோன்றி ஆட்சியைப் பிடித்த பிறகு அனைவரையும் அணைத்துச் செல்லத் தெரியாத தலைமையாக அமைந்து விட்டது. //

எந்த ஒரு இயக்கம் அல்லது சித்தாந்தம் தோன்றிய காலத்தில் இருப்பது போன்றே காலந்தோறும் இருக்காது, நீர்த்துப் போகும். அதன் பிறகு புதிய இயக்கங்கள் தோன்றும். ஆனால் இன்றைய சாதிவெறிபிடித்த சமூக சூழலில் தனிப்பெரும் தலைவர்(கள்) உருவாவதற்கு வாய்பே இல்லை.

வடுவூர் குமார் சொன்னது…

கோவியார் போட்டு “பட்” என்று உடைத்துவிட்டார்.
அடுத்த ”தலை” நிஜமாகவே கானல் நீராகத்தான் தெரிகிறது.

அகஆராய்ச்சியாளன் சொன்னது…

இப்படி நடுநிலைமையா சிந்திச்சு எழுதறவுங்க தமிழ்நாட்டுல பத்தே பேர் தான்.நீங்க அதுல ஒருத்தர்.

பெயரில்லா சொன்னது…

'நச்'

மா சிவகுமார் சொன்னது…

மோகன் கந்தசாமி,

நீங்கள் சொல்ல வருவது சரியாகப் புரியவில்லை. கோனார் உரை போட வேண்டும் :-)

கோவி கண்ணன்,

//இன்றைய சாதிவெறிபிடித்த சமூக சூழலில் தனிப்பெரும் தலைவர்(கள்) உருவாவதற்கு வாய்பே இல்லை.//

தனிப்பெரும் தலைவர்கள் தேவையில்லை. தவறான வழிகாட்டல்கள் இல்லாமல் இருந்தால் போதும்.

வணக்கம் குமார்,

//அடுத்த ”தலை” நிஜமாகவே கானல் நீராகத்தான் தெரிகிறது.//

யாரைச் சொல்றீங்க ;-)

//இப்படி நடுநிலைமையா சிந்திச்சு எழுதறவுங்க தமிழ்நாட்டுல பத்தே பேர் தான்.//

ஹ்ம்! ஹ்ம்!

அன்புடன்,
மா சிவகுமார்

SurveySan சொன்னது…

interesting.

பெயரில்லா சொன்னது…

why not initiate a movement through blog towards identifying better / good leaders in tamilnadu political scene from the existing people and projecting them as possible CMs for tamilnadu. if this gathers momentum (like Chella's Project Tamil Ready) may be by next parliament election and or TN assembly election - mass opinion can be created. Anything started through tamilblogs nowadays are noticed in print media and can be taken up seriously.

example - leaders needed or qualities needed can be a starting point.
1. Good communicators in Tamil
2. Good administration knowledge (not
necessaroly past experience)
3. Good interpersonal relationship inspite of political divergent views
4. Ability to build relationship with
neighbouring states and also center but at the same time firm in getting things done for tamilnadu
5. Good appreciation of economics and finance
6. Empathy and action towards middleclass and poor class people
7. Firmness in taking action on anti-social and erring groups

who in current parties will fit the bill for all or some of the above ? in each party - list the names.

பெயரில்லா சொன்னது…

What is the problem you are having if he gives power to his Family members? If not family members, then it will be his party members. But again the policy of the party(doing good or evil) is going to be the same.

Can anybody give me an example where a person from a business family doing some other thing than their Family business?

MK is FAR FAR better than JJ in all.

பெயரில்லா சொன்னது…

//மோகன் கந்தசாமி,
நீங்கள் சொல்ல வருவது சரியாகப் புரியவில்லை. கோனார் உரை போட வேண்டும் :-)//

கருணாநிதிக்கு மாற்று ஜெயலலிதா என்பது வீட்டை கொளுத்துவதற்கு சமம். ஊழலையும் குடும்ப அரசியலையும் கொள்கை பிடிப்பின்மையையும் மூட்டைபூச்சிகள் எனக்கொண்டால் அவற்றின் பிறப்பிடமான வீட்டில் மண்டிய அழுக்குகளாக பணபலமின்றி ஜனநாயகத்தில் அரசியல் செய்ய முடியாத சூழலையும், கட்சியில் நெருக்கமானவர்களே துரோகம் இழைப்பதையும், கொள்கையின் மேல் பூச்சை மட்டுமாவது மாற்றி அதை ஏற்புடையதாக்க வேண்டிய நிலையையும் கொள்ளலாம். பணபலமின்றியும் உட்கட்சி ஜனநாயகத்துடனும் வறட்டு கொள்கையுடனும் அரசியல் செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. அவர்களை நம்பினால் நடுத்தெருவிற்குத்தான் வரவேண்டும். மற்றபடி கருணாநிதிக்கு மாற்று விஜயகாந்த் எனக்கொள்ள முடியாது. வேண்டுமென்றால் ஜெயலலிதாவுக்கு மாற்றாக ஏற்கலாம்.

இதற்கு மேலும் கோணார் உரை வேண்டுமென்றால் இந்த வரியை மட்டும் வெளியிடுங்கள்: Karunanidhi, the champion of Democracy Indian style.

பெயரில்லா சொன்னது…

கலைஞர் கருணாநிதி வலைப்பூவில் ஆரம்பிச்சுட்டாங்கய்யா! ஆரம்பிச்சுட்டாங்க!!

பெயரில்லா சொன்னது…

//example - leaders needed or qualities needed can be a starting point.
1. Good communicators in Tamil
2. Good administration knowledge (not
necessaroly past experience)
3. Good interpersonal relationship inspite of political divergent views
4. Ability to build relationship with
neighbouring states and also center but at the same time firm in getting things done for tamilnadu
5. Good appreciation of economics and finance
6. Empathy and action towards middleclass and poor class people
7. Firmness in taking action on anti-social and erring groups//

Karunanidhi scores better than anyone else in the first six qualities and seventh quality with a little setback

பெயரில்லா சொன்னது…

சபாஷ்.

பொதுவாக கருணாநிதியை திட்டி பதிவு எழுதினால் அது பார்ப்பனப் பதிவு / மேல் சாதி காழ்ப்புணர்ச்சி என சுலபமாக புறந்தள்ள முயல்வார்கள்.ஆனால் ம சிவகுமார் போன்றவர்களே பொறுக்க முடியாமல் இப்படிப் பதிவெழுதும் போது அவரது ஆதரவாளர்களது நிலை இரு தலைக் கொள்ளி எறும்புதான் :)

கருணாநிதி மாதிரி கபடதாரி சுயநலவாதி அரசியல்வாதிகளை தயங்காமல் தோலுரித்தாலே முன்னேற்றத்துக்கான அறிகுறிதான்

வால்பையன் சொன்னது…

உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார்கள், என் கருத்துக்கள் இங்கே

வால்பையன்

பெயரில்லா சொன்னது…

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவரை காட்டுங்கள்....உங்களின் இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்....

இருக்கிற வசதி வாய்ப்புகளினூடே இந்த அரசு முந்தைய அரசினை விட செயலபடும் அரசாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே....

மற்றபடி நீங்கள் நினைக்கிற மாதிரியான ஒரு தலைவனும்,அரசும் உருவாக வேண்டுமானால் நீங்கள்தான் வீதிக்கு வரவேண்டும்,...உங்களை வழி மொழிய நான் தயாராய் இருக்கிறேன்...செய்வீர்களா?

ஏனெனில் வேறு யார் வந்தாலும் அவரை குறை சொல்வதுதான் உங்களின் மனப்போக்காய் இருக்குமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து......

பெயரில்லா சொன்னது…

//சபாஷ்.

பொதுவாக கருணாநிதியை திட்டி பதிவு எழுதினால் அது பார்ப்பனப் பதிவு / மேல் சாதி காழ்ப்புணர்ச்சி என சுலபமாக புறந்தள்ள முயல்வார்கள்.ஆனால் ம சிவகுமார் போன்றவர்களே பொறுக்க முடியாமல் இப்படிப் பதிவெழுதும் போது அவரது ஆதரவாளர்களது நிலை இரு தலைக் கொள்ளி எறும்புதான் :)

கருணாநிதி மாதிரி கபடதாரி சுயநலவாதி அரசியல்வாதிகளை தயங்காமல் தோலுரித்தாலே முன்னேற்றத்துக்கான அறிகுறிதான்//

இந்த பின்னூட்டத்தை போட்டது நோண்டு ராகவன் என்ற கிழட்டு பன்னாடை. மொசபுடிக்கிற நாயி மூஞ்சை பாத்தாலே தெரியாதா?

K.R.அதியமான் சொன்னது…

In spite of all her demerits and autocratic style, JJ is far better as CM in the long run. Most important aspect of governance is economic and financial prudence and balancing of govt finances.

Total TN govt loans (debt) in 2006 was some 55,000 crores and is now alarmingly growing. JJ, during her 5 years rule, tried cut unneccesary expenses and losses.
She was tough in many matters and there was a fear / respect for law and govt then. A good example is the way people followed the rain water harvesting order with alacrity. fear of punishment from a tough CM made them do it. and govt staff, who are normally arrogant, corrupt and indifferent to their duties while claiming their 'benefits' got a loud message and jolt in her regime. She froze the creation of new districts (which cost hundreds of crores of wasteful expenditure, with no real increase in revenue or proportionate 'development'), etc.

While spending billions in free colour TV, TN govt is asking for central 'assitance' for flood relief. and borrowing recklessly.

The cut (bribe) in govt contracts (in all sectors like PWD HD, EB, Metrowater has risen to nearly 16 % from less 'rates' in her regime. (from authentic sources). In her regime 'collection' of bribes was highly centralised with single point of collection and no intervention after 'paying' ;
now in spite of 'paying' the HQ. the local vattam and maavattam and other DMK cronies pester the contractors for more 'money' and hence many projects are unviable and delayed and costlier.

Mu.Ka's threat of nationalisation of cement factories is remeniscient of Indira Gandhi's blackmailing era. Why not 'nationallise' Sun and Kalaigar TVs, etc ? Obviously, the cement lobby is blackmailed into
'paying' huge amount of 'donations' for....

Sure cement cos are making hefty profits in a booming economy. but everyone have forgotton the terrible losses they suffered in the past in sluggish periods. Stupid rules regarding cement imports (quality norms by BIS) is making cement imports unviable and uncertain. instead of relaxing those rules which will flood the market with cheap imported cements which will force prices of local cement down, the govt is threatening like a daada. Shame.

Creating a new district out of thirupur is the most unwanted, costly and cheap populist measure.
Thirupur developed inspite of govt, not because of any help from govt. and devolving the powers of IAS collectors to thasildars and RIs will be better and efficent option than spending billions into creating more bureaucracy and corruption.

Govt servants and others are given maximum (and much more) 'benefits' with no question of stingent accoutancy of their 'duties'.

less said of TNEB and Arcottaar's deafness, the better.

this guy will ruin TN finances and bankrupt us in the long run. we will realise later.

ஊரார் காச வாரி இரைக்கும் 'வ‌ள்ளல்' இவர். சொந்த காசுல இப்படி 'தாராளமா' இருப்பாரா ? கஞ்சன், சுயநலவாதி, தந்திரக்காரர்....

வாழ்க தமிழ்

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. சொன்னது…

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்"

கலைஞர்-செயலலிதா என்ற ஒப்பீடே மிகவும் கீழ்த்தரமானது.

சின்னப் பையன் சொன்னது…

என்னுடைய பதிவு இன்னும் தமிழ்மணத்தில் சேர்க்கப் படவில்லை...
அதனால், நேரம் கிடைத்தால், இந்த பதிவை பாருங்கள்...
http://boochandi.blogspot.com/2008/01/blog-post.html

ச்சின்னப் பையன்

K.R.அதியமான் சொன்னது…

one important issue, i forgot to mention :

co-op bank loan waiver to 'poor' farmers for some 7000 crores. most of the 'beneficaries' were not so poor and many got wavier for tens of lacs of rupees. there was indiscriminate waivers and no proper survery or targeting. cheapest populism which have nearly bankrupted the co-op banks all over. worse it has made people more dishonest, expecting repeated waivers for no reason at all.

extremely retrograde action and....

may God bless him.

மா சிவகுமார் சொன்னது…

வெயிலான், சர்வேசன் -- நன்றி.

அனானி,
//why not initiate a movement through blog towards identifying better / good leaders in tamilnadu political scene from the existing people and projecting them as possible CMs for tamilnadu.//

நல்ல கருத்து. அத்தகைய மக்கள் கருத்துருவாக்கம் இணையம் போன்ற மக்கள் ஊடகங்களின் மூலம் நடக்க முடியும். ஆனால். அதற்கு வலைப்பதிவுகள் இன்னும் பரவலாகி பல லட்சம் மக்களும் பங்கு கொள்ளும் தளங்களாக மாற வேண்டும். மாறும்.

//Can anybody give me an example where a person from a business family doing some other thing than their Family business?//

இன்போசிஸ், மைக்ரோசாப்டு.

//கருணாநிதிக்கு மாற்று ஜெயலலிதா என்பது வீட்டை கொளுத்துவதற்கு சமம்.//

ஒத்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவை பிடிக்காதவர்களுக்கு கலைஞர், கலைஞரின் எதிரிகளுக்கு ஜெயலலிதா என்று இரு சாக்கடைகள் மட்டும்தான் நமது தலைவிதியாக இருக்க வேண்டியதில்லை என்பதுதான் இடுகையின் கருத்து.

அனானி (கலைஞர் கருணாநிதி வலைப்பதிவு)

'ஜெயலலிதாவுடன் கலைஞரை ஒப்பிடுவது தகாது' என்ற நண்பர்களின் கருத்துடன் எனக்கு ஒப்புதல் இல்லை. கலைஞரின் அரசியல் எந்த விதத்திலும் உன்னதமானதில்லை என்பது என் கருத்து.

அதில் நீங்கள் மாறுபடுவது இயற்கை. உங்கள் மாற்றுக் கருத்தை மதிக்கிறேன்.

மோகன்,

//Karunanidhi scores better than anyone else in the first six qualities and seventh quality with a little setback//

எவ்வளவு மதிப்பெண்கள்? ஜெயலலிதாவுக்கு 10/100 என்றும் கலைஞருக்கு 40/100 என்றும் வைத்துக் கொள்வோம். 95/100 என்று மக்கள் தொண்டர்கள் இருந்ததில்லையா? இருக்கக் கூடாதா?

//என் கருத்துக்கள் இங்கே//
நன்றி வால்பையன்.

இரண்டாம் சொக்கன்,

//இருக்கிற வசதி வாய்ப்புகளினூடே இந்த அரசு முந்தைய அரசினை விட செயலபடும் அரசாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே....//

ஆம்.

//மற்றபடி நீங்கள் நினைக்கிற மாதிரியான ஒரு தலைவனும்,அரசும் உருவாக வேண்டுமானால் நீங்கள்தான் வீதிக்கு வரவேண்டும்,...உங்களை வழி மொழிய நான் தயாராய் இருக்கிறேன்...செய்வீர்களா?

ஏனெனில் வேறு யார் வந்தாலும் அவரை குறை சொல்வதுதான் உங்களின் மனப்போக்காய் இருக்குமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து//

உங்கள் கருத்துடன் நான் உடன்படவில்லை. குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே குறை சொல்வேன் என்று தோன்றவில்லை.

அதியமான்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. (தமிழில் தமிழில் எப்போ வரப்போறீங்க?)

பூச்சாண்டி,

//கலைஞர்-செயலலிதா என்ற ஒப்பீடே மிகவும் கீழ்த்தரமானது.//
கீழ்த்தரமான அரசியல் செய்பவரை வேறு யாருடன் ஒப்பிட வேண்டும். நெல்சன் மண்டேலாவுடனா ஒப்பிட முடியும்?

அன்புடன்,
மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மா.சி,
உங்கள் ஒப்பீட்டடிப்படையிலான கருத்துக்களில் சில ஏற்புடையவை , பல சரியானவை அல்ல! தனி நபர் விருப்பு வெறுப்பு அடிப்படையில் என்றால் அதனைப்பற்றி சொல்ல ஏதும் இல்லை.

திருதராஷ்டிரன் புத்திரப்பாசத்தினால் தவறு இழைத்தது போன்று செய்பவர் கருணாநிதி!

அப்போது எம்.ஜி ஆருக்கு மாற்றாக மு.க முத்துவை திரையுலகில் வளர்க்கப்பார்த்தவர் தானே!

வென்றால் இவர் முதல்வர் தோற்றால் எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன், ஆனால் வருங்கால முதல்வர் எனில் அது ஸ்டானில் என்ற சிந்தாந்தத்தை பார்த்தாலே தெரியவில்லையா அவரின் நடு நிலைமை.

இதில் வேறு உங்கள் பதிவுக்கு எதிர்வினையாற்றியப்பதிவில் கனிமொழியை ஒரு சிந்தனையாளர் என்ற அடிப்படையில் எம்.பி ஆக்கியது தவறே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இதை விட கொடுமை வேரெதுவும் இல்லை. அப்படி என்னப்பா தமிழ் நாட்டில் சிந்தனையாளர்களுக்கு பஞ்சம்! :-))

இன்னும் கருணாநிதி வீட்டு நாய்க்குட்டிக்கு மட்டும் தான் பதவி எதுவும் வழங்கப்படவில்லை என நினைக்கிறேன்!

ஆனால் நிர்வாகத்திறன், ஆளுமை அடிப்படையில் அம்மையாருடன் ஒப்பிடுகையில் ஒரு அங்குலம் முன்னர் வருவது கருணாநிதி தான், அம்மையார் ஒரு மாற்று அல்ல, எதிர்க்கட்சியாக அவரை விட்டால் ஆள் இல்லை. அதனால் தான் வி.காந்த் போன்றவர்களும் சமீபகாலங்களில் அதிகம் மக்களை கவர்கிறார்கள்.

இன்னமும் ரஜினிகாந்த் வந்து தமிழர்களை உய்விக்க மாட்டாரா என ஒரு கும்பல் சப்புக்கொட்டவும் காரணமாக இருப்பது தமிழக தலைவர்களின் சுயநலப்போக்குத்தான்!

மக்கள் ஒரு புதிய தலைவரை தேடுகிறார்கள் என்பது மட்டுமே நிதர்சனம்!

Unknown சொன்னது…

"நச்சுகளைப்" பத்தி, நச்சுன்னு எழுதி இருக்கீங்க!
ரெண்டுமே கேவலம்தான்.. வவ்ஸ் சொன்னக் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்..

பெயரில்லா சொன்னது…

அதியமான், கூட்டுறவுச் சங்கக் கடன் தள்ளுபடி காரணமாக எந்தெந்த முதலைகள் பயன் அடைந்தன என்று எனக்குத் தெரியாது. ஆனால், எத்தனையோ லட்சம் சிறு விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்கள். பயன் அடைந்த குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. காசை வைத்துக் கொண்டு ஏமாற்றும் தொழிலதிபர்களை விட்டு விடுங்கள். வருவாய் இல்லாமல் மருந்து குடித்துச் சாகும் விவசாயிகளுக்கு காட்டும் சலுகைகளை விமர்சியுங்கள். வாழ்க மக்களாட்சி!

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

I think this is one of the good analysis.
I also believe that JJ had more financial & adminisrative prudence than MK.
Though both leaders are corruptive,MK is doing corruption scientifically so that it is not attracting tha eyes of commom public easily.
Actually extravagansa of Maran after he became minister(Insisting for an mercedes benz as his car whereever he goes,minting money in all telecom/mobile licence distribution deals etc are known to all) only made to think MK twice whether his grand son is beating himself in the process of 'earning money' from politics and that is the root-cuase for his being kicked out...
Even some justified journalists used to say,it is from MK's regime in seventies that corruption became a practice with politics.
JJ-without corruption is thousand times times better than MK.

But there must be a time for other choices,even Vijayakanth can be tested once,based on his aloud commitment that he won't go corruption way...
Read my below posts in these lines...

http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post.html

பெயரில்லா சொன்னது…

MK is FAR FAR better than all the current politicians.

In terms of corruption, I accept all the politicians are one and the same. But in the case of MK he does something to the public and corrupts the money. JJ corrupts completely without even doing any good to public.

For all those who are asking about Coop loan waivers, it is done to farmers and not the poor. How can we forget the flood releif distribution done by JJ to all the householders who were not even affected by rain. Whose money is that?

In the last period, what is the development that JJ has done. Nothing but confusion in all the orders. Publish adn Revoke...Nothing some.

Something is better than Nothing.

If you can list the alternative who can be better than MK then we can accept..

Its Survival of the FITTEST!!!!
MK is better in the current politicians

பெயரில்லா சொன்னது…

Dear Mr பூச்சாண்டி
//"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்"//

இந்த வகையில் வைகோ, நெடுமாறன் அவர்களே மாற்று...

K.R.அதியமான் சொன்னது…

///Anonymous said...
அதியமான், கூட்டுறவுச் சங்கக் கடன் தள்ளுபடி காரணமாக எந்தெந்த முதலைகள் பயன் அடைந்தன என்று எனக்குத் தெரியாது. ஆனால், எத்தனையோ லட்சம் சிறு விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்கள். பயன் அடைந்த குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. காசை வைத்துக் கொண்டு ஏமாற்றும் தொழிலதிபர்களை விட்டு விடுங்கள். வருவாய் இல்லாமல் மருந்து குடித்துச் சாகும் விவசாயிகளுக்கு காட்டும் சலுகைகளை விமர்சியுங்கள். வாழ்க மக்களாட்சி!///

annony, i am not saying that there should be no waiver, only that there should be proper targetting and survey ; not this indiscrinate
bonanza which is counter-productive and bankrupts the co-ops. only poor and draught hit farmers alone should be made eligible. i guess the majority of the beneficiaries were not so. i knew a fellow who got waiver of some 40 lacs (kolli pannai, tractors, etc at Nkl dt)

பெயரில்லா சொன்னது…

///இந்த பின்னூட்டத்தை போட்டது நோண்டு ராகவன் என்ற கிழட்டு பன்னாடை. மொசபுடிக்கிற நாயி மூஞ்சை பாத்தாலே தெரியாதா?///


இது நல்ல பகுத்தறிவு மிக்க பதில். தி மு க மற்றும் கருணாநிதியின் மாற்றுக் கருத்தை எதிர் கொள்ளும் முறையை அழகாகக் காட்டியிருக்கிறது.

பதிவர் கூட இதே பதிவில் 80 வயது கிழவர் கருணாநிதியின் வக்கிர கமெண்டுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். கைத்தடிகளும் சளைத்தவர்களல்ல என நிருபிக்கிறார்கள் .

இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் ஏழு பேரில் ஒருத்தர் தி மு க உறுப்பினர் என்று கருணாநிதி பெருமிதம் வேறு.ஆண்டவன்தான் காப்பாத்தணும்

இரண்டாம் சொக்கன்...! சொன்னது…

அதியமானுக்கு கோவம் வந்தாத்தான் தமிழ் பேசுவார் போல...

ஹி...ஹி...ம்ம்ம்ம்

இம்மாதிரியான அரசியல் பதிவுகளில் அனானி பின்னூட்டங்களை அனுமதிக்க கூடாது என்பது எனது கருத்து....தங்களின் புனைப்பெயரை கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு அப்படி என்ன பயம்...ம்ம்ம்ம்...என்னவோ போங்கப்பா...!

பெயரில்லா சொன்னது…

Public distribution system has miserably failed in states ruled by Commies and Commie ideology driven Dravidian mascots. Pa. Chidambaram has said that.

This explains how these socialistic stupidities help rich become richer, and deprive poor from even fundamental rights.

karunanidhi is the manifestation of this socialistic stupidity and also stands firmly against democracy by putting his family interest as paramount to States or even Nation.

He keeps his flock happy by throwing sops like free TV, Free 1/4 with 1/2 plate chicken biryani.

Those supporters of this despotic monarch are enemies of democracy.

மா சிவகுமார் சொன்னது…

கருத்துக்களுக்கு நன்றி வவ்வால், தஞ்சாவூரான், அனானிகள், அறிவன், அன்புடன் பாலா.

இரண்டாம் சொக்கன்,

அனானி பின்னூட்டத்தையும் அதற்கான அதியமானின் மறுமொழியையும் நீக்கி விட்டேன். இரண்டு மூன்று நாட்களாகி விட்டாலும், விவாதத்துக்கு தொடர்பில்லாமல் தரம் தாழ்ந்து எழுதப்பட்டதால் நீக்குவதே சரியாகப் பட்டது.

தொண்டைமான்,

நீங்களும் கடையேழு வள்ளல்கள் காலத்தினரா?

அன்புடன்,
மா சிவகுமார்

தடாகம் சொன்னது…

மா. சி

நானும் நாகை தான்...

கோவி. கண்ணன் அவர்களின் "வாரிசு அரசியலும், தி.மு.கவும்" பதிவிற்கான எனது பின்னூட்டத்தை படியுங்கள் இங்கே http://govikannan.blogspot.com/2008/01/blog-post_09.html

தடாகம் சொன்னது…

//நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறனுக்கு வாக்களித்திருந்தேன். அதன் பிறகு அவரை மத்திய அமைச்சராக்கி, அவரும் கூச்ச நாச்சமில்லாமல் எல்லா இடங்களிலும் முண்டி அடித்துக் கொண்டு முக்கியத்துவம் தேடிக் கொண்டிருந்த அவலம் கடுப்பேற்றியிருந்தது.//

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் ஒரு துடிப்புள்ள, tech savvy இளைஞரை இழந்துவிட்டோம்.

//திராவிட இயக்கம் தோன்றி ஆட்சியைப் பிடித்த பிறகு அனைவரையும் அணைத்துச் செல்லத் தெரியாத தலைமையாக அமைந்து விட்டது. நான் பிறப்பதற்கு முன்பு நடந்தவை என்றாலும், அறிஞர் அண்ணாவும், பெரியாரும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பெருங்குணம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.//

38 வருட காலமாக கட்சியை, தொண்டர்களை அரவணைத்து வந்திருக்கிறார். எதேச்சதிகார போக்குடையவராக இருந்திருந்தால் இத்தனை வருட காலம் தாக்குப்ப்டிக்க முடிந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒருமுறை இராஜாஜிக்கு அளிக்கப்பட்ட விருதினை அவர் நேரில் வந்து பெற்றுக்கொள்ள இயலாததால் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞரை அவர் சார்பாக அவ்விருதினை பெற்றுக்கொண்டு அவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரியிருந்தார் இராஜாஜி. விருது அளிக்கபபட்ட நாள் 02.10.1972. விருதினை பெற்றுக்கொண்ட மறுநாளே (03.10.1972), கலைஞர் இராஜாஜியின் வீட்டுக்கே நேரில் சென்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விருதினை இராஜாஜியிடம் ஒப்படைத்தார். இது கலைஞரின் "Political Decency"க்கு ஒரு எடுத்துக்காட்டு.

பொடாவில் வைகோ வேலூர் சிறையிலிருந்த பொழுது அவரை பார்க்கச் சென்ற கருணாநிதி சிறைக்கு வெளியே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வைகொவை பார்த்துவிட்டுச் சென்றார். தி.மு.கவிலிருந்து விலகி தனிக்கட்டசி நடத்திக் கொண்டிருந்த வைகோவ சிறைக்குச் சென்று பார்த்த இந்த நிகழ்வு கலைஞரின் "Political Decency"க்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

//அளவுக்கு மீறிய பதவி ஆசை, தலைமைப் பொறுப்பில் குறுக்கிடும் அளவுக்கு குடும்பப் பாசம், எண்பது வயதுக்குப் பின்னும் எதிர்க்கட்சித் தலைவி பெண்மணியின் மீது வக்கிரமாக கமென்டு அடிப்பது, மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என்று மாநில அரசியலை இரு பிளவாகப் பிரித்த கீழ்மை அவருக்கே சேரும்.//

எதிர்க்கட்சித் தலைவி தான ஒரு பெண் (மணி) என்பதையும் மற்ந்து, பல நேரங்களில் நிலை தடுமாறி விடும் அறிக்கைகளை நீங்கள் ஒன்று படிக்கவில்லை அல்லது எதிர்க்கட்சித் தலைவியின் "பாஷை"யிலேயே சொல்வதானால் "Selective Amnesia" என்றுத் தான் சொல்லவேண்டும் உங்களுக்கு. சென்னை துணை நகரத் திட்டததை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவி (?) விட்ட அறிக்கையில் "கருணாநிதி வீட்டுப் பெண்களை சென்னையை விட்டு வெளியே அனுப்பினாலே போதும் சென்னையின் நெரிசல் நீங்க" என்று சொல்லியிருந்தார். இது ஒரு கீழ்த்தரமான சிந்தனையிலிருந்து வெளிப்பட்ட கருத்து. நா கூசுகிறது நினைக்கவே.
மேலும், முரசொலி மாறன் மறைந்தபொழுது, ஜெவின் போயஸ் தோட்டத்து வீட்டு முன்பு அ.தி.மு.கத் தொண்டர்கள் கூடி கும்மாளமிட்டார்கள். அதையும் பார்த்துக்கொண்டிருந்தவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவி, பெண் (மணி). அது தான் ஜெயலலிதாவின் அரசியல் நாகரீகம். ஒரு இழவு வீட்டில், நேரத்தில் எப்ப்டி ந்டந்து கொள்ளவேண்டும் என்று தெரியாத, குறைந்த ப்ட்ச மனிதநேயம் கூட இல்லாதவர், கீழ்த்தரமான மனிதர் அவர்.

எதிர்க்கட்சித் தலைவிக்கு கண்ணியமாக பேசவும், அவரிடம் வேறு யாரும் அப்படிப் பேசினாலும் புரியாது. இது நமக்கெல்லாம் தெரிந்த ஓன்று.
ஆரோக்கிய அரசியல் நடத்தும் சூழ்நிலை த்ற்போது இல்லை. ஓசை எழுப்ப இரண்டு கைகளும் தேவை. ஒன்றால் மட்டும் முடியாது.

//மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என்று மாநில அரசியலை இரு பிளவாகப் பிரித்த கீழ்மை அவருக்கே சேரும்.//

மா. சி. ஐயா,
உங்களுக்கு எந்த அளவுக்ககு உங்களது மதம் பற்றிய நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதற்கோ அல்லது பரப்புவதற்கோ உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை நீங்கள் சார்ந்த மதததைப் பற்றிய என் பார்வையிலான கருத்துக்களை வெளியிட அல்லது பரப்ப எனக்கும் இருக்கிறது. நீங்கள் இதை குற்றமென்று சொன்னால், பாரதப் பிரதமர் மனமோகன் சிங் "பொற்கோயிலுக்கு" போவது குற்றம். முன்பு பிரதமராக இருந்த "வாஜ்பேயி" (அவர் ஆட்சியிலிருந்த பொழுது) அவர் சார்ந்த மத ஸ்தலங்களுக்ககு போனது குற்றம். முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா (அவர் ஆட்சியிலிருந்த பொழுது) குருவாயூர் கோயிலுக்கு போனது குற்றம். பூஜை எனற பெயரில் சென்னையில் அன்னதானம் (ஏதோ ஒரு கோயிலில்) செய்தது குற்றம். ஏன் என்றா கேட்கிறீர்களா ? ஏனென்றால் அவர்கள் அதே மதத்தின் மேல் எனக்குள்ள நம்பிக்கைகளை/உணர்வுகளை புண்படுத்துகிறார்கள்.
அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், நாங்கள் நிறுத்துகிறொம். அல்லது நாங்கள் நிறுத்துகிறொம், அவர்கள் நிறுத்துவார்களா? இப்படித்தான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது.

கருணாநிதி, மத நம்பிக்கையுடையவர்களை கோயிலுக்குப் போகாதே என்று தடுத்தால் அல்லது முதல்வர் என்ற நிலையில் கோயிலுக்குச் சேரவேண்டிய நிதியினை கொடுக்காமல் விட்டால் தான் தவறு. கோயிலுக்குப் போனால் உன்னை உன் வேலையிலிருந்து ஒரே இரவில் நீக்கி விடுவேன், கைது செய்வேன் எனறு சொன்னால் தான் தவறு.
ஒன்றை மறந்து விடுகிறோம் இங்கே. நியாயம்/நம்பிக்கை/உணர்வுகள் என்பது "இரு" சாராருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும். ஒரு சாராருக்கு ம்ட்டுமே அல்ல.
நாங்கள் யாரின் தலைக்கும் விலை வைக்கவில்லை. ஆனால் நீங்கள் மட்டும் என் தலைக்கு விலை வைக்கலாம் சாது என்ற போர்வையில் இருந்தும் கூட. இது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

//எதிர்க்கட்சியாக இருக்கும் வரை என்னதான் அடாவடி அரசியல் செய்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி புரிகிறோம் என்ற பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.//

என்னயா அடாவடி அரசியல் செய்தார். என்ன பெருந்தன்மை குறையை கண்டீர்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூறவும்.

//ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் உருவாக்கும் அதே நேரத்தில் அதிலிருக்கும் நியாயங்களை விளக்கி அதனால் அனுபவித்து வரும் சுகங்களை இழக்கும் மக்களையும் அதை ஏற்றுக் கொள்ள செய்திருக்க வேண்டும். அது அவரிடம் இல்லை.//

"சுகங்கள்" என்று நீங்களே குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நாலு பேருக்கு நல்லது செஞ்சா ஒருத்தன் பாதிக்கப்படுவான். அது நியதி. அதேபோல, நாற்பது பேருக்கு தலைவனாத் தெரியறவன் நாலுப் பேருக்கு கோமாளியாத் தான் தெரிவான். எல்லோரையும் திருப்தி செய்கிற மாதிரி எந்த முடிவையும் எவராலும் எடுக்க முடியாது. அப்படி என்னால் செய்ய முடியும் என்று சொல்வீர்களேயானால் நீங்கள் நாற்பது பேருக்கு கோமாளியாத் தான் படுவீர்கள். உங்களுக்கு ம்ட்டுமே நீங்கள் பேசுவது அறிவுப் பூர்வமாகத் தோன்றும்.

//நேற்று வரை அடக்கி ஆண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க, அந்தத் தலைமையை ஏற்க பெரும்பான்மையர் முன்வந்திருப்பார்கள். அதுதான் உண்மையான வெற்றி. முப்பத்தைந்து ஆண்டு கால அரசியலுக்குப் பின்னும், அவரது பெயரைக் கேட்டாலே சலித்துக் கொள்ளும் மக்களை உருவாக்கி இருப்பது அவரது தலைமையின் தோல்வி.//

நீங்கள் கனவுலகில் இருப்பதாக தோன்றுகிறது. இந்த மன்மோகன் சிங்கிற்கே ஏதாவது கெடுதல் நடக்கவேண்டுமென யாகம் செயதவர்கள் இந்த "அடக்கி ஆண்டவர்கள்".
காந்தியையே சலிப்பு ஏற்பட்டவுடன் கொண்றார்கள். சலிப்பு ஏற்படுவது சகஜம்.


//ஈழ நிலைமை பற்றி மத்திய அரசு ஆலோசனை கூட்டம் கூட்டினால் இவர் போய் கருத்து சொல்வாராம். ஏன்? தமிழினத் தலைவருக்கு இவ்வளவுதான் அக்கறையோ? தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி வாங்கிய சாணக்கியம் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட ஏன் பயன்படாமல் போய் விட்டது? மருமகனுக்கு அரசு செலவில் வைத்தியம் வேண்டும் என்று இலாகா இல்லாத அமைச்சராக ஒட்டிக் கொண்டிருந்து விட்டு அவரது மறைவுக்குப் பின் வசதியாக வெளியேறிய புத்திசாலித்தனம் தமிழர் நலனில் மறைந்து விடும்.//

ஈழ நிலைமையில் கலைஞரும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. துண்பியல் சம்பவத்துக்குப் பிறகு எந்த ஒரு தமிழக அரசியல் தலைவரும் ஆட்சியில் இல்லாதபோது ஈழ்த்தமிழர் நலன்ப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தான் அவர்களுக்கு உண்மை நிலைப் புரியும். இது தான் நிதரிசனம். ஏதோ அவர் ஆட்சியிலாவது அதைப்பற்றி பேச, எழுத, கூட முடிகிறது. மகிழ்ச்சியடையுங்கள் அதற்காக.
இல்லையேல் அதைப் பற்றி பேசியதால் நீங்களும் நானும் தேச நலனுக்கு குந்தகம் விளைவித்தோம் என்று சொல்லி தூக்கி உள்ளேப் போட்டு விடுவார்கள். அப்புறம் களி தான்.

//தமிழகத்துக்கு இது போன்ற தலைவர்கள்தான் தலைவிதி கிடையாது. 'திறமையைப் பயன்படுத்தி தொழில் செய்தார்கள்' என்று நியாயப்படுத்தப்படும் முதலமைச்சரின் கிளைக்குடும்பங்கள் எல்லாம் கொழிக்கும் இந்த இரண்டு நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும்.//

சரி தான். மாற்றாக வேறு யாரும் இல்லை. விஜயகாந்த்ப் பற்றி பேசும் பொழுது "யோக்கியன் வர்றான், செம்பை எடுத்து உள்ள வை"கிறது தான் ஞாபகத்துக்கு வருகிறது. வைகோவோ ரொம்ப pressure கொடுத்தால் அழுதுவிடுவார்.

ஒரு வேண்டுகோள் - வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி எழுதும்பொழுது, எதன் பின்னனியிலே அது நடந்தது, சொல்லப்பட்டது என்று ஆராய்ந்து எழுதினால் அது நன்றாக இருக்கும். வரலாற்று நிகழ்வுகளைப் திருத்தி எழுத, மறைக்க எனக்கோ தங்களுக்கோ உரிமை இல்லை எனபது எனது தாழ்மயான கருத்து..
பேனா (அல்லது keyboard/mouse/blog) இருக்கின்றதென்பதற்காக வாய்க்கு வந்தபடி எழுதுவது ரஜினி பேசுவது போன்று. அப்படி எழுதினால் அது நுனிப்புல் மேய்வதற்குச் சமமாகும். (நான் ரஜினி நுனிப்புல் மேய்பவர் என்று சொல்லவில்லை). ஆழப் படித்து ஆராய்ந்து எழுதுங்கள். உங்களிடமிருந்து இன்னும் நல்ல தரமான நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
நேரமின்மையால், இப்பதிவிற்கான எனது பின்னூட்டத்தை இனிமேலும் தாமதிக்காமல் அளித்திட வேண்டும் எனற ஆவலினால் இன்றைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

ஞாநியை விமர்சிக்க அருகதை இல்லை
ப்ரவாஹன்

காலச்சுவடு, டிசம்பர் 2007, கண்ணனின் “வெந்து தணியும் அவதூறுகள்” கட்டுரையில் எனது அக்கறை, எழுத்தாளர் ஞாநி பற்றிய விமர்சனம்தான். திரு. மு. கருணாநிதியின் முதுமையைக் காரணங்காட்டி, அவருக்கு ஓய்வு வேண்டும் என்று ஞாநி சொல்லி இருந்தார். இதற்காக ஒரு கண்டனக் கூட்டம்.

ஞாநியின் எழுத்தில் மு.க.வின் முதுமையைப் பழிக்கும் - ‘முதுமை'யை என்பதைவிட ‘உடல் இயலாமை'யை என்பதே சரி - வரிகள் இருந்தன. ஞாநியின் அந்த வரிகளுக்கு, ஞாநிக்கு ஒரு முன்னோடி உண்டு. அது வேறு யாருமல்ல; யாருடைய இயலாமையை ஞாநி பழித்திருந்தாரோ, யாருக்கு ஓய்வு தரவேண்டும் என ஞாநி பரிந்துரைத்திருந்தாரோ அதே மு. கருணாநிதிதான்.

1989-90 ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சி, மு.க. முதல்வர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சென்னையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம். அதில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் திருமதி. ரமணி நல்லதம்பி, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். 50 அகவையைக் கடந்திருந்த அவரை வயது முதிர்ந்தவர் என்று சொல்ல முடியாது; ஆனால் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நிலையிலும் கட்சி அறிவித்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் கடமை உணர்வு அவருக்கு இருந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் தயாராயினர். ரமணி நல்ல தம்பி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போதும் காவல்துறையை மு.க. தனது பொறுப்பில் வைத்திருந்தார். கைது செய்யப்பட்டவர்களைக் காலையிலிருந்து மாலை வரையிலும் இங்கே - அங்கே என வேனிலேயே வைத்துக்கொண்டு அலைக்கழித்தது மு.க வின் போலீஸ். நோய்வாய்ப்பட்டிருந்த ரமணி நல்லதம்பியை இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட காவலர்கள் அனுமதிக்கவில்லை; எல்லாம் மேலிட உத்தரவு. இந்தக் கொடுமையான நிலையில், காவல்துறையின் வாகனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் தனது உடையிலேயே சிறுநீர் கழித்துக்கொள்ளும்படி நேர்ந்துவிட்டது.

அடுத்த ஓரிரு நாட்களில் சட்டமன்றம் கூடியது. இந்தக் கைது தொடர்பாக உரிமைப் பிரச்சனை எழுப்பப்பட்டது. காவல்துறையைத் தனது பொறுப்பில் வைத்திருந்த மு.க. சட்டமன்றத்தில் இது பற்றிப் பேசும்போது, “வீர வீராங்கனைகள் தமது புடவையிலேயே ஒன்றுக்கு இரண்டுக்கு என எல்லாவற்றையும் முடித்துக்கொண்டார்கள்” என்பது போலக் கேலியும் குரூரமும் தொனிக்கக் கிண்டல் செய்தார். இது சட்டமன்ற அவைக் குறிப்பிலும் ஏறியிருக்கும். பிறகு சில ஆண்டுகளிலேயே ரமணி நல்லதம்பி புற்றுநோயால் இறந்தும்போனார்.

இன்று ஒரு 15-17 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மு.க., ‘தனது ஒப்பனை அறையில் வேட்டியை நனைத்துக்கொண்டது' பற்றி ஞாநி எழுதியதும் அவருக்குக் கண்டனம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதல்லவா நிகழ்ந்திருக்கிறது. இதில் மு.க. சார்பில் நின்று ஞாநியைக் கண்டிப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி குறித்து விளக்கி, இது பற்றி "தி.மு.க.வை விமர்சிக்காத அறிவு ஜீவிகளுக்கு ஞாநியை விமர்சிக்க அருகதை இல்லை" என்று சொல்லியிருக்கிறார் கண்ணன். அது போலவே ரமணி நல்லதம்பி விஷயத்திலும், இன்னும் பலரின் விஷயத்திலும் மு.க.வை விமர்சிக்காதவர்களுக்கு ஞாநியை விமர்சிக்க அருகதை இல்லை; அ.மார்க்ஸ் உட்பட.

பெயரில்லா சொன்னது…

மாசி சொன்னது சரிதான்.

மேலே உள்ளது கலைஞரின் அரசியல் நாகரிகத்துக்கும் வக்கிரபேச்சுக்கும் ஒரு உதாரணம்தான்.

தடாகம் சொன்னது…

//அறிவன் /#11802717200764379909/ said...

I think this is one of the good analysis.//

I belive it's a lopsided analysis.

//I also believe that JJ had more financial & adminisrative prudence than MK.//

I can only laugh seeing at this comment.

In a letter that Jayalalitha sent to the Centre (Finance Ministry), requesting Financial Assistance when she was CM, she wrote like below mentioned (believe it or not, just that).

"Drought, needed 1200 cr"

This was mentioned by none other than P. Chidambaram in an interview.

//Though both leaders are corruptive, MK is doing corruption scientifically so that it is not attracting tha eyes of commom public easily.//

Scientifically..hahahahha.

//Actually extravagansa of Maran after he became minister (Insisting for an mercedes benz as his car whereever he goes,minting money in all telecom/mobile licence distribution deals etc are known to all) only made to think MK twice whether his grand son is beating himself in the process of 'earning money' from politics and that is the root-cuase for his being kicked out...//

That was his Benz car. As he did not like the Govt provided Ambassador/Maruthi, he insisted the GOvt he should be allowed to use his own Benz car. (There was an article about the best performing central ministers came in India Today, in that it was mentioned like this).


//Even some justified journalists used to say,it is from MK's regime in seventies that corruption became a practice with politics.
JJ-without corruption is thousand times times better than MK.//

Is that "Cho" ? Cho is a double tongued snake.


//But there must be a time for other choices, even Vijayakanth can be tested once,based on his aloud commitment that he won't go corruption way...//

Have you not read the news about the encroachments of Govt land he made in Tiruvallur yet ? Don't try to justify this.

பெயரில்லா சொன்னது…

எம்ஜியார் பெயர் சொல்ல ஒரு சத்துணவுத் திட்டம். தொடங்கி 20 வருடங்கள் கழித்து பாராட்டுகிறார்கள். ஜெயலலிதா பெயர் சொல்ல ஒரு மழை நீர் சேமிப்புத் திட்டம்(இன்னும் தொடருகிறார்களா? நீங்கள் அளித்த 10 மதிப்பெண் இதற்கு மட்டுமே தகும்). இதன் அருமையை வரும் கால சந்ததி உணரும். எதிர் காலத்தில் கருணாநிதியின் பெயர் சொல்ல என்ன திட்டம் தொடங்கினார்?

பெயரில்லா சொன்னது…

இது மாதிரி தமிழருக்கு புண்ணீயமில்லாத ஜீவன்களுக்கு இது தேவை தான். இதையும் தமிழரினத் தலைவரையும் தயவு செய்து ஒப்பிட்டு பேச வேண்டாம்.

பெயரில்லா சொன்னது…

//
பெத்தராயுடு said...
எம்ஜியார் பெயர் சொல்ல ஒரு சத்துணவுத் திட்டம். தொடங்கி 20 வருடங்கள் கழித்து பாராட்டுகிறார்கள். ஜெயலலிதா பெயர் சொல்ல ஒரு மழை நீர் சேமிப்புத் திட்டம்(இன்னும் தொடருகிறார்களா? நீங்கள் அளித்த 10 மதிப்பெண் இதற்கு மட்டுமே தகும்). இதன் அருமையை வரும் கால சந்ததி உணரும். எதிர் காலத்தில் கருணாநிதியின் பெயர் சொல்ல என்ன திட்டம் தொடங்கினார்?
//
தம்பி பெத்து...
சத்துணவு திட்டம் எலிமூஞ்சியார் காலித்தில் வந்ததில்லை. அது காமராஜர் கொண்டு வந்தது.

பெயரில்லா சொன்னது…

//பெத்தராயுடு said...
எம்ஜியார் பெயர் சொல்ல ஒரு சத்துணவுத் திட்டம். தொடங்கி 20 வருடங்கள் கழித்து பாராட்டுகிறார்கள். ஜெயலலிதா பெயர் சொல்ல ஒரு மழை நீர் சேமிப்புத் திட்டம்(இன்னும் தொடருகிறார்களா? நீங்கள் அளித்த 10 மதிப்பெண் இதற்கு மட்டுமே தகும்). இதன் அருமையை வரும் கால சந்ததி உணரும். எதிர் காலத்தில் கருணாநிதியின் பெயர் சொல்ல என்ன திட்டம் தொடங்கினார்?//

தம்பி பெத்து, கொஞ்சம் பொத்து. சத்துணவுத் திட்டம் என்பது கர்ம வீரர், கறுப்பு காந்தி காமராசரால் "மதிய உணவுத் திட்டம்" என்று கொண்டு வரப்பட்டது. அதை எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்று பெயர்/நிறம் மாற்றி விட்டார்.

//ஜெயலலிதா பெயர் சொல்ல ஒரு மழை நீர் சேமிப்புத் திட்டம்//
hahahahaha...யேய் விளக்கெண்ணய்....போ...போய் புள்ளய படிக்க வை.

பெயரில்லா சொன்னது…

இந்தக் கைது தொடர்பாக உரிமைப் பிரச்சனை எழுப்பப்பட்டது. காவல்துறையைத் தனது பொறுப்பில் வைத்திருந்த மு.க. சட்டமன்றத்தில் இது பற்றிப் பேசும்போது, “வீர வீராங்கனைகள் தமது புடவையிலேயே ஒன்றுக்கு இரண்டுக்கு என எல்லாவற்றையும் முடித்துக்கொண்டார்கள்” என்பது போலக் கேலியும் குரூரமும் தொனிக்கக் கிண்டல் செய்தார்.

--

he is always like that!

பெயரில்லா சொன்னது…

////பெத்தராயுடு said...
எம்ஜியார் பெயர் சொல்ல ஒரு சத்துணவுத் திட்டம். தொடங்கி 20 வருடங்கள் கழித்து பாராட்டுகிறார்கள். ஜெயலலிதா பெயர் சொல்ல ஒரு மழை நீர் சேமிப்புத் திட்டம்(இன்னும் தொடருகிறார்களா? நீங்கள் அளித்த 10 மதிப்பெண் இதற்கு மட்டுமே தகும்). இதன் அருமையை வரும் கால சந்ததி உணரும். எதிர் காலத்தில் கருணாநிதியின் பெயர் சொல்ல என்ன திட்டம் தொடங்கினார்?//

தம்பி பெத்து, கொஞ்சம் பொத்து. சத்துணவுத் திட்டம் என்பது கர்ம வீரர், கறுப்பு காந்தி காமராசரால் "மதிய உணவுத் திட்டம்" என்று கொண்டு வரப்பட்டது. அதை எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்று பெயர்/நிறம் மாற்றி விட்டார்.

//ஜெயலலிதா பெயர் சொல்ல ஒரு மழை நீர் சேமிப்புத் திட்டம்//
hahahahaha...யேய் விளக்கெண்ணய்....போ...போய் புள்ளய படிக்க வை.//

அனானி உடன்பிறப்புகளுக்கு ஏன் இந்த க் கொலவெறி? காமராசர் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினாலும், அது பரவலாக்கப்பட்டு பெயர் பெற்றதும் எம்ஜியார் காலத்தில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் முரட்டு குணமும் அலங்கோலமான ஆட்சி நடத்தினாலும் எந்தப் புண்ணியவான் சொன்னதுக்காகவோ மழைநீர் சேமிப்பு திட்டத்தை விடாப்பிடியாக அமுல்படுத்தினாரே? அத்திட்டத்தின் பலன், திருநெல்வேலி படத்துல விவேக் சொல்வாரே ஒரு வசனம் (குடிக்கத் தண்ணி இல்ல, கு*டி கழுவத் தண்ணி இல்ல) அப்படின்னு ஒரு நிலம நம்மூருல வரும்போது தெரியும். அதெல்லாம் சரிங்க, என்ன வையாம, கருணாநிதி காலாகாலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி என்னதான் செஞ்சிருக்கார்? சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்.